Tnpsc

17th November 2020 Current Affairs in Tamil & English

17th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IBSA’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. India Brazil South Africa

ஆ. India Britain Saudi Arabia

இ. India Belgium South America

ஈ. India Bahrain South Australia

  • இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்காவின் (IBSA) “Deepening Cooperation in IBSA: Perspectives from Key Sectors” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் இராகுல் சாப்ரா வெளியிட்டுள்ளார். ‘IBSA Visiting Fellowship’ திட்டத்தின்கீழ் இரண்டாம் தொகுதி உறுப்பினர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2. “ஹுனார் ஹாத்” என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. நிதி அமைச்சகம்

ஆ. தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஈ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • “ஹுனார் ஹாத்” என்பது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. COVID-19 பெருந்தொற்றால் சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு, ‘ஹுனார் ஹாத்’ புது தில்லியின் பிதாம்புராவில் உள்ள தில்லி ஹாதத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. “Vocal for Local” என்பது இந்த நிகழ்வுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3. UNESCO’ஆல் நடப்பாண்டிற்கான (2020) உலக நூல்கள் தலைநகராக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

அ. துபாய்

ஆ. கோலாலம்பூர்

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் நடப்பாண்டிற்கான (2020) உலக நூல்கள் தலைநகராக UNESCO’ஆல் அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல்.23 அன்று உலக நூல்கள் & பதிப்புரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. UNESCO அமைப்பானது வெளியீட்டாளர்கள், நூல் விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் உலக நூல்கள் தலைநகரத்தை தேர்ந்தெடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக நூல்கள் தலைநகரமாக (2020), கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. ஆறு மாத குறுக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் எந்தப் பொருளாதார நடவடிக்கை 0.2% என சாதகமாக வளர்ந்துள்ளது?

அ. தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்

ஆ. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்

இ. மொத்த விலை குறியீட்டு எண்

ஈ. உற்பத்தியாளர் விலைக் குறியீட்டு எண்

  • இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்ணானது ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு மாத தொடர்ச்சியான குறுக்கத்திற்குப் பிறகு, இந்தக் குறியீட்டின் வளர்ச்சி நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7.36% குறுக்கம் பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பொருட்கள், மின் & சுரங்கத்துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

5. அண்மையில், இந்திய எண்ணெய் நிறுவனத்தால் (OIL) இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்ட டின்சுகியா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. ஜார்க்கண்ட்

இ. அஸ்ஸாம்

ஈ. பீகார்

  • இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான இந்திய எண்ணெய் நிறுவனம் அண்மையில், அஸ்ஸாம் மாநிலத்தின் டின்சுகியாவில் தோண்டப்பட்ட கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்தது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல் அஸ்ஸாம் படுகையில் உள்ள டின்சுகியாவில் உள்ள டின்ஜன்-1 கிணற்றில் 10 மீட்டர் அளவுக்கு ஹைட்ரோகார்பன் உள்ளது. இக்கண்டுபிடிப்பானது அஸ்ஸாம் மாநிலத்தில் மேலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுக்கான புதிய பகுதிகளை ஆராய உதவும்.

6. பிரதமரின் KUSUM திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம்

ஆ. புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்

இ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • பிரதமரின் உழவர்கள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Prime Minister Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan–KUSUM) முதலாமாண்டு செயல்பாட்டில் அறிந்துகொண்டவற்றின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செய்துள்ளது.
  • வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் ஒரே நிறுவனமயமாக்கப்பட்ட முதன்மை துறைமுகம் எது?

அ. காமராஜர் துறைமுகம்

ஆ. வ உ சி சிதம்பரனார் துறைமுகம்

இ. கொச்சி துறைமுகம்

ஈ. பாரதீப் துறைமுகம்

  • சோழமண்டலக் கடற்கரையில் எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம், இந்தியாவின் ஒரே நிறுவனமயமாக்கப்பட்ட முதன்மை துறைமுகமாகும். இது, ஒரு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் துறைமுகமாகும். ‘MSC Faith’ என்ற மிகப்பெரிய கொள்கலன் கப்பலைக் இத் துறைமுகம் அண்மையில் கையாண்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் புதிய தலைமுறை முனையத்தில் நவீன பாரந்தூக்கிகள் மற்றும் போதுமான புழக்கடை நிறுத்த வசதிகளும் உள்ளன.

8. பாங்க் ஆப் அமெரிக்கா ஏற்பாடு செய்த ‘India: Drivers of Change’ மாநாட்டில் உரையாற்றிய இந்திய அமைச்சர் யார்?

அ. நிர்மலா சீதாராமன்

ஆ. பியூஷ் கோயல்

இ. ஹர்ஷ் வர்தன்

ஈ. அமித் ஷா

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்தியா: மாற்றத்தின் உந்துசக்தி’ என்ற மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
  • அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையை -யும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, பியூஷ் கோயல், பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உற்பத்தித் துறைக்கு வழங்கப்ப -டும் உற்பத்தியுடன் கூடிய சலுகைகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார்.

9. அண்மையில் எந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் (National Cancer Awareness Day) கடைப்பிடிக்கப்பட்டது?

அ. நவம்பர் 7

ஆ. நவம்பர் 8

இ. நவம்பர் 9

ஈ. நவம்பர் 10

  • புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் புற்றுநோய்க்கு வழிகோலும் வாழ்க்கை முறையை தவிர்த்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் தேசிய அளவில் புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதை தடுக்கும் தடைகளை நீக்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.7 அன்று இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

10. உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 5

ஆ. நவம்பர் 6

இ. நவம்பர் 7

ஈ. நவம்பர் 8

  • ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நேரக் கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகவும் பயங்கரமானது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.
  • “Sendai Seven Campaign” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டுக்குரிய உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.

1. What is the abbreviation of ‘IBSA’, that is seen in news recently?

[A] India Brazil South Africa

[B] India Britain Saudi Arabia

[C] India Belgium South America

[D] India Bahrain South Australia

  • India–Brazil–South Africa (IBSA) report titled ‘Deepening Cooperation in IBSA: Perspectives from Key Sectors’ has been launched recently. The report has been launched by the Secretary, Ministry of External Affairs Rahul Chhabra. The report has been prepared by the 2nd batch of Fellows under the IBSA Visiting Fellowship Program.

2. ‘Hunar Haat’ is a flagship programme of which ministry?

[A] Ministry of Finance

[B] Ministry of Labor & Employment

[C] Ministry of Minority Affairs

[D] Ministry of Women & Child Development

  • ‘Hunar Haat’ is the flagship programme of the Minority Affairs Ministry aimed to create employment opportunities for artisans across India. After a gap of about seven months due to the COVID–19 pandemic, the Hunar Haat is set to restart at Delhi Haat at Pitampura, New Delhi. The theme of this event is “Vocal for Local”.

3. Which city was named as the World Book Capital for the year 2020, by UNESCO?

[A] Dubai

[B] Kuala Lumpur

[C] Chennai

[D] Bengaluru

  • Kuala Lumpur, the capital city of Malaysia was named as the World Book Capital for the year 2020 by UNESCO. Every year, April 23 is celebrated as the World Book and Copyright Day across the world. UNESCO along with the international organizations associated with publishers, booksellers and libraries, select the World Book Capital for a year. This year, Kuala Lumpur has been named for 2020.

4. Which economic measure of India grew positively by 0.2%, after 6–month contraction?

[A] Index of Industrial Production

[B] Consumer Price Index

[C] Wholesale Price Index

[D] Producer Price Index

  • India’s Index of Industrial Production (IIP) has grown by 0.2 percent in September on a year on year basis. After continuous contraction of six months, IIP has entered into the positive side of growth. During the month of August, a 7.36 percent contraction was recorded. Recovery in consumer goods, electricity and mining sectors was noted.

5. Tinsukia, where Oil India made a natural gas discovery, is located in which state?

[A] West Bengal

[B] Jharkhand

[C] Assam

[D] Bihar

  • India’s second largest oil producer Oil India Ltd has recently made a natural gas discovery at a well drilled in Tinsukia, Assam. As per the statement issued by the organisation, the Dinjan–1 well in Tinsukia in upper Assam basin found 10 meters of hydrocarbon–bearing sands. This discovery will help them explore new areas for further oil and gas exploration in Assam.

6. Which Union Ministry implements PM KUSUM scheme?

[A] Ministry of Power

[B] Ministry of New & Renewable Energy

[C] Ministry of Agriculture and Farmers Welfare

[D] Ministry of Health and Family Welfare

  • Union Ministry of New and Renewable Energy (MNRE) launched the Pradhan Mantri Kisan Urja Suraksha evem Utthan Mahabhiyan (PM KUSUM) Scheme.
  • Recently, the Ministry has amended the guidelines of the scheme as solar power plants can also be installed on pasture land and marshy land of farmers. Earlier, only barren, fallow and agricultural lands were used for installing solar plants.

7. Which is the only corporatized major port of India?

[A] Kamarajar Port

[B] V O Chidambaranar Port

[C] Cochin Port

[D] Paradip Port

  • Kamarajar Port located in Ennore, on the Coromandel Coast is the only corporatized major port of India. It is also the first port in India which is a public company. The Port was seen in news recently, as it has handled the largest ever container vessel – MSC Faith. As per the company, the new generation terminal is equipped with latest gantry cranes and sufficient backup yard.

8. Which Indian Minister addressed the “India: Drivers of Change” conference organised by Bank of America?

[A] Nirmala Sitharaman

[B] Piyush Goyal

[C] Harsh Vardhan

[D] Amit Shah

  • Union minister for Commerce and Industry, Piyush Goyal delivered the keynote address at Conference “India: Drivers of Change”. In the conference organized by the Bank of America, the Minister urged the global investors to invest in India. He also highlighted about the production–linked incentives provided for the manufacturing sector.

9. On which date, the National Cancer Awareness Day was observed recently in India?

[A] November 7

[B] November 8

[C] November 9

[D] November 10

  • In India, the National Cancer Awareness Day is observed every year on 7th of November to remove all stops to lower the national cancer burden by generating awareness about early detection and avoiding leading cancer–causing lifestyles.

10. On which date, the 2020 edition of World Tsunami Awareness Day is observed?

[A] November 5

[B] November 6

[C] November 7

[D] November 8

  • The World Tsunami Awareness Day is observed every year on November 5 to raise awareness about precautionary measures against tsunami and share innovative approaches to risk reduction. Tsunamis are rare events, but can be extremely deadly.
  • In the past 100 years, 58 tsunamis have claimed more than 260,000 lives, which is the highest number of deaths than in any other natural hazard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!