TnpscTnpsc Current Affairs

17th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022–இல் நடைபெற்ற முதல் வியத்தகு இந்தியா சர்வதேச கப்பல் மாநாடு நடந்த இடம் எது?

அ. கோவா

ஆ. விசாகப்பட்டினம்

இ. மும்பை 

ஈ. கொல்கத்தா

  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான ஜி கிஷன் ரெட்டி, மும்பையில் முதலாவது வியத்தகு இந்தியா சர்வதேச கப்பல் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை, ‘வாருங்கள், இந்தியாவில் பயணஞ்செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசு மற்றும் FICCI ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின்போது எட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற சிட்டகாங் துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. வங்காளதேசம் 

இ. நேபாளம்

ஈ. மியான்மர்

  • ‘சிட்டகாங்’ அல்லது ‘சாட்டோகிராம்’ துறைமுகம் வங்காளதேசத்தின் முக்கியமான துறைமுகங்களுள் ஒன்றாகும். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரைச் சந்தித்தபோது, சிட்டகாங் துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு அனுமதியளித்தார். துறைமுகப்பட்டினம் அருகாமையில் இருப்பதால், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3. 2022 – இத்தாலிய ஓப்பன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீராங்கனை யார்?

அ. ஆஷ்லே பார்ட்டி

ஆ. இகா ஸ்விடெக் 

இ. நவோமி ஒசாகா

ஈ. சிமோனா ஹாலெப்

  • உலகின் நம்பர்.1 வீராங்கனையான இகா ஸ்விடெக், 2022ஆம் ஆண்டு இத்தாலிய ஓப்பன் டென்னிஸ் தொடரை உலகின் ஏழாம் நிலையில் உள்ள வீராங்கனையை நேர் செட்களில் தோற்கடித்து தனது ஐந்தாவது WTA டூர் பட்டத்தை வென்றார். 20 வயதான இப்போலந்து வீரங்கனை, 2013–இல் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு (5) ஒரே சீசனில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ‘WTA 1000’ வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார். நோவக் ஜோகோவிச், 2022 – இத்தாலிய ஓப்பன் ஆடவர் பட்டத்தையும் சீசனின் முதல் ATP டூர் பட்டத்தையும் வென்றார்.

4. ‘தொழில்நுட்ப முன்னோடி சமூகம்’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?

அ. NITI ஆயோக்

ஆ. WEF 🗹

இ. IMF

ஈ. உலக வங்கி

  • இந்தியாவைச் சேர்ந்த ஐந்து துளிர் நிறுவனங்கள் உட்பட 100 புதிய துளிர் நிறுவல்கள் அதன் தொழில்நுட்ப முன்னோடி சமூகத்தில் இணைந்துள்ளதாக உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. துளிர் நிறுவல்களில் நல்வாழ்வு மற்றும் நிதிச்சேவைகள் முதல் மெட்டாவர்ஸ் வரையுள்ள நிறுவனங்களும் அடங்கும்.
  • உலகப் பொருளாதார மன்றமானது 2022 தொழில்நுட்ப முன்னோடிகளின் குழுவை தாவோசில் அதன் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக வெளியிட்டது. ஐந்து இந்திய நிறுவனங்களில் வாகன், ஸ்மார்ட் காயின் பைனான்சியல்ஸ், புரோயான், பாண்டோகார்ப் மற்றும் ரெசைகல் ஆகியவை அடங்கும்.

5. அமைதியாகக் கூடியிருத்தலுக்கான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.12

ஆ. மே.14

இ. மே.16 

ஈ. மே.18

  • ஐநா பொதுச்சபையானது கடந்த 2017ஆம் ஆண்டில் மே.16ஆம் தேதியை அமைதியாகக் கூடியிருத்தலுக்கான உலக நாளாக அறிவிக்க ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மக்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ வலியுறுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டு, ‘அமைதி கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டாக’ அங்கீகரிக்கப்பட்டது. 2001 முதல் 2010 வரையிலான பத்தாண்டு காலத்தை, ‘உலகின் குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரத்திற்கான சர்வதேச தசாப்தம்’ என்று ஐநா அறிவித்தது.

6. இந்தியாவின் முதல் குழு வானொலி நிலையமான, ‘தூத் வாணி’ தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. குஜராத் 

இ. மத்திய பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • கால்நடை வளர்ப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட, ‘தூத் வாணி’ என்ற குழு வானொலி நிலையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் (பனாஸ் பால் பண்ணை) அமைக்கப்பட்டுள்ள இந்த வானொலி நிலையம், மாநிலத்தில் உள்ள 1,700 கிராமங்களில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களை இணைக்கும். கால்நடை வளர்ப்போருக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் குழு வானொலி நிலையமும் இதுதான்.

7. தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவினால் 82% இறப்புக்கள் நிகழந்த நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா 

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

  • உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) “உலக மலேரியா அறிக்கை–2021” ஆனது தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவால் நிகழந்த இறப்புக்களில் சுமார் 82% இந்தியாவில் நிகழந்தாகக் காட்டுகிறது. இருப்பினும், மலேரியா நோயின் பாதிப்பைக் குறைக்கும் ஒரே நாடு இந்தியாவாகும். 2022 – உலக மலேரியா நாளானது, “Harness Innovation to Reduce the Malaria Disease Burden and Save Lives” என்ற கருப்பொருளின் கீழ், ஏப்ரல்.25 அன்று அனுசரிக்கப்பட்டது.

8. ‘பிராணஹிதா புஷ்கரலூ’ என்பது எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற விழாவாகும்?

அ. மேற்கு வங்கம்

ஆ. தெலுங்கானா 

இ. கேரளா

ஈ. ஒடிஸா

  • ‘பிராணஹிதா புஷ்கரலூ’ என்பது தெலுங்கானாவில் உள்ள கோதாவரி நதியின் கிளை நதியான பிராணஹிதாவை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருவிழாவாகும். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதைத்தொடர்ந்து முதன்முறையாக இவ்விழா கொண்டாடப்பட்டது. இது பிராணஹிதா ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்ட அரங்குகளில் தொடங்கியது. தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 12 நாட்கள் நடந்த இவ்விழாவில் பங்கேற்றனர்.

9. மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசிற்கு மாற்றுவதற்கான மசோதாக்களை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. மேற்கு வங்கம்

இ. கேரளா

ஈ. சத்தீஸ்கர்

  • 13 மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் வகையிலான 2 மசோதாக்கள் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசின் கூற்றுப்படி, துணைவேந்தர்கள் நியமனங்குறித்த மாநில அரசின் கருத்தை ஆளுநர் புறக்கணிப்பதால் இந்தப் புதிய மசோதாக்கள் தேவைப்படுகின்றன. கடந்த காலத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் இந்த வாதத்தை முன்வைத்தன.

10. 2022 – ‘லாரஸ் உலக விளையாட்டு வீரர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை’ விருதுகளை வென்றவர் யார்?

அ. மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் எலைன் தாம்சன்–ஹேரா 

ஆ. லூயிஸ் ஹாமில்டன் மற்றும் எலைன் தாம்சன்–ஹேரா

இ. ரபேல் நடால் மற்றும் ஆஷ்லே பார்ட்டி

ஈ. லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஆஷ்லே பார்ட்டி

  • F1 உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் ஜமைக்கா ஒலிம்பிக் குறுவிரையோட்ட வீராங்கனையான எலைன் தாம்சன்–ஹேரா ஆகியோர் முறையே 2022ஆம் ஆண்டுக்கான லாரஸ் உலக விளையாட்டு வீரராகவும், லாரஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய ஆடவர் கால்பந்து அணி இரண்டாவது முறையாக, ‘லாரஸ் ஆண்டின் சிறந்த அணி’ விருதை வென்றது. டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு, இந்த ஆண்டின் லாரஸ் திருப்புமுனை விருதைப் பெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. பாங்க் ஆஃப் இங்கிலாந்து நிதிக்குழுவில் இந்தியப் பெண்

பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்தியப் பெண்ணும், பொருளாதார பேராசிரியருமான ஸ்வாதி திங்ரா இடம்பெற்றுள்ளார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் ஸ்வாதி, தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டன் சென்று உயர்கல்வி பயின்ற அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்; இவர் சர்வதேச பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இந்நிலையில், பிரிட்டனில் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் இடம்பெறும் முதல் இந்தியப் பெண் ஸ்வாதி திங்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் நிதியமைச்சராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் (61) நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவர். பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ், ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ஜீன் காஸ்டெக்ஸ் ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போர்னை அதிபர் மேக்ரான் நியமித்துள்ளார்.

1. Which is the venue of the first Incredible India International Cruise Conference (IIICC) held in 2022?

A. Goa

B. Vishakhapatnam

C. Mumbai 

D. Kolkata

  • Union Tourism Minister, G. Kishan Reddy inaugurated the first Incredible India International Cruise Conference (IIICC) in Mumbai.
  • He also invited domestic and international tourists to ‘Come, Cruise in India.’ It was jointly organised by the Ministry of Ports, Shipping and Waterways, the Government of India and FICCI. Eight Memorandum of Understanding (MoUs) were signed during the conference.

2. Chittagong Port, which was seen in the news, is located in which country?

A. India

B. Bangladesh 

C. Nepal

D. Myanmar

  • The Chittagong or Chhatogram port is one of the important seaports of Bangladesh. Bangladesh Prime Minister Sheikh Hasina offered India to use the Chittagong Port when External Affairs Minister S Jaishankar met her in Dhaka. Due to the sea port’s close proximity, the port facility has the potential to boost economic activity in the North–East Indian states including Assam, Meghalaya and Mizoram.

3. Which tennis player won the Italian Open 2022 women’s single title?

A. Ashleigh Barty

B. Iga Swiatek 

C. Naomi Osaka

D. Simona Halep

  • World No.1 Iga Swiatek won her fifth consecutive WTA Tour title by defeating No.7 player in straight sets to win the Italian Open 2022. The 20–year–old Polish star is just the second player to ever win four or more WTA 1000 titles in a single season after Serena Williams (5) in 2013. Novak Djokovic scored a straight–set victory over Stefanos Tsitsipas to win the 2022 Italian Open men’s title and his first ATP Tour title of the season.

4. ‘Technology Pioneers Community’ is an initiative of which institution?

A. NITI Aayog

B. WEF 

C. IMF

D. World Bank

  • The World Economic Forum said 100 new startups, including five from India, have joined its Technology Pioneers Community. The start–ups include entities from healthcare and financial services to the metaverse. World Economic Forum released the 2022 cohort of Technology Pioneers ahead of its annual meeting in Davos. The five Indian entities include Vahan, SmartCoin Financials, Proeon, Pandocorp and Recykal.

5. When is the ‘International Day of Living Together in Peace’ observed annually?

A. May.12

B. May.14

C. May.16 

D. May.18

  • The United Nations General Assembly adopted a resolution to declare 16 May as the International Day of Living Together in Peace in 2017. The Day aims to urge people to live together in a united and peaceful way. The year 2000 was recognised as ‘The International Year for a Culture of Peace’ and the UN declared the decade from 2001 to 2010 as the “International Decade for a Culture of Peace and Non–Violence for Children of the World.”

6. Dudh Vani, India’s first Community radio station (CRS), has been inaugurated in which state?

A. Punjab

B. Gujarat 

C. Madhya Pradesh

D. Maharashtra

  • Prime Minister inaugurated a community radio station (CRS) named ‘Dudh Vani’, which has been dedicated to animal husbandry. Set up by the Banaskantha District Cooperative Milk Producers’ Union (Banas Dairy), the Radio station will connect over five lakh dairy farmers across 1,700 villages in the State. This is also the country’s first community radio station dedicated to the cattle–breeders.

7. Which country accounted for 82 per cent of all malaria deaths in the South–East Asian region?

A. China

B. India 

C. Sri Lanka

D. Bangladesh

  • The World Malaria Report 2021 of the World Health Organization (WHO) shows that the India accounted for about 82 per cent of all malaria deaths in the South–East Asian region. However, it is the only high burden country to sustain a reduction in the malaria disease burden. The theme for World Malaria Day 2022, observed in April 25 is “harness innovation to reduce the malaria disease burden and save lives”.

8. ‘Pranahita Pushkaralu’ is a famous festival celebrated in which state?

A. West Bengal

B. Telangana 

C. Kerala

D. Odisha

  • ‘Pranahita Pushkaralu’ is a mega river festival dedicated to worshipping the Pranahita, a tributary of the river Godavari, in Telangana. The festival was celebrated for the first time following the creation of Telangana state. It started at the venues created on the shores of Pranahita. Over 6 lakh devotees from Telangana, Andhra Pradesh, Maharashtra, Chhattisgarh and Karnataka states took part in the 12–day long festival.

9. Which state has passed bills to transfer the Governor’s power in appointing Vice–Chancellors of state universities to the state?

A. Tamil Nadu 

B. West Bengal

C. Kerala

D. Chhattisgarh

  • The Tamil Nadu Assembly passed two Bills that seek to transfer the Governor’s power in appointing Vice–Chancellors of 13 state universities to the state government. As per the state government, the Bills were required as the Governor was disregarding the state government’s opinion on the appointments of VCs. This argument was also made by states such as Maharashtra and West Bengal in the past.

10. Who won the 2022 Laureus World Sportsman and Sportswoman of the Year awards?

A. Max Verstappen and Elaine Thompson–Herah 

B. Lewis Hamilton and Elaine Thompson–Herah

C. Rafael Nadal and Ashleigh Barty

D. Lewis Hamilton and Ashleigh Barty

  • Formula One world champion Max Verstappen and Jamaican Olympic sprint queen Elaine Thompson–Herah have been named 2022 Laureus World Sportsman and Laureus World Sportswoman of the Year respectively. Italian Men’s Football Team won their second Laureus Team of the Year Award while Global tennis sensation Emma Raducanu received the Laureus Breakthrough of the Year Award.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!