1st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. COVID-19 திரிபுகளை அடையாளங்காண, “பன்னாட்டு நோய்க் கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கியப் பேரரசு

இ) இந்தியா

ஈ) ஜெர்மனி

 • உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தலைவர்களுடன் இணைந்து, இங்கிலாந்து, “பன்னாட்டு நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” உருவாக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த வலையமைப்பு, புதிய COVID-19 திரிபுகளை அடையாளங்கண்டு, நிகழ்நேர தரவை வழங்கு -வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. NIDHI4COVID2.0 என்பதை அமைத்துள்ள அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) சுகாதார அமைச்சகம்

இ) வர்த்தக அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

 • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது ‘NIDHI4COVID2.0’ஐ அறிமுகப்படுத் -தியுள்ளது. இது உயிர்வளி, மருத்துவ பாகங்கள், உபகரணங்களின் பெயர்வுத்திறன், நோயறிதல்போன்ற துறைகளில் தீர்வுகளை வழங்குகிற இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நிதியளிக் -கும். COVID-19 சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

3. ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஊர்தியானது எந்தக் கோளுக்கு ஏவுவதற்காக ESA’ஆல் கட்டப்பட்டு வருகிறது?

அ) திங்கள்

ஆ) வெள்ளி

இ) செவ்வாய்

ஈ) வியாழன்

 • செவ்வாய் கோளுக்கு ஏவப்படவுள்ள ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) உருவாக்கி வரும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஊர்தி அதன் சோதனைகளின்போது வெற்றிகரமான செயல்பாடுகளை நிரூபித்துள்ளது.
 • 2023’இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ESA’இன் எக்ஸோமார்ஸ் திட்டத்தின் ஒருபகுதியாகும் இந்த ஊர்தி. முன்னதாக, இந்தப்பணி, 2020ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நிலவிவரும் COVID தொற்று பரவலால் அப்பணிகள் தாமதமானது.

4. நைராகோங்கோ மலை அமைந்துள்ள நாடு எது?

அ) நைஜீரியா

ஆ) அல்பேனியா

இ) காங்கோ

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 • நைராகோங்கோ மலை என்பது காங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைந்துள்ள ஒரு செயலிலுள்ள அடுக்கு எரிமலை ஆகும். 3,470 மீட்டர் உயரங்கொண்ட இவ்வெரிமலை சமீபத்தில் வெடித்து எரிமலைக்குழம்பை கக்கியது. இதன் காரணமாக அங்கிருந்த வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.

5. உலக கடலாமை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 22

ஆ) மே 23

இ) மே 21

ஈ) மே 20

 • ஆண்டுதோறும் மே.23 அன்று உலக கடலாமை நாள் கடைப்பிடிக்கப்ப -டுகிறது. இது கடலாமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Turtles Rock!” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
 • அமெரிக்க ஆமை மீட்பு என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் 2000ஆம் ஆண்டிலிருந்து பரவலாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

6. நடப்பாண்டில் (2021) வரும் உலக அளவீட்டியல் (Metrology) நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Precision in Measurement

ஆ) Measurement for Health

இ) Accuracy Matters

ஈ) Measurement for Science

 • கடந்த 1875ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மீட்டர் சாசனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.20 அன்று உலக அளவீட்டியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கம், தொழிற்துறை உற்பத்தி மற்றும் பன்னாட்டு வர்த்தக -ம் அத்துடன் வாழ்க்கைத்தரம் மற்றும் பன்னாட்டுச் சூழலின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் ஓர் சீரான அளவீட்டு முறையை இந்தச் சாசனம் வழங்குகிறது.
 • “Measurement for Health” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்தச் சிறப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.

7. ஆண்டுதோறும், “ஆப்பிரிக்கா நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மே 25

ஆ) மே 26

இ) மே 27

ஈ) மே 28

 • ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ‘ஆப்பிரிக்க ஒற்றுமை’ அமைப்பின் நிறுவுநாளை நினைவுகூரும் வகையில், ‘ஆப்பிரிக்கா நாள்’ கொண்டாடப்படுகிறது. அவ்வமைப்பானது கடந்த 1963ஆம் ஆண்டு மே 25 அன்று நிறுவப்பட்டது. அதன்பின், 2002ஆம் ஆண்டில் அவ்வமைப்பு, ‘ஆப்பிரிக்க ஒன்றியம்’ என்று நிறுவப்பட்டது. ஆப்பிரிக்காவின் வலிமை மற்றும் பன்முகத்தன்மையையும், ஆப்பிரிக்க ஒற்றுமையை வளர்ப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 • “Arts, Culture and Heritage: Levers for Building the Africa We Want” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

8. ஆண்டுதோறும் மே.25 அன்று, நாளமில்லா சுரப்பிச் சீர்கேடுடன் தொடர்புடைய எந்தச் சிறப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?

அ) உலக நீரிழிவு நாள்

ஆ) உலக தைராய்டு நாள்

இ) உலக எலும்புத்துளை நோய் நாள்

ஈ) உலக அடிசன் நோய் நாள்

 • கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே.25 அன்று உலக தைராய்டு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 • தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பி -ய தைராய்டு சங்கமும், அமெரிக்க தைராய்டு சங்கமும் இணைந்து உலக தைராய்டு நாளை நிறுவின. தைராய்டு என்பது மிகப்பொதுவான நாளமில்லா சுரப்பிச்சீர்கேடாகும். தைராய்டின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும், எடை குறைக்க உதவுவதிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. வேளாண் துறையில் ஒத்துழைப்புக்காக, எந்த நாட்டுடனான 3 ஆண்டு வேலை திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) இஸ்ரேல்

இ) பிரான்ஸ்

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 • இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

10. 2020-21 காலப்பகுதியில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) குஜராத்

ஈ) மகாராஷ்டிரா

 • 2020-21ஆம் நிதியாண்டில், இந்தியா, மொத்தம் $81.72 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 10% அதிகமயக்கும். 2020-21 நிதியாண்டில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களு -ள் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈர்க்கப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வருவாயில் 37% பங்கை குஜராத் மாநிலம் கொண்டுள் -ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (27%), கர்நாடகா (13%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

செய்தித்தாள் நிகழ்வுகள்

1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 சதவீதமாக சரிவு

நாட்டின் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் -7.3 சதவீதமாக சரிவைச் சந்தித்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித் -திருப்பதாவது: கடந்த 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளதாரம் -7.3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இது, எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான பின்னடைவேயாகும். உலகின் மிகமோசமான COVID தொற்று இந்தியாவை தாக்குவதற்கு சற்று முன்னதான நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் மற்றும் விகிதம் சிறப்பான நிலையில் காணப்பட்டது. அதன் காரணமாகவே நாட்டின் பொருளாதரம் அஞ்சிய அளவுக்கு வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார பலத்தைக் கொண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய டிசம்பர் காலாண்டு வளர்ச்சியான 0.5 சதவீதத்தைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். முந்தைய ஆறு மாதங்கள் கரோனா பேரிடரின் மோசமான பாதிப்பிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் டிசம்பர் காலாண்டு வளர்ச்சி அமைந்திருந்தது. அதேசமயம், 2020 ஜனவரி- மார்ச் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

COVID பேரிடரை கட்டுக்குள் கொண்டுவர தேசிய அளவில் பொதுமுடக்க -ம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நுகர்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது, 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.3 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 1979-80ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.2 சதவீதமாக சரிவடைந்ததே இதுவரை மோசமான வளர்ச்சியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு, கரோனா தொற்றுகாரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ஆம் நிதியாண்டில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

முந்தைய 2019-20ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் நான்கு சதவீதமாக காணப்பட்டது என NSO தெரிவித்து -ள்ளது. நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 10-11 சதவீத வளர்ச்சிகண்டு `145 லட்சம் கோடி அளவை மீண்டும் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கரோனா இரண்டாவது அலை பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2. எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த சீனாவை சேர்ந்த மலையேற்ற வீரர்!

எவரெஸ்ட் மலைமீது ஏறி சாதனை படைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த பார்வையற்ற மலையேற்ற வீரர். எவரெஸ்டில் ஏறிய ஆசியாவை சேர்ந்த முதல் பார்வையற்றவர், உலகின் மூன்றாவது பார்வையற்றவர் என்கிற சாதனையையும் அவர் சொந்தமாக்கியுள்ளார்.

சீனாவை சேர்ந்தவர் ஷாங் காங் (44), பார்வையற்றவரான இவர், மலையேறும் வழிகாட்டிகளுடன் எவரெஸ்ட் மலை மீது ஏறத்தொடங்கி, கடந்த மே 24ஆம் தேதி உச்சியை அடைந்தார். பின்னர் பாதுகாப்பாக காத்மாண்டு திரும்பினார்.

3. சிஐஐ கூட்டமைப்பின் புதிய தலைவராக நரேந்திரன் தேர்வு

இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைவராக டி வி நரேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து CII வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான டி வி நரேந்திரன் CII கூட்டமைப்பி -ன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 2021-22 ஆண்டுக்கான புதிய தலைவராக இருப்பார். முன்பு இப்பதவியில் இருந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமைச்செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான உதய் கோட்டக்கிடமிருந்து நரேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

CII கூட்டமைப்பில் நரேந்திரன், மண்டல, மாநில, தேசிய அளவில் பல்வே -று பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், ஹீரோ மோட்டோகார்ப்பின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முன்ஜால் CIIஇன் துணைத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சேதி தெரியுமா?

மே.22: ‘A76’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப் பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங் -கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே.23: கரோனா காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு ரத்து செய்யப்ப -ட்ட 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மே.24: தமிழகத்தில் காஞ்சிபுரம் கோவில்கள் உள்பட இந்தியாவில் ஆறு இடங்கள் UNESCO’இன் உத்தேச உலகப் பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

மே.25: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்து 6 மாதங்களில் தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டார்.

மே.26: தமிழகச் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் ச ம உ., கு செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

மே.27: வங்கக்கடலில் உருவான அதிதீவிர ‘யாஸ்’ புயல் ஒடிஸாவின் பாலசோர் அருகே கரையைக் கடந்தது.

மே.28: தமிழகத்தில் தளர்வில்லாத கரோனா முழு ஊரடங்கை ஜூன்.7 வரை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.

1. Which country has announced to launch the “International Pathogen Surveillance Network”, to identify COVID–19 variants?

A) USA

B) UK

C) India

D) Germany

 • The Prime Minister of UK Boris Johnson has announced that the UK would form an “International Pathogen Surveillance Network” in association with the World Health Organisation and other leaders across the globe. The network is aimed to identify the new COVID 19 variants and provide real time data on the same.

2. NIDHI4COVID2.0 has been set up by which ministry?

A) Ministry of Defence

B) Ministry of Health

C) Ministry of Commerce

D) Ministry of Science and Technology

 • The Union Ministry of Science and Technology’s Department of Science and Technology has launched the “NIDHI4COVID2.0”, which would fund start–ups & companies registered in India which offers solutions in areas like oxygen, medical accessories, portability of equipment, diagnostic etc.
 • This is done to encourage make in India since various medical equipment & devices required for COVID treatment are being imported.

3. Rosalind Franklin Rover is being built by ESA to be launched to which planet?

A) Moon

B) Venus

C) Mars

D) Jupiter

 • The Rosalind Franklin rover, which is being built by the European Space Agency (ESA) to be launched to Mars has demonstrated successful operations during its trails. The rover is a part of ESA’s ExoMars mission which is scheduled to be launched in 2023.
 • Earlier, the mission was planned to be launched in 2020, but has been delayed due to the ongoing COVID pandemic.

4. Mount Nyiragongo is located in which country?

A) Nigeria

B) Albania

C) Congo

D) USA

 • Mount Nyiragongo is an active stratovolcano located in the Democratic Republic of Congo. It has an elevation of 3,470m. The volcano has erupted recently and has flushed out a river of lava. The lava has destroyed houses and highways.

5. When is the World Turtle Day observed every year?

A) May 22

B) May 23

C) May 21

D) May 20

 • Every Year, 23rd May is observed as World Turtle Day, which is aimed to make people aware of turtles – tortoises and their habitats. The theme for this year’s turtle day is “Turtles Rock!”. This day has been celebrated widely since 2000 by a non–profit organization named American Tortoise Rescue (ATR).

6. What is the theme of ‘World Metrology Day’ 2020?

A) Precision in Measurement

B) Measurement for Health

C) Accuracy Matters

D) Measurement for Science

 • The World Metrology Day is observed every year on May 20 to commemorate anniversary of the signing of the Metre Convention in 1875. The treaty provides the basis for a coherent measurement system worldwide that underpins scientific discovery & innovation, industrial manufacturing and international trade, as well as the improvement of the quality of life and the protection of the global environment. The 2021 theme is “Measurement for Health”.

7. When is ‘Africa Day’ celebrated across the world, every year?

A) May 25

B) May 26

C) May 27

D) May 28

 • Africa Day is celebrated to commemorate the birth anniversary of the Organisation of African Unity, which was established 57 years ago, on May 25th, 1963 and its successor organization is the African Union, which was established in 2002. The day highlights and celebrates the vitality and diversity of Africa and to promote African unity. The 2021 theme is “Arts, Culture and Heritage: Levers for Building the Africa We Want”.

8. Which day is celebrated on May 25 every year, that is associated with an endocrine disorder?

A) World Diabetes Day

B) World Thyroid Day

C) World Osteoporosis Day

D) Addison’s disease Day

 • Every year, May 25 has been observed as the World Thyroid Day since 2008, across the world. The European Thyroid Association and American Thyroid Association established World Thyroid Day to promote public awareness of thyroid disease.
 • Thyroid is the most common endocrine disorder. Jal Shakti Ministry has said that water plays a crucial role in treating the symptoms of thyroid and helping in weight loss.

9. India has signed a 3–year work programme with which country for cooperation in agriculture?

A) UAE

B) Israel

C) France

D) USA

 • India and Israel have signed a 3–year work program agreement for development in Agriculture cooperation. India and Israel are already implementing the ‘INDO–ISRAEL Agricultural Project Centres of Excellence’ and ‘INDO–ISRAEL Villages of Excellence’.

10. Which Indian state is the top recipient of FDI equity inflows during 2020–21?

A) Tamil Nadu

B) Karnataka

C) Gujarat

D) Maharashtra

 • India attracted the highest ever total FDI inflow of US$ 81.72 billion during the financial year 2020–21. This is 10% higher as compared to the last financial year 2019–20. Gujarat is the top recipient state of FDI during the FY 2020–21 with 37% share of the total FDI Equity inflows. It is followed by Maharashtra (27%) and Karnataka (13%).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *