TnpscTnpsc Current Affairs

19th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘மேற்கத்திய இடையூறு’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ) கலாச்சாரம்

ஆ) வானிலையியல் 

இ) பொருளாதாரம்

ஈ) அரசியல்

 • ஒரு ‘மேற்கத்திய இடையூறு’ என்பது மத்தியதரைக்கடல் பகுதியில் உருவாகும் ஒரு கூடுதல் வெப்பமண்டல புயல் ஆகும். இது இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளில் குளிர்கால மழையைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலை இந்தியாவைப் பாதிப்பதோடு ஒரு பெருமழையைக்கொண்டுவரும் தீவிர ‘மேற்கு இடையூறு’ வரும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்து உள்ளது.
 • அதன்பின்னர், இரண்டு மேற்கு இடையூறுகள் வடமேற்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியில் சில நாட்களுக்கு மழையைக் கொண்டுவரும் என்றும் அது கணித்துள்ளது.

2. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்?

அ) கலாச்சார அமைச்சகம்

ஆ) வெளியுறவு அமைச்சகம்

இ) கல்வி அமைச்சகம் 

ஈ) சுற்றுலா அமைச்சகம்

 • இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் என்பது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். பேராசிரியர் இரகுவேந்திர தன்வார் அண்மையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக 3 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்று ஆய்வுகளு -க்கு வழிகாட்டுதல் இந்தக் கவுன்சிலின் நோக்கமாகும்.

3. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற இராமாயணத்தின் சாயலில் உள்ள ‘ஐபோனியா’ உள்ள நாடு எது?

அ) நேபாளம்

ஆ) மடகாஸ்கர் 

இ) இலங்கை

ஈ) மொரிஷியஸ்

 • இந்தியக்கவிஞரும் தூதருமான அபை கே, மடகாஸ்கரின் ‘ஐபோனியா’வின் பெருங்கதை இந்திய இதிகாசமான ‘இராமாயண’த்தை ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்.
 • ‘ஐபோனியா’ என்பது மடகாஸ்கரின் காவியக்கவிதை ஆகும். இது அதன் கதாநாயகன் ஐபோனியாவின் பிறப்பு, நிச்சயதார்த்தம், போராட்டம் மற்றும் இறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது. அவரது நிச்சயமான மனைவி ராம்பேலா, ராமாயணத்தைப்போலவே ராவடோவால் கடத்தப்பட்டார். சமற்கிருதத்திற்கும் மலகாசி மொழிக்கும் இடையே 300’க்கும் மேற்பட்ட ஒத்த சொற்கள் உள்ளன.

4. இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சி -யகம் அமைந்துள்ள நகரம் எது?

அ) ஹைதராபாத் 

ஆ) மைசூர்

இ) திருவனந்தபுரம்

ஈ) வாரணாசி

 • இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியக -த்தை ஹைதராபாத்தில் மத்திய அறிவியல் & தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 35 வகையான பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை 3.3 பில்லியன் ஆண்டுகள் முதல் 55 மில்லியன் ஆண்டுகள் வரை பழைமையானவையாகும்.

5. பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு குறித்து எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது?

அ) பிரான்ஸ்

ஆ) துர்க்மெனிஸ்தான் 

இ) ஆஸ்திரேலியா

ஈ) நியூசிலாந்து

 • பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • தற்போது வரை சுவிச்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், தஜிகிஸ்தான், மங்கோலியா, பங்களாதேஷ், இத்தாலி ஆகிய நாடுகள் மற்றும் சார்க் அமைப்புடனும் பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6. ‘ஜீவன் ரக்ஷா’ பணியுடன் தொடர்புடையது எது?

அ) இந்திய ராணுவம்

ஆ) இந்திய கடற்படை

இ) இரயில்வே காவல் படை 

ஈ) தேசிய பாதுகாப்புப் படை

 • இரயில்வே காவல் படை வீரர்கள் 2021ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே முழுவதும் 601 நபரைக் காப்பாற்றி உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் ‘மிஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஓடும் ரயில்களின் சக்கரங்களில் சிக்க இருந்த 1650 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
 • 1.2 இலட்சத்துக்கும் அதிகமான சரியான பயணிகளிடம் அவர்கள் விட்டுச்சென்ற இருபத்து 3 கோடி மதிப்பிலான பொருட்களை இந்திய இரயில்வே திருப்பி அனுப்பியுள்ளது.

7. பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரிக்க நடுவண் உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் தலைவர் யார்?

அ) சுதிர் குமார் சக்சேனா 

ஆ) அஜய் பூஷன் பாண்டே

இ) சுர்ஜித் பல்லா

ஈ) ரஞ்சன் கோகோய்

 • பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் மாநிலம் பெரோசுபூர் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரிக்க 3 பேர்கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.
 • அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் (பாதுகாப்பு) சுதிர் குமார் சக்சேனா தலைமையில் குழு அமைக்கப்படும்.

8. ‘செயற்கை சூரியன்’ என்பது எந்த நாட்டின் இலட்சியத் திட்டமாகும்?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) ரஷ்யா

ஈ) இலங்கை

 • சீனாவின் ‘செயற்கை சூரியன்’, 17 நிமிடங்களுக்கு (1,056 வினாடிகள்) சூரியனைவிட 5 மடங்கு அதிக வெப்பத்திற்கு எரிந்து மீண்டும் புதிய உலக சாதனை படைத்தது. EAST (Experimental Advanced Superconducting Tokamak) அணுக்கரு இணைவு உலை 158 மில்லியன்° பாரன்ஹீட் (70 மில்லியன்°C) வெப்பநிலையை பராமரித்தது.
 • கடந்த 2003’இல் பிரான்ஸின் டோரே சுப்ரா டோகாமாக், 390 வினாடிகளுக்கு இதேபோன்ற வெப்பநிலையை பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

9. பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டத்தின் 2ஆம் கட்டத்தில், எத்தனை மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன?

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஏழு 

ஈ) பத்து

 • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பசுமை ஆற்றல் வழித்தடத்திட்டத்தின் 2ஆம் கட்டத்திற்கு ஒப்புதலளித்தது. இத்திட்டத்தின்கீழ், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, இராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் 20 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் நிறுவப்படும்.
 • இத்திட்டத்தின் மதிப்பீடு `12,031 கோடி. இந்த மதிப்பீட்டில் 33 சதவீதம் மத்திய அரசு நிதியுதவியாக வழங்கப்படும்.

10. அண்மையில் தொடங்கப்பட்ட AI-அடிப்படையிலான காப்புரிமைபெற்ற அமைப்பான ‘Clairvoyant’இன் நோக்கம் என்ன?

அ) வளிமாசைக்கையாளுதல்

ஆ) நீரைச்சுத்திகரித்தல் 

இ) கிரிப்டோகரன்சி தேடல்

ஈ) கிருமி நீக்கம்

 • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், நீர் சுத்திகரிப்புக்காக IIT முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘ஸ்வஜல் வாட்டர் பிரைவேட் லிட்’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் துளிர் நிறுவனத்தைத்தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற அமைப்பான, ‘Clairvoyant’ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சுத்திகரிப்பு அமைப்புகளை மேம்படுத்தவும் எதிர்கால பழுதுகளைக் கணிக்கவும் பயன்படுகிறது.
 • இணைய உலக தொழில்நுட்பத்தை சூரிய ஆற்றலுடன் இணைக்கும் சுத்தமான குடிநீர் தீர்வுகளையும் வாட்டர் ATM வடிவில் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரர்கள் பலி

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 வீரர்கள் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. INS ரன்வீர் கப்பலின் உள்பெட்டியில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் சிக்கி 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வெடிவிபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2. தேசிய கலைத் திருவிழாவில் தமிழகமாணவர்கள் ஏழு பேருக்கு பரிசு

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் நடத் கலைத்திருவிழாவில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் பரிசுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான கலைத்திரு விழா போட்டிகளை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய போட்டிகள் இணைய வழியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றன.

இதேபோன்று புது தில்லி, ஆந்திரம், கேரளம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. வாய்ப்பாட்டு, இசை, நடனம், சிற்பக்கலை, பொம்மைகள் உருவாக்குதல் என ஒன்பது வகையான போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தேசிய கலைத்திருவிழா போட்டியின் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

பரிசுத் தொகை: வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கத்துடன் `25,000; 2ஆம் பரிசாக வெள்ளிப் பதக்கத்துடன் `20,000; மூன்றாம் பரிசாக வெண்கலப் பதக்கத்துடன் `15,000 வழங்கப்படவுள்ளது.

தமிழகம் முதலிடம்: இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய கலைத்திருவிழா போட்டிகளில் தமிழகம் ஏழு பரிசுகளை வென்று முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்தது. ஐந்து பரிசுகளை வென்று பிகார் இரண்டாம் இடத்தையும், தலா 4 பரிசுகளை வென்று திரிபுரா, புது தில்லி மாநிலங்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. தமிழகத்தில் இந்தப் போட்டிகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் (சமக்ரசிஷா) ஒருங்கிணைத்திருந்தது.

3. M K பாண்டே ராணுவ துணை தலைமை தளதியாக நியமிக்க ஒப்புதல்

இந்திய ராணுவத்தின் அடுத்த துணை தலைமை தளபதியாக M K பாண்டேயை நியமிக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய துணை தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சி பி மொஹந்தி இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த துணை தலைமை தளபதியை நியமிப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிரிவு தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் M K பாண்டே அடுத்த துணை தலைமை தளபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளதாகத் தெரிகிறது. அந்தமான்-நிக்கோபார் தீவுகள் பகுதியில் முப்படைகளின் தலைமைப் பொறுப்பையும் M K பாண்டே வகித்துள்ளார்.

4. ஃபிஃபா கால்பந்து விருது – சிறந்த வீரர்; ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, சிறந்த வீராங்கனை; அலெக்ஸியா புடெலாஸ்

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வழங்கும் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை போலந்தின் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கியும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனர்.

இதில் லெவாண்டோவ்ஸ்கி (பேயர்ன் முனீச்) தொடர்ந்து 2-ஆவது முறையாக இந்த விருதை வெல்லும் நிலையில், அலெக்ஸியா (பார்சிலோனா) முதல் முறையாக இந்த விருதை கைப்பற்றியிருக்கிறார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள ஃபிஃபா கால்பந்து தலைமையகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முனீச்சில் இருந்து காணொலி வழியே நிகழ்ச்சியில் பங்கேற்ற லெவாண்டோவ்ஸ்கியிடம் அவரது கிளப் அதிகாரிகள் விருதை வழங்கினர். அலெக்ஸியாவும் காணொலி வழியே நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி (பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன்), எகிப்தின் முகமது சலா (லிவர்பூல்) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி லெவாண்டோவ்ஸ்கி முதலிடம் பிடித்துள்ளார். மகளிர் பிரிவில், ஆஸ்திரேலியாவின் சாம் கெர் (செல்சி), ஸ்பெயினின் ஜெனிபர் ஹெர்மோசோ (பார்சிலோனா) ஆகியோரைவிட அதிக வாக்குகள் பெற்று அலெக்ஸியா வெற்றியாளர் ஆகியிருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட பேலன் தோர் கால்பந்து விருதில் ஆடவர் பிரிவில் வெவாண்டோவ்ஸ்கி 2ஆவது இடம் பிடித்திருந்தார். மெஸ்ஸி அதில் விருது வென்றிருந்தார். அதே விருதை மகளிர் பிரிவில் வென்று இருந்த அலெக்ஸியா, இவ்விருதையும் கைப்பற்றியிருக்கிறார்.

விருதுக்கான வாக்கெடுப்பில் தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ஊடகங்களிடம் இருந்து லெவாண்டோவ்ஸ்கிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் ரசிகர்கள் தரப்பு வாக்குகளை லயோனல் மெஸ்ஸி அள்ளியிருக்கிறார்.

பேயர்ன் முனீச் அணிக்காக 2020-21 சீசனில் 41 கோல்கள் அடித்தும், 2021 காலண்டர் ஆண்டில் 43 கோல்கள் அடித்தும் பந்தெஸ்லிகா போட்டியில் இரு சாதனைகளை முறியடித்திருக்கிறார் லெவாண்டோவ்ஸ்கி. முன்னதாக இந்த சாதனை, அதே பேயர்ன் முனீச் அணியைச் சேர்ந்த ஜெர்மன் வீரரான ஜெர்ட் முல்லர் வசம் இருந்தது.

மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தேர்வாகியிருக்கும் அலெக்ஸியா, தலைமையில் தான் பார்சிலோனா மகளிர் கால்பந்து அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது.

ரொனால்டோவுக்கு சிறப்பு விருது

சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்களை அடித்த போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘ஃபிபா சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. போர்ச்சுகல் அணிக்காக 2003ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் ரொனால்டோ, இதுவரை 184 ஆட்டங்களில் 115 கோல்கள் அடித்திருக்கிறார். முன்னதாக ஈரான் அணிக்காக அலி டேய் 109 கோல்கள் அடித்ததே நீண்டகாலமாக சாதனையாக இருந்தது.

சிறந்த கோல்

2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அடிக்கப்பட்ட சிறந்த கோலுக்கான விருதை, ஆர்ஜென்டீன வீரர் எரிக் லமேலா வென்றுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்காக (தற்போது செவில்லா) அவரடித்த கோல் உலகிலேயே சிறந்ததாகத் தேர்வாகியிருக்கிறது. ஈரான் வீரர் மெஹதி தரேமி (போர்டோ) அடித்த ‘பை சைக்கிள் கிக்’ கோல், செக் குடியரசு வீரர் பேட்ரிக் ஷிக் (பேயர் லெவர்குசன்) அடித்த கோல் ஆகியவை லமேலாவுக்கு சவால் அளித்தன.

சிறந்த கோல்கீப்பர்கள்

இந்த விருதை ஆடவர் பிரிவில் எட்வர்ட் மெண்டி (செனகல்/செல்சி), மகளிர் பிரிவில் கிறிஸ்டியன் எண்ட்லர் (சிலி/ஒலிம்பிக் லயன்) வென்றனர். இதில் எட்வர்டுக்கு, கியான்லுகி டோனாருமா (இத்தாலி/பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன்), மேனுவல் நியூவர் (ஜெர்மனி/பேயர்ன் முனீச்) ஆகியோரும், கிறிஸ்டியனுக்கு ஸ்டெபானி லேப் (கனடா/பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன்), ஆன் காட்ரின் பெர்கர் (ஜெர்மனி/செல்சி) ஆகியோரும் போட்டியாளர்களா -க இருந்தனர்.

சிறந்த பயிற்சியாளர்கள்

ஆடவர் பிரிவில் சிறந்த பயிற்சியாளர் விருதை தாமஸ் டுஷெலும் (ஜெர்மன்/செல்சி), மகளிர் பிரிவில் சிறந்த பயிற்சியாளர் விருதை எம்மா ஹெய்ஸும் பெற்றனர் (இங்கிலாந்து/செல்சி).

வாக்கு அடிப்படையில் ஆடவர் பிரிவில் ராபர்டோ மான்சினி (இத்தாலி) 2-ஆம் இடமும், பெப் குவார்டியாலோ (ஸ்பெயின்/மான்செஸ்டர் சிட்டி) 3ஆம் இடமும் பிடித்து உள்ளனர். மகளிர் பிரிவில் லூயிஸ் கார்டெஸ் (ஸ்பெயின் / பார்சிலோனா), சரினா வெய்க்மான் (நெதர்லாந்து) ஆகியோர் முறையே 2&3ஆம் இடங்களில் இருக்கின்றனர்.

சிறந்த ரசிகர்கள்

இவ்விருது டென்மார்க் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யூரோ கோப்பை போட்டியில் ஃபின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு களத்தில் சரிந்த தருணத்தில், அணியினர் விக்கித்து நிற்க, மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் அணியினருக்கும், எரிக்சனுக்கும் ஆதரவாக எழுப்பிய குரலுக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

ஃபேர் பிளே விருது

இந்த விருதும் கிறிஸ்டியன் எரிக்சன் சம்பவத்தின்போது அந்த அணியினர் காட்டிய ஆதரவு, துரிதமான செயல்பாடு, தோளோடு தோள் சேர்த்து நின்ற ஒற்றுமை ஆகியவற்றுக்காக டென்மார்க் அணி வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தேர்வு முறை…

இந்த விருதுக்கான போட்டியாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், ஊடகத்தினர், ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தரப்பின் வாக்குகளும் 25 சதவீதம் என்ற அளவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

1. Western disturbance, which was seen in the news recently, is associated with?

A) Culture

B) Meteorology 

C) Economy

D) Politics

 • A western disturbance is an extra–tropical storm originating in the Mediterranean region. It is said to bring winter rain to the northern parts of the Indian subcontinent. The India Meteorological Department (IMD) predicted an intense Western Disturbance to affect Northwest India, triggering rainfall.
 • Later, it also predicted 2 western disturbances would bring rain across northwest India and the western Himalayan region for a few days.

2. The Indian Council of Historical Research (ICHR) is an autonomous body under which Union Ministry?

A) Ministry of Culture

B) Ministry of External Affairs

C) Ministry of Education 

D) Ministry of Tourism

 • The Indian Council of Historical Research (ICHR) is an autonomous body under the Union Ministry of Education. Professor Raghuvendra Tanwar has been recently appointed as Chairman of the Indian Council of Historical Research (ICHR), for a period of three years or until further order. The aim of the council is to give directions to historical research and to encourage objective and scientific writing of history.

3. ‘Ibonia’, which was seen in the news recently, is a similar version of Ramayana found in which country?

A) Nepal

B) Madagascar 

C) Sri Lanka

D) Mauritius

 • Indian Poet and Diplomat Abhay K has found that the ‘Ibonia’ of Madagascar resembles the Indian epic ‘Ramayana’ in its grand plot. Ibonia is an epic poem of Madagascar, which narrates the story of birth, betrothal, struggle and death of its hero Ibonia. His betrothed wife Rampela was abducted by Ravato in similar lines with Ramayana.
 • There are over 300 similar words between Sanskrit and the Malagasy Language.

4. India’s first Open Rock Museum is located in which city?

A) Hyderabad 

B) Mysuru

C) Trivandrum

D) Varanasi

 • Union Minister of State for Science and Technology Dr Jitendra Singh inaugurated India’s first Open Rock Museum in Hyderabad.
 • The Museum displays around 35 types of rocks from various parts of India with ages ranging from 3.3 billion years to around 55 million years of the Earth’s history.

5. India approved signing of MoU with which country, on Cooperation in Disaster Management?

A) France

B) Turkmenistan 

C) Australia

D) New Zealand

 • The Union Cabinet has approved the signing of Memorandum of Understanding (MoU) between India and Turkmenistan on Cooperation in the field of Disaster Management.
 • At present, India has signed agreements of Cooperation for cooperation in the field of Disaster Management with Switzerland, Russia, SAARC, Germany, Japan, Tajikistan, Mongolia, Bangladesh and Italy. The Union Cabinet also approved the signing of Agreement between India and Spain on Cooperation and Mutual Assistance in Customs Matters.

6. ‘Mission Jeewan Raksha’ is associated with which institution?

A) Indian Army

B) Indian Navy

C) Railway Police Force 

D) National Security Guard

 • Railway Police Force personnel saved 601 persons accross Indian Railways in the year 2021. They have saved 1650 lives from the wheels of the running trains at railway stations across India in the last four years under ‘Mission Jeewan Raksha’.
 • Indian Railways has returned left behind luggage with value at 23 crores to over 1.2 lakh rightful passengers.

7. Who is the head of the committee set up by Union Home Ministry, to probe on Prime Minister’s Security Lapse?

A) Sudhir Kumar Saxena 

B) Ajay Bhushan Pandey

C) Surjit Bhalla

D) Ranjan Gogoi

 • The Union Home Affairs Ministry constituted a three–member committee to probe into the lapses in the security arrangement during Prime Minister Narendra Modi’s visit to Punjab’s Ferozepur. The Committee will be led by Sudhir Kumar Saxena, secretary (security), Cabinet Secretariat.

8. The ‘Artificial Sun’ is an ambitious project of which country?

A) India

B) China 

C) Russia

D) Sri Lanka

 • China’s ‘Artificial sun’ reecntly set a new world record after superheating to temperatures five times hotter than the sun for more than 17 minutes (1,056 seconds). The EAST (Experimental Advanced Superconducting Tokamak) nuclear fusion reactor maintained a temperature of 158 million degrees Fahrenheit (70 million degrees Celsius). In 2003 France’s Tore Supra tokamak, maintained similar temperatures for 390 seconds.

9. How many states are covered in the second phase of the Green Energy Corridor scheme?

A) Three

B) Five

C) Seven 

D) Ten

 • The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved the second phase of the Green Energy Corridor scheme. Under the scheme, over 20 GW of Renewable energy projects will be installed across seven states namely Gujarat, Himachal Pradesh, Karnataka, Kerala, Rajasthan, Tamil Nadu and Uttar Pradesh in this phase.
 • The estimated cost of the scheme is Rs 12,031 crore, and 33 percent of the project cost will be provided as central financial assistance.

10. What is the objective of ‘Clairvoyant’, the AI–based patented system launched recently?

A) Tackle Air Pollution

B) Water Purification 

C) Mine Cryptocurrency

D) Disinfection

 • Union Minister Jitendra Singh launched Artificial Intelligence (AI) driven Start–Up named ‘Swajal Water Private Limited’ started by IIT alumni for water purification.
 • Thecompany’s patented system, ‘Clairvoyant’ uses Artificial Intelligence to optimise purification systems and predict future breakdowns. They have also developed clean drinking water solutions in the form of Water ATMS, which combines Internet of Things technology with solar energy.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button