Tnpsc

18th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1.செயல்பாட்டிலுள்ள எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை அமைந்துள்ள நாடு எது?

அ) இந்தோனேசியா

ஆ) ஆஸ்திரேலியா

இ) கனடா

ஈ) கென்யா

  • மெராபி எரிமலை என்பது இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாண -த்திற்கும் யோககர்த்தா பிராந்தியத்திற்கும் இடையில் அமைந்துள்ள செயல்பாட்டில் உள்ள ஒரு எரிமலையாகும். மிகவும் கொந்தளிப்பு மிக்க எரிமலையான இது கடந்த 1548ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெடித்து வருகிறது. இவ்வெரிமலை தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியது.

2. ஜூன்.5 அன்று நடப்பாண்டுக்கான (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை நிகழ்த்திய நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) பாகிஸ்தான்

ஈ) ரஷ்யா

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முதலில் கடந்த 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. “Reimagine – Recreate – Restore” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். நடப்பாண்டின் (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை பாகிஸ்தான் நடத்தியது.

3. அண்மையில் தொடங்கப்பட்ட ‘E-100’ என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்துடன் தொடர்புடையது எது?

அ) மின்னாளுகை

ஆ) மின்னணு இரசீது

இ) எத்தனால் உற்பத்தி

ஈ) மின்னுற்பத்தி

  • உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு புனேவில் பிரதமர் மோடி E-100 என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், நாடு முழுவதும் எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான ஒரு வலையமைப்பை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘இந்தியாவில் 2020-2025இல் எத்தனால் கலப்பிற்கான செயல்திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையை’ பிரதமர் வெளியிட்டார். 2025ஆம் ஆண்டுக்குள், 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை அடைய இந்தியா தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

4. அண்மையில் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்ட ரைமோனா காப்புக்காடு அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) உத்தர பிரதேசம்

ஈ) கேரளா

  • அஸ்ஸாம் மாநிலத்தின் போடோலாந்து பிராந்தியத்திலுள்ள ரைமோனா காப்புக்காடு அம்மாநிலத்தின் ஆறாவது தேசியப்பூங்காவாக தரமுயர்த்தப் -பட்டுள்ளது. கசிரங்கா, மனாஸ், நமேரி, ஒராங் மற்றும் திப்ரு-சைகோ
    -வா ஆகியவை அஸ்ஸாமில் உள்ள பிற 5 தேசியப்பூங்காக்களாகும்.
  • வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குறிப்பாக தங்கநிற மந்தி, படைச்சிறுத்தை, இந்தியக்காட்டெருது மற்றும் இருவாச்சி ஆகியவ -ற்றிற்கு பிரபலமானதாகும் இந்தப் பூங்கா.

5. பன்னாட்டு நிறுவனங்கள் மீதான குறைந்தபட்ச உலகளாவிய வரியை அறிவித்துள்ள பன்னாடுகளுக்கு இடையேயான குழு எது?

அ) BRICS

ஆ) G7

இ) ஐரோப்பிய ஒன்றியம்

ஈ) G20

  • ஏழு மேம்பட்ட பொருளாதாரங்களின் குழுவானது (G7) அண்மையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது “குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதம்” ஆக இருக்கும். மேலும் அதன்கீழ் குறைந்தபட்ச வரம்பு 15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. G7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப்பேரரசு மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான ஓர் அமைப்பு ஆகும்.

6. “I-Familia” என்ற தரவுத்தளத்தை தொடங்கிய அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) இன்டர்போல்

ஈ) CBI

  • பன்னாட்டு சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் “ஐ-பேமிலியா” என்ற உலகளாவிய தரவுத்தளத்தை தொடங்கியுள்ளது. இத்தரவுத்தளம் குடும்ப உறுப்பினர்களின் DNA’ஐப் பயன்படுத்தி காணாமல் போனவர்களை அடையாளங்காணும் நோக்கங்கொண்டது.
  • DNA தகவல்கள்கொண்ட பிரத்யேக உலகளாவிய தரவுத்தளம், போனபர்டே எனப்படும் DNA’ஐப் பொருத்திப் பார்க்கும் மென்பொருள் மற்றும் இன்டர்போல் உருவாக்கிய விளக்க வழிகாட்டுதல்கள் ஆகிய மூன்று கூறுகளை ‘ஐ-பேமிலியா’ கொண்டுள்ளது.

7. BIMSTEC’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) டாக்கா

ஆ) புது தில்லி

இ) பெய்ஜிங்

ஈ) கொழும்பு

  • Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா -வின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஓரமைப்பாகும். இதன் தலைமைய -கம் வங்காளதேசத்தின் டாக்காவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு, முதன்முதலில், 1997ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 24ஆவது BIMSTEC நாள், 2021 ஜூன்.6 அன்று கொண்டாடப்பட்டது.

8. எத்தனை அளவுருக்களின் அடிப்படையில், செயல்திறன் தரவரிசைக்குறியீடு அல்லது PGI 2019-20 வெளியிடப்பட்டது?

அ) 5

ஆ) 10

இ) 25

ஈ) 70

  • செயல்திறன் தரவரிசைக்குறியீடு அல்லது PGI 2019-20 என்பது இந்திய மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களின் கல்வி தொடர்பான குறியீடு ஆகும். இதனை வெளியிட மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்து -ள்ளது. இக்குறியீடு, 70 அளவுருக்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இக்குறியீட்டின்கீழ், பஞ்சாப், சண்டிகர், தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகியவை 2019-20ஆம் ஆண்டி -ற்கான குறியீட்டில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

9. இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2021’இன்படி, 17 நீடித்த வளர்ச் -சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 67

ஆ) 89

இ) 117

ஈ) 123

  • இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2021 என்பது டௌன் டூ எர்த் இதழின் வருடாந்திர வெளியீடு ஆகும். இந்த அறிக்கையின்படி, 2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதிலும், அடைவதிலும் இந்தியா 117ஆவது இடத்திலுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 115ஆவது இடத்திலிருந்தது. பட்டினியில்லாமை, பாலின சமத்துவம்போன்ற முதன் -மை சவால்களின் காரணமாக ஈரிடங்களை இந்தியா இழந்துள்ளது.

10. விருச்சிக விண்மீன் குழாம், கோடைத்திருப்புநிலை மற்றும் ஸ்ட் -ராபெரி நிலவு ஆகிய பல்வேறு விண் நிகழ்வுகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிற மாதம் எது?

அ) ஜூன்

ஆ) ஜூலை

இ) ஆகஸ்ட்

ஈ) செப்டம்பர்

  • ஜூன்.10 அன்று சூரிய கிரகணமும், ஜூன்.20-21 ஆகிய தேதிகளில், வசந்த காலத்தின் வானியல் ரீதியிலான முடிவும் கோடைகாலத்தின் தொடக்கமும் ஏற்படும். இது நீண்டபகலைக்கொண்ட காலமாக இருக்கும். கோடைகால அந்திகளில், தென்வானம் முழுவதும் விண்மீன்களின் குழுவாகக் காணப்படுகிறது. அது விருச்சிக விண்மீன் குழாம் ஆகும். அது ஜூன் மாதத்தில் காணப்படுகிறது. ஜூன் முழு நிலவு, ‘ஸ்ட்ராபெரி நிலவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

1. The Merapi volcano, which is one of the most active volcanoes, is located in which country?

A) Indonesia

B) Australia

C) Canada

D) Kenya

  • Mount Merapi, is an active stratovolcano which is located in Indonesia, between the province of Central Java and the Special Region of Yogyakarta – Indonesia. This is considered to be the most volatile volcanoes and has been erupting regularly since 1548. Presently, the volcano has started to erupt again.

2. Which is the host country for this year’s world Environment Day celebrations on June 5?

A) USA

B) China

C) Pakistan

D) Russia

  • Every year, 5th of June is observed as the World Environment Day by the United Nations. This day first came into being in the year 1972. The theme for this year is “Reimagine – Recreate – Restore” and the Global Host for 2021 World Environment Day is Pakistan.

3. E–100 pilot project, which was launched recently, is associated with?

A) E–governance

B) E–Receipt

C) Ethanol Production

D) Electricity Production

  • Prime Minister Narendra Modi launched the E–100 pilot project in Pune to mark the World Environment Day. This project aims to set up a network for production and distribution of ethanol across the country.
  • The Prime Minister released the ‘Report of the Expert Committee on Road Map for ethanol blending in India 2020–2025’. He also said India is resolved to meet target of 20% ethanol blending by 2025.

4. Raimona reserve forest, which was recently declared as a national park, is situated in which state?

A) Assam

B) Madhya Pradesh

C) Uttar Pradesh

D) Kerala

  • The Raimona reserve forest in Bodoland Territorial Region (BTR) of Assam, has been upgraded as the sixth national park of the state. The other five national parks in Assam are Kaziranga, Manas, Nameri, Orang and Dibru–Saikhowa. This Park is famous for its rich flora and fauna especially the Golden langur, clouded leopards, Indian gaur and Hornbill.

5. Which intergovernmental group has announced the minimum global tax on multinational companies?

A) BRICS

B) G7

C) European Union

D) G20

  • The Group of seven (G7) advanced economies has recently made an announcement on taxing multinational companies.
  • This would be the “Minimum global tax rate” and its lower floor limit has been fixed at 15%. G7 is an intergovernmental organization comprising Canada, France, Germany, Italy, Japan, the United Kingdom and the United States.

6. Database named “I–Familia” has been launched by which organization?

A) IMF

B) World Bank

C) INTERPOL

D) CBI

  • The international law enforcement agency Interpol has launched a global database named “I–Familia”. This database is aimed to identify missing persons, using the DNA of family members. I–Familia has three components namely a dedicated global database on DNA profiles, DNA matching software called Bonaparte and interpretation guidelines developed by Interpol.

7. Where is the headquarters of BIMSTEC located?

A) Dhaka

B) New Delhi

C) Beijing

D) Colombo

  • The Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) is an intergovernmental organization comprising seven nations of South Asia and Southeast Asia.
  • It is headquartered in Dhaka, Bangladesh. This organization was first established in the year 1997. The 24th BIMSTEC day was celebrated on June 6th 2021.

8. Based on how many parameters, the Performance Grading Index or PGI 2019–20 is released?

A) 5

B) 10

C) 25

D) 70

  • The Performance Grading Index or PGI 2019–20, which is an index to grade Indian states and Union Territories on Education, has been approved to be launched by the Union Ministry of Education.
  • This index is based on a set of 70 parameters. Under this index, Punjab, Chandigarh, Tamil Nadu, Andaman & Nicobar Islands and Kerala occupy the top 5 positions for the year 2019–20.

9. As per the State of India’s Environment Report 2021, what is India’s rank on achievement of 17 Sustainable Development Goals?

A) 67

B) 89

C) 117

D) 123

  • The State of India’s Environment Report 2021 is an annual publication of the Down To Earth magazine. As per the report, India has been ranked at 117th position in implementing and achieving the Sustainable Development Goals (SDG) 2030. Last year India was ranked at 115 and now it has slipped by 2 positions due to major challenges faced in ending hunger, gender equality etc.

10. Scorpius constellation, Summer Solstice and Strawberry Moon are the various space events, expected to occur in which month?

A) June

B) July

C) August

D) September

  • On June 10th, a Solar Eclipse is to be witnessed while on June 20–21, Summer solstice, the astronomical end of spring, and the beginning of summer will occur.
  • This will be the day with the longest period of daylight. On the summer evenings, a curved grouping of stars is noticed across the southern sky, with red beacon. This is the constellation Scorpius, which can be observed in June. The full Moon of June is also called as ‘Strawberry Moon’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!