Tnpsc

1st & 2nd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 331,449,281 மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது?

அ) இந்தோனேசியா

ஆ) பாகிஸ்தான்

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) வங்காளதேசம்

 • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் அமெரிக்காவின் மக்கள்தொகை 331,449,281 என்று அறிவித்தது. இது, கடந்த பத்தாண்டுகளில் இது 7.4% அதிகரிப்பாகும். இந்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், மாநில சட்டமன்றங்கள் / சுயாதீன ஆணையங்களால் நாட்டின் அரசியல் வரைபடங்களை மறுவரையறை செய்ய உதவும்.

2. எந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஆல்பர்ட் பஹிமி படேக் அறிவிக்கப்பட்டுள்ளார்?

அ) ஜிம்பாப்வே

ஆ) சாட்

இ) பிலிப்பைன்ஸ்

ஈ) தென்னாப்பிரிக்கா

 • சாட்டின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள் சமீபத்தில் நாட்டின் சமீபத்திய அதிபர் தேர்தலில் இரண்டாமிடத்தைப்பிடித்த ஆல்பர்ட் பஹிமி படேக்கை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக அறிவித்தனர்.
 • கிளர்ச்சியாளர்களுடன் போரில் அதன் முன்னாள் அதிபர் இட்ரிஸ் டெபி இறந்த ஒருவாரகாலத்திற்குப்பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இராணுவ அவை அதிகாரத்தைக் கைப்பற்றி இடைக்கால பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

3. ‘வங்கி இணைப்பில் வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித்த ஆய்வை நடத்தவுள்ள நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) ரிசர்வ் வங்கி

இ) SEBI

ஈ) நிதியமைச்சகம்

 • அண்மையில் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் தாக்கத்தைக் கண்டறிய, ‘வாடிக்கையாளர் திருப்தி ஆய்வை’ நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. ‘வங்கி வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித் -த ஆய்வானது 21 மாநிலங்களைச் சார்ந்த மொத்தம் 20,000 பேரின் பங்களிப்பை உள்ளடக்கும். வாடிக்கையாளர் சேவைகளின் கண்ணோ -ட்டத்திலிருந்து, இது நேர்மறையானதா என்பதை மதிப்பீடு செய்ய 22 கேள்விகள் கேட்கப்படும்.

4. UNICEF உலகளாவிய தடுப்பூசி முன்னெடுப்பை வழிநடத்தும் விளையாட்டு ஆளுமை யார்?

அ) உசைன் போல்ட்

ஆ) கிறிஸ்டியானோ ரொனால்டோ

இ) டேவிட் பெக்காம்

ஈ) ரோஜர் பெடரர்

 • தடுப்பூசி செயல்பாட்டில் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உருவா -க்குவதற்காக, கால்பந்து வீரரும் UNICEF நல்லெண்ண தூதருமான டேவிட் பெக்காம், தடுப்பூசி தூதராக பணியாற்றி வருகிறார். உலக நோய்த்தடுப்பு வாரத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட காணொளியில் அவர் அண்மையில் இடம்பெற்றார். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் தடுப்பூசிபோட ஊக்குவிப்பதற்கும், தொண்டை அடைப்பான், தட்டம்மை, போலியோ போன்ற நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ‘UNICEF’’ற்கான 7 நிதியத்தையும்’ அவர் நிறுவினார்.

5. காட்டுத்தீயால் சேதமான லுங்லே நகரம் அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) உத்தர பிரதேசம்

இ) திரிபுரா

ஈ) மிசோரம்

 • மிசோரம் மாநிலத்தில் அமைந்துள்ள லுங்லே நகரத்திற்கு அருகிலுள்ள மலைகளில் பெரும் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீ மாநிலத்தின் லுங்லே மற்றும் லாங்ட்லாய் மாவட்டங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க அஸ்ஸாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை மற்றும் IAF பணியாளர்களின் உதவியுடனான தீயணைப்பு குழுவை அரசு ஈடுபடுத்தியுள்ளது.

6. தொழிலாளர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 28

ஆ) ஏப்ரல் 29

இ) ஏப்ரல் 30

ஈ) மே 01

 • உலகெங்கும் தமது பணியின்போது கொல்லப்பட்ட, காயமடைந்த, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல்.28ஆம் தேதி அன்று தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day) அனுசரிக்கப்படுகிறது. “Health and Safety is a fundamental workers’ right” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

7. தொழில்மயமாக்கல் காலகட்டத்தின்போது, எந்த நாட்டினர், தொழிலதிபர்களின் உழைப்புச்சுரண்டலுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர்?

அ) ஐக்கிய பேரரசு

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஜெர்மனி

ஈ) ஜப்பான்

 • தொழில்மயமாக்கல் சகாப்தத்தின்போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டலை மேற்கொண்ட முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக ஒன்றாக கிளர்ந்தெழுந்தனர். நியாயமான ஊதியம், வேலைக்கு இடையே இடைவேளை மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஆகிவற்றை அவர்கள் கோரினர். 1886 மே 1 அன்று நடந்த இக்கிளர்ச்சி, மே நாளின் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தது.
 • பன்னாட்டு தொழிலாளர் நாள் என்றும் அழைக்கப்படும் ‘மே நாள்’, மே.1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், முதல் மே நாள், 1923 மே.1 அன்று சென்னையில் உள்ள ஹிந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சியால் கொண்டாடப்பட்டது.

8. ‘Responding to the COVID-19 Pandemic: Leaving no Country Behind’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்புகள் எவை?

அ) IMF-UNICEF

ஆ) ADB-UNDP-UNESCAP

இ) உலக வங்கி-UNDP

ஈ) IMF-ADB-UNICEF

 • ஆசிய வளர்ச்சி வங்கியானது ‘Responding to the COVID-19 Pandemic: Leaving no Country Behind’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை UNDP & UNESCAP ஆகியவற்றுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
 • இந்த அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பணக்கார நாடுகள், ஏழை நாடுகளை விடவும் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விரைவாக மீள்கின்றன. இந்த வேறுபாட்டுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல், சுகாதார கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றின் மாறுபாடு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

9. ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடு எது?

அ) சீனா

ஆ) ரஷியா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) இந்தியா

 • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) இராணுவத்துக்கு அதிகம் செலவுசெய்துள்ளது.
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு (US) அடுத்த இடங்களில் சீனா, இந்தியா, ரஷியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து உலக இராணுவ செலவினங்களில் 62 சதவீதத் -தை கொண்டுள்ளன. 2.6 சதவீத அளவுக்கு, இந்த ஆண்டில், இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

10. அனைத்து காண்டாமிருகங்களில் மிகச்சிறியதும், இரண்டு கொ -ம்புகளைக்கொண்ட ஒரே ஆசிய காண்டாமிருகமும் எது?

அ) சுமத்ரா காண்டாமிருகம்

ஆ) மலேசிய காண்டாமிருகம்

இ) அஸ்ஸாமிய காண்டாமிருகம்

ஈ) ஜாவா காண்டாமிருகம்

 • சுமத்ரா காண்டாமிருகங்கள் வாழும் அனைத்து காண்டாமிருகங்களில் மிகச்சிறியனவாகும். இரண்டு கொம்புகளைக் கொண்ட ஒரே ஆசிய காண்டாமிருகம் அவைதாம். அவை, அவற்றின் நீண்ட கூந்தலுக்காக சிற -ப்பித்து கூறப்படுகின்றன, எனவே அவை மயிருடைய காண்டாமிருகம் என்று அழைக்கப்படுகின்றன. 100’க்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சுமத்ரா வகை காண்டாமிருகங்கள் உலகின் மிகவும் அழிந்து வரும் பாலூட்டி இனங்களில் ஒன்றாக உள்ளன.
 • அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மீதமுள்ள சுமத்ரா காண்டாமிரு -கங்கள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளினச்சேர்க்கையை மேற்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. இது பாதுகாப்பிற்கான ஒரு நல்ல அறிகுறியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. #BedsForTN: ஆக்ஸிஜன் தேவை மற்றும் படுக்கைகளை நிர்வகிக்க அரசின் திட்டம்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜ -ன் உருளைகள் தேவைகளை நிர்வகிப்பதற்காக, COVID-19 ஒருங்கி
-ணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நலவாழ்வு குழு -மத்தில் அமைக்கப்பட்டுள்ள இம்மையமானது, தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. மேம்பட்ட செயல் திறன் மற்றும் மேம்பட்ட சுகாதார பணிகளுக்காக முதலமைச்சர் காப்பீட்டு -த்திட்டம், மருத்துவமனைகள் நிறுவன சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு ஒருங்கிணைந்த கட்டளை மையமான UCC செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் UCC மையமானது, படுக்கை மேலாண்
-மையை ஆன்லைன்மூலம் கண்காணித்து, தேவைப்படும் மக்களுக்கு உதவவுள்ளது. படுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக டுவிட்டர் கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை பரவலாக கொண்டுசேர்ப்பதற்காக, #BedsForTN என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த COVID-19 ஒருங்கிணைந்த கட்டளை மைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2. கீழடி அகழாய்வில் காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம்கட்ட அகழாய்வில், காதில் அணியும் தங்கவளையம் கண்டெடுக்கப்பட்டது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் ஏழாம்கட்டமாக அகழாய்வுப்பணி நடைபெற்றுவருகிறது.

கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கீழடியில் தோண்டப்பட்ட 1 குழியில் இருந்து காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செமீ நீளமும், வளையமாக வளைத்தால் 1.99 செமீ விட்டமும் கொண்டதாக உள்ளது. இவ்வளையத்தை ஆய்வுக்குட் -படுத்திய பின்னரே இதன்காலம் தெரியவரும்.

3. முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8% உயர்வு

நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற மார்ச் மாதத்தில் 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட் -டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 2020 மார்ச் மாததத்தில் -8.6% என்ற அளவில் பின்னடைவைச் சந்தித்திருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு மார்ச்சில் இத்துறைகளின் உற்பத்தி 6.8 சதவீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 12.3%, 23%, 32.5% மற்றும் 21.6% என்ற அளவில் அதிகரித்துள்ளன.

கடந்தாண்டு மார்ச்சில் இத்துறைகளின் உற்பத்தி முறையே -15.1 சதவீதம், -21.9%, -25.1%, -8.2% என்ற அளவில் பின்னடைவைக் கண்டிருந்தன. நடப்பாண்டு மார்ச்சில் நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் உரத்துறைகளின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியைக்கண்டன. முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2020-21 ஏப்ரல் முதல் மார்ச் வரை -யிலான காலகட்டத்தில் 7% சரிவைடந்துள்ளது.

அதேசமயம், கடந்த 2019-20’இல் இத்துறைகளின் உற்பத்தி 0.4% நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்திருந்ததாக வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

4. பாண்டியர்களின் துறைமுக தலைநகரம் கொற்கை அகழாய்வில் – 2,800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு:

பாண்டிய மன்னர்களின் துறைமுக தலைநகராக விளங்கியதாக கூறப்படும் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும்அகழாய்வில் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது.

இதில், கொற்கை நகரம் 2,800 ஆண்டுகால பழமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இந்த இடம் விளங்கியதாகவும் அறியப்பட்டது. சங்கு அறுக்கும்: தொழில் பண்டைய துறைமுக நகரான கொற்கையில் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் 2,800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கிடைத்துள்ளது.

இந்தப் பகுதியில் சங்கு அறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் உள்ளன. மேலும் அதேகுழியில் சங்குகளை அறுத்த பின்னர் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. வெளிநாட்டு தமிழறிஞர் கால்டுவெல் இப்பகுதியில் அகழாய்வுசெய்தபோது, தெருமுழுவ -தும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன என எழுதியு -ள்ளார். தற்போதும் அகழாய்வின்போது சங்குகள் கிடைக்கின்றன.

5. இந்தியாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் தருகிறது ஜப்பான்

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை ஜப்பான் வழங்க உள்ளது. COVID-19 வைரஸ் பரவலை சமாளிப்பதற்காக இந்தியாவுக்கு 300 செயற்கை சுவாச வழங்கிகள், 300 உயிர்வளி செறி -வாக்கிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை ஒரு வாரகாலத்துக்குள் இந்தியா வந்து சேரும்.

1. Which is the third most populous country in the world, with the recently released population of 331,449,281?

A) Indonesia

B) Pakistan

C) USA

D) Bangladesh

 • The Census Bureau of the United States announced that the population of the US is 331,449,281. This is a 7.4% increase over the last decade. The population figures will be used by state legislatures or independent commissions to redraw the country’s political maps.

2. Albert Pahimi Padacke has been named as the Interim Prime Minister of which country?

A) Zimbabwe

B) Chad

C) Philippines

D) South Africa

 • Chad’s new military rulers have recently named Albert Pahimi Padacke, who was runner–up in the country’s recent presidential election, as Prime minister of a transitional government. This move comes a week after President Idriss Deby’s death during his visit to the troops fighting rebels. Subsequently, a military council seized power and have selected the Interim Prime Minister.

3. Which institution is to conduct ‘Bank Customers’ Satisfaction Survey’ on bank mergers?

A) NITI Aayog

B) RBI

C) SEBI

D) Finance Ministry

 • The Reserve Bank of India (RBI) has decided to conduct a customer satisfaction survey to find out the impact of the recent mergers of public sector banks. The ‘Bank Customers’ Satisfaction Survey’ will cover a total of 20,000 respondents from 21 states.
 • As many as 22 questions would be asked to assess if the merger was positive from the point of customer services.

4. Which sports personality is leading the UNICEF Global Vaccination Initiative?

A) Usain Bolt

B) Cristiano Ronaldo

C) David Beckham

D) Roger Federer

 • Football star and UNICEF Goodwill Ambassador David Beckham is serving as the Vaccine Ambassador, to create awareness and confidence in the process of vaccination. He recently featured in a video released ahead of World Immunization Week.
 • He has also founded ‘7 Fund for UNICEF’ to encourage parents to vaccinate themselves and their children and protect them against diseases such as diphtheria, measles, and polio.

5. Lunglei town, which was hit by forest fires, is situated in which Indian state?

A) Kerala

B) Uttar Pradesh

C) Tripura

D) Mizoram

 • A massive forest fire has been raging in the hills near Lunglei town, which is situated in the state of Mizoram. The fire is reported to have spread to towns and villages of in and around Lunglei and Lawngtlai districts of the state. The state has deployed the firefighting team, who have taken assistance from the Assam Rifles, Border Security Force and IAF personnel to put off the fire.

6. Worker’s Memorial Day is observed on which date?

A) April 28

B) April 29

C) April 30

D) May 01

 • Workers’ Memorial Day, takes place annually around the world on April 28, an international day of remembrance and action for workers killed, disabled, injured, or made unwell by their work. This year (2021) theme for the day is, “Health and Safety is a fundamental workers’ right”.

7. During the era of industrialisation, the workers of which country revolted against the exploitative industrialists, which led to the celebration of May Day?

A) United Kingdom

B) United States

C) Germany

D) Japan

 • During the era of industrialisation, the labourers of the United States revolted together against the unjust labour system and the exploitative industrialists. They demanded for fair wages, breaks between the work and paid leaves. The revolt on May 1 1886 led to the celebration of May Day.
 • May Day, also known as International Workers’ Day is celebrated across the world on May 1. In India, the 1st & 2nd May Day was celebrated on May 1, 1923, by the Labour Kisan Party of Hindustan in Chennai.

8. ‘Responding to the COVID–19 Pandemic: Leaving no Country Behind’ is a report released by which organisations?

A) IMF–UNICEF

B) ADB–UNDP–UNESCAP

C) World Bank–UNDP

D) IMF–ADB–UNICEF

 • The ‘Responding to the COVID–19 Pandemic: Leaving no Country Behind’ is a report jointly released by the Asian Development Bank (ADB) along with UNDP and UNESCAP.
 • As per the report, the richer countries in the Asia–Pacific region would recover quickly from the impact of the pandemic than the poorer countries. This difference is because of variation in degree of immunity, healthcare system and vaccine roll–out.

9. Which country is the world’s largest military spender in 2020, as per the recent report by Stockholm International Peace Research Institute (SIPRI)?

A) China

B) Russia

C) USA

D) India

 • As per the recent report by Stockholm International Peace Research Institute (SIPRI), the USA is the world’s largest military spender in 2020. The top five spenders are the China, India, Russia and the United Kingdom, other than the USA. These 5 countries together accounted for 62% of global military expenditure. An increase of 2.6% in military spending was recorded in the year.

10. Which is the smallest of all living rhinoceroses and the only Asian rhinoceros with two horns?

A) Sumatran Rhino

B) Malaysian Rhino

C) Assam Rhino

D) Javan Rhino

 • Sumatran rhinos are the smallest of the living rhinoceroses. They are the only Asian rhinoceros with two horns. They are characterised by their long hair and hence are known as the hairy rhinoceros. With just less than 100 individuals remaining, the Sumatran rhinoceros is one of the world’s most endangered mammal species.
 • Recently, a study found that the remaining populations of the Sumatran rhinoceros display very low levels of inbreeding, which is a good sign for conservation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content