Tnpsc

19th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபசெய்திகளில் இடம்பெற்ற OTPRMS சான்றிதழ்கள் என்பதுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

இ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • இணையவழி ஆசிரியர் மாணவர் பதிவு மேலாண்மை அமைப்பு Online Teacher Pupil Registration Management System (OTPRMS) என்பது தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சிலின்கீழ் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சிபெற்ற (அ) படித்துவருபவர்களுக்கு, ஆசிரியர் பணி பெறுவதற்கு தங்களை பதிவு செய்துகொள்ள உதவுகிறது. OTPRMS சான்றிதழ்களை டிஜிலாக்கர் சேவையுடன் இணைக்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அது, சான்றிதழ்களை இலவசமாக அணுக உதவுகிறது.

2. அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் மற்றும் அனுமதி விதிகள், பின்வரும் எந்தத் தேதியிலிருந்து பொருந்தும்?

அ) ஏப்ரல் 1, 2021

ஆ) மே 1, 2021

இ) ஜூன் 1, 2021

ஈ) ஆகஸ்ட் 1, 2021

  • ‘அகில இந்திய சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் & அனுமதி விதிகள், 2021’ என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்தப்புதிய விதிகளின்கீழ், எந்தவொரு சுற்றுலா வாகன ஆபரேட்டரும் ‘அகில இந்திய சுற்றுலா அங்கீகாரம் அல்லது அனுமதி’க்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க -ப்பட்டு கட்டணம் செலுத்திய பிறகு, அத்தகைய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.

3. சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) கர்நாடகா

ஈ) இராஜஸ்தான்

  • சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் காப்பு வனப்பகுதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஏராளமான ஆசிய சிங்கங்களின் தாயகமாக உள் -ளது. அண்மையில், சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் காப்பு வனப்பகுதி -யில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, 200 ஹெக்டேருக்கு மேல் பரவியதாகக் கூறப்படுகிறது.

4. இந்திய ரயில்வேயின் செனாப் பாலம் கட்டப்பட்டுவருகிற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) ஜம்மு & காஷ்மீர்

ஈ) அஸ்ஸாம்

  • செனாப் பாலம் என்பது இந்திய இரயில்வேயால் கட்டப்பட்டு வரும் எஃகு மற்றும் கான்கிரீட் கலந்த பாலமாகும். இது ஜம்மு-காஷ்மீரின் பக்கலுக்கு -ம் கவுரிக்கும் இடையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டி முடிந்ததும், இந்தப் பாலம் உலகின் மிகவுயர்ந்த பாலமாக இருக்கும். சமீபத்தில், இந்த இரயி -ல்வே பாலத்தின் வளைவின் அடிப்பகுதியை நிர்மாணித்ததன்மூலம் ஒரு பொறியியல் சாதனை அடையப்பெற்றுள்ளது.

5. நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனீவா

ஆ) ரோம்

இ) பாரிஸ்

ஈ) நைரோபி

  • நாடாளுமன்ற முறைகள் மற்றும் பேச்சுவார்த்தைமூலம் அமைதியை மேம்படுத்துவதற்காக, 1889ஆம் ஆண்டில் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் துவார்டே பச்சேகோ சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்து மாநிலங்களவையின் நடவடிக்கைகளை கண்டார். நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியமானது 179 நாடாளுமன்ற உறுப்பினர் -களையும் 13 இணை-உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

6. முதலாவது தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்ட மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) பஞ்சாப்

இ) இராஜஸ்தான்

ஈ) மகாராஷ்டிரா

  • பஞ்சாபின் மொகாலியில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நிறுவனமாக அறிவிப்பதற்காக 1998ஆம் ஆண்டின் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் இயற்றப்பட்டது. ஆமதாபாத், கெளகாத்தி, ஹாஜிபூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ரேபரேலி ஆகிய இடங்களில் ஆறு புதிய நிறுவனங்கள் 2007-08’ஆம் காலகட்டத்தில் அமைக்கப்பட்டன.
  • ஆறு நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த குறிச்சொல்லை வழங்க சமீபத்தில் ஒரு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

7. சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் திருத்த மசோதா-2021, DMF’க்கு வழிகாட்டுதல்களை வழங்க நடுவணரசுக்கு அதிகாரமளிக்க முயற்சி செய்கிறது. DMF என்றால் என்ன?

அ) Deposit Mineral Fund

ஆ) District Mineral Foundation

இ) Deep Mine Fund

ஈ) District Mine Fund

  • சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு & ஒழுங்குமுறை) திருத்த மசோதா-2021 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, சுரங்கங்க -ள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957’ஐ திருத்துகிறது. தன்பயன் மற்றும் வணிக சுரங்கங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்க இந்தச்சட்டம் முயற்சி செய்கிறது.
  • மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) பராமரிக்கும் நிதிகளின் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிடுவதற்கு இது நடுவணரசுக்கு அதிகாரமளிக்கிறது.

8. ‘My Life in Full: Work, Family and Our Future’ என்பது பின்வரும் யாரின் நினைவுக்குறிப்பாகும்?

அ) கிரண் மஜும்தார் ஷா

ஆ) இந்திர நூயி

இ) சுதா மூர்த்தி

ஈ) ஷிகா சர்மா

  • ‘My Life in Full: Work, Family and Our Future’ என்பது 65 வயதான முன்னாள் பெப்சிகோ தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியின் நினைவுக்குறிப்பாகும். இது, 2021 செப்டம்பர் மாதத்தில் போர்ட்போலி
    -யோ புத்தகங்கள் நிறுவனத்தால் வெளியிடப்படும்.
  • இது, குழந்தைப் பருவத்திலிருந்து உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த பெண்களுள் ஒருவராக மாறும்வரை அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. 24 ஆண்டுகள் பெப்சிகோவில் பணியாற்றிய இந்திரா நூயி, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

9. COVID-19 கொள்ளைநோய் காரணமாக MPLADS நிதி, எந்த ஆண்டு வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது?

அ) 2021

ஆ) 2022

இ) 2023

ஈ) 2024

  • COVID-19 கொள்ளைநோய் காரணமாக 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MPLADS) நிதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது.
  • 2019-20ஆம் ஆண்டிற்கான MPLADS நிதி, மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவைக்குத் தெரிவித்தார்.

10. ‘ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கை-2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ) ADB

ஆ) UN ESCAP

இ) IMF

ஈ) AIIB

  • ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UN ESCAP) ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கையின் 2021 பதிப்பை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோய்க்குள் நுழைவதற்கு முன்னர், இப்பகுதி 2020 இலக்குகளை வெகுவாக அடையவில்லை.
  • உலகளாவிய பைங்குடில் வாயு வெளியேற்றத்தில் பாதிக்கும்மேலானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடையதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 1940 கி.மீ. தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்: நிதின் கட்கரி

தமிழ்நாட்டில் உள்ள மாநில தேசிய சாலைகளில் 1940 கிலோ மீட்டர் தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 235 மாநில நெடுஞ்சாலைகள் 11,175 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. 50 தேசிய நெடுஞ்சாலைகள் 6,858 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1940 கிலோ மீட்டார் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி மேம்பாட்டிற்கு மத்திய அரசு நடப்பு நிதியாண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளில் `8,395 கோடி வரை செலவிட்டுள்ளது.

2. காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டதிருத்த மசோதா (2021) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

உயரும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு: காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு இப்போது 49 சதவீதம் அனுமதிக்கப்படுகிறது. இதனை, 74 சதவீதமாக உயர்த்த காப்பீட்டு சட்டதிருத்த மசோதா – 2021 வழிவகை செய்கிறது. மேலும், இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியு -ம் என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டுச்சட்டம், 1938 ஏற்கனவே இருமுறை திருத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டது. அப்போது 26% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு 2015’இல் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, அதனை 74 சதவீதமாக உயர்த்த திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

`26,000 கோடி அந்நிய நேரடி முதலீடு:

மாநிலங்களவையில், அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்படுவதற்கான காரணத்தை விளக்கிய நிர்மலா சீதாராமன், ‘காப்பீட்டு நிறுவனங்களின் பணப்புழக்கத்தில் பிரச்சனைகள் உள்ளன. இப்போது அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதன்மூலம் காப்பீட்டு நிறுவனங்களின் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வு, காலனியாதிக்கம்போன்ற நிலையை மீண்டும் உருவாக் -கும் என்ற கருத்து தவறானது. 2015’இல் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்பட்ட பிறகு `26,000 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

3. ஓர் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு GPS கட்டண முறை அமல்படுத்தப்படும்: நிதின் கட்கரி

நாட்டில் ஓராண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு GPS அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சுங்கப்பாதைகளில் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துதற்கு பதிலாக மின்னணு முறையில் கட்டணம் செலுத்தப்பட்ட, ‘Fastag’ முறை கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டிலேயே மின்னணு மூலமான சுங்கக்கட்டணத்தை அதிக அளவில் செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 2019-20 ஆம் ஆண்டில் வசூலான சுங்கக்கட்டணம் `782.03 இலட்சமாகும்.

4. பழைய வாகன அழிப்பு சான்றிதழ் சமா்ப்பித்தால் புதிய வாகன விலையில் 5% தள்ளுபடி: நிதின் கட்கரி

பழைய வாகன அழிப்பு சான்றிதழை சமர்ப்பித்தால் புதிய வாகன விலையி -ல் 5% தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். 2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையில் பழைய வாகனங்களுக்கான அழிப்புக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதில், 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள், சரக்கு உந்துகளையும், 20 ஆண்டுகளைக்கடந்த கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களையும் பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

5. தான்சானியா அதிபர் மறைவு

இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி காலமானார். அவருக்கு வயது 61. இதனை அந்நாட்டின் துணை அதிபர் சமியா சுலுஹூ அறிவித்தார்.

6. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ எனும் 2 தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியில் சிம்பன்ஸி குரங்கை பாதிக்கும் அடினோவைரஸில் மரபணுவை மாற்றி, அதனுள் வீரியம் இழந்த ‘நாவல்கரோனா’ வைரஸின் ‘கூர்ப்புரத’த்தைச் செலுத்திவிடுகின்றனர். இந்த வைரஸால் மனித உடலுக்குள் பிரதி எடுத்து வளர்ச்சியடைய முடியாது. ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியில் இறந்த நிலையில் உள்ள ‘நாவல்கரோனா’ வைரஸைப் பயன்படுத்துகின்றனர். இந்த வைரஸாலும் மனிதஉடலுக்குள் வளர்ச்சியடைய முடியாது.

மாடர்னா, பைசர் நிறுவனங்கள்தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளில் நாவல் கரோனா வைரஸ் ‘mRNA’ பயன்படுத்தியுள்ளனர். இதனாலும் மனித உடலுக்குள்சென்றதும் கரோனா வைரஸாக உருவாக முடியாது. எனவே தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் ரத்ததானம் செய்வதால் அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை. எப்போதும்போல் இரத்த தானம் செய்யலாம். இரத்தம் அளித்த பிறகு கொடையாளரின் உடலில் உருவாகும் புதிய இரத்தத்திலும் கரோனா எதிரணுக்கள் உற்பத்தியாகிவிடும்.

உலக நடைமுறை

சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வாரத்துக்குள் மிதமான காய்ச்ச -ல், உடல்வலி, தலைவலி, அசதிபோன்ற சிறிய அளவிலான தொல்லைகள் ஏற்படக்கூடும். அப்போது ரத்த தானம் செய்யக்கூடாது. ஒரு வாரம் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்ற வழிமுறை உலகளவில் பின்பற்றப்படுகிறது.

இந்திய நடைமுறை

இந்தியாவில் ரத்த தானம் செய்ய, உலக நடைமுறையிலிருந்து ஒருமாற்ற -த்தைக் கொண்டுவந்துள்ளனர். ‘கோவிசீல்டு’, ‘கோவேக்சின்’ இரண்டில் எதுவானாலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரத்த தானம் செய்யலாம் என்று ‘தேசிய இரத்தமேற்றும் கழகம்’ அறிவித்துள்ளது.

ஒருவேளை கரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டவரின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு ‘சுயத்தடுப்பாற்றல் சீர்குலைவு’ (Auto immune disorder) இருந்தால், புதிதாக செலுத்தப்பட்ட ரத்தத்தில் உள்ள கரோனா எதிரணுக்கள் அந்தநோயுள்ளவரின் உடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுதான்காரணம். 28 நாட்கள் கழித்து ரத்ததானம் செய்தால் அந்த எதிரணுக்கள் பயனாளி உடலுக்குப் பாதகம் செய்யாது என்று ஒரு மருத்துவக் கணிப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் மிக அரிதாக நிகழும்இந்தப் பாதிப்பைக் கவனத்தில் கொண்டும் 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யும் வழிமுறையை இந்தியாவில் பின்பற்ற ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘தேற்றாளர் ரத்தத் திரவம்’ தானம் செய்யலாமா?

கரோனா தொற்றாளர்களுக்கு ‘தேற்றாளர் ரத்தத் திரவம்’ (Convalescent plasma) வழங்கப்படுவது ஒரு சிகிச்சை முறையாக உள்ளது. இவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ரத்தத் திரவத்தை எடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ரத்தத்தில் உருவாகும் எதிரணுக்க -ள் கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலைத் தரும். அதாவது, கரோனா வைரஸ்கள் உடலுக்குள் நுழையும்போதே அவற்றை கண்டறிந்து எதிர்த்துப் போராடி கரோனாவை வெற்றிகொள்ளும். ஆனால், கரோனா தொற்றாளர்கள் உடலில் ஏற்கெனவே கரோனா வைரஸ்கள் குடிபுகுந்தி
-ருக்கும். அவற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் போராட முடியாது.

தடுப்பூசி என்பது நோயைக் குணப்படுத்தும் மருந்து அல்ல; நோய் வருவதை தடுக்கும் மருந்து. ஆகவே, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண் -டவர்கள் ‘தேற்றாளர் ரத்தத் திரவ’ தானம் செய்ய முடியாது.

ரத்த வங்கிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

இரண்டாம் தவணை தடுப்பூசிபோட்டுக்கொண்டபிறகு 28 நாட்கள் கழித்து இரத்ததானம் செய்யலாம் எனும் அறிவிப்பு இந்திய இரத்த வங்கிகளுக்குப் பிரச்சினையாகி உள்ளது. ஏற்கெனவே கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணைக்கு 28 நாட்கள் இடைவெளி தேவைப்படுகிறது. இரண்டாம் தவணையைப் போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்றால், மொத்தத்தில் 56 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கரோனா பாதிப்பால் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு ரத்த வங்கிகளின் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். தகுதியான கொடையாளர்கள் முதலில் ரத்ததானம் செய்துவிட்டு, அடுத்ததாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்.

7. தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் சியாமளா: அனிமேஷன் பட இயக்குநரின் சாதனை முயற்சி

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கிமீ தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை கோலி சியாமளா நீந்தியே கடக்கவுள்ளார். இதன்மூலம், பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கோலி சியாமளா பெறுவார். இவர் அனிமேஷன் படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேசுவரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கிறது. தமிழ்நாட்டிலேயே மிகவும் ஆழம்குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையைச் சார்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து கடந்த 1966’இல் கொல்கத்தாவைச் சார்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக்கடந்தார். வல்வெட்டித்துறையைச் சார்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971’இல் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.

2019’இல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் ஜலசந்தியை நீந்திக்கடந்தார். அதுபோல, கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவைச் சார்ந்த எடி ஹு (45) என்பவர் முதல் பெண்ணாக பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக்கடந்தார்.

8. கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணி தொடக்கம்

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வை தொடங்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில், ஏழு இடங்களில் இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட உள்ளன. இதில், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் எனும் ஊர், 1000 ஆண்டுகளுக்குமுன், இராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கியது.

இங்கு, ஏற்கனவே, தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில், இராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்த தடயங்கள் கண்டறியப்பட் -டன. இந்நிலையில், கடந்த மாதம், இங்கு கள ஆய்வுப் பணிகள் நடந்தன. அதில், தொல்பொருட்கள் இருக்கும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன், அகழாய்வுப்பணிகள் தொடங்கின.

9. தேசிய சீனியர் தடகளம்: 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார் தனலட்சுமி

24ஆவது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன் -ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்துவருகிறது. இதில், 4ஆவது நாளன்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தமிழ்நாட்டின் S தனலட்சுமி (23.26 வினாடி), முன்னணி வீராங்க -னையான அசாமைச்சார்ந்த ஹிமா தாஸை (24.39 வினாடி) பின்னுக்கு தள்ளி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி -னார். அத்துடன் இந்தப் போட்டியில் தனலட்சுமி புதிய சாதனையும் படைத்தார். இதற்குமுன்பு கடந்த 1998ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் முன்னாள் பிரபல வீராங்கனை P T உஷா (கேரளா) 23.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை தனலட்சுமி முறியடித்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி, ஒடிசாவின் டுட்டீ சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேஸ்னா கிலிஸ்டஸ் மேரி 1.84 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 20 வயதான அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அரியானா வீராங்கனை ரேகா (1.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஜிஜி ஜார்ஜ் ஸ்டீபன் (1.70 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

1. OTPRMS certificates, which was seen in the news recently, is associated with which Union Ministry?

A) Ministry of Education

B) Ministry of Skill Development and Entrepreneurship

C) Ministry of Labour and Employment

D) Ministry of Agriculture and Rural Development

  • Online Teacher Pupil Registration Management System (OTPRMS) enable the candidates who have passed or undergoing any of the courses under National Council for Teacher Education, to register themselves, in order to be recruited as teachers. The Ministry of Education has decided to link the OTPRMS certificates with DigiLocker service, to facilitate free access to the certificates.

2. All India Tourist Vehicles Authorization and Permit Rules, will be applicable from which date?

A) April 1, 2021

B) May 1, 2021

C) June 1, 2021

D) August 1, 2021

  • The Ministry of Road Transport and Highways has announced a new scheme, named ‘All India Tourist Vehicles Authorization and Permit Rules, 2021. Under the new set of rules, any tourist vehicle operator may apply for an “All India Tourist Authorization/Permit” through online mode. After required documents are submitted and fees deposited, it will be issued within 30 days of submission of such applications.

3. In which state is the Shetrunjay Hills reserve forest located?

A) Maharashtra

B) Gujarat

C) Karnataka

D) Rajasthan

  • The Shetrunjay Hills reserve forest area is located in the state of Gujarat and is home to a large number of Asiatic Lions. Recently a massive fire broke out in the Shetrunjay Hills reserve forest area and the fire is said to have spread to more than 200 hectares.

4. In which state / UT is the Chenab bridge of Indian Railways being constructed?

A) Uttarakhand

B) Himachal Pradesh

C) Jammu & Kashmir

D) Assam

  • The Chenab Bridge is a steel and concrete arch bridge being constructed by the Indian railways. It is constructed between Bakkal and Kauri of Jammu and Kashmir.
  • When completed, it would be the world’s highest bridge. Recently, the Railways has achieved an engineering fete by completing the construction of the arch bottom of the bridge.

5. Where is the headquarters of the Inter Parliamentary Union (IPU) located?

A) Geneva

B) Rome

C) Paris

D) Nairobi

  • Inter Parliamentary Union (IPU) was founded in 1889, to promote peace through parliamentary diplomacy and dialogue. Inter Parliamentary Union (IPU) President Mr. Duarte Pacheco visited New Delhi recently and witnessed the proceedings of the Rajya Sabha. IPU has 179 Member of Parliament and 13 Associate Members.

6. The first National Institute of Pharmaceutical Education and Research was established in which state?

A) Gujarat

B) Punjab

C) Rajasthan

D) Maharashtra

  • The National Institute of Pharmaceutical Education and Research Act, 1998 was enacted to declare the National Institute of Pharmaceutical Education and Research at Mohali, Punjab to be an institute of national importance.
  • 6 new institutes in Ahmedabad, Guwahati, Hajipur, Hyderabad, Kolkata and Raebareli were set up during 2007–08. Recently a bill was introduced in Lok Sabha to provide the national importance tag to six institutes.

7. The Mines and Minerals Amendment Bill 2021 seeks to empower Central Government to issue directions to DMF. What is a DMF?

A) Deposit Mineral Fund

B) District Mineral Foundation

C) Deep Mine Fund

D) District Mine Fund

  • The Mines and Minerals (Development and Regulation) Amendment Bill 2021 was introduced in the Lok Sabha. It amends the Minerals (Development and Regulation) Act 1957. The legislation seeks to remove the distinction between captive and merchant mines.
  • It empowers the Central Government to issue directions on composition and utilisation of funds maintained by the District Mineral Foundation (DMF).

8. ‘My Life in Full: Work, Family and Our Future’ is a memoir of which Indian personality?

A) Kiran Mazumdar Shaw

B) Indra Nooyi

C) Sudha Murthy

D) Shikha Sharma

  • My Life in Full: Work, Family and Our Future, is the memoir of 65–year–old former PepsiCo CEO Indra Nooyi. It will be published in the month of September 2021 by Portfolio books.
  • It narrates her life from childhood till her becoming one of the world’s most powerful women. Indra Nooyi served as the CEO of PepsiCo for 12 years and worked there for 24 years.

9. MPLADS Fund has been suspended till which year, due to COVID–19 pandemic?

A) 2021

B) 2022

C) 2023

D) 2024

  • The Union Government announced that no new Members of Parliament Local Area Development Scheme (MPLADS) Fund would be provided for 2020–21 and 2021–22 due to the Corona pandemic.
  • Union Finance Minister Nirmala Sitharaman informed the Rajya Sabha that the MPLADS Fund for 2019–20 had been released by the Ministry of Finance and sent to the districts.

10. Which organisation released the “Asia and the Pacific SDG Progress Report 2021”?

A) ADB

B) UN ESCAP

C) IMF

D) AIIB

  • United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) released the 2021 edition of the Asia and the Pacific SDG Progress Report. As per the report, the region fell short of its 2020 milestones for the Goals, before entering the global pandemic.
  • The Asia–Pacific region is responsible for more than half of the global greenhouse gas emissions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!