Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

18th November 2020 Current Affairs in Tamil & English

18th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுத்து அவற்றை பாதுகாப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கவுள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. மேற்கு வங்கம்

இ. குஜராத்

ஈ. அஸ்ஸாம்

  • காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுத்து அவற்றை பாதுகாப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைசார் உறுப்பினர்கள் இடம்பெறும் இந்தப் பிரிவில், வனத்துறை இயக்குநரகம், மின்சாரத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்களும் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர்களும் உள்ளனர். விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, உயரழுத்த மின்வடங்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

2. முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. பீகார்

  • பிரதமர் வீதியோர விற்பனையாளர் திட்டத்தின்கீழ், முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. அண்மையில், கிராமப்புற வீதியோர விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் வட்டியில்லா கடனை அம்மாநில முதலமைச்சர் வரவு செய்தார். கல்வி மற்றும் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ‘தற்சார்பு மத்திய பிரதேசம்’ திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

3. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021’இல் ‘சர்னா’வை ஒரு தனி மதமாக சேர்க்கும் தீர்மானத்தை எந்த மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது?

அ. குஜராத்

ஆ. ஜார்க்கண்ட்

இ. மகாராஷ்டிரா

ஈ. பீகார்

  • மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021’இல் ‘சர்னா’வை ஒரு தனி மதமாக சேர்க்கக்கோரும் தீர்மானத்தை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கூற்றுப்படி, ஒருநாள் சிறப்பு மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், ஒப்புதலுக்காக நடுவணரசுக்கு அனுப்பப்படவுள்ளது. ‘சர்னா’ என்னும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் ‘நீர், காடு, நிலம்’ என்ற கொள்கைகொண்டு இயற்கையை வணங்குகிறார்கள்.

4. ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?

அ. வதோதரா

ஆ. சென்னை

இ. கொச்சின்

ஈ. பெங்களூரு

  • குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாக ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ உள்ளது. அண்மையில் இந்தப் பல்கலை இளங்கலை, MBA & MSc உள்ளிட்ட ஏழு புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதில் MSc கல்வித்திட்டமானது ஐக்கியப் பேரரசின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. அதே வேளையில் MBA கல்வித்திட்டம் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் கவனஞ்செலுத்துகின்றது.

5. அண்மையில், உலகின் முதல் 6G தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • 6G தகவல் தொடர்பு சோதனை செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 6 ஏவுகணையைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. 6G தொழில்நுட்பமானது 5G தொழில்நுட்பத்தைவிட நூறு மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. ‘பாரத தரிசனம்-தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்யும் அமைப்பு எது?

அ. IRCTC

ஆ. NHAI

இ. ஏர் இந்தியா

ஈ. மேக் மை டிரிப்

  • இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகமானது ‘பாரத தரிசனம் – தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த யாத்திரை ஐதராபாத் & செகந்திராபாத்தில் இருந்து டிசம்பர்.12-18 வரை தொடங்கப்படும். “இந்தியர்களுக்கு இந்தியாவைக் காட்டு – Show India to Indians” என்பது இந்தப் பயணத்தின் கருப்பொருளாகும்.
  • இந்தப் பயணம், திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருவுடையார் திருக்கோவில், இராமேசுவரம், மதுரை மீனாட்சி சொக்கனார் திருக்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

7. நடப்பாண்டில் (2020) வரும் உலக கழிப்பறை நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Follow the Flush

ஆ. Toilets and Nutrition

இ. Waste water

ஈ. Sustainable Sanitation and Climate Change

  • உலகளாவிய தூய்மை நெருக்கடியை கையாளுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.19 அன்று உலக கழிப்பறை நாள் அனுசரிக்கப்படுகிறது. “Sustainable Sanitation & Climate Change” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். அடிப்படை கழிப்பறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

8. இந்தியாவில் எந்தத் தேதியில், பொது சேவை ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?

அ. நவம்பர் 12

ஆ. நவம்பர் 13

இ. நவம்பர் 14

ஈ. நவம்பர் 15

  • 1947 நவம்பர் 12 அன்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு (AIR) வருகைதந்து, இந்திய பிரிவினைக்குப்பின் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறியவர்கள்பற்றி உரையாற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

9. அண்மையில் எந்தத் தேதியில், இந்தியாவில், தேசிய பத்திரிகை நாள் கொண்டாடப்பட்டது?

அ. நவம்பர் 15

ஆ. நவம்பர் 16

இ. நவம்பர் 17

ஈ. நவம்பர் 18

  • 1966ஆம் ஆண்டில் இந்திய பிரஸ் கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று தேசிய பத்திரிகை நாள் (National Press Day) கொண்டாடப்படுகிறது. இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

10.தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ. நவம்பர் 15

ஆ. நவம்பர் 16

இ. நவம்பர் 17

ஈ. நவம்பர் 18

  • இந்தியாவில் கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவ.17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளைசார்ந்த ஒரு நாட்பட்ட கோளாறாகும். இது, தொடர்ச்சியான வலிப்பினால் ஏற்படுகிறது. நியூரான்களில் (மூளை செல்கள்) திடீரென அதிகப்படியான மின்கசிவு ஏற்படுவதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது.
  • இந்த நிலையானது, எந்த வயதுசார்ந்த மக்களையும் பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு வயதினருக்கும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் வித்தியாசமாக இருக்கும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • 2020 நவம்பர்.18 – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ உ சிதம்பரனாரின் 84ஆவது நினைவு நாள்.
  • கோயம்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் K S சுப்பிரமணியனுக்குத் தேசிய அளவிலான இந்திய உர உற்பத்தியாளர்கள் குழுமத்தின் பொன்விழா ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் `1 இலட்சம் ரொக்கப் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகின்றன. இந்த விருது நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட நானோ உரங்களினால் பயிர் உபயோகிக்கும் திறன் அதிகரித்து உரச்செல
    -வைக் குறைக்க வழிவகுக்கும் திட்டத்திற்கும் கிடைத்த பரிசாகக் கருதப்படுகிறது.

1. Which state is to constitute Anti–electrocution cells to protect wild elephants?

[A] Madhya Pradesh

[B] West Bengal

[C] Gujarat

[D] Assam

  • The West Bengal government has planned to constitute anti–electrocution cells to protect wild elephants in the state. These multi–departmental cells will have members including those from the Forest Directorate, Electricity Department, District Administration and Police along with the Local Panchayat members. It was also decided to alter the high–tension lines and electric poles to avoid hurting the animals.

2. Which state has launched Mukhya Mantri Rural Street Vendor Scheme?

[A] Gujarat

[B] Madhya Pradesh

[C] Maharashtra

[D] Bihar

  • The Mukhya Mantri Rural Street Vendor Scheme has been launched by the state government of Madhya Pradesh, on the lines of Pradhan Mantri street vendor scheme Recently, the Chief Minister transferred the interest–free loan of 10,000 rupees each into the accounts of rural street vendors. He also launched a roadmap to Aatma Nirbhar Madhya Pradesh, with special focus on education and health.

3. Which state assembly passed a resolution to include ‘Sarna’ as a separate religion in Census 2021?

[A] Gujarat

[B] Jharkhand

[C] Maharashtra

[D] Bihar

  • The Jharkhand assembly has unanimously passed a resolution seeking to include Sarna as a separate religion in Census 2021. As per the Chief minister Hemant Soren, the resolution which was passed during a special one–day assembly session, will be sent to the Centre for approval. The followers of Sarna faith believe praying to nature with the principle of ‘Jal, Jungle, Zameen’.

4. Where is the ‘National Rail and Transportation Institute’ located?

[A] Vadodara

[B] Chennai

[C] Cochin

[D] Bangalore

  • ‘National Rail and Transportation Institute’ (NRTI) is the first and only transportation university of India, which is located in Vadodara, Gujarat. NRTI has recently launched seven new programmes including Undergraduate, MBA and MSc.
  • The MSc programme is offered in partnership with the University of Birmingham, United Kingdom whereas the MBA programs focus at Transportation and Supply Chain Management.

5. Which country has recently launched the world’s first 6G communication satellite?

[A] India

[B] United States

[C] China

[D] Japan

  • China has become the world’s first country to have successfully launched the 6G communications test satellite. It was launched using Long March 6 rocket from the Taiyuan Satellite Launch Center in the Shanxi Province. The 6G technology is expected to be over 100 times faster than the 5G technology.

6. Which organisation will organise the “Bharat Darshan–Dakshin Bharat Yatra”?

[A] IRCTC

[B] NHAI

[C] Air India

[D] Make My Trip

  • The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has decided to organise ‘Bharat Darshan–Dakshin Bharat Yatra’. It would be launched from Hyderabad and Secunderabad from December 12 to December 18. The theme of the yatra is “Show India to Indians”. It would cover Sri Rangam (Ranganathaswamy temple), Brihadeeswara temple at Thanjavur, Rameswaram, Madurai Meenakshi Temple and Kanyakumari.

7. What is the theme of the 2020 World Toilet Day?

[A] Follow the Flush

[B] Toilets and Nutrition

[C] Waste water

[D] Sustainable Sanitation and Climate Change

  • The World Toilet Day is observed every year on 19th of November to inspire action to tackle the global sanitation crisis. The 2020 theme is “Sustainable Sanitation and Climate Change”. The main aim of this day is to create awareness among the people about basic toilet facilities.

8. On which date, the 2020 edition of Public Service Broadcasting Day is celebrated in India?

[A] November 12

[B] November 13

[C] November 14

[D] November 15

  • The Public Service Broadcasting Day is observed every year on November.12 to commemorate the first and last visit of the Father of the Nation, Mahatma Gandhi to the studio of All India Radio, Delhi in 1947. He addressed the displaced people, who had temporarily settled at Kurukshetra in Haryana after partition.

9. On which date, the 2020 edition of National Press Day is celebrated in India?

[A] November 15

[B] November 16

[C] November 17

[D] November 18

  • The National Press Day is celebrated every year on 16th of November as symbolic of free and responsible press in India. This was the day on which the Press Council of India (PCI) started functioning as a moral watchdog.

10. On which date, the 2020 edition of National Epilepsy Day is observed?

[A] November 15

[B] November 16

[C] November 17

[D] November 18

  • In India, the National Epilepsy Day is observed every year on 17th of November to create awareness about epilepsy. Epilepsy is a chronic disorder of brain characterized by recurrent ‘seizures’ or ‘fits’. The seizures are caused as a result of sudden, excessive electrical discharges in the neurons (brain cells). The condition can affect people at any age and each age group has unique concerns and problems.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!