Tnpsc

19th February 2020 Current Affairs in Tamil & English

19th February 2020 Current Affairs in Tamil & English

19th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

19th February 2020 Current Affairs in Tamil

19th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ERO-NET என்பது இந்தியாவின் எந்தத் தன்னாட்சி அமைப்பின் வலைத்தளமாகும்?

அ. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)

ஆ. இந்திய தேர்தல் ஆணையம் (ECI)

இ. அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)

ஈ. விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA)

  • மும்பையில் நடைபெற்ற மின்னாளுகை தொடர்பான 23ஆவது தேசிய மாநாட்டின்போது, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையிடமிருந்து, “டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு செயல்முறை மறு-பொறியியலில் சிறந்து விளங்கியமைக்காக” இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) ‘வெள்ளி’ விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ERO-NET வலைத்தளத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. படிவங்களைச் செயலாக்குதல், தரவுத்தளங்களை எளிதில் கையாளுதல் மற்றும் மின்னணுப் பதிவேடுகளை பராமரித்தல்போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு ERO-NET பயன்படுத்தப்படுகிறது.

2.அண்மையில், ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டவர் யார்?

அ. சுனில் அரோரா

ஆ. சுஷில் சந்திரா

இ. ஓம் பிரகாஷ் ராவத்

ஈ. A K ஜோதி

  • ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினராக, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவால், அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். J & K மறுசீரமைப்புச்சட்டம், 2019இன்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கை 107இலிருந்து 114ஆக உயர்த்தப்படும். மேலும் தொகுதிகளின் எல்லை வரையறை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்படும்.

3.ஒரு மாநில அரசின் ஆதரவுடன், நாட்டின் முதலாவது பறவைக்கு வளையமிடல் நிலையமானது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. பீகார்

இ. ஜார்க்கண்ட்

ஈ. ஒடிசா

  • பீகார் மாநிலத்தில், ஒரு மாநில அரசின் முழு ஆதரவுடன் நாட்டின் முதல் பறவைக்கு வளையமிடல் (Bird-Ringing) நிலையம் கட்டப்படவுள்ளது. இது, நாட்டில் இதுபோன்று அமைக்கப்படவுள்ள நான்காவது நிலையமாகும். பாகல்பூரில் கட்டப்படவுள்ள இந்த நிலையம், புலம்பெயர்ந்த பறவைகள் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காகவென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • பறவைகளின் தோற்றத்தை அறிவதற்காக சில்லுகளுடன் கூடிய வளையங்கள் அவற்றின் கால்களில் கட்டப்படுகின்றன. COP-13 CMS உச்சிமாநாட்டின்போது, பீகார் அரசின் பிரதிநிதிகள் மற்றும் மும்பை இயற்கை வரலாற்று சங்கத்துக்கு இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

4.தில்லி காவல்துறையின், ‘ஹிம்மத்’ செயலியுடன்கூடிய ஒருங்கிணைந்த சேவையைத் தொடங்கியுள்ள வாடகையுந்து சேவை வழங்கு நிறுவனம் எது?

அ. ஓலா

ஆ. உபர்

இ. தீதி

ஈ. லிப்ட்

  • வாடகையுந்து செயளியான உபர், அண்மையில், தில்லி காவல்துறையின், ‘ஹிம்மத்’ செயலியுடன் ஒருங்கிணைந்ததாக அறிவித்தது. இக்கூட்டணியின்கீழ், உபர் மற்றும் தில்லி காவல்துறை, கிட்டத்தட்ட 1,000 ‘ஹிம்மத்’ QR சரிபார்ப்பு அட்டைகளை ஓட்டுநர்களுக்கு விநியோகித்துள்ளது. இந்தச் செயலியின் மூலம் QR அட்டையை ஸ்கேன் செய்வதன்மூலம் பயணிகள் தங்கள் பயணம் குறித்த விவரத்தை தில்லி காவல்துறைக்கு நேரடியாக தெரிவிக்கவியலும். பயண தகவல்களைப் பகிர்வது என்பது பயணிகளின் சொந்த விருப்பத்துக்குரியதாகும்.

5.அடல் பூஜல் திட்டத்துக்காக இந்தியாவுக்கு $450 மில்லியன் டாலர் கடன்வழங்க ஒப்புக்கொண்டுள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி

இ. ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி

ஈ. புதிய வளர்ச்சி வங்கி

  • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை தடுப்பதற்கும் நிலத்தடி நீர் குறித்த ஆய்வு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குமான அடல் நிலத்தடி நீர் என்னும் தேசிய திட்டத்திற்கு ஆதரவாக உலக வங்கியும் நடுவணரசும் $450 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • உலக வங்கி ஆதரவுடனான அடல் நிலத்தடி நீர் நிர்வாக மேம்பாட்டுத்திட்டம் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளன.

6.அண்மையில், 15ஆவது நிதி ஆணையத்தால் அமைக்கப்பட்ட பண்ணை ஏற்றுமதி தொடர்பான உயர் நிலை வல்லுநர்கள் குழுவின் தலைவர் யார்?

அ. N K சிங்

ஆ. U K சின்ஹா

இ. தபன் ரே

ஈ. சஞ்சீவ் பூரி

  • 15ஆவது நிதி ஆணையம், சமீபத்தில், பண்ணை ஏற்றுமதி குறித்த உயர்நிலை வல்லுநர்கள் குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு ITCஇன் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான சஞ்சீவ் பூரி தலைமை தாங்கவுள்ளார். இக்குழுவில் முன்னாள் விவசாய செயலாளர் ராதா சிங் மற்றும் APEDAஇன் தலைவர் பாபன் K போர்த்தாகூர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் உள்ளனர். வேளாண்மை சீர்திருத்தங்கள் மற்றும் பண்ணை ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்காக 2021-22 முதல் 2025-26 வரை மாநில அரசுகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான சலுகைகளை இந்தக்குழு பரிந்துரைக்கும்.

7.ஏற்றுமதி பொருட்களின் தோற்றங்குறித்த, மாவட்ட வாரியான தரவைச்சேகரிக்கும் செயல்முறையை அண்மையில் தொடங்கிய அமைப்பு எது?

அ. இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி

ஆ. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம்

இ. NITI ஆயோக்

ஈ. ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம்

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம், சமீபத்தில், ஏற்றுமதி பொருட்களின் தோற்றம் குறித்த மாவட்ட வாரியான தரவைச் சேகரிக்க தொடங்கியது. இந்த ஏற்றுமதி தகவலானது ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விரிவான புள்ளிவிவரத்தை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கும். எனவே, மாவட்டங்கள் குறித்த சிறந்த அறிவோடு அதற்கான கொள்கைகள் சீரமைக்கப்படும். இதன்மூலம், உள்ளூர் திறனை மேம்படுத்தவும் இயலும்.

8.உலக மக்கள்தொகை மீளாய்வின் அண்மைய அறிக்கையின்படி, ‘உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்’ குறித்த பட்டியலில், இந்தியா பிடித்துள்ள இடம் என்ன?

அ. ஏழாவது ஆ. ஆறாவது

இ. ஐந்தாவது ஈ. நான்காவது

  • அமெரிக்க மதியுரையகமான, ‘World Population Review’ அமைப்பு, பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில், இந்திய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) $2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் $2.83 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் இருக்கும் இங்கிலாந்து மற்றும் $2.71 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் இருக்கும் பிரான்ஸ் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.
  • தன்னிச்சையான பொருளாதார கொள்கையிலிருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறிவருகிறது. வாங்கும் திறன் சமநிலை விதிமுறைகளில், இந்தியாவின் GDP $10.51 டிரில்லியன் டாலராக உள்ளது. இது, ஜப்பான் மற்றும் ஜெர்மனியைவிடவும் அதிகமாகும். இருப்பினும், இந்தியாவின் ஆண்டு GDP வளர்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக (7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக) சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. ‘சாலைப்பாதுகாப்பு குறித்த 3ஆவது சர்வதேச அமைச்சர்கள் சந்திப்பு’ நடைபெற்ற நகரம் எது?

அ. ஸ்டாக்ஹோம்

ஆ. ஒஸ்லோ

இ. ஹெல்சிங்கி

ஈ. வார்சா

  • சாலைப்பாதுகாப்பு தொடர்பான 3ஆவது உயர்நிலை சர்வதேச அமைச்சர்கள் சந்திப்பானது சமீபத்தில் சுவீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்டது. இந்தியாவின் சார்பாக மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை மற்றும் MSME அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். “Achieving Global Goals 2030” என்பது இந்தச் சந்திப்புக்கான கருப்பொருளாகும். இந்தச் சந்திப்பை, உலக நலவாழ்வு அமைப்பும் (WHO) இணைந்து நடத்தியுள்ளது.

10. 2020 பிப்ரவரியில், பிரிட்டனைத் தாக்கிய புயலின் பெயர் என்ன?

அ. ஹபின்

ஆ. டென்னிஸ்

இ. கியார்

ஈ. சியாரா

  • சமீபத்தில், ‘Dennis’ என்ற பேரழிவுகரமான புயல் பிரிட்டனைத் தாக்கியது. அதையடுத்து, அந்நாட்டின் வானிலை நிறுவனம், தேசிய அவசரநிலையை அறிவித்தது. நாடு முழுவதும் பரவலாக பலத்த காற்று வீசியது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், தோராயமாக 594 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களுள் சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் அடங்கும். இந்தப்புயல், பிரான்சின் சில பகுதிகளையும் தாக்கியது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • பொருளாதாரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு சென்னையில் 2020 பிப்.21-22 தேதிகளில் நடைபெறவுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தமிழ்நாடரசும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும், மூத்த அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!