Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

17th & 18th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th & 18th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “மாநில பொது நிர்வாக நிறுவனங்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் 2 நாள் மண்டல மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ) மும்பை

ஆ) தில்லி

இ) அகமதாபாத்

ஈ) லக்னோ 

  • இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறையும், உத்தர பிரதேச மாநில அரசும் இணைந்து லக்னோவில் “மாநில பொது நிர்வாக நிறுவனங்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் மண்டல மாநாட்டை ஏற்பாடு செய்தது. நிர்வாக மற்றும் நிர்வாகப் பயிற்சியில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தேவைகளைப் பகிர்ந்து கொள்ள பல்வேறு பயிற்சி நிறுவனங்களை ஒரே தளத்தில் கொண்டு வருவது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “வரலாற்றுத் தீர்மானம்” என்பதுடன் தொடர்புடைய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான்

இ) சீனா 

ஈ) நியூசிலாந்து

  • சீனப் பொதுவுடைமை கட்சி பொதுவாக “வரலாற்றுத் தீர்மானம்” என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இது, ஆளும் அதிபர் ஜி ஜின்பிங்கை அடுத்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றாவது முறையாக பதவியில் அமர்த்தவும் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் சீனாவை ஆட்சி செய்யவும் உதவும்.
  • இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் மாவோ சேதுங் மற்றும் டெங் சியோபிங் ஆகியோருக்கு இணையாக வைக்கப்படுவார். மேலும், ஒரு வரலாற்றுத் தீர்மானத்தைக் கொண்ட மூன்றாவது சீனத் தலைவராகவும் ஆனார்.

3. ‘டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்’படி, கைபேசி பயன்படுத்துவோரின் சதவீதம் எவ்வளவு?

அ) 45

ஆ) 65 

இ) 75

ஈ) 80

  • ‘We Are Social’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் ‘டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் 65%’ க்கும் அதிகமானோர் கைபேசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • உலகளாவிய கைபேசி பயனர்கள் எண்ணிக்கை அக்டோபரில் 5.29 பில்லியனை எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலக மக்கள்தொகையில் 60% பேர் சமூக ஊடக பயனர்களாக வாய்ப்புள்ளது என இவ்வறிக்கை கூறுகிறது.

4. நியூயார்க்கில் நடைபெற்ற தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ) நரேந்திர மோடி

ஆ) அனுராக் தாக்கூர் 

இ) பியூஷ் கோயல்

ஈ) நிர்மலா சீதாராமன்

  • ஐநா பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார். ‘தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான சர்வதேச கூட்டணி’ நியூயார்க்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்.26 அன்று தொடங்கப்பட்டது. இது கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் இலவச, பன்மை மற்றும் நம்பகமான தகவல்களுக்கான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையில் இன்றுவரை 43 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

5. சர்வதேச அணுசக்தி முகமையின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

அ) வினோத் ராய்

ஆ) சஷி காந்த் சர்மா

இ) ராஜீவ் மெஹ்ரிஷி

ஈ) ஜி சி முர்மு 

  • இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலான ஜி சி முர்மு பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) வெளியக தணிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். IAEA என்பது ஒரு மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இது அமைதியான அணுவாற்றல் பயன்பாட்டை ஊக்கு -விக்கிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, அவரது வேட்புமனு IAEA பொது மாநாட்டின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. அவரது பதவிக்காலம் 2022 முதல் 2027 வரை ஆறு ஆண்டுகள் இருக்கும்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற டிஜிசக்ஷம் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம்

இ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 

ஈ) ஜவுளி அமைச்சகம்

  • மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சரான பூபேந்திர யாதவ், மைக்ரோசாப்ட் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தின்மூலம், பதிவுசெய்யப்பட்ட 10 மில்லியன் வேலைதேடுவோர், தேசிய தொழில் சேவை வலைதளத் -தில் கணினி மற்றும் கணினி அறிவியல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சியை பெறமுடியும். நிரலாக்க மொழிகள், தரவு பகுப்பாய்வு, மென்பொருள் வளர் -ச்சிபோன்ற பாடங்களில் பயிற்சி அளிப்பதன்மூலம் முதலாம் ஆண்டில் 3,00,000 வேலை தேடுவோரை இது பயிற்றுவிக்கும்.

7. உலக சகிப்புத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 16 

ஆ) நவம்பர் 14

இ) நவம்பர் 12

ஈ) நவம்பர் 10

  • சமுதாயத்தில் சகிப்புத்தன்மையின் அவசியத்தைப்பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், சகிப்புத்தன்மையின் எதிர்மறையான விளைவுகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதற்குமாக ஐநா அவையின் உலக சகிப்புத்தன்மை நாள் ஆண்டுதோறும் நவ.16 அன்று கடைப்பிடிக்கப்படு -கிறது. இந்நாள் உலகளாவிய சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறது.

8. “ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராமம்” திட்டத்தை தொடங்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம்

  • விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், போஷன் அபியானை வலுப்படுத்த, “ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராமம்” என்ற திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த திட்டம் ஆசாதி கா அம்ரித் மகோத்சவின் ஒருபகுதியாகும். இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமங்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது.
  • கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு, கல்வி மற்றும் நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க உள்ளூர் செய்முறையைப் பயன்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து உணர் திறன்கொண்ட விவசாயத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. அண்மையில் எந்த நாடு, இந்தியாவுடன் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை உருவாக்கியது?

அ) இலங்கை 

ஆ) நேபாளம்

இ) பங்களாதேஷ்

ஈ) ஜப்பான்

  • இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களைக்கொண்ட இந்தியா-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை இலங்கை உருவாக்கியது. சீனாவின் உரச் சரக்குகளை நிராகரித்ததையடுத்து, இந்தியாவிடமிருந்து உரத்தை வாங்குவதற்கு இலங்கை முன்னர் தீர்மானித்திருந்தது.
  • இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அண்மையில் நிறுவப்பட்டது.

10. பின்வரும் எக்கண்டத்தில் அமைந்துள்ள சகேல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஐநா அமைதி காக்கும் தலைவர் எச்சரித்துள்ளார்?

அ) ஆப்பிரிக்கா 

ஆ) ஆசியா

இ) ஐரோப்பா

ஈ) ஆஸ்திரேலியா

  • ஐநா அமைதிகாக்கும் தலைவரானவர் ஆப்பிரிக்க கண்டத்தின் சகேல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளார்.
  • இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், குழந்தைகளுக்கு பள்ளி செல்ல முடியாத நிலை, மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதி இல்லாதது குறித்தும் எச்சரித்தார். ஜி5 சகேல் படை தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசினார். சாட், மாலி, புர்கினா பாசோ, நைஜர் மற்றும் மொரிடானியா ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகளால் 2017’இல் சகேல் பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இது அமைக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உயர்தர ஸ்டீல் அலாய் கண்டுபிடிப்பு: ஐஐடி மெட்ராஸ்

வாகனங்களின் எடையை குறைக்க ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உயர்தர ஸ்டீல் அலாயை, ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடித்துள்ளது.

வாகனங்களின் எரிபொருள் நுகர்வு, அதன் எடையை பொறுத்து அமைகிறது என்பதால், விஞ்ஞானிகள் இலகு ரக உலோகத்தை கண்டுபிடிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். பொதுவாக கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டீலில் தயாரித்து வருகின்றனர். விபத்துச் ம்பவங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக, ஸ்டீலில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எரிபொருளும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலைகள் இப்போது அதிகரித்து வரும் நிலையில், எடைகுறைவான இலகு ரக உலோகம் கண்டுபிடிக்கப்பட்டால், மக்களுக்கு அது பணத்தை மிச்சப்படுத்த உதவும். இதையடுத்து கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில், மெட்ராஸ் ஐஐடி-யின் உலோகவியல் துறை பேராசிரியர் சுப்பிரமணிய சர்மா வட்லமணி மற்றும் அவர் குழுவினர் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உயர்தர ஸ்டீல் அலாயை கண்டுபிடித்துள்ளனர். மாங்கனீஸ், கார்பன், அலுமினியம், சிலிகான், நிக்கல், நியோபியம் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எஃகுடன் கலந்து இந்த ஸ்டீல் அலாயை கண்டுபிடித்துள்ளனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளின் படி, இதை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக எஃகு மற்றும் வாகனத் தொழில்துறையினருடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

2. நவ.16 – தேசிய பத்திரிகையாளர் தினம்

3. தமிழகத்தில் மாவட்டம்தோறும் – சூரியசக்தி மின்சார பூங்கா: இடம் தேர்வுப் பணியில் மின்வாரியம் தீவிரம்

மாவட்டம்தோறும் சூரிய மின்சக்திபூங்கா அமைக்கப்படும். முதல்கட்டமாக 4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மாவட்டம்தோறும் சூரியசக்தி மின்சார பூங்காஅமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் தேவை. மாநகராட்சி, நகராட்சி இல்லாத மாவட்டங்களில் 75 முதல் 100 மெகாவாட் திறனில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைமின் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு நிலங்களை கையப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்.

முதலாவது பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

3. இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது தமிழக சிறுவன்

சென்னை எண்ணூரைச் சேர்ந்த திபின் – திவ்யா தம்பதியரின் இரண்டரை வயது மகன் ரித்தின்கலிகோட், ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.

பெங்களூருவில் வசித்து வரும் இந்த தம்பதியரின் மகன் ரித்தின் கலிகோட், சிறுவர்களுக்கான கதைபுத்தகங்கள், கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், அவை செய்யும் தொழில்கள் ஆகியவற்றை மனப்பாடமாக கூறியிருக்கிறான்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள், கிரகங்கள், காட்டு விலங்குகள், வடிவங்கள், நிறங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் சொல்லிக் கொடுத்தனர்.

இந்த பயிற்சியின் காரணமாக தற்போது சிறுவன் ரித்தின், ஒன்று முதல் முப்பது வரையிலான எண்கள், 10 வகை நிறங்கள், 20 நாடுகளின் தேசியக் கொடிகள், 9 கிரகங்கள், 40 வீட்டு உபயோகப் பொருட்கள், 18 உடல் பாகங்கள், 20 வனவிலங்குகள், 10 வீட்டு விலங்குகள், 18 வடிவங்கள், 20 மலர்கள், 24 காய்கறிகள், 18 தொழில்கள், 20வாகனங்கள் ஆகியவற்றை துல்லியமாக அடையாளம் கண்டு சொல்கிறான். அதுமட்டுமின்றி, 4 குழந்தைப் பாடல்கள், ஆங்கில உயிர் எழுத்துகள் ஆகியவற்றையும் மனப்பாடமாக கூறுகிறான்.

இந்நிலையில், இதுகுறித்து அறிந்த ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிர்வாகிகள், ரித்தினின்இந்த திறமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிலேயே இரண்டரை வயதில் இவ்வளவு விஷயங்களை இதுவரை யாரும் கூறியதில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்திய சாதனைப் புத்தகத்தில் சிறுவன் ரித்தினின் பெயர் இடம்பெற்றுள்ளது.

4. டெல்லி வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா: தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ‘சுயசார்புஇந்தியா’ என்ற கருப்பொருளில் நடைபெறும் 40-வது இந்தியப் பன்னாட்டுவர்த்தகப் பொருட்காட்சியை மத்தியஅமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 14-ம்தேதி தொடங்கி வைத்தார்.

இதில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், செய்தி, சுற்றுலா, வேளாண்மை, தோட்டக்கலை, தொழில்,மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தொழில்வளர்ச்சி நிறுவனம், கைத்தறி துறை, தொழில் முன்னேற்ற நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு, அரசு சார்பு துறைகள் பங்கேற்று,தங்கள் வளர்ச்சித் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. செய்தித் துறை சார்பில்அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த மாதிரி வடிவம் மக்களை மிகவும் கவர்ந்தது.

இந்த வர்த்தகப் பொருட்காட்சியின் தமிழ்நாடு அரங்கில் விடுதலைப் போரில்ஈடுபட்ட தமிழக பெண் தியாகிகளின்புகைப்படங்கள், முக்கிய தியாக சீலர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் சாமிநாதன், ‘‘தமிழக முதல்வரால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் பல்வேறு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது”என்றார்.

இப்பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநில நாள் விழாவை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நாள் விழா நேற்று பிரகதி மைதானத்தில் உள்ள லால்சவுக் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவை அமைச்சர் சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், டெல்லி சிறப்புபிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, செய்தித் துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது அறிவிப்பு

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினரை மட்டுமின்றி ரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனித் ராஜ்குமார் ஆதரவற்றோருக்கும், ஏழை-எளியோருக்கும் ஏராளமான உதவிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

6. 2025-இல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி

2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது ஐசிசி. இதையடுத்து சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் ஐசிசியின் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐசிசி போட்டிகளுக்கான அடுத்த சைக்கிளில் இந்தியாவுக்கு 3 போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026-இல் டி20 உலகக் கோப்பை போட்டியையும், 2029-இல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும் நடத்த இருக்கும் இந்தியா, 2031-இல் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியை இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து நடத்துகிறது.

2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் நடத்தப்பட இருக்கும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.

பாகிஸ்தான் கடைசியாக 1996-இல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியிருந்தது. 2009-இல் பாகிஸ்தான் வந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நாட்டில் ஐசிசியின் சா்வதேச போட்டிகள் நடைபெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியானது கடைசியாக கடந்த 2017-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்படும் இந்தப் போட்டி, முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

ஐசிசியில் தற்போது இருக்கும் 14 உறுப்பு நாடுகள், வரும் 2023 முதல் 2031 வரை ஆடவருக்கான ஐசிசி போட்டிகளை நடத்தவுள்ளன. இதில் அமெரிக்கா மற்றும் நமீபியாவுக்கு ஐசிசி போட்டிகளை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக வழங்கப்படுகிறது.

1. Two–day Regional Conference on “Strengthening the State Institutes of Public Administration” was held at which place?

A) Mumbai

B) Delhi

C) Ahmedabad

D) Lucknow 

  • The Government of India’s Department of Administrative Reforms and Public Grievances in association with the Government of Uttar Pradesh has organized a Two–day Regional Conference on “Strengthening the State Institutes of Public Administration” at Lucknow. The objective of the conference was to bring various training institutes on one platform to share best practices and requirements in governance and administrative training.

2. “Historical Resolution” which is in the news recently, is associated with which country?

A) USA

B) Japan

C) China 

D) New Zealand

  • The Communist Party of China has adopted a landmark resolution commonly called the “Historic Resolution”, which would enable ruling President Xi Jinping to secure an unprecedented third term in office next year and rule China throughout his life.
  • By adopting this resolution, he is placed equal to iconic past leaders Mao Zedong and Deng Xiaoping and has become the third leader of China to have a Historical Resolution.

3. As per the ‘Digital 2021: November Global Snapshot”, what is the world’s population that uses a mobile phone?

A) 45

B) 65 

C) 75

D) 80

  • Research firm We Are Social released a report titled ‘Digital 2021: November Global Snapshot”. As per the report, more than 65% of the world’s population now uses a mobile phone. Global mobile phone users reached 5.29 billion in November. The report also highlighted that, social media users are likely to be adopted by 60% of the global population in the first half of 2022.

4. Who represented India in the Summit for Information and Democracy held at New York?

A) Narendra Modi

B) Anurag Thakur 

C) Piyush Goyal

D) Nirmala Sitharaman

  • Union Minister for Information and Broadcasting Anurag Thakur addressed the Summit for Information and Democracy on the sidelines of the UNGA organised in New York. He participated in the discussion, by joining from Leh, Ladakh.
  • The ‘International Partnership for Information and Democracy’ was launched in New York on Sept.26 2019. It aims to promote freedom of opinion and expression and access to free, pluralistic and reliable information. The partnership has been signed by 43 States, till date.

5. Which Indian has been selected as the external auditor of the International Atomic Energy Agency (IAEA)?

A) Vinod Rai

B) Shashi Kant Sharma

C) Rajiv Mehrishi

D) GC Murmu 

  • India’s Comptroller and Auditor General G C Murmu selected as the external auditor of the International Atomic Energy Agency (IAEA). IAEA is a prestigious international institution that promotes peaceful use of nuclear energy. As per the Union Ministry of External Affairs (MEA), his candidature received majority support of the IAEA general conference and his tenure will be for six years, from 2022 to 2027.

6. DigiSaksham programme, which was making news recently, was launched by which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Finance

C) Ministry of Labour and Employment 

D) Ministry of Textiles

  • Union Labour and Employment Minister Bhupendra Yadav announced a collaboration with Microsoft India to launch DigiSaksham programme. Through DigiSaksham, 10 million active registered job seekers will be able to access the training including computing and computer science training on the National Career Service Portal.
  • The programme is aimed to impact 3,00,000 job seekers in the first year by training them in subjects like programming languages, data analytics, software development etc.

7. “International Day for Tolerance” is celebrated on which date?

A) November 16 

B) November 14

C) November 12

D) November 10

  • The United Nations’ International Day for Tolerance is annually observed on November 16 to educate people about the need for tolerance in society and to help them understand the negative effects of intolerance. The International Day for Tolerance educates people about the importance of global tolerance.

8. Which Union Ministry is set to launch “Nutrition Smart Village” initiative?

A) Ministry of Agriculture and Farmers Welfare 

B) Ministry of Rural Development

C) Ministry of Women and Child Development

D) Ministry of Food Processing industries

  • Ministry of Agriculture and Farmers Welfare is set to launch a programme on “Nutrition Smart Village” to strengthen the Poshan Abhiyan. This scheme is a part of Azadi Ka Amrit Mahotsav.
  • This initiative aims to reach out to 75 villages across India. It aims to promote nutritional awareness, education and behavioural change in rural areas, using local recipe to overcome malnutrition and implementing nutrition–sensitive agriculture.

9. Which country formed a Parliamentary Friendship Association with India recently?

A) Sri Lanka 

B) Nepal

C) Bangladesh

D) Japan

  • Sri Lanka formed India–Sri Lanka Parliamentary Friendship group, with senior members of Lankan parliament to promote bilateral ties with India. The country had earlier decided to buy fertiliser from India after rejecting the Chinese fertiliser consignment. The India– Sri Lanka Parliamentary Friendship Association for the 9th Parliament of Sri Lanka was established recently.

10. The UN Peacekeeping Chief warned about crisis in Sahel region, located in which continent?

A) Africa 

B) Asia

C) Europe

D) Australia

  • The UN peacekeeping chief warned about the crisis in Africa’s Sahel region. He highlighted that Millions of people are displaced. He also warned about the lack of access of schools to children and lack of primary health care to the people. He was speaking at a UN Security Council meeting on the G5 Sahel force.
  • It was set up by five African nations namely Chad, Mali, Burkina Faso, Niger and Mauritania in 2017 to fight the terrorist threat in the Sahel region.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!