Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

18th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

18th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சான் இசிட்ரோ இயக்கத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. இத்தாலி

ஆ. கியூபா

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

  • கடந்த 2018ஆம் ஆண்டில், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கியூபாவின் சான் இசிட்ரோ பிராந்தியத்தில் கூடி, கலாச்சார செயற்பாடுகளை தணிக்கை செய்வது குறித்த அந்த நாட்டின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, இது மொவிமியான்டோ சான் ஐசிட்ரோ அல்லது சான் இசிட்ரோ இயக்கம் (MSI) என்று அறியப்பட்டது.
  • இந்த ஆண்டு நவம்பரில் MSI உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதன் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கியூபா அரசாங்கம் அந்தப் போராட்டக்காரர்களை ஏகாதிபத்தியத்தின் முகவர்கள் என அழைக்கிறது.

2. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, பாயிண்ட் காலிமர் பறவைகள் மற்றும் வனவுயிரிகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. ஒடிசா

  • தமிழ்நாட்டின் கீழைக்கடற்கரையில் அமைந்துள்ள கோடியக்கரை (காலிமர் முனை) பறவைகள் மற்றும் வனவுயிரிகள் சரணாலயத்திற்கு பட்டைத்தலை வாத்துகள் அண்மையில் வலசைவந்தன. இந்தப் பறவைகள் தீவிர வானிலையிலும் அதீத உயரத்திலும் பறக்கும் திறன் பெற்றவையாகும். அவை திபெத், மத்திய சீனா மற்றும் மங்கோலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து இங்கு வந்திருக்கக் கூடும். அவை பொதுவாக குளிர்காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்கின்றன.

3. ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக 2000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. ஒடிசா

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி சமீபத்தில் மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் நினைவில் அவை ‘அம்மா மினி கிளினிக்குகள்’ என அழைக்கப்படும். கிளினிக்குகள், ஏழை மற்றும் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கு சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும். இந்த நடவடிக்கையின்மூலம் அரசு மருத்துவமனைகளின் சுமை ஓரளவுக்குக் குறையும்.

4. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் வனவுயிரியான உட்டா மிங்க் சார்ந்த நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. ஆஸ்திரேலியா

  • அமெரிக்காவின் வேளாண்துறை சமீபத்தில் ‘உட்டா மிங்க்’ என்னும் ஒரு வனவுயிரில் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, வைரஸால் பாதிக்கப்பட்ட வீட்டு மிங்குகளை கொல்ல டென்மார்க் முடிவுசெய்தது. உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகள் மற்றும் வீட்டு பூனைகள் மற்றும் நாய்களிலும் COVID-19 வைரஸ் தொற்று காணப்பட்டது. ஆனால் இது, COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் வனத்தை இருப்பிடமாகக்கொண்ட விலங்கு ஆகும்.

5. வங்காள விரிகுடா முழுவதும் கீழ்க்காணும் எந்த வகை அலை நகர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவை குறிவைத்து மழைபொழிகிறது?

அ. மேற்குத்திசை அலைகள்

ஆ. கீழ்த்திசை அலைகள்

இ. ராஸ்பி அலைகள்

ஈ. ஜெட் காற்றோடை

  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழையானது தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு தீபகற்பத்தில் உள்ள பகுதிகளில் மீண்டும் பொழியவுள்ளது. வங்காள விரிகுடா முழுவதும் வெகுவேகமாக நகரும் கீழ்த்திசை அலைகள் பொதுவாக தெற்கு தீபகற்ப பகுதியை குறிவைக்கின்றன. வெப்பமண்டல அலை அல்லது வெப்பமண்டல கீழ்த்திசை அலை என்றும் அழைக்கப்படுகின்ற இது, ஒப்பீட்டளவில் குறைந்த காற்றழுத்தத்தின் ஒருபகுதியாகும். இது, வெப்பமண்டலத்தின் குறுக்கே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய கனமழையை ஏற்படுத்துகிறது.

6. எஃகு துறையில், நடப்பாண்டிற்கான (2020) தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது பெற்ற நிறுவனம் எது?

அ. SAIL

ஆ. RINL

இ. NMDC

ஈ. TATA Steel

  • SAIL எனப்படும் இந்தியா எஃகு ஆணையம், நடப்பாண்டுக்கான (2020) தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதை இயக்குநர்கள் வாரியத்திடமிருந்து பெற்றுள்ளது. இந்த விருதை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக SAIL நிறுவனம் வென்றுள்ளது. SAIL என்பது புது தில்லியை தலைமையாகக் கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான எஃகு தயாரிக்கும் நிறுவனமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் இவ்விருதின்மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

7. கீழ்க்காணும் எம்மாநிலத்தில் அமையவுள்ள நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அடிக்கல் நாட்டினார்?

அ. தமிழ்நாடு

ஆ. இராஜஸ்தான்

இ. குஜராத்

ஈ. பஞ்சாப்

  • பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு விஜயம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கட்ச் மாவட்டத்தில் அமையவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவானது கட்டி முடிக்கப்பட் -டவுடன் நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பூங்காவாக இருக்கும். ஒரு முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் பொதி ஆலை மற்றும் கச்சின் மாண்ட்வியில் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைக்கும் அவர் அப்போது அடிக்கல் நாட்டினார்.

8. சூரத்தில் சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட C-454 என்பது எந்த வகையான இராணுவ வாகனமாகும்?

அ. இடைமறிப்புப் படகு

ஆ. கடற்புற ஆளில்லா வானூர்தி

இ. கரையோர ரோந்துக் கப்பல்

ஈ. மெத்தூர்தி

  • குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஹசிரா துறைமுகத்தில், இந்திய கடலோர காவல்படையின் C-454 என்ற உள்நாட்டில் கட்டப்பட்ட இடைமறிப்புப்படகு பணியமர்த்தப்பட்டது. இந்த இடைமறிப்புப்படகு ஹசிராவில் உள்ள L&T கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும். ஆழமற்ற நீரில் அதிவேகத்தில் இயங்கக்கூடியதாகும் இந்தப்படகு. இந்தப் படகில் அதிநவீன வழிசெலுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

9. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கியுள்ள புதிய கட்டணஞ்செலுத்த பயன்படும் செயலியின் பெயர் என்ன?

அ. Post Pay

ஆ. Dak Pay

இ. IPPB Pay

ஈ. Dak Digital

  • அஞ்சல் துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை வங்கி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. ‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதுமுள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய அஞ்சல் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது.

10. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக்கவுன்சில் கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?

அ. பிரதமர்

ஆ. நிதியமைச்சர்

இ. ரிசர்வ் வங்கியின் ஆளுநர்

ஈ. NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி

  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சிலின் 22ஆவது கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். நாட்டின் தற்போதைய உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்து ஆய்வுசெய்தார்.
  • மத்திய நிதியமைச்சர், 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி ஒழுங்குமுறை அமைப்பான நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக்கவுன்சிலின் தலைவராக உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதி செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர், SEBI, IRDAI, PFRDA, IBBI ஆகியவற்றை தவிர தேவையான வேறு நபர்களை நிதியமைச்சர் இக்கவுன்சிலில் சேர்க்கலாம்.

18th December 2020 Tnpsc Current Affairs in English

1. San Isidro Movement, which was seen in the news, is associated with which country?

[A] Italy

[B] Cuba

[C] Germany

[D] France

  • In the year 2018, artists, journalists and activists gathered in the San Isidro region of Cuba, to protest against the country’s rules on censorship of cultural activities. Hence, it came to be known as the Movimiento San Isidro, or the San Isidro Movement (MSI). After a member of MSI was arrested in November this year, its members began a hunger and then were arrested. The Government name the protestors as agents of Imperialism.

2. Point Calimere Bird and Wildlife Sanctuary, that is seen in news recently, is located in which state?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Odisha

  • Several bar–headed geese have recently migrated to Point Calimere Bird and Wildlife Sanctuary, which is located on the eastern coast of Tamil Nadu. These birds have the ability to fly in extreme weather and very high altitudes. They might have flown thousands of miles from Tibet, Central China and Mongolia. They breed in these countries and migrate to India during winter.

3. Which Indian state launched a project to set up 2000 Mini Clinics to provide basic medical treatment to the poor?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Odisha

  • The Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami has recently launched a project to set up 2,000 mini–clinics across the state. They will be known as ‘Amma Mini Clinics’, after the former late Chief Minister J Jeyalalitha. The clinics aim to provide essential healthcare services to the poor and downtrodden. Minor ailments will be treated and this step will reduce the burden of Government hospitals.

4. Utah Mink, the first wild animal to be infected by coronavirus, belongs to which country?

[A] Japan

[B] China

[C] United States of America

[D] Australia

  • The United States Agriculture Department has recently confirmed the first known case of the coronavirus in a wild animal, a mink. Earlier, Denmark decided to cull several farmed minks after they were infected by the virus. The virus was also found in zoo tigers and household cats and dogs. But this is the first free–ranging and native wild animal being confirmed with the infection.

5. Which type of wave move across the Bay of Bengal and target Tamil Nadu and Kerala, to give rains?

[A] Westerly Waves

[B] Easterly Waves

[C] Rosby Waves

[D] Jet Streams

  • As per the recent announcement from the India Meteorological Department (IMD), widespread rain or thundershowers will come back to Tamil Nadu, Kerala and regions over the South Peninsula. The Easterly waves move fast across the Bay of Bengal and usually target the south peninsula region. Also called as the tropical wave or tropical easterly wave, it is an area of relatively low air pressure, which moves from east to west across the tropics and causes cloudiness and thunderstorms.

6. Which company has been awarded Golden Peacock Environment Management Award for the year 2020, in the Steel Sector?

[A] SAIL

[B] RNML

[C] NMDC

[D] TATA Steel

  • Steel Authority of India Limited (SAIL) has been awarded with the Golden Peacock Environment Management Award for the year 2020 in the Steel Sector. SAIL has been the winner of this prestigious award for successive two years.
  • Steel Authority of India Limited is an Indian state–owned steel making company based in New Delhi. Various measures of the company to preserve environment have been recognised.

7. Prime Minister Modi laid foundation stone for the country’s largest renewable energy park in which state?

[A] Tamil Nadu

[B] Gujarat

[C] Punjab

[D] Rajasthan

  • Prime Minister Narendra Modi visited Gujarat and laid the foundation stones for various developmental projects. The Hybrid Renewable Energy Park in the district of Kutch will be the country’s largest renewable energy generation park, when completed.
  • Foundation stones were also laid for a fully automated milk processing and packing plant and a Desalination plant in Mandvi, Kutch.

8. What type of military vehicle is C–454, which was recently commissioned at Surat?

[A] Interceptor boat

[B] Sea Drone

[C] Offshore Patrol Vessel

[D] Hover craft

  • An indigenously built interceptor boat C–454 of the Indian Coast Guard was commissioned at Hazira port in Surat, Gujarat. This Interceptor boat is built by L&T Jetty, Hazira and is capable of operating in shallow water with very high speed. The boat is fitted with advanced navigation and communication equipment.

9. What is the name of the new digital payment application launched by India Post Payments Bank?

[A] Post Pay

[B] Dak Pay

[C] IPPB Pay

[D] Dak Digital

  • The Department of Posts and India Post Payments Bank (IPPB) have launched a new digital payment application named ‘DakPay’. It is a suite of digital banking services provided through their postal network, across the country. The features include Domestic Money Transfers – DMT, Virtual debit card, UPI payment, AePS and Bill payment.

10. Who chairs the meeting of the Financial Stability and Development Council (FSDC)?

[A] Prime Minister

[B] Finance Minister

[C] RBI Governor

[D] NITI Aayog CEO

  • Union Minister for Finance & Corporate Affairs Nirmala Sitharaman chaired the 22nd Meeting of the Financial Stability and Development Council (FSDC) and reviewed the current global and domestic macro–economic situation and financial stability in the nation. Union Finance Minister is the chairperson of FSDC, an autonomous regulatory body set up in the year 2010.
  • Besides the ten members which includes the RBI Governor, Finance Secretary, Chief Economic Adviser, Chairpersons of SEBI, IRDAI, PFRDA, IBBI among others, the Finance Minister may invite any other required person.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!