1st & 2nd November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, எத்தனை மாநிலங்களில் இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் இருக்கும்?

அ. இரண்டு

ஆ. ஐந்து

இ. பத்து

ஈ. பதினைந்து

 • 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தலா ஒரு இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் அமையப்பெறும். கால்நடைகளுக்கான புதிய ஊக்கமருந்து அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் வணிக ரீதியான விற்பனைக்கு முன்னதாக அவை இராசாளிகளில் பரிசோதிக்க -ப்பட வேண்டும் என்றும் இந்தத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இந்தச்செயல்திட்டத்தை தேசிய வனவுயிரி வாரியம் அங்கீகரித்துள்ளது.

2. இந்தியா-ஆஸ்திரேலியா சுழற்சி பொருளாதாரம் ஹேக்கத்தானை (I-ACE) நடத்தவுள்ள அமைப்பு எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. அடல் புத்தாக்க இயக்கம்

இ. நிதியமைச்சகம்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

 • 2020 டிச.7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் புத்தாக்க இயக்கம் நடத்துகிறது. சிறந்து விளங்கும் மாணாக்கர்கள், துளிர் நிறுவனங்கள் மற்றும் இரு நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களால், புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகளை கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து இந்நிகழ்ச்சியின்போது கவனஞ்செலுத்தப்படும்.

3. அண்மையில், இந்திய மற்றும் கனடிய ஆராய்ச்சியாளர்கள், எந்த நாகரிக காலத்தில் பால் உற்பத்தி மேற்கொண்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்?

அ. சிந்து சமவெளி நாகரிகம்

ஆ. மெசபொடோமிய நாகரிகம்

இ. எகிப்திய நாகரிகம்

ஈ. ரோமானிய நாகரிகம்

 • கிமு 2500’இல் சிந்து சமவெளி நாகரிகத்தில் பால் உற்பத்தி இருந்ததை இந்தியா மற்றும் கனடாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. பாலுற்பத்தியின் ஆரம்பகால ஆதாரம் இதுவாகும். குஜராத்தின் கிராமப்புறப் பகுதியான கோட்டாடா பத்லியின் தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எச்சத்தின் வேதியியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் கிடைத்தன; அம்முடிவுகள் அவற்றில் பால் லிப்பிட்கள் இருப்பதைக் காட்டின.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IndiGenomes’ என்பதை வெளியிடும் நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. CSIR

இ. ISRO

ஈ. AIIMS

 • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) தொகுதி ஆய்வகங்களான – CSIR -மரபணுத் தொகுதியியல் & ஒருங்கிணைந்த உயிரியல், தில்லி மற்றும் ஐதராபாத்தின் CSIR-செல்லுலார் & மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவை இந்திய மரபணுக்கள் குறித்த ஓராய்வை மேற்கொண்டன. ‘நியூக்ளிக் ஆஸிட் ரிசர்ச்’ என்ற அறிவியல்பூர்வ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய மாதிரிகளில் 32.23% தனித்துவமானதாக உள்ளது. அவையனைத்தும் இந்தியாவில் இருந்து வரிசைப் -படுத்தப்பட்ட மாதிரிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, NISAR செயற்கைக்கோளை, எந்நாட்டோடு இணைந்து இந்தியா ஏவவுள்ளது?

அ. இரஷ்யா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

 • 2+2 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலுக்குப்பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, NASA-ISRO செயற்கை துளை ராடார் (NISAR) செயற்கைக்கோள் ஆனது 2022’க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி சூழல் விழிப்புணர்வு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) ஆகியவை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் ஒத்துழைக்கும்.

6. ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருதை வென்ற இந்திய அமைப்பு எது?

அ. Global Himalayan Expedition

ஆ. Indian Youth Climate Network

இ. Greenpeace India

ஈ. Wildlife Trust of India

 • ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருது வென்றவர்களுள் ஒருவராக இந்தியாவைச்சார்ந்த Global Himalayan Expedition அறிவிக்கப்பட்டுள்ளது. GHE என்பது ஓர் இந்திய அமைப்பாகும்; இது, தொலைதூர சமூகங்களுக்கு சூரிய ஆற்றலை அணுக உதவுவதற்காக சுற்றுலாவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

7. Global Investment Trends Monitor’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐநா கூட்டமைப்பு

இ. உலக வங்கி

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

 • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் & முதலீட்டு அமைப்பான UNCTAD, “உலகளாவிய முதலீட்டு போக்குகள் கண்காணிப்பு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின் அண்மைய பதிப்பின்படி, கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 49% அளவுக்கு சரிந்துள்ளது. இந்தச்சரிவு COVID-19 தொற்றின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வளர்ந்த பொருளாதாரங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில்’ சேவை தொடங்கப்பட்டுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. பாகிஸ்தான்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

 • லாகூரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC)கீழ் முதல் போக்குவரத்து திட்டத்தை பாகிஸ்தான் அண்மையில் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டம், ஆறாண்டுகாலத்தில், $2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த லாகூர் ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில், சீன- பாகிஸ்தான் உறவுகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 250,000’க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரயில் சேவையைப் பயன்படுத்தி பயணிக்க முடியும்.

9. பெண்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக எந்தத் தொழில்நுட்ப நிறுவனம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கூட்டிணைந்துள்ளது?

அ. பேஸ்புக்

ஆ. மைக்ரோசாப்ட்

இ. வெரிசோன்

ஈ. காக்னிசண்ட்

 • மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கூட்டிணைந்ததாக அறிவித்தது. இக்கூட்டாண்மை, அடுத்த 10 மாதங்களில் இந்தியாவில் உள்ள இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. 70 ம.நேரத்திற்கும் மேலான பாடத்திட்ட உள்ளடக்கத்தை மைக்ரோசாப்ட் இலவசமாக வழங்கவுள்ளது.

10. அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கை ஆவணத்தின் அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. நிதியமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

 • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சமீபத்தில் அதன் ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை ஆவணத்தின் அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் இந்த ஆவணம் இணைத்துள்ளது.
 • ஊக்குவிப்பு & உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறையின்ன்படி, இப்புதிய சுற்றறிக்கை, அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

1. How many Indian states will have vulture conservation and breeding centre, as per the Action Plan for Vulture Conservation 2020–2025?

[A] Two

[B] Five

[C] Ten

[D] Fifteen

 • According to the Action Plan for Vulture Conservation 2020–2025, 5 states namely Uttar Pradesh, Tripura, Maharashtra, Karnataka and Tamil Nadu will get a vulture conservation and breeding centre each. The plan has also suggested that new veterinary non–steroidal anti–inflammatory drugs (NSAIDS) to be tested on vultures before their commercial release. The action plan was approved by the National Board for Wildlife (NBWL).

2. Which body is set to organise India–Australia Circular Economy Hackathon (I–ACE)?

[A] Ministry of Defence

[B] Atal Innovation Mission

[C] Ministry of Finance

[D] Reserve Bank of India

 • The NITI Aayog’s AIM (Atal Innovation Mission) will be organizing a 2–day hackathon on circular economy titled “India–Australia Circular Economy Hackathon (I–ACE)”. This is done in collaboration with CSIRO (The Commonwealth Scientific and Industrial Research Organisation, an Australian Government agency). The hackathon would be held on 7th and 8th December this year.

3. Recently Indian and Canadian researchers have found evidence of Dairy production in which civilization?

[A] Indus Valley Civilization

[B] Mesopotamian Civilization

[C] Egyptian Civilization

[D] Roman Civilization

 • A team of researchers from India and Canada have discovered that Dairy production existed in Indus Valley civilization in 2500 BCE. This is the earliest known evidence of dairy production. The results were based on chemical analysis of residue of pottery found at the archaeological site of Kotada Bhadli, a rural area in Gujarat, which showed presence of Dairy lipids.

4. ‘IndiGenomes’, that was seen in news recently, is released by the laboratories of which institution?

[A] DRDO

[B] CSIR

[C] ISRO

[D] AIIMS

 • The Council of Scientific and Industrial Research (CSIR) constituent labs– CSIR–Institute of Genomics and Integrative Biology (IGIB), Delhi and CSIR–Centre for Cellular and Molecular Biology (CCMB), Hyderabad carried out a study regarding Indian genomes. As per the study published in the scientific journal, Nucleic Acid Research, 32.23% of the global variants were unique and found only in the samples sequenced from India.

5. NISAR satellite, that was seen in news recently, is to be launched by India along with which country?

[A] Russia

[B] United States of America

[C] Japan

[D] Israel

 • The NASA–ISRO Synthetic Aperture Radar (NISAR) satellite is expected to be launched by 2022, as per the joint statement issued after the 2+2 strategic dialogue. After the dialogue, India and the US have decided to share Space Situational Awareness Information. The Indian Space Research Organisation (ISRO) and National Aeronautics and Space Administration (NASA) will collaborate in launching the satellite.

6. Which Indian organisation has won the 2020 United Nations Global Climate Action Awards?

[A] Global Himalayan Expedition

[B] Indian Youth Climate Network

[C] Greenpeace India

[D] Wildlife Trust of India

 • India–based Global Himalayan Expedition (GHE) has been named as one among the winners of the 2020 UN Global Climate Action Award. GHE is an Indian organisation that uses tourism and technology to help remote communities get access to solar energy. This was announced in the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) website.

7. Which organisation releases the ‘Global Investment Trends Monitor’ report?

[A] World Economic Forum

[B] UNCTAD

[C] World Bank

[D] International Monetary Fund

 • United Nations’ Trade and investment body, UNCTAD releases Global Investment Trends Monitor report. As per the recent edition of the report, global foreign direct investment (FDI) flows fell 49% in the first half of 2020 compared to 2019. This sharp decline is due to the economic crisis from COVID–19. As per the report, developed economies saw the biggest fall in FDI.

8. Orange Line Metro Train, that was seen in news recently, was inaugurated in which country?

[A] China

[B] India

[C] Pakistan

[D] UAE

 • Pakistan has recently inaugurated the first transport project under the China–Pakistan Economic Corridor (CPEC) in Lahore. The project has been completed in six years at the cost of over USD 2.2 billion. This overhead Lahore Orange Line Metro Train is expected as a symbol of China– Pakistan ties. Over 250,000 people will be able to commute using the train.

9. Which technology company has collaborated with National Skill Development Corporation (NSDC) to provide digital skills to women?

[A] Facebook

[B] Microsoft

[C] Verizon

[D] Cognizant

 • Microsoft recently announced that it has collaborated with the National Skill Development Corporation (NSDC). The partnership aims to provide digital skills to more than one lakh underserved women in India over the next 10 months. More than 70 hours of course content will be made available free of cost by the technology major.

10. Which Union Ministry has released the next edition of foreign direct investment (FDI) policy document?

[A] Ministry of Commerce and Industry

[B] Ministry of External Affairs

[C] Ministry of Finance

[D] Ministry of Power

 • The Union Ministry of Commerce and Industry has recently released the next edition of its consolidated foreign direct investment (FDI) policy document. The document has incorporated all changes made over the past year. As per the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), the new circular has come into effect from October 15.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *