18th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. கலாநாமக் அரிசி விழா நடைபெறவுள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) உத்தர பிரதேசம்

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

 • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘கலாநாமக் அரிசி விழா’வை நடத்துவதாக அறிவித்தார். உபியில் பயிரிடப்படும் ‘கலா நாமக்’ அரிசி, அம்மாநிலத்தின் சில கீழைமாவட்டங்களின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பாக உள்ளது. இதற்கு முன்னர் ஜான்சியில் ஸ்ட்ராபெரி விழா மற்றும் லக்னோவில் வெல்லம் திருவிழா ஆகியவற்றை உபி மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.

2. “India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது?

அ) ASSOCAM

ஆ) FICCI

இ) CAIT

ஈ) NASSCOM

 • இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பும் (FICCI) பாஸ்டன் ஆலோசனை குழுமமும் இணைந்து “India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டன. இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப தொழிற்துறையின் மொத்த மதிப்பீடு $50 முதல் $60 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நிதியியல் தொழினுட்ப தொழிற்துறையின் மதிப்பீடு $150-160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என இது கூறுகிறது.

3. வரைவு மின்னணு வணிகக் கொள்கையை வெளியிடவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இ) கனரக தொழில்துறை அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

 • வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தொழில் ஊக் -குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையானது வரைவு மின்னணு வணிகக்கொள்கையை வெளியிடவுள்ளது. தொழிற்துறை வளர்ச்சியில் தரவு பயன்பாட்டிற்கான கொள்கைகளை இந்தக்கொள்கை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • அங்கீகரிக்கப்படாதோர் தரவை தவறாகப் பயன்படுத்துவதையும் அணுகு -வதையும் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட இரயில் முனையம் அமையவுள்ள நகரம் எது?

அ) சென்னை

ஆ) பெங்களூரு

இ) மதுரை

ஈ) அகமதாபாத்

 • இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் முனையமானது பெங்களூரு நகரத்தில் விரைவில் செயல்படவுள்ளது. இந்த இரயில் முனையத்திற்கு மூத்த கட்டுமான பொறியாளர், ‘இந்திய மாமணி’ சர் M விஸ்வேஸ்வரயா -வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புதிய ரயில் முனையம், நகரத்தின் பயப்பனஹள்ளியில் திட்டமிடப்பட்டுள்ளது. `314 கோடி செலவில் இந்தப் புதிய இரயில் முனையம் கட்டப்பட்டுள்ளது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘கார்பன் எல்லை ஒப்பந்தங்களை’ முன்மொழிந்த அமைப்பு எது?

அ) G7

ஆ) G20

இ) QUAD

ஈ) ஐரோப்பிய ஒன்றியம்

 • ஐரோப்பிய ஆணையமானது கடந்த 2020 டிசம்பரில் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தை வெளியிட்டது. மேலும் முதல் ஐரோப்பிய காலநிலை சட்டத்தை முன்மொழிவதற்கு 2021 மார்ச்சை காலக்கெடுவாகவும் நிர்ணயம் செய்தது. ‘கார்பன் எல்லை ஒப்பந்தத்தை’ செயல்படுத்தும் திட்டங்களை இந்த ஆவணம் சிறப்பித்துக்காட்டுகிறது.

6. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தர மேலாண்மைக்கா -ன அரசாங்க ஆணையத்தின் தலைவர் யார்?

அ) இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ்

ஆ) MM குட்டி

இ) சித்தார்த்த மொகந்தி

ஈ) அருந்ததி மெக்

 • MM குட்டி தலைமையிலான இந்திய அரசின் “தேசிய தலைநகர பிராந்தி -யத்தில் காற்றின் தரமேலாண்மைக்கான ஆணையம்” அது அமைக்கப் -பட்ட 5 மாதகாலங்களுக்குள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம், கடந்த 2020 அக்டோபரில் ஓர் அவசர ஆணைமூலம் அமைக்கப்பட்டது. அண்மையில் இந்த அவசர ஆணை காலவதியானதை அடுத்து இந்த ஆணையம் கலைக்கப்பட்டது.

7. “When God is a Traveller” என்ற கவிதைத்தொகுப்பை எழுதியவர் யார்?

அ) ஹரீஷ் மீனாட்சி

ஆ) அருந்ததி சுப்பிரமணியம்

இ) அனாமிகா

ஈ) R S பாஸ்கர்

 • “When God is a Traveller” என்ற கவிதைத் தொகுப்பை இந்த ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது வென்ற கவிஞர் அருந்ததி சுப்பிரமணியம் எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற 20 எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
 • ஏழு கவிதை நூல்கள், நான்கு நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஓர் அனுபவ நூல் என மொத்தம் இருபது மொழிகளில் வெளியான இருபது நூல்கள் சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

8. ’பை’ நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 14

ஆ) மார்ச் 15

இ) மார்ச் 16

ஈ) மார்ச் 17

 • ‘பை’ நாள் என்பது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண் -டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.14ஆம் தேதி ‘பை’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14’ஐக்குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π’ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

9. வன்வாசி சமாகம் என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் அவையாகும்?

அ) மத்திய பிரதேசம்

ஆ) உத்தர பிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

 • உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், வன்வாசி சமாக -ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக இந்தியக்குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அப்போது, சேவா குஞ்ச் ஆசிரமத்தின் புதிய கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். அப்பள்ளி மற்றும் விடுதியின் கட்டடப்பணிகளை NTPC மேற்கொண்டது.

10. கலாச்சார அமைச்சரின் தலைமையில் அடுத்த ஈராண்டுகளுக்கு எந்த இந்திய ஆற்றைப்பற்றி ஆராய ஆலோசனைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது?

அ) சரசுவதி

ஆ) சரயு

இ) மகாநதி

ஈ) நர்மதை

 • அடுத்த ஈராண்டுகளுக்கு புராணகாலத்தில் இருந்ததாக நம்பப்படுகிற சரசுவதி ஆற்றைப்பற்றி ஆய்வதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக ஆலோசனைக்குழுவை மத்திய அரசு மறுகட்டமைத்துள்ளது.
 • 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அமைத்த முந்தைய குழுவின் காலம் 2019’இல் முடிவடைந்தது. 27 பேர்கொண்ட குழுவில் பல்வேறு அமைச்சகங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் அடங்குவர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ரூ.17 இலட்சத்தில் சிறப்பு செயலாக்கக் கண்காணிப்பு வாகனம்: போக்குவரத்து செயலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டறிவதற்கான உபகரணங் -கள் பொருத்தப்பட்டு, `17 இலட்சம் மதிப்பிலான சிறப்பு செயலாக்கக் கண் -காணிப்பு வாகனம் உருவாக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 6 வகை விதிமீறல்களுக்கு, வாகன ஓட்டிகள் மீது 1 இலட்சத்து 8,257 குற்றக் குறிப்பாணைகள் வழங்கப்பட்டு, அபராதமாக `44.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விதிமீறல்களைக் கண்காணிக்கும் பொருட்டு, போக்குவரத்துத் துறையில் செயலாக்கப் பிரிவுக்கென, சாலைப்பாதுகாப்பு நிதியிலிருந்து புதிய சிறப்பு செயலாக்க கண் -காணிப்பு வாகனம், சுமார் `17 இலட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சிறப்பம்சங்கள்: இதில், வாகன வேக அளவீட்டுக் கருவி, மது அருந்தியவர்களைக் கண்டறிவதற்கான சுவாச பகுப்பாய்வு கருவி, வாகனத்தின் ஒலி அளவைப் பதிவு செய்யும் கருவி, தானியங்கி வாகன பதிவெண் கண்டறியும் கருவி, வாகனக் கண்ணாடியில் பிலிமில் ஒளி ஊடுருவும் அளவை அளக்கும் கருவி, 360 டிகிரியில் சுழலும் விதிமீறல் கண்காணிப்பு விடியோ கேமரா ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

2. இந்திய இராணுவத்தின் புதிய DGMOஆக பி.எஸ். ராஜு விரைவில் பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக தற்போது இருந்துவரும் பி. எஸ். ராஜு விரைவில் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனராக (DGMO) பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து அவர் இதுவரை தான் கவனித்து வந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பாதுகாக்கும் ராணுவத்தின் முக்கியப் பிரிவான 15 கார்ப்ஸ் பிரிவை லெப்டினென்ட் ஜெனரல் டி.பி. பாண்டேவிடம் புதன்கிழமை ஒப்படைத்தார். அவருக்கான பிரிவுபசார விழா ஸ்ரீநகரில் இயங்கும் 15 கார்ப்ஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பி.எஸ். ராஜு பேசுகையில், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து நிலை அதிகாரிகள், காவல்துறையினர், மத்திய ஆயுத துணை ராணுவப் படையினர், ஜம்முவில் அமைதி நிலவ ஒத்துழைத்த மக்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

ராணுவ அதிகாரிகள் பேசுகையில், லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ். ராஜு முன்னர் யூரி பிரிகேட் கமாண்டராகவும், விக்டர் படையின் ஜி.ஓ.சி.யாகவும், சினார் கிராப்ஸின் ஜி.ஓ.சி.யாகவும் பணிபுரிந்தபோது போர் நடவடிக்கைகளில் உயர் தொழில்முறை தரத்தையும், நடத்தை நெறிமுறைகளையும் வலுப்படுத்தி படைகளை நிறுவனமயமாக்கினார். இதனாலேயே அவர் இந்திய ராணுவத்தின் உயர் பொறுப்பான ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக (டி.ஜி.எம்.ஓ.) பதவியேற்கவுள்ளார் என்று பாராட்டினர். காஷ்மீரில் அமைதி நிலவ பி.எஸ். ராஜூவின் பங்களிப்பைப் பாராட்டி அண்மையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அவருக்கு மதிப்புமிக்க உத்தம யுத்த சேவா (யு.ஒய்.எஸ்.எம்.) பதக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3. அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு நடவடிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பதில் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களது வாழ்க்கை நிலை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து சென்றுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில் விவரம்:

நாட்டில் 2017-18-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமைப்பு ரீதியாகவும், அமைப்பு சாரா துறை ரீதியாகவும் சுமார் 47 கோடி பேர் பணியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதில், 9 கோடி பேர் அமைப்பு ரீதியாகவும், 38 கோடி பேர் அமைப்பு சாரா பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலகட்டத்தில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். இந்தக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1.14 கோடி பேர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 72 ஆயிரம் பேர் வெளி மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்திருந்தனர். இவர்கள் கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, தமிழகம் திரும்பியுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

4. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு: எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய அரசு

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த மாநிலத்தில் உள்ள இந்திய குடிமக்களை கண்டறிவதற்கு தயாரிக்கப்பட்ட அந்தப் பட்டியலில் தங்கள் விவரங்களை இணைப்பதற்கு 3,30,27,661 பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் 19.06 லட்சம் பேரின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்களின் இந்திய குடியுரிமை கேள்விக்குள்ளானது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணிகள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு தழுவிய அளவில் தயாரிப்பது குறித்து மத்திய அரசு தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘குடியுரிமைச் சட்டம் 1995-இல் தடுப்புக் காவல் மையங்கள் தொடர்பாக எந்தப்பிரிவும் இல்லை. மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் தேவைக்கேற்ப தடுப்புக் காவல் மையங்களை அமைக்கின்றன. தங்கள் சிறை தண்டனைக் காலத்தை நிறைவு செய்த சட்டவிரோத குடியேறிகள், வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த தேசங்களுக்கு நாடு கடத்தும்போது தேவைப்படும் பயண ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில், அவர்கள் தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்படுகின்றனர்’ என்றார்.

5. 6.5% கரோனா தடுப்பூசிகள் வீணடிப்பு: மத்திய அரசு

நாட்டில் சராசரியாக 6.5% கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் புதன்கிழமை கூறியது: தெலங்கானா, ஆந்திரம், உத்தர பிரதேசம், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிக அளவிலான கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வீணடிக்கப்படும் தடுப்பூசிகள் நாடு முழுவதும் சராசரியாக வீணடிக்கப்படும் 6.5% தடுப்பூசிகளைவிட அதிகம். அதிகபட்சமாக தெலங்கானாவில் 17.6% தடுப்பூசிகளும், ஆந்திரத்தில் 11.6% தடுப்பூசிகளும் வீணடிக்கப்படுகின்றன.

தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை வெகுவாக குறைக்க வேண்டும். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவது குறைந்தால், அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அர்த்தம். அதன் மூலம் கரோனா தீநுண்மி பரவலை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

இந்தியாவின் பங்கு 36%:

உலக அளவில் கடந்த 15-ஆம் தேதி 83.4 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 36% தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டன. இந்தியாவில் தினந்தோறும் சராசரியாக 13,12,215 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

வட இந்தியாவில் பாதிப்பு அதிகம்: கடந்த 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள சுமார் 70 மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 17 மாநிலங்களில் உள்ள 55 மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100% முதல் 150% வரை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான மாவட்டங்கள் வட மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் வாரந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 43%-மும், வாரந்தோறும் பலியாவோரின் எண்ணிக்கை சுமார் 37%-மும் அதிகரித்துள்ளது என்றார்.

6. வங்கதேசத்தில் சுதந்திர தினபொன் விழா கொண்டாட்டம் தொடக்கம்

வங்கதேசத்தில் சுதந்திர தின பொன் விழா, “வங்கபந்து” ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கியது. பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கேதசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும்வகையில் பொன்விழா, தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தின நூற்றாண்டு விழா ஆகியவை 10 நாள்கள் கொண்டாடப்படவுள்ளன. இதில், பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி டாக்காவுக்கு வந்தார். அவரை வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது வரவேற்றார்.

7. டி20 தரவரிசை: கோலி முன்னேற்றம்

ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் முன்னேறி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

அவர் 744 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார். டி20 தொடரின் 2 மற்றும் 3ஆம் ஆட்டங்களில் அருமையாக விளையாடியதன் அடிப்படையில் அவர் இம்முன்னேற்றத்தைக்கண்டுள்ளார். தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் சோபிக்காமல் போனபோதும் லோகேஷ் ராகுல் 771 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஷ்ரேயஸ் ஐயர் 32 இடங்கள் ஏற்றம் கண்டு 31ஆவது இடத்துக்கும், ரிஷப் பந்த் 30 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்துக்கும் வந்துள்ளனார். 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வேரூன்றிய ஜோஸ் பட்லர் 5 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடன் துணையாக நின்ற ஜானி பேர்ஸ்டோ 2 இடங்கள் ஏற்றம் கண்டு 14ஆவது இடத்தை எட்டியுள்ளார். ஜேசன் ராய் 4 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பௌலர்கள் பிரிவில் வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்துக்கும், ஷர்துல் தாக்குர் 14 இடங்கள் முன்னேறி 27ஆவது இடத்துக்கும், புவனேஷ்வர் குமார் 7 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 43 இடங்கள் ஏற்றம் கண்டு 34ஆவது இடத்துக்கும், மார்க் வுட் 59 இடங்கள் முன்னேறி 39ஆவது இடத்துக்கும், சாம் கரன் 41 இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

8. ஒருநாள் தொடர்: கடைசி ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய மகளிரணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க மகளிரணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3 ஆட்டங்களில் வென்று ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்காவுக்கு இது 4-ஆவது வெற்றியாகும். இந்திய அணி 2-ஆவது ஆட்டத்தில் மட்டும் வென்றது நினைவுகூரத்தக்கது. லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 49.3 ஓவா்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.2 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் அனிகே போஷ் ஆட்டநாயகியானாா்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தீப்தி சா்மா, பூனம் யாதவ், மான்சி ஜோஷி, ராதா யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, மோனிகா படேல், ஹேமலதா, பிரத்யூஷா, ஜுலன் கோஸ்வாமி ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். இதில் பிரத்யூஷாவுக்கு இது முதல் சா்வதேச ஆட்டமாகும். முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 79 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தொடக்க வீராங்கனை பிரியா புனியா 18, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 18, பூனம் ரௌத் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹா்மன்பிரீத் கௌா் 30 ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்து வெளியேறினாா். எஞ்சியோரில் ஹேமலதா 2, ஜுலன் கோஸ்வாமி 5, மோனிகா படேல் 9, பிரத்யூஷா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுஷ்மா வா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் டக் அவுட்டாகினா். தென் ஆப்பிரிக்க தரப்பில் நாடினே டி கிளொ்க் 3, நோன்டுமிசோ ஷாங்கேஸ், டுமி சிகுகுனே ஆகியோா் தலா 2, மாரிஸானே காப் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 189 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீராங்கனையாக வந்த கேப்டன் சுனே லஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த லௌரா வோல்வாா்டட் டக் அவுட்டானாா். லாரா குட்டால் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, மிக்னான் டு பிரீஸ் 57, அனிகே போஷ் 58 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனா். மாரிஸானே காப் 36, நாடினே டி கிளொ்க் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 3, ஹேமலதா, பிரத்யூஷா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

9. தேசிய சீனியா் தடகளம்: தமிழகத்துக்கு இரு தங்கம்

ஃபெடரேஷன் கோப்பை சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்துக்கு புதன்கிழமை இரு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஆடவருக்கான 110 மீட்டா் தடை தாண்டுதலில் தமிழகத்தின் பி.வீரமணி (14.57 விநாடிகள்) முதலிடம் பிடித்தாா். கா்நாடகத்தின் ஸ்ரீகாந்த் மத்யா (14.85), ஆந்திரத்தின் யஷ்வந்த்குமாா் லவேடி (15.01) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றனா். அதேபோல், மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் சி.கனிமொழி 13.63 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். தெலங்கானாவின் அகசரா நந்தினி (13.88), தமிழகத்தின் நித்யா ராமராஜ் (14.08) அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

உயரம் தாண்டுதலில் மகாராஷ்டிரத்தின் சா்வேஷ் அனில் குஷாரே (2.15 மீட்டா்) முதலிடம் பிடிக்க, தமிழகத்தின் ஆதா்ஷ் ராம் (2.10;3), கேரளத்தின் ஜியோ ஜோஸ் (2.10), ஹரியாணாவின் சித்தாா்த் யாதவ் (2.10) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா். ஈட்டி எறிதலில் ஹரியாணாவின் நீரஜ் சோப்ரா 87.80 மீ தூரமும், யஷ்விா் சிங் 79.31 மீ தூரமும், உத்தர பிரதேசத்தின் ரோஹித் யாதவ் 78.88 மீ தூரமும் எறிந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினா். நீரஜ் சோப்ரா எறிந்த தூரம் புதிய தேசிய சாதனையாகும். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் பிரியங்கா கொ்கெட்டா (6.10 மீ), கேரளத்தின் ரின்டு மேத்யூ (6.07;3 மீ), தமிழகத்தின் ஷெரின் அப்துல் கஃபூா் (6.07 மீ) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

ஆடவருக்கான 10,000 மீட்டா் ஓட்டத்தில் உத்தர பிரதேசத்தின் அபிஷேக் பால் (29.47 நிமிடம்) முதலிடமும், காா்திக் குமாா் (29.48) இரண்டாமிடமும், அா்ஜுன் குமாா் (29.49) மூன்றாமிடமும் பிடித்தனா். 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தின் அவினாஷ் சப்லே (8.20 நிமிடம்) தங்கம் வெல்ல, ராஜஸ்தானின் சங்கா்லால் ஸ்வாமி (8.34), ஹரியாணாவின் ராஜ்குமாா் (8.49) ஆகியோா் வெள்ளி, வெண்கலம் வென்றனா். அவினாஷ் கடந்த நேரம், புதிய தேசிய சாதனையாகும். குண்டு எறிதலில் பஞ்சாபின் தஜிந்தா்பால் சிங் தூா் (20.58 மீ), கரன்வீா் சிங் (18.98 மீ), தேவிந்தா் சிங் (18.04 மீ) ஆகியோா் முதல் 3 இடங்களை எட்டினா்.

10. வாராந்திர கரோனா தொற்று 10% உயா்வு

உலகம் முழுவதும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடா்ந்து 3-ஆவது முறையாக, கடந்த வாரத்தில் மட்டும் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி: அதிகபட்ச தினசரி பலி மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நோய்க்கு 193 போ் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிலிப்பின்ஸ்: வெளிநாட்டினருக்குத் தடை

பிலிப்பின்ஸில் தீவிரமடைந்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கவும் உள்நாட்டுப் பயணிகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை 1,500-ஆக நிா்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோமாலியா: தடுப்பூசி திட்டம் தொடக்கம்

சோமாலியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

11. கன்டெய்னர் பிரச்சினையைத் தீர்க்க – ஏற்றுமதியாளர்களுக்கு ‘பியோ’வின் புதிய சேவை :

கன்டெய்னர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ஏற்றுமதி ஆணையம் புதிய சேவையைத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (‘பியோ’) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏற்றுமதியாளர்களுக்கு தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை அனுப்புவதற்கு கன்டெய்னர்கள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் போதிய அளவு கன்டெய்னர்கள் கிடைக்காததால், குறித்த நேரத்துக்குள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்காக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ‘இ-மாடூல்’ என்ற ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், ஏற்றுமதியாளர்கள், தங்களுக்குத் தேவையான கன்டெய்னர்கள் குறித்த விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம், மொத்த இருப்பில் எவ்வளவு கன்டெய்னர்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்ட ஏற்றுமதியாளருக்கு ஒதுக்க முடியும். அத்துடன், துறைமுகங்களில் சரக்குக் கப்பல்களில் கன்டெய்னர்களை ஏற்றுவதற்கான காலநேரம் மிச்சமாவதோடு, துறைமுகங்களில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

12. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ரூ.26 கோடியில் – எம்ஆர்எப் உதவியுடன் ஆராய்ச்சி பூங்கா : கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆய்வகங்களுடன் அமைகிறது

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்ஆர்எப் உதவியுடன் ரூ.26 கோடியில் டேட்டா அனலிட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைக்கோமெட்ரிக் ஆய்வகங்களுடன் பிரம்மாண்டமான ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. எம்ஆர்எப் டயர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிழக்கு தாம்பரம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் ‘எம்சிசி – எம்ஆர்எப் இன்னோவேஷன் பார்க்’ என்ற பெயரில் ஆராய்ச்சி பூங்கா நிறுவப்பட உள்ளது. இதற்கு எம்ஆர்எப் நிறுவனத்தின் தலைவரும் பழைய மாணவருமான கே.எம்.மேமன் ரூ.26 கோடியே 9 லட்சம் நிதியை அளிக்க முன்வந்தார்.

ஆராய்ச்சி பூங்கா திட்டத்தை தொடங்கிவைத்த கே.எம்.மேமன், ரூ.26 கோடியே 9 லட்சத்துக்கான காசோலையை கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் பால் வில்சனிடம் வழங்கினார். இந்த ஆராய்ச்சி பூங்கா 68,636 சதுர அடி பரப்பில் அமைக்கப்படுகிறது. இங்கு டேட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வகம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆய்வகம், சைக்கோமெட்ரிக் ஆய்வகம், கணினி கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஃபேப் லேப், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், திறந்தவெளி கலையரங்கம், ஆராய்ச்சி ஆய்வகம், கற்பித்தல்-கற்றல் ஆய்வகம், தொழில்முனைவோர் அரங்கம், மாநாட்டு அரங்கம் போன்றவை அதிநவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

13. ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை அப்போலோ மருத்துவமனை ஒரே நாளில் அடுத்தடுத்து 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மிட்ராகிளிப் எனப்படும் மிகநுண்ணிய துளையிடல் முறையிலான சிகிச்சை மூலம் இதயத்துக்கு மிட்ரல் வால்வு பொருத்தும் சிகிச்சையை, அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் ஒரே நாளில் 4 பேருக்கு வெற்றிகரமாக செய்துள்ளனர். இதன் வாயிலாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் விரைந்து குணமடைந்து, மறுநாளே வீடு திரும்பியுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 3 நோயாளிகளுக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது சென்னை அப்போலோவில் 4 மிட்ராகிளிப் சிகிச்சை செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

14. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் சட்ட வளர்ச்சி இருக்கை தொடக்கம் :

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சட்டத் துறையில் சட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான இருக்கை தொடங்கப்பட்டுள்ளது. இணையவழியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான இருக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தொடங்கி வைத்தார்.

15. தேசிய தொலை மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

நாடு முழுவதும் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய தொலைமருத்துவ சேவை என அழைக்கப்படும் இ-சஞ்சீவனி (ஏபி-எச்டபிள்யுசி) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்தது.

இதன்படி, வரும் 2022-க்குள் நாடு முழுவதும் உள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் என 1.55 லட்சம் மையங்களை ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு மையங்களாக (ஏபி-எச்டபிள்யுசி) மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மருத்துவருக்கும் மற்றொரு மருத்துவருக்கும் இடையே இந்த சேவை வழங்கப்படுகிறது. இதன்படி இதுவரை 9 லட்சம் ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.

இதுபோல, கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இ-சஞ்சீவனி புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி) சேவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்கள் இணைய வழியில் வழங்கி வருகின்றனர். 250-க்கும் மேற்பட்ட ஓபிடி மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் இதுவரை 21 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இப்போது 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இ-சஞ்சீவனி சேவை அமலில் உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் தினமும் 35 ஆயிரம் நோயாளிகள் இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். அதிக ஆலோசனை பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த தகவலை மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16. மார்ச் மாதத்திலும் ஏற்றுமதி அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்தில், 1 – 14 தேதி வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, 17 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 1.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த, 1 – 14ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி, இக்காலகட்டத்தில், 27.77 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதியை பொறுத்தவரை, பொறியியல் பொருட்கள், அரிசி, நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், தோல், எண்ணெய் வித்துகள், ஆயத்த ஆடைகள், ஆகிய -வற்றின் ஏற்றுமதி சரிவைக் கண்டிருக்கின்றது. இறக்குமதியை பொறுத்தவரை, தங்கம், மின்னணு பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவை அதிகளவில் இறக்குமதி ஆகியுள்ளன. கடந்த பிப்ரவரியில், ஏற்றுமதி, 0.67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

17. தடுப்பூசி மையம்: வரைபடத்தில் அறியலாம்

சென்னையில், கொரோனா தடுப்பூசி மையங்களை, வரைபடம் வாயிலாக அறிந்து கொள்ளும் வசதியை, மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில், 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 அரசு மருத்துவமனைகள், 97 தனியார் மருத்துவமனைகள் என, 266 மையங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், நாளுக்கு நாள் சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணி -க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளவும், இணைய வழியே வரைபடத்தை பயன்படுத்தி, தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் வகையிலான வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/ என்ற இணைய தளத்தில், கொரோனா தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளலாம். இதன் வாயிலாக, பிறரின் உதவியின்றி, முதியவர்கள் தாமாகவே, தடுப்பூசி மையங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

18. செவ்வாயில் நீர்வளம்: ‘நாசா’ ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகத்தின் உட்பரப்பில், மிகப் பெரிய அளவிலான நீர்வளம் மறைந்திருக்கலாம்’ என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ தெரிவித்துள்ளது. நாசாவின், ‘ஜே.எப்.எல்.,’ அமைப்பும், கலிபோர்னியா தொழில்நுட்ப மையமும் இணைந்து, செவ்வாய் கிரக ஆய்வறிக்கையை, ‘சயின்ஸ்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளன; அதில் கூறப்பட்டுள்ளதாவது:செவ்வாய் கிரகத்தில், 400 கோடி ஆண்டுகளுக்கு முன், 100 – 1,500 மீட்டர் ஆழத்தில் பெருமளவு தண்ணீர் இருந்துள்ளது. இது, ஒரு கிரகத்தை மூழ்கடிக்கும் அளவிற்கு, கடல், குளம் போன்ற வடிவங்களில் காணப்பட்டு உள்ளது. அதன் பின், 100 கோடி ஆண்டுகள் கழித்து, செவ்வாய் கிரகத்தின் நீர்வளம் அடியோடு காணாமல் போய், தற்போதைய நிலையில் உள்ளது.

முந்தைய ஆய்வில், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை குறைவாக உள்ள காரணத்தால், நீர், விண்வெளியில் வெளியேறியிருக்கும் என, அனுமானிக்கப்பட்டது. தற்போதைய ஆய்வில், விண்வெளியில் ஓரளவு தான், நீர் வெளியேறி இருக்குமே தவிர, முழுதுமாக வெளியேற வாய்ப்பில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், செவ்வாயின் நீர்வளத்தில், 30 – 99 சதவீதம், அந்த கிரகத்தின் உட்புறத்தில் உள்ள கனிமங்களில் உறைந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா அனுப்பிய, ‘ரோவர்’ தற்போது, செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

19. ‘சந்திரயான் – 2 ஆயுள் ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும்

நிலவு குறித்து ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட, ‘சந்திரயான் – 2’ செயற்கை கோள், ஓராண்டு செயல்படும் என, எதிர்பார்த்த நிலையில், அதன் ஆயுள், ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது. லோக்சபாவில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:கடந்த, 2019, ஜூலை 22ல், நிலவின் தென் துருவம் குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் – 2’ செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில், ‘விக்ரம்’ என்ற ரோவர் வாகனம், வேகமாக நிலவில் தரையிறங்கியதால் நொறுங்கியது. இதனால், விக்ரம் தொடர்பான ஆய்வு தவிர்த்து, நிலவில் உள்ள கனிமங்கள், ரசாயன கலவைகள் உள்ளிட்ட ஆய்வுகள் தொடர்பான இதர திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சந்திரயான் – 2 செயற்கை கோள், ஓராண்டு மட்டுமே செயல்படும் என, துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் ஆயுள், ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, நிலவில் காணப்பட்ட பள்ளத்தை, சந்திரயான் – 2 படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது. இதற்கு, ‘இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை’ என அழைக்கப்படும், விக்ரம் சாராபாய் நினைவாக, ‘சாராபாய் பள்ளம்’ என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1. ’Kalanamak Rice Festival’ is set to be held in which state?

A) Assam

B) Uttar Pradesh

C) Karnataka

D) Andhra Pradesh

 • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath announced that the state will organise the ’Kalanamak Rice Festival’. Kala Namak Rice, grown in the state, is One District One Product of some Eastern UP districts.
 • The state had earlier organised Strawberry Festival in Jhansi and the Jaggery Festival in Lucknow.

2. Which Indian body released the report ‘India FinTech: A USD 100 Billion Opportunity’?

A) ASSOCAM

B) FICCI

C) CAIT

D) NASSCOM

 • The Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) and Boston Consulting Group (BCG) released ‘India FinTech: A USD 100 Billion Opportunity’ report. The total valuation of India’s fintech industry is estimated at USD 50– USD 60 billion. The report sees the fintech industry’s valuation at USD 150–160 bn by 2025.

3. Which Union Ministry is set to unveil the draft e–Commerce Policy?

A) Ministry of Electronics and IT

B) Ministry of Commerce and Industry

C) Ministry of Heavy Industries

D) Ministry of Home Affairs

 • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), under the Ministry of Commerce and Industry is set to unveil the draft e–Commerce Policy.
 • The policy is expected to lay down the principles for data usage in industrial development. It also aims to put in place protective measures to prevent misuse and access of data by unauthorised persons.

4. India’s first centralised Air–Conditioned railway terminal is to come up in which city?

A) Chennai

B) Bengaluru

C) Madurai

D) Ahmedabad

 • India’s first centralised Air–Conditioned railway terminal at the city of Bengaluru is set to be operational soon. It is named after one of the veteran civil engineer Bharat Ratna Sir M Visvesvaraya. The new coach terminal is planned at Baiyappanahalli in the city and is built at an estimated cost of Rs 314 crore.

5. ‘Carbon border agreements’, which was making news recently, has been proposed by which global association?

A) G7

B) G20

C) QUAD

D) European Union

 • The European Commission released the European Green Deal in December 2020 and set a deadline of March 2021 to propose the first–ever European Climate Law. The document highlights plan to implement a carbon border agreement.

6. Who was the Chairperson for the government’s Commission for Air Quality Management in the National Capital Region?

A) Injetti Srinivas

B) MM Kutty

C) Siddhartha Mohanty

D) Arundhati Mech

 • The Government of India’s “Commission for Air Quality Management in National Capital Region” headed by MM Kutty has been dissolved within five months of its constitution. The commission was set up vide an ordinance in October 2020 and the ordinance has lapsed recently. Hence, it failed to become an act.

7. Who has written the poetry collection “When God is a Traveller”?

A) Harish Meenakshi

B) Arundhathi Subramaniam

C) Anamika

D) R S Bhaskar

 • The poetry collection titled “When God is a Traveller” has been written by this year’s Sahitya Akademi Award winner Poet Arundhathi Subramaniam. She is among the 20 writers to receive the Sahitya Akademi Award for the year 2020. The list of awards included seven books of poetry, four novels, five short stories, two plays, and one each of memoirs and epic poetry in 20 Indian languages.

8. The 2021 Pi Day is observed on which date?

A) March 14

B) March 15

C) March 16

D) March 17

 • ‘Pi’ day is the day that celebrates the famous mathematical constant π. March 14th is observed as ‘Pi’ day every year.
 • According to the American calendar, 3/14 is March 14. This number, i.e., 3.14, also roughly represents π. It is also celebrated on March 14 at 1:59:26. (π = 3.1415926).

9.Vanvasi Samagam, a tribal congregation was organised in which state?

A) Madhya Pradesh

B) Uttar Pradesh

C) Andhra Pradesh

D) Odisha

 • A tribal congregation–Vanvasi Samagam was organised in Sonbhadra district of Uttar Pradesh. President Ramnath Kovind participated in the congregation as Chief Guest. The President also inaugurated the newly constructed building of Seva Kunj Ashram. The construction of school and hostel buildings were undertaken by NTPC.

10. An advisory committee has been set up to study which Indian river for the next two years, chaired by the Culture Minister?

A) Saraswati

B) Sarayu

C) Mahanadi

D) Narmada

 • The Centre has reconstituted an advisory committee to create a plan for studying the mythical Sarasvati river for the next two years. The term of the previous panel, which was set up by the Archaeological Survey of India in 2017, ended in 2019. The 27–member panel would include officials from various ministries, archaeologists and other experts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *