Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

19th & 20th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th & 20th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th & 20th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th & 20th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் பின்வரும் எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞராவார்?

அ) ஸ்பானிய மொழி

ஆ) பிரெஞ்சு

இ) உருஷிய மொழி

ஈ) ஆங்கிலம்

  • அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் ஒரு உருஷிய கவிஞராவார். அவர், நவீன உருஷிய மொழியின் தந்தையாக கருதப்படுகிறார். அவரது பிறந்த நாள் ஐநா உருஷிய மொழி நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள், ஆண்டுதோறும் ஜூன்.6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த நிகழ்வு, தொடக்கத்தில் ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) கடந்த 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐநா மொழி நாட்கள், பன்மொழித்துவத்தைக் கொண்டாடுவதையும் ஐநா’இன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

2. நடப்பாண்டின் (2021) உலக பெருங்கடல்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) The Ocean: Life and Livelihoods

ஆ) Save Our Oceans

இ) Stop Plastic Pollution

ஈ) Sustainably-sourced Fish

  • உலக பெருங்கடல்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில், ஐநா அவை, பெருங்கடல்களைக் காப்பதற்காக நிலையான முன்னெடுப்புகள் மற்றும் நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதற்காக அழைப்புவிடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால், ஐநா உலக பெருங்கடல்கள் நாளைய் கொண்டாட்டங்கள் இரண்டாமாண்டாக இவ்வாண்டும் மெய்நிகர் முறையில் நடந்தது. “The Ocean: Life and Livelihoods” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

3. ‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை: போக்குகள் 2021’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ) ILO

ஆ) UN

இ) உலக வங்கி

ஈ) IMF

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது (ILO) ‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை: போக்குகள் 2021’ என்ற தலைப்பில் மதிப்பீட்டை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகளாவிய நெருக்கடியால் உண்டாக்கப்பட்ட ‘வேலைவாய்ப்பு இடைவெளி’, 2022ஆம் ஆண்டில் 23 மில்லியனாக ஆவதற்கு முன்னர், நடப்பு 2021ஆம் ஆண்டில் 75 மில்லியனை எட்டும். குறைந்தது 2023ஆம் ஆண்டு வரை, ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, வேலைவாய்ப்பு வளர்ச்சி போதுமானதாக இராது என்றும் அவ்வறிக்கை கணித்துள்ளது.

4. ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) செயல்திறன் திட்டத்தை வளர்ப்பது மற்றும் விரைவுபடுத்துவது’ என்பது எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?

அ) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஆ) ஐக்கிய நாடுகள் அவை

இ) உலக வங்கி

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • இந்தியாவின் MSME துறையை உயர்த்த உதவும் வகையில் $500 மில் -லியன் டாலர் திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. RAMP என்பது Raising and Accelerating Micro, Small and Medium Enterprise (MSME) Performance என்பதை குறிக்கிறது.
  • MSME’களுக்கான நிதி மற்றும் செயல்பாட்டு மூலதனத்திற்கு சிறந்த அணுகலை வழங்குவதன்மூலம் 5 லட்சத்து ஐம்பதாயிரம் MSME’களின் செயல்திறனை மேம்படுத்த இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது. உலக வங்கியானது முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில், `750 மில்லியன் மதிப்புள்ள MSME அவசரகால உதவித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

5. 107 ஆண்டுகள் பழைமையான பில்லிமோரவாகாய் பாரம்பரிய இரயில் இயங்குகிற மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மகாராஷ்டிரா

இ) கர்நாடகா

ஈ) பீகார்

  • நவ்சாரியில் உள்ள பில்லிமோராவிற்கும், தெற்கு குஜராத்தின் டாங்ஸில் உள்ள வாகாய்க்கும் இடையே 107 ஆண்டுகள் பழைமையான குற்றகலப்பாதையில் பாரம்பரிய இரயில் சேவையின் முதல் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 2020 டிசம்பரில், மேற்கு ரயில்வே இந்த சேவையை இரத்துசெய்தது. பின்னர் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை, 1913ஆம் ஆண்டில், பரோடாவின் மன்னர் அரசான கெய்க்வாட் வம்சத்தால் தொடங்கப்பட்டது.

6. “Safe food today for a healthy tomorrow” என்பது ஜூன்.7 அன்று கடைப்பிடிக்கப்பட்ட எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ) உலக உணவுப்பாதுகாப்பு நாள்

ஆ) உலக பெருங்கடல்கள் நாள்

இ) உலக டூனா நாள்

ஈ) உலக சுற்றுச்சூழல் நாள்

  • கடந்த 2018ஆம் ஆண்டில், ஐநா பொது அவையானது ஆண்டுதோறும் ஜூன்.7 – உலக உணவு பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. ஐநா’இன் கூற்றுப்படி, பாதுகாப்பற்ற உணவினால் ஒவ்வோர் ஆண்டும் 420,000 பேர் மரணிக்கின்றனர். “Safe food today for a healthy tomorrow” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

7. உச்சநீதிமன்றத்தால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவத -ற்கு உத்தரவிடப்பட்ட ஆரவல்லி வனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) மகாராஷ்டிரா

  • பரிதாபாத்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி காட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு ஹரியானா மாநில அரசுக்கும் பரிதாபாத் மாநகராட்சிக்கும் இந்திய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் சுமார் 10,000 குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.

8. பின்வரும் திட்டங்களுள், ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒருபகுதியாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உணவுப்பாதுகாப்புத்திட்டம் எது?

அ) PM – FBY

ஆ) PM – GKAY

இ) PM – GSY

ஈ) PM – JJBY

  • ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை இல -வசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒருபகுதியாக இந்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்ற உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. அண்மையில், 2021 தீபாவளி (அதாவது) நவம்பர் 2021 வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

9. எந்நாட்டிடமிருந்து, MH-60 ரோமியோ உலங்கு வானூர்திகளை இந்தியக் கடற்படை வாங்குகிறது?

அ) ரஷ்யா

ஆ) இஸ்ரேல்

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) ஈரான்

  • இந்தியக்கடற்படையானது ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து MH-60 ரோமியோ உலங்கு வானூர்திகளைக் வாங்கவுள்ளது. முன்னதாக, 2020ஆம் ஆண்டில் இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் `16,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்திய விமானிகள் குழு ஐக்கிய அமெரிக்க நாடுகளை (USA) அடைந்து, இதனை இயக்குவதற்கான பயிற்சியைப் பெற்றனர்.

10. ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC), எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது?

அ) 192

ஆ) 100

இ) 54

ஈ) 20

  • ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC) என்பது ஐநா’இன் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகும். அது 54 உறுப்பினர்களைக்கொண்டு -ள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வோராண்டும் 3 ஆண்டு பதவிகாலத் -திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • ரகசிய வாக்கெடுப்பின்மூலம் 2022-2024 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு, இந்தியா, ECOSOC’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. ஐநா பொதுச்செயலராக குட்டெரெஸ் மீண்டும் தேர்வு

ஐநா பொதுச்செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அந்தப்பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பார். இதுகுறித்து 75ஆவது ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவர் வோல்கான் போஸ்கிர் தெரிவித்துள்ளதாவது: ஐநா பொதுச் செயலர் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்துவரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டாவது பதவிக்காலம் வரும் 2022 ஜன.1ஆம் தேதி தொடங்கி, 2026 டிச.31ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றார் அவர். அதனைத் தொடர்ந்து, ஐநா பொதுச்சபை அரங்கில் குட்டெரெஸுக்கு போஸ்கிர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

2. முன்னாள் தடகள வீரர் ‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் மறைவு

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91) மறைந்தார். கரோனாவிலிருந்து மீண்டவர், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் உயிரிழந்தார்.

‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட் -டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீ ஓட்டப்பந்த -யப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர். கடந்த 1958ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மில்கா சிங் 200 மீ மற்றும் 400 மீ பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றார்.

1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அப்போட்டி அவருக்கு சர்வதேச அடையாளத்தை தந்தது. 1962ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைரகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

3. கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி என்கிற பெருமையையும் அவர் பெறுகிறார்.

4. செல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்: அமெரிக்க நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வுநடத்தியது. இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 28% பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆகஸ்டில் மார்னிங் கன்சல்ட் இதேபோல கருத்துக் கணிப்பு நடத்திமுடிவுகளை வெளியிட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 82 சதவீதம் பேர்ஆதரவும், 11 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். தற்போதைய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்திருந்தாலும் உலகளாவிய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்க -ளில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

மார்னிங் கன்சல்ட் கருத்துக் கணிப்பில் இத்தாலி பிரதமர் மரியோ தெராகி 65 சதவீத ஆதரவினைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 63%, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 53%, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 53%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் 48%, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 37%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் 36%, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ 35%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 35%, ஜப்பான் பிரதமர் யோசிகிடோ சுகா 29% வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

5. ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரய்சி

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தீவிர நிலைப்பாட்டைக்கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றிபெற்றார்.

ஈரான் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பதவியேற்பதற்கு முன்னதாகவே அமெரிக்கவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் அதிபராக இப்ராஹிம் ரய்சி இருப்பார். கடந்த 1988ஆம் ஆண்டில் ஏராளமான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட விசாரணைக்குழுவில் அங்கம் வகித்ததால் அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரானின் முதல் தலைமை நீதிபதியும் ரய்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

6. உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு:

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தென்பகுதியில் போட் -ஸ்வானா நாடு உள்ளது. அந்நாட்டில் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு நான்கு மிகப்பெரிய வைரசுரங்கங்கள் செயல்படுகின்றன. அரசின் வருவாயில் 50% வைரங்கள் விற்பனைமூலம் கிடைக்கிறது. கரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் வைரங்கள் விற்பனை குறைந்து போட்ஸ்வானா நாட்டில் பொருளாதார நெருக்கடிக -ள் எழுந்துள்ளன.

இந்நிலையில் போட்ஸ்வானா நாட்டின் சுரங்கம் ஒன்றில் அண்மையில் 1,098 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 73 மிமீ நீளம், 52 மிமீ அகலம், 27 மிமீ தடிமன்கொண்ட இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரமாகும். கடந்த 1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் 3,106 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகத்தின் மிகப்பெரிய வைரமாகும். கடந்த 2015ஆம் ஆண்டில் போட்ஸ்வானா நாட்டில் 1,109 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. இது உலகத்தின் 2ஆவது பெரிய வைரமாகும். தற்போது போட்ஸ்வானா நாட்டிலேயே உலகின் 3ஆவது மிகப்பெரிய 1,098 காரட் வைரம் கிடைத்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மேம்பட்ட பிறகு, 3ஆவது மிகப்பெரிய வைரம் ஏலம் விடப்படும் என போட்ஸ்வானா அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Alexander Pushkin is a famous poet of which language?

A) Spanish

B) French

C) Russian

D) English

  • Alexander Pushkin is a Russian poet, who is considered the father of modern Russian language. His birthday is selected as the UN Russian Language Day. It is observed annually on June 6.
  • The event was initially established by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) in 2010. The UN language days aim to celebrate multilingualism and promotion of equal use of all six of the UN’s official working languages.

2. What is the theme of the World Oceans Day 2021?

A) The Ocean: Life and Livelihoods

B) Save Our Oceans

C) Stop Plastic Pollution

D) Sustainably–sourced Fish

  • World Oceans Day is observed on June 8, every year. On the occasion of the day, the United Nations (UN) has called for sustainable efforts and stopping plastic pollution in order to save the oceans. This is the second year of virtual celebration of the UN World Oceans Day due to the coronavirus pandemic. The theme of this year’s World Oceans Day is ‘The Ocean: Life and Livelihoods’.

3. ‘World Employment and Social Outlook: Trends 2021’ is a report released by which organisation?

A) ILO

B) UN

C) World Bank

D) IMF

  • The International Labour Organisation (ILO) released the assessment titled ‘World Employment and Social Outlook: Trends 2021’. As per the report, global crisis–induced ‘jobs gap’ will reach 75 million in 2021 before falling to 23 million in 2022. It also predicts that employment growth will be insufficient to make up for the losses suffered until at least 2023.

4. ‘Raising and Accelerating Micro, Small and Medium Enterprise (MSME) Performance (RAMP) Program’ is an initiative of which organisation?

A) International Labor Organization

B) United Nations

C) World Bank

D) International Monetary Fund

  • The World Bank has approved a USD 500 million program to help boost India’s MSME sector. RAMP stands for Raising and Accelerating Micro, Small and Medium Enterprise (MSME) Performance.
  • The programme targets to improve the performance of five lakh 50 thousand MSMEs, by providing better access to finance and working capital for MSMEs. The World Bank had earlier launched Rs 750 million MSME Emergency Response Program in July last year.

5. The 107–year–old Billimora–Vaghai heritage train, runs in which Indian state?

A) Gujarat B) Maharashtra

C) Karnataka D) Bihar

  • The 107–year–old narrow gauge heritage train service between Billimora in Navsari and Vaghai in Dangs of South Gujarat made its first trial run recently. The service was scrapped by the Western Railway in December 2020, which was then reconsidered.
  • The rail service was started by the Gaekwad dynasty of princely state of Baroda in 1913.

6. ‘Safe food today for a healthy tomorrow’ is the theme of which day observed on June 7?

A) World Food Safety Day

B) World Oceans Day

C) World Tuna Day

D) World Environment Day

  • In 2018, the United Nations General Assembly proclaimed that every year June 7 would be observed as World Food Safety Day. According to the UN, unsafe food causes an estimated 420,000 deaths every year. The theme of World Food Safety Day this year is: Safe food today for a healthy tomorrow.

7. Aravali forest area, where the Supreme Court directed to remove all encroachments, is located along which Indian state?

A) Haryana

B) Madhya Pradesh

C) Odisha

D) Maharashtra

  • The Supreme Court of India has directed the State Government of Haryana and the Faridabad Municipal Corporation to remove all encroachments in Aravali forest near a village in Faridabad. These encroachments also consist of around 10,000 residential constructions.

8. Which of the following schemes is a food security scheme, launched by the Union Government as a part of the Atmanirbhar Bharat Package?

A) PM – FBY

B) PM – GKAY

C) PM – GSY

D) PM – JJBY

  • The Government of India launched the food security scheme named Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PM–GKAY) as a part of the Atmanirbhar Bharat package, which aims to provide free food grains to poor and migrants.
  • Recently, the Prime Minister has announced that the scheme would be extended till Diwali 2021 (i.e) till November 2021.

9. MH–60 Romeo helicopters are procured by Indian Navy from which country?

A) Russia

B) Israel

C) USA

D) Iran

  • The Indian Navy would receive MH–60 Romeo helicopters from the United States of America. India had earlier in 2020, signed a Rs.16,000 crore deal with the USA. A batch of Indian pilots have reached the US to be trained to operate the chopper.

10. The United Nations Economic and Social Council (ECOSOC) has how many members?

A) 192

B) 100

C) 54

D) 20

  • The United Nations Economic and Social Council (ECOSOC) is one of the main organs of the UN and has 54 members. These members are elected every year for a term of 3 years. India has been recently elected to the ECOSOC for a term from 2022 to 2024 by way of voting by secret ballot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!