TnpscTnpsc Current Affairs

18th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?

அ. 10

ஆ. 12

இ. 15

ஈ. 17 

  • 2022 – ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஒரு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது. இறுதி நாளில், இந்தியாவின் ‘பிரீஸ்டைல்’ மல்யுத்த வீரர்களான தீபக் புனியா மற்றும் விக்கி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். கிரீகோ ரோமன், பெண்கள் பிரீஸ்டைல், ஆண்கள் பிரீஸ்டைல் என அனைத்துப்பிரிவுகளிலும் இந்திய அணி வென்றது.

2. 2022 – உலக அறிவுசார் சொத்துரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. IP and Youth innovating for a better future. 

ஆ. IP during Pandemic.

இ. Plagiarism and its effects.

ஈ. Awareness on IPR.

  • காப்புரிமைகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை நமது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஏப்.26 அன்று ‘உலக அறிவுசார் சொத்துரிமை நாள்’ கொண்டாடப்படுகிறது. ஜெனீவாவைச் சார்ந்த உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஐநா சபையின் 15 சிறப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். “IP and Youth innovating for a better future” என்பது இந்த ஆண்டுக்கான (2022) உலக அறிவுசார் சொத்துரிமை நாளுக்கானக் கருப்பொருளாகும்.

3. 2022-இல் 21ஆவது உலக கணக்காளர்கள் மாநாட்டை நடத்துகிற நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா 

ஈ. வங்காளதேசம்

  • இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமானது (ICAI) 118 ஆண்டுகளில் முதன்முறையாக 21ஆவது உலக கணக்காளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாடு, 1904இல் அந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு மும்பையில் புதிதாக கட்டப்பட்ட, ‘ஜியோ உலக மாநாட்டு மையத்தில்’ 2022 நவம்பரில் நடைபெறும். 130 நாடுகளைச் சார்ந்த சுமார் 6000 உயர்மட்ட கணக்காளர்கள் இதில் நேரடியாக பங்கேற்பார்கள் மற்றும் 10000-க்கும் மேற்பட்டவர்கள் மெய்நிகராக இணைவார்கள். இந்நிகழ்வின் கருப்பொருள், “Building Trust Enabling Sustainability” என்பதாகும்.

4. உலக நோய்த்தடுப்பு வாரமாக எந்த வாரம் கொண்டாடப்படுகிறது?

அ. ஏப்ரல் நான்காவது வாரம் 

ஆ. மே மாதம் நான்காவது வாரம்

இ. ஜனவரி நான்காவது வாரம்

ஈ. செப்டம்பர் நான்காவது வாரம்

  • ஏப்ரல் நான்காவது வாரம் உலக நோய்த்தடுப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இது உலக நலவாழ்வு அமைப்பின் அனைத்து உறுப்புநாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. நோய்த்தடுப்பு ஊசிமூலம் தடுக்கக்கூடிய நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதன்மூலம் தடுப்பூசி செலுத்துதலை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். “Long Life for All” என்பது இந்த ஆண்டு உலக நோய்த்தடுப்பு வாரத்தின் கருப்பொருளாகும்.

5. NASSCOM-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அனந்த் மகேஸ்வரி

ஆ. கிருஷ்ணன் இராமானுஜம் 

இ. கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

ஈ. நந்தன் நிலேகனி

  • மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (NASSCOM), 2022-23ஆம் ஆண்டிற்கான அதன் தலைவராக கிருஷ்ணன் இராமானுஜத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளது. அவர் தற்போது TATA கன்சல்டன்சி சர்வீசஸில் எண்டர்பிரைஸ் குரோத் குழுமத்தின் தலைவராகவும், NASSCOM-இன் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அக்சென்ச்சர் இந்தியாவின் தலைவரும் மூத்த நிர்வாக இயக்குநருமான ரேகா எம் மேனனைத் தொடர்ந்து அவர் இப்பதவிக்கு வரவுள்ளார். மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் அனந்த் மகேஸ்வரி, 2022-23-க்கான NASSCOM துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. அண்மையில், ஐநாஇன் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா 

இ. உக்ரைன்

ஈ. பெலாரஸ்

  • ஸ்பெயினைச் சார்ந்த ஐநாஇன் உலக சுற்றுலா அமைப்பில் இருந்து தங்கள் இடைநீக்கம் குறித்த திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாகவே வெளியேற முடிவுசெய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான போர்த்தொடுப்பு காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்பிலிருந்து ரஷ்யாவை விலக்கும் செயல்முறை முடிய ஓர் ஆண்டுகாலம் ஆகும்.

7. ஓர் அண்மைய ஆய்வின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை என்ன?

அ. 8 இலட்சம்

ஆ. 18 இலட்சம்

இ. 86 இலட்சம் 

ஈ. 118 இலட்சம்

  • லான்செட் இதழில் வெளியிடப்பட்ட குழந்தை மற்றும் இளம்பருவத்தினர் நலம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த புதிய தொடரின்படி, 2019ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே (0-20 வயது) 86 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளில் பாதிக்கும் மேலான இறப்புகள் இறந்து பிறந்த குழந்தைகளின் இறப்பு மற்றும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு ஆகும். இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் நிகழ்ந்தது.

8. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது எந்த OTT தளத்துடன் இணைந்து, ‘ஆசாதி கி அம்ரித் ககானியா’வை அறிமுகப்படுத்தியது?

அ. அமேசான் பிரைம்

ஆ. நெட்ஃபிளிக்ஸ் 

இ. சோனி லிவ்

ஈ. டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

  • OTT தளமான ‘Netflix’உடன் இணைந்து உருவாக்கப்பட்ட, ‘ஆசாதி கி அம்ரித் ககானியா’ என்ற குறுங்காணொளித் தொடரை தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியானது இந்தியர்களின் எழுச்சியூட்டும் கதைகளை வெளிக்கொணர்வதையும், அவர்களின் இலக்குகளை அடைய மக்களை ஊக்குவிப்பவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் காணொளிகள் அமைச்சகம் மற்றும் Netflix-இன் பல்வேறு சமூக ஊடக அலைவரிசைகளிலும், தூர்தர்ஷன் நெட்வொர்க் முழுவதும் ஒளிபரப்பப்படும்.

9. 2022 – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறும் இடம் எது?

அ. சென்னை

ஆ. கொல்கத்தா

இ. புது தில்லி 

ஈ. திருவனந்தபுரம்

  • இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் 39ஆம் மாநாடானது, இந்தியத் தலைமை நீதிபதி N V இரமணா தலைமையில், புது தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலாவது தலைமை நீதிபதிகள் மாநாடு 1953 நவம்பரில் நடைபெற்றது; இதுவரை இதுபோன்று 38 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் இம்மாநாடு நடைபெற்றது. நீதித்துறை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும், நீதி வழங்கல் முறையை மேம்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

10. ‘பணியின்போது பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.24

ஆ. ஏப்ரல்.26

இ. ஏப்ரல்.28 

ஈ. ஏப்ரல்.30

  • பணியின்போது பாதுகாப்பு & நலத்திற்கான உலக நாளானது ஆண்டுதோறும் ஏப்.28 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் நல மேலாண்மைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது (ILO) கடந்த 2003ஆம் ஆண்டில், பணியின் போதான விபத்துக்கள் மற்றும் நோய்களைத்தடுக்கும் நோக்கில் இந்த உலக நாளைக் கடைப்பிடிக்கத்தொடங்கியது. “Act together to build a positive safety and health culture” என்பது நடப்பாண்டில் (2022) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. உள்நாட்டு வடிவமைப்பில் உருவான போர்க் கப்பல்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள 2 போர்க்கப்பல்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தார். பாதுகாப்புத் துறைக்குத் தேவையான போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைத் தயாரித்து தரும் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், இந்த இரு கப்பல்களையும் வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘ஐஎன்எஸ் சூரத்’, ‘ஐஎன்எஸ் உதய்கிரி’ ஆகிய இரு போர்க்கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 2 போர்க்கப்பல்கள் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சூரத் போர்க்கப்பல், 15பி டெஸ்ட்ராயர்ஸ் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் நான்காவது கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு மேற்கு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக நகரமான சூரத்தின் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

17ஏ பிரிகேட்ஸ் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 3-ஆவது கப்பல் ‘உதய்கிரி’. இந்தக் கப்பலுக்கு ஆந்திர மலைத் தொடரின் பெயர்சூட்டப்பட்டுள்ளது. பி17 பிரிகேட்ஸ் (ஷிவாலிக்) வகை போர்க்கப்பலின் மேம்பட்ட வடிவமாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் ராணுவத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ‘உதய்கிரி’ போர்க்கப்பலின் மறுபடைப்பாக புதிய போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் எவருக்கெல்லாம் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசி? பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

தமிழகத்தில் 12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு, ‘கோவோவேக்ஸ்’ கரோனா தடுப்பூசியை வழங்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

3. ஜமைக்கா நாட்டின் சாலைக்கு அம்பேத்கர் பெயர்: குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் திறப்பு

அரசுமுறைப்பயணமாக ஜமைக்கா நாட்டுக்கு சென்றுள்ள குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், அந்நாட்டு தலைநகரில் இந்திய சட்ட மேதை அம்பேத்கர் பெயரிட்ட சாலையை திறந்து வைத்தார். மேலும், அம்பேத்கரின் பணிகளை எடுத்துரைக்கும் வகையில் நினைவுச் சின்னத்தையும் அந்நாட்டு உள்ளாட்சித் துறை அமைச்சா் டெஸ்மண்ட் மெக்கன்ஸி திறந்து வைத்தார்.

4. மும்பை பங்குச்சந்தையின் தலைவராக எஸ் எஸ் முந்த்ரா நியமனம்

மும்பை பங்குச்சந்தையின் (BSE) தலைவராக எஸ் எஸ் முந்த்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து BSE, தேசிய பங்குச்சந்தையிடம் தெரிவித்ததாவது: பொது நல இயக்குநரான எஸ் எஸ் முந்த்ராவை மும்பை பங்குச் சந்தையின் தலைவராக நியமிப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நீதிபதி விக்ரமஜித் சென்னுக்குப் பதிலாக முந்த்ரா BSE தலைவர் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த முந்த்ரா மூன்று ஆண்டு பணிக்குப் பிறகு கடந்த 2017 ஜூலையில் ஓய்வுற்றார். அதற்கு முன்பாக, பாங்க் ஆப் பரோடாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

1. How many medals did India win in the Asian Wrestling Championships 2022?

A. 10

B. 12

C. 15

D. 17 

  • The Indian team ended its campaign at Asian Wrestling Championships 2022 with a total of 17 medals– one gold, five silvers and 11 bronze. On the Final day, India’s Freestyle wrestlers Deepak Punia and Vicky bag Silver Medal and Bronze Medal respectively. Indian team won in all the categories of Greco Roman, Women’s freestyle and Men’s freestyle.

2. What is the theme of the ‘World Intellectual Property Day’ 2022?

A. IP and Youth innovating for a better future. 

B. IP during Pandemic.

C. Plagiarism and its effects.

D. Awareness on IPR.

  • The ‘World Intellectual Property Day’ 2022 is celebrated on April 26, to raise awareness of the impact of how patents, copyright, trademarks and design affect our daily life. Geneva–based World Intellectual Property Organization is one of the 15 specialized agencies of the United Nations. The theme for this year’s World Intellectual Property Day is focused on ‘IP and Youth innovating for a better future’.

3. Which country is the host of the 21st World Congress of Accountants (WCOA) in 2022?

A. China

B. Russia

C. India 

D. Bangladesh

  • Institute of Chartered Accountants of India (ICAI) is set to host 21st World Congress of Accountants (WCOA), for the first time in 118 years of its existence. The WCOA is held every four years since it was started in 1904. The event will be held in November 2022 in the newly built ‘Jio World Convention Centre’, Mumbai. About 6000 top accountants from 130 countries will participate in the programme directly and over 10000 will join virtually. The theme of the event would be `Building Trust Enabling Sustainability’.

4. Which week is celebrated as World Immunization Week?

A. Fourth week of April 

B. Fourth week of May

C. Fourth week of January

D. Fourth week of September

  • Fourth week of April is celebrated as World Immunization Week and observed by all the member states of World Health Organization. Its purpose is to raise public awareness about diseases that are preventable through immunization, thereby encouraging immunization. “Long Life for All” is the theme for this year’s World Immunization Week.

5. Who has been appointed as the new Chairperson of NASSCOM?

A. Anant Maheshwari

B. Krishnan Ramanujam 

C. Kris Gopalakrishnan

D. Nandan Nilekani

  • The National Association of Software and Services Companies (NASSCOM), has announced the appointment of Krishnan Ramanujam, as its chairperson for 2022–23.
  • He is currently serving as the President, Enterprise Growth Group, at Tata Consultancy Services and Vice–Chairman of NASSCOM. He succeeds Rekha M. Menon, chairperson and senior managing director of Accenture in India. Anant Maheshwari, President, Microsoft India, is appointed as NASSCOM Vice–chairperson for 2022–23.

6. Which country recently announced to withdraw from the United Nations World Tourism Organisation?

A. China

B. Russia 

C. Ukraine

D. Belarus

  • Russia announced that it has decided to withdraw from the Spain–based United Nations World Tourism Organisation ahead of the scheduled vote on their suspension. Despite the withdrawal, UNWTO made it clear that they will go ahead with the suspension, due to the ongoing invasion of Ukraine. The process of excluding Russia from the body will take around a year to finish.

7. As per a recent study, what is the estimated number of deaths among children and adolescents in 2019?

A. 8 Lakh

B. 18 Lakh

C. 86 Lakh 

D. 118 Lakh

  • According to a new series on optimising child and adolescent health and development, published in the Lancet, over 86 lakh deaths among children and adolescents (0–20 years) were recorded in 2019. Stillbirths and neonatal deaths accounted for over half these deaths, while another one–third of the deaths occurred in children between one month and five years of age.

8. Ministry of Information and Broadcasting launched ‘Azadi Ki Amrit Kahaniya’ in association with which OTT platform?

A. Amazon Prime

B. Netflix 

C. Sony Liv

D. Disney+ Hotstar

  • Ministry of Information and Broadcasting launched ‘Azadi Ki Amrit Kahaniya’ short video series, created in collaboration with OTT platform, Netflix.
  • The initiative aims to bring out inspiring stories of Indians, motivate people to achieve their goals. The videos will be available on various social media channels of the Ministry and Netflix, as well as broadcast across the Doordarshan network.

9. Which is the venue of the Conference of High Court Chief Justices 2022?

A. Chennai

B. Kolkata

C. New Delhi 

D. Thiruvananthapuram

  • Chief Justice of India NV Ramana chaired the 39th conference of Chief Justices of various High Courts of the country, at the premises of the Supreme Court, New Delhi. The first Chief Justices’ conference was held in November 1953 and 38 such conferences have been organised so far. The last Conference was held in the year 2016. It aims to address the issues concerning the judiciary and to discuss the steps to be taken to improve the justice delivery system.

10. When is the ‘World Day for Safety and Health at Work’ observed?

A. April 24

B. April 26

C. April 28 

D. April 30

  • The ‘World Day for Safety and Health at Work’ is observed annually on April 28. The day is dedicated to create awareness on Occupational Safety and Health (OSH) management. The International Labour Organisation (ILO) began to observe World Day in the year 2003 to prevent accidents and diseases at work. The theme for this year’s World Day for Safety And Health at Work 2022 is ‘Act together to build a positive safety and health culture’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!