19th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, அர்ஜுன் Mk1A என்பது பின்வரும் எதனைக் குறிப்பிடுகிறது?

அ) பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

ஆ) முதன்மை போர் பீரங்கி

இ) போர் விமானங்கள்

ஈ) ஆளில்லா வான்வழி வாகனம்

 • சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜுன் முதன்மை போர் பீரங்கி Mk1A’ஐ இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். இந்த முதன்மை போர் பீரங்கி, சென்னையில் உள்ள DRDO’இன் போர் வாகனங்கள் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2. BPCL நிறுவனத்தின் `6000 கோடி மதிப்பிலான பெட்ரோ வேதி வளாகத்தை, பிரதமர், பின்வரும் எந்த மாநிலத்தில் அர்ப்பணித்தார்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

 • கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில், பாரத் பெட்ரோலியத்தின் புரோபிலீன் அடிப்படையிலான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். `6,000 கோடி மதிப்புள்ள புரோபிலீன் அடிப்படை -யிலான பெட்ரோ கெமிக்கல் திட்டமானது அக்ரிலிக் அமிலம், ஆக்ஸோ-ஆல்கஹால் மற்றும் அக்ரிலேட்டுகளை உற்பத்தி செய்யும்.
 • அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமிலங்களாகும். கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணைய -த்தின் ரோ-ரோ கப்பல் சேவைகளையும் அவர் திறந்துவைத்தார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, கல்லணை கால்வாய் அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

 • உலகின் மிகப்பழமையான நீர் ஒழுங்காற்றும் அமைப்பான கல்லணை கால்வாய், இது சோழ மன்னர் கரிகாற்சோழனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கல்லணை கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புணரமைத்தல் மற்றும் நவீனமயமா -க்கலுக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் `2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ……………………?

அ) எரிமலை

ஆ) பள்ளம்

இ) சிறுகோள்

ஈ) ஏரி

 • ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்பது செவ்வாய் கோளில் இருக்கும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையாகும். மிகப்பெரிய கேடய எரிம
  -லையான இது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தைவிட இரு மடங்கு உயரத்திற்கு மேல் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், ‘ஹோப்’ விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தபின்னர், அதன் முதல் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.
 • இந்த விண்கலம், சமீபத்தில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 24,700 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒலிம்பஸ் மோன்ஸ் எரிமலையின் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.

5. கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் வென்ற பேயர்ன் முனிச், பின்வரும் எந்த நாட்டின் கால்பந்து அணியாகும்?

அ) ஐக்கியப் பேரரசு

ஆ) ஜெர்மனி

இ) பிரான்ஸ்

ஈ) இத்தாலி

 • கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் கால்பந்து அணியான பேயர்ன் முனிச், மெக்சி -கோவின் டைக்ரெஸ் UANL’ஐ வீழ்த்தியது. இது, கடந்த 9 மாதங்களுக் -குள் இந்த அணி வெல்லும் ஆறாவது பட்டமாகும். ஜெர்மன் அணியின் பெஞ்சமின் பவார்ட், இறுதியாட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.

6. பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தால் மகாத்மா காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

அ) ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம்

இ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

 • மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகமானது மகாத்மா காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 9 இந்திய மேலாண் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது SANKALP (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.

7. ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், சான் பிரான்சிசுகோவை விடவும் பின்வரும் எந்த இந்திய நகரத்தில் அதிகமான துளிர்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன?

அ) புனே

ஆ) புது தில்லி

இ) பெங்களூரு

ஈ) சென்னை

 • முதலீடுகள் மற்றும் நிதிகளைக் கண்காணிக்கும் டிராக்ஸ்ன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெங்களூரில் நிறுவப்பட்ட துளிர்நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக் -காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்ட துளிர்நிறுவனங்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகும்.
 • கடந்த 2015ஆம் ஆண்டில், பெங்களூருவில் 3,080 துளிர்நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அதே வேளையில், சான் பிரான்சிஸ்கோவில் 2,040 நிறுவனங்கள் மட்டுமே நிறுவப்பட்டிருந்தன. இதேபோல், 2020ஆம் ஆண்டில், 805 நிறுவனங்கள் பெங்களூரில் நிறுவப்பட்டிருந்தன; அதே வேளையில், சான் பிரான்சிஸ்கோவில் 619 துளிர் நிறுவனங்கள் நிறுவ -ப்பட்டிருந்தன. பெங்களூருவில் தற்போது 13,000 துளிர் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன.

8. ஏழை மக்களுக்கு `5 விலையில் உணவு வழங்குவதற்காக, ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மேற்கு வங்கம்

ஈ) மத்திய பிரதேசம்

 • மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெய்நிகர் முறையில் ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்கீழ், ஏழை மக்களுக்கு `5 விலையில் மே. வங்க மாநில அரசு உணவு வழங்கும். காய்கறி, முட்டை உள்ளிட்ட ஒரு தட்டு உணவு `5 விலைக்கு வழங்கப்படும்.

9. சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின், ‘சரணாலயம் வாழ்நா -ள் சேவை விருது 2020’ஐ பெற்றவர் யார்?

அ) தியடோர் பாஸ்கரன்

ஆ) சுந்தர்ராஜன்

இ) அழகர் இராமானுஜம்

ஈ) அனுராதா ரமணன்

 • முன்னணி எழுத்தாளரும் வரலாற்றாசிரியரும் இயற்கை ஆர்வலருமான தியடோர் பாஸ்கரனுக்கு சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் “சரணாலயம் வாழ்நாள் சேவை விருது 2020” வழங்கப்பட்டுள்ளது. வனவுயிரி பாதுகாப்பு குறித்த அவரின் படைப்புகளுக்காகவும், தமிழ் – ஆங்கிலத்தில் அவரின் படைப்புகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

10. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சிகூர் பீடபூமி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா

 • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிகூர் பீடபூமியில் 6 கருப்பு நாரைகள் (Ciconia nigra) குழு அண்மையில் காணப்பட்டது.
 • ‘தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ பிரிவில் இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் இந்த இனத்தை வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கருப்பு நாரைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

1. What is Arjun Mk1A, which was seen in the news recently, with reference to Indian Defence?

A) Anti–tank Guided Missile

B) Main Battle Tank

C) Fighter jets

D) Unmanned Aerial Vehicle

 • Prime Minister Narendra Modi handed over the Arjun Main Battle Tank Mk–1A to the Indian Army, at a function held at Chennai. The battle tank has been indigenously designed, developed and manufactured by the DRDO’s Combat Vehicles Research & Development Establishment (CVRDE), Chennai.

2. Prime Minister dedicated the Rs 6000–crore petrochemical complex of BPCL in which state

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Andhra Pradesh

 • Prime Minister Narendra Modi dedicated Bharat Petroleum’s Propylene Derivatives petrochemical complex at Kochi Refinery.
 • The Rs 6,000 crore worth Propylene Derivative Petrochemical Project (PDPP) will produce Acrylic Acid, Oxo–Alcohol and Acrylates, which are mainly imported in India. He also inaugurated the Ro–Ro vessels of Inland Waterways Authority in Kochi, Kerala

3. Grand Anicut Canal system, which was making news recently, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Andhra Pradesh

 • Grand Anicut Canal, also called as ‘Kallanai’ is said to be the oldest water regulating structure in the world, constructed in the 2nd century A.D by the Chola King Karikal Cholan.
 • Recently, Indian Prime Minister Narendra Modi laid the foundation stone for the extension, renovation and modernization of the Grand Anicut Canal System. The project is to be taken up at a cost of Rs 2,640 crores.

4. Olympus Mons, which was making news recently, is the largest ……………. in the solar system?

A) Volcano

B) Crater

C) Asteroid

D) Lake

 • Olympus Mons is the largest volcano in the solar system present in the planet of Mars. It is a large shield volcano, which is over two times the height of Mount Everest above sea level.
 • The UAE’s “Hope” Mars probe sent back its first image of Mars, after the spacecraft successfully entered the planet’s orbit. The probe recently captured the Olympus Mons volcano, taken from an altitude of 24,700 kilometres above the Martian surface.

5. Bayern Munich, which won the final of the FIFA Club World Cup in Qatar, is the football club of which country?

A) United Kingdom

B) Germany

C) France

D) Italy

 • Germany based professional football club Bayern Munich beat Mexico’s Tigres UANL in the final of the FIFA Club World Cup in Qatar. This is the 6th title won by the club in less than nine months. Benjamin Pavard of the German team scored the only goal of the final match in the 59th minute.

6. Mahatma Gandhi National Fellowship (MGNF) programme has been launched by which Union Ministry?

A) Ministry of Rural Development

B) Ministry of Skill Development & Entrepreneurship

C) Ministry of Labor & Employment

D) Ministry of Agriculture & Farmers Welfare

 • The Union Ministry for Skill Development and Entrepreneurship has launched the Mahatma Gandhi National Fellowship programme. This nation–wide programme has been launched in partnership with nine Indian Institutes of Management across India.
 • It has been launched under the SANKALP (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion) scheme.

7. As per a recent report, start–ups founded in which Indian city is more than in San Francisco, in the past five years?

A) Pune

B) New Delhi

C) Bengaluru

D) Chennai

 • As per the recent report released by Tracxn, a company which tracks investments and financials, the number of start–ups founded in Bengaluru has been higher than in San Francisco, United States in the past five years. In 2015, 3,080 firms were founded in the Indian city, as against 2,040 companies in San Francisco.
 • Similarly, in 2020, 805 firms were founded in Bengaluru, whereas the US city’s count was 619. Bengaluru has around 13,000 active start–ups, at present.

8. Which Indian state has launched the ‘Maa’ scheme, to provide meal at Rs 5 to the poor people?

A) Tamil Nadu

B) Kerala

C) West Bengal

D) Madhya Pradesh

 • West Bengal Chief Minister Mamata Banerjee has virtually launched the ‘Maa’ scheme under which the state government would provide meal at Rs 5 to poor people. A platter of food including vegetable and egg curry is to provided at Rs 5.

9. Who has been awarded with the Sanctuary Nature Foundation’s “Sanctuary Lifetime Service Award 2020”?

A) Theodore Baskaran

B) Sundarajan

C) Azhagar Ramanujam

D) Anuradha Ramanan

Theodore Baskaran, a leading Writer, historian, naturalist, and activist has been awarded with the Sanctuary Nature Foundation’s “Sanctuary Lifetime Service Award 2020”. This award has been conferred upon him for his dedicated works in wildlife conservation and for his writings in Tamil – English regarding the same.

10. Sigur plateau, which was making news recently, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Maharashtra

 • A group of six black storks (Ciconia nigra), were spotted recently in the Sigur plateau in the Nilgiris, Tamil Nadu. The species is classified by the International Union for the Conservation of Nature (IUCN) in the “Least Concern” category. The sighting of the black stork in this region is considered to be extremely rare.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *