Tnpsc

19th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. TRIFED, IIT கான்பூர் மற்றும் சத்தீஸ்கர் MFP கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் பெயர் என்ன?

அ. Incredible Tribals

ஆ. Tech for Tribals

இ. Tribal Thrust

ஈ. Tribal Leaders

  • பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பானது (TRIFED), சத்தீஸ்கர் MFP கூட்டமைப்பு & IIT கான்பூர் ஆகியவற்றுடன் இணைந்து, “பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் (MSME) ஒத்துழைப்புடன், ‘தொழில் முனைவு திறன்மேம்பாட்டுத்திட்டத்தின்’கீழ் தொடங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வான் தன் பயனாளிகளுக்கு ஆறு வாரங்கள் பயிற்சியளிக்கப்படுகிறது.

2. யாரின் வாழ்க்கை வரலாற்றை, ‘தே வெச்சவா கரணி’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி வெளியிட்டார்?

அ. Dr பாலாசாகேப் விகே பாட்டீல்

ஆ. அடல் பிகாரி வாஜ்பாயி

இ. L K அத்வானி

ஈ. ஷியாமா பிரசாத் முகர்ஜி

  • காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் Dr. பாலாசாகேப் விகே பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். ஒருவரின் வாழ்க்கையை ஓர் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணிப்பது எனப்பொருள்படும், ‘தே வெச்சவா கரணி’ என்ற பெயரில் இந்தத் தன்வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பாலாசாகேப், எழுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவராவார். சமூக பணித்துறையில் அவராற்றிய பங்களிப்புக்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க, ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.

3. எந்த இந்திய நிறுவனத்தின் நிறுவனர்கள், நடப்பாண்டு (2020) IIFL வெல்த் ஹுருன் இந்தியா 40 & தாமாக உருவான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்?

அ. சொமேட்டோ (Zomato)

ஆ. செரோதா (Zerodha)

இ. உதான்

ஈ. பிளிப்கார்ட்

  • பங்குச்சந்தை தரகு நிறுவனமான, ‘செரோதா’வின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத் ஆகியோர், நடப்பாண்டு (2020) IIFL வெல்த் ஹுருன் இந்தியா 40 & தாமாக உருவான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
  • அவர்கள், ‘True Beacon’ என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் நிர்வகித்து வருகின்றனர். அவ்விருவரின் மொத்த நிகர சொத்து மதிப்பு `24,000 கோடியாகும். இப்பட்டியலில், `1000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன்கூடிய 40 வயதுக்குட்பட்ட இந்திய தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

4. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் மற்றும் போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ. குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனம்

ஆ. இந்திய உரங்கள் கழகம்

இ. வேதாந்தா வேதி நிறுவனம்

ஈ. SPIC

  • குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வரும் இவ்விரு வேதிகளும், இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கால்சியம் நைட்ரேட் என்பது மிகவும் கரையக்கூடிய கூறாகும்; இது பரவலாக பாசனவழி உரமிடலில் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு & சிமெண்டின் வலிமையை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் ஆனது நீரில் கரையக்கூடிய ஓர் உரமாகும், இதில் உயர்தர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

5. தனது பதிமூன்றாவது பிரெஞ்சு ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ. நோவக் ஜோகோவிச்

ஆ. ரோஜர் பெடரர்

இ. ரபேல் நடால்

ஈ. டொமினிக் தியம்

  • பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியனானார். பிரெஞ்சு ஓப்பனில் இது அவரது 13ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாமில் இது அவரது இருபதாவது பட்டம். இதன்மூலம், இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டம்வென்ற சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை ரபேல் நடால் சமன்செய்துள்ளார். 2005ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து, மொத்தம் ஆடிய 102 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்த ரபேல், 100 பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வென்றுள்ளார். இளம் போலந்து வீராங்கனையான இகா ஸ்வெய்டெக், பிரெஞ்சு ஓப்பனில் வென்ற மிகக்குறைந்த தரவரிசையுடைய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

6. ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் எத்தனை புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

அ. 244

ஆ. 344

இ. 444

ஈ. 544

  • இந்திய விலங்கியல் ஆய்வுமையம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வுமையம் ஆகியவை, ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் 364 விலங்கினங்கள் மற்றும் 180 தாவர இனங்கள் உட்பட 544 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Cnemaspisanandani (பாறையில் வசிக்கும் மரப்பல்லி) மற்றும் Ginger Amomum nagamiense (நாகாலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காட்டு இஞ்சி வகை) ஆகியவை இந்தக் கண்டுபிடிப்புகளுள் இடம்பெற்ற சில முக்கியமான இனங்களாகும்.

7. யாரை கெளரவிக்கும் விதமாக, பிரதமர், `100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்டார்?

அ. விஜய ராஜே சிந்தியா

ஆ. திருப்பூர் குமரன்

இ. சியாமா பிரசாத் முகர்ஜி

ஈ. தீனதயாள் உபாத்யாய

  • விஜய ராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் மோடி `100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்டார். குவாலியரின் ‘ராஜமாதா’ என அழைக்கப்பட்ட அவர், 1919ஆம் ஆண்டில் பிறந்தார். விஜய ராஜே சிந்தியா தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்கினார்; பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் கட்சியான ஜன சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன்பு சுதந்திராக் கட்சியில் சேர்ந்தார்.

8. அனைத்து FCRA கணக்குகளையும் தொடங்குவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி எது?

அ. ஆக்சிஸ் வங்கி

ஆ. பாரத வங்கி

இ. ஐசிஐசிஐ வங்கி

ஈ. YES வங்கி

  • வெளிநாட்டு நன்கொடைகளைக்கோரும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 2021 மார்ச்.31ஆம் தேதிக்குள் பாரத வங்கியின் புதுதில்லி கிளையில் FCRA கணக்கைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021 ஏப்ரல்.1 முதல் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவியலாது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2020, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9. நடப்பாண்டில் (2020) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சட்டம் மற்றும் நீதி அமைச்சர்களின் ஏழாவது கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. பாகிஸ்தான்

ஈ. இரஷ்யா

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நீதித்துறை அமைச்சர்களின் ஏழாவது மாநாட்டை, மத்திய சட்ட அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தலைமைதாங்கி நடத்தினார். இதில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், இரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் நீதித்துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிபுணர்கள் பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தை சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர் நடத்தினார்.

10. ‘2020 காலநிலை சேவைகளின் நிலை’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. உணவு & வேளாண் அமைப்பு

ஆ. உலக வானிலை அமைப்பு

இ. UNICEF

ஈ. உலக உணவுத் திட்டம்

  • நடப்பாண்டு (2020) காலநிலை சேவைகள் அறிக்கையை உலக வானிலை அமைப்பு, 16 பன்னாட்டு முகவர் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வானிலை காரணமாக அதிக பேரிடர்கள் நடைபெறுவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பன்னாட்டளவில் மனிதநேய அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 50% உயரக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • நீலகிரி மாவட்டத்தில் பன்னெடுங்காலமாக வசித்துவரும் ‘படுகர்’ இன மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐநா மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1. What is the name of the initiative launched by TRIFED, IIT Kanpur and Chhattisgarh MFP Federation?

[A] Incredible Tribals

[B] Tech for Tribals

[C] Tribal Thrust

[D] Tribal Leaders

  • The Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED), Ministry of Tribal Affairs in association with Chhattisgarh MFP Federation and IIT Kanpur launched the ‘Tech for Tribals’ initiative. It has been launched under the ‘Entrepreneurship Skill Development Programme’ (ESDP), in collaboration with the Ministry of Small and Medium Enterprises (MSME). Van Dhan beneficiaries across all districts of Chhattisgarh State are being trained for 6 weeks.

2. Prime Minister Narendra Modi released the biography of which personality, titled ‘Deh Vechava Karani’?

[A] Dr Balasaheb Vikhe Patil

[B] Atal Bihari Vajpayee

[C] L K Advani

[D] Syama Prasad Mukherjee

  • Prime Minister Narendra Modi has recently released the biography of late Member of Parliament Dr Balasaheb Vikhe Patil. The autobiography is titled ‘Deh Vechava Karani’ which means dedicating one’s life for a noble cause. He served as the Member of Parliament for seven times. He was awarded the prestigious Padma Bhushan award in 2010 for his contribution in the field of Social Work.

3. The founders of which Indian company topped the IIFL Wealth Hurun India 40 & under Self–Made Rich List 2020?

[A] Zomato

[B] Zerodha

[C] Udaan

[D] Flipkart

  • The founders of stock brokerage company ‘Zerodha’, Nithin Kamath and Nikhil Kamath topped the IIFL Wealth Hurun India 40 & under Self–Made Rich List 2020.
  • They also manage the asset management company (AMC) True Beacon. The total net worth of the young businessmen stands at Rs 24,000 crores. The list ranks the self–made entrepreneurs with a wealth of INR 1,000 crore, aged below forty years and under from India.

4. Which company has launched the indigenous variety of Calcium Nitrate and Boronated Calcium Nitrate?

[A] Gujarat State Fertilizers and Chemicals Ltd

[B] Indian Fertilizers Corporation

[C] Vedanta Chemicals

[D] SPIC

  • The Gujarat State Fertilizers and Chemicals India Ltd (GSFC) has launched the indigenous variety of calcium nitrate and boronated calcium nitrate. These two chemicals are being manufactured for the first time in India and till now they were imported.
  • Calcium Nitrate is a very soluble component and is widely used in Fertigation. It is also used for wastewater treatment and to increase the strength of cement. Boronated Calcium Nitrate is a water–soluble fertilizer which contains high–quality macro and essential nutrients.

5. Which Tennis player won his thirteenth French Open Men’s Singles title?

[A] Top of Form

Novak Djokovic

[B] Roger Federer

[C] Rafael Nadal

[D] Dominic Thiem

  • Tennis player Rafael Nadal defeated Novak Djokovic to win his 13th French Open and 20th Grandslam title. Nadal also equalled Roger Federer’s all–time record of 20 Grand Slam titles. This is also the 100th match win at Roland Garros of Nadal against just two defeats since his 2005 debut. YoungPolish player Iga Swiatek became the lowest–ranked woman to win the French Open.

6. As per the recent report titled ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’, how many new species were discovered in 2019?

[A] 244

[B] 344

[C] 444

[D] 544

  • The Zoological Survey of India and the Botanical Survey of India released a report titled ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’. As per the report, 544 new species including 364 animal species and 180 plant species were discovered in the year 2019. Some of the important species include Cnemaspisanandani (a rock dwelling gecko) and Ginger Amomum nagamiense (a wild ginger variety discovered in Nagaland).

7. The Prime Minister released a commemorative coin of Rs 100 denomination, to honour which personality?

[A] Vijaya Raje Scindia

[B] Tiruppur Kumaran

[C] Syama Prasad Mukherjee

[D] Deendayal Upadhyaya

  • The Indian Prime Minister Narendra Modi released a commemorative Rs 100 coin as part of the end of birth centenary celebrations of Vijaya Raje Scindia. She was also called as the Rajamata of Gwalior and was born on the same day in the year 1919. Vijaya Raje Scindia started her political career from the Congress and later joined the Swatantrata Party before becoming a member of the BJP’s parent party, Jana Sangh.

8. Which bank has been designated by the Union Government for opening all FCRA accounts?

[A] Axis Bank

[B] State Bank of India

[C] ICICI Bank

[D] Yes Bank

  • The Ministry of Home Affairs (MHA) has directed all NGOs seeking foreign donations to open a designated FCRA account at the State Bank of India’s New Delhi branch by March 31, 2021. The NGOs registered under FCRA shall not receive any foreign donations in any other bank account from April 1, 2021. The Foreign Contribution (Regulation) Act, 2020 was amended by Parliament in September.

9. Which country is set to host the 7th Meeting of Ministers of Law & Justice of Shanghai Cooperation Organisation (SCO) in 2020?

[A] China

[B] India

[C] Pakistan

[D] Russia

  • Union Law Minister of India Ravi Shankar Prasad will host the seventh meeting of Ministers of Law and Justice of the Shanghai Cooperation Organisation (SCO).
  • The virtual meeting which is to be held on October 16 will be attended by Law and Justice Ministers of China, Pakistan, Russia, Tajikistan, Kazakhstan and Kyrgyz Republic. India will also host the second meeting of the Experts Working Group.

10. Which organisation has released the ‘2020 State of Climate Services’ report?

[A] Food & Agricultural Organisation

[B] World Meteorological Organisation

[C] UNICEF

[D] World Food Programme

  • The 2020 State of Climate Services report has been released by the World Meteorological Organisation (WMO) along with 16 international agencies and financing institutions. The WMO revealed that more disasters attributed to weather are taking place every year. It also warned that the number of people who need international humanitarian help could rise by 50 percent by 2030 when compared to 2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!