TnpscTnpsc Current Affairs

18th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2030ஆம் ஆண்டுக்கு முன், எந்த நாட்டுடனான $50 பில்லியன் இருதரப்பு வர்த்தக இலக்கை அடைவதற்கு இந்தியா நிர்ணயித்துள்ளது?

அ) தென் கொரியா 

ஆ) அமெரிக்கா

இ) ஜப்பான்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

 • இந்தியாவும் தென் கொரியாவும் 2030ஆம் ஆண்டுக்கு முன் $50 பில்லியன் என்ற இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன. தென் கொரிய வர்த்தக அமைச்சர் யோ ஹான்-கூ மற்றும் இந்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புது தில்லியில் இது குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

2. இந்தியாவில் எந்த மாதத்தில், ‘தேசிய புத்தாக்க வாரம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

அ) ஜனவரி 

ஆ) பிப்ரவரி

இ) மார்ச்

ஈ) ஏப்ரல்

 • மத்திய கல்வி அமைச்சகம், AICTE, மற்றும் வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் இணைந்து 2022 ஜன.10- 16 வரை ‘தேசிய புத்தாக்க வாரத்தை’ ஏற்பாடு செய்கின்றன.
 • இப்புத்தாக்க வாரத்தின்போது, புதுமைகளை ஊக்குவிக்கு நோக்கில் விழிப்புணர்வை பரப்புவதற்காக இம்முகமைக -ளால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி அமைச்சகத்தால் “கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சூழலை உருவாக்குதல்” என்ற தலைப்பில் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்றது.

3. ரிசர்வ் வங்கி எந்தப் பேமெண்ட் வங்கிக்கு ஷெட்யூல்டு வங்கியின் அந்தஸ்தை வழங்கியுள்ளது?

அ) ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 

ஆ) ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கி

இ) என்எஸ்டிஎல் பேமெண்ட்ஸ் வங்கி

ஈ) ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி

 • இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஷெட்யூல்டு வங்கியின் அந்தஸ்தை வழங்கி உ உள்ளது. இதன்மூலம், ஏலங்களுக்கான அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி விண்ணப்பிக்கலாம். இது மத்திய மற்றும் மாநில அரசு அளவிலான வணிகங்களை மேற்கொள்ளலாம்.

4. எரிபொருள் விலையேற்றம் காரணமாக நடந்த மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து சமீபத்தில் பதவி விலகிய அரசாங்கம் எது?

அ) கஜகஸ்தான்

ஆ) கிர்கிஸ்தான்

இ) உஸ்பெகிஸ்தான்

ஈ) துர்க்மெனிஸ்தான்

 • கசகசுதான் நாட்டின் அதிபர் காசிம்-சோமாட் டோகாயேவ், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எழுந்த நாடு தழுவிய போராட்டங்களை அடுத்து, அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கான குடி மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவசரகால நிலையை அவ்வரசாங்கம் முன்னதாகவே அறிவித்தது.

5. அடுத்துவரும் 2023ஆம் ஆண்டில் கேலோ இந்தியா விளையாட்டுக்களை நடத்தவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) கர்நாடகா 

ஈ) கோவா

 • 2023ஆம் ஆண்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை கர்நாடகா மாநிலம் நடத்தும் என இளைஞர் அதிகாரம் & விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக மாநிலத்தில் 75’க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார். கேலோ இந்தியாவின் 2021 பதிப்பு தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஹரியானாவில் நடைபெறவுள்ளது.

6. புதைபடிவமற்ற ஆற்றல்மூலங்களிலிருந்து, 2030ஆம் ஆண்டளவில் எத்தனை சதவீத மின்சக்தியை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது?

அ) 30%

ஆ) 40% 

இ) 50%

ஈ) 100%

 • COP-21’இல் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப் -புகளின் ஒருபகுதியாக, 2030ஆம் ஆண்டளவில் புதை படிவமற்ற ஆற்றல் மூலங்களிலிருந்து 40% மின்சக்தியை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2021 நவம்பரில் அதன் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் இலக்கை இந்தியா அடைந்துள்ளதாக புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • தற்போது, 392.01 GW என்ற மொத்த நிறுவப்பட்ட ஆற்றல் திறனுடன் இந்தியா உள்ளது.

7. PM-POSHAN திட்டத்தை திறம்பட செயல்படுத்துதற்காக அக்ஷய பாத்திரம் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ள அமைப்பு எது?

அ) IMF

ஆ) உலக வங்கி

இ) ஐக்கிய நாடுகள் சபை – WFP 

ஈ) UNICEF

 • பிரதம மந்திரி போஷான் சக்தி நிர்மான் (PM-POSHAN) திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக ஐநா உலக உணவுத்திட்டம் ‘அக்ஷய பாத்திரம்’ அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது. உலக உணவுத்திட்டமானது (WFP) 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டு உள்ளது. அது பள்ளிகளில் உணவு வழங்குவது மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் பணியாற்றுகிறது.
 • பிரதமர் போஷான் சக்தி நிர்மான் என்பது குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் & பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குனோ பால்பூர் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்திய பிரதேசம் 

இ) கர்நாடகா

ஈ) கேரளா

 • 1950’களிலிருந்து விடுதலை இந்தியாவில் அழிந்துவிட்ட சுமார் 8-12 சிறுத்தைகள், தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து குனோ பால்பூர் தேசிய பூங்கா – மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘இந்தியாவில் சிறுத்தைகளை அறிமுகப்படுத்துவத -ற்கான செயல் திட்டத்தை’ வெளியிட்டுள்ளார்.

9. தனக்கென ஒரு புதிய அரசியலமைப்பை வரைந்து வரும் தென்னமெரிக்க நாடு எது?

அ) சிலி 

ஆ) பிரேஸில்

இ) அர்ஜென்டினா

ஈ) பொலிவியா

 • தென்னமெரிக்க நாடான சிலி தனக்கென ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக, அரசியலமைப்பு அவை அண்மையில் அமைப்பின் அறிமுகத் தலைவர் எலிசா லோன்கானுக்குப் பதிலாக புதிய தலைவராக தொற்றுநோயியல் நிபுணர் மரியா எலிசா குயின்டெரோஸைத் தேர்ந்தெடுத்தது.
 • அகஸ்டோ பினோசேயின் கொடுங்கோன்மை காலத்தில் தயாரிக்கப்பட்ட அதன் முந்தைய மேக்னா கார்ட்டாவை மாற்றுவதற்கு சிலி நாடு முடிவு செய்துள்ளது

10. ‘நரகத்தின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்படும் தர்வாசா வளிப்பள்ளம் அமைந்துள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) இந்தோனேசியா

ஈ) துர்க்மெனிஸ்தான் 

 • தர்வாசா வளிப்பள்ளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முறையைக் கண்டறிவதற்கு வல்லுநர்களுக்கு துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பாங்குலி பெர்டிமுகமடோவ் உத்தரவிட்டுள்ளார். ‘நரகத்தின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்படும் இது ஒரு மிகப்பெரிய இயற்கை எரிவாயு பள்ளமாகும். இது துர்க்மெனிஸ்தானின் தலைநகரமான அஷ்கபாத்தில் இருந்து 260 கிமீட்டர் தொலைவில் உள்ள கரகம் பாலைவனத்தில் அமைந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த எரிவாயு எரிந்து கொண்டிருக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கதக் நடன மேதை பிர்ஜு மகாராஜ் காலமானார்

பிரபல கதக் நடன மேதை பிர்ஜு மகாராஜ் (83) புது தில்லியில் காலமானார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரான அவர் லக்னெள பாணி கல்கா-பிண்டாதின் கரானா பாணி கதக் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பிர்ஜு மகாராஜ் என கலையுலகினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் ப்ரிஜ்மோகன் நாத் மிஸ்ரா என்பதாகும். சத்யஜித் ரேயின் ‘சத்ரஞ்ஜ் கே கிலாடி’ படத்துக்கு இசையமைத்ததுடன் அத்திரைப்படத்தில் இரு பாடல்களைப் பாடியுள்ளார்.

கதக் நடனக்கலைக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு 1986’இல் பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டது. சங்கீத நாடக அகாதெமி விருது, காளிதாஸ் சம்மான், ஆந்திர ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது அவர் பெற்றுள்ளார்.

2. ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு சிறந்த பரிந்துரை: தெற்கு ரயில்வேக்கு முதல் பரிசு, ICF’க்கு 2ஆம் பரிசு அறிவிப்பு

2020-21ஆம் ஆண்டில், இந்திய ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு சிறந்த பரிந்துரைகள் வழங்கியதற்காக, தெற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், சென்னை ICFக்கு இரண்டாம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதையில் மேம்பாட்டு பணிக்காகவும், மின் சிக்கனம், ஆண்டுக்கு `110 கோடி வரை சேமிக்கும் வகையில், மின்சார ரயில் என்ஜின் இயக்கம் குறித்து சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக, தெற்கு ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், `3 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ரயில்வேக்கும் பரிசு தொகை தலா `1.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.

மின்சக்தியை இழப்பின்றி முழுவதுமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டி பரிந்துரைக்கு தெற்கு ரயில்வே மூன்றாவது பரிசுக்கும் தேர்வுசெய்யப்பட்டு `33 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

ICF:

ரயில் பெட்டி தயாரிப்பில், பக்கவாட்டு சுவர் மற்றும் கூரை இணைப்புகளின் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக சென்னை ICF (ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை) அனுப்பிய பரிந்துரைக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோக மாற்றிகள் வாயிலாக மின்சார ரயில் என்ஜினில் இருந்து பெட்டிக்கு மின்தொடா்பு மேம்பாட்டுக்கான பரிந்துரைக்கு கிழக்கு ரயில்வேக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. ICF மற்றும் கிழக்கு ரயில்வேக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் `2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி பார்வை அடிப்படையில் மேம்பாட்டு பரிந்துரைக்காக, மேற்கு ரயில்வேக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வடமேற்கு ரயில்வேயும் மூன்றாம் பரிசுக்கு தேர்வாகியுள்ளது.

3. தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு: ஆய்வில் தகவல்

தொழில் முதலீடுகளுக்குச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலும் 304 திட்டங்களின் மூலமாக `1 லட்சத்து 43,902 கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்

தமிழ்நாடு `36,292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாகப் பெற்றிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும்.

தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் `1 லட்சத்து 7,610 கோடியாகும். `77,892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும், `65,288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலங்கானா மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன என புராஜெக்ட் டுடே நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சில நிறுவனங்களில் டாடா குழுமம், ஒநர தங்ய்ங்ஜ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டி வி எஸ் மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை அடங்கும்.

இந்தியா முழுவதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 7,764 தொழில் திட்டங்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு `12 லட்சத்து 76,679 கோடியாகும்.

4. தமிழகத்தில் கடந்த ஆண்டில் காசநோய் பாதிப்பு 17% அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 82,000 பேர் காச நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடர்பு விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84% பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள்மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்த போது நாடு முழுவதும் 21.38 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், இராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்திருந்தன.

குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 82,352 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 18,016 பேரும், அரசு மருத்துவமனைகளில் 64,336 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020’இல் அந்த எண்ணிக்கை 17% குறைவாக இருந்தது. அதாவது, அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் 70,545 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏறத்தாழ காசநோய்க்கும், கரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டது கூட அந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

5. சமூக ஆர்வலர் சாந்தி தேவி காலமானார்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான சாந்தி தேவி (88) அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

6. இந்தியாவின் ஆப்பிள் ஏற்றுமதி 82% அதிகரிப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்தியாவின் ஆப்பிள் ஏற்றுமதி 82% அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிள் ஏற்றுமதியானது 82% வளர்ச்சியைப்பெற்றுள்ளது. அதேசமயம், பழங்களின் இறக்குமதியானது 3.8% என்ற அளவிலேயே உயர்ந்து உள்ளது. அதன்படி, கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் 86 லட்சம் டாலராக இருந்த ஆப்பிள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் $1.45 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் இதன் ஏற்றுமதி 1.23 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, ஆப்பிள் ஏற்றுமதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அதேசமயம், பழங்களின் இறக்குமதி கடந்த 2014-15’இல் 23.08 கோடி டாலராக இருந்த நிலையில், கடந்த 2020-21-இல் 24 கோடி டாலரை தொட்டுள்ளது. இது, 3.8 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் 82 சதவீதம் சிலி, நியூஸிலாந்து, துருக்கி, இத்தாலி, பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதியில் சிலி 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து (16.45%), துருக்கி (12.43 சதவீதம்), இத்தாலி (10.8%) ஆகிய நாடுகள் உள்ளதாக வர்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்திய வனநிலை அறிக்கை: தமிழ்நாட்டுக்கான பாடங்கள்

அண்மையில் வெளியாகியுள்ள இந்திய வனநிலை அறிக்கை- 2021, நாட்டின் மொத்த நிலப் பரப்பில் பசுமைப் பரப்பானது ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கை (24.6%) தொட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மொத்த நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப் பரப்பாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால், பசுமைப் பரப்பை மதிப்பிடும்போது வனங்கள் மட்டுமின்றி வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தியும் கணக்கில் கொள்ளப்படுகிறது. முந்தைய 2019 மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் நாடு முழுவதும் 2,261 சதுர கிமீ பரப்பு பசுமைப் பரப்பாக மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வனப் பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால், மொத்த நிலப் பரப்பில் இது 21.7% ஆக உள்ளது. முந்தைய மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 0.2% வனப் பரப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த இரண்டு ஆண்டுகளில் வனப் பரப்பானது 55 சதுர கிமீ அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில், வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தி 406 சதுர கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது வருத்தத்தையும் அளிக்கிறது. கஜா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்ததும் மரங்களின் அடர்த்தி குறைந்ததற்கான காரணமாக ஊகிக்கப்படுகிறது.

என்றாலும், வனப் பரப்பைப் போலவே மரங்களின் அடர்த்தி குறித்த விவரங்களையும் மாவட்டவாரியாக இந்திய வனநிலை அறிக்கை தெரிவித்தால் மட்டுமே, மரங்களின் அடர்த்தி குறைந்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதற்கு முன்பே புயல், வெள்ளம், பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களை அடுத்து, புதிதாக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் பேரிடர்க் காலத்தின் பணிகளில் ஒன்றாக மாற வேண்டும். அது மட்டுமின்றி, சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் மரங்கள் நடுவதையும் ஒரு கட்டாய விதிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் வனப் பரப்பு தற்போது 20% என்ற அளவிலேயே உள்ளது என்றாலும் காடுகள் அழிப்பைத் தடுப்பது, வனப் பரப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன. காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வனப் பரப்பின் அளவு அதிகரித்துள்ளது. இடைப்பட்ட இதே ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில், வனப் பரப்பின் அளவு 23 சதுர கிமீ அளவில் குறைந்திருப்பதும் கவனத்துக்குரியது.

சென்னைப் பெருநகரத்தைப் பொறுத்தவரையில், மொத்தப் பசுமைப் பரப்பு ஏறக்குறைய 5 சதுர கிமீ அளவுக்கு அதிகரித்துள்ளது. 2011-ல் 18 சதுர கிமீ ஆக இருந்த சென்னையின் மர அடர்த்திப் பரப்பு, 2021-ல் 22.7 சதுர கிமீ ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானிய வனவியலர் அகிரா மியாவாகியின் வழிமுறைகளைப் பின்பற்றி வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மரத் தொகுதிகளை வளர்த்ததன் காரணமாக சென்னையின் பசுமைப் பரப்பு அதிகரித்துள்ளது. இத்திசையில் மேலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

8. பன்றியின் இதயம் மனிதருக்குப் பொருந்தியது எப்படி?

கடந்த ஜனவரி 7-ல் நவீன மருத்துவம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை செய்துள்ளது. உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான மனித உறுப்புகள் கிடைக்காமல், உலகெங்கும் இந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளையும் மனிதருக்குப் பயன்படுத்த முடியும் எனும் நம்பிக்கையை இது விதைத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார். இன்றுவரை அந்த இதயம் சீராக இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்முறையைச் சொல்வது எளிது. நடைமுறையில் கடினம்.

உதவும் பன்றி உறுப்புகள்

மற்ற விலங்குகளைவிடப் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பொருத்தமானவையாக இவை தேர்வு செய்யப்படுகின்றன. முதன்முதலில் 1838-ல் பன்றியின் ஒளிப்படலம் (Cornea) மனிதக் கண்ணில் பொருத்தப்பட்டது. 1964-ல் சிம்பன்சி குரங்கின் இதயம் மனிதருக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது. 1984-ல் ஆப்பிரிக்க/அரேபியக் குரங்கின் (Baboon) இதயம் ஃபாயி (Fae) எனும் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. அது 21 நாட்களுக்கு உயிரோடு இருந்தது.

பொதுவாக, ‘மாற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சை’யில் (Xenotransplantation) பொருத்தப்படும் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும். அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எதிர்கால நிராகரிப்பைத் தடுக்கத் தடுப்பாற்றல் எதிர்வினையை மட்டுப்படுத்தும் வீரியமான மருந்துகளைப் பயனாளி வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். அதனால்தான் இம்மாதிரியான அறுவைச் சிகிச்சைகள் வேகம் பெறவில்லை. ஆனாலும், சோதனை முயற்சியாகச் சென்ற அக்டோபரில் நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியில் பொருத்தப்பட்ட அதிசயம் நடந்தது.

பன்றியின் சிறுநீரகச் செல்களில் சர்க்கரை வடிவில் ‘ஆல்பா-1’ நொதி இருக்கிறது. மனித உடலில் இது இல்லை. பன்றியிடமிருந்து பெறப்படும் சிறுநீரகத்தில், இந்த நொதியைக் கண்டுகொள்ளும் மனித உடல், இதை அந்நியனாகக் கருதி, மேற்படி உறுப்பை நிராகரித்துவிடுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் ‘சிந்தெடிக்ஸ் ஜீனாமிக்ஸ்’ நிறுவனம், மரபணு மாற்று உறுப்புகளை வளர்ப்பதில் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் ‘ஆல்பா-1’ நொதி இல்லாத பன்றியை மரபணு மாற்று முறையில் வளர்த்துக் கொடுத்தது. அதன் சிறுநீரகத்தை மூளை இறப்பு நோயாளிக்கு நியூயார்க் மருத்துவர்கள் பொருத்தினார்கள். அதனால், அதில் பிரச்சினை எழவில்லை. இதை ஒரு மைல்கல் நிகழ்வாக மருத்துவ உலகம் பார்த்தது. இப்போது பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் மேரிலேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள்.

சாத்தியமானது எப்படி?

பன்றிகளில் மரபணு வரிசையைத் துல்லியமாக மாற்றியமைக்கும் ஆராய்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ரெவிவிகார்’ (Revivicor). இந்த நிறுவனத்தினர், பன்றி செல்களில் உறுப்பு நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கும் 4 வகை மரபணுக்களை ‘கிரிஸ்பர்’ (CRISPR/Cas9) எனும் மரபணுச் செதுக்கியால் செதுக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றனர். அடுத்து, பன்றி செல்லின் மரபணு வரிசையில் புதிதாக 6 மரபணுக்களைப் புகுத்திவிடுகின்றனர்.

பிறகு, பன்றியின் கருமுட்டையிலிருந்து மரபணுவை நீக்கிவிட்டு, அதனுள் மேற்சொன்ன மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ள பன்றி செல்லைக் கலந்துவிடுகின்றனர். இப்போது இது கருக்கோளமாகிறது (Zygote). அதை ‘வாடகைத் தாய்’ பன்றியின் கருப்பையில் பதித்துவிடுகின்றனர். அதில் வளர்கருவாக (Embryo) வளர்ந்து சிசுவாகி 114 நாட்களில் மரபணு மாற்றமுள்ள பன்றிக்குட்டி பிறக்கிறது. படியாக்கம் (Cloning) மூலம் டோலி ஆடு பிறந்ததுபோல்தான் இது. இதன் பலனாக, மனித உடல் இந்த உறுப்புகளை அந்நியனாகக் கருதும் வாய்ப்பு குறைந்துவிட, உறுப்பு நிராகரிப்பு தவிர்க்கப்படுகிறது.

சாதாரணமாகவே பன்றிகளின் மரபணுக்களில் ரீட்ரோ வைரஸ்கள் வசிப்பதுண்டு. இவை உறுப்பு மாற்றத்துக்குப் பிறகு பயனாளிக்குத் தொற்றை உண்டாக்கி, உறுப்பு நிராகரிப்பைப் பூதாகரமாக்கும். பன்றியின் மரபணுக்களிலிருந்து 12 வகையான ரீட்ரோ வைரஸ்களை நீக்கியதன் மூலம் இது சரிசெய்யப்படுகிறது. இப்படி, ‘ரெவிவிகார்’ நிறுவனம் தயாரித்தளித்த மரபணு மாற்றுப் பன்றியின் இதயத்தையே பென்னட்டுக்கு மேரிலேண்ட் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

உறுப்பு நிராகரிப்பைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்றை பென்னட் இப்போது பயன்படுத்துகிறார். இதுவரை அந்த இதயத்தை அவரது உடல் நிராகரிக்கவில்லை. அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள பன்றியின் இதயம் மனித உடலுக்கு அந்நியமாகத் தெரியாத அளவுக்கு மரபணு மாற்றமுறையில் வளர்க்கப்பட்டது என்பதால், இந்த மருந்து இனியும் அவருக்குத் தேவைப்படுமா என்பது போகப்போகவே தெரியும்.

இந்திய மருத்துவரின் சாதனையும் வேதனையும்

பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அசாம் மாநில மருத்துவர் ராம் பருவா நிரூபித்திருக்கிறார். 1997, ஜனவரி 1-ல் 32 வயதான ஒருவருக்குப் பன்றியின் இதயத்தை அவர் பொருத்தினார். அந்த நோயாளி 7 நாட்களுக்கு உயிருடன் இருந்தார். அவருக்குப் பல தொற்றுகள் இருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அரசிடம் இந்த சிகிச்சைக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காக உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் பருவா கைதுசெய்யப்பட்டார்.

வரலாறு படைக்குமா?

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் இதயச் செயலிழப்பால் 50 ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர். இவர்களில் அதிகபட்சம் 15 பேருக்குத்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் பேருக்குத்தான் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கிறது. வருடத்துக்கு 30 ஆயிரம் பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1,500 பேருக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. இந்த நிலையில் மரபணு மாற்றுப் பன்றிகளின் உள் உறுப்புகளை மனிதருக்கும் பயன்படுத்துவது சாத்தியமானால், அனுதினமும் உயிருக்குப் போராடிவரும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காக்கப்படும். நவீன மருத்துவத்தில் புதிய வரலாறு படைக்கப்படும்.

9. சேதி தெரியுமா?

ஜன.1: இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள உயர் நீதிமன்றம் காகித பயன்பாடு இல்லாத நீதிமன்றமாக மாறியது. அங்கே ஸ்மார்ட் நீதிமன்ற அறைகள் திறக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது.

ஜன.3: பிரான்ஸில் ‘ஐஎச்யு பி.1.640.2’ என்று பெயரிடப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒமைக்ரானைவிட அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது.

ஜன.4: கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாத செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு விசா மறுத்தது.

ஜன.5: பஞ்சாப்பில் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹுசைனிவாலாவுக்குச் சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதால் சர்ச்சையானது.

ஜன.5: தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 7,11,755 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1,78,517 வாக்காளர்களும் உள்ளனர்.

ஜன.6: இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திறக்கப்பட்டது.

ஜன.6: தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாகக் கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஜன.7: மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலாவில் பாலம் கட்டுவதற்கு இந்தியா – நேபாளம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜன.8: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீட் விலக்குக் கோரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ஜன.8: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

ஜன.8: 1983ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கூட்டுறவு சங்கச் சட்டத்தின் மீதான திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜன.9: போர்க் கப்பலிலிருந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன சூப்பா்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஜன.10: அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாகக் கறுப்பின பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது.

ஜன.10: சென்னையைச் சேர்ந்த 14 வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

ஜன.11: பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்தது.

ஜன.11: மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட் (57) என்பவருக்குப் பொருத்தி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்தனர்.

ஜன.12: தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன, 1,450 மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்பட்டன.

ஜன.13: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) புதிய தலைவராக S சோம்நாத் நியமிக்கப்பட்டார்.

1. India set a bilateral trade target of $50 billion before 2030, with which country?

A) South Korea 

B) USA

C) Japan

D) UAE

 • India and South Korea set a bilateral trade target of USD 50 billion before 2030. South Korea’s Trade Minister Yeo Han–Koo and Indian Commerce & Industry Minister Piyush Goyal held bilateral talks in New Delhi.

2. ‘National Innovation Week’ is organised in which month in India?

A) January 

B) February

C) March

D) April

 • Ministry of Education (MoE), AICTE, and Ministry of Commerce & Industry (DPIIT) is organising ‘National Innovation Week’ from January 10 to 16, 2022. During the innovation week, various initiatives undertaken by these agencies to spread awareness to promote innovation and entrepreneurship will be highlighted.
 • An e– symposium on ‘Building Innovation Ecosystem in educational institutions was held by the Ministry of Education.

3. Which payments bank has been granted the status of a Scheduled bank by the Reserve Bank of India (RBI)?

A) Airtel Payments Bank 

B) Aditya Birla Payments Bank

C) NSDL Payments Bank

D) Jio Payments Bank

 • The Reserve Bank of India (RBI) has recently granted the status of a scheduled bank to Airtel Payments Bank. After the status of a scheduled bank, Airtel Payments Bank can now apply for Government–issued requests for primary auctions. It can also take up central and state government–level businesses.

4. Which Central Asian country’s government resigned recently after massive protests due to fuel price increase?

A) Ministry of Railways 

B) Ministry of Environment, Forest and Climate Change

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of MSME

 • Kazakhstan President Kassym–Jomart Tokayev accepted the government’s resignation, after nation–wide protests against fuel price increase. Thousands of citizens were involved in the protests and a state of Emergency was declared earlier by the Government.

5. Which Indian state is set to host the next edition of Khelo India Games in 2023?

A) Tamil Nadu

B) Himachal Pradesh

C) Karnataka 

D) Goa

 • Karnataka Minister for Youth Empowerment and Sports announced that Karnataka will host the next Khelo India Games in 2023. He also announced that over 75 sports students are being trained in the State to take part in the next Olympics. The 2021 edition of Khelo India is postponed due to the pandemic and is to be held in Haryana.

6. What was India’s target in installed electricity capacity from non–fossil energy sources, to be achieved by 2030?

A) 30%

B) 40% 

C) 50%

D) 100%

 • As a part of Nationally Determined Contributions (NDCs) at COP–21, India committed to achieve 40 per cent of its installed electricity capacity from non–fossil energy sources by 2030. India’s Ministry of New and Renewable Energy (MNRE) has said that India has achieved its non–fossil fuel–based energy target in November 2021.
 • At present, India has over 40.1 percent of the total installed energy capacity of 392.01 GW.

7. Which organisation has partnered with Akshaya Patra Foundation for effective implementation of PM–POSHAN scheme?

A) IMF

B) World Bank

C) United Nations – WFP 

D) UNICEF

 • The United Nations World Food Programme (WFP) has joined hands with the Akshaya Patra Foundation for effective implementation of Pradhan Mantri Poshan Shakti Nirman (PM–POSHAN) scheme. The World Food Programme has more than 6 decades of experience in supporting school feeding and improving nutrition among children.
 • Pradhan Mantri Poshan Shakti Nirman is Government of India’s flagship programme to improve nutritional outcomes for children, pregnant women and lactating mothers.

8. Kuno Palpur National Park, which was seen in the news recently, is located in which state?

A) Tamil Nadu

B) Madhya Pradesh 

C) Karnataka

D) Kerala

 • Around 8 to 12 Cheetahs, which became extinct in independent India since 1950s, are set to be translocated from South Africa, Namibia and Botswana to Kuno Palpur National Park – Madhya Pradesh. In this regard, the union minister for Environment, Forests and Climate Change Bhupender Yadav has released an ‘Action Plan for Introduction of Cheetah in India’.

9. Which South–American country is drafting a new Constitution?

A) Chile 

B) Brazil

C) Argentina

D) Bolivia

 • South American nation Chile is in the process of drafting a new constitution for the nation. In this regard, the constitution assembly has recently elected epidemiologist Maria Elisa Quinteros as the new President to replace the body’s inaugural president Elisa Loncon.
 • The country has decided to replace its previous Magna Carta which was produced during the dictatorship of Augusto Pinochet.

10. Darvaza gas crater, also known as the ‘Gateway to Hell’, is located in which country?

A) USA

B) Russia

C) Indonesia

D) Turkmenistan 

 • Turkmenistan President Gurbanguly Berdymukhamedov has ordered experts to find a method to extinguish a fire in the Darvaza gas crater. Also known as the ‘Gateway to Hell’, it is a huge natural gas crater.
 • It is located in the Karakum desert, 260 kilometres away from Turkmenistan’s capital, Ashgabat. The Gas Crater has been burning for the last 50 years.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button