MCQ Questions

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் 10th Social Science Lesson 1 Questions in Tamil

10th Social Science Lesson 1 Questions in Tamil

1] 19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், அலிகார் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை, ஆரியசமாஜம், ராமகிருஷ்ணா மிஷன், தியோபந்த் இயக்கம் போன்ற சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொரு வகை.)

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. குஜராத் – ஜோதிபா பூலே

2. கேரளா – நாராயண குரு, அய்யங்காளி

3. தமிழகம் – ராமலிங்க அடிகள், வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர்

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: புனே – ஜோதிபா பூலே)

  1. ராஜா ராம்மோகன் ராய் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?

1. வங்காளம் 2. சமஸ்கிருதம் 3. அரபி

4. பாரசீகம் 5. ஆங்கிலம்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 2, 3, 4 D) 1, 3, 4, 5

(குறிப்பு: ராஜா ராம்மோகன் ராய் மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்க காலச் சீர்திருத்த வாதிகளில் ஒருவராவார்.)

  1. கூற்று 1: ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமய சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார்.

கூற்று 2: கடந்த காலத்துடனான தொடர்பை ராஜா ராம்மோகன் ராய் பாதுகாக்க விரும்பவில்லை.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கடந்த காலத்துடனான தொடர்பை ராஜா ராம்மோகன் ராய் பாதுகாக்க விரும்பினார். தன்னுடைய சமய, தத்துவ சமூகப் பார்வையில் அவர் ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.)

  1. ராஜா ராம்மோகன் ராய் கீழ்க்கண்ட எவற்றிற்கு எதிராக சட்டங்கள் இயற்றும் படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார்?

1. உடன்கட்டை ஏறுதல் 2. குழந்தைத் திருமணம்

3. பலதார மணம் 4. விதவைகள் மறுமணம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: ராஜா ராம்மோகன் ராய் விதவை பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.)

  1. __________ ஆண்டு தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றினார்.

A) 1819 B) 1822 C) 1825 D) 1829

(குறிப்பு: சதி ஒழிப்புச் சட்டம் இயற்றியதில் ராஜா ராம்மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார். கல்கத்தாவின் இடுகாடுகளுக்குச் சென்று விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார்.)

  1. கூற்று 1: ராஜா ராம்மோகன் ராய் உபநிடதங்களுக்குத் தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.

கூற்று 2: ராஜா ராம்மோகன் ராய் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை எதிர்த்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ராஜா ராம்மோகன் ராய் உபநிடதங்கள் எல்லையற்ற ஆதி அந்தமில்லாத தெய்வீகமான பிரம்மம் குறித்த செய்திகளைப் பேசுகையில், தனது அன்றாட வாழ்வில், தம்மைச் சுற்றித் தான் பார்க்கும் இந்துமதம் உபநிடதங்களின் போதனைகளிலிருந்து முரண்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.)

  1. ராஜா ராம்மோகன்ராய் 1828 பிரம்ம சமாஜத்தை நிறுவி _________நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார்.

A) ஜூன் 10

B) அக்டோபர் 20

C) ஆகஸ்ட் 20

D) நவம்பர் 10

(குறிப்பு: இக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோப் பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதி வைத்தார்.)

  1. கூற்று 1: பிரம்ம சமாஜம் உருவ வழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது.

கூற்று 2: தொடக்கம் முதலாக பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தன்பால் ஈர்ப்பதில் சமாஜம் தோல்வியடைந்தாலும், நவீன வங்காளப் பண்பாட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதான அதனுடைய தாக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.)

  1. ராஜா ராம்மோகன் ராய் ___________ ஆண்டு இயற்கை எய்தினார்.

A) 1830 B) 1831 C) 1832 D) 1833

(குறிப்பு: ராஜா ராம்மோகன் ராய் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான தேவேந்திரநாத் தாகூர் தொடர்ந்தார்.)

  1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய __________ கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: நான்கு கொள்கைக் கூறுகள்

  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.)
  1. கேசவ் சந்திரசென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு

A) 1838 B) 1854 C) 1857 D) 1884

(குறிப்பு: கிறிஸ்துவ மதத்தால் பெருமளவில் கவரப்பட்ட கேசவ் சந்திர சென் கிறித்தவ மதத்தின் சாரத்தை நம்பினார்.)

  1. ___________ ஆண்டு பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்.

A) 1858 B) 1867 C) 1872 D) 1886

(குறிப்பு: குழந்தை திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்த போதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்த போது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும் அமைப்பை உருவாக்கினர்.)

  1. 1886 இல் பிரம்ம சமாஜ உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்ட போது தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு _________ என அழைக்கப்படலாயிற்று.

A) தாகூர் பிரம்ம சமாஜம்

B) ஆதி பிரம்ம சமாஜம்

C) அகிம்சா பிரம்ம சமாஜம்

D) சாதாரண பிரம்ம சமாஜம்

(குறிப்பு: தேவேந்திரநாத் தாகூர் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார்.)

  1. ராஜா ராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது ___________இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார்.

A) ஆத்மாராம் பாண்டுரங்

B) M.G. ரானடே

C) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

D) கேசவ் சந்திர சென்

(குறிப்பு: வித்யாசாகர், விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடை செய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்.)

  1. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?

A) ராஜா ராம்மோகன் ராய்

B) M.G. ரானடே

C) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

D) கேசவ் சந்திர சென்

(குறிப்பு: வித்யாசாகர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறு நூல்களை வெளியிட்டார்.)

  1. கூற்று 1: பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

கூற்று 2: ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் __________ ஆண்டு மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.

A) 1852 B) 1854 C) 1856 D) 1858

(குறிப்பு: விதவைகள் மறுமணச் சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்க வேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.)

  1. திருமண வயதுச் சட்டம் முதல் முறையாக இயற்றப்பட்ட ஆண்டு

A) 1840 B) 1850 C) 1860 D) 1870

(குறிப்பு: திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்ட பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையே சாரும். இச்சட்டத்தில் திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது.)

  1. திருமண வயது சட்டப்படி, திருமணத்திற்கான வயது பன்னிரெண்டாக உயர்த்தப்பட்ட ஆண்டு

A) 1860 B) 1872 C) 1882 D) 1891

(குறிப்பு: 1925இல் திருமணத்திற்கான வயது பதிமூன்றாக உயர்த்தப்பட்டது. திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது.)

  1. பிரம்ம சமாஜத்துக்கு இணையாக பம்பாயில் _________ ஆண்டு பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்டது.

A) 1825 B) 1848 C) 1857 D) 1867

(குறிப்பு: மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற பகுதியாகும்.)

  1. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர்

A) R.C பண்டர்கர்

B) ஆத்மராம் பாண்டுரங்

C) மகாதேவ் கோவிந்த் ரானடே

D) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

(குறிப்பு: பிரார்த்தனை சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C பாண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த ரானடே ஆகிய இருவருமாவர்.)

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (அமைப்பு-உருவாக்கப்பட்ட ஆண்டு)

1. விதவை மறுமணச் சங்கம் – 1861

2. புனே சர்வஜனிக் சபா – 1870

3. தக்காணக் கல்விக் கழகம் – 1882

A) அனைத்தும் சரி

B) 1, 3 சரி

C) 1, 2 சரி

D) 2, 3 சரி

(குறிப்பு: தக்காணக் கல்விக் கழகம் – 1884. மேற்கண்ட அமைப்புகளை மகாதேவ் கோவிந்த் ரானடே நிறுவினார்.)

  1. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்பது யாருடைய நூல்

A) மகாதேவ் கோவிந்த ரானடே

B) ஜோதிபா பூலே

C) தயானந்த சரஸ்வதி

D) ஆத்மாராங் பாண்டுரங்

(குறிப்பு: ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். குலாம்கிரி நூல் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கண்டனம் செய்தது.)

  1. ஆரியசமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்கு தலைமையேற்ற இடம்

A) வங்காளம்

B) பம்பாய்

C) ஆக்ரா

D) பஞ்சாப்

(குறிப்பு: ஆரிய சமாஜம் என்ற அமைப்பு மேலை கங்கைச் சமவெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் 1875 ல் நிறுவப்பட்டது. சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார்.)

  1. சத்யார்த்தபிரகாஷ் என்ற நூலை இயற்றியவர்

A) மகாதேவ் கோவிந்த ரானடே

B) ஜோதிபா பூலே

C) தயானந்த சரஸ்வதி

D) ஆத்மாராங் பாண்டுரங்

(குறிப்பு: சத்யார்த்தபிரகாஷ் என்ற நூல் பெரும்பாலோரால் படிக்கப்பட்டது.)

  1. கூற்று 1: குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தயானந்த சரஸ்வதி அறிவித்தார்.

கூற்று 2: தயானந்த சரஸ்வதி முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பது எந்த அமைப்புடைய முழக்கம்

A) பிரார்த்தனை சமாஜம்

B) பிரம்ம சமாஜம்

C) ராமகிருஷ்ணா மிஷன்

D) ஆரிய சமாஜம்

(குறிப்பு: ஆரியசமாஜம் இந்து மதத்திலிருந்த மூடநம்பிக்கைகளைக் குறிப்பாகப் புராண இலக்கியங்களை மறுத்தது.)

  1. ‘எதிர் மாற்றம்’ என்பது எந்த அமைப்புடைய முக்கிய குறிக்கோள்

A) பிரார்த்தனை சமாஜம்

B) பிரம்ம சமாஜம்

C) ராமகிருஷ்ணா மிஷன்

D) ஆரிய சமாஜம்

(குறிப்பு: ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற ‘சுத்தி’ எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக் கொடுத்தது.)

  1. பிரிக்கப்படாத பஞ்சாபில் குழப்பமான இந்து, இஸ்லாம் கிறித்தவ சமயங்களிடையேத் தீவிரமான சர்ச்சைகள் நடந்த காலப்பகுதி

A) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி

B) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி

C) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி

D) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி

(குறிப்பு: ஆரிய சமாஜம் பல தயானந்தா ஆங்கிலோ-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.)

  1. தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் ஆரியசமாஜம் இரண்டாக பிரிந்த ஆண்டு

A) 1872 B) 1883 C) 1893 D) 1895

(குறிப்பு: தயானந்த சரஸ்வதிக்குப் பின்னர் பொறுப்பேற்ற வசீகர ஆளுமை கொண்ட சுவாமி ஸ்ரத்தானந்தா DAV பள்ளிகளை நடத்திக்கொண்டிருந்த குழுவினரை நிறுவனரின் தத்துவத்தைப் புறக்கணித்து மிக அதிகமான அளவில் மேற்கத்திய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.)

  1. சுவாமி ஸ்ரத்தானந்தா ________முதலாக பல பள்ளிகளை (குருகுலம்) நிறுவினார்.

A) 1897 B) 1898 C) 1899 D) 1900

(குறிப்பு: சுவாமி ஸ்ரத்தானந்தா நிறுவிய பள்ளிகள் வெளித்தோற்றத்தில் பண்டைய இந்துக்கல்விக் கூட பாணியில் இருந்தன. அங்கு வேதக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.)

  1. ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடுவதைப்போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

B) பரமஹம்சரின் கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் அவை வீடு பேற்றுக்கு இட்டுச் செல்லும்.

C) ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.

D) கடவுளுக்கு செய்யப்படும் சேவையே மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையாகும் என கூறினார்.

(குறிப்பு: ராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச் சேர்ந்த எளிய அர்ச்சகர். அவர் இரக்கம் தேவையில்லை சேவையே தேவை. மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என கூறினார்.)

  1. ராமகிருஷ்ண பரமஹம்சர் ________ ஆண்டு இயற்கை எய்தினார்.

A) 1856 B) 1875 C) 1882 D) 1886

(குறிப்பு: ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த பின் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம் சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு ராமகிருஷ்ணரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பணியை மேற்கொண்டனர். இதன் பின்புலமாய் இருந்தவர் சுவாமி விவேகானந்தர்.)

  1. __________ன் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.

A) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

B) கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள்

C) பிரம்ம சமாஜம்

D) பௌத்த மடங்கள்

(குறிப்பு: ராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்ம சமாஜம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக் கருத்துகளின்பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான்.)

  1. ராமகிருஷ்ணா மிஷன் கீழ்க்கண்ட எந்த செய்பாடுகளில் ஈடுபட்டது?

1. சமயச் செயல்பாடுகள்

2. கல்விப் பணி

3. மருத்துவ உதவி

4. இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகள்

A) அனைத்தும் B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

  1. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) நரேந்திர தத்தா ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மை சீடராவார்.

B) மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத விவேகானந்தர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.

C) மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்குமாறு விவேகானந்தர் கூறினார்.

D) பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த விவேகானந்தர் இந்து சமூகத்திற்கு புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

(குறிப்பு: மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை விவேகானந்தர் கண்டனம் செய்தார்.)

  1. __________ ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிகள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தது.

A) 1882 B) 1884 C) 1892 D) 1893

(குறிப்பு: விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.)

  1. பிரம்மஞான சபை அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஆண்டு

A) 1865 B) 1875 C) 1878 D) 1886

(குறிப்பு: மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832 – 1907) ஆகியோரால் பிரம்மஞான சபை நிறுவப்பட்டது.)

  1. பிரம்மஞான சபை இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்ட ஆண்டு

A) 1876 B) 1878 C) 1885 D) 1886

(குறிப்பு: பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.)

  1. இந்தியாவில் _________ புத்துயிர் பெறுவதில் பிரம்மஞான சபை முக்கிய பங்காற்றியது.

A) இந்து மதம்

B) சமணம்

C) பெளத்தம்

D) கிறித்துவம்

(குறிப்பு: இந்து மறை நூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.)

  1. ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

A) மேடம் பிளாவட்ஸ்கி

B) நாராயண குரு

C) அன்னை தெரசா

D) அன்னிபெசன்ட்

(குறிப்பு: இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.)

  1. அன்னிபெசன்ட் கீழ்க்கண்ட எந்த பத்திரிக்கைகளின் மூலம் பிரம்மஞானக் கருத்துக்களை பரப்பினார்?

1. நியூ இந்தியா 2. சுதேசமித்திரன்

3. காமன்வீல் 4. திராவிடம்

A) அனைத்தும் B) 1, 2 C) 1, 3 D) 2, 4

  1. ஜோதிபா பூலே ________ ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.

A) 1818 B) 1822 C) 1825 D) 1827

(குறிப்பு: ஜோதிபா பூலே பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்க காலத் தலைவரென்றே அறியப்படுகிறார்.)

  1. ஜோதிபா பூலேவால் ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளி திறக்கப்பட்ட ஆண்டு

A) 1832 B) 1847 C) 1852 D) 1855

(குறிப்பு: ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.)

  1. சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பை நிறுவியவர்

A) நாராயண குரு

B) அன்னிபெசன்ட்

C) ஜோதிபா பூலே

D) அய்யன்காளி

(குறிப்பு: இவ்வமைப்பு பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்களோடும் வாழ்த்தூண்டுவதாய் அமைந்தது.)

  1. ஜோதிபா பூலே குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

2. விதவை மறுமணத்தைக் குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.

3. ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்பணித்தனர்.

4. ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

A) 3 மட்டும் தவறு

B) 3, 4 தவறு

C) 2 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: தன்னுடைய சமகால தேசியவாதிகளைப் போலல்லாமல் பூலே ஆங்கிலேய ஆட்சியையும் சமயப் பரப்பாளர்களின் செயல்பாடுகளையும் ஆதரித்தார்.)

  1. நாராயண குரு கேரளாவில் பிறந்த ஆண்டு

A) 1852 B) 1853 C) 1854 D) 1855

(குறிப்பு: நாராயண குரு மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்.)

  1. ஸ்ரீதர்ம பரிபாலன் யோகம் எனும் அமைப்பை உருவாக்கியவர்

A) ஜோதிபா பூலே

B) நாராயண குரு

C) சாவித்திரி பாய்

D) அய்யன்காளி

(குறிப்பு: பயங்கரமான சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம்வெதும்பிய நாராயணகுரு அம்மக்களின் மேம்பாட்டிற்கு பணியாற்றுவதற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.)

  1. நாராயணகுரு __________ எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக்கட்டி அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.

A) வெங்கனூர்

B) அருவிபுரம்

C) திருவனந்தபுரம்

D) வங்காளம்

(குறிப்பு: நாராயண குருவின் இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெரும் மாற்றங்கள் நிகழ உந்து சக்தியாய்த் திகழ்ந்தது.)

  1. நாராயண குருவின் சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்

A) சையத் அகமது கான்

B) கங்கோத்ரி, முகமது குவாசிம்

C) பெரோசா மேத்தா, தின்சா வாச்சா

D) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு

  1. அய்யன்காளி ________ ஆண்டு திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார்.

A) 1853 B)1855 C) 1862 D) 1863

(குறிப்பு: அக்காலத்தில் இப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும்.)

  1. ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி _______ ஆண்டு சாது ஜன பரிபாலன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

A) 1902 B) 1905 C) 1907 D) 1909

(குறிப்பு: சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) கீழ்சாதியாகக் கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூக மக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதி திரட்டியது.)

  1. கல்வி, அரசுப்பணிகள், தேசிய அளவில் தலைமை வகித்தல் ஆகியவற்றில் தங்கள் இடங்களைப் பெரிதும் இழந்துவிட்ட இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் ஆங்கிலக் கல்வியை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு மாற்று இல்லை என்ற புரிதலுக்கு உயிரும் உணர்வும் கொடுத்தவர்

A) முகமது குவாசிம் நானோதவி

B) ரஷித் அகமத் கங்கோத்ரி

C) பெரோசா மேத்தா

D) சர் சையத் அகமத்கான்

(குறிப்பு: டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்குவிளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக் கருதினார்.)

  1. சையத் அகமத்கான் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார்.

2. அறிவியல் கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களை குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்.

3. மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: சையத் அகமத் கான் இஸ்லாமியருக்கு ஆங்கிலக் கல்வியைப் பயிலும் படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.)

  1. சர் சையத் அகமத்கான் __________ ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.

A) 1865 B) 1872 C) 1875 D) 1878

(குறிப்பு: சர் சையத் அகமத்கானின் அலிகார் இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்திய முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.)

  1. அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி________ ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

A) 1912 B) 1915 C) 1918 D) 1920

(குறிப்பு: அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்து வந்த சந்ததியினரைச் சேர்ந்தோரை ஒரு கற்றரிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது. அவர்களனைவரும் பொதுவாழ்க்கையில் முக்கிய பங்குவகித்தனர்.)

  1. பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால் தொடங்கப்பெற்ற தியோபந்த் இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள்,

1. குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான பேதனைகளைப் பரப்புரை செய்தல்

2. இல்லாமல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல்

A) இரண்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு: தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.)

  1. பழமைவாத முஸ்லீம் உலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி, ரஷீத் அகமத் கங்கோத்ரி ஆகியோரின் தலைமையில் ________ ஆண்டு உத்திரப் பிரேதேசத்தில் சகரன்பூரின் ஒரு பள்ளியை நிறுவினர்.

A) 1832 B) 1845 C) 1866 D) 1872

(குறிப்பு: இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக் கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது. உண்மையான இஸ்லாமிய மதம் இப்பள்ளியில் கற்றுத்தரப்பட்டது.)

  1. கூற்று 1: தியோபந்த் பள்ளியின் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

கூற்று 2: தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பணிகளுக்குத் தயார் செய்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பணிகளுக்குத் தயார் செய்யவில்லை. மாறாக இஸ்லாம் மத நம்பிக்கையைப் பரப்புரை செய்யத் தயார் செய்தது.)

  1. ‘தி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன்’, ‘முகமதன் ஆங்கிலோ-ஓரியண்டல் ஆசோசியேஷன்’ஆகியவ அமைப்புகள் யாருடையது?

A) முகமத்-உல்-ஹசன்

B) முகமது குவாசிம்

C) சையத் அகமத் கான்

D) ரஷித் அகமத் கங்கோத்ரி

(குறிப்பு: 1888 ல் தியோபந்த் உலேமா சையத் அகமத்கானுடைய அமைப்புகளுக்கு எதிராக சமய ஆணையைப் பிறப்பித்தது.)

  1. கூற்று 1: அரசியல் களத்தில், தியோபந்த் பள்ளி 1885 இல் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது.

கூற்று 2: முகமத்-உல்-ஹசன் தலைமையில் இயங்கிய ஜமைத்-உல்-உலேமா ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை என்னும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்ம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஜமைத்-உல்-உலேமா – இறையியலாளர்களின் அவை)

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படிப்பறிவு பெற்றிருந்த பார்சிகளின் சீர்திருத்த இயக்கம் _______ ல் தொடங்கப்பட்டது.

A) வங்காளம்

B) டெல்லி

C) மதராஸ்

D) பம்பாய்

(குறிப்பு: பார்சிகள் என்பவர்கள் சமயக்கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரானிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்த ஜொராஸ்டிரியர்கள் ஆவர்.)

  1. பர்துன்ஜி நெளரோஜி என்பார் “ரஹ்னுமாய் மக்தயாஸ்னன் சபா” எனும் அமைப்பை ஏற்படுத்திய ஆண்டு

A) 1849 B) 1850 C) 1851 D) 1852

(குறிப்பு: ரஹ்னுமாய் மக்தயாஸ்னன் சபா – பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம். ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரகமந்திரமாக இருந்தது.)

  1. பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த __________ என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்.

A) முகமத்-உல்-ஹசன்

B) முகமது குவாசிம்

C) பெர்ரம்ஜி மல்பாரி

D) ரஷித் அகமத் கங்கோத்ரி

  1. கூற்று 1: நிரங்காரி இயக்கத்தின் நிறுவனரான பாபாராம் சிங் நிரங்கரி இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.

கூற்று 2: பாபா தயாள் தாஸ் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம் தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமய சீர்திருத்த இயக்கமாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நிரங்காரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார். பாபா ராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம் தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமய சீர்திருத்த இயக்கமாகும்.)

  1. ஆங்கிலேயரின் ஆதரவுடன் சீக்கியர்களுக்கான கால்சா கல்லூரி ____________ ல் உருவாக்கப்பட்டது.

A) புனே

B) அமிர்தசரஸ்

C) ஆக்ரா

D) பம்பாய்

(குறிப்பு: அமிர்தசரஸில் உருவாக்கப்பட்ட சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகும்.)

  1. வள்ளலார் என பிரபலமாக அறியப்பட்ட ராமலிங்க சுவாமிகள் சிதம்பரத்திற்கு அருகேயுள்ள __________ எனும் கிராமத்தில் பிறந்தார்.

A) மருவாய்

B) வடலூர்

C) சாஸ்தாகோவில்

D) மருதூர்

(குறிப்பு: தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் வள்ளலாரின் குடும்பம் சென்னையிலிருந்து அவருடைய சகோதரரின் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தது.)

  1. “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.” எனும் கருத்தினை முன்வைத்தவர்

A) வைகுண்ட சுவாமிகள்

B) இராமலிங்க சுவாமிகள்

C) அய்யன் காளி

D) அயோத்திதாசர்

(குறிப்பு: வள்ளலார் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.)

  1. வள்ளலார் _________ ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

A) 1852 B) 1854 C) 1856 D) 1865

(குறிப்பு: சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் சமரசசுத்தசன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)

  1. சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வள்ளலார் வடலுரில் நிறுவிய ஆண்டு

A) 1865 B) 1866 C) 1867 D) 1868

(குறிப்பு: 1866ல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு வடலூரில் இலவச உணவகம் நிறுவப்பட்டது.)

  1. வள்ளலார் இயற்றிய ஏராளமான பாடல்கள் ___________ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

A) ஜீவகாருண்யம்

B) மருட்பா

C) திருவருட்பா

D) ஞானோதயம்

(குறிப்பு: வள்ளலாரின் தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’(அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்.)

  1. கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தாகோவில் விளை எனும் கிராமத்தில் பிறந்தவர்

A) அயோத்திதாசர்

B) முடிசூடும் பெருமாள்

C) அய்யன்காளி

D) வள்ளலார்

(குறிப்பு: முடிசூடும் பெருமாள் என்ற பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினர்.)

  1. ஆங்கில ஆட்சியையும், திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே “வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்றும்”, “கறுப்பு பிசாசுகளின் ஆட்சியென்றும்” விமர்சித்தவர்

A) முத்துக்குட்டி

B) அயோத்தி தாசர்

C) பெரோசா மேத்தா

D) சையத் அகமதுகான்

(குறிப்பு: திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்த முத்துக்குட்டி என்பவர் தெய்வீக அனுபவம் ஒன்றைப்பெற்றார். வைகுண்டர் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் வழிபாட்டின் போது பின்பற்றும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைக் கைவிடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.)

  1. வைகுண்ட சுவாமிகள் ___________ ஆண்டு சாதிவேற்றுமைகளை ஒழிப்பதற்காகவும் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் சாமித்தோப்பில் தனது தியானத்தை துவக்கினார்.

A) 1823 B) 1832 C) 1833 D) 1842

(குறிப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரங்கேரிய ஏனைய சமகாலச் சீர்திருத்த இயக்கங்களைப் போலவே வைகுண்ட சுவாமிகளும் உருவ வழிபாட்டை எதிர்த்தார்.)

  1. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக வைகுண்ட சுவாமிகள் ____________ எனும் அமைப்பை நிறுவினார்.

A) சத்திய ஞான சபை

B) சத்திய சோதக் சமாஜம்

C) சமத்துவ சமாஜம்

D) ஆரிய சமாஜம்

(குறிப்பு: இந்நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக அனைத்துச் சாதி மக்களும் சேர்ந்துண்ணும் சமபந்தி விருந்துகளை நடத்தினார்.)

  1. வைகுண்ட சுவாமிகள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. வைகுண்ட சுவாமிகள் திருவிதாங்கூர் அரசரால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் தனது கொள்கைகளை விட்டுத்தரவில்லை.

2. வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ‘அய்யா’(தந்தை) என அழைத்தனர்.

3. அவருடைய சமய வழிபாட்டு முறை ‘அய்யாவழி’ என்றறியப்பட்டது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

  1. வைகுண்ட சுவாமிகளின் கருத்துக்கள் __________ என்னும் நூலாகத் திரட்டப்பட்டுள்ளது.

A) சமத்துவ திரட்டு

B) குலாம்கிரி

C) திருவருட்பா

D) அகிலத்திரட்டு

(குறிப்பு: வைகுண்ட சுவாமிகளின் அறிவுரைகள் நீதிக்குப் புறம்பான சமூகப் பழக்கவழக்கங்களிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் மக்களை விடுவித்தது.)

  1. அயோத்தி தாசர் _________ ஆண்டு “திராவிட பாண்டியன்” எனும் இதழைத் தொடங்கினார்.

A) 1882 B) 1883 C) 1884 D) 1885

  1. அயோத்தி தாசர் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் புலமைப் பெற்றவர்?

1. தமிழ் 2. ஆங்கிலம்

3. சமஸ்கிருதம் 4. பாலி

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 3 D) 2, 3, 4

(குறிப்பு: அயோத்திதாசர் சென்னையில் பிறந்தவர் ஆவார்.)

  1. பண்டிதர் அயோத்திதாசர் எந்த துறையில் வல்லவராக திகழ்ந்தார்?

1. தமிழ் அறிஞர் 2. சித்த மருத்துவர்

3. பத்திரிக்கையாளர் 4. சமூக அரசியல் செயல்பாட்டாளர்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: உயர்சாதியினரின் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலைத் தனது கருவியாகக் கொண்டு அயோத்திதாசர் ஒரு புதிய அறிவைப் பரப்பும் முறையை முன்னெடுத்தார்.)

  1. ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர்__________ எனும் அமைப்பை நிறுவினார்.

A) சத்திய ஞான சபை

B) சத்திய சோதக் சமாஜம்

C) சமத்துவ சமாஜம்

D) அத்வைதானந்தா சபா

(குறிப்பு: கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாக கருதிய அயோத்திதாசர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக்குரல் எழுப்பினார்.)

  1. ____________ ஆண்டு அயோத்தி தாசரும் ஜான் திரவியமும் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார்.

A) 1880 B) 1881 C) 1882 D) 1883

  1. அயோத்திதாசர், “திராவிட மகாஜன சபை” என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு

A) 1882 B) 1885 C) 1889 D) 1891

(குறிப்பு: திராவிட மகாஜன சபையின் முதல் கூட்டம் நீலகிரியில் நடத்தப்பட்டது.)

  1. அயோத்திதாசர் “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகையைத் தொடங்கிய ஆண்டு

A) 1902 B) 1904 C) 1907 D) 1909

(குறிப்பு: ஒரு பைசா தமிழன் பத்திரிகையை 1914 இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.)

  1. பொருத்துக.

1. அய்யா வழி i) விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

2. திருவருட்பா ii) நிரங்கரி இயக்கம்

3. பாபா தயாள்தாஸ் iii) ஆதி பிரம்ம சமாஜம்

4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் iv) வைகுண்ட சுவாமிகள்

5. தேவேந்திரநாத் v) ஜீவகாருண்யப் பாடல்கள்

A) ii iii iv v i

B) iv v ii i iii

C) iii ii i iv v

D) v iv iii i ii

  1. பிரம்மஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான H.S ஆல்காட் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக________ ஆண்டு அயோத்திதாசர் இலங்கை சென்றார்.

A) 1895 B) 1896 C) 1897 D) 1898

(குறிப்பு: இலங்கை சென்ற அயோத்திதாசர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.)

  1. அயோத்திதாசர், பெளத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமயத் தத்துவத்தை கட்டமைப்பதற்காக “சாக்கிய பெளத்த சங்கம்” எனும் அமைப்பை சென்னையில் நிறுவிய ஆண்டு

A) 1897 B) 1898 C) 1899 D) 1900

(குறிப்பு: பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.)

  1. ஒடுக்கப்பட்டவர்களை சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்தவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அவர்களை சாதியற்ற திராவிடர்கள் என பதிவு செய்யுமாறு வற்புறுத்தியவர் யார்?

A) வைகுண்ட சுவாமிகள்

B) வள்ளலார்

C) அய்யன்காளி

D) அயோத்தி தாசர்

(குறிப்பு: அயோத்திதாசர், பௌத்த சமய மீட்பின் வழியாக இந்து சமயத்தைப் பிடித்திருக்கும் சாதியக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்க இயலுமென உழைத்தார்.)

  1. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

A) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.

B) கூற்று சரி, காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

C) இரண்டும் தவறு

D) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!