Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

1st, 2nd & 3rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st, 2nd & 3rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st, 2nd & 3rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற கார்பன் நிறைந்த, வைர வடிவிலான, பூமிக்கு அருகில் உள்ள சிறுகோளின் பெயர் என்ன?

அ) அப்பல்லோ

ஆ) ரியுகு (Ryugu) 

இ) ஈரோஸ்

ஈ) பென்னு

  • ‘1999 JU3’ என்றும் அழைக்கப்படுகிற ரியுகு, ஒரு கார்பன் நிறைந்த, வைர வடிவிலான, பூமிக்கு அருகில் உள்ள சிறு கோள் ஆகும். ரியுகுவிலிருந்து பூமிக்குத் திரும்பிய JAXA இன் ஹயபுசா-2ஆல் கொண்டு வரப்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, அந்தப் பொருள் மிகவும் கருமையாக இருப்பதைக் காட்டுகிறது. அது 2% ஒளியை மட்டுமே பிரதிபலிக்கிறது.

2. சிறுமிகளின் பாதுகாப்பிற்காக எந்த மாநிலம் / UT’இன் காவல்துறை ‘அபயா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது?

அ) பஞ்சாப்

ஆ) புது தில்லி 

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • தில்லி காவல்துறை ஆணையர் இராகேஷ் அஸ்தானா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தில்லி காவல் படை மற்றும் NGO ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘அபயா’ என்ற திட்டத்தை தொடங்கினார்.
  • தில்லி காவல்துறையும் தன்னார்வ தொண்டு நிறுவனமா -ன சக்தி அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற கனிமீடு எந்தக்கோளின் நிலவாகும்?

அ) சனி

ஆ) வியாழன் 

இ) வெள்ளி

ஈ) நெப்டியூன்

  • NASA சமீபத்தில் வியாழனின் நிலவான கனிமீடு அருகே சேகரிக்கப்பட்ட ஒலிகளை வெளியிட்டது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய நிலவு கனிமீடு ஆகும்.
  • கனிமீடு, சூரிய குடும்பத்தில் உள்ள பிற நிலவுகளைப் போலல்லாமல் தனக்கென சொந்த காந்தப்புலத்தையும் கொண்டுள்ளது. வியாழன் கோளின் சுற்றுப்புறத்தை கண்காணிக்க NASA ஜூனோ விண்கலத்தை ஏவியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூனோ கனிமீடுவின் மின்காந்த அலைகளை சேகரித்தது.

4. சமீபத்தில் திறக்கப்பட்ட T-சேது, எந்த மாநிலத்தின் மிக நீளமான பாலமாகும்?

அ) கர்நாடகா

ஆ) ஒடிஸா 

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் கட்டாக் மாவட்டத்தில் பாயும் மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அம்மாநிலத்தின் மிக நீளமான பாலமான T-சேது பாலத்தை திறந்து வைத்தார். 3.4 கிமீ நீளமுள்ள இப்பாலம், ஆங்கில எழுத்தான ‘T’ வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான மொத்த மதிப்பீடு `111 கோடி ஆகும்.

5. பங்கஜ் அத்வானி & துருவ் சித்வாலா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) டென்னிஸ்

இ) பூப்பந்து

ஈ) பில்லியர்ட்ஸ் 

  • இந்திய பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி இறுதி ஆட்டத்தில் துருவ் சித்வாலாவை வீழ்த்தி 11ஆவது தேசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார். பங்கஜ் அத்வானி ஸ்னூக்கர் போட்டியில் 23 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவராவார். IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷி -ப்பை 15 முறை வென்றுள்ளார்.
  • 2018ஆம் ஆண்டில், அவருக்கு இந்திய அரசாங்கத்தால் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. துருவ் சித்வால, 3 முறை உலக இறுதிப்போட்டியை எட்டியுள்ளார். மேலும் 2 முறை ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியனாகியுள்ளார்.

6. “டிராகன் விண்கலம்” சார்ந்த விண்வெளி நிறுவனம் எது?

அ) NASA

ஆ) வர்ஜின் அட்லாண்டிக்

இ) ஸ்பேஸ் X 

ஈ) புளூ ஆர்ஜின்

  • ஸ்பேஸ் X’இன் ‘டிராகன் விண்கலம்’ 2021 டிச.21 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு விநியோகம் செய்வதற்காக ஏவப்பட்டது. அது NASA’இன் சார்பாக சென்றது. புளோரிடாவில் உள்ள NASA’இன் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

7. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை கவச பொறியாளர் உளவு வாகனம், எந்த ஆயுதப்படையில் சேர்க்கப்பட்டது?

அ) இந்திய இராணுவம் 

ஆ) இந்திய கடற்படை

இ) இந்திய விமானப்படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை கவச பொறியாளர் உளவு வாகனத்தின் முதல் தொகுப்பு இந்திய இராணுவத்தின் பொறியாளர்கள் குழுமத்தில் சேர்க்கப்பட்டது. இந்த அமைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) வடிவமைக்கப்பட்டது.
  • மேலும், மேதக்கில் உள்ள ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிட், புனே ஆகியவற்றால் இது தயாரிக்கப்பட்டது.

8. காவல்துறையில் அனைத்து பதவிகளிலும் திருநங்கை -களுக்கு 1% இடஒதுக்கீட்டை அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா 

இ) ஒடிஸா

ஈ) மத்திய பிரதேசம்

  • கர்நாடகா மாநில அரசு தனது காவல்துறையில் உள்ள அனைத்து பதவிகளிலும் திருநங்கைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை திருநங்கைகளை அரசிற்குள் கொண்டு வரவும், சமூகத்தில் அவர்களுக்கு எதிரான கருத்துகளை அகற்றவும் உதவும். இது தொடர்பான ஆட்சேர்ப்பு செயல்முறையையும் அந்தத் துறை அறிவித்துள்ளது.

9. அண்மையில், “Inmarsat-6 F1” செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான் 

இ) இஸ்ரேல்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ஜப்பான் சமீபத்தில் H-2A ஏவுகலத்தின்மூலம் ‘Inmarsat-6 F1’ என்ற நவீன வணிகத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை ஏவியது. 5,470 கிலோகிராம் எடை கொண்ட இச்செயற்கைக்கோள், இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய மற்றும் அதிநவீன வணிக தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுள் ஒன்றாகும்.

10. நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி, அண்மையில் எந்த இடத்தில், அறிவார்ந்த போக்குவரத்து (Intelligent Transport) அமைப்பைத் தொடங்கி வைத்தார்?

அ) தில்லி விரைவுச்சாலை 

ஆ) அகமதாபாத் விரைவுச்சாலை

இ) பெங்களூரு விரைவுச்சாலை

ஈ) லக்னோ விரைவுச்சாலை

  • நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தில்லியில் உள்ள கிழக்கு புற விரைவுச் சாலையில் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பைத் தொடங்கி வைத்தார். இது போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளை குறைத்து பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதிநவீன போக்குவரத்து உட்கட்டமைப்பைக் கொண்ட இவ்வமைப்பு, ஓட்டுநரின் வசதியை மேம்படுத்தவும், ஏதேனும் விபத்தைக் கண்டறியவும், அவசர ஊர்தி அந்த இடத்திற்குச் சென்றடைவதை உறுதிசெய்யவும் எச்சரிக்கைகளை அனுப்பும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி ஜன.12-ல் மதுரை வருகை

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக சார்பில் ஜனவரி 12-ம் தேதி ‘மோடி பொங்கல்’ விழா மதுரையில்நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா,மாநிலச் செயலாளர் உமாரதி, மகளிரணி மாநிலத் தலைவர் மீனாட்சி, எஸ்.சி. அணி மாநிலத் தலைவர் பொன்.பாலகணபதி,தேசிய பொதுக்குழு உறுப்பினர் நீலமுரளி யாதவ், மாவட்டத் தலைவர்கள் மகா சுசீந்திரன், டாக்டர் சரவணன், மேப்பல் சக்திவேல், பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டப் பார்வையாளர் நாகேந்திரன், மகளிரணி மாநிலச் செயலாளர் கவிதாகாந்த் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர 6 பேர் கொண்ட வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம்தமிழகத்துக்கு கூடுதலாக 1,450இடங்கள் கிடைக்கவுள்ளன.

ஜனவரி 12-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர்நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மதுரை பொங்கல் விழாவில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்துமோடி பங்கேற்க இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கும் மோடி, தமிழில் சில நிமிடங்கள் பேச இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி14-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபங்கேற்றார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியையும் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

2. திருச்செந்தூர் உள்ளிட்ட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

“முதல்வர் ஸ்டாலின் இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 கோயில்களில் மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் என 7 கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3. கட்டுமான பணி தரத்தை உறுதி செய்ய சென்னை ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திண்டுக்கல் ஆகிய நிறுவனங்களுடன் வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தை உறுதி செய்ய வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான சென்னை ஐஐடி, தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு பொறியியல் நிறுவனங்களை மூன்றாம் தரக்கட்டுப்பாடு குழுவாக நியமனம் செய்திட வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாடு முகமையாக, சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவான நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திண்டுக்கல் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாண்டியன், கியூப் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பத்மநாபன் மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திண்டுக்கல் உதவி பேராசியர் திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4. 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: 53 நாடுகளின் 100 படங்கள் திரையிடப்படுகின்றன

சென்னையில் 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வரும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் 53 உலக நாடுகளிலிருந்து வெளியான 100 படங்கள் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இவற்றில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட ஈரான் நாட்டின் ‘ஹீரோ’ (A Hero), ஆஸ்திரேலியாவின் ‘வென் பொமேகிரேனட்ஸ் ஹவுல்’ (When Pomegranates Howl), இந்தோனேசியாவின் ‘யுனி’ (Yuni), தென் கொரியாவின் ‘டேக்ஸி டிரைவர்’ உள்ளிட்ட படங்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.

திரையிடப்படும் இந்தியப் படங்களில், தமிழ்ப் படங்கள்: உடன்பிறப்பே, கர்ணன், தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க.

மலையாளப் படங்கள்: காக்கத்துருத்து, நாயாட்டு, நிறைய தத்தகளுள்ள மரம், சன்னி.

பிறமொழி இந்தியப் படங்கள்: 21-ஸ்ட் டிஃபன் – குஜராத்தி, டொல்லு – கன்னடம், ஃபனரல் – மராத்தி, கல்கொக்கோ – பெங்காலி, நாட்யம் – தெலுங்கு, நிவாஸ் – மராத்தி, கிலியு பஞ்சரதொலில்லா – கன்னடம், செம்கோர் – திமாசா, அன்ஹெர்ட் – தெலுங்கு, வர்துல் – மராத்தி.

சென்னை பிவிஆர் மல்டிபிளெக்ஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ் திரையரங்குகளில் இவை திரையிடப்படுகின்றன. இவ்வாறு இ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

5. 2021இல் மருத்துவம்: தொடரும் கரோனாவும் துளிர்க்கும் நம்பிக்கையும்

கரோனா இரண்டாம் அலை

தேர்தல் பரப்புரைகள், லட்சக்கணக்கில் மக்கள் கூடிய மத நிகழ்வுகள், அரசின் மெத்தனம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்களின் ஒழுங்கின்மை, தடுப்பூசி வதந்திகள் போன்றவை கரோனா இரண்டாம் அலைக்கு வித்திட்டன. மருத்துவ மனையில் இடம் கிடைப்பது சிக்கலானது. இடம் கிடைத்தாலும் ஆக்சிஜன் படுக்கைக்கு வழியில்லை. உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. இடுகாட்டில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்திருந்தன. புனித ஆறான கங்கையில் சடலங்கள் பெருமளவில் வீசப்படன. வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் அவை.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை

இரண்டாம் அலையின் உச்சத்தில், ‘இன்னும் சில மணி நேரத்திற்குத் தேவை யான ஆக்சிஜன் இருப்பு மட்டுமே எங்க ளிடம் இருக்கிறது. நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து’ என்று டெல்லியிலிருக்கும் ஒரு மருத்துவமனை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவு நாட்டை உலுக்கியது. விரைவில், அந்த நிலை நாடெங்கும் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் ஏற்பட்டது. நீதிமன்றங்கள் தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருந்தது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய தமிழக அரசு, பின்னர் இந்தப் பிரச்சினையைத் திறம்படக் கையாண்டது.

பூஞ்சை நோய்கள்

கரோனா இரண்டாம் அலையின் முடிவில், கறுப்புப் பூஞ்சை நோய்த் தொற்று (மியூகோமைகோசிஸ்) அதிகரிக்கத் தொடங்கி பேசுபொருளானது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000க்கு மேல் சென்றது. சில வட மாநிலங்களில் ‘கறுப்புப் பூஞ்சை’யைப் போலவே ‘வெள்ளைப் பூஞ்சை’ (Candidiasis) நோயும் பரவத் தொடங்கியது. மத்தியப் பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்குப் பச்சை பூஞ்சை நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. கரோனாவைவிட ஆபத்தான இந்த நோய்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே ஓர் ஆறுதல்.

நீடிக்கும் கோவிட்

பொதுவாக, நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு விட்டனர். நோய்த் தொற்றின் கடுமையான கட்டத்துக்குப் பிறகும் சிலருக்கு மட்டும் கரோனா பாதிப்புகள் தொடர்ந்தன. இது ‘நீடிக்கும் கோவிட்’ என அழைக்கப்பட்டது. கரோனாவின் தீவிர பாதிப்பிலி ருந்து மீண்ட பலரும், இதன் பாதிப்புக்கு ஆளாகினர். ‘நீடிக்கும் கோவிட்’டை மருத்துவ உலகம் கூடுதல் கவனத்துடன் கையாண்டது. தமிழக அரசும் சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் ‘கோவிட்டுக்குப் பிந்தைய சிகிச்சை மைய’த்தை நிறுவியது.

இந்தியாவில் தடுப்பூசி

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16இல் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்துப் பரவிய சந்தேகங்களும் வதந்திகளும் தடுப்பூசித் திட்டத்துக்குப் பெரும் சவாலாக இருந்தன. இருப்பினும் கரோனா உயிரிழப்புகளால் மக்களிடையே ஏற்பட்ட அச்சம், அரசின் முன்னெடுப்புகள் போன்றவை தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் வகையில் நிலைமையை மாற்றியமைத்தன. தற்போது இந்தியாவில் 84 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 60 கோடி பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு மாத்திரைகள்

கரோனாவுக்கான சிகிச்சையில் புதிதாக இரண்டு மாத்திரைகள் வெளியாகியுள்ளன. அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட ‘மோல்னுபிரவிர்’ (Molnupiravir). மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இரண்டாவது, பைசர் நிறுவனம் தயாரித்த ‘பேக்ஸ்லோவிட்’ (Paxlovid). இவை கரோனா தொற்றை ஆரம்பநிலையிலேயே தடுத்து, தொற்றாளருக்கு இறப்பு ஏற்படுவதைப் பெருமளவு தவிர்த்துவிடும் ஆற்றல் கொண்டவை.

ஒமைக்ரான் கரோனா

இந்தியாவில் கண்டறியப்பட்ட, இரண்டாம் அலைக் குக் காரணமான டெல்டா அல்லது பி.1.617.2 வேற்றுரு வில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக உருவான புதிய டெல்டா பிளஸ் வேற்றுரு கண்டறியப்பட்டது. இதனால் அக்டோபரில் மூன்றாம் அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் வேற்றுருவின் பரவல் இந்தியாவில் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், நவம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ (Omicron) எனும் புதிய கரோனா வேற்றுருவம் (Variant) மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவ நோபல் 2021

வெப்பநிலை, தொடுதல் ஆகியவற்றினால் உடலில் நடக்கும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் உணரிகளைக் கண்டறிந்த தற்காக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆர்டெம் பாட்டபூட்டியான், டேவிட் ஜுலியஸ் ஆகிய இருவரும் இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். வெப்பம், குளிர், இயந்திர சக்தி போன்றவை, நம் உடலின் நரம்பு மண்டலத்தில் உணர்ச்சித் தூண்டலை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பது குறித்த இவர்களின் ஆராய்ச்சி, வலி நிவாரணி மருந்துகள் உருவாக்கத்தில் புதிய பாதையைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்சுலின், பி.சி.ஜி. தடுப்பூசிக்கு 100 வயது

நீரிழிவு நோயை எதிர்கொள் வதில் இன்சுலினின் பங்களிப்பு அளப்பரியது. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின்தான் ஒரே மருந்து. ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொண்டவர்கள் 90 வயது வரை வாழ்ந்துள்ளனர். பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை மட்டுமல்லாமல் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும். நெஞ்சகக் காசநோயைத் தடுப்பதைவிட மூளைக் காசநோய் போன்ற மோசமான காசநோய் வகைகளைப் பெரிதும் தடுக்கும். இது ஏற்கெனவே செலுத்தப்பட்ட நாடுகளில் கரோனா சார்ந்த இறப்பும் குறைவாக உள்ளது.

நோரோ, ஜிகா, பறவைக் காய்ச்சல்

2021இன் தொடக்கத்தில், வட இந்திய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பறவைக் காய்ச்சல் திடீரென வீரியத்துடன் பரவியது. பெரும் எண்ணிக்கையிலான பண்ணைக் கோழிகள் கொல்லப்பட்டன. ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஜிகா வைரஸால், கேரளத்தில் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். வயநாடு மாவட்டத்தில் பூக்கோடு கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்குத் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த வைரஸ்களும் பரவியது அச்சத்தை அதிகரித்தது.

6. வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவு: தமிழகத்தில் இயல்பைவிட 59 சதவீதம் மழை அதிகம்

வடகிழக்குப் பருவமழை காலம் வெள்ளிக்கிழமையுடன் (டிச.31) நிறைவடைந்துள்ளநிலையில், தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரத்தில் இயல்பை விட 119 சதவீதமும், திருப்பத்தூரில் 115 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை:

தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் முதல் டிசம்பா் வரையும் நீடிக்கும்.

நிகழாண்டில் (2021) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், தமிழக கடலோரத்தில் நிலைகொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் ஆகியவை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் கொட்டித்தீா்த்தது. குறிப்பாக, நவம்பா் மாதத்தில், பல மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்தது. இதன்பிறகு, டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து மழை குறையத்தொடங்கியது. டிசம்பா் மாத இறுதியில் சில மாவட்டங்களில் மழை பெய்துவந்தது. அதிலும், , சென்னையில் பல இடங்களில் டிசம்பா் 30-ஆம் தேதி பலத்தமழை பெய்தது. தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் மிதமானதுமுதல் பலத்தமழை மழை பெய்கிறது.

பருவமழை காலம் நிறைவு:

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை காலம் வெள்ளிக்கிழமையுடன்(டிச.31) நிறைவுபெற்றது. இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 59 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 448.0 மி.மீ. தற்போது வரை 711.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக அதிகமழை:

அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூா், கடலூா், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், நாமக்கல், பெரம்பலூா், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூா், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மிக அதிக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, விழுப்பரத்தில் இயல்பைவிட 119 சதவீதமும், திருப்பத்தூரில் 115 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 106 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

அதிகமழை:

தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூா், சிவகங்கை, திருப்பூா், திருவாரூா், தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட அதி மழை பெய்துள்ளது.

இயல்பு மழை:

மதுரை, ராமநாதபுரத்தில் இயல்பான மழையே பதிவாகியுள்ளது.

47 சதவீதம் அதிகம்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மொத்த மழை அளவு பொருத்தவரை சராசரியாக 922 மி.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால், 1,214 மி.மீ. மழை பதிவாகியது. இது, 32 சதவீதம் அதிகம்.

2021-ஆம் ஆண்டில் மொத்த (ஆண்டு) மழை அளவு பொருத்தவரை, இயல்பை விட 47 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது. ஆண்டின் இயல்பான மழை அளவு 922 மி.மீ. ஆனால், 1,379 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஆகவே, 2015-ஆம் ஆண்டை காட்டிலும் 2021-இல் அதிக மழை கிடைத்துள்ளது என்றாா் அவா்.

சென்னையில்… :

வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் வழக்கமான மழை அளவு 784 மி.மீ. தற்போதுவரை 1,360 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 74 சதவீதம் அதிகம். இருப்பினும் 2015 -ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையுடன் ஒப்பிடும்போது, இந்த மழை அளவு குறைவாகும்.

7. ‘உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரிப்பு’

கடந்த 2021-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தின்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக இருக்கும். இது, 2012-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தைவிட 0.9 சதவீதம் அதிகமாகும். அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளது.

இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 விநாடிக்கு 43 குழந்தைகள் பிறக்கும்; 20 போ் இறப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் சுமாா் 7.07 லட்சம் போ் அதிகரித்து, 2022-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டின் மக்கள் தொகை 33.24 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம் மீட்பு: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தஞ்சாவூா் அருளானந்த நகா் 7ஆவது குறுக்குத் தெருவில் என்.ஏ.சாமியப்பன் என்பவா் வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் இரா.ராஜாராம், ப.அசோக் நடராஜன் தலைமையில் அப்பிரிவு போலீஸாா் அந்த வீட்டில் திடீா் சோதனை செய்தனா். அப்போது அங்கு எந்த சிலைகளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து அங்கிருந்த சாமியப்பனின் மகன் அருண் பாஸ்கா் என்பவரிடம் விசாரணை செய்தனா்.

ரூ.500 கோடி மதிப்பு:

விசாரணையில், தனது தந்தை சாமியப்பனிடம் தொன்மையான பச்சை மரகதலிங்கம் ஒன்று இருப்பதாகவும், அது தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து அருண் பாஸ்கா் உதவியுடன் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அந்த பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் மீட்டனா்.

அந்த சிலை, சாமியப்பனிடம் எப்படி கிடைத்தது என அருண் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அது தொடா்பாக எந்தவித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து மீட்கப்பட்ட மரகத லிங்கத்தின் மதிப்பு குறித்து அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளா்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினா் கொடுத்து ஆய்வு செய்தனா். அப்போது அந்த சிலையின் சா்வதேச மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என மதிப்பீட்டாளா்கள் தெரிவித்தனா்.

தருமபுரம் ஆதீன மடம்:

இந்த பச்சை மரகத லிங்கம் மீட்பு தொடா்பாக சென்னையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

மீட்கப்பட்ட பச்சை மரகதலிங்கம் சிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அந்த சிலை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான தியாகராஜா் கோயிலில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 9-ஆம் தேதி திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளா் சௌரிராஜன், அப்போது திருக்குவளை காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துப்பு துலங்காமல் இருந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருந்த இந்த வழக்கில், இப்போது துப்பு துலங்கப்பட்டு, சிலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன், தற்போது மருத்துவமனையில் இருக்கிறாா். அவா் குணம் அடைந்தவுடன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்படும். அவரிடம் விசாரணை நடத்திய பின்னா், சிலை திருட்டு குறித்த முழு விவரமும் காவல்துறைக்கு கிடைக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது அவருடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பொன்னி உடன் இருந்தாா். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ஏடிஜிபி ஜெய்ந்த் முரளி, வெகுமதி அளித்தாா்.

இந்த வழக்குத் தொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய முதல் கட்ட விசாரணையில், பச்சை மரகதலிங்கம் சோழா் காலத்தில் கம்போடியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தருமபுரம் ஆதீன மடத்துக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் சோழ மன்னா்கள், போரில் தங்களுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாக அந்த மடத்துக்கு வழங்கியிருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

9. யு-19 ஆசிய கோப்பையை தக்கவைத்தது இந்தியா: 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் ஜனவரி 14-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தப் பட்டம் இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

50 ஓவா்கள் கொண்ட இந்த ஆசிய போட்டியில், இறுதி ஆட்டத்தின்போது கனமழை பெய்ததை அடுத்து முதலில் ஆடிய இலங்கைக்கான ஓவா்கள் 38-ஆக குறைக்கப்பட்டது. அதில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் அடித்தது. பின்னா் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இந்திய அணிக்கு 32 ஓவா்களில் 102 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. இந்தியா 21.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் தொடக்க வீரா் சமிந்து விக்கிரமசிங்கே 2 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷெவோன் டேனியல் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 3-ஆவது வீரராக வந்த அஞ்சலா பண்டாரா 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்க்க, மிடில் ஆா்டரில் சதீஷா ராஜபட்ச 1 பவுண்டரியுடன் 14, பவன் பதிராஜா 4, ரனுதா சோமரத்னே 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இவ்வாறாக இலங்கை 33 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் சுமாா் 2 மணி நேரங்களுக்கு தடைப்பட்டது.

பின்னா் ஆட்டம் தொடங்கியபோது அந்த அணிக்கான ஓவா்கள் 38-ஆக குறைக்கப்பட்டது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் கேப்டன் துனித் வெலாலகே 1 பவுண்டரியுடன் 9, ரவீன் டி சில்வா 1 பவுண்டரியுடன் 15, மதீஷா பதிரானா 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு வீழ்ந்தனா். இறுதியில் யாசிரு ரோட்ரிகோ 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய பௌலிங்கில் விக்கி ஆஸ்த்வல் 3, கௌஷல் தாம்பே 2, ராஜ்வா்தன், ரவிகுமாா், ராஜ் பாவா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 102 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரா்களில் ஒருவரான ஹா்னூா் சிங் 5 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7 பவுண்டரிகளுடன் 56, ஷேக் ரஷீது 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இலங்கை தரப்பில் யாசிரு ரோட்ரிகோ 1 விக்கெட் எடுத்திருந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

இலங்கை – 106/9

யாசிரு ரோட்ரிகோ 19*

ரவீன் டி சில்வா 15

மதிஷா பதிரானா 14

பந்துவீச்சு

விக்கி ஆஸ்த்வல் 3/11

கௌஷல் தாம்பே 2/23

ரவி குமாா் 1/17

இந்தியா- 104/1 (இலக்கு 102)

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 56*

ஷேக் ரஷீது 31*

ஹா்னூா் சிங் 5

பந்துவீச்சு

யாசிரு ரோட்ரிகோ 1/12

டிரெவீன் மேத்யூ 0/2

சமிந்து விக்ரமசிங்கே 0/14

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா…

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது. இத்துடன் 9 முறை நடைபெற்றுள்ள இப்போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் சாம்பியன் ஆன 2017-இல் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் மோதிய இறுதி ஆட்டம் டை ஆனதை அடுத்து, கோப்பை இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டது.

ஆண்டு இடம் சாம்பியன் ரன்னா்-அப்

1989 வங்கதேசம் இந்தியா இலங்கை

2003 பாகிஸ்தான் இந்தியா இலங்கை

2012 மலேசியா இந்தியா – பாகிஸ்தான்

2013/14 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா பாகிஸ்தான்

2016 இலங்கை இந்தியா இலங்கை

2017 மலேசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

2018 வங்கதேசம் இந்தியா இலங்கை

2019 இலங்கை இந்தியா வங்கதேசம்

2021 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இலங்கை

10. உலக பிளிட்ஸ் செஸ்: கோனெரு ஹம்பிக்கு 5-ஆம் இடம்

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி 5-ஆம் இடமும், ஆா். வைஷாலி, 14-ஆவது இடமும் பிடித்து போட்டியை நிறைவு செய்தனா்.

போலந்தின் வாா்சா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் விளையாடப்பட்ட 17 சுற்றுகளின் முடிவில் ஹம்பி 11.5 புள்ளிகளும், வைஷாலி 10.5 புள்ளிகளும் பெற்றனா். மொத்த சுற்றுகளில் ஹம்பி 10 வெற்றிகள், 3 டிராக்கள், 4 தோல்விகளை பதிவு செய்துள்ளாா். வைஷாலி 10 வெற்றிகள், ஒரு டிரா, 6 தோல்விகளை பதிவு செய்திருக்கிறாா்.

இதர இந்திய வீராங்கனைகளில் வந்திகா அகா்வால் 9.5 புள்ளிகளுடன் 30-ஆவது இடமும், பத்மினி ரௌத் 8.5 புள்ளிகளுடன் 55-ஆவது இடமும் பிடித்தனா்.

ஓபன் பிரிவு: பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பின் ஓபன் பிரிவில் மொத்தம் நடைபெற்ற 21 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் விதித் குஜராத்தி 13 புள்ளிகள் பெற்று 18-ஆவது இடத்துடன் நிறைவு செய்தாா். 10 சுற்றுகளில் வெற்றி பெற்ற அவா், 6 சுற்றுகளை டிரா செய்து, 5 சுற்றுகளில் தோல்வி கண்டாா்.

மற்றொரு இந்தியரான நிஹல் சரினும் 13 புள்ளிகள் பெற்று 19-ஆவது இடம் பிடித்தாா். அவா் 9 சுற்றுகளில் வென்று, 8 சுற்றுகளை டிரா செய்து, 4 சுற்றுகளில் தோல்வியை சந்தித்தாா். இதர இந்தியா்களில் அா்ஜூன் எரிகாய்சி, குகேஷ் ஆகியோா் தலா 12.5 புள்ளிகளுடன் முறையே 24 மற்றும் 32-ஆம் இடம் பிடித்தனா். ஹா்ஷா பாரதகோடி 11 புள்ளிகளுடன் 68-ஆவது இடம் பிடித்தாா்.

ஹரிகிருஷ்ணா, ரௌனக் சத்வானி, மித்ரபா குஹா ஆகியோா் தலா 10.5 புள்ளிகளுடன் முறையே 84, 86, 89-ஆவது இடங்களை எட்டினா். சுனில்தத் நாராயணன் 10 புள்ளிகளுடன் 112-ஆவது இடம் பிடிக்க, அபிமன்யு புரானிக், ஆதித்யா மிட்டல் ஆகியோா் தலா 9 புள்ளிகளுடன் முறையே 131 மற்றும் 141-ஆவது இடங்களைப் பிடித்தனா். சங்கல்ப் குப்தா 8.5 புள்ளிகளுடன் 150-ஆவது இடம் பிடித்தாா்.

சாம்பியன்கள்: மகளிா் பிரிவில் கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா 14 புள்ளிகளுடன் சாம்பியன் ஆக, ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் 12.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அதே நாட்டைச் சோ்ந்த வாலென்டினா குனினா 12 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

ஓபன் பிரிவில் பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் 15 புள்ளிகளுடன் சாம்பியன் ஆக, போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் டுடா, பிரான்ஸின் அலிரிஸா ஃபிரௌஸ்ஜா ஆகியோரும் அதே புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

11. 2021-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1.67% சரிவு

2021-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1.67 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் விலை உயா்வு, அமெரிக்க கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயா்த்தப்படும் என்ற எதிா்பாா்ப்பு போன்ற நிகழ்வுகள் கடந்த ஆண்டில் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணங்களாக பாா்க்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் அதாவது 1.67 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் 2021-ஆம் ஆண்டின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயா்ந்து 74.29-இல் நிலைபெற்றது. வார அடிப்படையில் ரூபாய் மதிப்பு 74 காசுகள் ஆதாயத்தை ஈட்டியுள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

12. விவசாயிகள் உதவித் தொகை திட்டம்: தமிழ்நாட்டுக்கு ரூ. 738 கோடி

இந்தியாவின் முன்னேற்றத்தை கரோனா நோய்த்தொற்றால் தடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 உதவித்தொகையை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாவது தவணையாக 10.09 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20,946 கோடி உதவித்தொகையை விடுவிக்கும் நிகழ்ச்சி காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு விவசாயிகள் உதவித்தொகை, 1.24 லட்சம் விவசாயிகள் பலனடையும் வகையில் சுமாா் 351 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் அதிகமான மானியம் ஆகியவற்றை விடுவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டின் முதல் உரையாக பிரதமா் மோடி பேசியதாவது:

விவசாயிகள் உதவித்தொகை திட்டம் உழவா்களுக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக உள்ளது. இந்த உதவித்தொகைத் தவணைகளை, எந்தவொரு இடைத்தரகரின் இடையூறும் இல்லாமல் உரிய நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தரமான விதைகளையும் உரங்களையும் வாங்க விவசாயிகளுக்கு உதவுகிறது.

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் கூட்டு வலிமையின் சக்தியை சிறு விவசாயிகள் உணா்கின்றனா். அந்த அமைப்புகள் மூலம் பேரம் பேசும் திறன், வேளாண் விளைபொருள்கள் அளவு, புதிய கண்டுபிடிப்புகள், இடா்ப்பாடுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது, சந்தை நிலைமைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. அந்த அமைப்புகள் மூலம் இடுபொருள்களை மொத்தமாக வாங்கவும், தங்கள் விளைபொருளை சில்லறை விற்பனை செய்யவும் விவசாயிகளால் முடிகிறது.

தற்போது ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ போன்ற திட்டங்களால் விவசாயிகளால் பலனடைய முடிகிறது. அவா்களுக்கு தேசிய மற்றும் உலக அளவிலான சந்தைகளின் கதவுகள் திறக்கின்றன.

நுண்ணீா் பாசனத்தின் கீழ் 60 லட்சம் ஹெக்டோ் நிலம்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பைத் தாண்டியும் உணவு தானிய உற்பத்தி 30 கோடியை எட்டியுள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமாா் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் சாதனை அளவை எட்டியுள்ளது. சுமாா் 60 லட்சம் ஹெக்டோ் விளைநிலம் நுண்ணீா் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தவணைக் கட்டணமாக (ப்ரீமியம்) ரூ.21,000 கோடி மட்டுமே கிடைத்தபோதிலும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பால் பண்ணைத் துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த காமதேனு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தில் மிகப் பெரிய அளவில் உழவா்கள் ஈடுபட வேண்டும். ரசாயனம் இல்லாத விவசாயம்தான் மண் வளத்தைக் காப்பதற்கு பிரதான வழி. ரசாயனம் இல்லாத விளைபொருள்களுக்கும் மிகப் பெரிய தேவை நிலவுகிறது.

விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் பணியில் உழவா்கள் தொடா்ந்து ஈடுபட வேண்டும்.

2021-ஆம் ஆண்டு நினைவுகூரப்படும்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியா வலுவுடன் போராடியதற்காகவும், பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்காகவும் 2021-ஆம் ஆண்டு நினைவுகூரப்படும். அந்த ஆண்டில் பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்களின் வேகத்தை இந்திய அதிகமாக்கியதுடன் நவீன உள்கட்டமைப்பையும் உருவாக்கியது.

2021-ஆம் ஆண்டு இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை வலுப்படுத்தும் ஆண்டாகவும் இருந்தது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம், காசி விஸ்வநாதா் கோயிலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்தியாவின் கலாசாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெண்களின் சட்டபூா்வ திருமண வயதை 21-ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயிற்சி பெறுவதற்கு பெண்களுக்கு கதவு திறக்கப்பட்டது.

இந்தியாவில் 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 10,000 நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் தொடங்கப்பட்டவை.

புத்தாண்டில் இந்தியா காலடி எடுத்துவைக்கும் தருணத்தில், கடந்த காலங்களில் செய்த சாதனைகளை தூண்டுகோலாக எடுத்துகொண்டு புதிய பயணத்தை நாடு தொடங்க வேண்டியது அவசியம்.

‘அனைவருடனான, அனைவருக்குமான வளா்ச்சி, அனைவரின் முயற்சி’ என்ற மந்திரத்துடன் நாடு முன்னோக்கிச் செல்கிறது.

சரியான தருணம்: இந்த ஆண்டுடன் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. நாட்டின் தீா்மானங்களை நிறைவேற்ற துடிப்பான புதிய பயணத்தைத் தொடங்கவும், புத்துயிா் பெற்ற வீா்யத்துடன் முன்னோக்கிச் செல்லவும் இது சரியான தருணமாகும்.

பல்வேறு அம்சங்களில் கரோனா பரவலுக்கு முந்தைய நாள்களைவிட தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மேலானதாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் இந்தியா சாதனை அளவை எட்டியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலும் அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் 400 பில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ.29.80 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

நாடு வளா்ச்சியடைவதற்கான வேகத்தை நாம் மேலும் அதிகப்படுத்த வேண்டும். அதற்குக் கரோனா தொற்று சவால்களை விடுத்து வருகிறது. எனினும் இந்தியாவின் முன்னேற்றத்தை கரோனாவால் தடுக்க முடியாது.

கரோனா தொற்றுக்கு எதிராக முழுமையான எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வுடன் இந்தியா தொடா்ந்து போராடும். அதேவேளையில் தேச நலனும் கவனத்தில் கொள்ளப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாட்டுக்கு ரூ.738 கோடி:

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சோ்ந்த 36,68,729 விவசாயிகளுக்கு ரூ.738.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகையை விடுவிக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது தமிழ்நாட்டைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் அமைப்பு சாா்பில் பேசிய பிரதிநிதி, அந்த அமைப்பு பெண்களுக்குச் சொந்தமானதாக இருப்பதாகவும், அதனை பெண்களே முழுமையாக நிா்வகித்து வருவதாகவும் தெரிவித்தாா்.

13. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 25,000 கி.மீ. சைக்கிளில் பயணித்த பசுமை மனிதர்

ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி நர்பாத் சிங் புரோஹித் சைக்கிளில் 25,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நர்பாத் சிங் புரோஹித் (34), இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். தனது சொந்த செலவில் 21 குளங்களை வெட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில மக்கள், அவரை ‘பசுமை மனிதர்’ என்று அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட நர்பாத் சிங் புரோஹித், கடந்த 2019 ஜனவரியில் காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதுவரை 23 மாநிலங்களில் 25,000 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

தற்போது தெலங்கானாவில் முகாமிட்டுள்ள அவர் இன்னும் 5,000 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணம் செய்து தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் 10% மாற்றுத் திறனாளி. எனது காலில் 38 தையல்கள் போடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக நாடு முழுவதும்சைக்கிளில் பயணம் செய்து மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். வரும் வழியெல்லாம் கிராமங்கள், நகரங்களுக்கு சென்று சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ வேண்டும்.இதற்கு ஒவ்வொரு நபரும் தன்னுடைய வாழ்நாளில் 2 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். என்னுடைய மாத வருவாயில் 70 சதவீதத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செலவிடுகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியும்” என்றார்.

14. நம்பகத்தன்மையில் மருத்துவர்கள் முதலிடம்; நம்பகமான நாடுகளில் இந்தியாவுக்கு 2-ம் இடம்: சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்

நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். உலகின் நம்பகமான நாடுகள் பட்டியலில் மலேசியா முதலிடத்தையும் இந்தியா 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இப்சாஸ் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சர்வதேச அளவில் நம்பகத்தன்மை குறித்துஅந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக 64% பேர் வாக்களித்துள்ளனர். அதற்கு அடுத்து விஞ்ஞானிகளுக்கு 61%, ஆசிரியர்களுக்கு 55%, ராணுவ வீரர்களுக்கு 42 %, போலீஸாருக்கு 37%, நீதிபதிகளுக்கு 34%, வழக்கறிஞர்களுக்கு 29%, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு 27%,மத போதகர்களுக்கு 25%, அரசுஊழியர்களுக்கு 24%, செய்தியாளர்களுக்கு 23%, வங்கி ஊழியர்களுக்கு 23%, தொழிலதிபர்களுக்கு 23%, அமைச்சர்களுக்கு 14% பேரும்ஆதரவு அளித்துள்ளனர்.

அரசியல்வாதிக்கு கடைசி இடம்

இப்சாஸின் நம்பகத்தன்மைபட்டியலில் அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 10% மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

சர்வதேச நாடுகளில் மருத்துவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறித்து இப்சாஸ் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் பிரிட்டிஷ் மருத்துவர்களுக்கு 72% மக்கள் ஆதரவுஅளித்துள்ளனர். நெதர்லாந்து மருத்துவர்களுக்கு 71% பேரும், கனடாமருத்துவர்களுக்கு 70% பேரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

உலகின் நம்பகமான நாடு குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

15. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; கடந்த ஆண்டு 31,000 புகார்கள் பதிவு: தேசிய பெண்கள் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரே ஆண்டில் சுமார் 31 ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30,864 புகார்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இது, கடந்த 2020-ம் ஆண்டை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும்.

மொத்த புகார்களில் 11,013 புகார்கள், பெண்களை உணர்வுபூர்வமாக துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்பானவை. பெண்களுக்கு எதிரான வன் முறை தொடர்பாக 6.633 புகார் களும், வரதட்சணை கொடுமை தொடர்பாக 4,589 புகார்களும் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரசேதத்தில் இருந்து பெறப்பட்டவை. அம்மாநிலத்தில் இருந்து 15,828 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்தபடி யாக டெல்லியில் இருந்து 3,336, மகாராஷ்டிராவில் இருந்து 1,504 புகார்களும், ஹரியாணாவில் இருந்து 1,460 புகார்களும், பிகாரில் இருந்து 1,456 புகார்களும் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிக அளவில் பெறப் படுகின்றன. தேசிய பெண்கள் ஆணையத்தின் பணிகள் குறித்து மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்றார்.-பிடிஐ

16. ரூ.700 கோடி செலவில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தயான்சந்த் விளையாட்டு பல்கலை. : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

ரூ.700 கோடி செலவில் மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மீரட் நகரம் நமது பலம் மற்றும்கலாச்சாரத்தின் மையமாக அமைந்துள்ளது. சமண தீர்த்தங்கரர்களின் தேசமாகவும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே இந்தியாவின் வலிமையையும் பறைசாற்றும்நகரமாக மீரட் இருந்து வந்துள்ளது.

நாட்டில் உயர்ந்த விளையாட்டு விருதுக்கு மேஜர் தயான்சந்த் பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீரட்டில் அமையும் விளையாட்டு பல்கலைக்கழகம் அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரூ.700 கோடி செலவில் அமையும் இந்த பல்கலைக்கழகம், இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளை அளிக்கும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடவர் மற்றும் மகளிர் இங்கு பட்டம் பெறவுள்ளனர்.

விளையாட்டு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இணையாக விளையாட்டும் கற்று தரப்படும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக மீரட் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு (540 ஆடவர், 540 மகளிர்) பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. உலகத் தரத்தில் நவீன வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நவீன சிந்தெடிக் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மைதானங்கள், கபடி ஆடுகளம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

மேலும் இங்கு டென்னிஸ் மைதானம், நவீன உடற்பயிற்சி மையம், சிந்தெடிக் ஓடுபாதை, நீச்சல்குளம், பல்நோக்கு வளாகம், சைக்கிள் பயிற்சி மைதானம் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல், வில் வித்தை,கனோயிங் மற்றும் கயாகிங் படகுப் பயிற்சி வசதிகள் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. -பிடிஐ

17. டெஸ்லாவில் ஆட்டோபைலட் குழுவில் முதல் ஊழியராக இந்தியர் நியமனம்

‘டெஸ்லா’ நிறுவனத்தின் ‘ஆட்டோபைலட்’ குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளம் வாயிலாக தன் நிறுவனத்திற்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு அசோக் எல்லுசுவாமி என்ற இந்திய வம்சாவளியை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் எனப்படும், தானாக வாகனங்கள் இயங்கும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டோபைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஊழியர் அசோக் எல்லுசுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

18. குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கியதில் சென்னை விமான நிலையம் 8-வது இடத்தை பிடித்தது

சா்வதேச அளவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2021-ம் ஆண்டு விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியது. அந்த ஆய்வு பற்றிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

8-வது இடம்

அதில், 2021-ம் ஆண்டில் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில் சென்னை விமான நிலையம் 89.32 சதவீதத்துடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில் 70 வழித் தடங்களில் 81.90 சதவீதம் விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில் பெரிய விமான நிலையங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையம்

ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா விமான நிலையம், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப் படுவதில் 96.51 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 89.32 சதவீதம் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சென்னை விமான நிலையம் மட்டுமே குறித்த நேரத்தில் விமானப் புறப்பாட்டை உறுதி செய்ததில் சர்வதேச அளவில் உள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

அந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்திய விமான நிலையங்களில் சென்னையை தவிர வேறு எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

19. தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத காற்றாலை, சூரியசக்தி மின்உற்பத்தி நிறுவுதிறன் அதிகரிப்பு: நிறுவனங்கள், வீடுகளில் அமைக்க ஆர்வம்

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான காற்றாலை, சூரிய சக்தி மின்உற்பத்தி நிறுவுதிறன் ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின்இணைப்பு 2.20 கோடி. இதேபோல், வணிகம் 35 லட்சம், தொழிற்சாலைகள் 7 லட்சம், விவசாயம் 21 லட்சம், குடிசைகள் 9 லட்சம், இதர இனம் 14 லட்சம் என மொத்தம் 3.16 கோடிக்கும் அதிகமான தாழ்வழுத்த மின்இணைப்புகள் உள்ளன. இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களும் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவை 12,700 மெகாவாட். இது கோடைக்காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களின் மின்தேவையை பூர்த்தி செய்ய தமிழக மின்வாரியம் பெரும்பாலும் அனல் மின்நிலையத்தையே நம்பி உள்ளது. இதன் மூலம் 4,300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது ஒன்றை வைத்து தமிழகத்தின் அனைத்து மின்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. காரணம், அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நிலக்கரியால் அனல் மின்சாரத்தால் காற்று மாசும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது நீர் மின்நிலையங்கள் 2,300 மெகாவாட், காற்றாலை 9,600 மெகாவாட், சோலார் 4,700 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி நிறுவு திறன்களை பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் அமைத்துள்ளனர். இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் தேவைக்கு ஏற்ப மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், ஒன்றிய மாநில அரசுகள் மரபுசாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள், மானியங்களை வாரி வழங்கி வருகிறது. மேலும் இத்தகைய முறையிலான திட்டங்களையும் அரசு மற்றும் தனியார் மற்றும் இரண்டு தரப்பு பங்களிப்புடன் புதிதாக பல்வேறு இடங்களில் மின்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது. இதேபோல் தனியார் நிறுவனங்கள், சில வீடுகளிலும் தங்களுக்கு அன்றாட தேவைப்படும் மின்சாரத்தை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரித்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், தமிழகத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறன் உயர்ந்து வருகிறது. அந்தவகையில், 2016ம் ஆண்டு தமிழகத்தில் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவுதிறன் 7613.89 மெகாவாட்டாக இருந்தது. இதுவே கடந்த 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவு திறன் 9,608.04 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின்உற்பத்தி கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2016ம் ஆண்டு மாநிலத்தின் ஒட்டுமொத்த சூரியசக்தி மின்உற்பத்தி நிறுவு திறன் 1061.82 மெகாவாட்டாக இருந்தது. இதுவே கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த சூரிசக்தி மின்உற்பத்தி நிறுவு திறன் 4,475.21 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்ற மக்களின் நிலைபாடு போன்றவற்றின் காரணமாக தமிழகத்தில் வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

மின்உற்பத்தி நிறுவுதிறன் (மெகாவாட்டில்)

ஆண்டு சூரியசக்தி காற்றாலை

2016 1061.82 7613.89

2017 1691.83 7861.46

2018 1908.57 8197.09

2019 2575.22 8968.91

2020 3915.88 9304.34

2021 4475.21 9608.04

20. காகித பயன்பாடே கிடையாது 3 ஸ்மார்ட் நீதிமன்றம் கேரளாவில் சாதனை: இந்தியாவிலேயே முதன் முறை

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் உயர்நீதிமன்றம் உள்பட 3 நீதிமன்றங்கள் ஸ்மார்ட் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான அரசுத் துறைகள் தற்போது கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் உயர் நீதிமன்றம், கோலஞ்சேரி குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவை முழுக்க முழுக்க கணினி மயமாக்கப்பட்டு காகிதம் இல்லாத நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா கொச்சியில் நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் காணொலி மூலமாக இவற்றை தொடங்கி வைத்தனர். கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதிமன்றம் உள்பட 6 நீதிமன்றங்கள் முழுக்க முழுக்க கணினிமயமாக்கப் பட்டுள்ளன. விரைவில், இதில் உள்ள 27 நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல்முறையாக 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் ஸ்மார்ட் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, போலீஸ் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கை உள்பட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் நேரடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம். குற்றப் பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலம் உள்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கிடைக்கும். சம்மன்களையும் டிஜிட்டல் முறையில் அனுப்பும் வசதி உண்டு.

1. What is the name of the carbon–rich, diamond–shaped, near–Earth asteroid, recently seen in the news?

A) Apollo

B) Ryugu 🗹

C) Eros

D) Bennu

  • Ryugu, also known as 1999 JU3, is a carbon–rich, diamond–shaped, near–Earth asteroid. An analysis of the JAXA’s Hayabusa–2 sample of material returned to Earth from Ryugu shows that the material is very dark, reflecting only 2% of light.

2. Which state/UT Police has launched Project ‘Abhaya’, for safety and security of girls?

A) Punjab

B) New Delhi 🗹

C) Odisha

D) West Bengal

  • Delhi Police Commissioner Rakesh Asthana launched Project ‘Abhaya’, a joint initiative of the Delhi Police force and an NGO for safety and security of girls. Delhi Police and NGO Shakti Foundation are implementing the project, which is aimed at empowering, educating and making children aware.

3. Ganymede, which was seen in the news recently, is the moon of which planet?

A) Saturn

B) Jupiter 🗹

C) Venus

D) Neptune

  • NASA has recently released noises captured near Jupiter’s moon Ganymede. Ganymede is also the largest moon in our solar system. Ganymede also has its own magnetic field, which is not present in other moons of the solar system. NASA launched the Juno spacecraft, to observe Jupiter’s neighbourhood. Earlier this year, Juno captured Ganymede’s electromagnetic waves.

4. T–Setu, which has been recently inaugurated, is the longest bridge of which state?

A) Karnataka

B) Odisha 🗹

C) Bihar

D) West Bengal

  • Odisha Chief Minister Naveen Patnaik recently inaugurated T–Setu, the State’s longest bridge over Mahanadi in Cuttack district. The 3.4 km long bridge is located in the middle of the river, has been built in the shape of English alphabet ‘T’ at a cost of Rs 111 crore.

5. Pankaj Advani and Dhruv Sitwala are associated with which sports?

A) Cricket

B) Tennis

C) Badminton

D) Billiards 🗹

  • Indian ace billiards player Pankaj Advani has won the 11th national billiards title by defeating Dhruv Sitwala at the final game. Pankaj Advani is a 23–time world champion in snooker. He has won the IBSF World Billiards Championship 15 times.
  • In 2018, he has been awarded with the Padma Bhushan Award by the Government of India. Dhruv Sitwala has reached three world finals, and twice been Asian Billiards champion.

6. “Dragon spacecraft” belongs to which space agency?

A) NASA

B) Virgin Atlantic

C) Space X 🗹

D) Blue Origin

  • SpaceX’s ‘Dragon spacecraft’ has been launched for making its 24th commercial cargo supply for NASA to the International Space Station on 21st January 2021. The launch took place from NASA’s Kennedy Space Center in Florida.

7. Indigenously developed next–gen armoured engineer reconnaissance vehicle was inducted into which armed force?

A) Indian Army 🗹

B) Indian Navy

C) Indian Air Force

D) Indian Coast Guard

  • The first set of indigenously developed next–gen armoured engineer reconnaissance vehicle was inducted into the Corps of Engineers of Indian Army. The system has been designed by Defence Research and Development Organisation (DRDO) and manufactured by Ordnance Factory Medak and Bharat Electronics Limited, Pune. The vehicle can provide a real–time update to force commanders.

8. Which state government has notified 1 percent reservation to Transgenders across all ranks in the Police department?

A) Tamil Nadu

B) Karnataka 🗹

C) Odisha

D) Madhya Pradesh

  • The Karnataka state government has decided to give 1 per cent reservation to the transgenders across all ranks in the Police department. This move by the state will help bring transgenders into the mainstream and remove the stereotypes against them in society. The Department has also notified the recruitment process regarding the same.

9. Which country recently launched the “Inmarsat–6 F1 satellite”?

A) USA

B) Japan 🗹

C) Israel

D) UAE

  • Japan has recently launched an advanced commercial communications satellite named ‘Inmarsat–6 F1’ aboard H–2A rocket. It is a 5,470–kilogram satellite and is one of the largest and most sophisticated commercial communications satellites ever launched.

10. Union Minister Nitin Gadkari has recently launched an intelligent transport system in which place?

A) Delhi Expressway 🗹

B) Ahmedabad Expressway

C) Bengaluru Expressway

D) Lucknow Expressway

  • Union minister Nitin Gadkari has recently inaugurated an intelligent transport system at the Eastern Peripheral Expressway at Delhi.
  • This aims to minimize traffic related problems and improve safety of the travellers. The intelligent transport system is the one which has state of the art transportation infrastructure which gives prior information about traffic to improve driver’s comfort, detect any accident and sends alerts to ensure that an ambulance reaches the spot in the shortest possible time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!