Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

1st 2nd March 2020 Current Affairs in Tamil & English

1st 2nd March 2020 Current Affairs in Tamil & English

1st 2nd March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

1st 2nd March Current Affairs Tamil

1st 2nd March Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.உலகின் இரண்டாவது இளம் கோடீசுவரராக மாறியுள்ள ரித்தேஷ் அகர்வால், எந்த இந்திய துளிர் நிறுவனத்தின் நிறுவனராவார்?

அ. சொமொடோ

ஆ. ஓயோ தங்கும் விடுதிகள்

இ. ஸ்விகி

ஈ. பைஜூஸ்

  • அண்மையில் வெளியான, “ஹுருன் உலக பணக்காரர்கள் பட்டியல் – 2020”இன்படி, OYO தாங்கும் விடுதிகளின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் உலகின் இரண்டாவது இளம் கோடீசுவரராக அறிவிக்கப் -பட்டுள்ளார். 24 வயதான அவரின் சொத்து மதிப்பு, $1.1 பில்லியன் டாலராகும். பன்னாட்டளவில், அழகுசாதன நிறுவன உரிமையாளர் கைலி ஜென்னர் (22) முதலிடத்தில் உள்ளார். 40 வயதுக்கு உட்பட்ட சுயமாக முன்னேறி கோடீசுவரராக மாறியுள்ள இந்தியராகவும் அவர் மாறியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஜெரோதா, பிளிப்கார்ட் மற்றும் பைஜூஸ் நிறுவனர்கள் உள்ளனர்.

2.சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானத்தை, சமீபத்தில் நிறைவேற்றிய மாநிலம் எது?

அ. கேரளம்

ஆ. பீகார்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிசா

  • அண்மையில், மாநிலத்தில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானத்தை பீகார் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், சட்டசபையில், சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்மொழிந்தார். அது, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டதாகவும், இத்தீர்மானம் நடுவண் அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அம்மாநிலத்தின் சட்டமன்ற அவைத்தலைவர் அறிவித்தார்.

3.அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்ட டயமண்ட் இளவரசி பயணக்கப்பல், எந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. சீனா

இ. தென் கொரியா

ஈ. ஜப்பான்

  • பல பயணிகளுக்கும் கப்பல் பணியாளர்களுக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டபின்னர், ‘டயமண்ட் பிரின்ஸஸ்’ என்னும் உல்லாசப்பயணக்கப்பல், ஜப்பான் நாட்டின் யோகோகாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது.
  • அண்மையில், ஒரு சிறப்பு ஏர் இந்தியா விமானம் டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்று, அந்தக்கப்பலில் இருந்த 119 இந்திய நாட்டு குடிமக்களை (113 கப்பல் பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள்) திரும்ப அழைத்துவந்தது. மேலும், ஐந்து அயல்நாட்டு குடிகளும் அழைத்துவரப்பட்டனர்; அவர்கள் அனைவரும், ஹரியானாவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

4. ‘CARO 2020’ தொடர்புடைய துறை எது?

அ. கொரோனா வைரஸ் பாதிப்பு

ஆ. நிறுவனங்களுக்கான விதிமுறைகள்

இ. தானியங்கி ஊர்தித்துறை மாநாடு

ஈ. மருத்துவ மாநாடு

  • சமீபத்தில், மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது நிறுவனங்கள் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை, 2020 (CARO 2020)ஐ அறிவித்தது. அறிவிப்பின்படி, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தணிக்கையாளருக்கு, இடித்துரைப்பாளரின் (whistle-blower) அனைத்து முறைகேடு புகார்கள் குறித்தும் கட்டாயமாக தெரிவிக்கவேண்டும்.
  • மேலும், தணிக்கை அறிக்கைகளில் புகார்கள்பற்றி குறிப்பிடப்பட வேண்டும். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி அதன்பின்வரும் அனைத்து நிதியாண்டுகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து தணிக்கை -களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.

5. “ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் நோயறிதல் & சொற்களஞ்சியங்களைத் தரப்படுத்தல்” குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்ற நகரம் எது?

அ. லக்னோ

ஆ. கான்பூர்

இ. புது தில்லி

ஈ. வாரணாசி

  • “ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் நோயறிதல் & சொற்களஞ்சியங்களைத் தரப்படுத்தல் – ICoSDiTAUS-2020” குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு சமீபத்தில் புது தில்லியில் நிறைவடைந்தது. “பாரம்பரிய மருத்துவ முறைகளில் நோயறிதல் குறித்த தரவை சேகரித்தல் மற்றும் அவற்றை வகைப்படுத்துதல்பற்றிய புது தில்லி பிரகடனம்” இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் 16 நாடுகள் பங்கேற்றன. நோயறிதல் மற்றும் சொற்களஞ்சியங்களின் தரப்படுத்தலுக்கென அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு நிகழ்வு இதுவாகும்.

6. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், எத்தனை மொழிகளுக்கு, ‘செம்மொழி’ என்னும் தகுதி வழங்கப்பட்டுள்ளது?

அ. 4

ஆ. 6

இ. 8

ஈ. 10

  • இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா & சமற்கிருதம் ஆகிய 6 மொழிகளுக்கு ‘செம்மொழி’ என்னும் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் 2 அவைகளும் ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி, மராத்தி மொழிக்கு, ‘செம்மொழி’ என்னும் தகுதியை வழங்குமாறு நடுவணரசைக்கோரின.
  • ‘செம்மொழி’ என அறிவிக்கப்பட்ட மொழிகள் அவற்றின் ஆய்வுக்கென சிறப்பு மையங்களை அமைத்துக் கொள்வது மற்றும் அம்மொழிசார்ந்த அறிஞர்களுக்கு பன்னாட்டு விருதுகளை வழங்குவதுபோன்ற பல்வேறு நன்மைகளைக்கொண்டுள்ளன.

7.இந்திய பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொகுதியைத்தொடங்க, NITI ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் அண்மையில் கூட்டிணைந்த சங்கம் எது?

அ. NASSCOM

ஆ. FICCI

இ. CII

ஈ. T–Hub

  • தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது (NASSCOM) அண்மையில், NITI ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் இணைந்து, இந்திய பள்ளி மாணவர்களுக்கென ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொகுதியை அறிமுகப்படுத்தியது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இந்தத் தொகுதி, கிட்டத்தட்ட 5,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் 2.5 மில்லியன் மாணவர்களை இது சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI கருத்துருக்களில் செயல்பாடுகள் மற்றும் காணொலிகளைக்கொண்ட இத்தொகுதி, பிப்.27 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

8.நடப்பாண்டு (2020) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Children in Science

ஆ. Youth in Science

இ. Women in Science

ஈ. Artificial Intelligence in Science

  • சர்.CV.இராமன் நோபல் பரிசுபெறுவதற்கு வழிவகுத்த, “இராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட நாளை (28-02-1928) நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. “அறிவியலில் பெண்கள்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும். அன்றைய நாள், ‘தேசிய அறிவியல் பிரபலப்படுத்துதல் – National Science Popularization’ விருதுகளையும் அரசாங்கம் வழங்குகிறது.

9.நிலப்பதிவேடுகள் மற்றும் சேவைகள் அட்டவணையை வெளியிடும் அமைப்பு எது?

அ. தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் (NCAER)

ஆ. இந்திய தொழிற்துறைகள் கூட்டமைப்பு (CII)

இ. இந்திய தரநிலை கழகம் (QCI)

ஈ. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD)

  • தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் (NCAER) அண்மையில் NCAER நிலப்பதிவேடுகள் மற்றும் சேவைகள் குறியீட்டை (N-LRSI 2020) வெளியிட்டது. இந்தக் குறியீட்டின்படி, மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீசுகர் மற்றும் தமிழ்நாடு ஆகியவை சிறப்பாக செயல்படும் 5 மாநிலங்களாகும். 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலப்பதிவேடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அவற்றின் தரத்தை இந்தக் குறியீடு மதிப்பீடு செய்கிறது.

10.அண்மையில், 2 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த இந்திய கொடுப்பனவு (payment) வங்கி எது?

அ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி

ஆ. இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவுவங்கி

இ. பினோ கொடுப்பனவு வங்கி

ஈ. பேடிஎம் கொடுப்பனவு வங்கி

  • இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவுவங்கி (IPPB) வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகக்குறுகிய காலத்தில் 2 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. அனைவருக்கும் நிதி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற அரசின் நன்னோக்கத்தின் அடிப்படையில், கடந்த 2018 செப்டம்பர்.1 அன்று இந்தியப் பிரதமரால் IPPB தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 2019 செப்டம்பரில், ஆதார் அடிப்படையிலான சேவையை IPPB தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • பத்திரப்பதிவுக்கு முன்பே நிலங்களை உட்பிரிவு செய்து அதற்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இப்புதிய திட்டம், சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ஓசூர் வட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • இந்திய தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசரகால உதவித்துறையில் அமைப்பு மற்றும் தனிநபர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், “ஃபிஸ்ட்” விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டப்பணிக -ளைப் பாராட்டி அச்சங்கம் சார்பில் “ஃபிஸ்ட்” விருது தில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், உதகமண்டலம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் 60% நிதி மற்றும் மாநில அரசின் 40% நிதியில் இந்தக் கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்படவுள்ளன. இந்நிலையில், இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மார்ச்.1 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • இந்திய தொழிலகக்கூட்டமைப்பின் (CII) தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவராக ஹரி K தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், CII தமிழ்நாட்டுப் பிரிவின் துணைத்தலைவராக S சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!