19th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 2020-21 நிதியாண்டுக்கான 37 பெரிய CPSE’கள் மற்றும் அரசு துறைகளின் ஒட்டுமொத்த மூலதன செலவு என்ன?

அ) `4.6 இலட்சம் கோடி

ஆ) `10.6 இலட்சம் கோடி

இ) `40.6 இலட்சம் கோடி

ஈ) `100.6 இலட்சம் கோடி

 • இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது.

2. ‘லிட்டில் குரு’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) ICCR

இ) BHEL

ஈ) BARC

 • இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.

3. எந்த மாநிலத்தின் 3 கிளர்ச்சிக் குழுக்களுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இந்தியா, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) நாகாலாந்து

ஈ) அருணாச்சல பிரதேசம்

 • நாகாலாந்து மாநிலத்தின் 3 கிளர்ச்சிக் குழுக்களுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் 2022 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
 • மத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, இந்திய அரசாங்கத்திற்கும், NSCN NSCN/NK, NSCN/R மற்றும் NSCN/K-காங்கோ ஆகிய மூன்று குழுக்களுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் -டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

4. மேலை ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய வெப்ப மண்டல சூறாவளியின் பெயர் என்ன?

அ) செரோஜா

ஆ) பாப்

இ) நிவர்

ஈ) பானி

 • வெப்பமண்டல சூறாவளியான ‘செரோஜா’ aநமையில் மேலை ஆஸ்தி -ரேலியாவின் 1,000 கிமீ நீள நிலப்பரப்பை தாக்கி சேதப்படுத்தியது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய மூன்றாம் வகை புயல், அங்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. ஆஸி., நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்தப் புயல் பலவீனமடைந்த போதிலும், அது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் புயல் காற்றை வீசும்.

5. அண்மையில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் தளமான, “இ-சாண்டா” என்பதுடன் தொடர்புடைய தயாரிப்பு எது?

அ) மருந்துகள்

ஆ) மீன்வளர்ப்பு தயாரிப்புகள்

இ) மின்னணு தயாரிப்புகள்

ஈ) ஜவுளி தயாரிப்புகள்

 • மீன் விவசாயிகளையும் வாங்குபவர்களையும் இணைக்கும் மின்னணு சந்தையான, ‘இ-சாண்டா’வை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். ‘eSanta’ என்பது electronic Solution for Augmenting National centre for sustainable aquaculture (NaCSA) farmers’ Trade in Aquaculture” என்பதாகும். NaCSA என்பது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) ஒரு விரிவாக்கப்பட்ட குழுமமாகும்.

6. ஹிடெக்கி மாட்சுயாமா என்பவர் பின்வரும் எந்த விளையாட்டின் சாம்பியன்ஷிப்பான முதல் ஜப்பானிய வீரராக மாறியுள்ளார்?

அ) டென்னிஸ்

ஆ) கால்ப்

இ) சதுரங்கம்

ஈ) பூப்பந்து

 • அகஸ்டா நேஷனல் கால்ப் கிளப்பில் மாஸ்டர்ஸ் வென்ற ஹிடெக்கி மாட்சுயாமா, ஆடவர் மேஜர் சாம்பியன்ஷிப்பைப் பெற்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 29 வயதான இவர் உலகளவில் 15 வெற்றிகளையும், எட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பத்து இடங்க
  -ளையும் பெற்றுள்ளதோடு 4 பிரெஸிடென்ட் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில், உலக அமெச்சூர் கால்ப் தரவரிசையில் மாட்சுயாமா முதலிடத்தைப் பிடித்தார்.

7. நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?

அ) பிரேஸில்

ஆ) ஜெர்மனி

இ) நியூசிலாந்து

ஈ) பிரான்ஸ்

 • நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை அறிமுகப்படுத்திய உல -கின் முதல்நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தில் காலநிலை மாற்ற -த்தின் தாக்கங்களை தெரிவிக்க இச்சட்டம் தேவைப்படுகிறது.
 • காலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை நிதி நிறுவ -னங்கள் எவ்வாறு நிர்வகிக்கும் என்பதை விளக்க இச்சட்டம் அவற்றை கேட்டுக்கொள்கிறது.

8. இந்திய இராணுவம், MEGHDOOT நடவடிக்கையை தொடங்கிய நாளை, பின்வரும் எந்தச் சிறப்பு நாளாக அனுசரிக்கிறது?

அ) விஜய் திவாஸ்

ஆ) கார்கில் திவாஸ்

இ) சியாச்சின் நாள்

ஈ) ரக்ஷா திவாஸ்

 • 1984 ஏப்.13 அன்று, சால்டோரோ முகட்டு வரையில் உள்ள பிலாபாண்ட் லா மற்றும் பிற கணவாய்களைப் பாதுகாப்பதற்காக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் மேகதூத்’ என்றவொன்றைத் தொடங்கியது. சியாச்சின் நாளானது ஒவ்வோர் ஆண்டும் இந்திய இராணுவத்தின் படைகள், உலகின் உயரம் மிகுந்த மற்றும் குளிரான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையை பாதுகாப்பதில் காட்டிய வீரத்தை நினைவுகூர்கிறது.

9. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துகுறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சி -யமான ‘போஷன் கியான்’ என்பதை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) NITI ஆயோக்

இ) தேசிய பெண்கள் ஆணையம்

ஈ) நிதி ஆணையம்

 • NITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.
 • இது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப்பாகும்.

10. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சிறந்த சாலைகளை வழங்குவதற்காக, ‘NSV’ஐ பயன்படுத்தவுள்ளது. இங்கு, ‘NSV’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) National Standard Vehicle

ஆ) Network Survey Vehicle

இ) National Signal Variance

ஈ) New Standard Vehicle

 • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பயணிகளுக்கு சிறந்த சாலைகளை வழங்குதற்காக, Network Survey Vehicle (NSV) என்பதை பயன்படுத்தவுள்ளது.
 • NSV’ஐப் பயன்படுத்தி திட்டம் நிறைவுவடையும் போதும், அதன்பிறகு ஒவ்வோர் 6 மாதத்திற்கும் ஒருமுறை சாலையின் நிலையை ஆய்வுசெய் -வதை NHAI கட்டாயமாக்கியுள்ளது. ஆலோசனை சேவைகளின் நிலை -யான ஏல ஆவணத்தின் ஒருபகுதியாக இது சேர்க்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உதவி சொலிசிட்டர் ஜெனரலாக R ராஜேஷ் விவேகானந்தன் பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்குகளில் ஆஜ ராவதற்கு, உதவி சொலிசிட்டர் ஜெனரலாக R இராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது. இதனையடுத்து, உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்குரை -ஞர் இராஜேஷ் விவேகானந்தன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

2. 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி

நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில், “இந்த ஆலைகள் மூலமாக 154.19 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளது. 33 ஆலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன.

அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஐந்து ஆலைகளும், ஹிமாசல பிரதேசத்தில் நான்கு ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், பிகார், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் மேலும் 54 ஆலை -களும், அடுத்த மாத இறுதிக்குள் கூடுதலாக எண்பது ஆலைகளும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் அமைக்கப்படும்.

ஆலைகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் `201.58 கோடி நிதியை மத்திய அரசு செலவிடவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. இந்தியாவில் மின்சார பயன்பாடு 45% உயர்வு

நடப்பு ஏப்ரல் மாதத்தின் இருவார காலத்தில் உள்நாட்டில் மின்சாரத்தின் பயன்பாடு ஏறக்குறைய 45% அளவுக்கு அதிகரித்து 60.62 பில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்ச -கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்.1-15 வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டில் மின்சார பயன்பாடு 41.91 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஏப்.1-15 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மின்சார பயன்பாடு 60.62 பில்லியன் யூனிட்டுகளாக கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தின் இருவார காலத்தில் மின் நுகர்வு 45% உயர்ந்துள்ளது.

இது, தொழிலக மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வலுவான நிலையில் மீண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

நடப்பு ஏப்ரலின் முதல் இருவார காலத்தில் உச்சபட்ச மின்தேவையான 182.55 GW 8ஆம் தேதியன்று எட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. வளர்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம்

மத்திய அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

அமேஸான் இணையவழி வர்த்தக நிறுவனம் சார்பில் தொழில்முனை
-வோருக்காக நடத்தப்பட்ட பிரத்யேக நிகழ்ச்சியில் அமைச்சர் ஜாவடேகர் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய சூழலில், மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் 7% மட்டுமே இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது. எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சூரிய ஆற்றல் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது 14 மடங்கு அதிகரித்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றம் 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்களிப்பு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி வாயிலாக தற்போது 136 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை அடுத்த ஆண்டுக்குள் 175 கிகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 450 கிகா வாட் மின்சாரத்தை மரபுசாரா எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்வதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 நகரங்களில் 6,500 மின்-வாகனங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக `10,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் தனிநபரு -க்கு 12,000 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் அது 1,200 கிலோ வாட்டாக மட்டுமே உள்ளது. என்றார் அமைச்சர் ஜாவடேகர்.

5. நாட்டின் தங்கம் இறக்குமதி 23% அதிகரிப்பு

நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் 22.58% அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது: உள்நாட்டில் தேவை அதிகரித்ததையடுத்து தங்கம் இறக்குமதி 2020-21ஆம் நிதி ஆண்டில் 3,460 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் `2.54 இலட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2019-2020ஆம் நிதியாண்டில் இறக்குமதியான 2,823 கோடி டாலர் (`2 இலட்சம் கோடி) தங்கத்துடன் ஒப்பிடுகையில் 22.58% அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி 71% குறைந்து 79.1 கோடி டாலர் என்ற அளவிலேயே காணப்பட்டது. தங்கம் இறக்குமதி அதிகரித்த போதிலு -ம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, 2019-20’இல் 16,130 கோடி டாலராக அதி -கரித்திருந்தது என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவி -த்துள்ளது. ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதைய -டுத்து நம் நாட்டில் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரியை 12.5 சதவீத -த்திலிருந்து குறைத்து 10 சதவீதமாக (7.5% சுங்கவரி + 2.5% வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி) நிர்ணயித்துள்ளது.

7. மான்டி கார்லோ: சிட்சிபாஸ் சாம்பியன்

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெபா
-னோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனார். போட்டித்தரவரிசையில் நான்காம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் ஆறாம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ‘மாஸ்டர்ஸ் 1000’ பிரிவில் சிட்சிபாஸ் வெல்லும் முதல் பட்டம் இது. ATP டூர் போட்டிகளில் இது அவரது ஆறாவது பட்டம்.

பாவிச்/மெக்டிச் சாம்பியன்: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் இரட்
-டையர் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் இணை 6-3, 4-6, 10-7 என்ற செட்களில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி / டேன் இவான்ஸ் இணையை வென்று சாம்பியன் ஆனது.

8. உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் NCC சேர்ப்பு:

பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தேர்வு முறையில் தளர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. NCC பயிற்சியை விருப்பப் பாடப்பிரிவில் சேர்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. அதையேற்று, உயர்கல்விக்கான விருப்பப்பாடப்பிரிவில் NCC சேர்க்கப்படு -கிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

9. தேசிய, ஆசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு சட்ட பல்கலை. அணி முதலிடம்:

தேசிய, ஆசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு சட்டப் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற பிலிப் சி ஜீசப் சர்வதேச மாதிரி நீதிமன்ற போட்டியின் தேசிய மற்றும் ஆசிய சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஐம்பது சட்டக்கல்லூரி மற்றும் பல்கலை மாணவர் அணியினர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹுடா சயீது, ஹரிகிருஷ்ணன் பழனியப்பன், மீனாட்சி அண்ணாமலை, சோனு மேத்தா, சுவேதன் ஆகிய ஐவர் அடங்கிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் தேசிய சட்டக்கல்லூரி மாணவர்கள் சாராத அணியினர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பி -டத்தக்கது. இத்தகவலை தமிழ்நாடு Dr அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

1. What is the overall capital expenditure by 37 large CPSEs and Government departments for FY21?

A) Rs 4.6 lakh crore

B) Rs 10.6 lakh crore

C) Rs 40.6 lakh crore

D) Rs 100.6 lakh crore

 • As per the data released by the Government of India, the combined capital expenditures by 37 large CPSEs and departmental undertakings stood at Rs. Rs.4.6 lakh crore for the FY 2020–21.
 • The capital expenditure target for the FY 2020–21 was Rs.5 lakh crore and the achievement were 92% of the budget.

2. Which Institute has launched the ‘Little Guru’ app?

A) ISRO

B) ICCR

C) BHEL

D) BARC

 • The Indian Council for Cultural Relations (ICCR), has celebrated its 71st Foundation Day recently. At the celebrations in Swami Vivekanand Cultural Centre at Indian Embassy in Beijing, the foundation day celebrations were accompanied by the launch of ‘Little Guru’ app. This is the world’s first Gamified Sanskrit learning App.

3. India has extended the ceasefire agreement with three insurgent groups of which state, for one more year?

A) Assam

B) Sikkim

C) Nagaland

D) Arunachal Pradesh

 • The Indian Government has extended the ceasefire agreement with three insurgent groups of Nagaland for one more year. The ceasefire agreements were extended till April 2022.
 • As per the Ministry of Home Affairs, the ceasefire agreements are in operation between the government of India and three groups– NSCN/NK, NSCN/R and NSCN/K–Khango.

4. What is the name of the tropical cyclone that has made landfalls in Western Australia?

A) Seroja

B) Bob

C) Nivar

D) Fani

 • Tropical cyclone Seroja recently hit and damaged a 1,000 km stretch of Western Australia. With a windspeed of up to 170km/h, the category three storm made landfalls. As per the country’s Bureau of Meteorology the storm had weakened yet it would cause damages wi the peak winds of 110 km/hr.

5. “eSanta”, a digital platform which was launched recently, is associated with which type of products?

A) Drugs

B) Aquaculture Products

C) Electronic Products

D) Textile Products

 • Union Commerce and Industry Minister Piyush Goyal virtually inaugurated e–SANTA, an electronic marketplace to connect aqua farmers and the buyers. eSanta stands for “Electronic Solution for Augmenting National Centre for Sustainable Aquaculture (NaCSA) farmers’ Trade in Aquaculture”. NaCSA is an extension arm of Marine Products Export Development Authority (MPEDA).

6. Hideki Matsuyama, is the first Japanese player to claim a major championship in which sports?

A) Tennis

B) Golf

C) Chess

D) Badminton

 • Hideki Matsuyama won the Masters at Augusta National Golf Club to become the 1st player from Japan to claim men’s major championship.
 • The 29–year–old has 15 worldwide wins, eight career top–10 finishes in major championships, and four Presidents Cup appearances. In 2012, Matsuyama reached number one in the World Amateur Golf Ranking.

7. Which country is the first to introduce Climate Change law for Financial sector?

A) Brazil

B) Germany

C) New Zealand

D) France

 • New Zealand has become the first country in the world to introduce a Climate Change law for Financial sector. The law requires banks, insurers and investment managers to report the impacts of climate change on their business. It requires financial firms to explain how they would manage climate–related risks and opportunities.

8. The day on which the Indian Army launched Operation MEGHDOOT is observed as which special Day?

A) Vijay Diwas

B) Kargil Diwas

C) Siachen Day

D) Rakshak Diwas

 • On 13 April 1984, the Indian Army launched ‘Operation MEGHDOOT’ to secure Bilafond La and other passes on the Saltoro Ridgeline. Siachen Day every year commemorates the courage displayed by troops of the Indian Army in securing Siachen Glacier, the highest and coldest battlefield in the world.

9. Which institution launched ‘Poshan Gyan’– a national digital repository on health and nutrition?

A) Women and Child Development Ministry

B) NITI Aayog

C) National Commission on Women

D) Finance Commission

 • NITI Aayog, in partnership with Bill and Melinda Gates Foundation and Centre for Social and Behaviour Change, Ashoka University launched ‘Poshan Gyan’. It is a national digital repository on health and nutrition.
 • It is a collection of communication materials created by government agencies and other development organizations for awareness creation and behaviour change in the nutrition sector.

10. The National Highway Authority of India (NHAI) is to deploy “NSV” to provide better roads. What does NSV stand for?

A) National Standard Vehicle

B) Network Survey Vehicle

C) National Signal Variance

D) New Standard Vehicle

 • The National Highway Authority of India (NHAI) is set to deploy Network Survey Vehicle (NSV), to provide better roads to commuters. NHAI has made road condition survey using NSV mandatory at the time of certifying completion of the project and every six months thereafter.
 • This has also been included as a part of the standard bidding document of consultancy services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *