Tnpsc

1st & 2nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 01

ஆ) மார்ச் 02

இ) மார்ச் 03

ஈ) மார்ச் 04

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.

2. பன்னாட்டு துருவக்கரடிகள் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) பிப்ரவரி 25

ஆ) பிப்ரவரி 27

இ) பிப்ரவரி 28

ஈ) மார்ச் 01

  • பன்னாட்டு துருவக்கரடிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.27 அன்று துருவக்கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு துருவக்கரடிகள் நிறுவனடிக்கால் இந்நாள் ஏற்பாடுசெய்யப்படுகிறது. புவி வெப்பமடைதல் மற்றும் உருகிவரும் கடல்பனிக்கட்டிகள் ஆகியவை துருவக்கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. 30ஆவது அட்ரியாடிக் பியர்ல் போட்டி நடைபெற்ற நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) மாண்டினீக்ரோ

ஈ) இத்தாலி

  • முப்பதாவது அட்ரியாடிக் பியர்ல் போட்டியானது மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்றது. 5 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் இந்திய மகளிர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஸ்பெகி -ஸ்தான் 2ஆம் இடத்திலும், செக் குடியரசு 3ஆம் இடத்திலும் உள்ளது.

4. நடப்பாண்டு (2021) ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தைக்கு இணைந்து தலைமை தாங்கிய இந்திய அமைப்பு எது?

அ) புனே பன்னாட்டு மையம்

ஆ) ஐஐடி – மெட்ராஸ்

இ) ஐஐம் – ஆமதாபாத்

ஈ) BITS பிலானி

  • 2021 ஆசிய பொருளாதார பேச்சவார்த்தை நிகழ்வுக்கு இந்தியாவின் புனே பன்னாட்டு மையம் இணைந்து தலைமைதாங்கியது. இந்நிகழ்வி -ல், மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ் மற்றும் பூடான் ஆகிய நாடு -களைச்சார்ந்தோர் பங்கேற்றனர்.
  • ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தை என்பது வெளியுறவு அமைச்சகத்தி -ன் முதன்மை புவி-பொருளாதாரம் சார்ந்த மாநாடு ஆகும்.

5. VL-SRSAM என்பது எந்த வகை ஏவுகணையாகும்?

அ) வானிலிருந்து தாக்கும் ஏவுகணை

ஆ) தரையிலிருந்து தாக்கும் ஏவுகணை

இ) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

ஈ) தரையிலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது VL-SRSAM (Vertical Launch Short Range Surface to Air Missile) ஏவுகணையை இருமுறை வெற்றிகரமாக சோதனைசெய்துள்ளது. இந்த ஏவுகணையை இந்திய கடற்படையில் பணியமர்த்துவதற்காக DRDO இதனை சிறப்பு முறையில் வடிவமைத்துள்ளது. பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்த்து தாக்குவாதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

6. அண்மையில் NITI ஆயோக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘DigiBoxx’ என்றால் என்ன?

அ) சொத்து மேலாண்மை தளம்

ஆ) ஆவணக்களஞ்சியம்

இ) சமூக ஊடகம்

ஈ) செய்தியிடல் செயலி

  • NITI ஆயோகின் தலைமைச் செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்தி -யாவின் முதல் டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான ‘டிஜிபாக்ஸை’ அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஒரு டிஜிட்டல்வழியிலான கோப்பு சேமிப்பு, பகிர்வு & மேலாண்மை மென்பொருளாகும். இது, அனைத்து கோப்புக
    -ளையும் ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்தில் சேமிப்பதற்கான ஒரு பாது -காப்பான வழியை வழங்குகிறது.

7. ‘இ-தர்தி ஜியோ’ என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) வீட்டுவசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) புவி அறிவியல் அமைச்சகம்

ஈ) எரிசக்தி அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, அண்மையில், ‘இ-தர்தி ஜியோ’ இணையதளத்தை தொடங்கிவைத்தார். இம்மேலாண்மை தகவலமைப்பில், வரைபடங்கள் மற்றும் குத்தகை வரைவுகள்போன்ற சொத்துசார்ந்த வரைபடங்களை ஒருங்கிணைத்து, அவற்றை புவியியல் தகவல் அமைப்புடன் கூடிய ஓர் அமைப்பாக மாற்றுவதை இந்தத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. உள்மாநில மின்சார-பரிமாற்ற திட்டத்தை மேம்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு $304 மில்லியன் கடனை வழங்கவுள்ள நிறுவனம் எது?

அ) ADB

ஆ) உலக வங்கி

இ) AIIB

ஈ) புதிய வளர்ச்சி வங்கி

  • இந்தியாவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் (AIIB) அஸ்ஸாம் உள்மாநில மின்சார-பரிமாற்ற அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக $304 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தத் திட்டம் துணை மின்நிலையங்களை நிர்மாணிப்பதையும் தேவையான பரிமா -ற்ற வடங்களை அமைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

9. NASA & ஜெர்மன் விண்வெளி ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகள், பின்வரும் எந்தக் கோளில் உயிர்வாழக்கூடும்?

அ) வியாழன்

ஆ) வெள்ளி

இ) செவ்வாய்

ஈ) புதன்

  • NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகளால் செவ்வாய் கோளில் உயிர்வாழக்கூடும். ஓர் அறிவியல்பூர்வ பலூனைக்கொண்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை புவியின் அடுக்கு மண்டலம் வரை ஏவுவதன்மூலம் செவ்வாய் போன்ற சூழ்நிலையில் அவை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர்.

10. இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதை கட்டப்படுகிற நகரம் எது?

அ) சென்னை

ஆ) கொச்சின்

இ) மும்பை

ஈ) கொல்கத்தா

  • மும்பை நகரத்தின் கடலோர சாலைகள் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதையானது மும்பையில் கட்டப்பட உள்ளது. இது, வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2.07 கிமீ நீளத்தைக்கொண்டுள்ளன இந்த இரட்டைச்சுரங்கப்பாதைகள், கடல்படுகைக்கு 20 மீட்டர் கீழே அமைந்திருக்கும்.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

1. 19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்.

பிரேசிலின் அமேசேனியா உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை (28.02.2021) பிஎஸ்எல்வி-சி 51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சதீஸ் தவண் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78 – வது ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி பிரிவில் 53 – வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக அனுப்புவதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் (New Space India Limited) என்ற அமைப்பும், உள்நாட்டில் வடிவமைக்கப்படும் செயற்கைக் கோள்களை அனுப்ப 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. அதன்பலனாக தற்போது ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பில் அதிக அளவிலான தனியார் மற்றும் கல்வி சார்நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி 51 ராக்கெட் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி – 51 ராக்கெட் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட19 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் (என்எஸ்ஐஎல்) சார்பில் முதல் முறையாக வர்த்தகரீதியாக (வணிகரீதியாக) பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக இஸ்ரோ நிறுவனத்துக்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கும். இந்த பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசேனியா-1 செயற்கைக்கோள், இந்தியாவின், சதீஸ் தவண் செயற்கைக்கோள், ஜிடி சாட், ஜிஹெச்ஆர்சிஇ செயற்கைக்கோள், ஸ்ரீ சக்தி செயற்கைக்கோள், பாதுகாப்புத் துறையின் சிந்து நேத்ரா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது தவிர அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் நானோ கனெக்ட் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, யுனிட்டி சாட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 3 செயற்கைக்கோள்களை, கோவையைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி இன்ஸ்ட்டியூட் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் ஜேபிஆர் கல்லூரி, நாக்பூர் ஜிஹெச் ரெய்சோனி கல்லூரியின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இதில் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் அமேசான் காடு அழிப்புத் திட்டங்களைக் கண்காணிக்கவும், காடுகளின் சூழல், வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமேசானியா செயற்கைக்கோள் 637 கிலோ எடை கொண்டதாகும். இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் 4 படிநிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் 3-ம் படிநிலையில் திடநிலை எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது படிநிலையில் திரவ நிலையில் எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் விண்ணிலிருந்து புறப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்4 இன்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பிரதான செயற்கைக்கோளான பிரேசிலின் அமேசேனியா செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். அதன்பின் 58 நிமிடங்களுக்குப் பின் ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, மீதமுள்ள 18 செயற்கைக்கோள்களையும் அடுத்த 4 நிமிடங்களில் நிலைநிறுத்தும். ஒட்டுமொத்தமாக ராக்கெட் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணிக்கும். இந்த திட்டத்தில் ஏவப்பட்ட சதீஷ் தவண் சாட் நானோ செயற்கைக்கோளில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதனுடன் 25,000 இந்தியா்களின் பெயா்கள் மற்றும் டிஜிட்டல் வடிவ பகவத் கீதை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்எல்வி 50-வது வெற்றி:

விண்ணில் ஏவப்பட்டுள்ள சதீஷ் தவான் சாட் நானோ செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இஸ்ரோ தலைவர் கே.சிவன், விண்வெளித் துறை செயலர் ஆர்.உமாமகேஸ்வரன் உட்பட 25 ஆயிரம் இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் வடிவிலான பகவத் கீதை வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது வெற்றி இதுவாகும். இதுவரை ஏவப்பட்ட 53 பிஎஸ்எல்வி ராக்கெட்களில் 2 தோல்வியும், ஒன்று பகுதி தோல்வியும் அடைந்துள்ளன. பிஎஸ்எல்வி-சி51, என்எஸ்ஐஎல் நிறுவனத்தின் மூலம் வணிகரீதியாக செலுத்தப்படும் முதல் ராக்கெட். எனினும், இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ் உட்பட 6 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வணிகரீதியான முதல் பிஎஸ்எல்வி-சி51 திட்டத்தின் வெற்றிக்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இதுநம்நாட்டின் விண்வெளி சீர்திருத்தங்களில் புது சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 4 சிறியவை உட்பட 18 துணை செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் கண்டுபிடித்தல் திறனை வெளிகாட்டுகிறது’ என குறிப்பிட்டுள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.

2. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-50ராக்கெட்:

தகவல் தொடர்புக்காக, இஸ்ரோ சார்பில் 2011-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாக அதிநவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் இன்று (டிச.17, 2020) மதியம் 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகளாகும். இதிலுள்ள விரிவுபடுத்தப்பட்ட ‘சி பேண்ட் ’அலைக்கற்றைகள், இந்திய நிலப்பரப்பு பகுதிகளுடன், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத் தீவுகள் வரை தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்கஉதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கல்வி, மருத்துவம் ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இணையவழிக்கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவையை சிஎம்எஸ்-01 செயற்கைகோள் எளிதாக்கும்.

  1. இது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
  2. பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 77 ராக்கெட்டாகும்.

3. பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்:

இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01 (EOS-01) – 1 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று மாலை (நவ.7, 2020) விண்ணில் ஏவப்படுகிறது. புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ.7, 2020) மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இஓஎஸ், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள்கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படும். இதிலுள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும். இந்த ராக்கெட்டில் லிதுவேனியாவின் ஒரு செயற்கைக்கோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா 4 லெமூர் செயற்கைக்கோள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்படுகின்றன.

4. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் (பன்வாரி லால் புரோஹித்) ஒப்புதல்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நீண்டகாலமாக கோரி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. முதல்வர் பழனிசாமியை பாமகநிர்வாகிகள் சந்தித்து, இதுதொடர்பாக மனுக்களையும் வழங்கினர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான விவரங்களை சேகரிக்க, நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். அந்த ஆணையம், சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமசோதா, கடந்த 26-ம் தேதி, 2021 இல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்பட்டோர் வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதரமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 2.5 சதவீதம் வழங்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5. நீதிபதி குலசேகரன் ஆணையம்:

அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ள தேவையான சாதிவாரி புள்ளி விவரங்களை பெறுவதற்கும் தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து (டிசம்பர் 7, 2021) முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். நீதிபதி குலசேகரன் கூறியதாவது: எந்த அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டநாதன் ஆணையம், 1985-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

6. பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான குஞ்சராணி தேவி பிறந்தநாள் இன்று (மார்ச் 1).

பளுதூக்கும் போட்டியில் இந்தியப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் குஞ்சராணி தேவி. ‘பெண் ஹெர்குலஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், மணிப்பூரில் உள்ள இம்பால் நகரில் 1968-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே ஹாக்கி, கால்பந்து, ஓட்டம், வலுதூக்கும் போட்டி (பவர் லிஃப்டிங்) என்று பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வந்தார். 1982-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷா பதக்கங்களாக அள்ளிக் குவிக்க, அவரைப் போலவே தானும் விளையாட்டில் பெரிய நட்சத்திரமாக வர விரும்பினார். இந்தச் சூழலில், பள்ளியில் இருந்த குஞ்சராணியின் பயிற்சியாளர், சற்று குள்ளமான அவரது உடல்வாகு, வலுதூக்கும் போட்டிகளுக்கு ஏற்றதாக இருப்பதாக அறிவுரை கூறியுள்ளார். பயிற்சியாளரின் இந்த அறிவுரையை ஏற்ற குஞ்சராணி தேவி, இந்த விளையாட்டில் பயிற்சியை தீவிரப்படுத்தினார். 1985-ம் ஆண்டில் நடந்த முதலாவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் (வெயிட் லிஃப்டிங்) போட்டி சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலுதூக்கும் போட்டிக்கு பதிலாக பளுதூக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தினார் குஞ்சராணி தேவி. 1987-ம் ஆண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் 2 தேசிய சாதனைகளைப் படைத்தவர், அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் தடம் பதித்தார். 1990 மற்றும் 1994-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், உலக பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மத்திய அரசின் அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள குஞ்சராணி தேவி, வடகிழக்கு மாநில விளையாட்டு வீரர்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

7. இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில் முதியோர் நல மருத்துவர் நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: 40 ஆண்டுகால மருத்துவ சேவைக்கு பாராட்டு.

உலகளவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாடு, காணொலி மூலம் கடந்த பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது.

8. பேரூராட்சிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக தாம்பரம் அகரம்தென் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.

தாம்பரம் பகுதியில் உள்ள பேரூராட்சிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக தாம்பரம் அகரம்தென் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. திருக்குறளை ஹூப்ரு (யூதர்களின் மொழி) மொழியில் மொழிபெயர்க்க திட்டம்.

திருக்குறளை ஹூப்ரு மொழியில் மொழிபெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள அரசர் பள்ளியில் உலக திருக்குறள் மாநாடு பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடை பெற்றது. தமிழக அரசு சார்பில் சீனம், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

10. மழைநீரை சேகரிக்க 100 நாள் இயக்கம் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு.

பெரும்பான்மையான மாநிலங்களில் மே, ஜூன் மாதங்களில் மழை பெய்கிறது. இப்போதே மழை நீர் சேகரிப்புக்காக 100 நாள் இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். இதற்காக இன்னும் சில நாட்களில் ஜல சக்தி துறை சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டம் தொடங்கப்படும். இதன்படி, ‘எப்போது, எங்கு மழை பெய்தாலும் அந்த மழைநீரை சிந்தாமல் சிதறாமல் சேகரிக்க வேண்டும்’ என்ற லட்சியத்தை அனைவரும் கண்ணும் கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த லட்சிய திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

11. குழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சிறுவன் ஆயுஷ் குமார் குந்தியா. வயது 10. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அந்தக் கால கட்டத்தில், டிடி தொலைக் காட்சியில் ராமாயணம் ஒளிபரப்பானது. அதைப் பார்த்து குழந்தைகளுக்காக ‘பிலகா ராமாயணா’ (குழந்தைக்கான ராமாயணம்) என்ற தலைப்பில் 104 பக்கங்களுக்கு தனது தாய்மொழியான ஒடியா மொழியில் எழுதி முடித்துள்ளான் ஆயுஷ் குமார்.

12. ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட முடிவு: தமிழக அரசு உறுதி அளித்தவாறு நிதி வழங்கப்படாததால் சிக்கல்.

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக தமிழ் போதிக்கப்படு கிறது. ஜெர்மனியிலும் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம்1963-ல் தொடங்கப்பட்டது. தமிழால் ஈர்க்கப்பட்டு அதைப் பயின்று, தமிழ் அறிஞரான க்ளவுஸ்லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மானியர் இதனை நிறுவினார். தற்போது முனைவர் பட்டத்துக்கான 5 படிப்புகள் உட்பட தமிழில் இளங்கலை படிப்புகளிலும் இங்கு மாணவர்கள் பயில்கின்றனர். இடையில் இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்துக்கு வெளியே உள்ள 2 பெரிய நூலகங்களில் சிகாகோவுடன், கொலோனும் ஒன்றாக உள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ல் பல்கலைக்கழக நிர்வாக முடிவின்படி, தமிழ் பிரிவின் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020-ல் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் தமிழ் இருக்கைகளில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர்கள் அதைத் தடுக்க முயன்றனர். அமெரிக்கவாழ் இந்தியர்களான அவர்கள் 2018-ல் திரட்டி பல்கலைக்கழகத்துக்கு அளித்த நிதியால், மூடும் முடிவு ஜூன் 2022 வரை தள்ளி வைக்கப்பட்டது. பேராசிரியர் உல்ரிக்கின் ஓய்வுக்கு பிறகும் பாதி வேலைநேரத்துடன் தற்காலிகமாக அவரது பணியை நீட்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வெட்டர் மான் எனும் ஜெர்மானியர் நிரந்தரப் பணியில் தொடர்ந்தார். ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் ஹெடில்பர்க் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்க் கல்வி மற்றும் ஆய்வுக்கானப் பிரிவுகள் செயல்படுகின்றன.

13. எரிசக்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த மாநாட்டின்போது சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எரிசக்தி மாநாடு (செராவீக் 2021) காணொலி வாயிலாக நாளை தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது வழங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்களை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறார். 50 கோடி இந்தியர்கள் பயன் அடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 35 கோடி ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை செலுத்தப்படுகிறது. அமைப்புசாரா துறையை சேர்ந்த 42 கோடி பேர் பயன் அடையும் வகையில் ஓய்வூதிய திட்டம், இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், 18,000 குக்கிராமங்களுக்கு மின்சார வசதி, ஏழை குடும்பங்களுக்கு 1.25 கோடி வீடுகள், விவசாயிகளுக்கு நிதியுதவி, மின்னணு வேளாண் சந்தை, தூய்மை இந்தியா திட்டம், நீர்வழிப் போக்குவரத்து, உதான் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார். சர்வதேச எரிசக்தி உற்பத்திக் கூடமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். பருவநிலை மாறுபாட்டை தடுக்க உறுதி பூண்டுள்ளார். அவரது முயற்சியால் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உதயமாகியுள்ளது” என்று செராவீக் 2021 எரிசக்தி மாநாடு அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. எரிசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்ற உள்ளார். அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர், அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்பு பிரதிநிதி ஜான் கெர்ரி, கொலம்பிய அதிபர் இவான் டுகே மார்கஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

14. மடகாஸ்கருக்கு இந்தியா நன்கொடை: இந்தியா நன்கொடையளித்த டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை இயந்திரம்.

இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டெலிகோபால்ட் இயந்திரம், மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தீவு நாடான மடகாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை அளிக்கும் இந்த இயந்திரமான ‘பாபட்ரான்- 2’ -ஐ மடகாஸ்கரின் தலைநகரான அன்டனனரிவோவில் உள்ள ஜோசப் ரவோஹாங்கி ஆண்ட்ரியனாவலோனா மருத்துவமனையில் (எச்ஜேஆா்ஏ) அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ஆண்ட்ரி ராஜோலினா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரஜோலினா பேசுகையில், புற்றுநோய் என்பது நம் சமூகத்தில் அதிகமான மக்களை பாதிக்கும் நோயாக மாறி விட்டது. மேலும் உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களில் இந்த நோயும் ஒன்றாக உள்ளது என்றார். மடகாஸ்கருக்கான இந்திய தூதர் அபய் குமார் பேசுகையில், உலகளவில் ஏராளமான மக்களை பாதிக்கும் புற்றுநோய் ஒரு பெரிய சுகாதார பிரச்னையாக உள்ளது என்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச்சில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மடகாஸ்கருக்கு விஜயம் செய்தபோது, பாபட்ரான் இயந்திரம் மடகாஸ்கருக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துஇந்தியாவில் இருந்து இந்த இயந்திரம் மடகாஸ்கருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

15. இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாள் (02.03.2021)

இலங்கை விமானப் படையின் (எஸ்எல்ஏஎஃப்) 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு சென்றுள்ளன. 70 ஆவது ஆண்டு நிறைவு, மார்ச் 2 ஆம் தேதி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், மார்ச் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காலி முகத்திடலில் விமானக் கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கைக்கு சென்றுள்ளன. அதற்கான, பயிற்சி நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டன.

16. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி.

ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி சீனாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன்& ஜான்சன் தடுப்பூசிக்கு போட்டியாக சீனாவின் இந்த தடுப்பூசி பார்க்கப்படுகிறது. சீன அரசு நாளிதழில் இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவின் முதல் ஏடி-5 என்கோவ் கொரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை (26.02.2021) வெளியிடப்பட்டது. அந்த தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனை கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி தொடங்கியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட 14-வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனாவில் சைனோவாக், சைனோஃபார்ம், கேன்சைனோபயோ, வூஹான் உயிரியியல் பொருள் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

17. ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி.

ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரே முறை செலுத்தக்கூடிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நாட்டில் அனுமதி பெற்றுள்ள 3-ஆவது கரோனா தடுப்பூசி இதுவாகும். இதுகுறித்து அதிபா் ஜோ பைடன் கூறியதாவது: ஜான்ஸன் அண்டு ஜான்ஸனின் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உற்சாகமளிக்கிறது. அமெரிக்காவில் கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவதற்கு இது உதவும். இந்தத் தகவல் அனைத்து அமெரிக்கா்களுக்கும் உற்சாகமளிக்கும் செய்தியாக இருக்கும் என்றாா் அவா். மற்ற கரோனா தடுப்பூசிகளை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செலுத்த வேண்டியுள்ள நிலையில், ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் தடுப்பூசிகளை ஒரே முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு இத்தகைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18. டிஜி பாக்ஸ் (டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளம்) என்பது ஒரு இந்திய டிஜிட்டல் கோப்பு சேமிப்பு, பகிர்வு மற்றும் மேலாண்மை மென்பொருள் சேவை தளமாகும். இதுவணிக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்களது கோப்புகளை சேமிப்பதற்கான இட வசதியை வழங்கும் தளமாகும்.

டிஜிபாக்ஸ் செயல் பாடுகளை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் அதிக அளவில் ஈடுபடுவது என்பது மிகவும் பெருமைக்குரியதாகவும் அவர்களின் பங்களிப்பானது சுயசார்பு இந்தியா திட்ட மேம்பாட்டிற்கு ஆதரவு அளிக் கும் விதமாகவும் உள்ளது. குறைந்த கட்டணத்தில் கோப்புகளை பாதுகாப்பாக சேமிக்க உதவும் டிஜிட்டல் கோப்புகள் சேமிப்பு தளமான டிஜிபாக்ஸ் செயல்பாடுகளை இங்கு துவக்கி வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது பல்வேறு விதமான பிராந்திய மொழிகளை கொண்டுள்ளது. இந் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு இந்நிறுவனத்தின் ‘வோக்கல் பார் லோக்கல்’ செயலியை பதிவிறக்கம் செய்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இது குறித்து டிஜிபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்னாப் மித்ரா கூறுகையில், மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘சுயசார்பு இந்தியா’ ஆகிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை மேலும் நாங்கள் விரிவுபடுத்தி இதே போன்று பல்வேறு நகரங்களிலும் துவக்க உள்ளோம் என்று தெரிவித்தார். இது “இன்ஸ்டா ஷேர்” என்ற கோப்பு பகிர்வு அம்சத்தையும் கொண்டுள்ளது.

20. சரக்குகள் டெலிவரிக்கு மஹிந்திராவுடன் அமேசான் ஒப்பந்தம்.

1. When is the ‘Zero Discrimination Day’ observed annually across the world?

A) March 01

B) March 02

C) March 03

D) March 04

  • The ‘Zero Discrimination Day’ is observed annually across the world on March 1, by UNAIDS. UNAIDS is the leading global forum which aims to end AIDS as a public health threat by 2030.

2. When is International Polar Bear Day observed?

A) February 25

B) February 27

C) February 28

D) March 01

  • International Polar Bear Day is an annual event celebrated every Feb.27 to raise awareness about the conservation status of the polar bear. International Polar Bear Day is organized by Polar Bears International to raise awareness about the impact of global warming and reduced sea ice on polar bear populations.

3. In which country the 30th Adriatic Pearl tournament took place?

A) India

B) Japan

C) Montenegro

D) Italy

  • The 30th Adriatic Pearl tournament was organised in Budva, Montenegro. Indian Women’s team topped the tournament with 10 medals – 5 gold, 3 silver and 2 bronze. This was followed by Uzbekistan in second place and Czech Republic in third place.

4. Which organisation in India is to co–chair 2021 Asia Economic Dialogue?

A) Pune International Center

B) IIT – Madras

C) IIM – Ahmedabad

D) BITS Pilani

  • The 2021 Asia Economic Dialogue would be co–chaired by Pune International Centre, India. The event would witness the participation of Union External Affairs Minister S Jayshankar along with his counterparts from Japan, Australia, Maldives, Mauritius and Bhutan.
  • The Asia Economic Dialogue is a flagship geo–economics conference of the Ministry of External Affairs.

5. What type of missile is VL– SRSAM?

A) Air to Air Missile

B) Surface to Surface Missile

C) Intercontinental Missile

D) Surface to Air Missile

  • The Defence Research & Development Organisation (DRDO) has successfully conducted two launches of VL– SRSAM (Vertical Launch Short Range Surface to Air Missile). This missile has been specially designed by the DRDO for deployment in Indian Navy. This missile has been developed to combat various aerial threats.

6. What is ‘DigiBoxx’ that was recently launched by the CEO of NITI Aayog?

A) Asset Management Platform

B) Document Repository

C) Social App

D) Messenging App

  • The CEO of NITI Aayog Amitabh Kant has virtually launched India’s first digital asset management platform DigiBoxx. It is a digital file storage, sharing and management Software as a service (SaaS) product. He also became the first user of the platform, which provides a secure way to store all files in one centralised location.

7. Which Union Ministry has launched ‘e–Dharti Geo portal’?

A) Ministry of Housing & Urban Affairs

B) Ministry of Home Affairs

C) Ministry of Earth Sciences

D) Ministry of Power

  • Union Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri has recently launched the ‘e–Dharti Geo Portal’. The portal aims to integrate legacy drawings such as maps and lease plans in the management information system named e–Dharti and make it a geographic information system (GIS)–enabled system.

8. Which institution is to provide USD 304 million loan to Assam to enhance Intra–state Power Transmission Project?

A) ADB

B) World Bank

C) AIIB

D) New Development Bank

  • India and the Asian Infrastructure Investment Bank (AIIB) signed a $304 million loan agreement for the Assam Intra–State Transmission System Enhancement Project.
  • The project aims to construct transmission substations and lay required transmission lines.

9. As per the recent study by NASA and German Aerospace Center, some microbes are found on the Earth may survive in which planet?

A) Jupiter

B) Venus

C) Mars

D) Mercury

  • As per the recent study by NASA and German Aerospace Center, some microbes are found on the Earth may survive in the Mars. The researchers tested a new way to expose the bacteria and fungi to Mars–like conditions, by launching them in a scientific balloon up to Earth’s stratosphere.

10. India’s first undersea tunnel is being constructed in which city?

A) Chennai

B) Cochin

C) Mumbai

D) Kolkata

  • India’s first undersea tunnel is being constructed in Mumbai, as a part of the Coastal Road project of the city. It is expected to be completed by the year 2023. The twin tunnels have a length of 2.07 km of which around a kilometre will be under the Arabian Sea. The undersea tunnel will be 20 metres below the seabed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!