Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – தொழிற்துறையில் கரியமலவாயு வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான உச்சிமாநாடு நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி 

ஆ. மும்பை

இ. காந்தி நகர்

ஈ. டேராடூன்

  • மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, புது தில்லியில் ‘தொழிற்துறையில் கரியமலவாயு வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான உச்சிமாநாடு – 2022’ஐத் தொடங்கி வைத்தார். 2070-க்குள் கரியமலவாயு வெளியேற்றத்தை முற்றிலும் தடுப்பதற்கான செயல் திட்டத்தில் இது கவனஞ்செலுத்தியது.
  • வாழ்க்கைச்சூழல், சுற்றுச்சூழல், வளர்ச்சி ஆகியவற்றிற்கிடையே சமநிலையை பராமரிப்பது குறித்து அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார். பசுமை ஹைட்ரஜன் நமது முன்னுரிமை எனக்கூறிய அவர், உயிரித்தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன்மூலம் உயிரின உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். இதன்மூலம் நாம் உயிரி- எத்தனால், உயிரி திரவ எரிவாயு, உயிரி – அழுத்தப்பட்ட எரிவாயு ஆகியவற்றை உருவாக்க முடியும் என்றார்.

2. 2022 –உலகளாவிய போக்குகள் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. UNHCR 

இ. WEF

ஈ. IMF

  • ஐநா’இன் அகதிகள் முகமையான UNHCR ஆனது ‘2022 – உலகளாவிய போக்குகள் அறிக்கையை’ வெளியிட்டது. இவவறிக்கையின்படி, உலகளவில் 100 மில்லியன் மக்கள் தற்போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். UNHCR ஆனது உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை, காலநிலை நெருக்கடி, உக்ரைனில் போர் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான பிற அவசரநிலைகளை முக்கிய காரணங்களாக எடுத்துக்காட்டியுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டின் இறுதியில், போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 89.3 மில்லியனாக இருந்தது.

3. 2022-இல் SCO-இன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (SCO-RATS) கூட்டத்தை நடத்தும் நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா 

இ. வங்காளதேசம்

ஈ. பாகிஸ்தான்

  • SCO-RATS-இன் தலைவராக இந்தியா SCO-இன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (SCO-RATS) கூட்டத்தை நடத்தியது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். சீனா, பாகிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் புதுதில்லியில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2022 மேயில் SCO நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் கூட்டத்தை இந்தியா நடத்தியது.

4. ஐரோப்பாவின் மிகப்பெரிய துளிர் நிறுவல்கள் மாநாடான விவாடெக்கில் ஆண்டின் சிறந்த நாடாக அங்கீகாரம் பெற்ற நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா 

இ. பிரான்ஸ்

ஈ. அமெரிக்கா

  • ஐரோப்பாவின் மிகப்பெரிய துளிர் நிறுவல்கள் மாநாடான விவாடெக், இந்தியாவை ‘ஆண்டின் சிறந்த நாடு’ என்று அங்கீகரித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விவாடெக் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்திய அரங்கினை திறந்து வைத்தார். இந்தியாவில் இருந்து சுமார் 65 துளிர் நிறுவனங்கள் இம்மாநாட்டில் அரசாங்க ஆதரவுடன் பங்கேற்கின்றன.

5. ஆண்டுதோறும் செலவுப் பணவீக்கக் குறியீட்டை (CII) அறிவிக்கிற நிறுவனம்/துறை எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. மத்திய நேரடி வரிகள் வாரியம் 

இ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

ஈ. பொருளாதார விவகாரங்கள் துறை

  • மத்திய நேரடி வரிகள் வாரியமானது சமீபத்தில் 2022-23 நிதியாண்டுக்கான செலவுப்பணவீக்கக் குறியீட்டை (CII) 331 என அறிவித்தது. முந்தைய ஆண்டிற்கு (2021-22 நிதியாண்டு) CII 317 ஆக அறிவிக்கப்பட்டது. CII ஆனது சொத்தின் பணவீக்கம்-சரிகட்டப்பட்ட செலவு விலையைக் கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு, மதிப்பீட்டு ஆண்டு 2023-24 மற்றும் எதிர்கால ஆண்டுகளுக்குப் பொருந்தும்.

6. 2022 ஜூன் முதல், ஐநா அவையால் அறிவிக்கப்பட்ட துருக்கியின் புதிய பெயர் என்ன?

அ. துருக்கியே 

ஆ. டர்க்கி

இ. டிரக்கி

ஈ. துர்க்

  • அனைத்து மொழிகளிலும் ‘துருக்கியே’ என அழைக்க முற்படும் துருக்கியின் அதிகாரப்பூர்வ கோரிக்கையை ஐநா அவை பெற்றது. இந்த மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று ஐநா தலைமைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, துருக்கி தனது தயாரிப்புகளில், ‘மேட் இன் துருக்கி’ என்பதற்கு மாறாக ‘மேட் இன் துருக்கியே’ எனப் பிராண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

7. 2022 – GLOBSEC மன்றம் நடத்தப்படுகிற நாடு எது?

அ. சுலோவாக்கியா 

ஆ. செக் குடியரசு

இ. ருவாண்டா

ஈ. கானா

  • வெளியுறவுத்துறை அமைச்சர் Dr S ஜெய்சங்கர் ஐந்து நாள் பயணமாக சுலோவாக்கியா மற்றும் செக் குடியரசிற்கு சென்றுள்ளார். அவர் சுலோவாக்கியாவில் நடைபெறும் ‘GLOBSEC-2022’ மன்றத்தில் கலந்துகொண்டு, ‘நட்பை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நட்பு நாடுகள்’ என்ற தலைப்பில் பேசவுள்ளார்.
  • ‘GLOBSEC-2022’ மன்றத்தின் ஒருபுறம் அவர் ஆஸ்திரியாவின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க்கை சந்திக்கவுள்ளார். அடுத்த மாதம் முதல் செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்கவுள்ளது.

8. ஆண்டுதோறும், ‘உலக மிதிவண்டி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.01

ஆ. ஜூன்.02

இ. ஜூன்.03 

ஈ. ஜூன்.04

  • உலக மிதிவண்டி நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.3 அன்று கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மன நலத்தை வலுப்படுத்துவதில் மிதிவண்டியின் பங்குகுறித்து எடுத்தியம்பும் நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 2022 உலக மிதி வண்டி நாளையொட்டி, தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இருந்து நாடு தழுவிய, ‘கட்டுடல் இந்தியா பிரீடம் ரைடர் சைக்கிள் பேரணியை’த் தொடங்கி வைத்தார்.

9. Appreciate all parents throughout the world” என்பது ஜூன்.01 அன்று கடைப்பிடிக்கப்பட்ட எந்த நாளின் கருப் பொருளாகும்?

அ. உலகளாவிய பெற்றோர் நாள் 

ஆ. உலக மிதிவண்டி நாள்

இ. உலக பூமி நாள்

ஈ. உலக காற்று நாள்

  • தங்கள் குழந்தைகளுக்கான பெற்றோர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.1ஆம் தேதி உலகப் பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபையானது 1994ஆம் ஆண்டை சர்வதேச குடும்ப ஆண்டாகவும், ஒவ்வோர் ஆண்டும் மே.15ஆம் தேதியை சர்வதேச குடும்பங்களின் நாளாகவும் அறிவித்தது. UNGA, பின்னர் ஜூன்.1ஆம் தேதி உலகளாவிய பெற்றோர் நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. 2022ஆம் ஆண்டுக்கான உலகப் பெற்றோர் நாளின் கருப்பொருள், “Appreciate all parents throughout the world” என்பதாகும்.

10. இந்தியாவின் முதல் திரவ-கண்ணாடி தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ. சிக்கிம்

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. உத்தரகாண்ட் 

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • இந்தியாவின் முதல் திரவ-கண்ணாடி தொலைநோக்கியான சர்வதேச திரவக்கண்ணாடி தொலைநோக்கி (ILMT) உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் அமைந்துள்ள ஆரியபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் (ARIES) தேவஸ்தல ஆய்வகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொலைநோக்கி இமயமலையில் 2,450 மீட்டர் உயரத்தில் இருந்து சிறுகோள்கள், சூப்பர்நோவாக்கள், விண்வெளிக்குப்பைகள் மற்றும் பிற அனைத்து விண்பொருட்களையும் கண்காணிக்கும். உலகளவில் வானியல் நோக்கங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் திரவ-கண்ணாடித் தொலைநோக்கி இதுவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு: அரசாணை வெளியீடு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தின்படி, நான்கு அரசாணைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

வாக்காளராக பதிவுசெய்ய வருபவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் ஆதார் அடையாள அட்டையைக் காண்பிக்க கோருவதற்கு இந்தப் புதிய சட்டத்திருத்தம் அனுமதியளிக்கிறது. வாக்காளர்களின் பெயர் வேறிடங்களிலும் பதிவுப் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆதார் அடையாள அட்டையைக் கோருவதற்கும் அனுமதியளிக்கிறது. எனினும், ஆதார் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் மட்டும் வாக்காளர் பதிவை நிராகரிக்கக்கூடாது என்றும் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வாக்காளர் பட்டியலில் ஆண்டுக்கு நான்கு முறை பெயர்களைச் சேர்க்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஒரே ஆண்டில் ஜன.1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தங்கள் பெயர்களைச் சேர்த்துகொள்ளலாம். முன்பு ஜன.1-ஆம் தேதி மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், வெளிநாடு அல்லது இராணுவத்தில் அரசுப்பணியாற்றும் தம்பதியில் ஒருவர், தன் துணைவருக்கும் சேர்த்து வாக்களிக்கும் முறையும் புதிய அரசாணையில் இடம்பெற்றிருக்கிறது.

2. 1969-க்கு பிந்தைய பிறப்பு – இறப்புகள்: இணையப் பதிவேற்றம் தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 1969ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா, பன்னாட்டு பொதுச் சுகாதார மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிறப்பு, இறப்பு பதிவேடுகளை `75 இலட்சம் செலவில் இணையப் பதிவேற்றமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் CSR இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறைசார்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளர்களால் 16,348 பதிவு மையங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம்மூலம் பதிவிறக்கஞ்செய்யலாம்.

சர்வதேச பொதுச்சுகாதாரத்துறை மாநாடு: தமிழகத்தில் பொதுச்சுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ் டி இரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் நிறைவுபெற்ற இந்தத் தருணத்தில் தமிழக பொதுச்சுகாதாரத்துறை தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாள்கள் சர்வதேச பொதுச் சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.

3. ஜூன் 23-இல் பெய்ஜிங்கில் BRICS உச்சிமாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

BRICS கூட்டமைப்பின் 14-ஆவது உச்சிமாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என்று சீனா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட BRICS கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு சீனா தலைமைதாங்குகிறது. இந்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டை சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யங் அறிவித்தார். அவர் கூறியதாவது:

BRICS மாநாடு, சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் ஜூன்.23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெற உள்ளது. ‘சர்வதேச வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தில் BRICS நட்புறவை வளர்த்தெடுத்தல்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும். மறுநாள், ஜூன்.24-ஆம் தேதி, BRICS நாடுகளின் தலைவர்களும் வளரும் நாடுகளின் தலைவர்களின் தலைவர்களும் பங்கேற்கும் உயர்நிலை கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக, மாநாட்டின் தொடக்கமாக, BRICS வர்த்தகக்குழுக்கூட்டம் காணொலி முறையில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், ஷி ஜின்பிங் உரையாற்றுகிறார் என்றார் அவர்.

4. இந்திய பிரஸ் கவுன்சிலுக்குப் புதிய தலைவர்

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளார். பிரஸ் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவார்.

இதற்கான அரசாணையை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2011 முதல் 2014, அக்டோபர்.29 வரையில் அவர் பணியாற்றினார். அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் பேரவைத்தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பிரஸ் கவுன்சில் தலைவர் பதவிக்காலத்தை நீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத் கடந்த நவம்பர் மாதம் பூர்த்தி செய்த பிறகுப்புதிய தலைவராக தற்போது இரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ‘அக்னி’ வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு! – பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்கள் அறிவிப்பு

‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அறிவித்தார். 17.5 வயதில் இருந்து 21 வயது வரையிலான இளைஞர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இந்தத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடர்வார்கள். மற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப்பலன்கள் எதுவும் கிடைக்காது. வீரர்களுக்கு முதலாவது ஆண்டில் `30,000, இரண்டாவது ஆண்டில் `33,000, மூன்றாவது ஆண்டில் `36,500, நான்காவது ஆண்டில் `40,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதியாக `11.71 இலட்சம் வழங்கப்படும் என்று இராஜ்நாத் சிங் அறிவித்தார்.

10% இடஒதுக்கீடு: இந்நிலையில், மத்திய ஆயுதக்காவல் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வளிக்கப்படும் என்றும், முதல் முறை சேர்க்கப்படும் வீரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்சமயம் துணை இராணுவப்படைகளில் 18-23 வயதுக்கு உள்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோல், இந்திய கடலோரக்காவல் படை, பாதுகாப்புத்துறையின் 16 பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளில் ‘அக்னி’ வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடுக்கு பாதிப்பின்றி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் 6 துறைகளில் ‘அக்னி’ வீரர்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

1. Which is the venue of the Industrial Decarbonization Summit 2022?

A. New Delhi 

B. Mumbai

C. Gandhi Nagar

D. Dehradun

  • Union Road Transport and Highways Minister Nitin Gadkari inaugurated the ‘Industrial Decarbonization Summit 2022’ in New Delhi. The focus is on the Road Map for Carbon Neutrality by 2070. The Minister emphasized on maintaining equilibrium between ecology, environment and development. He also spoke about the government’s priority on green hydrogen, Bio–ethanol, Bio–LNG and Bio–CNG.

2. Which institution released the ‘2022 Global Trends Report’?

A. UNEP

B. UNHCR 

C. WEF

D. IMF

  • The UN refugee agency, UNHCR released the ‘2022 Global Trends Report’. As per the report, 100 million people have now been forced to flee their homes globally. UNHCR also highlighted worldwide food insecurity, the climate crisis, war in Ukraine and other emergencies from Africa to Afghanistan as leading causes. As per the report, the number displaced by war, violence, persecution and human rights abuses stood at 89.3 million, by the end of 2021.

3. Which country is the host of SCO’s Regional Anti–Terrorist Structure (SCO–RATS) Meeting in 2022?

A. China

B. India 

C. Bangladesh

D. Pakistan

  • India hosted the SCO’s Regional Anti–Terrorist Structure (SCO–RATS) Meeting in its capacity as chair of the SCO–RATS. The meeting aims to deliberate on security challenges, including threats of terrorism. Delegations from China, Pakistan and other member nations of Shanghai Cooperation Organisation (SCO) attended the meeting in New Delhi. India hosted a meeting of counter–terror experts from the SCO countries in May 2022.

4. Which country has been recognized as the “country of the year” in Europe’s biggest start–up conference – Vivatech?

A. China

B. India 

C. France

D. USA

  • Europe’s biggest start–up conference – Vivatech 2020 has recognized India as the ‘Country of the year”. Union Minister of Electronics and IT Ashwini Vaishnaw inaugurated the India pavilion at the Vivatech technology exhibition. Around 65 start–ups from India are participating in the conference with government support.

5. Which institution/ department notifies cost inflation index (CII) every year?

A. Reserve Bank of India

B. Central Board of Direct Taxes 

C. National Statistical Office

D. Department of Economic Affairs

  • The Central Board of Direct Taxes (CBDT) recently notified the cost inflation index (CII) for FY 2022–23 as 331. For the previous year (FY 2021–22) CII was notified as 317. The CII is used to calculate an asset’s inflation–adjusted cost price. This notification will apply to the Assessment Year 2023–24 and future years.

6. What is the new name of Turkey from June 2022, as announced by the United Nations?

A. Turkiye 

B. Tarkey

C. Traki

D. Turk

  • The United Nations received the official request of Turkey to rebrand itself to ‘Turkiye’ in all languages. The UN chief’s spokesperson announced that the change is immediate. Over the past few years, the country sought to change the branding on its products from “Made in Turkey” to “Made in Turkiye”.

7. Which country is the host of the ‘GLOBSEC 2022 Forum’?

A. Slovakia

 B. Czech Republic

C. Rwanda

D. Ghana

  • External Affairs Minister Dr S Jaishankar is on a five–day visit to Slovakia and the Czech Republic. He is set to attend the GLOBSEC 2022 Forum in Slovakia and speak on the topic ‘Taking Friendship to the Next Level: Allies in the Indo–Pacific Region’. He is scheduled to meet Minister of European and International Affairs of Austria Alexander Schallenberg on the sidelines of the GLOBSEC 2022 Forum. The Czech Republic will be taking over the EU Presidency from next month.

8. When is the ‘World Bicycle Day’ celebrated every year?

A. June.01

B. June.02

C. June.03 

D. June.04

  • World Bicycle Day is celebrated every year on June 3, to develop a culture of cycling for basic transportation, commutation, and strengthening physical and mental health. Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur launched a nationwide “Fit India Freedom Rider Cycle Rally” from Major Dhyan Chand Stadium, Delhi on the occasion of World Bicycle Day 2022.

9. ‘Appreciate all parents throughout the world’ is the theme of which day observed on June 1?

A. Global Day of Parents 

B. World Bicycle Day

C. World Earth Day

D. World Wind Day

  • The Global Day of Parents is annually celebrated on 1 June to appreciate the commitment of parents towards their children. The UN General Assembly proclaimed 1994 as the International Year of the Family and 15 May each year as the International Day of Families. The UNGA later announced that 1 June will be observed as the Global Day of Parents. The theme for Global Day of Parents 2022 is ‘Appreciate all parents throughout the world.’

10. India’s first liquid–mirror telescope has been commissioned in which state/UT?

A. Sikkim

B. Jammu and Kashmir

C. Uttarakhand 

D. Himachal Pradesh

  • India’s first liquid–mirror telescope, the International Liquid Mirror Telescope (ILMT) has been set up on the campus of the Devasthal Observatory of the Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) in Nainital, Uttarakhand. The telescope will observe asteroids, supernovae, space debris and all other celestial objects from an altitude of 2,450 metres in the Himalayas. It is the first liquid–telescope globally to be designed exclusively for astronomical purposes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!