Tnpsc

1st & 2nd December 2020 Current Affairs in Tamil & English

1st & 2nd December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. மோட்டார் வாகன திருத்தச் சட்டம், 2019’இல், கீழ்க்காணும் எப்புதிய வரையறை சேர்க்கப்பட்டுள்ளது?

அ. மருத்துவ வாகனங்கள்

ஆ. திரட்டிகள் (Aggregators)

இ. சரக்கு வாகனங்கள்

ஈ. மின்சார வாகனங்கள்

 • மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019’இன் தேவைகள் மற்றும் விதிகளின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988’இன் திருத்தப்பட்ட பிரிவு 93’இன்படியும், மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்க -ளுக்கான வழிகாட்டுதல்கள் 2020’ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 • போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்காகவும், வாகனங்களைப் பகிர்ந்து கொள்வதை முறைப்படுத்துவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்கு மாநில அரசின் உரிமம்பெறுவது கட்டாயமாகும். இத்தொழிலில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றலாம்.

2. நடப்பாண்டின் (2020) பன்னாட்டு மணல் கலை விழா நடைபெறும் இடமான சந்திரபாகா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஒடிசா

இ. சென்னை

ஈ. கேரளா

 • ஒடிசா மாநிலமானது 2020ஆம் ஆண்டு டிசம்பர்.1ஆம் தேதி தொடங்கி அதன் சந்திரபாகா கடற்கரையில் பன்னாட்டு மணல் கலை விழாவைக் கொண்டாடவுள்ளது. ஐந்து நாள் நடைபெறும் இந்த மணல் கலை விழாவானது, கொனார்க்கில் அமைந்துள்ள சூரியன் கோவிலின் கொனார்க் விழாவுடன் இணைந்து நடைபெறுகிறது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய மணற்சிற்பக் கலைஞர்கள் மட்டுமே மணல், வெண்கலம் அல்லது மரத்தைப் பயன்படுத்தி தங்கள் கலையை வெளிப்படுத்துவார்கள்.

3. ‘தில்லி சலோ’ என்பது இந்தியாவில் எந்த வகை மக்களால் நடத்தப்படும் போராட்டத்தின் பெயராகும்?

அ. உழவர்கள்

ஆ. தூய்மைப் பணியாளர்கள்

இ. வங்கி ஊழியர்கள்

ஈ. ஆசிரியர்கள்

 • நடுவணரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை இரத்துசெய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சார்ந்த உழவர்கள் குழுக்கள், ‘தில்லி சலோ’ என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வடமேற்கு தில்லியில் உள்ள நிரங்கரி மைதானத்தில், அமைதியான போராட்டங்களை நடத்த உழவர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உழவர்களைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நீக்கும்.

4. எந்த மாநிலமானது அதன் சட்டமன்ற உறுப்பினரும் ஓய்வுற்ற IPS அதிகாரியுமான லால்டுஹோமாவை அதன் மாநில சட்டசபையிலிருந்து விலக்கியுள்ளது?

அ. அஸ்ஸாம்

ஆ. மிசோரம்

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

 • மிசோரம் மாநில அரசு தனது சட்டமன்ற உறுப்பினரும் (MLA) ஓய்வுபெற்ற இ கா ப (IPS) அதிகாரியுமான லால்டுஹோமாவை சட்டமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது. முன்னாள் பிரதம அமைச்சர் இந்திராகாந்தியின் பாதுகாவலுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார். இவர், 1988ஆம் ஆண்டில், கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தற்போது, ஒரு சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவர் தன்னை ZPM கட்சியின் பிரதிநிதியாக அறிவித்த காரணத்தினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

5. “உணவு மற்றும் வேளாண்மையின் நிலை – 2020” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. உலக உணவுத் திட்டம்

ஆ. இந்திய உணவு நிறுவனம் (FCI)

இ. உலகளாவிய விவகாரங்களுக்கான சிகாகோ கவுன்சில்

ஈ. உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO)

 • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) “உணவு மற்றும் வேளாண்மையின் நிலைமை – 2020” என்ற தலைப்பிலான அறிக்கையை, “வேளாண்மையில் உள்ள நீர்சார்ந்த சவால்களை சமாளித்தல்” என்ற பொருளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதிக அளவு நீர்ப்பற்றாக்குறையில் உள்ளனர் என இவ்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் வாழும் அறுவருள் ஒருவர் கடும் நீர்ப்பற்றாக்குறையையோ அல்லது வேளாண் பற்றாக்குறையையோ எதிர்கொள்கிறார். அந்த 1.2 பில்லியன் மக்களுள் சுமார் 50% பேர் தெற்காசியாவிலும், 460 மில்லியன் மக்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ளனர்.

6. உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ. நவம்பர் 29

ஆ. நவம்பர் 30

இ. டிசம்பர் 01

ஈ. டிசம்பர் 02

 • உலகின் மிகக்கொடிய நோய்களுள் ஒன்று AIDS (Acquired Immune Deficiency Syndrome) இது HIV (Human Immuno–deficiency Virus) எனும் நச்சுயுரியால் ஏற்படுகிறது. இது மனித உடலின் இரத்த வெள்ளையணுக்களை அழிக்கிறது. பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கெதிராக உடல் போராடமுடியாத நிலையை உண்டாக்குகிறது. கடைசியில் மரணத்தை நிகழ்த்துகிறது.
 • இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிச.1 அன்று உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Ending the HIV/AIDS Epidemic: Resilience and Impact” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

7. பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ. டிசம்பர் 01

ஆ. டிசம்பர் 02

இ. டிசம்பர் 03

ஈ. டிசம்பர் 04

 • பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் (International Day for the Abolition of Slavery) ஐநா பொது அவையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.2 அன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். இந்த நாள் முதன்முதலில், கடந்த 1986ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.

8. இந்தியாவில் தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 26

ஆ. நவம்பர் 28

இ. நவம்பர் 30

ஈ. டிசம்பர் 02

 • இந்தியாவின் வெண்மைப்புரட்சியின் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளைக்குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவ.26 அன்று தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிறது. பால் உற்பத்தியில் உலகளவில் ஐம்பதாவது இடத்திலிருந்த இந்தியாவை, சில பத்தாண்டுகளிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றிய உலகின் மிகப்பெரிய பால் வளர்ச்சித்திட்டமான ‘Operation Flood’ஐ உருவாக்கியவர் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆவார்.

9. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ஜெயண்ட் மீட்டர்-அலை ரேடியோ தொலைநோக்கி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

 • GMRT (Giant Metre-wave Radio Telescope) என்பது மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ள ஓர் ஆய்வகமாகும். இது TATA அடிப்படை ஆராய்ச்சி மையம்-தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்ஸ் (IEEE) ஆனது இந்த ஆய்வகத்திற்கு, ‘Milestone’ என்ற தகுதியை வழங்கியுள்ளது. சர் C V இராமன் & சர் J C போஸ் ஆகியோரின் ஆய்வகங்களுக்குப் பிறகு இந்தியாவில், ‘Milestone’ அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது ஆய்வகம் இதுவாகும்.

10. “The Impact of the COVID-19 Pandemic on Trade and Development: Transitioning to a New Normal” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. பன்னாட்டு வர்த்தக மையம்

ஆ. உலக வர்த்தக அமைப்பு

இ. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

 • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா கூட்டமைப்பானது (UNCTAD), ‘வர்த்தகம் மற்றும் மேம்பாட்டில் COVID-19 தொற்றுநோயின் தாக்கம்: புதிய இயல்புக்கு மாறுதல்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. பயன்தரக்கூடிய COVID-19 தடுப்பூசியானது பொருளாதார சேதத்தைத் தடுக்காது என்று அறிக்கை கூறுகிறது. பொருளாதார பின்னடைவு என்பது நீண்டகாலமாக குறிப்பாக ஏழை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளால் அனுபவிக்கப்படும் என இவ்வறிக்கை கூறுகிறது.

1. Which new definition was included in the Motor Vehicles Amendment Act, 2019?

[A] Medical Vehicles

[B] Aggregators

[C] Cargo vehicles

[D] Electric Vehicles

 • The Motor Vehicles Act, 1988 has been amended by the Motor Vehicles Amendment Act, 2019 to include the definition of the term ‘Aggregator’.
 • The Ministry of Road Transport and Highways has issued the Motor Vehicle Aggregator Guidelines 2020, to regulate shared mobility services. The ride hailing services require permission from the state governments to start operations, and states will follow the norms specified by the Centre.

2. Chandrabhaga beach, which is the venue of the International Sand Art Festival 2020, is located in which state?

[A] Gujarat

[B] Odisha

[C] Chennai

[D] Kerala

 • Odisha is set to celebrate International Sand Art Festival, at its Chandrabhaga Beach starting from December 1, 2020. The five–day Sand Art Festival festival also coincides with the Konark Festival that is held in the backdrop of the Sun temple in Konark. On account of COVID–19 restrictions, only Indian sand artists will showcase their art using sand, bronze or wood. Related Questions

3. ‘Delhi Chalo’ is the name of the protest being held by which category of people in India?

[A] Farmers

[B] Sanitation Workers

[C] Bank Employees

[D] Teachers

 • Several groups of farmers from Punjab, Haryana and other parts of the country, demanding the repeal of the new agriculture reform laws passed by the Union Government, are holding protests under the name of ‘Delhi Chalo’. The farmers were granted permission to hold peaceful protests at Nirankari Ground in North west Delhi. As per the farmers, the new agriculture laws will dismantle the minimum support price (MSP) system.

4. Which organization publishes the report titled “The State of Food and Agriculture (SOFA) 2020″?

[A] World Food Programme

[B] Food Corporation of India (FCI)

[C] Chicago Council on Global Affairs

[D] Food and Agriculture Organization (FAO)

 • The Food and Agriculture Organization (FAO) has published a flagship report titled “The State of Food and Agriculture (SOFA) 2020″, Overcoming Water Challenges in Agriculture as its theme”.
 • The report states that around 1.2 billion people across the globe are under high levels of water stress, which means that one out of every 6 people in the world are facing a severe water stress or scarcity in agriculture. Around 50% of the 1.2 billion people lived in South Asia and 460 million people lived in east and southeast asia.

5. Which state debarred its Member of Legislative Assembly and retired IPS officer Lalduhoma, from its state assembly?

[A] Assam

[B] Mizoram

[C] Maharashtra

[D] Madhya Pradesh

 • Mizoram has debarred its Member of Legislative Assembly (MLA) and retired IPS officer Lalduhoma from the state assembly. He was in charge of former Prime Minister Indira Gandhi’s security. In 1988, he was the first Member of Parliament to have been disqualified from the Lok Sabha, under the Anti–Defection Law. At present, the charge on him is despite being elected as an independent candidate, he declared himself as a representative of ZPM.

6. World AIDS Day is observed all over the world on which date?

[A] November 29

[B] November 30

[C] December 01

[D] December 02

 • World AIDS Day is observed on 1 December every year. The day aims to raise public awareness about AIDSThe theme of the 2019 World AIDS Day is “Ending the HIV/AIDS Epidemic: Resilience and Impact”. Acquired Immuno Deficiency Syndrome (AIDS) is a pandemic disease that is caused due to the infection of the Human Immunodeficiency Virus (HIV). HIV causes damage to the immune system.

7. International Day for the Abolition of Slavery is observed on which date?

[A] December 01

[B] December 02

[C] December 03

[D] December 04

 • The International Day for the Abolition of Slavery is a yearly event on December.2, organized by the United Nations General Assembly (UNGA). The day was first celebrated in the year 1986.

8. On which date, National Milk Day is celebrated in India?

[A] November 26

[B] November 28

[C] November 30

[D] November 02

 • The National Milk Day is celebrated every year on 26th of November to commemorate the birth anniversary of Dr. Verghese Kurien, the father of India’s White Revolution. The White Revolution (also known as Operation Flood) was launched in 1970. It is considered to be world’s biggest dairy development programme which transformed India from a milk deficient nation to the one of the largest producers of milk in the world.

9. Giant Metre–wave Radio Telescope, which was making news recently, is located in which Indian state?

[A] Madhya Pradesh

[B] Gujarat

[C] Maharashtra

[D] Karnataka

 • GMRT (Giant Metre–wave Radio Telescope) is an observatory located in Pune, Maharashtra. It is operated by the Tata Institute of Fundamental Research– National Centre for Radio Astrophysics. US based technical organisation, the Institute of Electrical and Electronics Engineers (IEEE) has granted the status of ‘Milestone’ to the observatory. This is the third facility to receive the milestone status in India after the works of Sir C V Raman and Sir J C Bose.

10. Which body released the report ‘The Impact of the COVID–19 Pandemic on Trade and Development: Transitioning to a New Normal’?

[A] International Trade Centre

[B] World Trade Organization

[C] United Nations Conference on Trade and Development

[D] 4) International Monetary Fund

 • United Nations Conference on Trade and Development (UNCTAD) released a report titled ‘The Impact of the COVID–19 Pandemic on Trade and Development: Transitioning to a New Normal’. The report states that a viable novel coronavirus disease (COVID–19) vaccine will not halt the spread of economic damage. The economic setback will be experienced for a long time especially by the poorest and most vulnerable countries.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!