Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. முதல் இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான இயக்கத்தின் பெயர் என்ன?

அ. மாத்ரித்வா 1000

ஆ. பாலன் 1000 

இ. புத்ரா 1000

ஈ. சுகன்யா 1000

  • நடுவண் சுகாதார அமைச்சகம் முதல் இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சியை மையமாகக்கொண்டு, ‘பாலன் 1000’ என்ற தேசிய அளவிலான இயக்கம் மற்றும் பெற்றோருக்குரிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. இச்செயலி குழந்தைப்பருவத்துக்கு முந்தைய மேம்பாடு குறித்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் அன்றாட வழக்கத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்த நடைமுறை ஆலோசனைகளை வழங்கும் மற்றும் பெற்றோரின் ஐயங்களை தீர்க்க உதவும்.

2. ‘வானிலிருந்து மருத்துவம்’ என்ற டிரோன் அடிப்படையிலான மருத்துவ சேவையை அறிமுகப்படுத்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. பஞ்சாப்

ஆ. அருணாச்சல பிரதேசம் 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • அருணாச்சல பிரதேச மாநிலமானது செப்பாவிலிருந்து சாயாங் தாஜோவிற்கு, ‘வானிலிருந்து மருத்துவம்’ என்ற டிரோன் அடிப்படையிலான மருத்துவ சேவையினை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து சுகாதாரம், உழவு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் டிரோன் விமானங்களைப் பயன்படுத்தும் முன்னோடித் திட்டத்தை அருணாச்சல பிரதேச அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது.

3. அண்மையில் தொடங்கப்பட்ட மந்தன் தளத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. மின்னணு உற்பத்தி

ஆ. தடுப்பூசி

இ. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் 

ஈ. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

  • இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ‘மந்தன்’ தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. தொழிற்துறை மற்றும் அறிவியலாராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த சமூக–தாக்க புத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. 2022 ஜூலையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் எவ்வளவு?

அ. 11.93%

ஆ. 13.93% 

இ. 15.93%

ஈ. 17. 93%

  • கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் ஜூலை மாதம் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.93 சதவீதமாக குறைந்தது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாகவும், மே மாதத்தில் 15.88 சதவீதமாகவும் பதிவானது. காய்கறிகள், பால் மற்றும் எரிபொருளின் விலை குறைந்ததால் ஜூலை மாதத்தின் விலை குறைந்துள்ளது. இருப்பினும், பதினாறாவது மாதமாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.
  • கனிம எண்ணெய்கள், உணவுப்பொருட்கள், கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், மின்சாரம், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றமே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

5. நலவாழ்வு மையங்களை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டை அறிவித்த நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. தேசிய நலவாழ்வு ஆணையம் 

இ. AIIMS

ஈ. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

  • தேசிய நலவாழ்வு ஆணையமானது நலவாழ்வு வல்லுநர்கள் மற்றும் நலவாழ்வு மையங்களின் பதிவேடுகளை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. இந்தச் செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தைச் செயல்படுத்த உதவும். 2025–26 நிதியாண்டுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க அலுவலகங்களை அமைப்பதற்காக `500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

6. HEI–இன் சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நகரங்களில், நுண்துகள் PM 2.5–இன் அதிகபட்ச சராசரி அளவைக் கொண்டுள்ள நகரம் எது?

அ. டாக்கா

ஆ. வாரணாசி

இ. புது தில்லி 

ஈ. கொழும்பு

  • ‘நகரங்களில் காற்றின்தரம் மற்றும் நலம்’ என்ற அறிக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) வெளியிட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள 7,000 நகரங்களின் காற்று மாசுபாடு மற்றும் உலகளாவிய சுகாதார விளைவுகளை பகுப்பாய்வு செய்கிறது; நுண்துகள்கள் (PM2.5) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. இந்த அறிக்கையின்படி, 2010 முதல் 2019 வரையில் ஆய்வு செய்யப்பட்ட 20 நகரங்களுள் 18 நகரங்களில், நுண்துகள் மாசுபாடுகள் (PM2.5) மிகக்கடுமையாக அதிகரித்து உள்ளது. அப்பதினெண் நகரங்களும் இந்தியாவில்தான் உள்ளன. உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நகரங்களில், தில்லியில் அதிகபட்ச சராசரியான PM 2.5 அளவு காணப்படுகிறது.

7. ‘வித்யா இரதம் – நடமாடும் பள்ளி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. பீகார்

இ. அஸ்ஸாம் 

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, ‘வித்யா இரதம் – நடமாடும் பள்ளி’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். சமுதாயத்தில் அடிநிலையிலுள்ள குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகளுக்கு 10 மாதங்களுக்கு தொடக்கக்கல்விக்கான அணுகலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பத்து மாதங்களுக்குப்பிறகு, குழந்தைகள் வழக்கமான கல்வி முறையில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, சீருடைகள் மற்றும் பாடநூல்கள் வழங்கப்படும்.

8. கீழ்க்காணும் எந்த வரம்பு வரையிலான வேளாண் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. ரூ.1 இலட்சம்

ஆ. ரூ.2 இலட்சம்

இ. ரூ.3 இலட்சம்

ஈ. ரூ.5 இலட்சம்

  • பிரதமர் தலைமையிலான நடுவணமைச்சரவை, `3 இலட்சம் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதி நிலையையும் சாத்தியத்தன்மையையும் உறுதி செய்யும்.

9. ‘தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு – 2022’ நடைபெறும் இடம் எது?

அ. புனே

ஆ. விசாகப்பட்டினம்

இ. புது தில்லி 

ஈ. மைசூரு

  • உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இரு நாள் நடக்கும் தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு – 2022ஐ தொடங்கி வைத்தார். மையப்படுத்தப்பட்ட கைரேகை தரவுத்தளத்தின் உதவியுடன் வழக்குகளை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க உதவும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பையும் அவர் திறந்து வைத்தார்.

10. சமீபத்தில் தங்களை, ‘சபாய் மித்ரா சுரக்ஷித் ஷேஹர்’ (2022 ஆகஸ்ட் வரையிலும்) என்று அறிவித்துக்கொண்ட நகரங்களின் எண்ணிக்கை என்ன?

அ. 100

ஆ. 250

இ. 500 

ஈ. 750

  • இந்தியா முழுவதுமுள்ள 500 நகரங்கள் தங்களை, ‘சபாய் மித்ரா சுரக்ஷித் ஷேஹர்’ என்று அறிவித்துக்கொண்டதாக நடுவண் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நகரங்கள், அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட போதுமான நிறுவனத்திறன், மனிதவளம் மற்றும் உபகரண விதிமுறைகளை அடைந்தது மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குகிறது. தூய்மை இந்தியா இயக்கம்–நகர்ப்புறம் நிலையான நலவாழ்வு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு இராணுவப் பயிற்சி நிறைவு

வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு இராணுவப்பயிற்சி (VINBAX) கடந்த ஆகஸ்ட்.1ஆம் தேதி முதல் ஹரியானாவின் சந்திமந்திரில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இப்பயிற்சியில், பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் தற்சார்பு இந்தியாவின்கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஐநா அமைதி குழு நடவடிக்கைகளில் ராணுவப் பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெற்றது. வியட்நாமின் இராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் இராணுவப்பயிற்சி இதுவாகும். அடுத்த ‘VINBAX’ பயிற்சி வியட்நாமில் 2023 ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. ‘உத்ராசக்தி’ இருதரப்பு வான்பயிற்சி நிறைவு

மலேசியாவின் குவான்டன் விமானத்தளத்தில் நடந்த இந்திய வான்படை மற்றும் இராயல் மலேசியன் வான்படை இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சி ‘உத்ராசக்தி’ கடந்த ஆகஸ்ட்.16 அன்று நிறைவு பெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இரண்டு வான்படைகளும் இணைந்து சிக்கலான வான்வெளித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன. இருதரப்பினரிடமிருந்தும் அதிகளவிலான போர் உத்திகள் வெளிப்படுத்தப்பட்டன.  இருவான்படைகளும் தங்களது சிறப்பான போர் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ள உத்ராசக்தி பயிற்சி உதவியது. பயிற்சியின் நிறைவு விழாவில், 7 சுகோய்-30M KI & சுகோய்-30 MKM போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின. தொடர்ந்து இந்திய வான்படை குழுவினர் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள ‘பிட்ச் பிளாக்-22’ விமானப்பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

3. `3 இலட்சம் வரையிலான குறுகியகால விவசாயக்கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் தலைமையிலான நடுவணமைச்சரவை, `3 இலட்சம் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக்கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரை `3 இலட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் `34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதிசெய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதி நிலையையும் சாத்தியத் தன்மையையும் உறுதிசெய்யும். உரியகாலத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4% வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.

4. கேரள அரசு சார்பில் வாடகை கார் முன்பதிவு செயலி – முதல்வர் தொடங்கி வைத்தார்

கேரள மாநில அரசு சார்பில் வாடகை கார் முன்பதிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘கேரளா சவாரி’ என்ற இந்தச்செயலிவழி முன்பதிவு சேவையை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஓலா, உபேர் போன்ற வாடகை கார் முன்பதிவு செயலிகளுக்குப் போட்டியாக அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் மட்டுமில்லாது ஆட்டோவையும் இந்தச்செயலிமூலம் முன்பதிவு செய்ய முடியும்.

5. பெயர்மாற்றம் பெற்றது குரங்கு அம்மையின் இரகம்

குரங்கம்மை தீநுண்மியின் துணை இரகங்களுக்கு ‘காங்கோ படுகை, தென்னாப்பிரிக்க கிளேட்’ என்றிருந்த பெயர்களை, ‘கிளேட் 1’, ‘கிளேட் 2’ என உலக நலவாழ்வு அமைப்பு மாற்றியுள்ளது.

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in English

1. What is the name of the national campaign launched to focus on development of children in the first two years?

A. Matritva 1000

B. Paalan 1000 

C. Putra 1000

D. Sukanya 1000

  • Union Health Ministry launched a new campaign named ‘Paalan 1000 National Campaign’ and parenting application, focussing on development of children in the first two years. The app was launched at the Early Childhood Development Conclave. It will provide caregivers with practical advice on things to do in their everyday routine and will help solve the doubts of parents.

2. Which state/UT launched the first flight of drone service – ‘Medicine from the sky’?

A. Punjab

B. Arunachal Pradesh 

C. Gujarat

D. Karnataka

  • Arunachal Pradesh successfully launched the first flight of drone service ‘Medicine from the sky’ from Seppa to Chayang Tajo. The government of Arunachal Pradesh has decided to conduct a pilot project of using drones in healthcare, agriculture and disaster management in association with the World Economic Forum (WEF).

3. Manthan platform, which was launched recently, is associated with which field?

A. Electronics Manufacturing

B. Vaccination

C. Research and Innovation 

D. Goods and Services Tax

  • The Principal Scientific Adviser (PSA) office to the Government of India announced the launch of the Manthan platform. The platform aims to promote collaboration between industry and the scientific research and development ecosystem. It aims to implement technology–based social impact innovations and solutions in India.

4. What is the wholesale inflation of India in July 2022?

A. 11.93%

B. 13.93% 

C. 15.93%

D. 17. 93%

  • India’s wholesale inflation in July eased to 13.93 per cent from 15.18 per cent last month and a record high inflation of 16.63 per cent in May. The July figure eased as vegetables, milk and fuel became cheaper. However, the inflation remained in double digits for the 16th month. It is contributed by rise in prices of mineral oils, food articles, crude petroleum and natural gas, basic metals, electricity, chemicals and chemical products, food products.

5. Which institution announced performance–based fund allocation to States and UTs to strengthen health facilities?

A. NITI Aayog

B. National Health Authority 

C. AIIMS

D. Indian Council of Medical Research

  • National Health Authority (NHA) has announced performance–based fund allocation to States and UTs for strengthening the registries of healthcare professionals and health facilities. This performance–based fund allocation will help in structured implementation of the Ayushman Bharat Digital Mission. Rs 500 crores was allocated for setting up of Ayushman Bharat Digital Mission’s offices at State and UTs by the financial year 2025–26.

6. Which city has the highest average level of fine PM 2.5 among the world’s most populated cities, as per HEI’s recent report?

A. Dhaka

B. Varanasi

C. New Delhi 

D. Colombo

  • The ‘Air Quality and Health in Cities’ report was released by US–based Health Effects Institute (HEI). It provides analysis of air pollution and global health effects for over 7,000 cities around the world, focusing on fine particulate matter (PM2.5) and nitrogen dioxide (NO2).
  • As per the report, India is home to 18 of the 20 cities with the most severe increase in fine particle pollutants (PM2.5) from 2010 to 2019. Delhi has the highest average level of fine PM 2.5 among the world’s most populated cities.

7. Which state launched ‘Vidya Rath–School on Wheels’ project?

A. Madhya Pradesh

B. Bihar

C. Assam 

D. Arunachal Pradesh

  • Assam Chief Minister Himanta Biswa Sarma launched Vidya Rath–School on Wheels project. It aims to provide access to underprivileged children to elementary education for 10 months. After 10 months, the children will be integrated into the usual system of education. Students will be offered free mid–day meals, uniforms, and textbooks under the project.

8. An interest subvention of 1.5 per cent per annum has been approved for agriculture loan up to which limit?

A. Rs 1 lakh

B. Rs 2 lakh

C. Rs 3 lakh 

D. Rs 5 lakh

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi approved an interest subvention of 1.5 per cent per annum on short–term agriculture loan up to Rs 3 lakh. This was approved to ensure adequate credit flow in the agriculture sector.
  • The Interest Subvention of 1.5 per cent will be provided to Public Sector Banks, Private Sector Bank, Small Finance Banks, Regional Rural Banks, Cooperative Banks and Computerized PACS for 2022–23 to 2024–25, for lending short term agri–loans to the farmers.

9. Which is the venue of the ‘National Security Strategies (NSS) Conference 2022’?

A. Pune

B. Vishakhapatnam

C. New Delhi 

D. Mysuru

  • Home Minister Amit Shah inaugurated a two–day National Security Strategies (NSS) Conference 2022 in New Delhi. He also inaugurated the National Automated Fingerprint Identification System, which will help in quick and easy disposal of cases with the help of centralized finger print database.

10. How many cities have recently declared themselves as ‘Safai Mitra Surakshit Shehar’ (as of August 2022)?

A. 100

B. 250

C. 500 

D. 750

  • Ministry of Housing and Urban Affairs announce that 500 cities across India have declared themselves as ‘Safai Mitra Surakshit Shehar’. These cities achieved adequacy institutional capacity, manpower and equipment norms as stipulated by the Ministry and provide safe working conditions for sanitation workers. Swachh Bharat Mission–Urban promotes sustainable sanitation practices.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!