Tnpsc

19th August 2020 Current Affairs in Tamil & English

19th August 2020 Current Affairs in Tamil & English

19th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

19th August 2020 Current Affairs Pdf Tamil

19th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்ற பெயரில் பரப்புரை ஒன்றை தொடங்கிய நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. சவுதி அரேபியா

  • உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

2.இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா அரபு நாடு எது?

அ. கத்தார்

ஆ. குவைத்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. பஹ்ரைன்

  • பாலஸ்தீனியர்கள் தங்களின் எதிர்கால நாட்டின் ஒருபகுதியாகக் காணும் மேலைக்கரையின் சில பகுதிகளை சர்ச்சைக்குரிய முறையில் இணைப்பதைத் தடுக்கும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாகவும் அரேபிய உலகில் மூன்றாவது நாடாகவும் மாறியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் பாராட்டியுள்ளார்.
  • இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கின் இரு ஆற்றல்மிக்க சமூகங்களுக்கும், பொருளாதாரங்களுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலும் COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவற்றுக்கான தடுப்பூசி உருவாக்கம் ஆகியவற்றில் தங்களது மேலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்.

3.இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் மற்றும் பிரதமர் உட்பட) மிகநீண்டகாலம் பதவி வகித்தவர் யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. மன்மோகன் சிங்

இ. P V நரசிம்மராவ்

ஈ. இந்திரா காந்தி

  • அனைத்து இந்தியப்பிரதம அமைச்சர்களைவிடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர மோடி, மிகநீண்டகாலம் பதவி வகித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.
  • அடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிகநீண்டகாலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மோடி. நாட்டில் மிகநீண்டகாலம் பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்). அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

4.ஆயுதமேந்திய காவல்படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” என்றவொரு சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?

அ. ICICI வங்கி

ஆ. HDFC வங்கி

இ. ஆக்ஸிஸ் வங்கி

ஈ. YES வங்கி

  • HDFC வங்கியானது, சமீபத்தில், ஆயுதமேந்திய காவல் படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” தொடங்கப்படுவதாக அறிவித்தது. கிசான் வரவு அட்டை வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு `2 இலட்சம் முதல் `10 இலட்சம் வரையிலான ஆயுள்காப்பீடு இதில் கிடைக்கும். இந்த அட்டையைப் பெறுவதற்கு, ஆயுதப்படை வீரர்கள், தங்களின் பணிக்கேற்றவாரான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

5.புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டத்திற்கான அடல் திட்டத்தை (AMRUT) செயல்படுத்துவதில், சிறந்த செயல்திறனை வகிக்கின்ற இந்திய மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. மகாராஷ்டிரா

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒடிசா மாநிலம் 85.67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.
  • AMRUT திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக் -கையிலான பணிகளை நிறைவுசெய்துள்ளது.

6. ’Sputnik V’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் இரஷ்யாவுடன் கூட்டிணைந்துள்ள நாடு எது?

அ. அர்ஜென்டினா

ஆ. பிரேசில்

இ. ஆஸ்திரேலியா

ஈ. நியூசிலாந்து

  • உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி, ‘Sputnik V’இன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ரஷ்யாவும் பிரேசிலும் கூட்டிணைய முடிவுசெய்துள்ளன. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது பிரேசில் மாகாணமான பரணாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியையும் அதன் விநியோகத்தையும் பிரேசில் மற்றும் பிற அமெரிக்க நாடுகளில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஏற்பாடு செய்து வருகிறது.

7.எந்தப் பழங்குடி மொழிக்கான எந்திர மொழிபெயர்ப்பு கருவியை, மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கியுள்ளது?

அ. சந்தாளி

ஆ. கோண்டி

இ. சோரா

ஈ. முந்தரி

  • மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையாதலாமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.
  • இது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மொழியான கோண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மொழிபெயர்க்கிறது. இந்தச் செயலி, கோண்டி பழங்குடியைச்சார்ந்த இளையோரை அம்மொழியைக்கற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “N1-STOP-LAMP” என்றால் என்ன?

அ. COVID–19 பரிசோதனை

ஆ. கிருமிநாசினி விளக்கு

இ. தனிநபர் பாதுகாப்பு உடை

ஈ. முக மறைப்பு

  • ஜர்னல் ஆப் மெடிக்கல் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, “N1-STOP-LAMP” என்ற புதிய மலிவு விலை நாசித்துணி சோதனை உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தச் சோதனையானது COVID-19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 நச்சுயிரியின் இருப்பை 20 நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும். இது 100% துல்லியமானது. ஒரு குழாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனை, ஒரே ஒரு படிநிலையை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. எனவே இது, மிகவும் திறமையானதும் மலிவானதும் ஆகும்.

9.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய, மேற்பரப்புகளை கிருமிநீக்கம் செய்வதற்கான DRDO சான்றளிக்கப்பட்ட சாதனத்தின் பெயர் என்ன?

அ. ஆராத்யா

ஆ. அதுல்யா

இ. அபிமன்யு

ஈ. பீமா

  • “அதுல்யா” – 30 நொடிகளில் எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கம் செய்யக்கூடிய புதிய சாதனம், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரியால் வெளியிடப்பட்டது. இச்சாதனத்தின் வடிவமைப்பு, DRDO’ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும்.
  • எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இது 3 கிகி எடைகொண்டதாக உள்ளது. ஒரு நேரத்தில் 5 மீ பரப்பளவு வரை எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கஞ்செய்ய இச்சாதனத்தைப் பயன்படுத்தலாம். வீடு, அலுவலகம், பெட்டிகள், அறைகலன்கள் போன்றவற்றின் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய இதனை பயன்படுத்தப்படலாம்.

10.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு என்பது எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் நீர்ப்பாசனத் திட்டமாகும்?

அ. மகாராஷ்டிரா

ஆ. மேற்கு வங்கம்

இ. ஒடிசா

ஈ. பீகார்

  • ஒடிசா மாநில அமைச்சரவை தனது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த, `1138 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீர்ப்பாசனத்திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும். இந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.

1. Which country has recently initiated a campaign named “Clean Plate Campaign 2.0” to reduce food wastage?

[A] USA

[B] China

[C] UAE

[D] Saudi Arabia

  • China has initiated a new campaign to reduce food waste, called the “Clean Plate Campaign 2.0”. The campaign has been implemented after the Chinese President Xi Jinping highlighted that Covid–19 had created an alarming situation on food waste. The first version of Clean Plate Campaign was launched in 2013 which aimed at restricting excessive official feasts and receptions.

2. Which is the first Gulf Arab country to establish diplomatic relations with Israel?

[A] Qatar

[B] Kuwait

[C] UAE

[D] Bahrain

  • The United Arab Emirates (UAE) has become the first–ever Gulf country and the third in the Arab world to establish diplomatic relations with Israel as part of a deal to halt the controversial annexation of parts of the West Bank that Palestinians see as part of their future state. US President has hailed this move. This move opens the ties between two of the Middle East’s most dynamic societies and advanced economies. Under the deal, UAE and Israel will also expand cooperation on the treatment of and the development of a vaccine for the Coronavirus.

3. Who has the longest tenure of over as head of elected government in India (including Chief Minister as well as Prime Minister)?

[A] Narendra Modi

[B] Manmohan Singh

[C] P V Narasimha Rao

[D] Indira Gandhi

  • Among all the Indian Prime Ministers, Narendra Modi has the longest tenure as head of elected government. Including his term of more than 12 years as the Chief Minister of Gujarat, his total term as the head stands over 18 years and 300 days.
  • He is also the longest–serving non–Congress prime minister of the country. The term as the head of Jawaharlal Nehru was over 16 years and that of Indira Gandhi was over 15 years.

4. Which Indian bank has launched a special card named ‘Shaurya KGC Card’, for armed forces?

[A] ICICI Bank

[B] HDFC Bank

[C] Axis Bank

[D] Yes Bank

  • HDFC Bank has recently announced the launch of “Shaurya KGC Card” for the armed forces. This card has been designed based on the Kisan Credit Card guidelines by the Government. More than 45 lakh Indian armed force personnel would get a life cover ranging from Rs 2 lakh to Rs 10 lakh. It also requires simple documentation suited to the job nature of the armed force personnel.

5. Which Indian state is the top performer in implementation of Atal Mission for Rejuvenation and Urban Transformation Scheme (AMRUT)?

[A] West Bengal

[B] Gujarat

[C] Odisha

[D] Maharashtra

  • As per the Ministry of Housing and Urban Affairs, Odisha continued to be the top performer in implementation of Atal Mission for Rejuvenation and Urban Transformation Scheme (AMRUT). Odisha has secured first position by scoring 85.67 percent and provided piped water supply to households of nine cities of the state. Out of the 191 projects started under the AMRUT scheme, the state has completed 148 of them. Odisha is followed by Chandigarh and Telangana. Tamil Nadu has completed the highest number of works.

6. Which country is to partner with Russia, in production and marketing of Sputnik V vaccine?

[A] Argentina

[B] Brazil

[C] Australia

[D] New Zealand

  • Russia and Brazil have decided to cooperate in the production and marketing of Sputnik V, the world’s first registered coronavirus vaccine.
  • The Russian Direct Investment Fund (RIDF) announced that it has entered into the agreement with Brazilian State of Parana. RIDF is organising the production of the vaccine and its distribution in Brazil and other American countries.

7. Microsoft Research Lab has developed a Machine Translation tool for which tribal language?

[A] Santali

[B] Gondi

[C] Savara

[D] Mundari

  • An application called the ‘Interactive Neural Machine Translation (INMT) tool’, has been developed by the Microsoft Research Lab. Microsoft Lab has collaborated with CGNet Swara, an Indian voice–based online portal and IIIT Naya Raipur for developing this tool. It translates sentences from Hindi to South–Central Dravidian language Gondi and vice–versa. The application aims to motivate youth from the Gond tribal community to learn the language.

8. What is “N1–STOP–LAMP”, that was seen in news recently?

[A] COVID–19 Test

[B] Disinfectant Lamp

[C] PPE

[D] Face Mask

  • As per the findings published in the Journal of Medical Microbiology, a new low–cost nasal swab test named ‘N1–STOP–LAMP’ has been developed. As per the researchers, the test can accurately diagnose the presence of SARS–CoV–2 virus that causes Covid–19, in just 20 minutes. It is also 100 per cent accurate in diagnosing the samples at high loads. It uses a single tube and involves only one step and so it is very efficient and affordable.

9. What is the name of the DRDO–certified device for disinfection of surfaces, launched by Union Minister Nitin Gadkari?

[A] Aaradhya

[B] Athulya

[C] Abhimanyu

[D] Bheema

  • “Atulya” – a new device that can disinfect any premise in 30 seconds was unveiled by the Union Minister for Road Transport and Highways and Micro, Small and Medium Enterprises Nitin Gadkari. The design of the device is certified by DRDO and is developed completely in India. It is portable and weighs about 3 kilograms. It can be used to disinfect any premise up to an area of 5 meters at a time. It can also be used to disinfect surfaces of home, office, boxes, furniture etc.

10. Gangadhar Meher Lift Canal System, seen in news recently, is an irrigation project of which state / UT?

[A] Maharashtra

[B] Odisha

[C] West Bengal

[D] Bihar

  • The cabinet of Odisha has approved the tender amounting Rs.1138 crore for implementation of its ambitious irrigation project named “Gangadhar Meher Lift Canal System”. The irrigation project would irrigate 25,600 hectares of agricultural land in drought hit regions of Barghar and Sonepur districts of Odisha. The project was first announced in the year 2017. The implementing agency will be announced soon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!