TnpscTnpsc Current Affairs

19th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘பன்னாட்டு நீதிக்கான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.15

ஆ. ஜூலை.17 

இ. ஜூலை.19

ஈ. ஜூலை.21

 • பன்னாட்டளவிலான நீதியை உணர்த்தவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்தவுமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.17ஆம் தேதி, ‘பன்னாட்டு நீதிக்கான உலக நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இது பன்னாட்டு குற்றவியல் நீதி நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரோம் சட்டத்தின் ஒப்புதல் மற்றும் 1998–இல் புதிய பன்னாட்டு குற்றவியல் நீதி அமைப்பு உருவானதையும் இந்த நாள் கொண்டாடுகிறது. 139–க்கும் மேற்பட்ட நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

2. ‘2022 – சிங்கப்பூர் ஓபன்’ சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?

அ. ஸ்ரீகாந்த் கிடாம்பி

ஆ. P V சிந்து 

இ. சாய்நா நேவால்

ஈ. லக்ஷ்யா சென்

 • 2022 – சிங்கப்பூர் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை P V சிந்து, சீனத்தின் வாங் ஜி யியை தோற்கடித்தார். இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான P V சிந்து 2022ஆம் ஆண்டில் வெல்லும் முதல் சூப்பர் ஐந்நூறு பட்டமாகும் இதுவாகும். 2022–சிங்கப்பூர் ஓபன் பட்டமானது சிந்துவின் மூன்றாவது பட்டமாகும். சையத் மோதி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் BWF சூப்பர் 300 பட்டங்களைத் தொடர்ந்து அவர் வெல்லும் மூன்றாவது பட்டமாகும் இது.

3. ‘பாரத் ரங் மகோத்சவம் – 2022’ஐ ஏற்பாடு செய்கிற நிறுவனம் எது?

அ. தேசிய நாடகப்பள்ளி 

ஆ. லலித் கலா அகாதெமி

இ. NITI ஆயோக்

ஈ. சாகித்திய அகாதெமி

 • புது தில்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியானது, ‘விடுதலை அமுதப்பெருவிழா – 22ஆவது பாரத் ரங் மகோத்சவம், 2022’ திருவிழாவை ஏற்பாடு செய்தது. தேசிய நாடகப்பள்ளி என்பது கலாச்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சிமிக்க அமைப்பாகும். ‘விடுதலை அமுதப்பெருவிழா – 22ஆவது பாரத் ரங் மகோத்சவம், 2022’இன்கீழ், நமது விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்தத் திருவிழா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. புது தில்லியில் தொடங்கப்படும் இந்த விழா புவனேசுவரம், வாரணாசி, அமிர்தசரசு, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் நடத்தப்படும்.

4. அண்மையில் இந்திய கடற்படையிலிருந்து பணி நீக்கஞ்செய்யப்பட்ட நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் என்ன?

அ. INS சிந்துத்வாஜ்

ஆ. INS இராஜ்புத்

இ. INS இரஞ்சித்

ஈ. INS நிஷாங்க்

 • ‘INS சிந்துத்வாஜ்’ என்னும் நீர்மூழ்கிக்கப்பல் 35 ஆண்டுகள் சேவையாற்றியபிறகு இந்திய கடற்படையிலிருந்து அண்மையில் பணிநீக்கஞ்செய்யப்பட்டது. இந்த நீர்மூழ்கிக்கப்பலின் முகட்டுப்புறம் ஒரு சாம்பல் நிற சுறாமீனைச் சித்தரிக்கும் வகையில் வடிவமைப்பு உடையது. மேலும், ‘சிந்துத்வாஜ்’ என்றால் கடலில் கொடியை ஏந்துபவர் என்று பொருளாகும. இந்நீர்மூழ்கிக்கப்பல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சோனார் USHUS, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகளான ருக்மணி மற்றும் இன்டர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டார்பிடோ தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிற்காக பிரபலமாக அறியப்பட்டது.

5. சமீபத்தில், தேசிய பங்குச்சந்தையின் (NSE) நிர்வாக இயக்குநர் மற்றும் CEO–ஆக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. உர்ஜித் படேல்

ஆ. ஆஷிஷ்குமார் சௌகான் 

இ. K V காமத்

ஈ. அருந்ததி பட்டாச்சார்யா

 • தேசிய பங்குச்சந்தையின் (NSE) அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆஷிஷ்குமார் சௌகானை நியமிப்பதற்கு இந்தியப் பங்குச்சந்தை வாரியம் (SEBI) ஒப்புதல் அளித்துள்ளது. சௌகான் தற்போது மும்பை பங்குச் சந்தையின் (BSE) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். அதில் அவரது பதவிக்காலம் 2022 நவம்பரில் முடிவடைகிறது. ஆஷிஷ்குமார் சௌகான் NSEஇன் நிறுவனர்களுள் ஒருவர் ஆவார். அவர் 1992 முதல் 2000 வரை NSE–இல் பணியாற்றியுள்ளார்.

6. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. விராட் கோலி

ஆ. ஜஸ்பிரித் பும்ரா 

இ. ரோகித் சர்மா

ஈ. இரவீந்திர ஜடேஜா

 • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக இரன்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். அவர் ஒரு ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

7. பன்னாட்டு கடலோர தூய்மை நாள் கொண்டாடப்படுகிற மாதம் எது?

அ. ஜூலை

ஆ. ஆகஸ்ட்

இ. செப்டம்பர் 

ஈ. டிசம்பர்

 • ‘விடுதலை அமுதப்பெருவிழாவின்’ நினைவாக நாட்டின் 75 கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் வகையில் இந்தியா தனது கடற்கரைத் தூய்மையாக்கல் இயக்கத்தை சமீபத்தில் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு ஜூலை.3ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள கடலோரப்பகுதிகள் தூய்மையாக்கப்படும். இது பன்னாட்டு கடலோர தூய்மைப்படுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கடற்கரையோரங்களில் இருந்து 1,500 டன் அளவுக்கு குப்பைகளை அகற்றுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

8. 10 கிகாவாட் (GW) உற்பத்தித்திறன்கொண்ட அல்ட்ரா மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திப்பூங்காவை உருவாக்குவதற்காக, பின்வரும் எந்த மாநிலத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் NTPC கையெழுத்திட்டது?

அ. தமிழ்நாடு

ஆ. இராஜஸ்தான் 

இ. ஒடிஸா

ஈ. குஜராத்

 • இராஜஸ்தானில் 10 கிகாவாட் (GW) உற்பத்தித்திறன்கொண்ட அல்ட்ரா மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திப் பூங்காவை உருவாக்க இராஜஸ்தான் மாநில அரசுடனான NTPC புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2032ஆம் ஆண்டுக்குள் 60 கிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல்திறன் என்ற இலக்கை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. NTPC REL ஆனது குஜராத்தின் ரான் ஆப் கட்ச்சில் 4.75 GW திறன்கொண்ட ஒரு UMREPP (Ultra Mega Renewable Energy Power Parks)–ஐ உருவாக்கி வருகிறது.

9. அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் முதன்மையான கடல்சார் உணவுப்பொருள் எது?

அ. உறைய வைக்கப்பட்ட இறால் மீன்கள் 

ஆ. உறைய வைக்கப்பட்ட கணவாய் மீன்கள்

இ. உறைய வைக்கப்பட்ட மீன்கள்

ஈ. உறைய வைக்கப்பட்ட தோட்டுக்கணவாய் மீன்கள்

 • 2021–22ஆம் ஆண்டில், கடுமையான ஏற்ற இறக்கங்களைக்கண்டபோதிலும், `57,586.48 கோடி ($7.76 பில்லியன்) மதிப்புள்ள 13,69,264 MT கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
 • 2021–22ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியானது இந்திய ரூபாய் மதிப்பில் 31.71% அதிகரித்துள்ளது. அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிப்பொருளாக உறைய வைக்கப்பட்ட இறால் மீன்கள் உள்ளன. உறைய வைக்கப்பட்ட இறால் மீன்களுக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) உள்ளது. அதைத் தொடர்ந்து சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளது.

10. ‘ஆஷாதி பிஜ்’ என்னும் திருவிழா கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. பஞ்சாப்

ஆ. குஜராத் 

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிஸா

 • ‘ஆஷாதி பிஜ்’ என்பது ஹிந்து சமய நாட்காட்டியின்படி, ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது நாளாகும். இது கட்ச் பகுதியில், பருவமழையின் தொடக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வெகுவிமரிசையாக அந்தப் பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் வாழும் கச்சி இன மக்கள் இந்நாளில் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழ்நாட்டின் NCC படை இரண்டாமிடம்

தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமானை உள்ளடக்கிய இயக்குநரகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

2. தேசிய தரவரிசைப்பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் சென்னை மருத்துவக்கல்லூரி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின்கீழ் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. அதன்படி நிகழாண்டு தரவரிசைப்பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 12-ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவப் பயிற்சிக்காக சென்னை மருத்துவப்பள்ளியானது கடந்த 1835-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அங்கு பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு கடந்த 1850-ஆம் ஆண்டு அக்.1-ஆம் தேதி சென்னை மருத்துவப்பள்ளியானது சென்னை மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

3. தமிழ்நாடு திருநாள் விழா: எழுத்தாளர்கள்-தமிழறிஞர்களுக்கு விருதுகள்

தமிழ்நாடு திருநாளையொட்டி, சென்னையில் நடந்த விழாவில், எழுத்தாளர்கள், தமிழறிஞர்களுக்கு விருதுகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

‘இலக்கிய மாமணி’ விருது எழுத்தாளர்கள் கோணங்கி, இரா. கலியபெருமாள், மறைந்த கு. சின்னப்ப பாரதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது `5 இலட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கியதாகும்.

2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது’ கயல் தினகரன், ‘கபிலர் விருது’ பாவலர் கருமலைத் தமிழாழன் என்கிற கி. நரேந்திரன், ‘உ.வே.சா. விருது’ மருத்துவர் இரா. கலைக்கோவன், ‘அம்மா இலக்கிய விருது’ முனைவர் மு. சற்குணவதி, ‘காரைக்கால் அம்மையார் விருது’ முனைவர் இரா. திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது `2 இலட்சத்துக்கான காசோலை தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கியது.

4. நீட் தேர்வர்கள் மனநல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மனவழுத்தம் மற்றும் குழப்பங்கள் இருந்தால், ‘104’ என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1. When is the ‘World Day for International Justice’ observed?

A. July.15

B. July.17 

C. July.19

D. July.21

 • The World Day for International Justice is observed on July 17 every year to sensitise on international justice and to promote the rights of the victims. It is also known as the Day of International Criminal Justice, and celebrates the approval of the Rome Statute and the formation of the new international criminal justice system in 1998. Over 139 countries have signed the International Criminal Court’s Treaty.

2. Which Indian sportsperson won the ‘Singapore Open 2022’ championship title?

A. Srikanth Kidambi

B. P V Sindhu 

C. Saina Nehwal

D. Lakshya Sen

 • India Ace shuttler PV Sindhu defeated China’s Wang Zhi Yi in the final match of women’s singles at the Singapore Open 2022. The two–time Olympic medallist clinched her maiden Super 500 title of the year 2022. The Singapore Open 2022 is Sindhu’s third title of the 2022 season after winning the Syed Modi International and Swiss Open BWF Super 300 titles.

3. Which institution organises the ‘Bharat Rang Mahotsav 2022’?

A. National School of Drama 

B. Lalit Kala Akademi

C. NITI Aayog

D. Sahitya Akademi

 • National School of Drama (NSD), New Delhi is organizing a festival “Azadi Ka Amrit Mahotsav – 22nd Bharat Rang Mahotsav, 2022. NSD is an autonomous organization under Ministry of Culture. The festival aims to remember and pay tribute to our freedom fighters, under ‘Azadi Ka Amrit Mahotsav 2022’. The festival will be inaugurated in New Delhi and it will be organized in 5 other cities of Bhubaneswar, Varanasi, Amritsar, Bengaluru and Mumbai.

4. What is the name of the submarine which was recently decommissioned from the Indian Navy?

A. INS Sindhudhvaj

B. INS Rajput

C. INS Ranjit

D. INS Nishank

 • The submarine named ‘INS Sindhudhvaj’ was recently decommissioned from the Indian Navy after serving for 35 years. The submarine crest depicts a grey colour nurse shark and the name ‘Sindhudhvaj’ means flag–bearer at sea. The submarine was known for indigenised sonar USHUS, indigenised satellite communication systems Rukmani and inertial navigation system and indigenised torpedo fire control system.

5. Who has been recently appointed as the Managing Director and CEO of the National Stock Exchange?

A. Urjit Patel

B. Ashishkumar Chauhan 

C. K V Kamath

D. Arundhati Bhattacharya

 • The Securities and Exchange Board of India (SEBI) has approved the appointment of Ashishkumar Chauhan as the next Managing Director and CEO of the National Stock Exchange (NSE). Chauhan is currently the MD and CEO of the Bombay Stock Exchange (BSE) and his tenure will end in November 2022. Ashishkumar is one of the founders of the NSE and he worked in the NSE from 1992 to 2000.

6. Which Indian cricketer created a world record for scoring the most runs in an over in Test cricket?

A. Virat Kohli

B. Jasprit Bumrah 

C. Rohit Sharma

D. Ravindra Jadeja

 • Jasprit Bumrah created a world record for scoring the most runs in an over in Test cricket. He smashed two sixes and four fours to score 35 runs in an over. He achieved the feat during the 5th Test between India and England in the over bowled by England speedster Stuart Broad.

7. International Coastal Clean–up Day is celebrated in which month?

A. July

B. August

C. September 

D. December

 • India launched one of its longest running coastal clean–up campaigns recently, in which 75 beaches of the country to be cleaned up to commemorate ‘Azadi Ka Amrit Mahotsav’. The coastal clean–up drive will be carried out in the country for 75 days from 3rd of July to 17th of September 2022, which is also the International Coastal Clean–up Day. The drive is aims to remove one thousand 500 tonnes of garbage from the sea coasts.

8. NTPC signed a MoU with which state to develop a 10 GW Ultra Mega Renewable Energy Power Park?

A. Tamil Nadu

B. Rajasthan 

C. Odisha

D. Gujarat

 • NTPC signed a Memorandum of understanding (MOU) with the Government of Rajasthan to develop 10 GW Ultra Mega Renewable Energy Power Park in Rajasthan. It aims to achieve the target of 60 GW of renewable energy capacity by 2032. NTPC REL is also developing one UMREPP of 4.75 GW capacity in Rann of Kutch, Gujarat.

9. Which is India’s major seafood item exported from India in terms of quantity and value?

A. Frozen shrimps 

B. Frozen squids

C. Frozen fishes

D. Frozen cuttlefishes

 • India shipped 13, 69,264 MT of seafood worth Rs 57,586.48 crore (USD 7.76 billion) during 2021–22, despite heavy odds. During the FY 2021–22, the export improved in rupee term by 31.71%. Frozen shrimp remained the major export item in terms of quantity and value. USA is the largest market of frozen shrimp, followed by China and European Union.

10. Ashadhi Bij is predominantly celebrated in which state?

A. Punjab

B. Gujarat 

C. Madhya Pradesh

D. Odisha

 • Ashadhi Bij is the second day of Aashaadha month, of the Hindu calendar, which is associated with the beginning of rains in the Kutch region. The Kutchi people of Gujarat celebrate their new year on this day.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!