TnpscTnpsc Current Affairs

1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமானது (PMEGP) எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ. 2023–24

ஆ. 2024–25

இ. 2025–26 

ஈ. 2029–30

 • பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (PMEGP) 2025–26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தச்செலவு `13,554.42 கோடியாகும். இந்தத் திட்டத்தின் நீட்டிப்பு 2021–22 முதல் 2025–26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு 15ஆவது நிதி ஆணைய சுழற்சியில் உள்ளது. ஐந்து நிதியாண்டுகளில் சுமார் 40 இலட்சம் பேருக்கு நிலையான வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

2. அண்மையில், ‘பரமானந்தா’ என்னும் மீத்திறன் கணினியை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. ஐஐடி கௌகாத்தி

ஆ. NIT திருச்சிராப்பள்ளி

இ. ஐஐடி காந்திநகர் 

ஈ. ஐஐடி மெட்ராஸ்

 • அதிநவீன கணினி மேம்பாட்டு மையமும் (C–DAC) காந்திநகரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ‘பரமானந்தா’ என்ற புதிய மீத்திறன் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது மத்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த மீத்திறன் கணினி 838 டெரா பிளாப்கள் என்ற உச்சபட்ச செயல்திறனை வழங்கும் திறன்கொண்டது. இதன்மூலம், மொத்தமாக 24 பெட்டா பிளாப்கள் செயல்திறன்திறன்கொண்ட 15 மீத்திறன் கணினிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

3. ‘Tobacco: Poisoning Our Planet’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. உலக சுகாதார நிறுவனம் 

இ. UNICEF

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

 • உலக புகையிலை ஒழிப்பு நாளையொட்டி உலக சுகாதார நிறுவனம் ‘புகையிலை: நமது கோளை நஞ்சாக்குகிறது’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. எட்டு மில்லியன் மனித உயிர்கள், 600 மில்லியன் மரங்கள், 200,000 ஹெக்டேர் நிலம், 22 பில்லியன் டன் நீர், மற்றும் 84 மில்லியன் டன்கள் கரியமில வாயுவை பூமியின் வளிமண்டலத்தில் வெளியிடும் ஓர் ஆண்டைய இழப்புகளுக்கு புகையிலைத் தொழிலே காரணம் என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

4. 2021–22–இல் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. மகாராஷ்டிரா 

இ. அஸ்ஸாம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

 • ஐந்தாண்டு இடைவெளிக்குப்பிறகு, 2021–22ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தை பின்னுக்குத்தள்ளி, இந்தியாவின் முதல் சர்க்கரை உற்பத்தியாளராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.
 • 2021–22ஆம் பிழியாண்டுக்கான (அக்–செப்) மகாராட்டிர மாநிலத்தின் உற்பத்தி 138 இலட்சம் டன்களாக இருந்தது. இது 2018–19ஆம் பிழியாண்டின் முந்தைய 107.21 இலட்சம் டன்களை விட அதிகமாகும். மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

5. ஐக்கிய அரபு அமீரகத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இஸ்ரேல் 

இ. பிரான்ஸ்

ஈ. இத்தாலி

 • ஐக்கிய அரபு அமீரகத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது. இது அரபு நாடொன்றுடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் முதல் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த ஒப்பந்தம், ஐக்கிய அரபு அமீரகத்தில், குறிப்பாக துபாயில் அலுவலகங்களை அமைக்க அதிக இஸ்ரேலிய நிறுவனங்களை ஊக்குவிக்கும். பிப்ரவரியில் இந்தியாவுடன் இதேபோன்ற ஓர் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டது.

6. ‘கதிசக்தி சஞ்சார்’ வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. ரெயில்வே அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘கதிசக்தி சஞ்சார்’ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது, நாட்டில் 5G சேவை தொடங்குவதற்கு முன்னதாக, கண்ணாடியிழை வடங்கள் மற்றும் கோபுர நிறுவல்களை அமைப்பதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 • இந்த வலைத்தளம் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மையப்படுத்திய வழியுரிமை (RoW) அனுமதிகளை செயல்படுத்துவதோடு 5G சேவைகள் உட்பட RoW அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தப்ப –டும். இது ஒப்புதலுக்கான நேரத்தை கிட்டத்தட்ட 100 நாட்களிலிருந்து சுமார் 22–ஆகக்குறைக்கிறது.

7. 2022 – உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Impact of Light Pollution on Migratory Birds 

ஆ. Impact of Air Pollution on Migratory Birds

இ. Impact of Noise Pollution on Migratory Birds

ஈ. Impact of Pandemic on Migratory Birds

 • உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளானது மே.14 அன்று கொண்டாடப்படுகிறது. இது புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், நச்சூட்டு நோய் மற்றும் சட்டவிரோதமாகக் கொல்லுதல்போன்றவற்றை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 • உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அவை மே மற்றும் அக்டோபர் 2ஆவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. “Impact of Light Pollution on Migratory Birds” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கானக் கருப்பொருளாகும். ஆண்டுதோறும் 229 வகையான பறவைகள் இந்தியா நாட்டிற்கு வலசை வருகின்றன.

8. 2022 போர்ப்ஸ் பட்டியலின்படி, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் யார்?

அ. லியோனல் மெஸ்ஸி 

ஆ. விராட் கோலி

இ. லீப்ரான் ஜேம்ஸ்

ஈ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

 • 2022ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலின்படி, கடந்த 12 மாதங்களில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உள்ளார். லியோனல் மெஸ்ஸி, கால்பந்து விளையாடுவதன்மூலம் ஆண்டுக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார். விளம்பர ஒப்பந்தங்கள்மூலம் அவர் மேலும் $55 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறார். அவர் பட்டியலில் லீப்ரான் ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட முன்னணியில் உள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருந்தார்.

9. Roy: Going for Broke’ என்பது எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்?

அ. ஷேன் வார்ன்

ஆ. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 

இ. ரிக்கி பாண்டிங்

ஈ. ஆடம் கில்கிறிஸ்ட்

 • ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 2 முறை உலகக்கோப்பையை வென்றவருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சமீபத்தில் மகிழுந்து விபத்தில் உயிரிழந்தார். பேட்டிங் ஆல்–ரவுண்டரான அவர் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 46 வயதான அவர் 198 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடித்துள்ளார். 133 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ‘Roy: Going for Broke’ என்பது ஸ்டீபன் கிரேவுடன் இணைந்து எழுதிய அவரது சுயசரிதையாகும்.

10. இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) எத்திட்டத்தின் பாகமான திட இராக்கெட் பூஸ்டர் HS–200–ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது?

அ. ககன்யான் 

ஆ. ஆதித்யா–L1

இ. சந்திரயான்–3

ஈ. ஆதித்யா–L2

 • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் திட இராக்கெட் பூஸ்டர் HS–200–ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 203 டன் திட உந்துபொருளுடன் கூடிய HS–200 பூஸ்டர் 135 வினாடிகளுக்கு பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகலம் பல்வேறு தொழிற்துறைகளுடன் இணைந்து ISRO–ஆல் உருவாக்கப்பட்டதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. மாநிலங்களுக்கு GST இழப்பீடு `86,912 கோடி: தமிழகத்துக்கு `9,602 கோடி

மாநிலங்களுக்கு சரக்கு சேவை வரியின் (GST) இழப்பீட்டுத் தொகையாக `86,912 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மே.31ஆம் தேதி வரையிலான இந்த இழப்பீட்டுத் தொகையில், தமிழகத்துக்கு `9,602 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில் அத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய GST இழப்பீட்டுத் தொகை `25,000 கோடியாக உள்ளது. இருப்பினும் மாநிலங்களின் மூலதனச் செலவுகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் கூடுதல் வரி மூலம் மற்றும் சொந்த நிதி ஆதாரங்களிலிருந்தும் `61,912 கோடியையும் சேர்த்து விடுவிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. GST இழப்பீட்டு தொகை வழங்கப்படாதது குறித்து சர்ச்சை எழுப்பப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு தற்போது நிலுவையின்றி அனைத்து தொகையையும் முழுமையாக விடுவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் GST அமலுக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இந்த வரி இழப்பீட்டை மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்க மத்திய அரசு மேலும் நிதி ஆதாரங்களுக்கு சில சரக்குகளில் கூடுதல் வரி (செஸ்) விதித்து மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு பாதுகாத்தது. இது கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017-18, 2018-19 நிதியாண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் GST இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கரோனா நோய்த் தொற்றால் மத்திய அரசுக்குரிய கூடுதல் வரி அதிகரிக்கவில்லை என்பதுடன், கூடுதல் வரி வருவாயில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. இந்த வீழ்ச்சிக்கான இடைவெளியை நிரப்பவும், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய GST இழப்பீட்டுக்காக நிதி ஆதாரங்களின் இடைவெளியைப் போக்கவும் வெளிச்சந்தையில் மாநிலங்கள் கடன் பெற மத்திய அரசு அனுமதித்தது. பின்னர், அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 2020-21 நிதியாண்டில் `1.1 லட்சம் கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடி என சந்தையில் கடனைப் பெற்றுக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதுதவிர வழக்கமான GST இழப்பீட்டு தொகையையும் மத்திய அரசு விடுவித்து வந்தது.

ஆனால், நிகழாண்டில் GST வரி, கூடுதல் வரி வருவாய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த நிதியாண்டிற்கும் நடப்பு நிதியாண்டிற்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையின் நிலுவைத் தொகையை முழுமையாக உடனடியாக வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதன்படி சரக்கு சேவை வரியின் இழப்பீட்டை பெறும் 21 மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி 2022 வரையிலான தொகை ரூ.47,617 கோடி; 2022, பிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களுக்கு `21,322 கோடி; இறுதியாக ஏப்ரல் – மே மாதங்களுக்கு ரூ.17,973 கோடி என மே 31-ஆம் தேதி வரை மொத்த நிலுவைத் தொகை `86, 912 கோடியாக கணக்கிடப்பட்டது. இந்தத் தொகை முழுமையாக இந்த மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், மகாராஷ்டிர மாநிலத்தை (`14,145 கோடி) அடுத்து தமிழகம்தான் அதிக அளவாக `9,602 கோடி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் `8,874 கோடி, கர்நாடகம் `8,633 கோடி, தில்லி `8,012 கோடி பெற்றுள்ளது.

இதில் தமிழக அரசு தரப்பில் ரூ.11,600 கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன் கணக்கீட்டின்படி ரூ.9,602 கோடி கிடைத்துள்ளது. இறுதிக் கணக்கீடுகளில் எதிர்பார்த்த தொகை முழுமையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2. சொற்குவையில் 7.64 இலட்சம் கலைச்சொற்கள் உருவாக்கம்: விரைவில் கட்டணமில்லா தொலைபேசி சேவை

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சொற்குவை திட்டத்தின்கீழ் இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரத்து 824 கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் செய்திக்குறிப்பு:

600-க்கும் மேற்பட்ட துறைகள்: இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்கள் அனைத்தையும் திரட்டி அவற்றுக்கு நிகரான தமிழ்க்கலைச்சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம்பெற்றுள்ள அனைத்துச்சொற்களையும் ஒன்று திரட்டி, நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே சொற்குவைத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட “sorkuvai.com” என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத் தொலைபேசி வாயிலாகவும் தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

3. `3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல்: பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இராணுவத்தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் `2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அஸ்திரா எம்கே-1 ஏவுகணை, இந்திய கடற்படையிலும் விமானப்படையிலும் விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத்தாக்கி அழிக்கும் வலிமைகொண்டது.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 248 அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 200 ஏவுகணைகள் இந்திய வான்படையிலும், 48 ஏவுகணைகள் கடற்படையிலும் பயன்படுத்தப்படும். DRDO வடிவமைத்த அஸ்திரா ஏவுகணை முதன்முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதம் பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஏவுகணைகள் பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகோய் போர் விமானத்தில் சேர்க்கப்பட்டன. அந்த ஏவுகணைகள், அடுத்த சில ஆண்டுகளில் தேஜஸ் மார்க்-1ஏ போர்விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போர்விமானங்களிலும் சேர்க்கப்படும்.

4. உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி! இந்தியா பொருளாதார வளர்ச்சி 4.1%-ஆக குறைவு

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலியால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ஆவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக இந்திய பொருளாதாரம் நான்காவது காலாண்டில் குறைந்த அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.1% அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. பணவீக்கம் பொருளாதார மீட்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, 2021-22 முழு நிதியாண்டில் (2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச்) நாட்டின் பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. இது, அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பாக மதிப்பீடு செய்திருந்த 8.9 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாகும். அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.6 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி-மார்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.8% வளர்ச்சியை எட்டிய நிலையில், இந்திய பொருளாதாரம் அதைவிட குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1. The Prime Minister’s Employment Generation Programme (PMEGP) has been extended till which year?

A. 2023–24

B. 2024–25

C. 2025–26 

D. 2029–30

 • The Prime Minister’s Employment Generation Programme (PMEGP) has been approved for continuation till 2025–26 with the total outlay of Rs 13,554.42 crore. The extension of the scheme is over the 15th Finance Commission Cycle for five years from 2021–22 to 2025–26. The scheme will create sustainable employment opportunities for about 40 lakh persons in five financial years. It is implemented by the Ministry of micro, small and medium enterprises.

2. Which institution recently unveiled ‘Param Ananta’ Super Computer?

A. IIT Guwahati

B. NIT Tiruchirappalli

C. IIT Gandhinagar 

D. IIT Madras

 • The Centre for Development of Advanced Computing (C–DAC) and the Indian Institute of Technology, Gandhinagar have jointly unveiled a new supercomputer called Param Ananta. It was launched in phase two of the central government’s National Supercomputing Mission (NSM).
 • The supercomputer is capable of offering peak performance of 838 teraflops. With this, India has 15 supercomputers disclosed to the public, with a combined performance capability of 24 petaflops.

3. Which institution released the report titled ‘Tobacco: Poisoning Our Planet’?

A. NITI Aayog

B. World Health Organization 

C. UNICEF

D. Ministry of Health and Family Welfare

 • The World Health Organization (WHO) released a report titled ‘Tobacco: Poisoning Our Planet’ to coincide with World No Tobacco Day. It found that the tobacco industry is responsible for the annual loss of eight million human lives, 600 million trees, 200,000 hectares of land, 22 billion tonnes of water, and releases about 84 million tonnes of CO2 into the Earth’s atmosphere. The report called for steps to make the industry more accountable for the destruction.

4. Which state is the top sugar producer of India in 2021–22?

A. Kerala

B. Maharashtra 

C. Assam

D. Himachal Pradesh

 • Maharashtra has overtaken Uttar Pradesh (UP) to regain its position as India’s top sugar producer, in the year 2021–22, after five–year gap. The state’s output for the 2021–22 crushing year–October–September– stood at 138 lakh tonnes (lt). That is highest ever beating the previous 107.21 lakh tonnes of 2018–19. Maharashtra is followed by Uttar Pradesh and Karnataka.

5. Which country has recently signed a free trade agreement (FTA) with the United Arab Emirates?

A. Australia

B. Israel 

C. France

D. Italy

 • Israel has signed a free trade agreement with the United Arab Emirates, its first big trade pact with an Arab state. The agreement, which aimed at boosting trade between the two Middle Eastern nations, would encourage more Israeli companies to set up offices in the UAE, particularly in Dubai. The deal with Israel is UAE’s second bilateral free trade agreement after a similar accord with India in February.

6. Which Union Ministry launched the ‘GatiShakti Sanchar portal’?

A. Ministry of Railways

B. Ministry of Housing and Urban Affairs

C. Ministry of Information and Broadcasting

D. Ministry of Electronics and IT 

 • Ministry of Electronics and IT launched the ‘GatiShakti Sanchar’ portal, which aims to accelerate approvals for laying of fibre and tower installations, ahead of the 5G roll–out in the country. The portal will enable centralised right of way (RoW) approvals for telecom infrastructure projects and can be used by industries to apply for RoW approvals, including for 5G services. The portal brings down the time taken for approvals from nearly 100 days to around 22.

7. What is the theme of the ‘World Migratory Bird Day 2022’?

A. Impact of Light Pollution on Migratory Birds

B. Impact of Air Pollution on Migratory Birds

C. Impact of Noise Pollution on Migratory Birds

D. Impact of Pandemic on Migratory Birds

 • World Migratory Bird Day is celebrated on May 14. It aims to highlight the issue of the well–being of migratory birds such as loss of habitat, climate change, poisoning, and illegal killing. World Migratory Bird Day is celebrated on two peak days each year– the second Saturdays of May and October, to highlight the need for international collaboration. The theme of this year is ‘Impact of Light Pollution on Migratory Birds’. At least, 229 species of birds arrive in the country every year.

8. Who was the highest–paid athlete in the world, as per Forbes’ list of 2022?

A. Lionel Messi 

B. Virat Kohli

C. LeBron James

D. Cristiano Ronaldo

 • Ace football player Lionel Messi was the highest–paid athlete in the world over the last 12 months, as per the Forbes’ list of highest paid athletes 2022. Messi earns around USD 75 million a year from playing soccer, also receives USD 55 million from sponsorship deals and endorsements. He is ahead of LeBron James and rival Cristiano Ronaldo on the list. Previously in 2019, Messi topped the Forbes’ list.

9. ‘Roy: Going for Broke’ is the autobiography of which cricketer?

A. Shane Warne

B. Andrew Symonds 

C. Ricky Ponting

D. Adam Gilchrist

 • Former Australia cricketer and two–time World Cup winner Andrew Symonds recently passed away in a car crash. He played all three formats of cricket as a batting all–rounder. The 46–year–old featured in 198 ODIs, scoring six centuries and 30 half–centuries. He also contributed 133 wickets. ‘Roy: Going for Broke’ was his auto–biography written with Stephen Gray.

10. Indian Space Research Organisation (ISRO) successfully tested solid rocket booster HS–200, component of which mission?

A. Gaganyaan

B. Aditya–L1

C. Chandrayaan–3

D. Aditya–L2

 • Indian Space Research Organisation (ISRO) successfully tested solid rocket booster HS–200, a key component for the Gaganyaan manned mission programme. The test was conducted at Satish Dhawan Space Centre in Sriharikota. HS–200 booster loaded with 203 tonnes of solid propellant was tested for duration of 135 seconds. The launch vehicle is indigenous developed by ISRO in participation with various industries.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button