Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th September 2020 Current Affairs in Tamil & English

17th September 2020 Current Affairs in Tamil & English

17th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

17th September Tamil Current Affairs 2020

17th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘அசோல் சினி’ என்றவொரு பரப்புரைத் திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?

அ. வங்கதேசம்

ஆ. மியான்மர்

இ. இலங்கை

ஈ. பாகிஸ்தான்

  • சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கதேசம், அண்மையில், ‘அசோல் சினி’ என்ற நாடு தழுவிய பரப்புரைத்திட்டத்தை தொடங்கியது. ‘மெய்யான அடையாளம்’ எனப் பொருள்படும் ‘அசோல் சினி’ பரப்புரைத்திட்டமானது, போலி தகவல்களையும் வதந்திகளையும் தடுக்க டிஜிட்டல் கல்வியறிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மூன்று மாத கால பரப்புரைத்திட்டத்தைச் செயல்படுத்த, durbar21.org என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2.கால்நடைகளை நிர்வகிப்பதற்காக, பிரதமர் தொடங்கியுள்ள புதிய தளத்தின் பெயர் என்ன?

அ. e-Gopala App

ஆ. e-Livestock App

இ. e-Gaumata App

ஈ. e-Animal Info

  • ‘இ-கோபாலா’ செயலி எனப் பெயரிடப்பட்ட, கால்நடைகளை நிர்வகிப்பதற்கான புதிய தளத்தை பிரதமர் தொடங்கவுள்ளார். இந்தச் செயலி, இன மேம்பாட்டுச்சந்தையாக செயல்படும். கால்நடைகளின் வித்துச் சோற்றை (germplasm) வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட கால்நடைகளை நிர்வகிப்பதுபற்றிய தகவல்களையும் இத்தளம் வழங்குகிறது. கால்நடைகள், விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கான தரமான இனப்பெருக்க சேவைகளையும் இது உறுதிசெய்கிறது. தடுப்பூசி மற்றும் கன்று ஈன்றதை நினைவூட்டுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளையும் இது அனுப்புகிறது.

3.பசுவதைக்கு தடை விதிக்கவுள்ள இந்தியாவின் அண்டை நாடு எது?

அ. வங்கதேசம்

ஆ. நேபாளம்

இ. இலங்கை

ஈ. சீனா

  • சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, இலங்கையின் ஆளுங்கட்சியான இலங்கை பொடுசனா பெரமுனா (SLPP), பசுவதைக்கு தடைவிதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில், சுமார் 99% மக்கள் இறைச்சி உண்ணுபவர்களாக உள்ளனர். அதேசமயம், பெரும்பான்மையான ஹிந்துக்களும் பெளத்த மக்களும் மாட்டிறைச்சி உண்ணுபவர்களாக இல்லை. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான SLPP கட்சி, கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 2/3 பங்கு பெரும்பான்மையை வென்றது.

4.அண்மையில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது கிசான் இரயில், நாட்டின் எந்த இரண்டு நகரங்களை இணைக்கின்றது?

அ. பெங்களூர் – மும்பை

ஆ. சென்னை – தில்லி

இ. அனந்தபூர் – தில்லி

ஈ. ஹைதராபாத் – கொல்கத்தா

  • நாட்டின் இரண்டாவதும் தென்னிந்தியாவின் முதலாவதுமான கிசான் இரயில் சேவை, அண்மையில், கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரை தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்துடன் இணைக்கும். இந்த இரயிலை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கிசான் ரயில் திட்டம், 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்துக்காக அறிவிக்கப்பட்டது.

5.எந்த மத்திய அமைச்சகம் அதன் அனைத்து திட்டங்களுக்குமான 33 செயல்திட்டங்கள் அடங்கிய ஒரு நூலை வெளியிட்டுள்ளது?

அ. வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

  • 2020-21ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அனைத்து திட்டங்களுக்கான 33 செயல்திட்டங்கள் அடங்கிய நூலொன்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலோட் வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் அரசு-சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவதற்காக, விரிவான செயல் திட்டம் ஒன்றை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

6.தென்னிந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, அண்மையில், ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படும் முதல் சேவையான இதில் சிக்கலான COVID-19 நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான ஜெர்மனிய தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. இதனை, ஒரு வானூர்தி தொழினுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, ICATT உருவாக்கி உள்ளது. அதிக சாலைப்போக்குவரத்து இருந்தபோதிலும், இச்சேவை, மருத்துவ அவசரநிலைகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?

அ. பீகார்

ஆ. உத்தரபிரதேசம்

இ. புது தில்லி

ஈ. புதுச்சேரி

  • புது தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி அரசின் ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, மெய்நிகர் பயன்முறையின் மூலம், புகார்களை பதிவுசெய்ய, மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, COVID-19 தொற்றுநோய்க்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உதவுகிறது. கடந்த ஜூலை மாதம், தில்லி அரசாங்கம் ஒரு e-RTI தளத்தை அறிமுகப்படுத்தியது; அது, குடிமக்களுக்கு, இணையவழியில் தகவல் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல்செய்ய உதவுகிறது.

8. e-KYC ஆதார் அங்கீகரிப்பை மேற்கொள்வதற்கு, எந்த அமைப்புக்கு, SEBI ஒப்புதல் அளித்துள்ளது?

அ. BSE

ஆ. NSE

இ. NABARD

ஈ. NHB

  • e-KYC ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பட்டியலில், SEBI, தேசிய பங்குச் சந்தையை (NSE) சேர்த்துள்ளது. முன்னதாக, 2020 மே மாதத்தில், e-KYC (மின்னணு முறையில் -உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள அனுமதித்த எட்டு நிறுவனங்களின் பட்டியலை SEBI வெளியிட்டது. சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, UIDAI’இன் ஆதார் அங்கீகரிப்புச்சேவையை, NSE மேற்கொள்ளலாம் என SEBI கூறியுள்ளது.

9.அண்மையில் எந்த நாட்டோடு, இந்தியா, முதன்முறையாக, கூட்டு ஆணையக் கூட்டத்தை நடத்தியது?

அ. அங்கோலா

ஆ. அர்ஜென்டினா

இ. கியூபா

ஈ. கோஸ்ட்டா ரிக்கா

  • இந்தியாவுக்கும் அங்கோலாவுக்கும் இடையிலான முதல் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும், அங்கோலா வெளியுறவு அமைச்சர் டெட் அன்டோனியோவும் இணைந்து தலைமைதாங்கினர். இந்தக்கூட்டத்தின்போது, இருநாடுகளும் தங்கள் வணிக உறவைப் பன்முகப்படுத்துதற்கு ஒப்புக்கொண்டன. நலவாழ்வு, மருந்துகள், பாதுகாப்பு, வேளாண் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

10.ஐநா உலக உணவுத்திட்டமானது எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டிணைந்து, நிரப்பு ஊட்டச்சத்து (supplementary nutrition) உற்பத்தி அலகுகளை அமைக்கவுள்ளது?

அ. பீகார்

ஆ. உத்தரபிரதேசம்

இ. உத்தரகண்ட்

ஈ. ஜார்க்கண்ட்

  • ஐநா அவையின் உலக உணவுத்திட்டமும் (WFP) உத்தர பிரதேச மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டமும் இணைந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட நிரப்பு ஊட்டச்சத்து உற்பத்தி அலகுகளை நிறுவவுள்ளன. இது, ஒருங்கிணைந்த சிறார்கள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கூட்டணி, எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள், 18 மாவட்டங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 33 இலட்சம் பயனாளிகளை சென்றடைய நோக்கங்கொண்டுள்ளது.

1. Which country launched a campaign named ‘Asol Chini’, to curb fake information on Social Media?

[A] Bangladesh

[B] Myanmar

[C] Sri Lanka

[D] Pakistan

  • Bangladesh has recently launched a nation–wide campaign named ‘Asol Chini’, to curb fake information on Social Media. The ‘Asol Chini’ campaign, which means ‘real identification’, aims to create digital literacy to stop fake information and rumours. To implement this three–month long campaign, a digital platform Durbar21.org has been created.

2. What is the name of the new platform launched by the Prime Minister, for managing Livestock?

[A] e–Gopala App

[B] e– Livestock App

[C] e–Gaumata App

[D] e–Animal Info

  • The Prime Minister is to launch a new platform for managing Livestock named as e–Gopala App, which will serve as a breed improvement marketplace. The portal also aims to provide information on managing livestock including buying and selling of germplasm of livestock. It also ensures Quality breeding services for livestock, Animal nutrition and traditional medical treatment. It also sends alerts to remind vaccination and calving.

3. Which neighbouring country of India has proposed to ban cow–slaughter?

[A] Bangladesh

[B] Nepal

[C] Sri Lanka

[D] China

  • As per the recent media reports, the ruling party of Sri Lanka, the Sri Lanka Podujana Peramuna (SLPP) has approved a proposal to ban cow slaughter. In the country, about 99% people are meat–eaters. Whereas, the majority Hindus and Buddhists do not eat beef. Mahinda Rajapaksa–led SLPP party won a two–thirds majority in the parliamentary elections last month.

4. The country’s second Kisan Rail that was flagged off recently, would connect which two cities?

[A] Bangalore – Mumbai

[B] Chennai – Delhi

[C] Anantapur – Delhi

[D] Hyderabad – Kolkata

  • The country’s second and South India’s first Kisan Rail service has been recently flagged off. This would connect Anantapur in Andhra Pradesh to Adarsh Nagar Railway Station in Delhi. The train was flagged off by the Union Minister for Agriculture Narendra Singh Tomar. The Kisan Rail scheme was announced in Budget 2020–21 for transport of agricultural products.

5. Which Union Ministry has released a book with 33 Action Plans 2020–21 of all of its schemes?

[A] Ministry of Agriculture and Farmers Welfare

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of Health and Family Welfare

[D] Ministry of Housing and Urban Affairs

  • The Union Minister of Social Justice & Empowerment, Thaawarchand Gehlot has recently released a book containing 33 Action Plans 2020–21 of all the schemes of the Department of Social Justice & Empowerment. This is the first time that the Department has released comprehensive Annual Action Plan 2020–21. The aim is to provide specific targets for the Ministry, State Governments and NGOs.

6. Which Indian state has launched the first integrated Air ambulance service of South India?

[A] Tamil Nadu

[B] Karnataka

[C] Kerala

[D] Andhra Pradesh

  • The Chief Minister of Karnataka B.S. Yediyurappa has recently launched an Integrated Air ambulance service. Being the first air ambulance from South India, it has German Isolation Pod to transport critical COVID–19 patients. It is developed by ICATT in coordination with an aviation technology firm. The service is expected to serve medical emergencies in spite of heavy road traffic.

7. Which India state/UT has launched ‘e–filing consumer complaint system’?

[A] Bihar

[B] Uttar Pradesh

[C] New Delhi

[D] Puducherry

  • The Chief Minister of New Delhi Arvind Kejriwal has recently inaugurated the Delhi government’s e–filing consumer complaint system. The system is aimed at helping the people to file complaints through virtual mode. This digital service helps people maintain social distancing amidst the COVID–19 pandemic. In July, Delhi launched an e–RTI portal that will enable citizens to file online Right to Information (RTI).

8. SEBI has approved which organisation to undertake e–KYC Aadhaar authentication?

[A] BSE

[B] NSE

[C] NABARD

[D] NHB

  • SEBI has added National Stock Exchange (NSE) to the list of entities that can carry out e–KYC Aadhaar authentication. Earlier in May 2020, SEBI had rolled out a list of 8 entities that permitted to undertake e–KYC (electronic–Know Your Customer) Aadhaar authentication. SEBI has stated that NSE can undertake Aadhaar authentication service of the UIDAI subject to compliance certain terms and conditions.

9. India has held a Joint Commission Meeting with which country recently, for the first time?

[A] Angola

[B] Argentina

[C] Cuba

[D] Costa Rica

  • The first Joint Commission Meeting between India and Angola was held recently. The meeting was co–chaired by External Affairs Minister S Jaishankar and his counterpart Tete Antonio. During the meeting, the two countries agreed to diversify their trade relationship. The leaders also discussed regarding cooperation in health, pharmaceuticals, defence, agriculture sectors.

10. The United Nations World Food Programme (WFP) has partnered with which Indian state to set up supplementary nutrition production units?

[A] Bihar

[B] Uttar Pradesh

[C] Uttarakhand

[D] Jharkhand

  • The United Nations World Food Programme (WFP) and the Uttar Pradesh State Rural Livelihood Mission (SRLM) are to collaborate in establishing over 200 supplementary nutrition production units. This is to be undertaken under the Integrated Child Development Services (ICDS) scheme. This partnership aims to reach nearly 33 lakh beneficiaries in 18 districts, by 2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!