Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

1st & 2nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘ஹோலா மொஹல்லா’ என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் கொண்டாடப்படுகிற விழாவாகும்?

அ) மகாராஷ்டிரா

ஆ) பஞ்சாப்

இ) மத்திய பிரதேசம்

ஈ) அஸ்ஸாம்

  • ‘ஹோலா மொஹல்லா’ என்பது பஞ்சாபின் ஆனந்த்பூர் சாகிப்பில் ஆண் -டுதோறும் சீக்கிய சமூகத்தைச்சார்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். இந்த விழா, பொதுவாக சந்திர மாதத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஹோலி பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, மார்ச்.10 அன்று இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தற்காப்பு துணிச்சலை கொண்டாடுகிறது.

2. ‘உலக வளர்ச்சி அறிக்கை’ 2021’இன் கருப்பொருள் என்ன?

அ) Data for better lives

ஆ) Data for better economy

இ) Data for better administration

ஈ) Data for better world

  • உலக வளர்ச்சி அறிக்கை – 2021 ஆனது ‘சிறந்த வாழ்க்கைக்கான தரவு’ என்ற கருப்பொருளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது வளர்ச்சிக்கான தரவுகளின் பங்கை மட்டுமே மையமாகக்கொண்ட முதல் உலக வளர்ச்சி அறிக்கையாகும். COVID கொள்ளைநோயானது உலகளாவிய தரவில் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கியுள்ளதால், ஏழைமக்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வது குறித்து இவ்வறிக்கை பேசுகிறது.

3. BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறு -ப்பேற்றுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) இரஷ்யா

ஈ) தென்னாப்பிரிக்கா

  • 2021ஆம் ஆண்டுக்கு, BRICS அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைவர் பதவியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தலைமைதாங்கினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, நடப்பாண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை உறுப்புநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.

4. ‘கேலோ இந்தியா திட்டமானது’ பின்வரும் எந்நிதியாண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ) 2022-23

ஆ) 2023-24

இ) 2024-25

ஈ) 2025-26

  • ‘கேலோ இந்தியா திட்ட’மானது 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் அறிவித்தார். புதிய ‘கேலோ இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்த `8750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரவு விளையாட்டு அமைச்சகத்தால் நிதியமைச்சகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், 2021-22’க்கான பட்ஜெட்டில் `657.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. அண்மைய SBI அறிக்கையின்படி, இந்தியாவில், இரண்டாவது COVID அலை, எத்தனை நாட்கள் வரை நீடிக்கக்கூடும்?

அ) 50

ஆ) 100

இ) 200

ஈ) 300

  • இந்தியாவில் இரண்டாவது COVID-19 அலையின் காலம் 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று பாரத வங்கியின் ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிக்கையை வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ் எழுதியுள்ளார்.
  • உள்ளூரளவிலான பொது முடக்கங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது கண்கூடாக காணப்பட்டது. எனவே, பொதுமுடக்கங்கள் பயனற்றது என்றும் தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது.

6. அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகள், எந்தப் பகுதியின் வெப்பமயமாதலால் ஏற்படுகின்றன?

அ) ஆர்க்டிக் பிராந்தியம்

ஆ) அண்டார்டிகா பிராந்தியம்

இ) பசிபிக் பெருங்கடல்

ஈ) இந்திய பெருங்கடல்

  • இந்தியா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களின் ஓர் அண்மைய ஆய்வு “Large-scale connection to Deadly Indian Heatwaves” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஏப்ரல் மற்றும் மே மாத கோடை காலங்களில் இந்தியாவில் வீசும் வெப்ப அலைகள், ஆர்க்டிக் பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க வெப்பமயமாதலால் ஏற்படுகின்றன.
  • “Quasi-Resonant Amplification” எனப்படும் ஒரு முறைமையால் இந்திய வெப்ப அலைகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

7. தேசிய கல்விக்கொள்கை – 2020’இன் அடிப்படையில், பிரிட்டிஷ் கவுன்சிலால் புதிய மதிப்பீட்டு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இந்திய அமைப்பு எது?

அ) AICTE

ஆ) UGC

இ) CBSE

ஈ) NAAC

  • மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) தேசிய கல்விக்கொள்கை -2020’இன் அடிப்படையில் 6-10 வகுப்புகளுக்கான திறன் அடிப்படையி -லான மதிப்பீட்டு கட்டமைப்பை அறிவித்தது. இம்மதிப்பீடு முக்கியமாக மூன்று பாடங்களை (ஆங்கிலம் (வாசிப்பு), அறிவியல் மற்றும் கணிதம்) உள்ளடக்கிய மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரிட்டிஷ் கவுன்சிலானது UK அறிவு கூட்டாளரான AlphaPlus உடன் இணைந்து இந்தக் கட்டமைப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

8. எந்த நாட்டின் நாடாளுமன்றம் தனது தற்போதைய அதிபரை 2024ஆம் ஆண்டு முதல் மேலும் இரு பதவிக்காலத்துக்கு போட்டியிட உதவும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது?

அ) சீனா

ஆ) ரஷியா

இ) அமெரிக்கா

ஈ) கனடா

  • ரஷ்யாவின் கீழவையான டுமா, சமீபத்தில் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதினை 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கி மேலும் இரண்டு பதவிகாலத்துக்கு போட்டியிட வழிவகை செய்யும் மசோதாதான் அது. 2020 ஜூலை மாதம், நாடு தழுவிய வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திரு -த்தங்களைத் தொடர்ந்து தேர்தல்கள் குறித்த வரைவு சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இம்மசோதா, 2036ஆம் ஆண்டுவரை புதினுக்கு பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

9. இந்தியாவைத்தவிர கருச்சிதைவுகள் நேர்ந்தால் விடுப்பளிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய வேறு நாடு எது?

அ) சுவிச்சர்லாந்து ஆ) நார்வே

இ) நியூசிலாந்து ஈ) ஜெர்மனி

  • கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தாய்மார்களுக்கும் அவர்களுடனிருப்பவர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்புக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தியாவுக்குப்பிறகு, இதுபோன்றதொரு சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது.
  • நியூசிலாந்தில் உள்ள பெண்களுள் நான்கில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை குழந்தை இறந்து பிறந்தால், இந்தச் சட்டம் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை விடுப்பு அளிக்கும்.

10. ஐநா அமைதி காக்கும் படையினருக்கு கிட்டத்தட்ட 2 இலட்சம் அளவிலான COVID தடுப்பூசிகளை பரிசாக வழங்கவுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) ரஷியா

இ) இந்தியா

ஈ) இங்கிலாந்து

  • ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு பரிசாக இந்தியா 200000 டோஸ் COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மார்ச் 27 அன்று அனுப்பப்பட்டு அமைதி காக்கும் பணிக்கு விநியோகிக்கப்படும்.
  • இதன்மூலம், உலகெங்முள்ள 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் 85,782 ஐநா அமைதி காக்கும் படையினருக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டின் முதல் அதிநவீன 3 டெஸ்லா MRI கருவி: ராமச்சந்திராவில் அறிமுகம்

உலகத்தின் அதிநவீன 96 சேனல், 3 டெஸ்லா MRI கருவியை ஸ்ரீ ராமச்ச -ந்திரா மருத்துவ மையத்தில் அதன் மேலாண் இயக்குநர் V R வெங்கடாச -லம் இயக்கிவைத்தார். இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கதிரியக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர் வெங்க -டசாய் கூறியதாவது: இந்த GE சிக்னா ஸ்கேனர் உயர்தர நிழற்படங்களி -ல் மிகத்துல்லியமான உடல்கூறு மாறுதல்களையும் மிகத்தெளிவாக அளித்து, சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.

இதில் அகலமான நுழைவு வாயில் இருப்பதால் பருமனானவர்கள்கூட நெரிசல்நிலை உணராமல், பதற்றம், சத்தமில்லாமல் 50 சதவீத வேகத்தில் ஸ்கேனை முடிக்கலாம். மிக நுண்படப்பிடிப்புத்தன்மைகள் கொண்ட இந்த ஸ்கேனர், வலிப்பு நோய், குழந்தைகளுக்கான மூளை ஸ்கேன், நரம்புகள் மற்றும் தேவைக்கேற்ப ஸ்கேன்களை அதிநவீன தரத்தில் கொடுக்கிறது.

கட்டிகள், தசை, எலும்பு, கர்ப்பத்தில் உள்ள குழந்தை, மார்பக புற்றுநோய், இரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய இந்த ஸ்கேனர் உதவி செய்யும்.

2. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் தடைநீக்கம்; இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பருத்தி, சர்க்கரை இறக்குமதி

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் வர்த்தகம், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார ஒத்துழைப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதுகுறித்து நிதி அமைச்சர் ஹமாத் அசார் கூறுகையில், “இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான 2 ஆண்டு கால தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்த -கம் மீண்டும் தொடரவுள்ளது. பாகிஸ்தானின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் பாதிக்கப்பட்டதால், பருத்தி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட -து. தற்போது, நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

3. இந்தியா- தஜிகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்

இந்தியா-தஜிகிஸ்தான் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங் -கர் தெரிவித்தார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொ
-ண்டார். அப்போது, தஜிகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சிரோஜிதின் முஹ்ரிதீனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் இதை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, பொறியியல் பட்டறை, மருந்து உற்பத்தி ஆலைகள், தகவல் தொழில்நுட்ப மையங்கள், புனர்வாழ்வு மையங்கள், வர்சோப்-1 நீர்மின் நிலையத்தின் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல திட்டங்களை, தஜிகிஸ்தானில் பல்லாண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோ -ம். அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள துஷான்பே-சோர்டட் நெடுஞ்சா -லையின் 8 வழிச்சாலைப் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடையும்பட்சத்தில் துஷான்பே நகரின் போக்குவரத்து நெருக்கடி குறையும். இதேபோல இந்தியாவின் கடனுதவி திட்டங்களின் மூலம், தஜிகிஸ்தானில் சமூக மேம்பாட்டு மானியத் திட்டங்களையும், எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளின் திட்டப்பணிகளையும் இந்தியா மேற்கொண்டுவருகிறது.

இந்தோ-தாஜிக் நட்பு மருத்துவமனை இருநாடுகளிடையிலான ஒத்துழை -ப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. தற்போதைய ஐநா பாதுகாப்புக்குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர் சேர்க்கையின்போது, தஜிகி -ஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்போம்” என்றார் ஜெய்சங்கர்.

4. கோவிஷீல்ட் தடுப்பூசி சேமித்து வைக்கும் காலம் 9 மாதங்களாக நீட்டிப்பு: டிசிஜிஐ அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதித்துள்ளது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்து வரும் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் இதற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையர் வி ஜி சோமானி அளித்துள்ளார். அந்தக்கடிதத்தில் தெரிவிக்கபப்பட்டிருப்பது:

கோவிஷீல்ட் தடுப்பூசியை பெயர் ஒட்டப்படாத 5 மில்லி லிட்டர் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கண்ணாடி குப்பிகளில் அடைத்து, 9 மாதங்கள் வரை சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் காலம் சேமித்துவைக்கப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களை பிரிவு வாரியாக டிசிஜிஐ அலுவலகத்துக்கும், ஹிமாச்சல பிரதேசம் கசெளலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இரண்டாம் தவணையாக செலுத்திக்கொள்ளும் இடைவெளியை முதல் தவணை செலுத்தியதில் இருந்து 4 முதல் 6 வாரங்கள் என்பதை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அண்மையில் கேட்டுக்கொண் -டது. கூடுதல் பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான காலத்தை 6 மாதங்கள் என்ற அளவிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தி DCGI இப்போது அனுமதி அளித்திருக்கிறது.

5. மத்திய அரசின் அவசர காலகடனுதவித் திட்டம் ஜூன் வரை நீட்டிப்பு

மத்திய அரசின் அவசர காலக் கடனுதவித் திட்டம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா தொற்றுப் பரவலால் முடங்கிய தொழில் துறையை மீட்பதற்காக, `3 லட்சம் கோடியில் அவசரகாலக் கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 29 அன்று அறிவித்தது. இந்தக் கடனுதவி திட்டம், பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 30 வரையிலும், அதைத்தொடர்ந்து நிகழாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம், வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெறும் துறைகளில் சுற்றுலா, உணவகம், பயண ஏற்பாடு ஆகிய துறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலமானது 2 ஆண்டுகள் சலுகைக்காலம் உள்பட 6 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள்மூலம் கடனுதவி அளிப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உகந்த சூழல்களை உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும். இத்திட்டத்தின்கீழ் கடனுதவி அளிக்கும் வங்கிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.5%-12.5% ஆக இருக்கும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22-ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உலக வங்கி-பன்னாட்டு நிதியம் இடையேயான வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, ‘தெற்காசியாவின் பொருளாதார நிலை’ என்ற அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கும் முன்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது. அது 2019-20-ஆம் நிதியாண்டில் 4 சதவீதமாகக் குறைந்தது. மக்களின் நுகர்வு குறைந்தது, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி, முதலீடுகள் குறைந்தது உள்ளிட்டவை நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்த -தற்கான முக்கிய காரணங்கள் ஆகும். கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சி கண்டது.

அதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. எனினும், பொருளாதாரம் முழுமையாக இன்னும் மீளவில்லை. கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வளர்ச்சி ஆச்சரியமளிக்கிற
-து. 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும். கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் விதம், சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மாறுபடும்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. பொருளாதாரத்தின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இரு நிதியாண்டுகளுக்கு சுமார் 1% வீழ்ச்சிகாணும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும்.

அரசின் கடன் 2020-21ஆம் நிதியாண்டில் GDP மதிப்பில் 90 சதவீதமாக இருக்கும். 2021-22ஆம் நிதியாண்டில் கடன் மதிப்பு குறையத் தொடங்கு -ம். அதே காலகட்டத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் விகிதம், கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய நிலையை அடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. 4 ஆண்டுகளில் மின்னணு பணப் பரிமாற்றம் 71% அதிகரிக்கும்!

இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டில் மின்னணு முறையில் (டிஜிட்டல்) பணப்பரிமாற்றம் நிகழுவது 71.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று ACI வேல்ட்வைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ரொக்கமாக பணத்தைக் கையாளுவது குறைந்து பற்று, கடன் அட்டைகள், பேமண்ட் வாலட், QR கோடுகள்மூலம் பணம் செலுத்துவது, வங்கி இணையதளம், செயலிகள்மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுவது வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் மின்னணு பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வரும் ACI வேல்ட்வைட் நிறுவனம் இது தொடர்பாக இந்தியாவில் நடத்திய ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020ஆம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவில்தான் அதிக மதிப்புக்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. எனினும், மின்னணு முறையில் உடனடியாகப் பணப்பரிமாற்றம் செய்வது இப்போது இந்தியாவில் 15.6 சதவீதமாக உள்ளது. உடனடியாக அல்லாமல் பிறமுறைகளில் மின்னணு பணப்பரிமாற்றம் செய்வது 22.9 சதவீதமாக உள்ளது. பணத்தை ரொக்கமாகக் கையாளுவது 61.4 சதவீதமாக உள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டில் மின்னணு முறையில் உடனடியாகப் பணப்பரிமாற்றம் செய்வது 37.1 சதவீதமாகவும், உடனடியாக அல்லாமல் பிறமுறைகளில் மின்னணு பணப்பரிமாற்றம் செய்வது 34.6 சதவீதமாகவும் அதிகரிக்கும். அதேநேரத்தில் பணத்தை ரொக்கமாகக் கையாளுவது 28.3 சதவீதமாகக் குறையும்.

2024ஆம் ஆண்டு நாட்டின் மொத்தப் பணப்பரிமாற்றத்தில் 50 சதவீதத்து -க்குமேல் மின்னணுமுறைக்கு வந்துவிடும். இந்தியாவில் அரசு, வங்கிகள் மற்றும் பல்வேறு நிதிசார்ந்த நிறுவனங்கள் மின்னணு முறை பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும். 2020ஆம் ஆண்டில் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சீனா, தென்கொரியா, தாய்லாந்து, பிரிட்டன் ஆகியவை உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8. மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் புதன்கிழமை இந்தியா வந்தடைந்தன. இதன் மூலம் அந்நாட்டில் இருந்து இதுவரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வான்படை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், “பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் நடுவ -ழியில் எங்கும் நிற்காமல் இந்தியா வந்தடைந்தன.

அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் நாட்டின் எந்தப்பகுதியில் அந்த விமானங்கள் தரையிறங்கின என்ற விவரத்தை இந்திய வான்படை தெரிவிக்கவில்லை. பிரான்ஸிடம் இருந்து `59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசுடன் இந்திய மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தம் கையொப்பமாகி சுமார் 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி முதல் தொகுப்பாக 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

அதன்பின்னர் கடந்த ஆண்டு நவ.3ஆம் தேதி இரண்டாவது தொகுப்பாக 3 ரஃபேல் விமானங்களும், கடந்த ஜன.27 அன்று மூன்றாவது தொகுப்பாக 3 ரஃபேல் விமானங்களும் இந்தியா வந்துசேர்ந்தன. தற்போது 4ஆவது தொகுப்பாக மேலும் 3 ரஃபேல் விமானங்கள் வந்துள்ளதையடுத்து, இது வரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்
-கை 14 ஆக அதிகரித்துள்ளது.

9. மிருகங்களுக்கான கரோனா தடுப்பூசி: முதல்முறையாக பதிவு செய்தது ரஷியா

உலகிலேயே முதல்முறையாக கரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வேளாண் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்ததாவது: மிருகங்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்கான தடுப்பூசி முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்தினால், 6 மாதங்களுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்ககொள்ளப்பட்டு வருகின்றன. ‘கார்னிவாக்-கோவ’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பூசி, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து நாய்கள், பூனைகள், நரி இனங்கள் மற்றும் பிற விலங்களுக்கு சோதனை முறையில் செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்தத்தடுப்பூசி, அடுத்த மாதத்திலிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதர்களிடையே பரவிவரும் கரோனா தீநுண்மி, விலங்குகளின் உடல்களில் புகுந்து உருமாற்றம் பெற்று வீரியமடைவதைத் தடுக்க, கார்னிவாக்-கோவ் போன்ற விலங்குகளுக்கான தடுப்பூசிகள் உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

10. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1% வரை குறைப்பு

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 1.1 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது. வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதையடுத்து சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான இந்த வட்டி விகிதம் ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது: பொது வருங்கால வைப்பு நிதிக்கான (PPF) வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான (NSC) வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 5.9 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9% குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது 4 சதவீதத்தில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 5 சதவீதத்தில் 0.5 சதவீதமும், 3 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.4 சதவீதமும், 5 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதமானது 0.7% குறைக்கப்பட்டு 6.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள -து. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான (KVP) ஆண்டு வட்டி விகிதமானது 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11. துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 19% வீழ்ச்சி

நாட்டில் துருப்பிடிக்கா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 19 சதவீதம் குறைந்து 31.7 கோடி டன்னாக குறைந்துள்ளதாக இந்திய எஃகு மேம்பாட்டு சங்கம் (ஐஎஸ்எஸ்டிஏ) தெரிவித்துள்ளது. கரோனா நெருக்கடியால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், உலகளவில் துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியில் இந்தியா தொடா்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ஐஎஸ்எஸ்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு -ள்ளதாவது: இந்தியாவில் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 2020ஆம் ஆண்டில் 3.17 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது, முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் சரிவாகும். 2019ஆம் ஆண்டில் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 3.93 மெட்ரிக் டன் என்று பதிவு செய்யப்பட்டது. எனினும், பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பின்னர் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தியும் அதற்கான தேவையும் 2020 ஜூலை மீட்சியைக் கண்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதாசாகெப் பால்கே இந்திய திரைப்படத் துறையில் முதன்முதலில் 108 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தை தயாரித்தார். அவர் பெயரில் சிறந்த திரைப்பட சாதனையாளர்களுக்கு சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் மோகன்லால், சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, விஸ்வஜித் சாட்டர்ஜி, சுபாஷ் கைய் ஆகிய ஐந்து பேர் கொண்ட ஜூரி உறுப்பினர்கள் ரஜினிகாந்தை தேர்வு செய்திருப்பதாகவும், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினிகாந்த் திரையுலகில் சிறந்த சேவையை செய்து உள்ளார். இது அவருடைய திரைப்பட சாதனைக்கு, சேவைக்கு கொடுக்கப்பட்ட விருது. தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை. இதை ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று ஜவடேகர் தெரிவித்தார். இந்த விருது முன்பு தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குநரும், தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை பெரும் 51ஆவது நடிகர் ரஜினிகாந்த் ஆவார். தாதாசாகேப் பால்கே விருதை பெறவுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது. கடைசியாக 2018-ல் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது. 1982-ல் எல்.வி. பிரசாத் பால்கே விருதைப் பெற்றார். 1996-ல் சிவாஜி கணேசனுக்கும் 2010-ல் கே.பாலசந்தருக்கும் இவ்விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து பால்கே விருதைப் பெறவுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது.

13. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்

மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 1.1 சதவீதம் வரை குறைத்து அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான (PPF) வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான (NSC) வட்டி விகிதம் 0.9% குறைக்கப்பட் -டு 5.9 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது 4 சதவீதத்தில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள -து. இரு ஆண்டுக்கான வைப்புத்தொகை வட்டி விகிதமானது 5 சதவீதத்தி -ல் 0.5 சதவீதமும், 3 ஆண்டுக்கான வைப்புத்தொகை வட்டி விகிதமானது 0.4 சதவீதமும், 5 ஆண்டுக்கான வைப்புத்தொகை வட்டி விகிதமானது 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதமானது 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது.

இனைதயடுத்து மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக் -கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட் -டது திரும்பப்பெறப்படுவதாகவும், ஏற்கனவே 2020-2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

14. பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவுக்கு 140-ஆவது இடம்

உலக பொருளாதார மையம் (WEF) வெளியிட்ட பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 140-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுக்கான குறியீட்டுடன் ஒப்பிடுகையில், இந்தியா 28 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது.

சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஆண்களுக் -கும் பெண்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை ஆய்வு செய்து, உலக பொருளாதார மையம் வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி குறியீட்டை அந்த மையம் அண்மையில் வெளியிட்டது. மொத்தம் 156 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தமாக 153 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், இந்தியா 112ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. அரசியல் சாா்ந்த விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பும், அவர்களுக்கான வாய்ப்பும் 13.5% அளவுக்குக் குறைந்துள்ளதே இந்தியாவின் குறியீடு சரிவடைந்ததற் -குக் காரணம் என்று உலக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் பெண் அமைச்சர்களின் சதவீதம் 23.1ஆக இருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ள -து. நாட்டில் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பு 3% அளவுக்குக் குறைந்துள்ளது. பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. நிர்வாகம், தொழில்நுட்ப விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

நாட்டிலுள்ள 8.9% நிறுவனங்களில் மட்டுமே தலைமை மேலாளர்கள் பொறுப்பில் பெண்கள் உள்ளனர். ஆண்களின் வருமானத்தில் 5’இல் ஒரு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறார்கள். சுகாதார விவகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பாகுபடுத்தப்படுகின்றனர். நாட்டில் பிறப்பு பாலின விகிதத்திலும் பெரும் இடைவெளி காணப்படுகிறது.

படிப்பறிவில்லா ஆண்களின் சதவீதம் 17.6ஆக உள்ளது. இதுவே படிப்பறிவில்லா பெண்களின் சதவீதம் 34.2ஆக உள்ளது.

பாலின இடைவெளி குறியீட்டுப் பட்டியலில் உள்ள முதல் 5 நாடுகள் (பாலின இடைவெளி குறைவு)

1-ஐஸ்லாந்து

2-பின்லாந்து

3-நார்வே

4-நியூஸிலாந்து

5-ஸ்வீடன்

பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள் (பாலின இடைவெளி அதிகம்)

156-ஆப்கானிஸ்தான்

155-ஏமன்

154-ஈராக்

153-பாகிஸ்தான்

152-சிரியா

இந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை

65-வங்கதேசம்

106-நேபாளம்

107-சீனா

109-மியான்மர்

116-இலங்கை

130-பூடான்

1. ‘Hola Mohalla’ is a festival celebrated in which Indian state / UT?

A) Maharashtra

B) Punjab

C) Madhya Pradesh

D) Assam

  • ‘Hola Mohalla’ is a festival celebrated annually in Punjab’s Anandpur Sahib by the people from the Sikh community. The festival is usually celebrated on the second day of lunar month of Chet, which will follow the day of Holi festival.
  • This year, the ‘Hola Mohalla’ festival fell on March 10. It is celebrated to symbolise martial bravery and fighting prowess with music.

2. What is the theme of the ‘World Development Report’ 2021?

A) Data for better lives

B) Data for better economy

C) Data for better administration

D) Data for better world

  • World Development Report 2021 has been released with the theme of ‘Data for Better Lives’. This is the first World Development Report which focused solely on the role of data for development.
  • As the COVID pandemic made the global data inequalities even greater, the report speaks on how do we tap the full value of data, to ensure equitable access for poor people.

3. Which country has assumed the chairship of BRICS for the year 2021?

A) China

B) India

C) Russia

D) South Africa

  • For the year 2021, the chairmanship of BRICS is vested with India. India has commenced its chairship with the inauguration of 3–day–long Sherpas’ meeting. The meeting was chaired by Secretary (CPV & OIA) of Ministry of External Affairs. During the meet, India introduced to the member countries its themes and priorities for the year 2021.

4. ‘Khelo India Scheme’ has been extended till which financial year?

A) 2022–23

B) 2023–24

C) 2024–25

D) 2025–26

  • The Union Sports Minister Kiren Rijiju announced in Rajya Sabha that the ‘Khelo India Scheme’ has been extended from 2021–22 to 2025–26. An amount of Rs 8750 crore has been estimated for implemetation of the new Khelo India Scheme. This data has also been provided to the Ministry of Finance by the Sports Ministry. Rs 657.71 crore has been allocated in the Budget for 2021–22 under the Khelo India Scheme.

5. As per the recent SBI report, India’s second COVID wave may last up to how many days?

A) 50

B) 100

C) 200

D) 300

  • Report from State Bank of India’s research team underlined that duration of the second covid–19 wave in India might last up to 100 days. The report was authored by Chief Economic Adviser of Bank, Soumya Kanti Ghosh.
  • The report also said that, localised lockdowns or restrictions have not resulted in controlling spread of infection. It is visible in case of states like Maharashtra and Punjab. So, it suggests that, Lockdown is ineffective and vaccination is the only cure.

6. As per a recent study, the heat waves occurring in India is due to the warming up of which region?

A) Arctic Region

B) Antarctic Region

C) Pacific Ocean

D) Indian Ocean

  • A recent study with researchers from India and Brazil published a research article entitled “Large–scale connection to Deadly Indian Heatwaves.” As per the study, the heat waves during the summer season of April and May could be due to the significant warming up of the Arctic region. They state that the Indian heat waves occur due to a mechanism called “Quasi–Resonant Amplification (QRA).

7. Which Indian body announced a new British Council developed assessment framework based on the National Education Policy 2020?

A) AICTE

B) UGC

C) CBSE

D) NAAC

  • The Central Board of Secondary Education (CBSE) announced a competency–based assessment framework for classes 6–10 based on the National Education Policy (NEP) 2020.
  • The assessment aims to improve the overall learning outcomes of students mainly covering three subjects namely English (reading), Science, and Maths. British Council along with AlphaPlus as the UK knowledge partner, designed and developed this framework.

8. Which country’s parliament has passed a bill to enable its incumbent President to run for two more terms from 2024?

A) China

B) Russia

C) United States

D) Canada

  • Russia’s lower house of parliament the State Duma has recently approved a bill, to enable its incumbent President Vladimir Putin to run for two more terms starting from 2024. The draft law on elections was approved following the constitutional amendments adopted in a nationwide referendum in July 2020. The bill grants Putin the possibility of holding the office for two more terms until 2036.

9. Which is the only country other than India to pass the miscarriages bereavement leave law?

A) Switzerland

B) Norway

C) New Zealand

D) Germany

  • The parliament of the New Zealand has recently passed legislation giving mothers and their partners the right to paid leave following a miscarriage or still birth. It has become only the second country in the world to pass the law, after India. One in four New Zealand women experienced a miscarriage. This law will give employees three days leave when a pregnancy ends with a stillbirth.

10. Which country is set to gift nearly 2 lakh doses of COVID–19 vaccines to the UN Peace keepers?

A) China

B) Russia

C) India

D) UK

  • India has announced 200,000 doses of COVID–19 vaccines as a gift to the UN peacekeepers. It will be sent on March 27 and will be distributed to the peacekeeping missions. With this, it will be possible to administer the double doses of COVID–19 vaccines to all 85,782 UN peacekeepers serving in 12 peacekeeping operations across the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!