TnpscTnpsc Current Affairs

1st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Dr கமல் ரணதிவேவுடன் தொடர்புடைய துறை எது?

அ) கதிரியக்க பொருட்கள்

ஆ) கனரக பொறியியல்

இ) செல் உயிரியல் 

ஈ) ஆயுர்வேதம்

  • Dr கமல் ரணதிவே ஓர் இந்திய செல் உயிரியலாளராவார். அவர் புற்றுநோய் துறையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் நாட்டின் முதல் திசு வளர்ப்பு ஆய்வகத்தை நிறுவுவதில் முக்கிய அவர் பங்காற்றினார். இந்தியப் பெண் அறிவியலாளர்கள் சங்கத்தை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
  • அண்மையில், Dr கமல் ரணதிவேவின் 104ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கூகுள் ஒரு டூடுலை அவருக்காக அர்ப்பணித்தது.

2. உலகின் 2ஆவது பெரிய நிலக்கரித்தொகுதியான தியோச்சா பச்சமி ஹரின்சிங்க தேவாங்கஞ்ச் அமைந்து உள்ள இந்திய மாநிலம் எது?

அ) ஜார்கண்ட்

ஆ) மேற்கு வங்கம் 

இ) சத்தீஸ்கர்

ஈ) ஒடிஸா

  • உலகின் 2ஆவது பெரிய நிலக்கரி சுரங்கமான தியோச்சா பச்சமி ஹரின்சிங்க தேவாங்கஞ்ச் மத்திய அரசால் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தியோச்சா-பச்சாமி நிலக்கரி சுரங்கத் திட்டத்தால் இடம்பெயர்ந்து அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கு `10,000 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற வருண் தாக்கர் மற்றும் K C கணபதி ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) கிரிக்கெட்

ஆ) கபாடி

இ) படகோட்டம் 

ஈ) கோல்ப்

  • இந்திய படகோட்டிகள் வருண் தாக்கரும் KC கணபதியும் ஓமனில் நடந்த ஆசிய 49er படகோட்ட சாம்பியன்ஷிப் 2021’இல் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
  • இவ்வெற்றியின்மூலம், அவர்கள் 2021 நவம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பாக பங்கேற் -கவுள்ளனர். இவ்விரட்டையர் அணி நிகழ்வை 10ஆவது இடத்தில் முடித்தது. முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே ஆசிய அணியாக இது உள்ளது.

4. இந்தியக் கடற்படைக் கப்பல் கார்முக், இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் 32ஆம் CORPAT பயிற்சியில் பங்கேற்கிறது?

அ) இலங்கை

ஆ) பிரான்ஸ்

இ) தாய்லாந்து 

ஈ) ஓமன்

  • இந்திய கடற்படைக்கும் இராயல் தாய்லாந்து கடற்படைக் -கும் இடையிலான இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந் -த ரோந்துப் பயிற்சியின் (இந்தோ-தாய் CORPAT) 32வது பதிப்பு 2021 நவம்பர் 12 முதல் 14 வரை நடத்தப்படுகிறது.
  • இந்தியக் கடற்படைக் கப்பல் (INS) கார்முக், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை கார்வெட் மற்றும் தாய்லாந்தின் HTMS தயான்சோன், இரு கடற்படைகளின் கடற்புற ரோந்து விமானங்கள் ஆகியவை இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இரு கடற்படைகளும் 2005 ஆம் ஆண்டு முதல் தங்கள் பன்னாட்டு கடல் எல்லைக் கோட்டில் (IMBL) CORPAT’ஐ ஆண்டுக்கு இருமுறை நடத்துகின்றன.

5. குர்பச்சன் சிங் ரந்தாவாவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர் சார்ந்த துறை எது?

அ) விளையாட்டு 

ஆ) வணிகம்

இ) அரசியல்

ஈ) சமூக சேவை

  • பஞ்சாப் விளையாட்டு மற்றும் உயர்கல்வி அமைச்சர் பர்கத் சிங், ஒலிம்பிய தடகள வீரர் குர்பச்சன் சிங் ரந்தாவாவின் வாழ்க்கை வரலாறான ‘உத்னா பாஸ்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலை விளையாட்டுத் துறை எழுத்தாளர் நவ்தீப் சிங் கில் எழுதியுள்ளார்.
  • அர்ஜுனா விருது பெற்ற முதல் தடகள வீரர் குர்பச்சன் சிங் ரந்தாவா, 1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கொடியை ஏந்தியவர். அவருக்கு 1961’ இல் ‘அர்ஜுனா’ விருதும், 2005’இல் ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டது.

6. கீழ்கண்ட எந்த அச்சு ஊடக நிறுவனத்திற்கு, 2021ஆம் ஆண்டிற்கான “செய்தித்தாள்களுக்கான SIREN திட்ட விருது” வழங்கப்பட்டுள்ளது?

அ) இந்தியா டுடே

ஆ) தி இந்து 

இ) டைம்ஸ் ஆப் இந்தியா

ஈ) தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

  • முன்னணி தேசிய நாளிதழான – ‘தி இந்து’வுக்கு 2021ஆம் ஆண்டிற்கான “செய்தித்தாள்களுக்கான SIREN திட்ட விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • SIREN’இன் மதிப்பெண் அட்டையில் நிலையான உயர் செயல்திறன் பெற்றமைக்காக இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது. மனநலச்சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் கீழ் இந்திய மனநலக் கண்காணிப்பகத்தால் SIREN திட்டம் தொடங்கப்பட்டது. இது தற்கொலைபற்றிய ஊடக அறிக்கைகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்கிறது.

7. ஐநா அவையால், “ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) 20 நவம்பர் 

ஆ) 22 நவம்பர்

இ) 23 நவம்பர்

ஈ) 25 நவம்பர்

  • ஒவ்வோர் ஆண்டும், நவ.20ஆம் தேதியை “ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் நாளாக” ஐநா அவை அனுசரிக்கிறது.
  • மேலும் இந்த நாளில் ஆப்பிரிக்காவின் தொழில்மயமாக்க -லின் முக்கியத்துவம் மற்றும் இது தொடர்பான சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாள் 1989ஆம் ஆண்டில் ஐநா’ஆல் ஆப்பிரிக்காவிற்கான 2ஆம் தொழிற்துறை வளர்ச்சி பத்தாண்டு (1991-2000) என்ற கட்டமைப்பின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. போர் தயார்நிலையை சோதிப்பதற்காக கட்ச்சில் இந்தியா மேற்கொண்ட பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?

அ) ஆத்மநிர்பார் ஜவான்

ஆ) சாகர் சக்தி 

இ) இந்தியா சக்தி

ஈ) தீவிர சக்தி

  • போர் தயார்நிலையை சோதிப்பதற்காக இந்தியாவால் ‘சாகர் சக்தி’ என்ற பிரம்மாண்ட இராணுவப் பயிற்சி சமீபத்தில் கட்ச்சில் நடத்தப்பட்டது. கட்ச் தீபகற்பத்தின் கிரீக் செக்டரில் நடத்தப்பட்ட நான்கு நாள் அதி தீவிர இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, இந்திய கடலோர காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, குஜராத் காவல்துறை மற்றும் கடற்புற காவல் படை ஆகியவை பங்கேற்றன. இந்தப் பயிற்சியை இந்திய இராணுவத்தின் தென்படை ஏற்பாடு செய்தது.

9. நிதிநிலைப்புத்தன்மை வாரியத்தின்படி, அமைப்பு ரீதியாக உலகின் முக்கியமான வங்கி எது?

அ) JP மோர்கன் சேஸ் 

ஆ) மோர்கன் ஸ்டான்லி

இ) கோல்ட்மேன் சாக்ஸ்

ஈ) பேங்க் ஆப் அமெரிக்கா

  • நிதிநிலைப்புத்தன்மை வாரியத்தின் (FSB) ஒரு சமீபத்திய வருடாந்திர தரவரிசையின்படி, JP மோர்கன் சேஸ் உலகின் மிக முக்கியமான வங்கியாக மாறியுள்ளது.
  • FSB, G20 நாடுகளின் ஒழுங்காற்றுநர்களால் ஆனதாகும். அது உலகின் முக்கியமான 30 வங்கிகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. BNP பரிபாஸ் மற்றும் கோல்டு மேன் சாக்ஸ் ஆகியவையும் மிகவும் முக்கியமான வங்கியாக கருதப்படுகிறது.

10. ‘தோஸ்தி’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாடு / நாடுகளுக்கு இடையேயான ஒரு கடற்பயிற்சியாகும்?

அ) இலங்கை

ஆ) மாலத்தீவுகள் & இலங்கை 

இ) நேபாளம்

ஈ) வங்காளதேசம் & ஜப்பான்

  • ‘தோஸ்தி’ என்பது இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையினருக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தரப்பு கடற்சார் பயிற்சியாகும். இந்த ஆண்டு ‘தோஸ்தி’ பயிற்சியின் 15ஆவது பதிப்பு மாலத்தீவில் நவ.20-24 வரை நடத்தப்பட்டது. இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல்களான ICGS வஜ்ரா மற்றும் ICGS அபூர்வா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

1. Dr. Kamal Ranadive was associated with which field?

A) Radioactive Materials

B) Heavy Engineering

C) Cell Biology 

D) Ayurveda

  • Dr. Kamal Ranadive was an Indian cell biologist who has made groundbreaking research in the field of Cancer. She was instrumental in establishing country’s first tissue culture laboratory at Indian Cancer Research Center. She also played a key role in founding the Indian Women Scientists’ Association. Recently, Google has dedicated a doodle to Dr. Kamal Ranadive remembering her 104th birth anniversary.

2. Deocha Pachami Harinsingha Dewanganj, the world’s second–largest coal block, is located in which Indian state?

A) Jharkhand

B) West Bengal 

C) Chhattisgarh

D) Odisha

  • Deocha Pachami Harinsingha Dewanganj, the world’s second–largest coal block was allocated to West Bengal by the Central Government. West Bengal Chief Minister Mamata Banerjee recently announced a compensation package of ₹10,000 crore for the people who would get displaced or affected due to the Deocha–Pachami coal mine project in Birbhum district.

3. Varun Thakkar and KC Ganapathy, who were in the news recently, are associated with which sport?

A) Cricket

B) Kabaddi

C) Sailing 

D) Golf

  • Indian Sailors Varun Thakkar and KC Ganapathy have won gold medal at the Asian 49er Sailing Championships 2021 held at Oman. With this victory, they are set to represent India at the World Championship in November 2021. The duo team finished the event at 10th spot to clinch the medal, and are the only Asian team to be in the top 10.

4. Indian Naval Ship (INS) Karmuk is participating in the 32nd edition of CORPAT Exercise, held between India and which country?

A) Sri Lanka

B) France

C) Thailand 

D) Oman

  • The 32nd edition of India–Thailand Coordinated Patrol (Indo–Thai CORPAT) between the Indian Navy and the Royal Thai Navy is being conducted from 12 – 14 November 2021.
  • Indian Naval Ship (INS) Karmuk, an indigenously built Missile Corvette and Thailand’s HTMS Tayanchon, along with Maritime Patrol Aircraft from both navies are participating in the exercise. The two Navies have been undertaking CORPAT bi–annually since 2005 along their International Maritime Boundary Line (IMBL).

5. Gurbachan Singh Randhawa, whose biography was recently launched, is associated with which field?

A) Sports 

B) Business

C) Politics

D) Social Service

  • Punjab Sports and higher education minister Pargat Singh launched a book ‘Uddna Baaz’ a biography on the Olympian athlete, Gurbachan Singh Randhawa. The book is written by the sports writer Navdeep Singh Gill an officer.
  • The first Arjuna Awardee athlete Gurbachan Singh Randhawa, was the flag–bearer of the Indian contingent at the 1964 Tokyo Olympics. He was conferred the Arjuna Award in 1961 and the Padma Shri in 2005.

6. Which print media organization has been awarded the “Project SIREN Award for Newspapers 2021”?

A) India Today

B) The Hindu 

C) The Times of India

D) The Hindustan Times

  • Leading national daily – The Hindu has been awarded the Project SIREN Award for Newspapers 2021. The award has been given for consistent high performance on Project SIREN’s scorecards. Project SIREN is initiated by India Mental Health Observatory (IMHO) under the Centre for Mental Health Law and Policy (CMHLP), which tracks and scores media reports on suicide.

7. When is the “Africa Industrialization Day” observed by the United Nations?

A) 20 November 

B) 22 November

C) 23 November

D) 25 November

  • Every year, the United Nations observes 20th November as the “Africa Industrialization Day” and on this day organizes various events across the globe to raise awareness about the importance of Africa’s industrialization and challenges in this regard. This day was adopted by the UN in 1989 under the framework of Second Industrial Development Decade for Africa (1991–2000).

8. What is the name of the mega military exercise undertaken by India in Kutch to test combat readiness?

A) Atmanirbhar Jawan

B) Sagar Shakti 

C) India Shakti

D) Intense Shakti

  • Sagar Shakti, mega military exercise was recently undertaken by India in Kutch to test combat readiness. The four–day high–intensity military exercise conducted in the Creek sector of the Kutch peninsula witnessed participation of the Indian Army, Indian Navy, Indian Air Force, Indian Coast Guard, Border Security Force, Gujarat Police and the Marine Police. The exercise was organised by the Indian Army’s Southern Command.

9. Which became the world’s most systemically important bank, as per the Financial Stability Board?

A) JP Morgan Chase 

B) Morgan Stanley

C) Goldman Sachs

D) Bank of America

  • JP Morgan Chase has become the world’s most systemically important bank according to the latest annual ranking of the Financial Stability Board (FSB). FSB, made up of regulators from G20 countries, published its latest table of the world’s 30 most systemic banks. BNP Paribas and Goldman Sachs were also deemed more systemic.

10. Exercise Dosti, is a maritime exercise between India and which country / countries?

A) Sri Lanka

B) Maldives and Sri Lanka 

C) Nepal

D) Bangladesh and Japan

  • Exercise “Dosti” is a biennial trilateral maritime exercise between the coast guards of India, Maldives and Sri Lanka. This year’s Exercise “Dosti” is the 15th edition is conducted in the Maldives during from November 20 to 24. India is represented by Indian Coast Guard vessels, ICGS Vajra and ICGS Apoorva.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!