Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

18th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நடப்பாண்டின் (2021) ஹரித்துவார் கும்பமேளா தொடங்கவுள்ள தேதி எது?

அ) மார்ச் 1

ஆ) ஏப்ரல் 1

இ) மே 1

ஈ) ஏப்ரல் 30

  • வழமையாக 3 மாதங்களுக்கு நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா, நடப்பாண்டில் (2021) 30 நாட்களுக்கு மட்டும் நடத்த உத்தரகண்ட் அரசு முடிவுசெய்துள்ளது. இதனை அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். ஹிந்துக்களின் மிகவும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா, இம்முறை 2021 ஏப்.1-ஏப்.30 வரை நடைபெறும்.

2. பின்வரும் எம்மாநிலத்தில், ‘மகாபாகு-பிரம்மபுத்திரா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்?

அ) ஒடிசா

ஆ) அஸ்ஸாம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஜார்க்கண்ட்

  • நியமத்தி – மஜிலி தீவுகளுக்கு இடையில், வடக்கு கெளகாத்தி – தெற்கு கெளகாத்தி இடையில், தூப்ரி – ஹட்சிங்கிமரி இடையில் ரோ-பாக்ஸ் சேவையைத் தொடங்கிவைத்ததன்மூலம் ‘மகாபாகு – பிரம்மபுத்திரா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தடையற்ற போக்குவரத்து இணைப்புவசதி கிடைக்கச்செய்யும் நோக்கில் இந்தத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு & கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ) கனடா

ஆ) மலேசியா

இ) மொரீஷியஸ்

ஈ) சிங்கப்பூர்

  • இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும்.
  • வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், சரக்கு மற்றும் சேவை -கள் வர்த்தகம், வணிகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகள், நபர்களின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பு இடம் பெறுகின்றன.

4. உலக சூரிய ஆற்றல் வங்கியை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள அமைப்பு எது?

அ) ஐக்கிய நாடுகள் அவை

ஆ) பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி

இ) SAARC

ஈ) உலக வங்கி

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியானது (ISA) உலக சூரிய ஆற்றல் வங்கியை (World Solar Bank) தொடங்கவுள்ளது. 2021 நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

5. இந்திய கடலோரக்காவல்படை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 01

ஆ) பிப்ரவரி 02

இ) பிப்ரவரி 03

ஈ) பிப்ரவரி 04

  • சமீபத்தில், இந்திய கடலோரக் காவல்படை தனது 43ஆவது உருவாக்க நாளை பிப்ரவரி 1 அன்று கொண்டாடியது. பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் 1978ஆம் ஆண்டு கடலோரக் காவல்படை சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டின் முழுமையான தன்னாட்சிமிக்க ஆயுதப்படையாக 1977 பிப்.1 அன்று இந்திய கடலோரக் காவல்படை எழுப்பப்பட்டது. நாட்டின் பரந்த கடற்பரப்பை பாதுகாப்பதே இதன் முதன்மைப்பணியாகும்.

6. நடப்பாண்டு (2021) வரும் உலக ஈரநிலங்கள் நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Wetlands for Us

ஆ) Wetlands and Water

இ) Wetlands and COVID-19

ஈ) Save Wetlands

  • ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் புவியில் அதன் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி.2 அன்று உலக ஈர நிலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “ஈரநிலங்கள் மற்றும் நீர்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  • நடப்பாண்டின் (2021) கருப்பொருள், நன்னீரின் ஆதாரமாக விளங்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

7. நடப்பாண்டு (2021) வரும் உலக புற்றுநோய் நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) We can. I can

ஆ) I am and I will

இ) Not Beyond Us

ஈ) Cancer can be prevented

  • ஆண்டுதோறும் பிப்.4 அன்று உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்ப -டுகிறது. புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “I am and I will” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதே கருப்பொருள் தெரிவாகிவருகிறது.

8. உலக யுனானி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 11

ஆ) பிப்ரவரி 12

இ) பிப்ரவரி 13

ஈ) பிப்ரவரி 14

  • யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.

9. நடப்பாண்டு (2021) பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான பன்னாட்டு நாளின் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) கருப்பொருள் என்ன?

அ) End Female Genital Mutilation

ஆ) Unleashing Youth Power

இ) No Time for Global Inaction, Unite, Fund, and Act to End Female Genital Mutilation

ஈ) Intensify Global Efforts

  • பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான பன்னாட்டு நாள் ஆண்டுதோ -றும் பிப்.6 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பிறப்புறுப்பு சிதைப்பு அல்லது மருத்துவ ரீதியற்ற காரணங்களுக்காக பெண் பிறப்புறு -ப்பில் மாற்றங்களை மேற்கொள்வது ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற 30 நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
  • கடந்த 2012’இல், பிப்ர்வரி.6ஆம் தேதியை பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான சர்வதேச நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த நடைமுறையை முற்றாக ஒழிப்பதற்கு ஐநா அவை செயல்பட்டுவருகிறது.

10. உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 12

ஆ) பிப்ரவரி 13

இ) பிப்ரவரி 14

ஈ) பிப்ரவரி 15

  • உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
  • நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.

1. When will Haridwar Kumbh Mela 2021 begin?

A) March 1

B) April 1

C) May 1

D) April 30

  • The Uttarakhand government has decided to limit Kumbh Mela 2021 to just 30 days from earlier three months. This was informed by Chief Secretary Om Prakash. This time the Kumbh, which is one of the most sacred events for Hindus, will be held from April 1 to April 30.

2. Prime Minister Narendra Modi launched ‘Mahabahu–Brahmaputra’ initiative in which state?

A) Odisha

B) Assam

C) West Bengal

D) Jharkhand

  • PM Narendra Modi launched the ‘Mahabahu–Brahmaputra’ initiative in Assam with an aim to provide seamless connectivity to Eastern Parts of the country. The initiative was launched with the inauguration of Ro–Pax vessel operations between Neamatighat–Majuli, North–South Guwahati and Dhubri–Hatsingimari.

3. Union Cabinet approved the signing of Comprehensive Economic Cooperation and Partnership Agreement between India and which country?

A) Canada

B) Malaysia

C) Mauritius

D) Singapore

  • The Union Cabinet approved the Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA) between India and Mauritius. The Agreement will cover trade in Goods & Services, Telecom, Technical Barriers to Trade (TBT), Rules of Origin, Dispute Settlement, Financial services, and cooperation in other areas.

4. Which organisation has planned to launch the World Solar Bank?

A) United Nations

B) International Solar Alliance

C) SAARC

D) World bank

  • The International Solar Alliance (ISA) to launch the World Solar Bank. The launch will likely be announced at the United Nations Climate Change Conference in Glasgow in November 2021.

5. On which date, the Indian Coast Guard raising day is celebrated?

A) February 01

B) February 02

C) February 03

D) February 04

  • Recently, the Indian Coast Guard (ICG) celebrated its 43rd raising day on Feb.1. The ICG was raised on 1977 February 1, with the enactment of Coast Guard Act 1978, as a full–fledged independent Armed Force of the Union under the Ministry of Defence. Its primary task is to protect the country’s vast maritime zones.

6. What is the theme of the ‘World Wetlands Day 2021’?

A) Wetlands for Us

B) Wetlands and Water

C) Wetlands and COVID–19

D) Save Wetlands

  • World Wetlands Day is observed every year on 2nd February to create awareness on the importance of wetlands and its role played in the planet. This year, the theme of the World Wetlands Day is ‘Wetlands and Water’. This year’s theme highlights the importance of wetlands as a source of freshwater.

7. What is the theme of the World Cancer Day 2021?

A) We can. I can

B) I am and I will

C) Not Beyond Us

D) Cancer can be prevented

  • The World Cancer Day is observed every year on 4th February to raise awareness about cancer, its treatment and to encourage methods of its prevention. The theme of the 2021 Cancer Day is ‘I Am and I Will’, which is being continued since 2019.

8. World Unani Day is celebrated in which date?

A) February 11

B) February 12

C) February 13

D) February 14

  • World Unani Day is observed every year on 11th February, to mark the birth anniversary of the Unani scholar and social reformer Hakim Ajmal Khan. He was the founder of scientific research in Unani System of Medicine. The Unani system of medicine originated in Greece and its foundation was laid by Hippocrates.

9. What is the theme for this year’s International Day of Zero Tolerance for Female Genital Mutilation?

A) End Female Genital Mutilation

B) Unleashing Youth Power

C) No Time for Global Inaction, Unite, Fund, and Act to End Female Genital Mutilation

D) Intensify Global Efforts

  • International Day of Zero Tolerance for Female Genital Mutilation is observed annually on Feb.6, across the world. Genital Mutilation, or altering the female genitalia for non–medical reasons is prevalent in 30 countries in Africa the Middle East and other parts of the world.
  • In 2012, the UN General Assembly designated Feb.6th as the International Day of Zero Tolerance for Female Genital Mutilation and the UN works for the complete eradication of the practice by 2030.

10. When is the ‘World Radio Day’ celebrated across the world?

A) February 12

B) February 13

C) February 14

D) February 15

  • ‘World Radio Day’ is celebrated on Feb.13 every year, across the world. It was first proclaimed by the member states of UNESCO in 2011. The UN General Assembly adopted the proposal in 2012.
  • The 2021 edition of World Radio Day is based on 3 main sub–themes namely Evolution, Innovation and Connection. UNESCO released a video named “New World; New Radio”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!