Tnpsc

18th February 2020 Current Affairs in Tamil & English

18th February 2020 Current Affairs in Tamil & English

18th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

18th February 2020 Current Affairs in Tamil

18th February 2020 Current Affairs in English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘யோதாவு’ (போர்வீரர்) என்னும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலி, எந்த மாநிலத்துடையதாகும்?

அ. கர்நாடகா

ஆ. கேரளா

இ. ஆந்திரப்பிரதேசம்

ஈ. தெலுங்கானா

  • கேரள மாநிலத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘யோதாவு’ என்ற செயலியை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சமீபத்தில், அறிமுகப்படுத்தினார். கேரளத்தின் கொச்சி காவல்துறை, இந்தச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் போதைப் பொருள் விநியோகம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்க முடியும். தகவல் கொடுத்தோரின் விபரம் இரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2.காலஞ்சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், எந்த நகரத்தில் பிறந்தார்?

அ. அம்பாலா பாசறை, ஹரியானா

ஆ. லக்னோ, உத்தரபிரதேசம்

இ. காந்தி நகர், குஜராத்

ஈ. லூதியானா, பஞ்சாப்

  • காலஞ்சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பா.ஜ.க’இன் மூத்த அரசியல்வாதியுமான சுஸ்மா ஸ்வராஜ் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கண்டோன்மெண்டில் பிறந்தார். அங்கிருந்து அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அண்மையில், அம்பாலா நகரத்தில், `18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு சுஸ்மா ஸ்வராஜின் பெயர் சூட்டப்பட்டது. சுஸ்மா ஸ்வராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது 67ஆம் வயதில் காலமானார். அவருக்கு, இந்த ஆண்டுக்கான, ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3.இந்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு கணக்கியல் ஆண்டு என்ன?

அ. ஏப்ரல் – மார்ச்

ஆ. ஜூலை – ஜூன்

இ. ஜனவரி – டிசம்பர்

ஈ. மே – ஏப்ரல்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு கணக்கியல் ஆண்டு ஜூலை-ஜூன் ஆகும். அண்மையில், ரிசர்வ் வங்கியின் (RBI) கணக்கியல் ஆண்டை 2020-21ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் நிதியாண்டுடன் (ஏப்ரல்-மார்ச்) இணைக்க ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழு பரிந்துரைத்தது.
  • ரிசர்வ் வங்கி வாரியம் தனது 582ஆவது கூட்டத்தில் இந்த முன்மொழிவை அறிவித்ததுடன், அரசின் பரிசீலிப்பைப் பெறுவதற்காக இந்த முன்மொழிவை அரசாங்கத்திற்கு அனுப்ப ஒப்புதல் அளித்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

4.அண்மையில் CREDAIஆல் தொடங்கப்பட்ட, ‘CREDAI Awaas’ செயலியின் நோக்கம் என்ன?

அ. நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்தல்

ஆ. குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதை எளிதாக்குவது

இ. குடியிருப்பு சொத்துக்களுக்கு புவிசார் குறியிடுதல்

ஈ. குடியிருப்பு சொத்துக்களுக்கான ஒப்புதல்

  • அசையாச்சொத்து முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) என்பது தனியார் அசையாச் சொத்து முகவர்கள் சங்கங்களின் தலைமை அமைப்பாகும். இந்த அமைப்பு, “CREDAI Awaas” என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது; இது, குடியிருப்பு சொத்துக்கள் வாங்குவதை எளிதாக்குகிறது.
  • இச்செயலியின்மூலம், வருங்காலத்தின் வீடு வாங்குபவர்களுக்கு ஒரு நம்பகமான தளம் உருவாக்கப்ப –டுகிறது. இதனால் அவர்கள், தங்களுக்கு பொருத்தமான குடியிருப்பு சொத்துக்களை அடையாளம் கண்டு, அவர்களின் முகவர்களை நேரடியாக தொடர்புகொள்ள முடியும். CREDAIஇல் உறுப்பினராக இருக்கும் முகவர்களின் விவரங்கள், இந்தச் செயலியில் காட்டப்படும்.

5.ஜோஷ்னா சின்னப்பாவும் செளரவ் கோசலும், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்?

அ. பூப்பந்து

ஆ. ஸ்குவாஷ்

இ. டென்னிஸ்

ஈ. டேபிள் டென்னிஸ்

  • இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பின் 77ஆவது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியானது, அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தியன் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணாவை வீழ்த்தி பெண்களுக்கான பட்டத்தை வென்றார். அதே நேரத்தில், மற்றொரு சிறந்த வீரரான செளரவ் கோசல் அபிஷேக் பிரதனை வீழ்த்தி ஆண்களுக்கான பட்டத்தை வென்றார். இவ்விரு சாம்பியன்களுக்கும் தலா `1,25,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

6. ‘SAMPRITI–IX’ என்னும் இந்தியா-வங்கதேசம் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி நடைபெற்ற நகரம் எது?

அ. உம்ரோய் ஆ. கொல்கத்தா

இ. விசாகப்பட்டினம் ஈ. கொச்சின்

  • ‘SAMPRITI’ என்னும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான கூட்டுப்பயிற்சியின் 9ஆவது பதிப்பு, அண்மையில் மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் என்ற இடத்தில் நிறைவடைந்தது. இரண்டு வார காலம் நடைபெற்ற இந்தப்பயிற்சி, கடந்த பிப்.3-16 வரை நடைபெற்றது.
  • இரு நாடுகளின் வீரர்களும் கிளர்ச்சி-எதிர்ப்பு, பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை நுட்பங்கள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இருநாட்டுப் படைகளுக்கு இடையிலான பரஸ்பர செயல்பாட்டை வலுப்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவியது.

7. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 13 பிலிம்பேர் விருதுகளை வென்ற ஒரே ஹிந்தித்திரைப்படம் எது?

அ. உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

ஆ. கல்லி பாய்

இ. ஆர்டிக்கிள் 15

ஈ. சாந்த் கி ஆங்

  • 2 சொல்லிசைப் பாடகர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட, ‘கல்லி பாய்’ என்ற ஹிந்தித் திரைப்படம், பதிமூன்று பிலிம்பேர் விருதுகளை வென்றதன்மூலம் பிலிம்பேர் விருதுகளில் வரலாறு படைத்துள்ளது. இந்தப்படம், அது பரிந்துரைக்கப்பட்டிருந்த 13 பிரிவுகளிலும் விருது வென்றது.
  • கெளகாத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த படம், சோயா அக்தருக்கு சிறந்த இயக்குநர், ரன்வீர் சிங்குக்கு சிறந்த நடிகர் மற்றும் ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் 11 பிலிம்பேர் விருதுகளை வென்றுதந்த, ‘பிளாக்’ என்ற படத்தின் முந்தைய சாதனையை இப்படம் முறியடித்தது. இது சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த இசைத்தொகுப்பு மற்றும் சிறந்த பாடல் வரிகளுக்கான விருதையும் பெற்றது.

8.தெலுங்கானாவின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கருத்தரங்கமான, ‘Bio Asia – 2020’இன் கருப்பொருள் என்ன?

அ. Life Science for All

ஆ. Today for Tomorrow

இ. Instrumental Life Sciences

ஈ. Better Bio–tech

  • ஆசியாவின் மிகப்பெரிய உயிரி தொழில்நுட்பம் & வாழ்க்கை அறிவியல் கருத்தரங்கமான, ‘Bio Asia -2020’ அண்மையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தில் தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வுக்கான கருப்பொருள், “Today for Tomorrow” ஆகும். 37 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
  • 175 கண்காட்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக்கொண்ட ஓர் பேரளவிலான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு (2020) கருத்தரங்கத்தின், கூட்டாளர் நாடான சுவிச்சர்லாந்து தனது 40 உறுப்பினர்களை இந்நிகழ்வில் பங்கேற்க அனுப்பியுள்ளது.

9.சிறந்த காவல்துறை அதிகாரிகளை கெளரவிப்பதை நோக்கமாகக்கொண்ட, ‘பாராட்டு & புகழ்ந்துரை’ திட்டம், எந்த மாநிலத்துடையதாகும்?

அ. ஒடிசா

ஆ. இராஜஸ்தான்

இ. பஞ்சாப்

ஈ. ஆந்திரபிரதேசம்

  • பஞ்சாப் மாநில காவல்துறை, அண்மையில், ‘பாராட்டு மற்றும் புகழ்ந்துரை – Appreciate and Commend’ என்ற விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இது, கடமைகளை விடாமுயற்சியுடன் செய்யும் காவல் துறை அதிகாரிகளை கெளரவிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • இந்தத்திட்டத்தின்கீழ், மாவட்ட காவல்துறைத் தலைவர்கள், ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் சிறந்த காவலர்களின் பெயரை பரிந்துரைப்பார்கள். மூத்த அதிகாரிகளின் குழு, அவற்றிலிருந்து சிறந்தோரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு மாதமும் விருது பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

10.உலகின் மிகப்பெரிய வருடாந்திர உணவு & பானங்கள் வர்த்தக கண்காட்சியான, ‘GulFood-2020’ஐ நடத்திய நகரம் எது?

அ. ரியாத்

ஆ. அபுதாபி

இ. துபாய்

ஈ. தோகா

  • உலகின் மிகப்பெரிய வருடாந்திர உணவு மற்றும் பானங்கள் வர்த்தக கண்காட்சியான, ‘GulFood -2020’ துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், பிப்.16-20 வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் 25ஆவது பதிப்பில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கை, அண்மையில், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் படல் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • தமிழ்நாட்டில் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,13,06,638 பேர் வாக்காளர் -களாக உள்ளனர். இந்தப்பட்டியலின்படி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக்கொண்டுள்ளது. குறைந்த வாக்காளர்கள்கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!