Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

18th & 19th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றவர் யார்?

அ) மேக்ஸ் வெர்ஸ்டாபென்

ஆ) டேனியல் ரிச்சியார்டோ 

இ) லாண்டோ நோரிஸ்

ஈ) லூயிஸ் ஹாமில்டன்

  • மொன்சாவில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டேனியல் ரிச்சியார்டோ, 2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றார். லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். F1 சாம்பியன் போட்டியாளர்களான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஒருவருக்கொருவர் பந்தயத்திலிருந்து வெளியேறினர். வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2. 50’க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியும் உலகின் மிகப்பெரிய இரத்த பரிசோதனையை கண்டறிந்துள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) பிரான்ஸ்

ஈ) ஐக்கியப் பேரரசு 

  • இங்கிலாந்தைச் சேர்ந்த NHS மருத்துவர்கள், இரத்த பரிசோதனைமூலம் தொடக்க நிலையிலேயே 50 வகையான புற்றுநோய்களை கண்டறியும் “Revolutionary” என்ற சோதனையை கண்டுபிடித்துள்ளனர். அறிகுறிக -ள் வெளிப்படுவதற்கு முன்பே ஐம்பது வகையான புற்றுநோய்களை இதன்மூலம் கண்டறியவியலும்.

3. சமீபத்தில் காலமான பிரபல எழுத்தாளர் அஜீஸ் ஹஜினி சார்ந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ) லடாக்

ஆ) ஜம்மு காஷ்மீர் 

இ) இமாச்சல பிரதேசம்

ஈ) உத்தரகாண்ட்

  • ஜம்மு-காஷ்மீரின் பிரபல எழுத்தாளர் அஜீஸ் ஹஜினி அண்மையில் காலமானார். காஷ்மீர் எழுத்தாளர், கவிஞர், விமர்சகராவார் அவர். அவர் ஜம்மு காஷ்மீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளின் அகாதமியின் முதல் செயலாளராக பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் அவரது ‘தேஜ் பஜார்’ மற்றும் 2016ஆம் ஆண்டில் ‘கிடாப் ஆன் கானேவு’க்காக அவருக்கு சாகித்திய அகாதமி விருதும் வழங்கப்பட்டது.

4. அண்மையில், பின்வரும் எந்த நாட்டுடன், கடல்சார் விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இங்கிலாந்து

இ) ஜப்பான் 

ஈ) பிரான்ஸ்

  • 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பு சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 2 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள்பற்றி விவாதிக்கப்பட்டன.

5. சுப்பிரமணிய பாரதியின் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ எனக் கொண்டாட முடிவுசெய்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை, செப்டம்பர்.11 அன்று ‘மகாகவி நாள்’ எனக்கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அவரது படைப்புகள் தேசபக்தியை ஊட்டுபவையாக தமிழ் இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்தன.
  • அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை போட்டியை நடத்தி, ‘பாரதி இளங்கவி விருது’ம் `1 லட்சம் பணப் பரிசும் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. பெண்கள் வாழ்வாதார இயக்கத்திற்கு ‘பாரதியார்’ எனப் பெயர்சூட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது.

6. அண்மையில், ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) ஷேக் அஹ்மத் அல்-பஹத் அல்-சபா

ஆ) தாமஸ் பாக்

இ) ரந்தீர் சிங் 

ஈ) ஜியானி இன்பான்டினோ

  • ஜெனீவா நீதிமன்றத்தால் போலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் அஹ்மத் அல்-ஃபஹத் அல்-சபா பதவி விலகியதை அடுத்து, ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவராக இந்திய விளையாட்டு நிர்வாகி ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 1991 முதல் 2015 வரை 24 ஆண்டுகள் OCA’இன் பொதுச்செயலாளராக பணியாற்றினார். அவர், 1987 முதல் 2012 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 2001 முதல் 2014 வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முழு நேர உறுப்பினராக இருந்தார்.

7. தினை உற்பத்தியை அதிகரிப்பதற்காக எந்த மாநிலத்தின் 14 மாவட்டங்கள் இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன?

அ) தமிழ்நாடு

ஆ) மத்திய பிரதேசம்

இ) சத்தீஸ்கர் 

ஈ) ஜார்க்கண்ட்

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் 14 மாவட்டங்கள், அந்தந்த பகுதிகளில் தினை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்ப -மிட்டுள்ளன. இந்தத் தினை, சத்தீஸ்கர் குறு வன உற்பத்தி கூட்டுறவு கூட்டமைப்பின் வான்தான் சங்கங்கள்மூலம் கொள்முதல் செய்யப்படும்.
  • அவை பதப்படுத்தப்பட்டபின், மதிய உணவு திட்டங்கள், பொது விநியோக முறை மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களில் பயன்படுத்தப்படும்.

8. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2021’இல், சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனம் எது?

அ) ஐஐடி மெட்ராஸ் 

ஆ) ஐஐடி பம்பாய்

இ) அண்ணா பல்கலைக்கழகம்

ஈ) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT-M) 2021’இல் சிறந்த உயர்கல்வி நிறுவனமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும் (IISc) மற்றும் ஐஐடி பம்பாய் கல்வி நிறுவனமும் உள்ளன.
  • தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) ஒருபகுதியாக, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தரவரிசைகளை அறிவித்தார். இது இந்திய நிறுவனங்களின் தரவரிசையாகும்.

9. எந்த நாட்டில், காற்றிலிருந்து CO2’ஐப் பிரிக்கும் உலகின் மிகப் பெரிய ஆலை செயல்படத் தொடங்கியுள்ளது?

அ) ஐஸ்லாந்து 

ஆ) ஜெர்மனி

இ) இந்தியா

ஈ) ஜப்பான்

  • காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் மிகப்பெரிய ஆலை ஐஸ்லாந்தில் இயங்கத் தொடங்கியது.
  • ‘எரிசக்தி’ என்று பெயரிடப்பட்ட ‘Orca’ என்ற ஐஸ்லாந்திய சொல்லை நிறுவனத்தின் பெயராகக்கொண்ட இந்த ஆலை நான்கு அலகுகளைக் கொண்டுள்ளது. சுவிச்சர்லாந்தின் கிளைம்வொர்க்ஸ் & ஐஸ்லாந்தின் கார்ப்பிக்ஸ் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் CO2’ஐ காற்றிலிருந்து உறிஞ்சும்.

10. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அருண் குமார் சிங் 

ஆ) S வரதராஜன்

இ) அருண் சிங்

ஈ) K இளங்கோவன்

  • ‘மகாரத்னா’ நிறுவனமும் பார்ச்சூன் குளோபல் 500’இல் இடம்பெற்று உள்ள நிறுவனமுமான BPCL அதன் தலைவராகவும் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் அருண் குமார் சிங்கை நியமிப்பதாக அறிவித்தது. செப். 7, 2021 அன்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நோயாளிகள் பாதுகாப்பு நாள்

நோயாளிகள் பாதுகாப்பு நாள் 17-09-2021 அன்று கடைபிடிக்கப்பட்டது. உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர்.17ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் “தாய் மற்றும் சேய் பாதுகாப்பு” என்ற கருப்பொருளின்கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

2. பனை மேம்பாட்டுத் திட்டம்

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வகை செய்யும் பனை மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்போதுள்ள பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு முப்பது மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பனை மேம்பாட்டு இயக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு `3 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. பிரபல இயற்பியல் விஞ்ஞானி தாணு பத்மநாபன் மறைவு

பிரபல இயற்பியல் பேராசிரியரும் ‘பத்மஸ்ரீ’ விருதுபெற்ற விஞ்ஞானியுமா -ன தாணு பத்மநாபன் (64) காலமானார்.

பத்மநாபனுக்கு மத்திய அரசு கடந்த 2007’இல் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. அண்மையில் அவருக்கு கேரள அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் ‘கேரள சாஸ்திர புரஸ்காரம்’ என்னும் வாழ்நாள் சாதனை விருதையும் வழங்கி கௌரவித்தது.

4. சுற்றுச்சூழல் விதிமீறல்கள்: அதிகபட்சமாக தமிழகத்தில் 42,756 வழக்குகள்; 2019-ஐ காட்டிலும் 3 மடங்கு அதிகரிப்பு

சுற்றுச்சூழல் விதிமீறல் தொடர்பாக கடந்த 2020-இல் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட 61,767 வழக்குகளில் அதிகபட்சமாக 42,756 வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரத்தை தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த குற்றச்செயல்கள் குறித்த புள்ளிவிவரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில், இந்திய அளவில் கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வனச் சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், நீர் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டம், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டம், ஒலி மாசு தடுப்புச்சட்டம், தேசிய பசுமைத்தீர்ப்பாயச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2019’ஐக் காட்டிலும் 78.1% அதிகரித்துள்ள -து தெரியவந்துள்ளது.

தமிழகம் முதலிடம்: கரோனா தொற்று காரணமாக பிற குற்றச் செயல்கள் பெரிய அளவில் அதிகரிக்காத நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசு தொடர்பான சட்டங்களின்கீழ், 2020-இல் 61,767 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் இந்தச் சட்டத்தின்கீழ், 42,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். தமிழகத்தை அடுத்து ராஜஸ்தானில் 9,543 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,981 வழக்குகளும், கேரளத்தில் 1,795 வழக்குகளும், உத்தரகண்டில் 1,271வழக்குகளும் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் சுற்றுச்சூழல் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின்கீழ் மட்டும் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 49,710 வழக்குகளில் 42,731 வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒலி மாசு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 7,318 வழக்குகளில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 7,186 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 44 வழக்குகளும், தமிழகத்தில் 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2020-இல் இந்திய வனச் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தலா 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று, நீர் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

5. 2020-இல் சிறார் திருமணங்கள் 50% அதிகரிப்பு

கடந்த ஆண்டில் சிறார் திருமணங்கள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பான விவரங்களை NCRP சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி, சிறார் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கர்நாடகத்தில் 184 வழக்குகளும், அஸ்ஸாமில் 138 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 98 வழக்குகளும், தமிழகத்தில் 77 வழக்குகளும், தெலங்கானாவில் 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறார் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் 523 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமாா் 50 சதவீதம் அதிகமாகும்.

சிறார் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டில் 501 வழக்குகளும், 2017-இல் 395 வழக்குகளும், 2016-இல் 326 வழக்குகளும், 2015-இல் 293 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. கரோனா தொற்று பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, கடந்த ஆண்டில் சிறார் திருமணங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்ததாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனர்.

6. ஐசிஏஓ பாதுகாப்புக் குழுவின் முதல் பெண் தலைவராக இந்தியர் தேர்வு

ஐநா சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ஜுனேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா’இன் ஐசிஏஓ அமைப்பு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், அதன் உள்கட்டமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடுப்பு, எல்லை தாண்டிய போக்குவரத்தின் நடைமுறைகள் சார்ந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் பாதுகாப்புக் குழுவுக்கு முதல் பெண் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ஜுனேஜா தேர்வுசெய்யப்ப -ட்டார். கடந்த 1992-ஆம் ஆண்டின் இந்திய வருவாய் பணி பிரிவு அதிகாரியான இவர், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஐசிஏஓவில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்துவந்தார். இவர் ஐசிஏஓவின் பாதுகாப்புக் குழுத் தலைவராகியுள்ளதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அக்குழுவின் தலைமைப்பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

7. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் உள்ளிட்ட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் உள்பட பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருதும், ஒரு இலட்சம் பரிசுத்தொகையும், தாமிர பட்டயமும் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இலக்கிய உலகில் சிறந்த படைப்புகளுக்கான உயரிய விருதாக சாகித்ய அகாதெமி கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழில் எழுத்தாளர் இமையம் மற்றும் ஹிந்தி, உருது, தெலுங்கு, கன்னடம் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் கழுதூரைச் சேர்ந்த முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளர் இமையம் (இயற்பெயர் வெ அண்ணாமலை) எழுதிய ‘செல்லாத பணம்’ என்னும் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, 23 இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

1. Who has won the Italian Grand Prix 2021?

A) Max Verstappen

B) Daniel Ricciardo 

C) Lando Norris

D) Lewis Hamilton

  • Australian Daniel Ricciardo has won the Italian Grand Prix with Lando Norris coming second at Monza while Formula One title rivals Max Verstappen and Lewis Hamilton took each other out of the race. Valtteri Bottas finished third.

2. Which country has commenced the world’s biggest trial of a blood test where they will detect more than 50 types of cancer?

A) China

B) Russia

C) France

D) United Kingdom 

  • The United Kingdom’s state–run National Health Service (NHS) has commenced the world’s biggest trial of a blood test where they will detect more than 50 types of cancer. The world’s largest trial of blood test will find out different types of cancer even before the symptoms appear.

3. Eminent writer Aziz Hajini who passed away recently belonged to which state/UT?

A) Ladakh

B) Jammu and Kashmir 

C) Himachal Pradesh

D) Uttarakhand

  • Eminent writer of Jammu and Kashmir, Aziz Hajini has recently passed away. He was a Kashmiri writer, poet, critic, and organizer.
  • He had served as the first secretary of the Jammu and Kashmir Academy of Arts, Culture, and Languages. He was also awarded the Sahitya Akademi Award in the year 2013 for his book Tej Pazar and in the year 2016 for Kitab Aan Khane.

4. Recently, with which country India has held a Maritime Affairs Dialogue?

A) Australia

B) Great Britain

C) Japan 

D) France

  • India and Japan held their sixth Maritime Affairs Dialogue in a virtual format on September 9, 2021. The consultations involved exchanges on developments in the maritime security environment, regional cooperation activities and opportunities for cooperation between the two countries in the Indo–Pacific region.

5. Which state has decided to commemorate the death anniversary of Subramania Bharathi as ‘Mahakavi Day’?

A) Tamil Nadu 

B) Kerala

C) Andhra Pradesh

D) Odisha

  • Tamil Nadu government has decided to commemorate the death anniversary of Subramania Bharathi, a firebrand poet & freedom fighter, as Mahakavi Day on September 11. Death anniversary of Subramania Bharati is on September 11. His works ignited patriotism and left indelible mark on Tamil literature.
  • Tamil Nadu Government will also be conducting a state–level poetry competition for school and college students and “Bharati young poet Award’’ will be presented along with a purse of Rs 1 lakh. Women Livelihood Mission will also be renamed after Bharatiyar. This scheme is to be implemented by the rural development department.

6. Recently, who has been appointed as acting president of the Olympic Council of Asia?

A) Sheikh Ahmad al–Fahad al–Sabah

B) Thomas Bach

C) Randhir Singh 

D) Gianni Infantino

  • Veteran India sports administrator Randhir Singh has been appointed as acting president of the Olympic Council of Asia (OCA) after incumbent Sheikh Ahmad al–Fahad al–Sabah had to step aside after being found guilty of forgery by a Geneva Court. He had served as Secretary General of the OCA for 24 years from 1991 to 2015.
  • He also served as the Secretary General of the Indian Olympic Association from 1987 to 2012 and was a full member of the International Olympic Committee from 2001 to 2014 before becoming its honorary member.

7. 14 districts of which state have partnered with the Indian Institute of Millets Research to boost production of millets?

A) Tamil Nadu

B) Madhya Pradesh

C) Chhattisgarh 

D) Jharkhand

  • Fourteen districts of Chhattisgarh have signed MoUs with the Hyderabad–based Indian Institute of Millets Research to boost production of millets in their respective areas.
  • These millets will be procured through Van Dhan societies of the Chhattisgarh Minor Forest Produce Co–operative Federation, and after processing, will be used in mid–day meal schemes, public distribution system and nutrition programmes.

8. Which institute has been adjudged the best higher educational institution in 2021 in the National Institutional Ranking Framework (NIRF)?

A) IIT Madras 

B) IIT Bombay

C) Anna University

D) Madurai Kamarajar University

  • The Indian Institute of Technology Madras (IIT–M) has been adjudged the best higher educational institution in 2021 followed by Indian Institute of Science Bangalore (IISc) and IIT Bombay. The rankings were announced by education minister Dharmendra Pradhan as part of the National Institutional Ranking Framework (NIRF), an initiative of the government to rank top Indian institutions.

9. In which country, world’s largest plant to capture CO2 from air has started functioning?

A) Iceland 

B) Germany

C) India

D) Japan

  • The world’s largest plant designed to suck carbon dioxide out of the air and turning it into rock started running in Iceland. The plant, named Orca, after the Icelandic word “orka” meaning “energy”, consists of four units. Constructed by Switzerland’s Climeworks and Iceland’s Carbfix, when operating at capacity the plant will draw 4,000 tonnes of carbon dioxide (CO2) out of the air every year.

10. Who has been appointed as the new Chairman and MD of Bharat Petroleum Corporation Limited (BPCL)?

A) Arun Kumar Singh 

B) S Varadarajan

C) Arun Singh

D) K Ellangovan

  • Arun Kumar Singh appointed new Chairman and MD of BPCL Bharat Petroleum Corporation Limited (BPCL), a ‘Maharatna’ and a Fortune Global 500 Company has announced the appointment of Arun Kumar Singh as the Chairman and Managing Director of the company and consequently he has taken charge on September.7, 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!