Tnpsc

18th September 2020 Current Affairs in Tamil & English

18th September 2020 Current Affairs in Tamil & English

18th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

18th September Tamil Current Affairs 2020

18th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில், இந்தியா, கையெழுத்திட்டுள்ளது?

அ. ஜப்பான்

ஆ. பிரான்ஸ்

இ. ஜெர்மனி

ஈ. பிரேசில்

  • கூட்டுப்பயிற்சியில், பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு கூட்டுப்பயிற்சி நடவ –டிக்கைகள், ஐநா அமைதிப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற் –றில் ஈடுபடும்போது, பொருட்கள் & சேவைகளை இருநாட்டு இராணுவப்படைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

2.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘PNGRB’ மற்றும் ‘CGD அங்கீகாரம்’ ஆகியவற்றுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆ. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

  • 56 இயற்கை எரிவாயு மையங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 56 இயற்கை எரிவாயு மையங்கள் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் பரவியுள்ளன. அவை சண்டிகர், பீகார், ஹரியானா, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகும்.
  • பதினோராவது நகர எரிவாயு விநியோக (CGD) அங்கீகார சுற்றுகளை தொடங்க, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த ஒழுங்குமுறை வாரியமானது வண்டிகளுக்கும், வீடுகளுக்கும் சமையல் எரிவாயுவை வழங்கும் சில்லறை வணிக CNG நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கிறது.

3.எந்த அமைச்சகத்தின்கீழ், தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (NSTEDB) செயல்பட்டு வருகிறது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியமானது (NSTEDB) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாக்கம், தொழில்முனைவோர் & அடைவு வினையூக்கத்தில் தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTED) பயணம் குறித்த அறிக்கையை சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது.

4.கப்பல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட புதிய குறைதீர்ப்புத் தளத்தின் பெயர் என்ன?

அ. SAROD – துறைமுகங்கள்

ஆ. SAROJ – துறைமுகங்கள்

இ. SHIMOGA – துறைமுகங்கள்

ஈ. SPEAK – துறைமுகங்கள்

  • கடல்சார் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும் ‘SAROD – துறைமுகங்கள் (Society for Affordable Redressal of Disputes)’ அமைப்பை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளிவழியில் தொடங்கிவைத்தார்.
  • SAROD–துறைமுகங்கள், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடனான மோதல்களை, நடுவர்களாக இருந்து தீர்வுகாண்ப்தை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, சட்ட செலவுகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, NHAI’ஆல் நிறுவப்பட்ட SAROD–சாலைகள் அமைப்பு போன்று செயல்படுகிறது.

5.அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி நிறுவனமான நார்த்ரோப் கிரம்மன், தனது விண்கலத்திற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எந்த விண்வெளி வீரர் / வீராங்கனையின் பெயரைச் சூட்டியுள்ளது?

அ. இராகேஷ் சர்மா

ஆ. கல்பனா சாவ்லா

இ. சுனிதா வில்லியம்ஸ்

ஈ. லாரல் கிளார்க்

  • அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான நார்த்ரோப் கிரம்மன் தனது விண்கலத்திற்கு விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சார்ந்த முதல் பெண்மணியான கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியுள்ளது. இந்நிறுவனம் தனது NG–14 சிக்னஸ் விண்கலத்திற்கு ‘SS கல்பனா சாவ்லா’ எனப் பெயரிட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் அதன் ஒவ்வொரு சிக்னஸ் கலத்துக்கும் மனித விண்வெளிப்பயணத்தில் தனிப்பட்ட சாதனை புரிந்தோரின் பெயரைச்சூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

6.ஐந்து விண்மீன் சிற்றூர்கள் (5 Star Villages) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ள அரசுத்துறை எது?

அ. வேளாண்மை, கூட்டுறவு & உழவர் நலத்துறை

ஆ. அறிவியல் & தொழில்நுட்பத்துறை

இ. நிதியியல் சேவைகள் துறை

ஈ. அஞ்சல் துறை

  • நாட்டின் உட்புற சிற்றூர்களில், இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 5 விண்மீன் சிற்றூர்கள் என்ற புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்குகள், PPF கணக்குகள், பிரதமர் சரக்ஷா பீமா யோஜனா கணக்கு, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு மற்றும் பிற சேமிப்புக்கணக்குகள் மற்றும் தொடர் வைப்புக்கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

7. US ஓப்பன் அரையிறுதிப் போட்டிக்கு, தொடர்ந்து 11ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ள விளையாட்டு வீராங்கனை யார்?

அ. செரீனா வில்லியம்ஸ்

ஆ. கரோலினா பில்ஸ்கோவா

இ. சோபியா கென்

ஈ. ஜோகன்னா கொன்டா

  • US ஓப்பன் அரையிறுதிப் போட்டிக்கு, செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து 11ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம், US ஓப்பனில் தொடர்ச்சியாக 11 முறை அரையிறுதிக்குள் நுழைந்த பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
  • 38 வயதான செரீனா வில்லியம்ஸ், 6 US ஓப்பன் உட்பட 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். US ஓப்பனில், நான்கு முறை இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

8.டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை (Digital Payment Index) உருவாக்க முடிவுசெய்துள்ள அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம்

ஈ. பாரத வங்கி (SBI)

  • டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வகுப்பதன்மூலம் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் அளவை அளவிட ரிசர்வ் வங்கி (RBI) முடிவுசெய்துள்ளது. இந்தக் குறியீடானது ஏற்கனவே உள்ள முறைகளில் புதுமைகளை மதிப்பிடும் மற்றும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைக்க உதவும். டிஜிட்டல் கொடுப்பனவு தொடர்பான நந்தன் நிலகேனி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டின் உருவாக்கம் அமைந்துள்ளது.

9.போர்ப்ஸின் அமெரிக்க செல்வந்தர்கள் பட்டியலில், முதலிடம் பிடித்த தொழில்முனைவோர் யார்?

அ. பில் கேட்ஸ்

ஆ. டொனால்ட் டிரம்பு

இ. ஜெப் பெசோஸ்

ஈ. வாரன் பபெட்

  • போர்ப்ஸின் பணக்கார அமெரிக்கர்களின் பட்டியலில், அமேசானின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். போர்ப்ஸின் பட்டியலின்படி தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத்தொடர்ந்த இடத்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார். போர்ப்ஸ் மற்றும் புளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டின்படி, $200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டுள்ள முதல் நபராக ஜெப் பெசோஸ் மாறியுள்ளார்.

10.புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் தொடர்பாக, மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • COVID–19 காரணமாக இலக்கு மாநிலங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டது. புலம்பெயர்ந்தோருக்கு விலையில்லா COVID–19 பரிசோதனைகளை நடத்துதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போதிருக்கும் மாநிலங்களில் இருந்து பிறிதொரு மாநிலத்திற்குச் செல்லும் அனைத்து தொழிலாளர்களின் தகவல்களும் அடங்கிய தரவுத்தளத்தையும் பராமரிக்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

1. Which country launched a campaign named ‘Asol Chini’, to curb fake information on Social Media?

[A] Bangladesh

[B] Myanmar

[C] Sri Lanka

[D] Pakistan

  • Bangladesh has recently launched a nation–wide campaign named ‘Asol Chini’, to curb fake information on Social Media. The ‘Asol Chini’ campaign, which means ‘real identification’, aims to create digital literacy to stop fake information and rumours. To implement this three–month long campaign, a digital platform Durbar21.org has been created.

2. What is the name of the new platform launched by the Prime Minister, for managing Livestock?

[A] e–Gopala App

[B] e– Livestock App

[C] e–Gaumata App

[D] e–Animal Info

  • The Prime Minister is to launch a new platform for managing Livestock named as e–Gopala App, which will serve as a breed improvement marketplace. The portal also aims to provide information on managing livestock including buying and selling of germplasm of livestock. It also ensures Quality breeding services for livestock, Animal nutrition and traditional medical treatment. It also sends alerts to remind vaccination and calving.

3. Which neighbouring country of India has proposed to ban cow–slaughter?

[A] Bangladesh

[B] Nepal

[C] Sri Lanka

[D] China

  • As per the recent media reports, the ruling party of Sri Lanka, the Sri Lanka Podujana Peramuna (SLPP) has approved a proposal to ban cow slaughter. In the country, about 99% people are meat–eaters. Whereas, the majority Hindus and Buddhists do not eat beef. Mahinda Rajapaksa–led SLPP party won a two–thirds majority in the parliamentary elections last month.

4. The country’s second Kisan Rail that was flagged off recently, would connect which two cities?

[A] Bangalore – Mumbai

[B] Chennai – Delhi

[C] Anantapur – Delhi

[D] Hyderabad – Kolkata

  • The country’s second and South India’s first Kisan Rail service has been recently flagged off. This would connect Anantapur in Andhra Pradesh to Adarsh Nagar Railway Station in Delhi. The train was flagged off by the Union Minister for Agriculture Narendra Singh Tomar. The Kisan Rail scheme was announced in Budget 2020–21 for transport of agricultural products.

5. Which Union Ministry has released a book with 33 Action Plans 2020–21 of all of its schemes?

[A] Ministry of Agriculture and Farmers Welfare

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of Health and Family Welfare

[D] Ministry of Housing and Urban Affairs

  • The Union Minister of Social Justice & Empowerment, Thaawarchand Gehlot has recently released a book containing 33 Action Plans 2020–21 of all the schemes of the Department of Social Justice & Empowerment. This is the first time that the Department has released comprehensive Annual Action Plan 2020–21. The aim is to provide specific targets for the Ministry, State Governments and NGOs.

6. Which Indian state has launched the first integrated Air ambulance service of South India?

[A] Tamil Nadu

[B] Karnataka

[C] Kerala

[D] Andhra Pradesh

  • The Chief Minister of Karnataka B.S. Yediyurappa has recently launched an Integrated Air ambulance service. Being the first air ambulance from South India, it has German Isolation Pod to transport critical COVID–19 patients. It is developed by ICATT in coordination with an aviation technology firm. The service is expected to serve medical emergencies in spite of heavy road traffic.

7. Which India state/UT has launched ‘e–filing consumer complaint system’?

[A] Bihar

[B] Uttar Pradesh

[C] New Delhi

[D] Puducherry

  • The Chief Minister of New Delhi Arvind Kejriwal has recently inaugurated the Delhi government’s e–filing consumer complaint system. The system is aimed at helping the people to file complaints through virtual mode. This digital service helps people maintain social distancing amidst the COVID–19 pandemic. In July, Delhi launched an e–RTI portal that will enable citizens to file online Right to Information (RTI).

8. SEBI has approved which organisation to undertake e–KYC Aadhaar authentication?

[A] BSE

[B] NSE

[C] NABARD

[D] NHB

  • SEBI has added National Stock Exchange (NSE) to the list of entities that can carry out e–KYC Aadhaar authentication. Earlier in May 2020, SEBI had rolled out a list of 8 entities that permitted to undertake e–KYC (electronic–Know Your Customer) Aadhaar authentication. SEBI has stated that NSE can undertake Aadhaar authentication service of the UIDAI subject to compliance certain terms and conditions.

9. India has held a Joint Commission Meeting with which country recently, for the first time?

[A] Angola

[B] Argentina

[C] Cuba

[D] Costa Rica

  • The first Joint Commission Meeting between India and Angola was held recently. The meeting was co–chaired by External Affairs Minister S Jaishankar and his counterpart Tete Antonio. During the meeting, the two countries agreed to diversify their trade relationship. The leaders also discussed regarding cooperation in health, pharmaceuticals, defence, agriculture sectors.

10. The United Nations World Food Programme (WFP) has partnered with which Indian state to set up supplementary nutrition production units?

[A] Bihar

[B] Uttar Pradesh

[C] Uttarakhand

[D] Jharkhand

  • The United Nations World Food Programme (WFP) and the Uttar Pradesh State Rural Livelihood Mission (SRLM) are to collaborate in establishing over 200 supplementary nutrition production units. This is to be undertaken under the Integrated Child Development Services (ICDS) scheme. This partnership aims to reach nearly 33 lakh beneficiaries in 18 districts, by 2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!