TnpscTnpsc Current Affairs

1st & 2nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ’கங்கா வினாடி-வினா – 2022’ ஆனது எதன்கீழ் நடைபெறுகிறது?

அ. தூய்மை இந்தியா திட்டம்

ஆ. தேசிய தூய்மை கங்கை திட்டம் 

இ. பசுமை இந்தியா இயக்கம்

ஈ. இமயமலைச் சூழலமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டம்

 • தேசிய தூய்மை கங்கை இயக்கமும் (NMCG) டிரீ கிரேஸ் அறக்கட்டளையும் இணைந்து, ‘கங்கா குவெஸ்ட்’ என்ற இணையவழி வினாடி-வினா போட்டியை கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கின. இந்த ஆண்டு, ‘கங்கா குவெஸ்ட் – 2022’ வினாடி-வினா போட்டி ஏப்.7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
 • வினாடி-வினா போட்டிக்கான கடைசி தேதி மே.22ஆம் தேதி ஆகும். இது உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன்.5, 2022 அன்று உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி நேரடி வினாடி-வினா போட்டியுடன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்தப் போட்டியானது ‘விடுதலை அமுதப் பெருவிழாவின்’ ஒருபகுதியாக நடத்தப்படுகிறது.

2. சிறார்களை மையமாகக்கொண்டு, நீடித்த வளர்ச்சி இலக்குகளில் (SDGs) UNICEF இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ள நிறுவனம் எது?

அ. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. NITI ஆயோக் 

இ. ஸ்மைல் அறக்கட்டளை

ஈ. பிரதம் அறக்கட்டளை

 • அரசாங்க மதியுரையகமான NITI ஆயோக் மற்றும் UNICEF இந்தியா ஆகியவை சிறார்களை மையமாகக் கொண்டு, நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த நோக்கத்திற்கான அறிக்கையில் (SoI) கையெழுத்திட்டன. SoI ஆனது, ‘இந்தியாவின் குழந்தைகள் நிலை: பல பரிமாண குழந்தை வளர்ச்சியின் நிலை மற்றும் போக்குகள்’ பற்றிய முதல் அறிக்கையை வெளியிட, ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை முறைப்படுத்த எண்ணுகிறது.

3. NITI ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக (2022 ஏப்ரலில்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஜெயதி கோஷ்

ஆ. அபிஜித் பானர்ஜி

இ. சுமன் K பெரி 

ஈ. ரமேஷ் சந்த்

 • NITI ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக டாக்டர் சுமன் K பெரி நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர், பொது மக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின்படி, டாக்டர் இராஜீவ் குமாரை அடுத்து அவர் பதவியேற்பார்.
 • டாக்டர் சுமன் K பெரி, ஒரு முன்னணி இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) தலைமை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு, தேசிய புள்ளியியல் ஆணையம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

4. சமீபத்தில் பணியில் சேர்க்கப்பட்ட, ‘உர்ஜா பிரவாகா’, கீழ்காணும் எந்த ஆயுதப் படையின் கப்பலாகும்?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்தியக் கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை 

 • ‘உர்ஜா பிரவாகா’ என்ற இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் (துணைக்கப்பல்) குஜராத்தின் பரூச்சில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது, 2017ஆம் ஆண்டு முதல் அங்கு இயங்கி வரும் ‘உர்ஜா ஷிரோதா’ என்ற துணைக் கப்பல் தவிர, கடலோரக் காவல்படை மாவட்டத் தலைமையகம்-4 (கேரளா & மாஹே)-இன் செயல்பாட்டுக் கட்டளையின்கீழ் இருக்கும். 36 மீட்டர் நீளங்கொண்ட இந்தக் கப்பல், சரக்குக் கப்பல் எரிபொருளைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. 5-12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட முதல் தடுப்பூசி எது?

அ. கோவாக்சின்

ஆ. கோவிஷீல்டு

இ. நோவாவாக்ஸ்

ஈ. கோர்பிவாக்ஸ் 

 • 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்த ‘Corbevax’-க்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. ஹைதராபாத்தைச் சார்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, ‘Corbevax’ என்பது COVID-19-க்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட RBD புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். தற்போது, 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘Corbevax’ தடுப்பூசி வழங்கப்படுகிறது. 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

6. ‘இந்தியா ஔட் – India Out’ பிரச்சாரத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. இலங்கை

ஆ. நேபாளம்

இ. மாலத்தீவுகள் 

ஈ. வங்காளதேசம்

 • மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, ‘இந்தியா ஔட்’ பிரச்சாரத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். முன்னாள் அதிபர் யாமீன் தலைமையில், மாலத்தீவு அரசாங்கம் இந்திய இராணுவத்தை மாலத்தீவு நாட்டில் அனுமதிப்பதாக இந்தப் பிரச்சாரம் குற்றஞ்சாட்டுகிறது. அதிபர் சோலியானவர், ‘இந்தியா பர்ஸ்ட்’ வெளியுறவுக் கொள்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் அந்தப் பிரச்சாரம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று மாலத்தீவு தேசிய பாதுகாப்பு கவுன்சில் தனது முடிவை அறிவித்தது.

7. உலக தேர்தல் அமைப்புகளின் சங்கம் அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரேசில்

இ. அமெரிக்கா

ஈ. தென் கொரியா 

 • உலக தேர்தல் அமைப்புகளின் சங்கம் (A-WEB) 2013-இல் தென் கொரியாவின் சாங்-டோவில் நிறுவப்பட்டது. இது தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் முதல் பன்னாட்டு அமைப்பாகும். மேலும் இது 118 EMB-களை உறுப்பினர்களாகவும் 20 பிராந்திய சங்கங்களை இணை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழு தென்னாப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று அவர்களின் தேர்தல் ஆணையத்துடனும், இரு நாடுகளிலும் உள்ள பெரிய NRI சமூகத்தினருடனும் உரையாடல்களை நிகழ்த்தியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவுசெய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

8. ‘ஹனுமன்ஜி சார் தாம்’ திட்டத்தின் இரண்டாவது சிலை திறக்கப்பட்டுள்ள மோர்பி உள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத் 

இ. உத்தரப்பிரதேசம்

ஈ. பீகார்

 • ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர ஹனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ‘ஹனுமன்ஜி சார் தாம்’ திட்டத்தின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் 4 திசைகளிலும் கட்டப்படும் நான்கு சிலைகளில் இது 2ஆவதாகும். இந்தத் தொடரின் முதல் சிலை, 2010ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கட்டப்பட்டது. 3ஆவது சிலைக்கான பணி தெற்கே இராமேஸ்வரத்தில் தொடங்கியது.

9. எந்த மாநிலம்/UT தனது முதல் கடற்கரை திருவிழாவை, ‘I Sea PONDY-2022’ எனக் கொண்டாடியது?

அ. கோவா

ஆ. புதுச்சேரி 

இ. இலட்சத்தீவுகள்

ஈ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

 • புதுச்சேரியின் முதல் கடற்கரை திருவிழாவான, ‘I Sea PONDY-2022’ஐ புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி காந்தி கடற்கரை, பாண்டி மெரினா மற்றும் பாரடைஸ் பீச் சாண்டூன்ஸ் ஆகிய இடங்களில் நான்கு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. கடற்கரை திருவிழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.

10. 2022 – தேசிய தீயணைப்புச் சேவை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Learn Fire Safety, Increase Productivity 

ஆ. Tribute to Fire Fighters

இ. Fire Safety for Children

ஈ. AI in Fire Service

 • தேசிய தீயணைப்புச் சேவை நாளானது 1944 ஏப்ரல்.14 அன்று மும்பை கப்பல்துறையில் நிகழ்ந்த ஒரு பெரிய வெடிப்பின்போது உயிரிழந்த 71 தீயணைப்புச் சேவை வீரர்களை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் தேசிய தீயணைப்புச் சேவை நாளன்று வீரதீரமிகு தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கிறது. “Learn Fire Safety, Increase Productivity” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் தேசிய தீயணைப்புச் சேவை நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. GST வருவாய் `1.68 இலட்சம் கோடி: ஏப்ரலில் இதுவரை இல்லாத அளவில் அதிகம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு-சேவை வரி (GST) வருவாய், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக `1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. GST வசூல் `1.50 லட்சம் கோடியைக் கடந்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த மார்ச் மாதம் வசூலான GST தொகை `1,42,095-ஐ விட ஏப்ரலில் `25,000 கோடி அதிகமாக வசூலாகியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வரிசெலுத்துவது அதிகரித்திருப்பதாலும், வர்த்தக சூழல் மீண்டு வருவதாலும் GST வருவாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 1.06 கோடி GST கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், 97 லட்சம் கணக்குகள் மார்ச் மாதத்துக்கானவை. ஏப்ரல் மாதத்தில் வசூலான மொத்த GST `1,67,540 கோடியாகும். அதில், மத்திய GSTயாக `33,159 கோடியும், மாநில GSTயாக `41,793 கோடியும், ஒருங்கிணைந்த GSTயாக `81,939 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான `36,705 கோடி உள்பட) வசூலானது. செஸ் வரியாக `10,649 கோடியும் கிடைத்துள்ளது.

வரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, சரியான நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தரவுப்பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தவறு செய்யும் வரி செலுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், GST வருவாயாக `1.40 லட்சம் கோடி வசூலான நிலையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் 20 சதவீதம் அதிகரித்து, `1.68 கோடியாக வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த GST வரியிலிருந்து மத்திய GSTக்கு `33,423 கோடியும், மாநில GSTக்கு `26,962 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது. ஏப்ரல் மாத GST வசூலில் இறக்குமதி பொருள்களுக்கான GST 30 சதவீதமும், உள்நாட்டுப் பொருள்களுக்கான GST 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2. பத்மாவதி நகர் பிரதான சாலை இனி ‘சின்னக்கலைவாணர்’ விவேக் சாலை

நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையின் பெயர் சின்னக்கலைவாணர் விவேக் சாலை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. கிழக்குக் கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ சாலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிழக்குக் கடற்கரை சாலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பெயர்சூட்டப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில், பவள விழா நினைவுத்தூணை திறந்து வைத்த முதல்வர் மு க ஸ்டாலின், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இலச்சினையையும், பவள விழா மலரையும் வெளியிட்டார்.

தரைப்பாலங்களே இல்லாத தமிழகம்: 2026-க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாகத் இந்தத் தமிழகத்தை மாற்றவுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

4. இந்தியா – யுஏஇ பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடக்கம்: வர்த்தகம் `7.50 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) இடையே ஏற்பட்ட விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தகத்தின்மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் இருதரப்பிற்கும் இடையேயான வர்த்தகம் `7,50,000 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (சிஇபிஏ) இருதரப்பும் கடந்த பிப்ரவரி, 18-ஆம் தேதி கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம், மே-1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இனி சுங்க வரி விதிக்கப்படமாட்டாது. இந்தியா – யுஏஇ நாடுகளுக்களுக்கிடையே கடந்த நிதியாண்டில் சுமார் `1,95,000 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம்மூலம் அடுத்த ஓர் ஆண்டில் இது `3,00,000 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம்மூலம், இந்தப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படாது என்பதால், இந்தப் பிரிவு ஏற்றுமதியாளர்கள் பயனடைவர்.

5. சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா! ஏற்றுமதியை மேம்படுத்த வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்பட்சத்தில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

1. ‘Ganga Quest 2022’, which was seen in the news recently, is held under which mission?

A. Swachh Bharat Mission

B. National Mission for Clean Ganga 

C. Green India Mission

D. National Mission for Sustaining the Himalayan Eco system

 • National Mission for Clean Ganga (NMCG) along with Tree Craze Foundation, began Ganga Quest, an online quiz in 2019. The last date for the quiz, which commenced on May 7, is 22nd May– the International Day for Biological Diversity.
 • The winners will be announced along with a Live Quiz on the occasion of World Environment Day on 5th June 2022. Ganga Quest 2022 is part of the Azadi Ka Amrit Mahotsav.

2. Which institution partnered with UNICEF India on sustainable development goals (SDGs) with a focus on children?

A. Ministry of Women and Child Development

B. NITI Aayog 

C. Smile Foundation

D. Pratham Foundation

 • Government think tank NITI Aayog and UNICEF India signed a statement of intent (SoI) on sustainable development goals (SDGs) with a focus on children. The SoI seeks to formalise a framework of cooperation to launch the first report on the ‘State of India’s Children: Status and Trends in Multidimensional Child Development’.

3. Who has been appointed new Vice Chairperson of NITI Aayog (in May 2022)?

A. Jayati Ghosh

B. Abhijeet Banerjee

C. Suman K Bery 

D. Ramesh Chand

 • Dr. Suman K Bery has been appointed new Vice Chairperson of NITI Aayog. He will succeed Dr. Rajiv Kumar, as per the Ministry of Personnel, Public Grievances and Pensions.
 • Dr. Suman K Bery had served as Director–General of the National Council of Applied Economic Research (NCAER) a leading non–profit policy research institution. He also served as a member of the Prime Minister’s Economic Advisory Council, National Statistical Commission and Reserve Bank of India’s Technical Advisory Committee on Monetary Policy.

4. ‘Urja Pravaha’, which was recently inducted, is the ship of which armed force?

A. Indian Army

B. Indian Navy

C. Indian Air Force

D. Indian Coast Guard 

 • The Indian Coast Guard Ship (Auxiliary Barge) named Urja Pravaha has been inducted into the Indian Coast Guard at Gujarat’s Bharuch. It will be under the operational command of Coast Guard District Headquarters–4 (Kerala and Mahe), in addition to auxiliary barge Urja Shrota, which was based here since 2017. The ship is 36 meters long and is designed to carry Cargo Ship Fuel.

5. Which is the first vaccine to be granted emergency use authorisation in India, for children in 5 to 12 years age group?

A. Covaxin

B. Covishield

C. Novavax

D. Corbevax 

 • Expert panel of Drug Controller General of India (DCGI) has recommended granting emergency use authorisation for Corbevax for children in 5 to 12 years age group. Developed by Hyderabad–based firm Biological–E, Corbevax is India’s first indigenously developed RBD protein sub–unit vaccine against Covid–19. At present, Corbevax is being given to children between 12 and 14 years. Covaxin is being given to children in the age group of 15–18 years.

6. ‘India Out’ campaign is associated with which country?

A. Sri Lanka

B. Nepal

C. Maldives 

D. Bangladesh

 • Maldivian President Ibrahim Mohamed Solih issued an order banning the ‘India Out’ campaign. Led by former President Yameen, the campaign accuses the Maldivian government of allowing Indian military presence in the island nation.
 • President Solih has opted for an ‘India first’ foreign policy. The Maldives’s National Security Council announced its decision that the campaign to incite hatred against India is a threat to national security.

7. The Association of World Election Bodies (AWEB) is located in which country?

A. India

B. Brazil

C. USA

D. South Korea 

 • The Association of World Election Bodies ‘A–WEB’ was established 2013 in Song–do, South Korea. It is the first global organization of election management bodies, and consists of 118 EMBs as members and 20 Regional associations as associate members.
 • A delegation led by Chief Election Commissioner Sushil Chandra visited South Africa and Mauritius and held meetings with their Election Commission as well as interactions with the large NRI community in the two countries. He urged the members of Indian community to register as overseas voters.

8. The second statue of ‘Hanumanji Char Dham’ project has been inaugurated in Morbi in which state?

A. Madhya Pradesh

B. Gujarat 

C. Uttar Pradesh

D. Bihar

 • On the occasion of Hanuman Jayanti, Prime Minister Narendra Modi unveiled 108 feet statue of Lord Hanuman in Gujarat’s Morbi. It is the second of the four statues being built in the four directions across the country, as part of the ‘Hanumanji Char Dham’ project.
 • The first statue of the series was built in Himachal Pradesh’s Shimla in 2010. The work on the third statue, in the south at Rameswaram has started.

9. Which state/UT celebrated its first ever Beach Festival ‘I Sea PONDY–2022’?

A. Goa

B. Puducherry 

C. Lakshadweep

D. Andaman & Nicobar Islands

 • Puducherry Lieutenant Governor Dr. Tamilisai Soundararajan inaugurated the Puducherry’s first–ever Beach Festival I Sea PONDY–2022. The festival will be celebrated for four days in Puducherry Gandhi Beach, Pondy Marina and Sandunes of Paradise Beach. The Beach Festival includes various cultural events and contests to be held in the beaches.

10. What is the theme of the ‘National Fire Service Day 2022’?

A. Learn Fire Safety, Increase Productivity 

B. Tribute to Fire Fighters

C. Fire Safety for Children

D. AI in Fire Service

 • National Fire Service Day commemorates the 71 Fire Service personnel who lost their lives during a massive explosion at Mumbai dockyard on May 14, 1944.
 • The government of India also honours fearless fire–fighters on National Fire Service Day, who have done extraordinary work in their service. This year the theme of the National Fire Service Day is “Learn Fire Safety, Increase Productivity”.

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button