Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions 10th Social Science Lesson 5

10th Social Science Lesson 5

5] 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1860இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒரு சில படித்த மனிதர்களுமே அதனைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

நாட்டில் நிலவிய பசிக்கும் வறுமைக்கும் இராமலிங்கர் சாட்சியாய் இருந்தார். “பசியினால் இளைத்துப் போன, மிகவும் சோர்வுற்ற ஏழை மக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுவதை நான் பார்த்தேன். இருந்தும் அவர்களின் பசி போக்கப்படவில்லை என் இதயம் கடுமையாக வேதனைப்படுகிறது. கடுமையான நோயினால் வேதனைப்படுபவர்களை எனக்கு முன்பாகப் பார்க்கிறேன். எனது இதயம் நடுங்குகிறது. ஏழைகளாகவும் இணையில்லா நன்மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள அம்மக்களை நான் பார்க்கிறேன், நான் பலவீனம் அடைகிறேன்”

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

(அ) 1827

(ஆ) 1829

(இ) 1826

(ஈ) 1927

2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

(அ) ஆரிய சமாஜம்

(ஆ) பிரம்ம சமாஜம்

(இ) பிராத்தனை சமாஜம்

(ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

(அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

(ஆ) இராஜா ராம்மோகன் ராய்

(இ) அன்னிபெசன்ட்

(ஈ) ஜோதிபா பூலே

4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்?

(அ) பார்சி இயக்கம்

(ஆ) அலிகார் இயக்கம்

(இ) இராமகிருஷ்ணர்

(ஈ) திராவிட மகாஜன சபை

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

(அ) பாபா தயாள் தாஸ்

(ஆ) பாபா ராம்சிங்

(இ) குருநானக்

(ஈ) ஜோதிபா பூலே

6. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

(அ) M. G. ரானடே

(ஆ) தேவேந்திரநாத் தாகூர்

(இ) ஜோதிபா பூலே

(ஈ) அய்யன்காளி

7. “சத்யார்த்த பிரகாஷ்” எனும் நூலின் ஆசிரியர் யார்?

(அ) தயானந்த சரஸ்வதி

(ஆ) அயோத்தி தாசர்

(இ) அன்னிபெசன்ட்

(ஈ) சுவாமி சாரதா நந்தா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ____________

3 குலாம்கிரி நூலை எழுதியவர் ___________

4. இராமகிருஷ்ணா மிஷன் ___________ ஆல் நிறுவப்பட்டது.

5. ____________ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

6. “ஒரு பைசா தமிழன்” பத்திரிகையைத் துவக்கியவர் ____________ ஆவார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.

iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.

iv) இராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

(அ) i சரி

(ஆ) i, ii ஆகியன சரி

(இ) i, ii, iii ஆகியன சரி

(ஈ) i, iii ஆகியன சரி

2. i) பிரார்த்தன சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) i, ii ஆகியன சரி

(ஈ) iii, iv ஆகியன சரி

3. i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார்.

iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

(அ) i சரி

(ஆ) i மற்றும் ii சரி

(இ) iii சரி

(ஈ) i, iii மற்றும் iv சரி

4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

(அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

(இ) இரண்டுமே தவறு.

(ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

பொருத்துக:

1. ஒரு பைசா தமிழன் – விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

2. திருவருட்பா – நிரங்கரி இயக்கம்

3. பாபா தயாள்தாஸ் – ஆதி பிரம்மசமாஜம்

4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் – பத்திரிக்கை

5. தேவேந்திரநாத் – ஜீவகாருண்யப் பாடல்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (1829) 2. ஆரிய சமாஜம் 3. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 4. பார்சி இயக்கம்

5. பாபா ராம்சிங் 6. M. G. ரானடே 7. தாயானந்தி சரஸ்வதி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ராமலிங்க அடிகள் 2. ரானடே 3. ஜோதிபா பூலே 4. சிங்சபா 5. அயோத்தி தாசர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i, iv ஆகியன சரி

2. i, ii சரி

3. i மற்றும் ii சரி

4. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.

பொருத்துக: (விடைகள்)

1. ஒரு பைசா தமிழன் – பத்திரிகை

2. திருவருட்பா – ஜுவகாருன்யப் பாடல்கள்

3. பாபா தயாள்தாஸ் – நிரங்காரி இயக்கம்

4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் – விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

5. தேவேந்திரநாத் – ஆதி பிரம்மசமாஜம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!