Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

18th August 2020 Current Affairs in Tamil & English

18th August 2020 Current Affairs in Tamil & English

18th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

18th August 2020 Current Affairs Pdf Tamil

18th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாயை அமைத்துள்ள மெட்ரோ இரயில் நெட்வொர்க் எது?

அ. தில்லி மெட்ரோ

ஆ. கொச்சின் மெட்ரோ

இ. கொல்கத்தா மெட்ரோ

ஈ. சென்னை மெட்ரோ

  • கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன. இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், கொல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒருபகுதியாக அமைக்கப்
    -பட்டுள்ளது. இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

2. NASA’இன் ஓர் அண்மைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட செரஸ் (Cerus) என்றால் என்ன?

அ. குறுங்கோள்

ஆ. குள்ளக்கோள்

இ. கருந்துளை

ஈ. வால்மீன்

  • NASA’இன் டான் விண்கலத்தின் அண்மைய தரவுகளின்படி, செவ்வாய் கோளுக்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய குறுங்கோள் பட்டையில் அமைந்துள்ள குள்ளக்கோளான ‘செரஸ்’ ஏதுமற்ற ஒரு தரிசு விண்வெளிப்பாறை அன்று. இந்தக் குள்ளக்கோள் முன்னர் தரிசாக இருப்பதாக நம்பப்பட்டது; ஆனால், சேகரிக்கப்பட்ட தகவல்கள் இது நீர் நிறைந்த இடம் என்பதையும், உப்புநீரைக்கொண்ட ஒரு பெரிய மற்றும் ஆழமான நீர்த்தேக்கம் இருந்திருக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 2015இல், டான் விண்கலம் செரசுக்கு சென்றடைந்தது. இது பூமியின் நிலவைவிடவும் மிகச்சிறியதாகும்.

3. “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

ஆ. உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு

இ. கிரீன் பீஸ்

ஈ. PETA

  • பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
  • 225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

4. “இளையோர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் மற்றும் மனநலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஆ. UNICEF

இ. UNESCO

ஈ. உலகப் பொருளாதார மன்றம்

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) “இளையோர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் & மனநலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, உலக இளையோர்களில் கிட்டத்தட்ட சரிபாதிபேர் மனக்கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். COVID-19 தொற்றுநோயால் மூன்றில் ஒரு பங்கினர் தங்களின் எதிர்கால தொழிற்முறை வாழ்வு குறித்து அச்சங்கொண்டுள்ளனர். 18-29 வயதுடைய இளையோரின் வாழ்க்கையில், COVID-19 தொற்றுநோயின் தாக்கம்குறித்து ஆய்வுசெய்ய, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

5. எந்த வகை வாகனங்களை, மின்கலங்கள் பொருத்தப்படாமல் இருந்தாலும், பதிவுசெய்வதற்கு, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது?

அ. மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்கள்

ஆ. சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய வாகனங்கள்

இ. தானிகள்

ஈ. பாதுகாப்பு வாகனங்கள்

  • மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்களை மின்கலங்கள் பொருத்தாமல் இருந்தாலும் விற்கவும் பதிவுசெய்யவும் மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. பரிசோதனை முகமை அளித்த வகைப்பாட்டு சான்றிதழ் அடிப்படையில், இவ்வாகனங்களை விற்கவும் பதிவுசெய்யவும் அனுமதியளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுசெய்யும்போது மின் கலத்தின் தயாரிப்பு மற்றும் வகைகுறித்தோ அல்லது வேறு எந்தத்தகவல்களையும் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. “மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை, இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய பத்திரிகை அறக்கட்டளை

இ. பத்திரிகை தகவல் அலுவலகம்

ஈ. மத்திய நெசவு நிறுவனம்

  • “மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன. இந்த இணையவழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது.
  • நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.

7. COVID-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவர் யார்?

அ. அமிதாப் காந்த்

ஆ. Dr. V K பால்

இ. நரேந்திர சிங் தோமர்

ஈ. இராஜீவ் குமார்

  • COVID-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட்.12 அன்று கூடியது. NITI ஆயோக் அமைப்பின் உறுப்பினர் Dr. V K பால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரும் இணைத்தலைவராக இதில் பங்கேற்றார். இந்த நிபுணர் குழு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
  • தடுப்பூசி மருந்து இருப்புவைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள்குறித்து இந்தக்குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

8. “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. நிதிசாரா அளவுருக்களைப்புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன்மொழிந்துள்ளது.
  • இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மேலும், இக்கட்டமைப்பின்வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும்.

9.எந்த வகை நிதி நிறுவனங்களுக்கு, கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது?

அ. சிறு நிதி வங்கிகள்

ஆ. நகர கூட்டுறவு வங்கிகள்

இ. மண்டல ஊரக வங்கிகள்

ஈ. முதன்மை ஒப்பந்ததாரர்கள்

  • சொத்து வகைப்பாடு செயல்பாட்டில் செயல்திறன் & வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் (UCB) “கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை” செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.2020 மார்ச்.31 நிலவரப்படி, `2000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 2021 ஜூன்.30 முதல் கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை செயல்படுத்த வேண்டும். மொத்த சொத்துக்களின் மதிப்பு `1000 கோடிக்கு சமமானவை / அதற்கு மேற்பட்டவை ஆனால் `2000 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 2021 செப்டம்பர்.30 முதல் இதனை செயல்படுத்த வேண்டும்.

10.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கத்ரா – தில்லி விரைவுச்சாலைவழித்தடம், தேசிய தலைநகரை, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது?

அ. லடாக்

ஆ. ஜம்மு & காஷ்மீர்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தொடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6 ½ மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும். இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும்.

1. Which metro rail network has set up India’s deepest underground ventilation shaft?

[A] Delhi Metro

[B] Cochin Metro

[C] Kolkata Metro

[D] Chennai Metro

  • Kolkata Metro Rail Corporation and a private engineering firm Afcons jointly completed India’s deepest underground ventilation shaft. The ventilation shaft is 43.5m deep and is part of the East West Metro Line of Kolkata. These special purpose shafts are used for ventilation of the tunnels and for evacuation during critical times or emergencies.

2. What is Ceres, that was referred to in a recent study by the NASA?

[A] Asteroid

[B] Dwarf Planet

[C] Black hole

[D] Comet

  • According to a recent data from the NASA’s Dawn Spacecraft, the dwarf planet Ceres, which lies in the main asteroid belt between Mars and Jupiter, is not a barren space rock. It was earlier believed that the dwarf planet is barren but the data collected reveal that it is a water–rich place and there could be a large and deep reservoir of salt water. In the year 2015, the Dawn spacecraft arrived at Ceres, which us far smaller than the Earth’s moon.

3. Which organisation published a report titled “Elephants. Not commodities”?

[A] World Wide Fund for Nature

[B] World Animal Protection

[C] Green Peace

[D] PETA

  • World Animal Protection, an international animal welfare organisation has released a new report titled “Elephants. Not commodities”. The third edition of the report reveals that India has the second–highest number of elephants used in tourism in Asia. It also reveals that as many as 225 of the elephants, which is more than 45%, were kept in severely inadequate conditions.

4. Which organisation conducted a survey titled “Youth and Covid–19: impacts on jobs, education, rights and mental well–being”?

[A] International Labour Organisation

[B] UNICEF

[C] UNESCO

[D] World Economic Forum

  • The International Labour Organisation (ILO) undertook a survey titled “Youth and COVID–19: impacts on jobs, education, rights and mental well–being”. As per the survey, almost half of the world’s youth population is undergoing anxiety or depression–causing situations. More than a third are not sure of their future career prospects due to the COVID–19 pandemic. The survey was conducted to study the effect of pandemic on the lives of youths aged 18 to 29 years.

5. The Ministry of Road Transport and Highways (MoRTH) has permitted registration of which type of vehicle without pre fitted batteries?

[A] Electric Vehicles

[B] Solar Operated Vehicles

[C] Auto Rickshaws

[D] Defence Vehicles

  • The Union Ministry of Road Transport and Highways (MoRTH) has permitted registration of Electric Vehicles without pre–fitted batteries. The ministry has stated that Electric Vehicles without batteries can be sold and registered only with the type approval certificate issued by the Test Agency. Also, the Ministry has clarified that there is no need to mention any other details of the Battery for the purpose of Registration.

6. A webinar titled “Weaves of Maharashtra and Textiles of Odisha” was organized by which organization, along with India Tourism?

[A] NITI Aayog

[B] Press Trust of India

[C] Press Information Bureau

[D] Central Weaving Institute

  • A webinar titled “Weaves of Maharashtra and Textiles of Odisha” was organized by Press Information Bureau (PIB) – Mumbai and India Tourism – Mumbai. The key focus of the webinar was on the handlooms & fabrics of Maharashtra and Odisha.
  • August 7 is celebrated as National Handloom Day in India, to honour the handloom weavers of the nation. August 7 was chosen to mark the Swadeshi Movement which was launched on this day in 1905 to protest against partition of Bengal by the British Government.

7. Who is the chairperson for the National Expert Group on Vaccine Administration for COVID–19?

[A] Amitabh Kant

[B] Dr. V K Paul

[C] Narendra Singh Tomar

[D] Rajiv Kumar

  • The National Expert Group on Vaccine Administration for COVID–19 chaired by Dr V K Paul, Member NITI Aayog, met for the first time on 12th August. The meeting was co–chaired by Secretary, Ministry of Health and Family Welfare. The expert group has been constituted under the Union Ministry of Health and Family Welfare. It discussed on the parameters required in selecting the COVID–19 vaccine candidates for India and procurement mechanisms for COVID–19 vaccine.

8. Which Union Ministry released “Report of the Committee on Business Responsibility Reporting (BRR)”?

[A] Ministry of Home Affairs

[B] Ministry of Finance

[C] Ministry of Corporate Affairs

[D] Ministry of External Affairs

  • The Union Ministry of Corporate Affairs has released the “Report of the Committee on Business Responsibility Reporting (BRR)”. The report has proposed a new Reporting Framework for companies to reporting of Non–Financial Parameters. The framework is called “Business Responsibility and Sustainability Report (BRSR)”. The BRSR is to be integrated with the MCA 21 portal. Also, the information captured through the framework would be used to develop “Business Responsibility–Sustainability Index”.

9. The Reserve Bank of India has directed to implement System Based Asset Classification to which type of financial institutions?

[A] Small Finance Banks

[B] Urban Cooperative Banks

[C] Regional Rural Banks

[D] Primary Dealers

  • With an aim to improve the efficiency and transparency in asset classification process, the Reserve Bank of India issued a direction to implement “system–based asset classification” in Urban Co–operative Banks (UCBs). Those UCBs having total assets of Rs.2000 crore or above as on 31st March 2020, should implement system–based asset classification from 30th June 2021. Those UCBs having total assets equal to or more than Rs.1000 crore but less than Rs.2000 crore shall implement it from 30th September 2021.

10. The Katra – Delhi Express Road Corridor, that was in news recently, connects the National Capital to which state/UT?

[A] Ladakh

[B] Jammu and Kashmir

[C] Himachal Pradesh

[D] Punjab

  • The construction work of the Katra (Jammu & Kashmir) – Delhi Express Road Corridor is proposed to be completed in 3 years and will be operational by 2023. The express corridor would bring down the travel time from Katra to Delhi to around six and half hours. One key feature of this road is that it will connect the holy cities of Katra and Amritsar, and other major religious shrines between the two destinations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!