1st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நடப்பாண்டு (2021) இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில், எந்த நாட்டின் இராணுவம் பங்கேற்றது?

அ) நேபாளம்

ஆ) வங்கதேசம்

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) பூட்டான்

 • இராஜ்பாத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில், 122 உறுப்பினர்களைக்கொண்ட வங்கதேச இராணுவக்குழு பங்கேற்றது. இந்தியாவும் வங்கதேசமும் வென்ற 1971ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போரின் ஐம்பதாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இது உள்ளது. இவ்வாறான அணிவகுப்பில் வங்காளதேச முதன்முறையாக பங்கேற்றுள்ளது.
 • இதன்மூலம், பிரான்ஸ் (2016) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (2017) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் மூன்றாவது அயல்நாடாக வங்காளதேசம் மாறியுள்ளது.

2. ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்-2021’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ) ஐக்கிய நாடுகள் அவை

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

 • ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 • இவ்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், 2020ஆம் ஆண்டில் இது 9.6 சதவிகிதமாக சுருங்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. பொது முடக்கமும் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு நுகர்வும் சுருக்கத்திற்கான காரணங்களாக ஐநா’ஆல் கூறப்பட்டுள்ளது.

3. பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின்படி (IMF), FY22’இல் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் ஒரே நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) ஜெர்மனி

 • பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்டத்தின் புதுப்பிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, FY22’ இந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் வளர்ச்சியடையும். இது, முந்தைய கணிப்பான 8.8% வளர்ச்சியை திருத்தியுள்ளது.
 • பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் கூற்றுப்படி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதாரம் என்ற தகுதியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரே நாடாக இந்தியா இருக்கும்.

4. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு உதவிபுரியும், மெய்நிகர் நுண்ணறிவு கருவியின் பெயரென்ன?

அ) அப்னா

ஆ) தேஜஸ்

இ) சூர்யா

ஈ) விஷ்ணு

 • ‘தேஜஸ்’ என்ற காட்சி நுண்ணறிவுக்கருவி, மின்னணு-ஏலம் இந்தியா, ‘எங்கிருந்தும் பணியாற்றும்’ இணையதளம், NIC தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய மின்னணு & தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.
 • ‘தேஜஸ்’ என்ற கருவியால் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை பிரித்தெடுக்க முடியும். இதன்மூலம் அரசாங்க சேவைகளில் செயல்திறனை மேம்படுத்தலாம்.

5. பின்வரும் எந்த நகரம், சமீபத்தில், இதன் வகையில் முதலான, இளம் வாசகர்களுக்கான படகு நூலகத்தை தொடங்கியது?

அ) மும்பை

ஆ) கொல்கத்தா

இ) ஆமதாபாத்

ஈ) கொச்சி

 • இளைஞர்களுக்காக கொல்கத்தாவில் நடமாடும் படகு நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கப் போக்குவரத்துக் கழகம், பாரம்பரியப் புத்தகக் கடையுடன் இணைந்து இம்முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இளையோர்களுக்கான படகு நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் சுமார் 500 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகில் சுமார் 3 மணி நேரம் பயணிக்க முடியும்.

6. யாருடைய பரிந்துரைக்கு இணங்க, கொப்பரைத்தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த CCEA ஒப்புதலளித்தது?

அ) K சந்தானம்

ஆ) M S சுவாமிநாதன்

இ) வர்கீஸ் குரியன்

ஈ) சரண் சிங்

 • 2021ஆம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. M S சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், இந்த MSP அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு `9960ஆக இருந்தது. இது தற்போது `375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு `10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. பரவலாகப் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு முன்மொழியப்பட்ட தடையை மீளாய்வு செய்தற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ) TP இராஜேந்திரன்

ஆ) K விஜயகுமார்

இ) C சைலேந்திர பாபு

ஈ) K சிவன்

 • ஊடக அறிக்கையின்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு, தொழிற்துறையின் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. ICAR’இன் முன்னாள் உதவி தலைமை இயக்குநர் T P இராஜேந்திரன் இக்குழுவின் தலைவராக உள்ளார். இது, அடுத்த மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
 • விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் 27 பூச்சிக்கொல்லிகளை தடைசெய்ய அரசு முன்மொழிந்துள்ளது.

8. ‘Ageing Water Infrastructure: An Emerging Global Risk’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ) ஐக்கிய நாடுகள் அவை

ஆ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ) ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

ஈ) BRICS வங்கி

 • ‘பழைமையான நீர் உட்கட்டமைப்பு: வளர்ந்துவரும் உலகளாவிய இடர்’ என்ற தலைப்பிலான அறிக்கையை ஐநா பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் நலவாழ்வு நிறுவனம் தொகுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அணைகள், வரும் 2025ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.
 • ஐ.நா. அறிக்கையின்படி, ஒரு பெரிய அணை தனது ஐம்பதாம் வயதில் பழையதாவதன் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குகிறது.

9. நடப்பாண்டில் (2021) உலக தொழுநோய் நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?

அ) ஜனவரி 25

ஆ) ஜனவரி 27

இ) ஜனவரி 29

ஈ) ஜனவரி 31

 • உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) ஜனவரி.31 அன்று உலக தொழுநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing” என்பது நடப்பாண்டு வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.

10. உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டலநோய்கள் நாள் (World Neglected Tropical Diseases Day) கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 28

ஆ) ஜனவரி 29

இ) ஜனவரி 30

ஈ) ஜனவரி 31

 • உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள், 2021 ஜன.30 அன்று கடைப்பிடிக்கப்பட்டது.
 • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றை ஒழிப்பதற்கான தீர்வுகள் குறித்து விவாதிப் -பதற்கும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் இந்நோய்கள் உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கின்றன. உலக புறக்கணி -க்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாளை, 2019 நவம்பரில், அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்றம் அறிவித்தது.

1st February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. The Armed Forces of which country participated in the Republic Day Parade of India in the year 2021?

A) Nepal

B) Bangladesh

C) United Kingdom

D) Bhutan

 • A 122–member armed forces contingent of Bangladesh participated in the Rajpath at the Republic Day parade of India. This comes as a part of celebration of the 50th anniversary of the 1971 Liberation War, by India and Bangladesh.
 • While Bangladesh takes part in the parade for the first time, it is the third foreign country after France (2016) and the UAE (2017) to take part in India’s Republic Day parade.

2. Which organisation releases the ‘World Economic Situation and Prospects 2021’?

A) World Bank

B) International Monetary Fund

C) United Nations

D) Asian Development Bank

 • The United Nations Department of Economic and Social Affairs (UN DESA) released the World Economic Situation and Prospects 2021.
 • As per the report, India’s economy is projected to grow at 7.3 percent in 2021 while it is estimated to contract by 9.6 percent in 2020. According to the UN, the reasons for the contraction are the lockdown and the fallen domestic consumption.

3. As per the International Monetary Fund, which is the only key country that would record a double–digit growth in FY22?

A) China

B) India

C) United States of America

D) Germany

 • The International Monetary Fund released its latest World Economic Outlook Update recently. As per the report, Indian economy would grow 11.5 percent in FY22.
 • It has revised the earlier forecast of 8.8 percent growth. As per the IMF, India would be the only key country to record a double–digit growth and reclaim the status of the fastest–growing major economy of the world.

4. What is the name of the virtual intelligence tool recently launched, which can help in Government’s policy decisions?

A) Apna

B) Tejas

C) Surya

D) Vishnu

 • Minister of Electronics and IT and Communications has recently launched virtual intelligence tool Tejas.
 • The tool can extract critical information for policy decisions thereby improving efficiency in government services. The Minister also launched a virtual portal to access routine office applications called ‘Work from Anywhere’ portal and ‘e–Auction India’.

5. Which Indian city recently unveiled a first–of–its kind Young Readers’ Boat Library?

A) Mumbai

B) Kolkata

C) Ahmedabad

D) Cochin

 • The West Bengal Transport Corporation in association with a heritage book store has launched a Young Readers’ Boat Library.
 • Under the initiative, children can choose from a selection of 500 titles in English and Bengali on cruising on the waters of Hooghly river on a three–hour–long trip.

6. The CCEA approved hike in Minimum Support Price of Copra, in line with whose recommendation?

A) K Santhanam

B) M S Swaminathan

C) Varghese Kurian

D) Charan Singh

 • The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved the Minimum Support Prices (MSPs) for milling copra and ball copra.
 • As per M S Swaminathan recommendations, the increase in MSP has been approved. The MSP of copra was raised by Rs 375 from the previous year, 2020 to Rs 10,335 per quintal. Farmers of 12 coastal states are likely to impact by the price hike.

7. Who is the chairperson of the panel set up to review the proposed ban on 27 widely used pesticides?

A) TP Rajendran

B) K Vijayakumar

C) C Sylendra Babu

D) K Sivan

 • As per media reports, the Government has appointed an expert panel to review industry’s objections to the proposed ban on 27 widely used pesticides. Former assistant director general of ICAR, TP Rajendran is to chair the committee, which will submit the report in next three months. The Government has proposed to ban 27 pesticides, which are said to be harmful to animals and humans.

8. Which organisation released a report titled ‘Ageing water infrastructure: An emerging global risk’?

A) United Nations

B) International Monetary Fund

C) Asian Infrastructure & Investment Bank

D) BRICS Bank

 • The report, titled ‘Ageing water infrastructure: An emerging global risk’ was compiled by United Nations University’s Institute for Water, Environment and Health.
 • As per the report, over a thousand large dams in India will be almost 50 years old in 2025. It also warns about the threat posed by the aging structures across the world. As per the UN report, a large concrete dam begins to express signs of ageing at 50 years.

9. When is the World Leprosy Day observed in the year 2021?

A) January 25

B) January 27

C) January 29

D) January 31

 • World Leprosy Day is observed around the world on the last Sunday of January every year. This year World Leprosy Day held on 31 January.
 • The day is celebrated to raise global awareness of this deadly ancient disease and call attention to the fact that it can be prevented, treated and cured. This year theme of World Leprosy Day 2021 is “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing”.

10. World Neglected Tropical Diseases Day is observed on which date?

A) January 28

B) January 29

C) January 30

D) January 31

 • World Neglected Tropical Diseases Day is observed on January 30, 2021. The day is observed to create awareness about the neglected tropical diseases and discuss solutions to eliminate them. Caused by parasites and bacteria, the diseases affect more than a billion across the world. World NTD Day was announced by the Crown Prince Court of Abu Dhabi in November 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *