Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

18th & 19th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலக சமத்துவமின்மை அறிக்கை – 2022’இன்படி, வயதுவந்த இந்தியரின் சராசரி தேசியவருமானம் என்ன?

அ) `1.04 லட்சம்

ஆ) `2.04 லட்சம் 

இ) `4.04 லட்சம்

ஈ) `6.04 லட்சம்

  • அண்மையில் வெளியிடப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை – 2022’, லூகாஸ் சான்சலால் எழுதப்பட்டு புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களான தாமஸ் பிகெட்டி, இம்மானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜூக்மான் ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி, அதிகரித்துவரும் வறுமை மற்றும் வசதியான உயரடுக்கினரைக்கொண்ட உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்ள முதல் 10% மற்றும் முதல் 1% மக்கள் மொத்த தேசிய வருமானத்தில் முறையே 57% மற்றும் 22 சதவீதத்தை கொண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2. அண்மையில் எட்டாவது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையை நடத்திய நாடு எது?

அ) இலங்கை

ஆ) இந்தியா 

இ) மியான்மர்

ஈ) பிலிப்பைன்ஸ்

  • இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய உலக விவகார கவுன்சில் இணைந்து எட்டாவது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த ஆண்டு பதிப்பின் கருப்பொருள் “Leveraging Digital Technologies for Health, Education, Development, and Trade in Indian Ocean Rim Association Member States” என்பதாகும்.

3. கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியின் 2022ஆம் ஆண்டு -க்கான முன்னாள் மாணவர் விருது வென்ற இந்தியப் பத்திரிகையாளர் யார்?

அ) N இராம்

ஆ) மாலினி பார்த்தசாரதி 

இ) ராஜா மோகன்

ஈ) சோலி ஜே. சொராப்ஜி

  • ‘தி ஹிந்து’ வெளியீட்ட குழுமத்தின் தலைவரான மாலினி பார்த்தசாரதி, அமெரிக்காவின் கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியின் 2022ஆம் ஆண்டுக்கான முன்னாள் மாணவர் விருது வென்ற நான்கு மூத்த பத்திரிகையாளர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
  • எரிக் மார்கஸ், “மேக்கிங் கே ஹிஸ்டரி” போட்காஸ்டின் நிறுவனர் மற்றும் தொகுப்பாளர், ஸ்டூவர்ட் ஸ்கீயர், அமெரிக்க யூத உலக சேவை மற்றும் தாமஸ் மேயர், புலனாய்வு பத்திரிகையாளர் ஆகியோர் பிற வெற்றியாளர் -களுள் அடங்குவர். வெண்டி லு (ஹஃப்போஸ்ட்) மற்றும் முக்தார் இப்ராஹிம் (சஹான் ஜர்னல்) ஆகியோர் கூட்டாக இணைந்து முதல் தசாப்த விருதைப் பெற்றனர்.

4. குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்காக எந்த நாட்டுடனான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) சுவிட்சர்லாந்து

ஆ) போலந்து 

இ) அமெரிக்கா

ஈ) ரஷ்யா

  • குற்ற விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவி தொடர்பாக இந்தியா – போலந்து இடையேயான உடன்பாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பரஸ்பர சட்ட உதவியின்மூலம் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடுத்தல் புலனாய்வு ஆகியவற்றில் இருநாடுகளின் திறனையும், தீவிரத் தன்மையையும் விரிவுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • போலந்து சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களைக் கையாள்வ -தில் இந்தியாவின் செயல்திறனையும் இது அதிகரிக்கும்.

5. உலக வர்த்தக அமைப்பின் (WTO) குழுமம் எந்த நாடு சர்க்கரை துறையில் மானியங்களை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இந்தியா 

இ) அமெரிக்கா

ஈ) சீனா

  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) குழு, ‘உற்பத்தி உதவி, தாங்கிருப்பு மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரவு திட்டங்களின்’கீழ் இந்தியா தனது மானியங்களை திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
  • ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் குவாத்தமாலா ஆகியவை கடந்த 2019ஆம் ஆண்டில் WTOஇடம் சர்க்கரை துறையில் இந்தியாவின் கொள்கை நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுக்கு எதிராக புகார்களை எழுப்பின. வேளாண் ஒப்பந்தம் மற்றும் SCM ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா தனது கடமைகளுக்கு இணங்குமாறு WTO அதனிடம் கேட்டுக்கொண்டது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற மனோகரி கோல்ட் டீ உடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) அஸ்ஸாம் 

ஈ) மேற்கு வங்காளம்

  • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள அரிய வகை தேயிலையான மனோகரி கோல்டு டீ சமீபத்தில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் கிலோ `1 லட்சத்துக்கு விற்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. தேயிலை ஒரு கிலோ `75,000’க்கு ஏலம் போனபோது, 2020’ல் இத்தேயிலை வகை அதன் சொந்த சாதனையை முறியடித்தது.
  • வடகிழக்கு தேயிலைச் சங்கம் இத்தகைய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வெண் தேயிலை, பசுந்தேயிலை, மஞ்சள் தேயிலை என பல்வேறு வகையான தேயிலைகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

7. “உணவு மற்றும் உழவிற்கான உலகின் நிலம் மற்றும் நீர்வளங்களின் நிலை” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) IMF

ஆ) FAO 

இ) உலக வங்கி

ஈ) WEF

  • உணவு மற்றும் உழவிற்கான உலகின் நிலம் மற்றும் நீர் வளங்களின் நிலை (SOLAW 2021) என்ற அறிக்கை ஐநா உணவு மற்றும் உழவு அமைப்புமூலம் வெளியிடப்பட்டது. ஐநாவின் உணவு மற்றும் உழவு (FAO) அமைப்பால் 2021 டிச.8-9 வரை, நிலம் & நீர் நாட்கள் நடத்தப்படுகின்றன. “Systems at breaking point” என்பது ‘SOLAW-2021’இன் கருப்பொருளாகும்.

8. “டிராக்கிங் யுனிவர்சல் கவரேஜ் – 2021 உலகளாவிய கண்காணிப்பு” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) WTO

ஆ) WHO 

இ) FAO

ஈ) WEF

  • உலக சுகாதார நிறுவனமானது அண்மையில் “டிராக்கிங் யுனிவர்சல் கவரேஜ் – 2021 உலகளாவிய கண்காணிப்பு” என்ற அறிக்கையை வெளியிட்டது. யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினத்தை முன்னிட்டு, உலக வங்கி “உடல்நலம் 2021’இல் நிதிப்பாதுகாப்பு குறித்த உலகளாவிய கண்காணிப்பு” அறிக்கையை வெளியிட்டது.
  • யுனிவர்சல் ஹெல்த் கவரேஜை நோக்கிய உலகளாவிய முன்னேற்றத்தை COVID தொற்று 20 ஆண்டுகளுக்கு நிறுத்தக்கூடும் என்று இவ்வறிக்கை காட்டுகிறது.

9. பரோடா வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாப் வேல்ட் வேவ்’ என்பது ஒரு _____?

அ) உலகளாவிய பற்றட்டை

ஆ) அணியக்கூடிய சாதனம் 

இ) AI இயலி

ஈ) முதலீட்டு தளம்

  • பரோடா வங்கியானது எண்ம வங்கியியல் கொடுப்பனவு -களுக்காக ‘bob World Wave’ என்றவொரு அணியக் கூடிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது வாடிக்கையாளர்களின் Sp02, உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்காணிக்கின்றது. அணியக்கூடிய சாதனத்துடன் கூடிய கட்டண செயல்முறையை வழங்குவதற்காக NPCI உடன் பரோடா வங்கி கூட்டு சேர்ந்துள்ளது.

10. எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஓமிக்ரான் திரிபைக் கண்டறிவதற்காக RT-PCR அடிப்படையிலான கருவியை உருவாக்கியுள்ளனர்?

அ) IISc

ஆ) IIT – தில்லி 

இ) NIV

ஈ) AIIMS

  • IIT தில்லியின் குசுமா உயிரியல் அறிவியல் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், SARS-CoV-2’இன் ஓமிக்ரான் (B.1.1.529.1) திரிபைக் கண்டறிவதற்காக RT-PCR அடிப்படையிலான கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • இச்சோதனை முறை ஓமிக்ரான் திரிபில் உள்ள மற்றும் SARS-CoV-2’இல் இல்லாத ஒரு குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறிவதை அடிப்படையாகக்கொண்டது. உலகளவில், ஓமிக்ரான் திரிபைக் கண்டறிவதற்கு 3 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்து அரசின் மாநிலப் பாடல்: முதல்வா் மு க ஸ்டாலின் உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தாா். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடல் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1914-ஆம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களிலும் பாடி வந்துள்ளனா்.

1970-இல் அறிவிப்பு: தமிழறிஞா்கள், ஆா்வலா்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 1970-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் பாடல் குறித்த அறிவிப்பை அப்போதைய முதல்வா் கருணாநிதி வெளியிட்டாா். தமிழக அரசின் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்கும் என அறிவித்தாா். அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடல் பாடப்பட்டு வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய சூழல் காரணமாக, அதற்கான உத்தரவை தமிழ் வளா்ச்சித் துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு நிகழ்ச்சியில் பாட வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சில வழிமுறைகளைப் பின்பற்றவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மனோன்மணீயம் சுந்தரனாா் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கிகளில் ஒலிக்கச் செய்வதைத் தவிா்த்து, பயிற்சி பெற்றவா்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும்,

இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சோ்ப்பதிலும், பொதுமக்களும், தனியாா் அமைப்புகளும் பெரும் பங்காற்ற முடியும். தமிழ்நாட்டில் தனியாா் அமைப்புகள் நடத்தும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: மேலும் 3 மசோதாக்கள் அறிமுகம்

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேறியது. அத்துடன் மேலும் 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மக்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும், லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், கேள்வி நேரத்தின்போது 4 கேள்விகள் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தொடா்ந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு பாஜக உறுப்பினா் ராஜேந்திர அக்ரவால் தலைமையில் மக்களவை கூடியதும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதா-2021, கானுயிா் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா-2021, பட்டயக் கணக்காளா், கம்பெனி செயலாளா் சட்டத் திருத்த மசோதா-2021 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.

அதைத் தொடா்ந்து, வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவை சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்த மசோதா, ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் கடந்த 14-ஆம் தேதி மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து அவையை திங்கள்கிழமைக்கு ராஜேந்திர அக்ரவால் ஒத்திவைத்தாா்.

வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாடகைத் தாய் ஒழுங்காற்று வாரியம் அமைக்கப்பட வேண்டும்; சட்டப்படி திருமணம் செய்துகொண்டு 5 ஆண்டுகள் வாழ்ந்த இந்திய தம்பதி மட்டுமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற முடியும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன்று எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் 12 போ் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடா் முழுவதும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அவா்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று குளிா்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதனால் கடந்த சில நாள்களாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது.

மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும் அவைத் தலைவா் வெங்கையா நாயுடு உறுப்பினா்கள் மத்தியில் பேசினாா். அவா், ‘மாநிலங்களவை பாஜக தலைவா் பியூஷ் கோயல், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சில மூத்த உறுப்பினா்களைச் சந்தித்துப் பேசினேன். அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு உறுப்பினா்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று அவா்களிடம் வலியுறுத்தினேன். இதே கோரிக்கையை உங்கள் ஒவ்வொருவரிடமும் முன்வைக்கிறேன். மாநிலங்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

3. பிரதமர் மோடிக்கு பூடான் அரசின் மிக உயர்ந்த விருது

பிரதமர் மோடிக்கு பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் நாட்டின் தேசிய நாளான இன்று பிரதமர் மோடிக்கு இந்த விருதை பூடான் பிரதமர் லோடே ஷெரிங் அறிவித்தார்.

4. பளுதுாக்குதல்: பூர்ணிமாவுக்கு ‘தங்கம்’

காமன்வெல்த் பளுதுாக்குதலில் தங்கம் வென்றார் பூர்ணிமா.

உஸ்பெகிஸ்தானில் ‘சீனியர்’ காமன்வெல்த் சாம்பியன்ஷிப், உலக பளுதுாக்குதல் தொடர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இதன் பெண்கள் +87 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பூர்ணிமா களமிறங்கினார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 102 கிலோ துாக்கிய பூர்ணிமா, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 127 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 229 கிலோ துாக்கி, முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

இதையடுத்து ‘ஸ்னாட்ச்’ பிரிவில் இரண்டு, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் தலா 3 என ஒட்டுமொத்தமாக 8 தேசிய சாதனை படைத்தார் பூர்ணிமா. தவிர இந்திய வீரர்கள் ஜெரீமி லால்ரின்னுங்கா, அசிந்தா சியுலி, அஜய் சிங்கிற்கு அடுத்து 2022, பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற்ற நான்காவது இந்தியர் ஆனார்.

இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை அனுராதா பவுன்ராஜ், 195 கிலோ துாக்கி வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆண்கள் 109 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங், 348 கிலோ துாக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

5. ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய மருத்துவ அவசர உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பைத் தடுக்க ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை, நாளை மேல்மருவத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படக் காரணம், அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காததுதான். இதைத் தடுக்கவும், விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையிலும் ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த உள்ளார்.

இதற்காக தமிழகம் முழுதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச.18) தொடங்கி வைத்துப் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

6. உ.பி.யில் 594 கி.மீ. கங்கை விரைவுப் பாதை திட்டம்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் தோ்தலைச் சந்திக்கப்போவதாக பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.36,230 கோடி செலவில் இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாதைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமா் மோடி பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சியமைப்பதற்கு முன்பிருந்த சட்டம்-ஒழுங்கு சூழ்நிலை குறித்து நன்கு அறிவீா்கள். முன்பெல்லாம் பொழுது சாய்ந்ததும் மக்களைத் துன்புறுத்துவதற்காக, சிலா் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வீதிகளில் நடமாடத் தொடங்கிவிடுவாா்கள். மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்ததும் அந்தத் துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

மாஃபியா கும்பல்களுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். மாஃபியா கும்பல்கள் சட்டவிரோதமாகக் கட்டியிருந்த கட்டடங்களை இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினாா். அவருடைய இந்த நடவடிக்கை, மாஃபியா கும்பல்களை ஆதரிப்பவா்களுக்கு வலியைக் கொடுத்துள்ளது. உத்தர பிரதேசமும் யோகி ஆதித்யநாத்தும் சோ்ந்தால் நல்லது நடக்கிறது.

நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதிலும், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் இங்குள்ள சில அரசியல் கட்சிகளுக்கு சிக்கல் உள்ளது. ஏனெனில் அவா்கள் வாக்கு வங்கியைப் பற்றிக் கவலைப்படுகிறாா்கள். அவா்கள் மீது சாமானியா்களும் ஏழைகளும் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அவா்கள் கங்கையைச் சுத்தம் செய்வதில்லை.

இவா்கள்தான் பயங்கரவாதிகள் மீது ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புகிறாா்கள்; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை சந்தேகிக்கிறாா்கள்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரத்தைக் காண முடியாது. ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு 80 லட்சம் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மாநிலத்துக்கு முன்பைவிட கூடுதலாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள தகுதியானவா்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும்.

புதிதாக அமைக்கப்படும் கங்கை விரைவுப் பாதையால் தொழில் வளா்ச்சி, வா்த்தகம், விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஊக்கம் பெறும். சமூகத்தில் பின்தங்கியிருப்பவா்களை வலுப்படுத்தி, அவா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

7. வரலாற்று வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் உச்சம் தொட்ட முதல் இந்தியர்!

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சரித்திரத்தைப் படைத்த ஸ்ரீகாந்த் கிடாம்பி போராடி தங்கப் பதக்கத்தைப் போராடி பறிகொடுத்தார்.

இருப்பினும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் அவர் தேசம் திரும்ப இருக்கிறார்.

45 நிமிடங்கள் நடந்த இறுதிப் போட்டி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நுழைந்த ஸ்ரீகாந்த், களத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவை எதிர்கொண்டார். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் போட்டி நீடித்தது. ஆரம்பம் முதலே லோ கியான் வூ ஆதிக்கம் செலுத்த முதல் செட் கிடாம்பிக்கு மிகவும் சவாலானதாக அமைந்தது. இரண்டாவது சுற்றில் சற்றே தாக்குப்பிடித்த கிடாம்பி போராடித் தோற்றார்.

இறுதியில் 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் போராடித் தோற்றார் ஸ்ரீகாந்த் கிடாம்பி.

சக வீரரை வீழ்த்திய வேகம்: முன்னதாக, ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷ்யா சென்னுடன் மோதினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள கிடாம்பி சக வீரரான லக்‌ஷ்யா சென்னை 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 1 மணி நேரம் 9 நிமிடங்களில் அவர் வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர பெருமையைப் பெற்றார் ஸ்ரீகாந்த். இப்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்று சரித்தரித்தில் இன்னொரு மைல்கல்லையும் அவர் தொட்டுவிட்டார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

8. பிலிப்பின்ஸ் : கடும் சூறாவளியால் 208 பேர் பலி

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட பலத்த சூறாவளிக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த வியாழக்கிழமை உருவான ராய் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக நேற்று(டிச.19) 146 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடும் சூறாவளியின் தாக்கத்தால் 239 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 52 பேர் மாயமாகியிருக்கிறார்கள். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியிருப்பதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ராய் சூறாவளி இந்த ஆண்டில் பதிவான மோசமான சூறாவளியாக மாறியிருக்கிறது.

1. What is the average national income of the Indian adult population, as per the ‘World Inequality Report 2022’?

A) Rs 1.04 lakh

B) Rs 2.04 lakh 

C) Rs 4.04 lakh

D) Rs 6.04 lakh

  • The ‘World Inequality Report 2022’, which was released recently, was authored by Lucas Chancel and co–ordinated by renowned economists Thomas Piketty, Emmanuel Saez and Gabriel Zucman. As per the report, India is among the most unequal countries in the world, with rising poverty and an affluent elite.
  • The report highlights that the top 10% and top 1% in India hold 57% and 22% of the total national income respectively.

2. Which country hosted the eighth Indian Ocean Dialogue recently?

A) Sri Lanka

B) India 

C) Myanmar

D) Philippines

  • India’s External Affairs Ministry, along with the Indian Council of World Affairs hosted the eighth Indian Ocean Dialogue. The theme for this year’s edition was “Leveraging Digital Technologies for Health, Education, Development, and Trade in Indian Ocean Rim Association Member States”.

3. Which Indian journalist has been named by Columbia Journalism School as the 2022 alumni award winners?

A) N Ram

B) Malini Parthasarathy 

C) Raja Mohan

D) Soli J Sorabjee

  • Malini Parthasarathy, the chairperson of The Hindu Group Publishing, is among four veteran journalists who are named by US–based Columbia Journalism School as the 2022 alumni award winners. The other winners include Eric Marcus, founder and host of “Making Gay History” podcast, Stuart Schear, American Jewish World Service, and Thomas Maier, investigative journalist. Wendy Lu (HuffPost) and Mukhtar Ibrahim (Sahan Journal), jointly bagged the First Decade Award.

4. Cabinet approved a treaty on mutual legal assistance in criminal matters, with which country?

A) Switzerland

B) Poland 

C) USA

D) Russia

  • Union Cabinet chaired by Prime Minister Narendra Modi approved the India–Poland treaty on mutual legal assistance in criminal matters. The treaty will enhance capability of both countries in investigation and prosecution of crimes, including crimes related to terrorism through mutual legal assistance. It will also increase India’s effectiveness in tackling criminal activities involving Poland.

5. World Trade Organization (WTO) panel asked which country to withdraw its subsidies in the sugar sector?

A) Australia

B) India 

C) USA

D) China

  • World Trade Organization (WTO) panel has asked India to withdraw its subsidies under the ‘Production Assistance, the Buffer Stock, and Marketing and Transportation Schemes.’ Australia, Brazil and Guatemala raised complaints against India over its policy measures in the sugar sector, at WTO in the year 2019.
  • WTO also asked India to conform to its obligations under the Agreement on Agriculture and the SCM Agreement.

6. Manohari Gold Tea, which was seen in the news, is associated with which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Assam 

D) West Bengal

  • Manohari Gold Tea, a rare variety of tea in Assam has recently created history as it was sold for Rs 1 lakh per kilogram at Guwahati Tea Auction Centre. The Tea variety broke its own record of 2020, when the tea was auctioned at Rs 75,000 per kg.
  • The North Eastern Tea Association has planned to increase the production of such tea and started making different types of tea like white tea, green tea, yellow tea.

7. Which organisation released the ‘State of the world’s land and water resources for food and agriculture (SOLAW 2021) report?

A) IMF

B) FAO 

C) World Bank

D) WEF

  • The state of the world’s land and water resources for food and agriculture (SOLAW 2021) report was released by the Food and Agriculture Organization of the United Nations (FAO). From 8 to 9 December 2021, the Land and Water Days are hosted by the Food and Agriculture Organization of the United Nations (FAO). The central theme of SOLAW 2021 is “Systems at breaking point”.

8. Which institution released the “Tracking Universal Coverage – 2021 Global Monitoring Report”?

A) WTO

B) WHO 

C) FAO

D) WEF

  • The World Health Organization recently released the “Tracking Universal Coverage – 2021 Global Monitoring Report”. On the occasion of Universal Health Coverage Day, World Bank also released the “Global Monitoring Report on Financial Protection in Health 2021”. The report showed that the COVID–19 pandemic is likely to halt two decades of global progress towards Universal Health Coverage.

9. “bob World Wave”, launched by Bank of Baroda is a ……………?

A) Global Debit Card

B) Wearable Device 

C) AI Chatbot

D) Investment Platform

  • Bank of Baroda has launched a solution for digital banking payments, named ‘bob World Wave’. The bob World Wave is a wearable device, which will allow customers to monitor their Sp02, body temperature, heart rate and blood pressure. BoB has partnered with NPCI to offer the wearable payment solution.

10. Researchers at which institution have developed an RT–PCR based kit to detect Omicron variant?

A) IISC

B) IIT– Delhi 

C) NIV

D) AIIMS

  • Researchers at IIT Delhi’s Kusuma School of Biological Sciences have developed an RT–PCR based kit for detection of the Omicron (B.1.1.529.1) variant of SARS–CoV–2. The assay is based on detecting specific mutations, which are present in the Omicron variant and absent in other currently present variants of SARS–CoV–2. Globally, the detection of the Omicron variant requires over 3 days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!