TnpscTnpsc Current Affairs

19th & 20th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

19th & 20th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 19th & 20th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th & 20th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. கீழ்க்காணும் எந்த நாட்டுடன் இணைந்து, ‘இளம் வல்லுநர்கள் திட்டத்தை’ இந்தியா அறிவிக்கவுள்ளது?

அ. ஜப்பான்

ஆ. தென் கொரியா

இ. இங்கிலாந்து

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இங்கிலாந்து

  • இந்தியாவும் இங்கிலாந்தும் (UK) புதிய பரஸ்பர விசா ஏற்பாட்டை அறிவிக்கவுள்ளன. இதன்மூலம் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 3,000 பட்டம்பெற்ற இந்திய நாட்டுக் குடிமக்கள் ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் வரை வாழவும் பணியாற்றவும் அனுமதிக்கப்படுவர். UK–இந்தியா இளம் தொழில் வல்லுநர்கள் திட்டம் ஆனது 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரஸ்பரம் அறிவிக்கப்படும். பாலியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் இடையேயான முதல் இருதரப்பு சந்திப்பின் போது இது தொடங்கப்படவுள்ளது. இத்தகைய திட்டத்தால் பயன்பெறும் முதல் நாடு இந்தியா ஆகும்.

2. ‘திருமணத்திற்கான மரியாதை சட்டத்துடன்’ தொடர்புடைய நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. அமெரிக்கா

இ. இங்கிலாந்து

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • அமெரிக்க சட்டப்பேரவை, ஒரே பாலின மற்றும் கலப்பினங்களுக்கிடையேயான திருமணங்களுக்கு அமெரிக்க கூட்டரசு பாதுகாப்பை அளிக்கும், ‘திருமணத்திற்கான மரியாதை சட்டத்தை’ முன்வைத்தது. ‘திருமணத்திற்கான மரியாதை சட்டம்’ முந்தைய திருமணப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்கிறது. மேலும் பாலினம், இனம், இனக் குழு அல்லது தேசிய வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், செல்லுபடியாகும் திருமணங்களை அங்கீகரிப்பதன்மூலம் ஒரே பாலின மற்றும் கலப்பினங்களுக்கு இடையிலான திருமணத்தைக் காக்கின்றது.

3. டோனி போலோ வானூர்தி நிலையம் திறக்கப்பட்ட மாநிலம்/ யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஜார்கண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அருணாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் வானூர்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். அது இட்டாநகரின் ஹோலாங்கியில் உள்ள டோனி போலோ வானூர்தி நிலையமாகும். அவ்வானூர்தி நிலையத்திற்கான அடிக்கல்லை கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் நாட்டினார். டோனி போலோ விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்தில் மூன்றாவது வானூர்தி நிலையமாக இருக்கும். இது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மொத்த வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கையை 16ஆக உயர்த்தும்.

4. C V ஆனந்த போஸ் என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திரப் பிரதேசம்

இ. கேரளம்

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக டாக்டர் C V ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையின் அறிவிப்புமூலம் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தியத் துணைக்குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதை அடுத்து ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த ஜக்தீப் தன்கர் பதவி விலகினார். அதன் பின்னர் அப்பொறுப்பை மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன் கூடுதலாக கவனித்து வந்தார்.

5. 2022இல் வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளின் இரண்டாவது பதிப்பை நடத்திய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா

இ. மணிப்பூர்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேகாலயா

  • வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளின் இரண்டாவது பதிப்பு மேகாலயாவின் ஷில்லாங்கில் நடத்தப்பட்டது. மணிப்பூர் மொத்தம் 240 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த அணி சாம்பியனாக உருவெடுத்தது. மொத்தம் 203 பதக்கங்களுடன் அஸ்ஸாம் இரண்டாவது இடத்தையும், அருணாச்சல பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. ஒருவாரகாலம் நிகழ்ந்த இந்த நிகழ்வில், வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த சுமார் 3000 பங்கேற்பாளர்கள் 18 பிரிவுகளில் போட்டியிட்டனர். வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளின் அடுத்த பதிப்பை நாகாலாந்து மாநிலம் நடத்தவுள்ளது.

6. ‘இன்வெஸ்ட் கர்நாடகா – 2022’ உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Build for the World

ஆ. Global Supply Chain

இ. Tradition and Technology

ஈ. Nature and Culture

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Build for the World

  • ‘இன்வெஸ்ட் கர்நாடகா – 2022’ உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். கர்நாடகாவின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் இந்த ஆண்டு பதிப்பு, ‘உலகத்திற்காக உருவாக்குங்கள்’ என்ற கருப்பொருளின்கீழ் நடத்தப்பட்டுள்ளது. மூன்று நாள் நடந்த இந்த நிகழ்ச்சியில் 80–க்கும் மேற்பட்ட அமர்வுகள் இருக்கும். கூட்டாளர் நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் அமர்வுகள் நடத்தப்படுகின்றன.

7. நீர்வள மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்பு குறித்து கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டது?

அ. பின்லாந்து

ஆ. டென்மார்க்

இ. ஆஸ்திரியா

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டென்மார்க்

  • நீர்வள மேம்பாடு மற்றும் நீர்மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. பசுமை செயல்திட்ட கூட்டாண்மையை நிறுவுவது குறித்து இருநாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. வாரணாசியில் திறன்மிகு நீர்வள மேலாண்மைக்கான சிறப்பு மையமும் தூய ஆற்றுநீர் குறித்த ஸ்மார்ட் ஆய்வகமும் நிறுவுதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

8. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமானது கால்நடைகளுக்கான எந்த மருந்தைப் பயன்படுத்த தடை விதிக்க கோரியுள்ளது?

அ. அசெக்ளோஃபெனாக்

ஆ. புரோஜெஸ்டின்

இ. எரித்ரோமைசின்

ஈ. கொலிஸ்டின்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அசெக்ளோஃபெனாக்

  • இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமானது கால்நடைகளில் அசிக்ளோஃபெனாக் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரியுள்ளது. இந்த மருந்து நீர் எருமைகள் மற்றும் பசுக்களில், ‘டிக்ளோஃபெனாக்’ ஆக வளர்சிதை மாற்றமடைகிறது என்று ஒரு புதிய ஆராய்ச்சி கண்டறிந்த பின்னர் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வளர்சிதை மாற்றங்கள் நாட்டில் உள்ள கழுகுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. டிக்ளோஃபெனாக், ஓர் அழற்சி எதிர்ப்பு மருந்தாகும். கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டில் இந்திய அரசால் கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்கு அம்மருந்து தடை செய்யப்பட்டது.

9. ஒரு புதிய ஆய்வின்படி, கீழ்க்காணும் எந்த உயிரினம் நாள்தோறும் சுமார் பத்து மில்லியன் நுண் நெகிழித் துண்டுகளை விழுங்கக்கூடும்?

அ. ஆமை

ஆ. நீலத்திமிங்கலம்

இ. கால்நடைகள்

ஈ. தவளை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீலத்திமிங்கலம்

  • ஒரு புதிய ஆய்வின்படி, நீலத்திமிங்கலங்கள் தினமும் சுமார் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் அல்லது சுமார் 95 பவுண்டுகள் (43.5 கிலோ) பிளாஸ்டிக்கை விழுங்கக்கூடும். இறால் உண்ணும் திமிங்கலங்கள் தினமும் சுமார் 4 மில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளை (38 பவுண்டுகள் பிளாஸ்டிக் வரை) உட்கொள்ளலாம்; அதே வேளையில் மீனுண்ணும் திமிங்கலங்கள் சுமார் 200,000 துண்டுகளை (இரண்டு பவுண்டுகள் பிளாஸ்டிக் வரை) உட்கொள்ளலாம்.

10. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், ‘ஒற்றுமை ஓட்டங்களை’ ஏற்பாடு செய்த நடுவண் அமைச்சகம் எது?

அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

  • நடுவண் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அதன் துணை அமைப்புகளான நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) ஆகியவை சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒற்றுமை ஓட்டங்களை’ நடத்தின. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருந்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடுவண் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நாடு முழுவதும், 55.32 லட்சம் பங்கேற்புடன், 90,122 ஒற்றுமைக்கான ஓட்டங்கள், தேசிய ஒற்றுமையின் சாராம்சம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘நூலக நண்பர்கள்’ திட்டம் டிச.1இல் தொடக்கம்

தமிழக அரசின் நூலக நண்பர்கள் திட்டம் சென்னையில் டிச.1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. நூலக வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நூலகங்களுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர், வீடுகளில் இருந்தே நூல்களை வாசிக்க உதவும் வகையில் ‘நூலக நண்பர்கள்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நூலகங்களிலும் தலா ஐந்து தன்னார்வலர்கள் கட்டணமின்றி உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.

அவர்களுக்கு புத்தகங்கள் எடுத்துச்செல்ல பை, அடையாள அட்டை வழங்கப்படும். இதையடுத்து அவர்கள் இல்லங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது இடங்களுக்குச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதுடன் அவர்கள் விரும்பும் நூல்களை வழங்குவர்.

2. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அரசு செய்திக் குறிப்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் ஆணைய குழுவில் இடம்பெறுவார். தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் வரும் 2025–ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னர், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பார். பின்னர், 2027–ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவார்.

3. தலாய் லாமாவுக்கு காந்தி – மண்டேலா விருது

திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி– மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வழங்கி கெளரவித்தார். அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சர்வதேச தலைவர்களுக்கு தர்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

4. அரசுப்பள்ளிகளில், ‘மிஷன் இயற்கை’: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழக அரசுப்பள்ளிகளில், ‘மிஷன் இயற்கை’ என்ற பெயரிலான சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில் அது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை: தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘மிஷன் இயற்கை’ என்ற சுற்றுச்சூழல் திட்டத்தை அரசுப்பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் தீட்டியுள்ளது.

19th & 20th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. India is set to unveil ‘Young Professionals Scheme’ with which country?

A. Japan

B. South Korea

C. UK

D. USA

Answer & Explanation

Answer: C. UK

  • India and the UK are set to unveil a new reciprocal visa arrangement whereby 3,000 degree–holding Indian nationals between the ages of 18 and 30 years will be allowed to come to Britain every year to live and work for up to two years. The UK–India Young Professionals Scheme will be reciprocal and open in early 2023. It is set to be launched during the first bilateral meeting between Prime Minister Narendra Modi and his British counterpart Rishi Sunak on the margins of the G20 Summit in Bali. India is the first country to benefit from such a scheme.

2. ‘Respect for Marriage Act’ is associated with which country?

A. Germany

B. USA

C. UK

D. France

Answer & Explanation

Answer: B. USA

  • The US Senate advanced ‘Respect for Marriage Act, that would provide federal protections for same–sex and interracial marriages. The Respect for Marriage Act repeals the previous Defense of Marriage Act and safeguards same–sex and inter–racial marriage by requiring the recognition of valid marriages regardless of sex, race, ethnicity or national origin.

3. Donyi Polo Airport has been inaugurated in which state/ UT?

A. Sikkim

B. Arunachal Pradesh

C. West Bengal

D. Jharkhand

Answer & Explanation

Answer: B. Arunachal Pradesh

  • Prime Minister Narendra Modi inaugurated the first greenfield airport in Arunachal Pradesh– Donyi Polo Airport in Hollangi, Itanagar. The foundation stone for the airport was laid by the Prime Minister in February 2019. The Donyi Polo Airport will be the third operational airport in Arunachal Pradesh, taking the total airport count in the northeast region to 16.

4. C V Ananda Bose has been appointed as the Governor of which state?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Kerala

D. West Bengal

Answer & Explanation

Answer: D. West Bengal

  • Dr CV Ananda Bose was appointed as the new Governor of West Bengal. The appointment was announced by a notification from the Rashtrapati Bhavan. Manipur Governor La Ganesan has been holding the additional charge of West Bengal since July after his predecessor Jagdeep Dhankhar resigned after his nomination as the National Democratic Alliance’s vice presidential candidate.

5. Which state hosted the 2nd edition of North East Olympic Games in 2022?

A. Assam

B. Meghalaya

C. Manipur

D. Sikkim

Answer & Explanation

Answer: B. Meghalaya

  • The 2nd edition of North East Olympic Games was hosted by Shilllong, Meghalaya in 2022. Manipur emerged as the overall team champion with a total of 240 medals. Assam took the second spot with a total of 203 medals followed by Arunachal Pradesh. In the week long event, about 3000 participants from all around the North East states competed in 18 disciplines. Nagaland will host the next edition of the Northeast Olympic Games.

6. What is the theme of the ‘Invest Karnataka 2022 Summit’?

A. Build for the World

B. Global Supply Chain

C. Tradition and Technology

D. Nature and Culture

Answer & Explanation

Answer: A. Build for the World

  • Prime Minister Narendra Modi addressed the inaugural function of ‘Invest Karnataka 2022’ Summit. This year’s edition of the Karnataka’s Global Investors Meet, is built under the theme ‘Build for the World’. The three–day program will have more than 80 speaker sessions. The sessions are hosted by partner countries – France, Germany, Netherlands, South Korea, Japan & Australia.

7. India signed a MoU with which country on cooperation in the field of Water Resources Development and Management?

A. Finland

B. Denmark

C. Austria

D. Australia

Answer & Explanation

Answer: B. Denmark

  • The Union cabinet approved a Memorandum of Understanding (MoU) between India and Denmark on cooperation in the field of Water Resources Development and Management. Both the countries launched a Joint Statement on establishment of Green Strategic Partnership. A Centre of Excellence for Smart Water Resources Management and a smart Lab on Clean River waters in Varanasi is also planned.

8. Indian Veterinary Research Institute (IVRI) has demanded ban of which drug to be used on cattle?

A. Aceclofenac

B. Progestin

C. Erythromycin

D. Colistin

Answer & Explanation

Answer: A. Aceclofenac

  • The Indian Veterinary Research Institute (IVRI) has demanded a ban on using aceclofenac in cattle. This was announced after new research found that this drug metabolizes into diclofenac in water buffaloes as well as in cows. Such metabolisms pose a threat to vulture populations in the country. Diclofenac, an anti–inflammatory drug, was banned for veterinary use by the Government of India in 2006, after decline of vulture population.

9. As per a new study, which species may swallow roughly 10 million microplastic pieces daily?

A. Turtle

B. Blue Whale

C. Cattle

D. Frog

Answer & Explanation

Answer: B. Blue Whale

  • As per a new study, blue whales may swallow roughly 10 million microplastic pieces daily, or up to about 95 pounds (43.5 kg) of plastic. Krill–favoring humpbacks may ingest about 4 million microplastic pieces (up to 38 pounds of plastic) daily, while those favoring fish may take in roughly 200,000 pieces (up to a couple of pounds of plastic).

10. Which Union Ministry organised ‘Unity Runs’ on the birth anniversary of Sardar Vallabh Bhai Patel?

A. Ministry of Youth Affairs and Sports

B. Ministry of Education

C. Ministry of Housing and Urban Affairs

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Youth Affairs and Sports

  • Department of Youth Affairs and Sports and its affiliate organizations namely Nehru Yuva Kendra Sangathan (NYKS) and National Service Scheme (NSS) organized Unity Runs on the birth anniversary of Sardar Vallabh Bhai Patel in all districts. Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur flagged off the Run for Unity from Mohali, Punjab. Across the country, 90,122 Runs for Unity were organized with participation of 55.32 Lakh, to generate awareness among citizens about the essence of national unity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!