Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

19th & 20th November 2020 Current Affairs in Tamil & English

19th & 20th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற துரிதமாக செயலாற்றும் தரைப்பரப்பிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையை (QRSAM) உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. HAL

இ. டெஸ்லா

ஈ. லார்சன் & டூப்ரோ

  • விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன்மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (Quick Reaction Surface-to-Air Missile QRSAM) எட்டியுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகே ITR சந்திப்பூரிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் கீழ், திட்டமொன்றை இறுதிசெய்துள்ள முதல் இந்திய நகரம் எது?

அ. பாட்னா

ஆ. சூரத்

இ. அகமதாபாத்

ஈ. லக்னோ

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் (ARHC) கீழ் திட்டமொன்றை இறுதிசெய்த முதல் நகராக சூரத் மாறியுள்ளது. ARHC திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகரம் (PMAY-U)’இன்கீழ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், அரசின் பயன்படுத்தப்படாத வீட்டுவசதித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களிடத்தில், புதுப்பிக்க மற்றும் வாடகை வீடுகளாக செயல்படுவதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு வழங்கப்படும்.

3. நடப்பாண்டில் வரும் (2020) தேசிய ஆயுர்வேத நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Ayurveda for COVID-19

ஆ. Ayurveda for All

இ. Ayurveda and Immunity

ஈ. Ayurveda amidst Pandemic

  • தேசிய ஆயுர்வேத நாளானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ‘தன்வந்திரி ஜெயந்தி’யன்று அதே நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த நாள், நவம்பர் 13 அன்று கொண்டாடப்பட்டது.
  • Ayurveda for COVID-19 என்ற தலைப்பில் நாடு முழுவதும் தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது. நமது அன்றாட வாழ்வில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

4. அண்மையில் காலமான மூத்த இதழாளரும் எழுத்தாளருமான இரவி பெலகேரே சார்ந்த மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. கேரளா

  • மூத்த இதழாளரும், கர்நாடகாவின் எழுத்தாளருமான இரவி பெலகேரே அண்மையில் தனது 62ஆவது வயதில் காலமானார். பிரபல கன்னட செய்தித்தாளான ஹாய் பெங்களூரில் அவர் பணியாற்றி வந்தார். கர்நாடக சாகித்திய அகாடமி விருது, கன்னட இராஜ்யோத்சவ விருது, கர்நாடக ஊடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இரவி பெலகேரே பெற்றுள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற பள்ளியை தொடங்கி அதனை அவர் நடத்தியும் வந்தார்.

5. குழு 77 (G-77) கூட்டணியில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?

அ. 77

ஆ. 99

இ. 120

ஈ. 134

  • குழு 77 (G-77) ஆனது கடந்த 1964 ஜூன் 15 அன்று 77 வளரும் நாடுகளால் நிறுவப்பட்டது. தற்போது, இக்கூட்டணியிலுள்ள உறுப்புநாடுகளின் எண்ணிக்கை 134 நாடுகளாக அதிகரித்துள்ளது. சமீபத்தில், G-77 வெளியுறவு அமைச்சர்களின் 44ஆவது ஆண்டுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி T S திருமூர்த்தி, இதில் கலந்துகொண்டு G-77 கூட்டணி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.

6. ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன்மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?

அ. மதுரை

ஆ. அயோத்தியா

இ. வாரணாசி

ஈ. கும்பகோணம்

  • உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரம், ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ‘தீபோத்சவ’ கொண்டாட்டத்தின்போது, நவம்பர்.13 அன்று சரயு ஆற்றின் கரையில், 5.8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

7. BRICS அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரேசில்

இ. இரஷ்யா

ஈ. சீனா

  • எட்டாவது BRICS அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டமானது மெய்நிகராக நடைபெற்றது. இது, ரஷ்யாவின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 12ஆவது BRICS உச்சிமாநாட்டின் தலைவராக இரஷ்யா உள்ளது. இந்த அமைச்சரவைக்கூட்டம் BRICS STI பிரகடனம்-2020’ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன் உறுப்பினர்கள் இந்தியாவின், ‘SERB – POWER’ (Promoting Opportunities for Women in Exploratory Research) திட்டத்தைப் பாராட்டினர்.

8. சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் (World Day of Remembrance for Road Accident Victims) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 15

ஆ. நவம்பர் 16

இ. நவம்பர் 17

ஈ. நவம்பர் 18

  • ஆண்டுதோறும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் நவ.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு கருவியாகவும் இந்த நாள் உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் பேரிடர் குறித்த கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது. மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.

9. சமூக பாதுகாப்பு நெறிமுறைகளின்கீழ் வரைவு விதிகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. சமூக நீதி அமைச்சகம்

ஈ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

  • சமூக பாதுகாப்பு நெறிமுறைகள் 2020’இன்கீழ் வரைவு விதிகளை தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சம் அறிவித்துள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நடைமேடை தொழிலாளர்கள் அனைவரும் நடுவணரசு இணையதளத்தில் தானாக பதிவு செய்வது உட்பட ஆதார் அடிப்படையிலான பதிவை இவ்வரைவு விதிகள் வழங்குகின்றன. இதன்கீழ் பயன்களைப் பெறுவதற்கு, முறைசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர் (அ) நடைமேடை தொழிலாளர், அரசு இணையதளத்தில் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

10. பன்னிரண்டாவது BRICS உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Global Stability, Shared Security and Innovative Growth

ஆ. Stakeholders of Shared Future

இ. Innovative Future and Integrated Growth

ஈ. Promotion of Sustainable Agriculture

  • பன்னிரண்டாம் BRICS உச்சிமாநாடானது அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “Global Stability, Shared Security & Innovative Growth” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டின் பிற நிகழ்ச்சி நிரல்களுள் BRICS உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, COVID-19 பெருந்தொற்றின் விளைவைக் குறைத்தல், தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.

1. Which organisation developed Quick Reaction Surface–to–Air Missile (QRSAM), which was seen in news recently?

[A] DRDO

[B] HAL

[C] Tesla

[D] Larsen & Toubro

  • The Quick Reaction Surface–to–Air Missile (QRSAM) was indigenously developed by the Defence Research and Development Organisation (DRDO). Recently, the missile was seen in the news, it was tested by the Chandipur Test range, Odisha. It registered a significant milestone as it achieved a direct hit on a pilotless target aircraft (PTA), during the test.

2. Which is the first Indian city to finalise project under Affordable Rental Housing Complex (ARHC) scheme for migrant workers?

[A] Patna

[B] Surat

[C] Ahmedabad

[D] Lucknow

  • Surat became the first city to finalise a project under the Affordable Rental Housing Complex (ARHC) scheme for migrant workers. The ARHC scheme was announced under the Pradhan Mantri Awas Yojana–Urban (PMAY–U) of the Ministry of Housing and Urban Affairs (MoHUA).
  • Under the scheme, unoccupied government housing projects will be given to private firms, to renovate and operate as rental housing.

3. What is the theme of the ‘National Ayurveda Day 2020’?

[A] Ayurveda for COVID–19

[B] Ayurveda for All

[C] Ayurveda and Immunity

[D] Ayurveda amidst Pandemic

  • National Ayurveda Day is celebrated on the same day of Dhanwantri Jayanti since 2016. This year it was celebrated on November 13. National Ayurveda Day was celebrated across the country on the theme of ‘Ayurveda for COVID–19’. The day is observed to spread awareness on the importance of Ayurveda in our daily lives.

4. Veteran journalist and writer Ravi Belagere, who passed away recently, belonged to which state?

[A] Andhra Pradesh

[B] Maharashtra

[C] Karnataka

[D] Kerala

  • Veteran journalist and writer of Karnataka, Ravi Belagere has recently passed away at the age of 62. He was working for the popular Kannada tabloid Hai Bangalore.
  • The writer has been honoured with many awards including the Karnataka Sahitya Academy award, Kannada Rajyothsava award and Karnataka Media Academy award among others. He also started school named ‘Prarthana’ in the state.

5. How many countries are the members of Group of 77 (G–77) coalition has?

[A] 77

[B] 99

[C] 120

[D] 134

  • The Group of 77 (G–77) was established on 15 June 1964 by 77 developing countries. At present, the members of the coalition have increased to 134 countries. Recently, the 44th Annual Meeting of the G–77 Foreign Ministers was held recently. India’s Permanent Representative to the UN T S Tirumurti attended the forum and reaffirmed India’s commitment towards G77 bloc.

6. Which Indian city has entered the Guinness World Records for the ‘largest display of oil lamps’?

[A] Madurai

[B] Ayodhya

[C] Varanasi

[D] Kumbakonam

  • City of Ayodhya in Uttar Pradesh has entered the Guinness World Records for the ‘largest display of Oil Lamps’. During the ‘Deepotsav’ celebrations, over 5.8 lakh earthen lamps were lit on the banks of river Saryu on November 13. The lamps were kept lit for 45 minutes and retained Guinness World Record for the second year.

7. Which country chaired the BRICS Science, Technology and Innovation Ministerial meeting?

[A] India

[B] Russia

[C] Brazil

[D] China

  • The 8th BRICS Science, Technology and Innovation Ministerial meeting was held virtually, which was organised by the Ministry of Science and Higher Education of Russia. Russia is the Chair of the 12th BRICS Summit. The Ministerial meeting unanimously adopted BRICS STI Declaration 2020. The Members applauded India’s ‘SERB–POWER’ (Promoting Opportunities for Women in Exploratory Research) scheme.

8. When is the World Day of Remembrance for Road Accident Victims observed?

[A] November 15

[B] November 16

[C] November 17

[D] November 18

  • Every year the World Day of Remembrance for Road Accident Victims observed on 15th November, by the United Nations. The Day is seen as a tool to reduce road casualties. It draws attention to the devastation caused by road crashes and gives recognition to the road crash victims.

9. Which Union Ministry has notified draft rules under the Code on Social Security?

[A] Ministry of Health and Family Welfare

[B] Ministry of Labour and Employment

[C] Ministry of Social Justice

[D] Ministry of Agriculture and Farmers Welfare

  • The Union Ministry of Labour and Employment has recently notified draft rules under the Code on Social Security, 2020.
  • As per the new rules, the unorganised workers, gig workers and platform workers can avail social security benefits by Aadhaar based registration including self–registration on the government portal. It also clarifies about payment of contribution by the aggregators.

10. What is the theme of the 12th BRICS summit 2020?

[A] Global Stability, Shared Security and Innovative Growth

[B] Stakeholders of Shared Future

[C] Innovative Future and Integrated Growth

[D] Promotion of Sustainable Agriculture

  • The 12th BRICS summit 2020 was held in a virtual mode recently. Indian Prime Minister Narendra Modi participated in the virtual summit, chaired by the Russian President Vladimir Putin.
  • The theme of the summit is “Global stability, shared security and innovative growth”. Other agendas of the summit include intra–BRICS cooperation, mitigating the effect of Covid–19, counter–terrorism cooperation, among others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!