TnpscTnpsc Current Affairs

18th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர்.1 

ஆ) அக்டோபர்.2

இ) அக்டோபர்.3

ஈ) அக்டோபர்.4

  • தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளானது ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது குருதிக்கொடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தன்னார்வ குருதிக் கொடையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “Give Blood and keep the world beating” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். நம் நாட்டிற்கு ஒவ்வோறர் ஆண்டும் சுமார் 1.45 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 3500 உரிமம் பெற்ற இரத்த வங்கிகள்மூலம் இந்த இரத்தம் சேகரிக்கப்படுகிறது.

2. நிலையான நிதி குறித்து, பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் யார்?

அ) உர்ஜித் படேல்

ஆ) C K மிஸ்ரா 

இ) அபிஜித் பானர்ஜி

ஈ) ஜீன் ட்ரோஸ்

  • பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) முன்னாள் சுற்றுச்சூழல் & வனச்செயலர் C K மிஸ்ரா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, உலகத்தரம்வாய்ந்த நிலையான நிதி மையத்தை IFSCA’இல் உருவாக்கவுள்ளது. IFSCA, கடந்த ஆண்டு ஏப்ரலில், IFSC அதிகாரச் சட்டம், 2019’இன்கீழ் நிறுவப்பட்டது. இது GIFT நகரமான காந்திநகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • IFSCA என்பது இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிதிச்சேவை மையத்தின் (IFSC) நிதி தயாரிப்புகள், நிதிச்சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் ஓர் அதிகாரமாகும்.

3. குலாப் புயலைத் தொடர்ந்து ஓமானைத் தாக்கிய புயலின் பெயர் என்ன?

அ) ஷாஹீன் 

ஆ) பகித்

இ) குல்முகர்

ஈ) தேஸ்

  • வெப்பமண்டல புயலான ஷாஹீன் ஓமான் கடற்கரையை தாக்கியது. இப்புயல் குலாப் புயலின் ஒரு வழித்தோன்றலாகும். அது, 2021 செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவின் கீழைக்கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியது. குஜராத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இருந்த குலாப் புயல், புதிய ஷாஹீன் புயலாக உருமாறியது.

4. ‘நல்ல சமாரியன்’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

  • இந்திய அரசின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ‘நல்ல சமாரியன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை, “பொன்னான மணிநேரத்திற்குள்” மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது உயிரைக்காப்பாற்றும் எவரும் `5000/– ரொக்கம் மற்றும் சான்றிதழுட –ன் கௌரவிக்கப்படுவார்கள். மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் தனிநபர் ஒருவருக்கு, ஓர் ஆண்டுக்கு, அதிகபட்சம் 5 முறை இது வழங்கப்படும்.

5. “Keeping cybercriminals out: #JustOneClick” என்பது எந்த அமைப்பால் நடத்தப்படுகிற ஓர் இணையவழி பாதுகாப்புப் பிரச்சாரமாகும்?

அ) NASSCOM

ஆ) RBI

இ) இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில்

ஈ) இன்டர்போல் 

  • அக்.4–22 வரை “Keeping cybercriminals out: #JustOneClick” என்ற இணையவழி பாதுகாப்புப் பிரச்சாரத்தை இன்டர்போல் நடத்துகிறது; இது, சமூக ஊடகங்களில் நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம், இணைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மக்கள் தங்கள் கணினிகள், வலையமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்க உதவுவதாகும்.

6. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா ரெஸ்ஸா & டிமிட்ரி முரடோவ் ஆகியோர் சார்ந்த தொழில் எது?

அ) அரசியல்

ஆ) பத்திரிகை 

இ) பாதுகாப்பு

ஈ) சமூக சேவை

  • மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோர் பிலிப்பைன்ஸ் & ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
  • ஒரு பிலிப்பினோ – அமெரிக்க பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மரியா ரெஸ்ஸா, ராப்ளர் என்ற ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். டிமிட்ரி முரடோவ் என்பார் ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.

7. குழந்தைகளுக்கான (2–18 வயது) எந்தத்தடுப்பூசிக்கு, COVID–19 பற்றிய நிபுணர் குழு, அவசர பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியது?

அ) கோவிஷீல்ட்

ஆ) கோவாக்சின் 

இ) ஸ்புட்னிக்

ஈ) பைசர்

  • 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ஐதராபாத்தை சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கோவக்ஸின் கட்டம்–2 மற்றும் கட்டம்–3 சோதனைகளை முடித்து, அதன் சோதனைத் தரவை இந்திய மருந்துகள் மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (DCGI) சமர்ப்பித்தது.
  • பரிசோதிக்கப்பட்ட வயதுக் குழுக்கள்: 12–18 வயதுடையவர்கள்; 6–12 வயதுடையவர்கள் மற்றும் 2–6 வயதுடையவர்கள்.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற CRISP–M கருவி, எந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில், காலநிலை தகவலை உட்பொதிக்கிறது?

அ) MGNREGS 

ஆ) பிரதமர் ஆவாஸ் யோஜனா

இ) சௌபாக்யா

ஈ) பிரதமர் உஜ்வாலா யோஜனா

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் புவிசார் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலுக்கான பருவநிலை தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் இங்கிலாந்து வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகத்தின் தெற்காசிய மற்றும் காமன்வெல்த் இணையமைச்சர் லார்ட் தாரிக் அகமது ஆகியோர் இணைந்து காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இதை தொடங்கிவைத்தனர்.

9. மத்திய உள்துறை அமைச்சகமானது அண்மையில் எந்த மத்திய ஆயுதமேந்திய காவல்படையின் அதிகாரங்களை மேம்படுத்தியது?

அ) ITBP

ஆ) BSF 

இ) CRPF

ஈ) CISF

  • மத்திய உள்துறை அமைச்சகமானது அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் உள்ள பன்னாட்டு எல்லையிலிருந்து 50 கிலோமீட்டருக்குள் கைது செய்யவும், தேடவும், கைப்பற்றவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  • BSF என்பது நடுவணரசின்கீழ் உள்ள ஒரு மத்திய ஆயுதமேந்திய காவல்படையாகும். இந்த அதிகாரம், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இதற்கு முன்னர்வரை, BSF’இன் வரம்பு, குஜராத்தில் உள்ள பன்னாட்டு எல்லையிலிருந்து 80 கிமீ வரையும் இராஜஸ்தான், பஞ்சாப், மே வங்கம் மற்றும் அஸ்ஸாமில் 15 கிமீ வரையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

10. உலக எஃகு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ) சஜ்ஜன் ஜிண்டால் 

ஆ) ஆதித்யா மிட்டல்

இ) அனிர்பன் தாஸ்குப்தா

ஈ) கௌதம் அதானி

  • JSW ஸ்டீலின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால், 2021–22 காலத்திற்கு உலக எஃகு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடு –க்கப்பட்டார். இதன்மூலம் இந்தச் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய இந்தியாவின் முதல் பிரதிநிதியாகவும் ஜிண்டால் ஆனார். இவருக்கு முன் யூ யோங் அச்சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், உலகின் எஃகு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த 1967’இல் நிறுவப்பட்ட இதன் தலைமையகம் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இ–ஷ்ரம் இணையதளத்தில் – 4 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு:

கரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாயினர்.

ஆனால் இவர்கள் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் இல்லாததால் அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை திரட்டவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு இ–ஷ்ரம் திட்டத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இதற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இணையதளம் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் 4.15 கோடி தொழிலாளர்கள்இதுவரை இ–ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “இ–ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்து உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்கான நலத்திட்ட உதவி –களை எளிதில் நேரடியாகப் பெற முடியும். இதுவரை பதிவு செய்துள்ள 4.15 கோடி தொழிலாளர்களில் 50.6% பேர் பெண்கள். அதிகமான தொழி –லாளர்கள் வேளாண் & கட்டுமானத்துறை சார்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும் பதிவானவர்களில் 65.68 சதவீதத்தினர் 16–40 வயதினராவர். 34.32 சதவீதத்தினர் 40 வயதுக்கு மேலானவர்கள் ஆவர்” என்றார்.

2. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குள்ள வாய்ப்புகளை இஸ்ரேல் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.

வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் ஐந்து நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் முக்கிய தொழில் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட் -டு வருகின்றன. அதுதொடர்பான அனைத்து புள்ளிகளையும் இணைத்தால், உலகப்பொருளாதாரத்தில் அதிக போட்டித்தன்மையுள்ள வலுவான இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வது குறித்த பார்வை இஸ்ரேல் தொழில் நிறுவனங்களுக்கு புலப்படும். அந்த வலுவான இடம்மூலம்தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கரோனா தொற்று பரவத் தொடங்கிய இந்த 2 ஆண்டு காலத்தில் மாற்றத்துக்கான நடவடிக்கை துரிதமாகியுள்ளது. எனவே இஸ்ரேலில் பாதுகாப்புத் துறை சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் தொடங்குவ -தற்கு உகந்த விதத்தில் உள்ள கொள்கைகளை பயன்படுத்தி அங்கு முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமும் ஒன்று. இந்தியாவு -க்கு புதிய உற்பத்தி திறன்களை கொண்டு வந்து சேர்ப்பவர்களை ஈர்த்து, அவர்களுக்கு உரிய முறையில் ஊக்கத்தொகை அளிப்பதே அந்த திட்டத்தின் நோக்கம். இதுவரை 13 துறைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட் -டுள்ளன. அவற்றில் பேட்டரி உற்பத்தி, மின்னணு போன்றவை இஸ்ரேல் நிறுவனங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளாகும்.

இந்தியாவில் புதிதாக இயற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் வேளாண்மையை நிலையான வளர்ச்சி கொண்டாதாக்குகின்றன. அச் சட்டங்கள் வேளாண்மைத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழில்க
-ளைத் தொடங்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அடித்தளம் இடுகின்றன. இதுபோன்ற மாற்றங்கள் வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்தியா கருதுகிறது. இந்தியாவில் தற்போது எண்மம், சுகாதாரம், நீர், உழவு, பாதுகாப்புத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வெளியுறவு அமைச்சராக S ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளது இதுவே முதல்முறை.

3. ‘ஈரான் எரிவாயு உற்பத்தியில் இந்தியாவுக்கான உரிமை தொடரும்’

ஈரானின் ஃபர்ஸாத்-பி எரிவாயு வயலில் உற்பத்திப் பணிகள் உள்நாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டாலும், அந்தப் பணியில் 30 சதவீத உரிமை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு இப்போதும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஃபர்ஸாத்-பி பகுதியில் எரிவாயு இருப்பதை ஓஎன்ஜிசி தலைமையிலான இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புதான் கண்டறிந்தது. எனவே, அந்தப் பகுதியில் எரிவாயு உற்பத்தி செய்ய கூட்டமைப்பு இயல்பாகவே விரும்புகிறது. இதுதொடர்பான செயல்திட்டத்தையும் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது. எனினும், எரிவாயு உற்பத்திக்கான ஒப்பந்தத்தை உள்நாட்டு நிறுவனத்துக்கு ஈரான் அரசு வழங்கியுள்ளது.

இதன்விளைவாக, இந்தத் திட்டம் இந்தியாவின் கைகளிலிருந்து முழுமையாக நழுவிவிடவில்லை. அடிப்படை ஒப்பந்தத்தின் கீழும் அசல் உரிமத்தின் அடிப்படையிலும் ஃபர்ஸாத்-பி எரிவாயு உற்பத்தியில் இந்தியாவுக்கு 30 சதவீதம் உரிமை உள்ளது.

எரிவாயு உற்பத்தித் திட்டத்தை எந்த நிறுவனம் செயல்படுத்தினாலும், அதில் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு 30% உரிமை உள்ளதாக அடிப்படை ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார் அவர்.

4.2023ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் – இஸ்ரோ அதிகாரி தகவல்

துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நேற்று விண்வெளி வார நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பல்வேறு நாட்டு அரங்குகளில் அந்தந்த நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்திய அரங்கிலும் விண்வெளி வார நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் டாக்டர் ஆர் உமாமகேஷ்வரன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் (2022) விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் திட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்றதொழில்களை போலல்லாமல் விண்வெளித்துறையில் கட்டுமானங்கள் மற்றும் கருவிகளை தயாரிக்க நேரடியாக களத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனை வீட்டிலிருந்து செய்ய முடியாத நிலை உருவானதால், இஸ்ரோ சார்பில் பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தொடர்ந்து தயாரிக்க இயலவில்லை. நமது பிரதமர் மோடி அடுத்த ஆண்டு (2022) ஆகஸ்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஆர்வமாக இருந்தார்.

ஆனால் தற்போது அதனை நாங்கள் தவறவிட்டு விட்டோம். எனவே வருகிற 2023ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறோம். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டத்தில் ககன்யான் என்ற விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு அதன் மூலம் 4 இந்திய விண்வெளி வீரர்களை 2023ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் மனிதர்கள் அல்லாத விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமானது 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்று வருகிற டிசம்பர் மாதத்திலும், மற்றொன்றை அடுத்த ஆண்டிலும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் அடுத்ததாக சந்திரயான்-3 என்ற விண்கலம் அடுத்த ஆண்டு நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் வீனஸ் கிரகத்தை (வெள்ளி) 4 ஆண்டுகளுக்கு அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ‘சுக்ராயன்-1 ஆர்பிட்டர் விண்கலம்’ வருகிற 2024ஆம் ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

5. அக்.17 – சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

கருப்பொருள்: Building forward together: Ending Persistent Poverty, Respecting all People and our Planet (ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்).

6. அக்.13 – சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம்

கருப்பொருள்: International cooperation for developing countries to reduce their disaster risk and disaster losses (வளரும் நாடுகளின் பேரிடர் அபாயம் மற்றும் பேரிடர் இழப்புகளைக் குறைப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு)

1. When is the ‘National Voluntary Blood Donation Day’ observed?

A) October 1 

B) October 2

C) October 3

D) October 4

  • National Voluntary Blood Donation Day is celebrated on 1st October of every year across the country. It aims to raise awareness about Blood donation and promote voluntary Blood donation in the country.
  • The theme for this year’s Blood donation event is “Give Blood and keep the world beating”. Our country needs around 1.45 crore units of blood every year. Collection of blood is done through 3500 licensed blood banks across the country.

2. Who is the head of the expert panel set up by the International Financial Services Centres Authority, on sustainable finance?

A) Urjit Patel

B) C K Mishra 

C) Abhijeet Banerjee

D) Jean Drèze

  • The International Financial Services Centres Authority (IFSCA) has set up an expert panel headed by former Enviornment and Forest Secretary C K Mishra to suggest a framework to develop a world–class sustainable finance hub at IFSC. IFSCA was established in April last year under the IFSC Authority Act, 2019. It is headquartered at GIFT City, Gandhinagar.
  • IFSCA is an authority for the development and regulation of financial products, financial services and financial institutions in the International Financial Services Centre (IFSC) in India.

3. What is the name of the cyclone that hit Oman and is an offspring of the cyclone Gulab?

A) Shaheen 

B) Fakit

C) Gulmuhar

D) Tez

  • The Tropical Cyclone Shaheen has hit the coast of Oman. This cyclone is an offspring of the cyclone Gulab which had a devastating impact on the east coast of India in late September 2021. The remnant of cyclone Gulab along with the low–pressure region over Gujarat had gained strength to form the new cyclone Shaheen.

4. Which Ministry has launched the “Good Samaritan” initiative?

A) Ministry of Finance

B) Ministry of Road Transport and Highways 

C) Ministry of Rural Development

D) Ministry of Health and Family Welfare

  • The Government of India’s Union Ministry of Road transport and highways has launched a scheme named “Good Samaritan”. Under the scheme, anyone who saves the life of a road accident victim would be incentivized with Rs.5000/– and a certificate, if the victims are rushed to hospital within the “Golden hour”. Also, individuals could be awarded a maximum of five times in a year under the scheme.

5. “Keeping cybercriminals out: #JustOneClick” is a cyber security campaign launched by which organization?

A) NASSCOM

B) RBI

C) Data Security Council of India

D) Interpol 

  • The Interpol has launched a cyber security campaign – “Keeping cybercriminals out: #JustOneClick” from Oct.4 to 22, which will be organized mainly in social media.
  • The aim of this campaign is to create awareness about cyber threats and help people to protect their computer systems, networks and personal information from cyber criminals.

6. Maria Ressa and Dmitry Muratov, who received Nobel Peace Prize, are associated with which profession?

A) Politics

B) Journalism 

C) Defence

D) Social Service

  • Maria Ressa and Dmitry Muratov have been chosen for the Nobel Peace Prize 2021, for their efforts to safeguard and promote freedom of expression in the Philippines and Russia.
  • Maria Ressa is a Filipino–American journalist, author, and the co–founder of a media company Rappler. Dmitry Muratov is a Russian journalist and a television presenter.

7. Subject Expert Committee on Covid–19 granted emergency use approval to which vaccine for children (2–18 years)?

A) Covishield

B) Covaxin 

C) Sputnik

D) Pfizer

  • Subject Expert Committee on Covid–19 granted emergency use approval to Bharat Biotech’s Covaxin for children in the 2–18 years age group.
  • Hyderabad–based Bharat Biotech had completed Phase–2 and Phase–3 trials of Covaxin on children below 18 years of age and submitted the trial data to the Drugs and Comptroller General of India (DCGI). The 1st group examined was between 12 –18 years, the 2nd group was between 6– 12 years and the third age group was between 2–6 years.

8. CRISP–M tool, which was seen in the news recently, embeds climate information in implementing which scheme?

A) MGNREGS 

B) PM Awas Yojana

C) SAUBHAGYA

D) PM Ujjwala Yojana

  • Union Minister of Rural Development & Panchayati Raj Shri Giriraj Singh jointly launched Climate Resilience Information System and Planning (CRISP–M) tool.
  • It is used for integration of climate information in Geographic Information System based watershed planning under Mahatma Gandhi National Rural Employment Guarantee scheme. It was launched along with Lord Tariq Ahmad, Minister of State for South Asia and the Commonwealth in the UK Foreign, Commonwealth and Development Office through a virtual event.

9. Union Home Ministry has enhanced the powers of which Central Armed Police Force, recently?

A) ITBP

B) BSF 

C) CRPF

D) CISF

  • The Union Home Ministry has recently enhanced the powers of the Border Security Force (BSF) to arrest, search and seize within 50 km from the international boundary in Assam, West Bengal and Punjab. BSF is a Central armed police force under the Union.
  • This power will also be applicable to the newly created Union Territories of Jammu and Kashmir and Ladakh. Earlier, the BSF’s limit was fixed up to 80 km from the international boundary in Gujarat and 15 km in Rajasthan, Punjab, West Bengal and Assam.

10. Who is the first Indian to be elected as the Chairman of World Steel Association?

A) Sajjan Jindal 

B) Aditya Mittal

C) Anirban Dasgupta

D) Gautam Adani

  • JSW Steel Chairman and Managing Director Sajjan Jindal has been elected as the Chairman of the World Steel Association (WSA) for the 2021–22 period. Jindal also becomes the first representative from India to serve as Chairman of the WSA.
  • He precedes Yu Yong as the Chairman of WSA, whose members represent approximately 85 percent of the world’s steel production. Established in 1967, it is headquartered in Brussels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!