19th & 20th September 2020 Current Affairs in Tamil & English

19th & 20th September 2020 Current Affairs in Tamil & English

19th & 20th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

19th 20th September Tamil Current Affairs 2020

19th 20th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. 2016-17ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி, எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

அ. 100%

ஆ. 300%

இ. 500%

ஈ. 700%

 • 2016-17ஆம் ஆண்டில் `1521 கோடியிலிருந்த இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி, 700% அதிகரித்து, 2018-19ஆம் ஆண்டில் `10,745 கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் சிறந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில், இந்தியா 19ஆவது இடத்தில் உள்ளது. இது, இதுவரை அடைந்த இந்தியா மிகவுயர்ந்த தரநிலையாகும்.

2. POCSO தொடர்பான வழக்குகளை மேற்பார்வையிட, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் இ. கா. ப அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ள அமைப்பு எது?

அ. இந்திய உச்சநீதிமன்றம்

ஆ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. கேரள உயர்நீதிமன்றம்

ஈ. தேசிய பெண்கள் ஆணையம்

 • பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. POCSO சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் IPS அதிகாரியை நியமிக்க, உயர்நீதிமன்றம், மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு, உதவி மையத்தை நிறுவவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

3. ‘iStartup 2.0’ என்ற பெயரில் துளிர் நிறுவனங்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?

அ. பாரத வங்கி

ஆ. ஐசிஐசிஐ வங்கி

இ. HDFC வங்கி

ஈ. ஆக்ஸிஸ் வங்கி

 • இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ‘iStartup 2.0’ என்ற பெயரில் துளிர் நிறுவனங்களுக்கான பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இத்திட்டத்தின்கீழ், 10 ஆண்டுகாலம் தடையின்றி நடைபெற்று வரும் புதிய வணிகங்களுக்கு, நடப்புக் கணக்கை உருவாக்க முடியும். பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் வலைத்தளத்துடன் ICICI வங்கி தனது API’களை ஒருங்கிணைத்துள்ளது.

4.ஓமன் கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரில் கடற்படைப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?

அ. ஈரான்

ஆ. ஓமன்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. பிரான்ஸ்

 • ஈரானிய கடற்படையானது ஓமானிய கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரிலான மூநாள் பயிற்சியை உத்திசார் முக்கியத்துவமிக்க ஹார்முஸ் நீரிணையில் தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானூர்தி மற்றும் ஆளில்லா வானூர்தி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட, கடலோரத்திலிருந்து கடலுக்குள் ஏவக்கூடிய எறிகணைகள் மற்றும் இரண்டு நிலப்பரப்புக்குள்ளாக ஏவக்கூடிய எறிகணை அமைப்புகள் ஆகியவற்றை ஈரானிய கடற்படை பரிசோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்புகளை பாதுகாக்க, தற்காப்பு உத்திகளை வகுப்பதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

5.எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக, எந்த அண்டை நாட்டுடனான 5 அம்ச திட்டத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ. நேபாளம்

ஆ. சீனா

இ. பாகிஸ்தான்

ஈ. வங்கதேசம்

 • ஆதிக்க எல்லைக்கோடு (LAC) தொடர்புடைய 5 அம்ச திட்டத்திற்கு இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உத்திசார் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை, படைகளை எல்லைகளிலிருந்து திரும்பப்பெறுவது மற்றும் பதட்டங்களை தணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

6.ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான, ‘ஏரோ இந்தியா-21’ நிகழ்வை தொகுத்து வழங்கும் இந்திய நகரம் எது?

அ. குருகிராம்

ஆ. பெங்களூரு

இ. விசாகப்பட்டினம்

ஈ. கொல்கத்தா

 • பதிமூன்றாவது ‘ஏரோ இந்தியா-21’ வானூர்தி கண்காட்சி, கர்நாடகா மாநிலம் ஏலகங்காவில் உள்ள வான்படை தளத்தில், 2021 பிப்.3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
 • இந்த இணையதளம், கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும், பார்வையாளர்களுக் -கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஆன்லைன்மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அண்மைய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

7. ‘பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை’ அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

இ. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சகம்

ஈ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

 • ​பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொலிவுறு நகர்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமையொழிப்பு இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். திட்டமிடுதல், முதலீடு திட்டங்களை அமல்படுத்தும்போது, அனைத்து விதமான பருவநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையிலான தெளிவான கட்டமைப்பை வழங்குவதே CSCAF 2.0 (Climate Smart Cities Assessment Framework)’இன் நோக்கமாகும்.
 • தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்தின்கீழ் உள்ள நகரங்களுக்கான காலநிலை மையம், இந்த திட்டத்தை செயல்படுத்தும். நடைபாதசாரிகளுக்கு உதவும் நோக்குடைய, ‘Streets for People Challenge’ என்ற நிகழ்ச்சியையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

8.உலக நலவாழ்வு அமைப்பின், ‘Countdown to 2023’ என்ற அண்மைய அறிக்கையின்படி, ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ள நோய் எது?

அ. இதய நோய்

ஆ. புற்றுநோய்

இ. நீரழிவு நோய்

ஈ. காசநோய்

 • உலக நலவாழ்வு அமைப்பானது சமீபத்தில், ‘கவுண்டவுன் டூ 2023: உலகளாவிய மாறுபக்க கொழுப்பு ஒழிப்பு (trans fat) – 2020 பற்றிய WHO அறிக்கை’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் உணவு விநியோகத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளன.
 • மாறுபக்க கொழுப்பின் நுகர்வால் ஏற்படும் கரோனரி இதய நோயால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் மக்கள் மரணிப்பார்கள் என இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

9.புதிய பாரம்பரிய சுற்றுலா கொள்கையை கொண்டுவந்துள்ள மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளம்

 • குஜராத் மாநில அரசானது அம்மாநிலத்தின் முதல் பாரம்பரிய சுற்றுலா கொள்கையை அறிவித்துள்ளது. பாரம்பரிய அரண்மனை & கோட்டைகள், பாரம்பரிய உணவகங்கள், பாரம்பரிய அருங்காட்சியகங்கள், பாரம்பரிய விருந்தரங்குகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் போன்ற வரலாற்று கட்டடங்களை (1950’க்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள்) பயன்பாட்டுக்கு கொண்டுவர இக்கொள்கை வழிவகை செய்கிறது. இந்தக் கொள்கையின்கீழ், இந்தப் பாரம்பரிய கட்டமைப்புகளை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநில அரசு, `5-10 கோடி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யும்.

10.கீழ்க்காணும் எந்தத்திட்டத்தின்கீழ் பெறப்படும் நிதியுதவியுடன், சீதாமதியில் (பீகார்) ஒரு மீன் வளர்ப்பு வங்கி நிறுவப்படவுள்ளது?

அ. பிரதமர் கிஸான் யோஜனா

ஆ. பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா

இ. பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா

ஈ. பிரதமர் ஜன் ஜீவன் யோஜனா

 • சீதாமதியில் (பீகார்) ஒரு மீன் வளர்ப்பு வங்கி நிறுவப்படவுள்ளது. மேலும், பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பாத யோஜனாவின் (PMMSY) ஒருபகுதியாக கிஷன்கஞ்சில் (பீகார்) நீர்வாழ் நோய்கள் பரிந்துரை ஆய்வகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தரமான மற்றும் மலிவு விலையிலான மீன் குஞ்சுகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்வதோடு மீன் உற்பத்தியையும் மேம்படுத்துகின்றன.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

 • அண்மையில் நிறைவடைந்த அனைத்திந்திய மேலாண்மை சங்கம் (AIMA) – சாணக்யா (தொழில் ஊக்க விளையாட்டு) தேசிய நிர்வாக விளையாட்டு போட்டிகள்-2020’இல், எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தின், தமிழ்நாட்டின் வல்லூர் மின்நிலைய அணி வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளில் முதன்முறையாக NTPC வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1. By how much percentage, India’s Defence exports have increased from 2016–17 to 2018–19?

[A] 100%

[B] 300%

[C] 500%

[D] 700%

 • The Chief of Defence Staff (CDS) General Bipin Rawat has stated that India’s Defence exports have grown by 700% from Rs 1521 crore in 2016–17 to Rs 10,745 crore in 2018–19.
 • Also, as of 2019, India is ranked 19th in the list of top Defence exporters in the world, which is an all–time high rank ever featured by India.

2. Which institution has directed for appointment of woman IPS officer in every district of Kerala to oversee POCSO related cases?

[A] Supreme Court of India

[B] Ministry of Women and Child Development

[C] High Court of Kerala

[D] National Commision for Women

 • The High Court of Kerala has issued a set of directives to the state regarding Protection of Children from Sexual Offences Act (POCSO). The High Court has directed the state to appoint woman IPS officer in every district, to oversee the cases investigated under POSCO Act. It has also directed to establish 1–Stop Support Centres, in lines with the Supreme Court directions, to protect the victims.

3. Which Indian bank has launched a programme for start–ups named ‘iStartup 2.0’?

[A] State Bank of India

[B] ICICI Bank

[C] HDFC Bank

[D] Axis Bank

 • Leading Private sector bank of India, ICICI Bank has launched an exclusive programme for start–ups named ‘iStartup2.0’. Under this programme, a Current Account can be created for new businesses that are up to ten years old seamlessly. The Bank has integrated its APIs with the website of the Ministry of Corporate Affairs (MCA).

4. Which country is holding a naval exercise named ‘Zolfaghar–99’ in the Sea of Oman?

[A] Iran

[B] Oman

[C] UAE

[D] France

 • The Naval Force of Iran has started a three–day exercise in the Sea of Oman named ‘Zolfaghar–99’, in the strategic Strait of Hormuz.
 • The Navy is expected to test–fire surface–to–surface and shore–to–sea cruise missiles and rocket–launching systems fitted on warships, submarines, aircraft and drones. The exercise also aims to devise defensive strategies to safeguard the country’s territorial regions.

5. India has agreed on a 5–point plan with which neighbouring country, to resolve border issues?

[A] Nepal

[B] China

[C] Pakistan

[D] Bangladesh

 • India and China have recently agreed on five points regarding the situation on the Line of Actual Control (LAC). On the side lines of the Shanghai Cooperation Organisation (SCO) meet in Moscow, the External affairs Minister S Jaishankar and his Chinese counterpart Wang Yi had strategic talks which focussed on Disengagement of troops and easing of tensions.

6. Which Indian city is to play host to the Asia’s largest aero show, Aero India–21?

[A] Gurugram

[B] Bengaluru

[C] Vishakhapatnam

[D] Kolkata

 • Union Defence Minister Rajnath Singh has launched the website of Aero India 2021, which is claimed to be the largest aero show of Asia. The 13th edition of show is scheduled to be held at Air Force Station, Yelahanka, Bengaluru from February 3 to February 7 next year. The newly launched website will host and stream all online services related to the event.

7. Which Union Ministry launched ‘Climate Smart Cities Assessment Framework (CSCAF 2.0)’?

[A] Ministry of Environment, Forest and Climate Change

[B] Ministry of Housing and Urban Affairs

[C] Ministry of Agriculture & Farmers’ Welfare

[D] Ministry of Road Transport and Highways

 • The Ministry of Housing and Urban Affairs (MoHUA) has launched the Climate Smart Cities Assessment Framework (CSCAF) 2.0. The Climate Centre for Cities under National Institute of Urban Affairs (NIUA) will implement the program.
 • It aims to provide a plan for cities to combat Climate Change while implementing their actions. He also launched a pedestrian–friendly program ‘Streets for People Challenge’.

8. As per the recent WHO report ‘Countdown to 2023’, which disease is estimated to cause around 5 lakh deaths per year?

[A] Coronary Heart Disease

[B] Cancer

[C] Diabetes

[D] Tuberculosis

 • The World Health Organization (WHO) recently released a report titled ‘Countdown to 2023: WHO report on global trans–fat elimination 2020’. As per the report, more than 100 countries have to take actions to remove harmful substances from their food supplies. Due to consumption of trans fats, 5 lakh deaths per year is estimated due to coronary heart disease.

9. Which state has come out with a new Heritage Tourism Policy?

[A] Himachal Pradesh

[B] Gujarat

[C] Assam

[D] Kerala

 • The Government of Gujarat has announced the state’s first Heritage Tourism Policy. The policy permits use of historic buildings (pre–1950 historical buildings) such as heritage palaces and forts, as heritage hotels, heritage museums, heritage banquet halls and heritage restaurants etc. Under the policy, the State Government will offer an aid of Rs. 5 – 10 crore for renovation of these heritage structures.

10. A fish brood bank at Sitamarhi (Bihar) is to be established with financial assistance under which scheme?

[A] PM Kisan Yojana

[B] PM Matsya Sampada Yojana

[C] PM Garib Kalyan Yojana

[D] PM Jan Jeevan Mission

 • A fish brood bank is set to be established at Sitamarhi (Bihar) and aquatic disease referral laboratory is proposed to set up at Kishanganj (Bihar) as a part of the Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY). These facilities will enhance production of fish by ensuring timely availability of quality and affordable fish seed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *