Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

19th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

19th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 19th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022ஆம் ஆண்டு GDPஇன் விகிதத்தில் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துச் செலவினம் எவ்வளவு?

அ. 9–10 %

ஆ. 13–14 %

இ. 15–16 %

ஈ. 19–20%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 13–14 %

  • பிரதமர் நரேந்திர மோடி தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்டார். இந்தக் கொள்கை நாடு முழுவதும் சரக்குகளின் தடையற்ற போக்குவரவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இது சரக்குப் போக்குவரவிற்கான செலவையும் கணிசமாகக் குறைக்கிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்தில் இந்தியாவின் சரக்குப் போக்குவரவு செலவு சுமார் 13–14 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2. எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குத் (SCO) தலைமை வகிக்கவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. உஸ்பெகிஸ்தான்

இ. பாகிஸ்தான்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இந்தியா

  • எட்டு உறுப்பினர்களைக்கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பதவியை சமர்கண்டில் வைத்து இந்தியாவிடம் உஸ்பெகிஸ்தான் ஒப்படைத்தது. இந்தத் தலைமைப் பதவியானது சுழற்சிமுறையில் SCO உறுப்பு நாடுகளுக்குத் தரப்படுகிறது. SCO அதன் ஆறு நிறுவன உறுப்பினர்களான சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உட்பட எட்டு முழுநேர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2017ஆம் ஆண்டில், முழுநேர உறுப்பினர்களாக SCOஇல் இணைந்தன.

3. தேசிய இராஜ்பாஷா கீர்த்தி விருதைப்பெற்ற ‘விஞ்ஞான் பிரகதி’, எந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் அறிவியல் இதழாகும்?

அ. ISRO

ஆ. BARC

இ. CSIR

ஈ. AIIMS

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. CSIR

  • ‘விஞ்ஞான் பிரகதி’ என்பது அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக்கழகத்தால் (CSIR) வெளியிடப்படும் ஒரு புகழ்மிகு அறிவியல் இதழாகும். உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித்துறை சார்பாக சூரத்தில் நடைபெற்ற இரண்டாவது அகில இந்திய இராஜ்பாஷா சம்மேளனத்தில் இவ்விதழ் தேசிய இராஜ்பாஷா கீர்த்தி விருதைப்பெற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எளிய மொழியில் மக்களுக்கு எடுத்துரைப்பதே, ‘விஞ்ஞான் பிரகதி’ இதழின் நோக்கமாகும்.

4. சீர்திருத்த தலைவர் ஈ வெ இராமசாமி (‘தந்தை’ பெரியார்) பிறந்தநாளை ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடுகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • சீர்திருத்த தலைவர் ஈ வெ இராமசாமி (‘தந்தை’ பெரியார்) அவர்களின் பிறந்தநாளை மாண்புமிகு தமிழ்நாடு அரசு ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடுகிறது. அன்றைய நாள், ஆண்டுதோறும், மாநிலச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்கள், ‘சகோதரத்துவம்’, ‘சமத்துவம்’, ‘சுயமரியாதை’, ‘பகுத்தறிவு’ போன்ற ‘தந்தை’ பெரியாரின் கொள்கைகளின் அடிப்படையில் விழுமியங்களைப்பின்பற்ற உறுதிமொழியெடுப்பார்கள்.

5. இந்தியாவில் கடற்கரை தூய்மை இயக்க நாள் பிரச்சாரத்தை வழிநடத்துகிற நிறுவனம் எது?

அ. NCC

ஆ. இந்திய கடலோரக் காவல்படை

இ. இந்திய கடற்படை

ஈ. NSS

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய கடலோரக் காவல்படை

  • பன்னாட்டு கடற்கரை தூய்மை நாளானது செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய கடலோரக் காவல்படையானது 2006ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு, பன்னாட்டு கடற்கரை தூய்மை நாள் மற்றும் ‘ஸ்வச் சாகர் அபியான்’ ஆகியவற்றின் ஒருபகுதியாக, இந்திய கடலோரக் காவல்படை நாடு முழுவதும் 75 இடங்களில் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தியுள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் முனைவுகள் அனைத்தும் நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்டமான, ‘ஸ்வச் சாகர்–சுரக்ஷித் சாகர்’ உடன் ஒத்துப்போகின்றன.

6. பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து, ‘கிரீன் சேனல்’ சான்றிதழைப் பெற்றுள்ள கப்பல் கட்டும் நிறுவனம் எது?

அ. கோவா கப்பல் கட்டும் தளம்

ஆ. கொச்சி கப்பல் கட்டும் தளம்

இ. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள்

ஈ. மசகன் டாக் கப்பல் கட்டுநர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள்

  • கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனமானது (GRSE), மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ‘கிரீன் சேனல்’ சான்றிதழைப் பெற்றுள்ளது. இது, முன்னணி பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். மேலும், மினி–ரத்னா வகை–1 கப்பல் கட்டும் தளமாகும் இது. இந்திய இராணுவத்திற்கு பல்வேறு கட்டமைப்புகளாக மாற்றக்கூடிய எஃகுப்பாலங்களை (பெய்லி வகை) வழங்கியதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

7. இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் மிகப்பெரிய கரிம இழை ஆலைகளுள் ஒன்றை குஜராத் மாநிலத்தின் ஹசிராவில் அமைக்கப்போவதாக அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ. TATA பவர்

ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இ. NTPC

ஈ. GAIL

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிகப்பெரிய கரிம இழை ஆலைகளுள் ஒன்றை குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசிராவில் கட்டவுள்ளதாக அறிவித்தார். இந்த ஆலை, அக்ரிலோனிட்ரைல் மூலப்பொருட்களின் அடிப்படையில் 20,000 MTPA திறன்கொண்டதாக இருக்கும்.
  • பாலியஸ்டர் மதிப்பு சங்கிலி, வினைல் சங்கிலி மற்றும் புதிய பொருட்கள் உள்ளிட்ட தற்போதைய மற்றும் புதிய மதிப்பு சங்கிலிகளில் திறனை விரிவுபடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் `75,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக அம்பானி அறிவித்தார்.

8. 2021ஆம் ஆண்டில் அதிக இணையவெளிக் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கர்நாடகா

இ. குஜராத்

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கர்நாடகா

  • தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டில் இணையவெளிக் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை 18.4% சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் பதிவான 52,974 சம்பவங்களில் 20.2 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளாக பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக 2,243 வழக்குகளுடன் கர்நாடகாவும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசமும் உள்ளன.

9. ‘GENESIS’ என்ற முனைவைத் தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது `750 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், புதுமையான தொடக்கங்களுக்கான (GENESIS) முனைவை 2022 ஜூலையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் 10,000 துளிர்நிறுவல்களை நடுவணரசு ஊக்குவிக்கும். ‘GENESIS’ என்பது இந்தியாவின் அடுக்கு–II மற்றும் அடுக்கு–III நகரங்களில் வெற்றிகரமான துளிர்நிறுவல்களை ஆதரிப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஒரு தேசிய அளவிலான தொழில்நுட்ப ரீதியான தொடக்கத் தளமாக விளங்கும்.

10. கைவினைப்பொருட்கள் கொள்கை–2022–க்கு ஒப்புதலளித்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஜம்மு–காஷ்மீர்

ஆ. இராஜஸ்தான்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தான் மாநில அமைச்சரவை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் கைவினைப் பொருட்கள் கொள்கை–2022–க்கு ஒப்புதலளித்தது. இராஜஸ்தான் கைவினைக்கொள்கை – 2022இன் நோக்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஆறு இலட்சம் கைவினைஞர்களுக்கு அதிகாரமளிப்பதாகும். இப்புதிய கொள்கையின்கீழ், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் தேசிய அளவிலான கைவினைப்பொருட்கள் வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு, கைவினைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய – கடலோரக் காவல்படையின் கூட்டுப்பயிற்சி “அபியாஸ்-01/22” சென்னையில் நடைபெற்றது.

இந்திய – கடலோரக் காவல் படையின் கூட்டுப்பயிற்சி “அபியாஸ்-01/22” சென்னையில் நடைபெற்றது. இருநாட்டு கடற்படையின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இப் பயிற்சி நடைபெற்றது. மேலும் கடலோர தேடுதல் மற்றும் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்தப்பயிற்சி நடத்தப்பட்டது. கடற்படையின் பல்வேறு உத்திகள், கடத்தப்பட்ட கப்பலில் இருக்கும் ஊழியர்களை மீட்பது, கொள்ளைச் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை தொடர்பாக இந்தப் பயிற்சி முக்கியமாக மேற்கொள்ளப்பட்டது.

4 நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் கடலோரக் காவல்படையின் கப்பல் கட்டர் மிட்கெட், நல்லெண்ண அடிப்படையில் சென்னை வந்தடைந்தது.

2. 200 ஆதிதிராவிட-பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்க `10 கோடி மானியம். தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழநாட்டில் 200 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் வாங்க `10 கோடி மானியம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மானியம் பெறுவதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்ட உத்தரவு:

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில், அவர்கள் வாங்கும் நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் `5 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, `10 கோடி மானியத்தில் 200 நிலமற்ற விவசாயத்தொழிலாளர்கள் பயன்பெறுவர் எனத்தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள், தாட்கோ நிர்வாக இயக்குநர் தரப்பிலிருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

என்னென்ன தகுதிகள்? ஆதிதிராவிட இனத்தைச்சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு மானியம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராகவும், விவசாயக்கூலி செய்பவராகவும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்கக்கூடாது.

ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெறத் தகுதிபடைத்தவர். ஒரு திட்டத்தின்கீழ் ஒருமுறை மானிய உதவி பெற்றால் பின்னரவர் தாட்கோ செயல்படுத்தும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியற்றவர் ஆவார். விண்ணப்பதாரர்கள் வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்யவேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ், நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

சார்பதிவாளர் அலுவலக இணையதளம் வாயிலாக அல்லது நேரில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு பெறப்படவேண்டும். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி, திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக `5 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

விண்ணப்பம் செய்த மகளிரின் பெயரில் அல்லது மகன்கள் அல்லது கணவர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலம் பதிவு செய்யப்படவேண்டும். மானியத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள், பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. வாங்கப்படும் நிலத்தை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. எனவே, நிலம் வாங்கியவுடன் தாட்கோ மாவட்ட மேலாளர்கள் சார்பதிவாளர்களிடம் தெரிவித்து நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாதபடி வில்லங்கம் ஏற்படுத்த வேண்டும்.

சென்னையில் பூஜ்ஜியம்: விண்ணப்பிக்கும் பயனாளிகளைத் தேர்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். மொத்தமாக ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 162 பயனாளிகளுக்கும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 38 பேருக்கும் மானியம் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் பத்துப் பயனாளிகளைத் தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பயனாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்.

3. கீழடி அகழாய்வு: தந்தத்தாலான மணி கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் தந்தத்தாலான பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது. கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூவிடங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 8ஆம் கட்ட அகழாய்வுப்பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண்ணாலான மனிதத்தலை உருவம், தந்தத்தாலான பகடை, காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன. தற்போது தந்தத்தாலான பெரிய மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 செமீ, மொத்த விட்டம் 4 செமீ ஆக உள்ளது. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செமீ இதன் மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு மென்மையாக காணப்பட்டது. இருமுனைகளும் தட்டையாக உள்ளன.

4. சென்னை ஓபன் பட்டம் வென்ற லிண்டா

சென்னை ஓபன் WTA 250 டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் செக் குடியரசைச் சேர்ந்த பதினேழு வயது வீராங்கனை லிண்டா ஃபுருவிர்டோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழ்நாடு அரசு, டிஎன்டிஏ, WTA இணைந்து நடத்திய இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 4-6, 6-3, 6-4 என வெற்றி பெற்றார் லிண்டா. லிண்டா ஃபுருவிர்டோவா வென்ற முதல் WTA சாம்பியன் பட்டம் சென்னை ஓபன் ஆகும். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு `26 இலட்சமும், 2ஆவது இடம் பெற்ற மகதா லினேட்டுக்கு `15.7 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா, தரவரிசையில் 74ஆவது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 100 வீராங்கனைகளில் குறைந்த வயது கொண்ட வீராங்கனை என்கிற பெருமையை லிண்டா அடைந்துள்ளார்.

19th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is India’s logistics cost as a proportion of GDP, as of 2022?

A. 9–10 %

B. 13–14 %

C. 15–16 %

D. 19–20 %

Answer & Explanation

Answer: B. 13–14 %

  • Prime Minister Narendra Modi launched the National Logistics Policy (NLP), which aims to promote seamless movement of goods across the country, by reducing logistics cost. It also aims to improve its competitiveness of Indian goods in domestic as well as global markets. India’s logistics cost as a proportion of the Gross Domestic Product (GDP) is estimated to be around 13–14 per cent.

2. Which country is the host of Shanghai Cooperation Organisation (SCO) in 2023?

A. India

B. Uzbekistan

C. Pakistan

D. China

Answer & Explanation

Answer: A. India

  • Uzbekistan handed over the rotating presidency of the eight–member Shanghai Cooperation Organisation (SCO) to India in Samarkand. The SCO has eight full members, including its six founding members, China, Kazakhstan, Kyrgyzstan, Russia, Tajikistan and Uzbekistan. India and Pakistan joined as full members in 2017.

3. Vigyan Pragati, which received the National Rajbhasha Kirti Award, is a science magazine released by which institution?

A. ISRO

B. BARC

C. CSIR

D. AIIMS

Answer & Explanation

Answer: C. CSIR

  • Vigyan Pragati is a popular science magazine released by Council of Scientific and Industrial Research (CSIR). The magazine has received the National Rajbhasha Kirti Award at the Second All India Rajbhasha Sammelan held at Surat from Department of Official Language, Ministry of Home Affairs. ‘Vigyan Pragati’ magazine aims at communicating Science and Technology to the masses in simple language.

4. Which state celebrates ‘Social Justice Day’ on the birthday of reformist leader E V Ramasamy (Periyar)?

A. Tamil Nadu

B. Kerala

C. Andhra Pradesh

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu government celebrates the birthday of reformist leader E V Ramasamy (Periyar) as ‘Social Justice Day’ in the state. On that day every year, employees in all government offices including the State Secretariat would take pledges to follow values based on the leader’s ideals which include, brotherhood, equality, self–respect and rationalism.

5. Which institution leads the Coastal Clean–up Day Campaign in India?

A. NCC

B. Indian Coast Guard

C. Indian Navy

D. NSS

Answer & Explanation

Answer: B. Indian Coast Guard

  • The International Coastal Clean–up Day (ICC) is observed worldwide on the third Saturday of September. The Indian Coast Guard (ICG) has led this campaign in India since 2006. This year, the Coast Guard cleaned beaches at 75 locations across the country as part of the International Coastal Clean–up Day and ‘Swachh Sagar Abhiyan’. ICG’s efforts align with the programme of the Ministry of Earth Sciences, ‘Swachh Sagar–Surakshit Sagar.’

6. Which ship building company has been conferred with the Green Channel Certification by Ministry of Defence?

A. Goa Shipyard

B. Cochin Shipyard

C. Garden Reach Shipbuilders and Engineers

D. Mazagon Dock Shipbuilders

Answer & Explanation

Answer: C. Garden Reach Shipbuilders and Engineers

  • Garden Reach Shipbuilders and Engineers Ltd (GRSE), has been conferred with the coveted Green Channel Certification by Ministry of Defence. It is one of the leading Public Sector Undertaking and Mini–Ratna Category 1 Shipyard. The certification was conferred for supply of Portable Steel Bridges (Bailey Type) of various configurations to Indian Army.

7. Which company has announced to build India’s first and one of the world’s largest Carbon Fibre plants at Hazira, Gujarat?

A. TATA Power

B. Reliance Industries

C. NTPC

D. GAIL

Answer & Explanation

Answer: B. Reliance Industries

  • Reliance Industries Chairman Mukesh Ambani announced to build India’s first and one of the world’s largest Carbon Fibre plants at Hazira, Gujarat. The plant will have a capacity of 20,000 MTPA based on Acrylonitrile feedstock. Ambani announced an investment of ₹75,000 crore over the next five years to expand capacities in existing and new value chains including Polyester value chain, Vinyl chain, and New Materials.

8. Which state/UT recorded the highest number of cybercrime incidents in 2021?

A. Maharashtra

B. Karnataka

C. Gujarat

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: B. Karnataka

  • As per the data released by the National Crime Records Bureau, the number of cybercrime incidents in 2021 has gone up by 18.4 per cent since 2019. The number of such cases against women has risen at 28 per cent. Out of the 52,974 incidents reported in 2021, 20.2 per cent were reported as cases of crime against women. Karnataka had the highest share with 2,243 cases, followed by Maharashtra and Uttar Pradesh.

9. Which Union Ministry launched the ‘GENESIS initiative’?

A. Ministry of Commerce and Industry

B. Ministry of Electronics and Information Technology

C. Ministry of MSME

D. Ministry of Education

Answer & Explanation

Answer: B. Ministry of Electronics and Information Technology

  • Ministry of Electronics and Information Technology (MeitY) launched the Gen–Next Support for Innovative Startups (GENESIS) initiative in July 2022, with an outlay of more than Rs 750 crore. Under the scheme, the central government will promote over 10,000 startups in the next five to six years. GENESIS is a National Deep–tech Startup Platform, to support and create successful startups in Tier–II and Tier–III cities of India.

10. Which state/UT approved the Handicrafts Policy–2022?

A. Jammu and Kashmir

B. Rajasthan

C. Himachal Pradesh

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Rajasthan

  • The State cabinet of Rajasthan approved the Handicrafts Policy–2022 under the chairmanship of Chief Minister Ashok Gehlot. The objective of Rajasthan Handicrafts Policy 2022 is to empower 6 lakh craftsman and artisans across the state. Under the new policy National–level Handicrafts Week will be organised every year in December and artisans will be felicitated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!