Tnpsc

1st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. எந்த ஆண்டுக்குள், நிலச்சீரழிவை ஒழிப்பதற்கு இந்தியா இலக்கு கொண்டுள்ளது?

அ) 2030

ஆ) 2035

இ) 2037

ஈ) 2040

 • பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழு -த்திட்டுள்ளது. அது, 2030ஆம் ஆண்டளவில் நிலச்சீரழிவை ஒழிக்க எண்ணுகிறது. பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சிகுறித்த உயர்மட்ட கூட்டத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2019’இல் புது தில்லியில் நடந்த பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா அவையின் 14ஆவது அமர்வின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார்.

2. உலகில், வாழைப்பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஈக்வடார்

இ) இந்தியா

ஈ) தென்னாப்பிரிக்கா

 • 2020-21 நிதியாண்டில், இந்தியா, `619 கோடி மதிப்புள்ள மொத்தம் 1.91 இலட்சம் டன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக நடுவண் வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய 2019-20 நிதியாண்டில், ஏற்றுமதி செய்யப்பட்ட `660 கோடி மதிப்புள்ள 1.95 லட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழத்தைவிடவும் இது அதிகமாகும்.
 • உலக வாழைப்பழ உற்பத்தியில் 25 சதவீத பங்கைக்கொண்ட இந்தியா, மிகப்பெரிய வாழைப்பழ உற்பத்தியாளராக உள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற AY.1 என்றால் என்ன?

அ) கொரோனா வைரஸ் திரிபு

ஆ) விண்வெளித்திட்டம்

இ) COVID தடுப்பூசி

ஈ) உள்கட்டமைப்புத்திட்டம்

 • B.1.617.2.1 என்னுமொரு புதிய கொரோனா வைரஸ் திரிபு, எளிமையாக புரிவதற்காக ‘AY.1’ எனக் குறிப்பிடப்படுகிறது. இத்திரிபு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இக்கொரோனா வைரஸ் திரிபானது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் பண்புகளைக் கொண்டுள்ளது.
 • இதன்மூலம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல், தடுப்பூசிகள் மற்றும் பிற பொருளெதிரி சிகிச்சைகளை இது பகுதியாகவோ (அ) முழுமையாகவோ எதிர்க்கும்.

4. பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட, ‘COVID-19 முன்களப் பணியா -ளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டமானது’ எந்தத் திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ) பிரதமர் ஆத்ம நிர்பார் பாரத் யோஜனா

ஆ) பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா 3.0

இ) பிரதமர் தூய்மை இந்தியா திட்டம்

ஈ) PM கேர்ஸ்

 • இந்தியப் பிரதமர் மோடி, ‘COVID-19 முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை’ தொடங்கினார். நாடு முழுமைக்கும் உள்ள `1 இலட்சத்துக்கும் மேற்பட்ட COVID-19 முன்களப்பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இந்தத் திட்டம், பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் 3.0’ன்கீழ் `276 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டமாகும்.

5. இந்தோ-பசிபிக் நிலைப்புத்தன்மைக்காக கீழ்காணும் எந்த இரு நாடுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள் -ளது?

அ) இத்தாலி – ஜப்பான்

ஆ) பிரான்ஸ் – ஆஸ்திரேலியா

இ) ஐக்கிய அரபு அமீரகம் – நியூசிலாந்து

ஈ) ஜெர்மனி – தென் கொரியா

 • இந்தியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைப்புத்தன்மையையும், விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள து. இது, “அனைவரின் இசைவு” என்பதையும் “சிலரின் ஆதிக்கத்துக்கு உட்படாதது” என்பதையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

6. கூட்டு சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்திற்கான செயல்திட்டத்தை அண்மையில் வெளியிட்ட இரு நாடுகள் எவை?

அ) அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

இ) ரஷ்யா மற்றும் சீனா

ஈ) ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

 • அண்மையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டு சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்திற்கான செயல்திட்டத்தை வெளியிட்டன. சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் என்பது நீண்டகால செயல்பாட்டு திறனுடன் கூடிய விரிவான அறிவியல் பரிசோதனை தளமாகும். இது, 2036ஆம் ஆண்டு முதல் செயல்படும். பலவிதமான அறிவியல் வசதிகள் மற்றும் உபகரணங்களை இது கொண்டிருக்கும்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Paraceratherium என்பது பின்வரும் எந்த விலங்கின் அழிந்துபோன ஒரு இனமாகும்?

அ) காண்டாமிருகம்

ஆ) முதலை

இ) தொன்மா

ஈ) பாம்பு

 • Paraceratherium என்பது கொம்பற்ற காண்டாமிருகத்தின் அழிந்துபோன ஓர் இனமாகும். இது, நிலப்பரப்பில் வாழும் மிகப்பெரிய பாலூட்டிகளுள் ஒன்றாகும். புதைபடிவங்களின் முழுமையற்ற தன்மையால் Paracerathe -rium’இன் சரியான அளவு தெரியவில்லை. வறண்ட பாலைவனங்கள் முதல் வெப்பமண்டல காடுகள் வரையிலான வாழ்விடங்களில் இந்த உயிரினம் வாழ்ந்தது.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற Stygarctus keralensis கண்டுபிடிக் -கப்பட்ட மாநிலம் எது?

அ) கோவா

ஆ) மகாராஷ்டிரா

இ) கேரளா

ஈ) மணிப்பூர்

 • கொச்சினின் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடல்சார் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரி வேதியியல் துறை பேராசிரியர்கள் NK விஷ்ணுதத்தன், PR ஜெயச்சந்திரன் மற்றும் பிஜோய் நந்தன் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் J G ஹேன்சன் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் ஆய்வுக்குழுவால் கேரள மாநிலத்தில் Stygarctus keralensis கண்டுபிடிக்கப்பட்டது. இது Stygarctus keralensis இனத்தின்கீழ் பெயரிடப்பட்ட எட்டாவது இனமாகும்.

9. மிகவும் அருக்கிவிட்ட புல்லினமான Lophopogon prasannae கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?

அ) மணிப்பூர் ஆ) இராஜஸ்தான்

இ) ஆந்திர பிரதேசம் ஈ) ஹரியானா

 • புதிய புல்லினமான “Lophopogon prasannae” சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் நிஜிடி காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. Dr PV பிரசன்னாவின் பெயரால் இப்புல்லினம் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) ‘சிவப்புப்பட்டியல்’ அடிப்படையில் இவ்வினம் ‘மிகவும் அருக்கிவிட்ட இனம்’ எனக்குறிக்கப்ப -ட்டுள்ளது.

10. உலக முதலை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.15

ஆ) ஜூன்.16

இ) ஜூன்.17

ஈ) ஜூன்.18

 • உலகெங்கிலுமுள்ள அருகிவரும் முதலை இனங்கள் அவற்றின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஜூன்.17 உலக முதலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில், சதுப்புநில முதலை (Crocodylus palustris); உவர்நீர் முதலை (Crocodylus porosus) மற்றும் சொம்புமூக்கு முதலை (Gavialis gangeticus) ஆகிய 3 முதலை இனங்கள் காணப்படுகி -ன்றன. இவற்றுள் சொம்புமூக்கு முதலை இனம் அருகிவரும் இனமாக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு: 10ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு தரவரிசைப்பட்டியலில் 10ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து, வருகிற ஜூலை 1ஆம் தேதி ஆறாம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள சூழலில், இந்தியாவுக்கு இந்த அங்கீகாரத்தை ஐநா அமைப்பின் அங்கமான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் வழங்கியிருக்கிறது.

2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ITU வெளியிட்டது. அதில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன், சௌதி அரேபியா நாடுகள் இரண்டாம் இடத்தையும், எஸ்தோனியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒட்டுமொத்த அளவில் 10ஆவது இடத்தையும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவில் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பின்தங்கியிருந்த இந்தியா 37 இடங்கள் முன்னேறி, 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள், அமைப்புசார்ந்த நடவடிக்கை, திறன்மேம்பாடு, கூட்டு ஒத்துழைப்பு ஆகிய 5 அளவீடுகளின் அடிப்படையில் கேள்வி-பதில் அடிப்படையிலான இணையவழி ஆய்வின்மூலம் சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு வெளியிடப்படுகிறது. மொத்தம் 100 புள்ளிகளுக்கு நடத்தப்படும் இந்த ஆய்வில் இந்தியா 97.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது, இணைய பாதுப்புக்கான அனைத்து வரையறைகளையும் இந்திய சிறப்பாக வலுப்படுத்தி, இணைய பாதுகாப்பில் மேம்பட்டிருப்பதை காட்டுகிறது.

2. ஜூன்.1 – தேசிய மருத்துவர்கள் நாள்

கருப்பொருள்: Save The Saviours.

3. அட்டர்னி ஜெனரலாக மீண்டும் கே.கே.வேணுகோபால் நியமனம்

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் மேலும் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 90.

அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுபவர் மூன்றாண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பார். இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக கடந்த 2017 முதல்முறையாக நியமிக்கப்பட்ட கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்தஆண்டு நிறைவடைய இருந்தது. அவர் பணிநீட்டிப்பு கோரியதையடுத்து அவரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அவரின் பணிநீட்டிப்பு காலம் ஜூன்.30 நிறைவடைந்தது. இந்நிலையில் அவரை ஜூலை 1ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் மீண்டும் அட்டர்னி ஜெனரலாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளதாக சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டவிவகாரங்கள் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

4. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது

தமிழ்நாட்டைச் சார்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அறுவருக்கு தொழில்நுட் -பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படை -ப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ICT விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக்கலைமூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை NCERT வெளியிட்டுள்ளது. இதில் 2018ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் தேர்வுபெற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு பெற்றவர்கள்: கணேஷ், (கணினிசார் வளங்களான காணொளிகள், விளையாட்டுகள், செயலி மூலமாக கணிதம் கற்பிப்பவர்), கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம்.

மனோகர் சுப்பிரமணியம் (QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தவர்) வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கரூர் மாவட்டம்.

தயானந்த் (கற்றல்-கற்பித்தலுக்காக 170-க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கியவர்), உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மாவட்டம்.

2019ஆம் ஆண்டுக்கான விருதுகள்: நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

ஜெ செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் கரும்பலகையை உருவாக்கியவர்), மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்.

தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த விடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்), பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சேலம் மாவட்டம்.

இளவரசன் (தொழில்நுட்ப உதவியுடன் இருபத்திரண்டு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தனது மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே QR கோடு திட்டத்தைச் செயல்படுத்தியவர்), வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம்.

இந்த ICT விருது மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.

1. India intends to achieve land degradation neutral status by which year?

A) 2030

B) 2035

C) 2037

D) 2040

 • India is signatory to the United Nations Convention on Combating Desertification (UNCCD). It intends to achieve land degradation neutral status by 2030.
 • Prime Minister Narendra Modi recently addressed a high–level virtual conference on desertification, land degradation and drought. PM Modi was President of 14th session of Conference of the Parties to United Nations Convention to Combat Desertification at New Delhi in 2019.

2. Which country is the largest producer of bananas in the world?

A) USA

B) Ecuador

C) India

D) South Africa

 • The Union Ministry of Commerce has stated that India has exported a total of 1.91 lakh tonne worth Rs 619 crore, during the financial year 2020–21. In the previous FY 2019–20, the banana exports stood at a higher quantum of 1.95 lakh metric tonne banana valued at Rs 660 crore. India is the largest producer of Banana, with a share of 25% of world output.

3. What is AY.1, which is seen in news recently?

A) Coronavirus variant

B) Space Mission

C) COVID Vaccine

D) Infrastructure Project

 • B.1.617.2.1, is a new Coronavirus variant and is denoted as AY.1 for simplicity. This variant is found to be rapidly spreading in several countries including India. This corona virus variant has immune escape properties, thereby making it partially or fully resistant to the body’s immune response, vaccines and antibody therapies.

4. The ‘Crash course programme for Covid–19 frontline workers’ launched by the PM, is designed under which scheme?

A) PM Atma Nirbhar Bharat Yojana

B) PM Kaushal Vikas Yojana 3.0

C) PM Swachh Bharath Abhiyan

D) PM Cares

 • The Prime Minister of India Narendra Modi has launched a customized crash course programme for COVID–19 frontline workers, which would make available trained health workers across the country to assist the battle against COVID.
 • The course has been launched with a financial outlay of Rs.276 crore under the Central Component of Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0.

5. India has launched a trilateral with which two countries, for Indo–Pacific stability?

A) Italy – Japan

B) France – Australia

C) UAE – New Zealand

D) Germany – South Korea

 • India, Italy and Japan have launched a trilateral, through a virtual meeting in which India was represented by the Union Ministry of External Affairs. This trilateral aims to create stability and a rules–based international order in the Indo–Pacific region, which is based on “consent of all” and not “power of the few”.

6. Which two countries recently unveiled a roadmap for a joint International Lunar Research Station?

A) USA and UAE

B) USA and UK

C) Russia and China

D) Russia and UAE

 • Russia and China recently unveiled a roadmap for a joint International Lunar Research Station. The International Lunar Research Station is a comprehensive scientific experiment base with the capability of long–term autonomous operation.
 • The ILRS will become operational from 2036 onwards, providing a range of scientific facilities and equipments.

7. Paraceratherium, that was recently in news, is an extinct genus of which animal?

A) Rhinoceros

B) Crocodile

C) Dinosaur

D) Snake

 • Paraceratherium is an extinct genus of hornless rhinoceros. It is one of the largest terrestrial mammals.
 • The exact size of Paraceratherium is unknown because of the incompleteness of the fossils. It lived in habitats ranging from arid deserts with a few scattered trees to subtropical forests.

8. Stygarctus keralensis, that was recently making news, was discovered in which Indian state?

A) Goa

B) Maharashtra

C) Kerala

D) Manipur

 • Stygarctus keralensis was discovered in Kerala by a research team which consisted of Vishnudattan, Jayachandran, and Bijoy Nandan, professor, Department of Marine Biology, Microbiology and Biochemistry, Cochin University of Science and Technology, J G Hansen, University of Copenhagen. It is the eighth species named under the genus Stygarctus.

9. Critically endangered grass species Lophopogon prasannae has recently been found in which Indian state?

A) Manipur

B) Rajasthan

C) Andhra Pradesh

D) Haryana

 • The new grass species, “Lophopogon prasannae” has recently been discovered in the Nigidi forest of Anantapur district, Andhra Pradesh. This grass species has been named after Dr PV Prasanna. This species has been marked as ‘critically endangered’ on the basis of the International Union for Conservation of Nature’s ‘red list’ criteria.

10. On which date, World Crocodile Day is observed?

A) June.15

B) June.16

C) June.17

D) June.18

 • June 17 is celebrated as World Crocodile Day to highlight the plight of endangered crocodiles and alligators around the world.
 • Three crocodilian species are found in India viz. mugger or marsh crocodile (Crocodylus palustris); Estuarine or saltwater crocodile (Crocodylus porosus) and gharial (Gavialis gangeticus). Of these, Gharial is endangered.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content