TnpscTnpsc Current Affairs

19th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘Not Just a Nightwatchman: My Innings in the BCCI’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. சௌரவ் கங்குலி

ஆ. வினோத் ராய் 

இ. ஜக்மோகன் டால்மியா

ஈ. N சீனிவாசன்

  • இந்தியாவின் 11ஆவது கணக்குத் தணிக்கைத் தலைவரான வினோத் ராய், ‘Not Just a Nightwatchman: My Innings in the BCCI’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய உச்சநீதிமன்றம் 2017–இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) இடைக்காலத் தலைவராக வினோத் ராயை நியமித்தது. இந்தப் புத்தகம் நிர்வாகிகள் குழுவின் வழிகாட்டுதலின்கீழ் BCCI–இன் செயல்பாடுகள்பற்றிய வெளிப்படையான வர்ணனை என்று கூறப்படுகிறது.

2. 2022 – டைம்ஸ் உயர்கல்வி (THE) தாக்க தரவரிசையில், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுப் பல்கலைக் கழகங்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள பல்கலைக்கழகம் எது?

அ. அண்ணா பல்கலைக்கழகம்

ஆ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

இ. கல்கத்தா பல்கலைக்கழகம் 

ஈ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

  • 2022 – டைம்ஸ் உயர்கல்வி (THE) தாக்க தரவரிசையில் கல்கத்தா பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு உதவிபெறும் பொதுப்பல்கலைக்கழகங்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 41ஆவது இடத்தில் உள்ளது. துருக்கியுடன் இணைந்து மொத்தம் 64 பல்கலைக்கழகங்களுடன், தரவரிசையில் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நான்காவது நாடாக இந்தியா உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் 1,406 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்தத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

3. மிஷன் சாகர் – IXஇன் ஒருபகுதியாக, INS கரியால், அண்மையில் எந்த நாட்டுக்கு முக்கியமான மருந்துகளை கொண்டுசென்று வழங்கியது?

அ. மாலத்தீவுகள்

ஆ. இலங்கை 

இ. நேபாளம்

ஈ. ஆப்கானிஸ்தான்

  • INS கரியால், மிஷன் SAGAR – IXஇன் ஒருபகுதியாக, 760 கிலோகிராமிற்கும் அதிகமான 107 வகையான உயிர்க் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போது மருத்துவ உதவிகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. SAGAR – Security and Growth for All in the Region என்ற அரசாங்கத்தின் பார்வைக்கு இணங்க, நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக மிஷன் SAGAR என்ற தலைப்பில் இந்தியக் கடற்படை பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

4. ‘இந்திய பில்டிங் காங்கிரஸ்’ ‘சிறந்த உட்கட்டமைப்புத் திட்டம்’ விருது வென்ற உட்கட்டமைப்புத் திட்டம் எது?

அ. Dr சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப்பாதை

ஆ. அடல் சுரங்கப்பாதை 

இ. ரோஹ்தங் லா கணவாய்

ஈ. சொஜி லா கணவாய்

  • எல்லைப்புறச் சாலைகள் அமைப்பால் (BRO) ஹிமாச்சல பிரதேசத்தின் ரோதங்கில் கட்டப்பட்ட அடல் சுரங்கப்பாதை, இந்திய கட்டட மாநாட்டின் ‘சிறந்த உட்கட்டமைப்புத் திட்ட’ விருதைப்பெற்றது. இம்மாநாட்டின் நடுவர் குழு, 2021ஆம் ஆண்டில், ‘கட்டமைக்கப்பட்ட சூழலில் சிறந்து விளங்குவதற்கான சிறந்த திட்டமாக’ இந்தச் சுரங்கப்பாதையைத் தேர்ந்தெடுத்தது. புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை (NATM) பயன்படுத்தி கட்டப்பட்ட இது, 2020 அக்டோபர். 3 அன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

5. மருந்து ஏற்றுமதியின் அளவு அடிப்படையில், உற்பத்தியில், உலகளவில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?

அ. 1ஆவது

ஆ. 2ஆவது

இ. 3ஆவது 

ஈ. 5ஆவது

  • மருந்து ஏற்றுமதியின் அளவு அடிப்படையில், உற்பத்தியில், இந்தியா உலகளவில் மூன்றாமிடத்தையும், மதிப்பின் அடிப்படையில் 14ஆமிடத்தையும் பெற்றுள்ளது. உள்நாட்டு மருந்துத் துறையின் தற்போதைய சந்தை அளவு சுமார் $50 பில்லியன் டாலர்களாகும். உலகளாவிய ஏற்றுமதியில் இந்திய மருந்துகளின் பங்கு 5.92 சதவீதமாக உள்ளது. 2021–22இல் மருந்து ஏற்றுமதி `1,83,422 கோடியை தொட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக தடுப்பூசிகளில் 60 சதவீதமும், ஜெனரிக் மருந்துகளில் 20 சதவீதமும் இந்தியாவில் இருந்து வந்தவை.

6. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சரானவர் 2ஆவது கேலோ மாஸ்டர்ஸ் விளையாட்டு – 2022ஐ, கீழ்காணும் எந்த இடத்தில் தொடங்கிவைத்தார்?

அ. மும்பை

ஆ. மைசூரு

இ. பெங்களூரு

ஈ. புது தில்லி 

  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் புது தில்லியில் 2ஆவது கேலோ மாஸ்டர்ஸ் விளையாட்டு – 2022–ஐ தொடங்கிவைத்தார். இந்த விளையாட்டில், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 30 முதல் 95 வயதுக்குட்பட்ட 3000–க்கும் மேற்பட்ட மாஸ்டர் விளையாட்டு வீரர்கள் எட்டு வகை விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இது மே.3ஆம் தேதி அன்று நிறைவடைகிறது.

7. AAHAR உணவுக்கண்காட்சியில், ‘பசையமற்ற’ தினை தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. NABARD

ஆ. APEDA 

இ. FICCI

ஈ. NITI ஆயோக்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) புது தில்லியில் நடைபெறும் AAHAR உணவுக்கண்காட்சியில் அனைத்து வயதினருக்கும் மலிவு விலையில் பல்வேறு தினை பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, APEDAஆல் தொடங்கப்பட்ட அனைத்து தினை தயாரிப்புகளும் பசையமற்றவை, 100% இயற்கை மற்றும் காப்புரிமை பெற்றவை. AAHAR–இன் 36ஆவது பதிப்பானது APEDA மற்றும் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.

8. கீழ்காணும் எந்த மாதத்தில், ‘சர்வதேச இருண்ட வான வாரம்’ கொண்டாடப்படுகிறது?

அ. ஏப்ரல் 

ஆ. மே

இ. ஜூன்

ஈ. ஜூலை

  • ‘சர்வதேச இருண்ட வான வாரம்’ என்பது சர்வதேச இருண்ட வான சங்கம் நடத்தும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இந்த ஆண்டு, வானியலாளர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் ஏப்ரல் 22–30 வரை 2022 சர்வதேச இருண்ட வான வாரத்தைக் கடைப்பிடித்தனர். அதுசமயம் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டன; இதில் பங்கேற்பாளர்கள் வானியற்பியல் குறித்து கற்றல், இரவில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மற்றும் ஒளி மாசு இல்லாமல் இரவு வானத்தை கூர்நோக்குதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

9. 2022 – ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் P V சிந்து எந்தப் பதக்கம்/நிலையை பெற்றார்?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம் 

ஈ. 4ஆவது இடம்

  • இந்தியாவின் P V சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் வீழ்ந்து, தனது இரண்டாவது ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்தை வென்றார். சிந்து முதல் ஆட்டத்தில் 21–13 என்ற கணக்கில் வெற்றிபெற்றாலும், ஜப்பானின் முதல்நிலை வீரரும் நடப்புச் சாம்பியனுமான அகானே யமாகுச்சியிடம் தோல்வியைச்சந்தித்தார். லீ ஜி ஜியா ஜொனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி ஆடவர் பட்டத்தை வென்றார்; வாங் ஜி யி பெண்கள் ஒற்றையர் பிரிவில் அகானே யமாகுச்சியை தோற்கடித்தார்.

10. ‘ஜிவ்ஹாலா’ என்பது கீழ்காணும் எந்த மாநில அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு கடன் திட்டமாகும்?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. மகாராஷ்டிரா 

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

  • மகாராஷ்டிர மாநிலா சிறைத்துறையானது அம்மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இதன் வகையில் முதலான ஒரு சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஜிவ்ஹாலா’ என்ற இந்தக் கடன் திட்டம் மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியால் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, கிட்டத் தட்ட 60 சிறைகளில் இது நீட்டிக்கப்படும். கைதிகள் தங்கள் குழந்தைகளின் கல்வி, குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் சிகிச்சை, சட்டக் கட்டணம் அல்லது பிற செலவுகளுக்கு இக்கடன்களைப் பயன்படுத்தலாம்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. சுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்தி கவுன்சில்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

ஜவுளி அமைச்சகம், வேளாண்மை அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், இந்திய பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதியாய் புகழ்பெற்ற மூத்த பருத்தி நிபுணரான சுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும் என்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதுடன் விவாதங்களையும் கவுன்சில் நடத்தும்.

2. தமிழகத்தில் நிகழாண்டில் 34,239 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் 34,239 பேர் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84% பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள்மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3. கேரளத்தில் இந்தியாவின் முதல் அரசு OTT தளம்

இந்தியாவின் முதலாவது அரசு OTT தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. நவம்பர்.1-ஆம் தேதிமுதல் இந்த OTT தளம் செயல்படத் தொடங்கும். ‘சி ஸ்பேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த OTT தளம், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட இத்துறையில் கோலோச்சும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் OTT தளங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில உருவாக்கப்பட்ட தினமான நவ.1 முதல் இந்த OTT தளம் செயல்படத்தொடங்கும். இந்தியாவில் அரசு சார்பில் தொடங்கப்படும் முதல் OTT தளமும் இதுவாகும்.

4. நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்: பிரதமருக்கு பொருளாதார கவுன்சில் பரிந்துரை

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் செயல்படுத்தப்படுவதைப்போல் நகர்ப்புறங்களில் வேலை இல்லாதவர்களுக்கும் திட்டம் தொடங்க வேண்டும் என்றும், அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும் என்றும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்துள்ளது.

‘இந்தியாவில் சமத்துவமின்மை’ என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘சமூக சேவை திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மேலும் வறுமையில் சிக்கமாட்டார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாடு அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் உள்ளதால், அவர்களுக்கு பணிகளை வழங்க திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும்.

2019-20-இல் நாட்டில் 45.78 சதவீதம் பேர் சுயதொழில் செய்யும் ஊழியர்களாகவும், 33.5 சதவீதம் பேர் மாதாந்திர தொடர் ஊதிய ஊழியர்களாகவும், 20.71% பேர் ஒப்பந்த ஊழியர்களாகவும் இருந்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் நாட்டின் வேலையின்மை 4.8 சதவீதமாக இருந்தது. வேலை செய்யும் ஊழியர்களின் சதவீதம் 46.8-ஆக இருந்தது. 95% பள்ளிகளில் கழிப்பறை வசதிகளும், 80.16% பள்ளிகளில் மின் இணைப்புகளும் இருந்தன. தமிழ்நாடு, கோவா, சண்டீகர், தில்லி, தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரியில் பள்ளிகளில் 100 சதவீதம் மின் இணைப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் இன்று (2022 மே.18) உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுசெய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பிய நிலையில், அந்தப் பரிந்துரையை ஆளுநர் இரண்டரை ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார். அப்படி அனுப்பியது அரசமைப்புச்சட்டத்தின்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.

பேரறிவாளன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்து, நீதியரசர்கள் எல் நாகேஸ்வரராவ், பி ஆர் கவாய், ஏ எஸ் போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு:

“மாநில அமைச்சரவையின் அறிவுரைக்கு கட்டுப்பட்டே, மாநில ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் பிரிவின்கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பது முன்பு இந்த நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் மூலம் நன்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, 161ஆவது பிரிவின்கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது அப்படி செயல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியது.

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டு காலம் கழித்து குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பியிருக்கும் செயலை அரசமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கும் அது விரோதமாக இருக்கிறது. இதன்மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

வேறு ஒரு வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய தண்டனை சட்டத்தின் 302ஆவது பிரிவின்கீழ் தண்டனை குறைப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தவறானது. அரசமைப்புச் சட்டமோ, இந்திய தண்டனைச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேறு சட்டங்களோ அப்படி தண்டனை குறைக்கும் வெளிப்படையான நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கவில்லை. குறிப்பாக அப்படி மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், இ த ச 302இன் கீழ் மாநில அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது.

மனுதாரரின் (பேரறிவாளனின்) நீண்ட கால சிறைவாசத்தையும், சிறையிலும், சிறை விடுப்பிலும் அவரது திருப்தி அளிக்கும் நடத்தையையும், நாள்பட்ட உடல் நலக் கோளாறுகளையும், சிறைவாசத்தில் அவர் பெற்ற கல்வித் தகுதிகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தக் கோரிக்கையை மீண்டும் ஆளுநரின் பரிசீலனைக்கே அனுப்புவது பொருத்தமற்றது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 142 பிரிவின்கீழ் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மனுதாரர் 1991ஆம் ஆண்டு பதிவான குற்ற எண் 329இன் கீழ் தண்டனையை அனுபவித்துவிட்டதாக கருதப்படவேண்டும் என்று உத்தரவிடுகிறோம். ஏற்கெனவே பிணையில் உள்ள பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1. Who is the author of the book titled ‘Not Just A Nightwatchman: My Innings in the BCCI’?

A. Sourav Ganguly

B. Vinod Rai 

C. Jagmohan Dalmiya

D. N Srinivasan

  • The 11th Comptroller and Auditor General of India, Vinod Rai has authored a book titled ‘Not Just A Nightwatchman: My Innings in the BCCI’. The Supreme Court of India appointed Vinod Rai as the interim president of the Board of Control for Cricket in India (BCCI) in 2017. The book is said to be a transparent commentary on the functioning of BCCI under the guidance of the Committee of Administrators (CoA).

2. Which University has been ranked first among all public universities in India by Times Higher Education (THE) Impact Rankings 2022?

A. Anna University

B. Madras University

C. Calcutta University 

D. Jawaharlal Nehru University

  • Calcutta University has been ranked first among all the central and state–aided public universities in the country by Times Higher Education (THE) Impact Rankings 2022.
  • Amrita Vishwa Vidyapeetham was placed at 41st place in the overall table. India is the fourth most–represented nation across the rankings, with 64 universities featuring in total along with Turkey. Australia’s Western Sydney University is ranked at the top spot in the overall ranking, which includes 1,406 institutions.

3. As a part of Mission SAGAR IX, INS Gharial recently delivered critical medicines to which country?

A. Maldives

B. Sri Lanka 

C. Nepal

D. Afghanistan

  • INS Gharial, as part of Mission SAGAR IX, delivered over 760 kgs of 107 types of critical lifesaving medicines to Sri Lanka. The recent mission aims to provide medical aid to Sri Lanka during its ongoing economic crisis. The Indian Navy undertakes several humanitarian operations titled Mission SAGAR to assist friendly countries, in line with the Government’s vision of SAGAR – Security and Growth for All in the Region.

4. Which infrastructure project won the ‘Indian Building Congress’ (IBC) ‘Best Infrastructure Project’?

A. Dr Syama Prasad Mookerjee Tunnel

B. Atal Tunnel 

C. Rohtang La Pass

D. Zoji La Pass

  • The Border Roads Organisation (BRO) constructed– Atal Tunnel, built in Rohtang in Himachal Pradesh, received the Indian Building Congress’ (IBC) ‘Best Infrastructure Project’ award. The IBC jury selected the strategic tunnel as the ‘Best Project for Excellence in Built Environment’ in 2021. Built using the New Austrian Tunnelling Method (NATM), it was dedicated to the nation by Prime Minister Narendra Modi on October 3, 2020.

5. India ranks at which place worldwide for production in terms of volume of Pharma exports?

A. 1st

B. 2nd

C. 3rd 

D. 5th

  • India ranks third worldwide for production in terms of volume of Pharma exports and 14th by value. The current market size of the domestic pharmaceutical industry is around USD 50 billion. The share of pharmaceuticals and drugs of India in the global exports is 5.92 percent. As per the Commerce Ministry, Pharma exports have touched Rs 1,83,422 crore in 2021–22. 60 percent of the world’s vaccines and 20 percent of generic medicines came from India.

6. Youth Affairs and Sports Minister inaugurated the 2nd Khelo Masters Games 2022 at which place?

A. Mumbai

B. Mysuru

C. Bengaluru

D. New Delhi 

  • Youth Affairs and Sports Minister Anurag Singh Thakur inaugurated 2nd Khelo Masters Games Delhi–2022 in New Delhi. In this game, over 3000 master players of the age group over 30 to 95 years, from 23 State and Union Territories are participating in eight categories of games. It concludes on May 3.

7. Which organisation has launched ‘Gluten–free’ Millet Products at AAHAR Food Fair?

A. NABARD

B. APEDA 

C. FICCI

D. NITI Aayog

  • Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) has launched a variety of millet products for all age groups at affordable prices, at the AAHAR food fair in New Delhi. As per the Commerce and Industry Ministry, all the millet products launched by APEDA are gluten–free, 100 percent natural and patented. The 36th edition of AAHAR was jointly organized by APEDA and the India Trade Promotion Organization.

8. ‘International Dark Sky Week’ is celebrated in which month?

A. April 

B. May

C. June

D. July

  • The International Dark Sky Week is an annual event hosted by the International Dark–Sky Association (IDA). This year, astronomers and sky enthusiasts marked the 2022 International Dark Sky Week from April 22–30. Hundreds of events were conducted across the globe where participants learn astrophotography, take night walks, and observe night sky without light pollution and learn how it negatively impacts our ecosystem.

9. India’s P V Sindhu won which medal/position in the Asian Championships 2022?

A. Gold

B. Silver

C. Bronze 

D. 4th Place

  • India’s ace shuttler P V Sindhu won her second Asian Championships bronze medal as she lost the women’s singles semifinal to Japan’s Akane Yamaguchi. She faced a three–game loss to top–seed and defending champion Akane Yamaguchi of Japan though Sindhu clinched the opening game 21–13. Lee Zii Jia defeated Jonatan Christie for title to win Men’s title while Wang Zhi Yi defeated Akane Yamaguchi in Women’s singles.

10. ‘Jivhala’ is a special loan scheme launched by which state government?

A. Andhra Pradesh

B. Maharashtra 

C. Punjab

D. Madhya Pradesh

  • The Maharashtra Department of Prisons has launched first kind of credit scheme for prisoners in jails across the state. The loan scheme titled Jivhala is offered by the Maharashtra State Cooperative Bank for inmates who are undergoing a prison sentence of more than three years.
  • The pilot was introduced at Yerawada Central Jail in Pune, and will be extended to nearly 60 prisons. Inmates can use the loans for education of their children, medical treatment of family members, legal fees, or other expenses.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!