Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

1st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. FSSAI’இன்படி, தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறு பக்க கொழுப்பை (trans-fat) எம்மதிப்பிற்கு மட்டுப்படுத்த வேண்டும்?

அ) 10%

ஆ) 5%

இ) 2% 

ஈ) 1%

  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது (FSSAI) தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறுபக்க கொழுப்புகள் 2%’க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் 2022’க்குள் மாறுபக்க கொழுப்பற்ற நாடாக மாறவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
  • அண்மையில் சோதிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளுள் 1.34 சதவீத மாதிரிகளில் மட்டுமே மாறுபக்க கொழுப்புகள் பரிந்துரைக்கப் -பட்ட அளவுக்கு மேலிருந்தது. இது இந்தியா மாறுபக்க கொழுப்புகளற்ற நாடாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.

2. “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) UNFCCC

ஆ) UNICEF

இ) NITI ஆயோக்

ஈ) WMO 

  • உலக வானிலை அமைப்பானது (WMO) “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections” என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உடனடி நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
  • புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகக் குறைப்பதையும் இது கூறுகிறது. WMO என்பது ஐநா’இன் சிறப்பு நிறுவனமாகும். அது, சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

3. பின்வரும் திட்டங்களுள் எது, இந்தியாவில், அனைவருக்கும் சுகாதார காப்பீட்டை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ) PM JDY

ஆ) PM JJBY

இ) PM JAY 

ஈ) PM FBY

  • PM ஜன் ஆரோக்கியா யோஜனா (PM-JAY) என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். அது அனைவருக்கும் சுகாதாரக் காப்பீட்டை அடைவதை நோக்கமாகக்கொண்டு கடந்த 2018 செப்டம்பர்.23 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 3ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது. இத்திட்டத்தின்கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்க -ளுக்கு 2ஆம் மற்றும் 3ஆம் நிலை மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு `5 லட்சம் வரை சுகாதாரக்காப்பீடு வழங்கப்படுகிறது

4. “Fed to Fail? The Crisis of Children’s Diets in Early Life” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) NITI ஆயோக்

ஆ) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ) UNICEF 

ஈ) உலக வங்கி

  • ஐநா குழந்தைகள் நிதியமானது (UNICEF) “Fed to Fail? The Crisis of Children’s Diets in Early Life” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, 6-23 மாத வயதுடைய குழந்தைகளில் பாதி பேருக்கு மட்டுமே ஒருநாளுக்கு பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச உணவு வழங்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே அவர்கள் வளரத்தேவையான குறைந்தபட்ச உணவுகளை உட்கொள்கின்றனர். COVID-19 தொற்றுநோய் நிலைமையை மோசமாக்கலாம் என்றும் அது வெளிப்படுத்தியது.

5. நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் குறித்து இந்தியா தனது முதல் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை எந்த நாட்டோடு நடத்தியது?

அ) இங்கிலாந்து

ஆ) ரஷ்யா

இ) ஆஸ்திரேலியா 

ஈ) ஜப்பான்

  • காணொலிக்காட்சிமூலம் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் குறித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் கூட்டுப்பணிக்குழுக் கூட்டம் நடந்தது.
  • அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஆற்றல் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இது நடைபெற்றது. இவ்விவாதங்கள் இந்திய நிலக்கரி வளங்கள், உத்திசார் கனிமங்கள்-தேவை மற்றும் விநியோக சூழல் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தின. தூய நிலக்கரி தொழில்நுட்பம், மேற்பரப்பு நிலக்கரி வாயு உருவாக்கம், நிலக்கரி படுக்கை மீத்தேன், தீயணைக்கும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது, நிலக்கரி அடிப்படையிலான ஹைட்ரஜன் போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

6. 2021 உலக கொடுக்கும் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 14 

ஆ) 26

இ) 45

ஈ) 82

  • Charities Aid Foundation ஆனது உலக கொடுக்கும் குறியீட்டை (WGI) வெளியிடுகிறது. 2021 பதிப்பின்படி, இந்தியா, உலகின் முதல் 20 தாராள குணங்கொண்ட நாடுகளில் 14ஆவது இடத்தில் உள்ளது. COVID-19 தொற்றுநோய் உலகின் தொண்டு போக்குகளை வீழ்த்தியுள்ளது.
  • COVID காரணமான முடக்கங்களால் இக்குறியீட்டில் பல மேற்கத்திய நாடுகள் சரியாக செயல்படவில்லை. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை மிகவுயர்ந்த தரநிலையில் இருந்து சரிந்துள்ளன.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற குன் சிகரம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) லடாக் 

ஆ) சிக்கிம்

இ) இமாச்சல பிரதேசம்

ஈ) பீகார்

  • குன் சிகரம் என்பது நன் குன் மலைப்பகுதியின் ஒருபகுதியாகும். இது கிழக்கு இமயமலைத்தொடரில் 23,219 அடி உயரத்திலுள்ள 2ஆவது மிக உயர்ந்த சிகரமாகும். இந்தச் சிகரம் லடாக்கின் கார்கில், சுரு பள்ளத் தாக்குக்கு அருகில் அமைந்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் தீராங்கில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் அதனுடன் இணைந்த விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) ஓர் அணியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்து வைத்தார். இந்தக்குழு 2021 ஜூலை 15, முதல் 2021 ஆகஸ்ட்.10 வரை மவுன்ட் குன் மலைப்பாதை பயணத்தை நிறைவு செய்தது. NIMAS என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மலையேற்ற நிறுவனம் ஆகும்.

8. சமீபத்தில் எந்த மாநிலத்தில், KVIC, ‘துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை’ நிறுவியுள்ளது?

அ) குஜராத்

ஆ) கர்நாடகா

இ) ஒடிசா 

ஈ) மேற்கு வங்கம்

  • காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையமானது (KVIC) கட்டாக் மாவட்டத்தில் உள்ள சௌத்வாரில் ஒடிசாவின் முதல் துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை நிறுவியுள்ளது.
  • துசார் பட்டானது சிறந்த பட்டு வகைகளில் ஒன்றாகும். இது கரடுமுரடான மற்றும் நுண்ணிய நெசவுக்கு பெயர்பெற்றது. ஒடிசாவின் மொத்த காதி துணி உற்பத்தியில் பட்டின் சதவீதம் 75 ஆகும்.
  • `75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டு நூல் உற்பத்தி மையம் ஆண்டுக்கு 94 இலட்சம் மதிப்புடைய 200 கிலோ பட்டு நூலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

9. இந்திய துளிர் நிறுவனம் மற்றும் தொழில்முனைவோருக்காக ‘கோளரங்க புதுமை சவாலை’ தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) ஜல் சக்தி அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள மைகௌ இந்தியா, இந்திய துளிர் நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கான கோளரங்க புதுமை சவாலை அறிமுகம் செய்துள்ளது. ஆக்மென்ட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) & மெர்ஜ்ட் ரியாலிட்டி (MR) போன்ற அண்மைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் உள்நாட்டு கோளரங்க அமைப்பு மென்பொருளை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்திய துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதை இந்தச் சவால் நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், துளிர் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது அணிகளாக இருக்கலாம்.

10. யாருக்கு 2021ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டுள்ளது?

அ) நரேந்திர மோடி

ஆ) பம்சைல் மிலம்போ-ங்குகா 

இ) லேமா கோபோவி

ஈ) எல்லன் ஜான்சன் சர்லீப்

  • பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது 2021ஆம் ஆண்டின் உலகளாவிய கோல்கீப்பர் விருதை, ஐநா அவையின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஐநா பெண்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநரான பம்சைல் மிலம்போ-ங்குகாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வங்காளதேசத்தைச் சேர்ந்த பைரூஸ் பைசா பீதர், நலவாழ்வை ஊக்கு -விக்கும் பணிக்காக 2021 சேஞ்ச்மேக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட் -டுள்ளார். 2021ஆம் ஆண்டின் முன்னேற்ற விருது கொலம்பியாவின் ஜெனிபர் கோல்பாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான பரப்புரை விருது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணிக்காக லைபீரியாவின் சத்தா ஷெரிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்.1 – உலக முதியோர் தினம்

2. நேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பூங்கோதை

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொக்ராவில் அனைத்து விளையாட்டுகள் தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில்இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 130 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம்மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர்பட்டணத்தைச் சேர்ந்த பூங்கோதை தங்கப்பதக்கம் வென்றார்.

3. மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ‘மக்கள் பள்ளி திட்டம்’ – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டம் வரும் அக்.18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் கடந்த செப்.1-ஆம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவா்களின் நலன் கருதி தற்போதுவரை புத்தாக்கப் பயிற்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வரும் நவ.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி அல்லது கற்றல் இழப்பைக் குறைப்பதற்கு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீா் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை வரும் அக்.18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில்…

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது: கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி இந்தத் திட்டம் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம், கடலூா், திருச்சி, திண்டுக்கல், காஞ்சிபுரம், தஞ்சாவூா் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பிறகு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களில் தன்னாா்வலா்கள் மூலம் செயல்முறைக் கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு திருப்புதல் நடைபெறும்.

சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்: ஒரு தன்னாா்வலா் குறைந்தபட்சம் 15 முதல் 20 வரையிலான மாணவா்களுக்கு வகுப்பெடுப்பாா். இந்தத் திட்டத்தில் சிறப்பாக செயல்படும் தன்னாா்வலா்களுக்கும், திறமையை வெளிப்படுத்தும் மாணவா்களுக்கும் அரசின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த கிராம ஊராட்சி நிா்வாகிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். ‘மக்கள் பள்ளி’ திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

கிராம சபைக் கூட்டத்தில்…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் அக்.2-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, பள்ளிக் கல்வி சாா்ந்து விவாதிக்கப்படவுள்ள கூட்டப் பொருளோடு, ‘மக்கள் பள்ளி’ திட்டம் குறித்தும் விவாதிக்க ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள் என அனைத்து நிலை கல்வி அலுவலா்களும் கலந்து கொண்டு ‘மக்கள் பள்ளி’ திட்டத்துக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

4. சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஏஐஐபி வங்கி ரூ.2,600 கோடி கடனுதவி

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக சுமாா் ரூ.2,600 கோடியை ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) கடனாக வழங்கியுள்ளது. இதன்மூலமாக இந்தியாவுக்கு அந்த வங்கி வழங்கியுள்ள கடன் சுமாா் ரூ.47,000 கோடியாக அதிகரித்துள்ளது. சீன தலைநகா் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கடன்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளை வைத்துள்ளது; இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அதற்காக ரூ.2,600 கோடியை ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி கடனாக வழங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த வங்கியின் துணைத் தலைவா் டி.ஜே.பாண்டியன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவில் மொத்தமாக 28 திட்டங்களுக்கு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ரூ.47,000 கோடி கடன் வழங்கியுள்ளது. போக்குவரத்து, எரிசக்தித் துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏஐஐபி வங்கியின் மூலம் அதிக கடன் பெற்று பலனடைந்துள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்றை எதிா்கொள்வதற்காக சுமாா் ரூ.13,000 கோடியை இந்தியாவுக்கு ஏஐஐபி வழங்கியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம், ஆந்திர நகா்ப்புற குடிநீா்த் திட்டம், கேரள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மும்பை நகா்ப்புற போக்குவரத்துத் திட்டத்தின் 3-ஆம் கட்டம், தில்லி-மீரட் புகா் போக்குவரத்துத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் ஏஐஐபி கடன் வழங்கியுள்ளது. ஏஐஐபி வங்கியின் கடனுதவி மூலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும். இது வா்த்தகத்தையும் பொருளாதார வளா்ச்சியையும் அதிகரிக்கும்’’ என்றாா்.

5. இந்தியாவின் சராசரி பொருளாதார வளா்ச்சி 7% -க்கு மேல் இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சா்வதேச அளவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, இந்தியாவில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் மூலம் சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் சா்வதேச அளவிலான பொருளாதார மேம்பாட்டில் இந்தியா பங்களிக்கும் என்றும் அவா் கூறினாா். வாஷிங்டனில் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் தொடா்பான மாநாடு நடைபெற்றது. அமெரிக்க பெரு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் கே.வி.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று பிரச்னை ஏற்படுவதற்கு முன்பிருந்து இப்போது வரை அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்புகள் எப்போதும் வலுவாகவே உள்ளன. சில நிதி சாா்ந்த பிரச்னைகள் மட்டும் இந்தியாவில் இருந்து வந்தன. அடுத்த 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த வளா்ச்சியில் இந்தியாவுக்கான காலகட்டமாக இருக்கும். 2023-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். தொடா்ந்து மேற்கொள்ளப்படும் சீா்திருத்த நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும். எனவே, 10 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்துக்கு மேல்தான் இருக்கும்.

இந்தியாவில் அமைப்புரீதியாக பல சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 18 முதல் 20 மாதங்களில் பல்வேறு பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரே நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களால் அடித்தட்டு மக்களுக்கும் போதிய வருவாய் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. எனவே, பொருள்கள், சேவைகளுக்கான தேவைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் பொருளாதார சமநிலையின்மை குறைந்து வருகிறது என்றாா்.

6. தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகம்

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவைவிட 17 சதவீதம் அதிகம் ஆகும். பெரம்பலூரில் இயல்பை விட மிக அதிக மழையும், கோயம்புத்தூா், தேனி, திருப்பத்தூா், தூத்துக்குடி உள்பட 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழையும் பெய்துள்ளது.

தென் மேற்கு பருவமழை: நமது நாட்டில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்கு பருவமழை காலமும், அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்கு பருவமழை காலமும் ஆகும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் ஜூன் 3-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கியது. இது, படிப்படியாக விரிவடைந்து பல்வேறு மாநிலங்களிலும் மழையைக் கொடுக்க தொடங்கியது.

தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூன் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்துக்கு அவ்வப்போது மழை கிடைத்து வந்தது. குறிப்பாக, பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை கிடைத்தது. இதுபோல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, உள்மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்தமழை வரை பெய்து வந்தது. இதற்கிடையில், தென் மேற்கு பருவமழை காலமான ஜூன் 1- ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இயல்பாக 336.1 மி.மீ. மழை பெய்வது வழக்கம். இது சராசரியை விட 17 சதவீதம் அதிகமாகும்.

மிக அதிக மழை: தென்மேற்கு பருவமழை காலத்தில் பெரம்பலூரில் 68 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. பெரம்பலூரில் இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 278.7 மி.மீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் 468.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகமழை: கோயம்புத்தூா், கடலூா், கரூா், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூா், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. தேனியில் இயல்பை விட 52 சதவீதமும், திருப்பத்தூரில் 51 சதவீதமும், கோயம்புத்தூரில் 50 சதவீதமும் இயல்பை விட அதிகமழை பெய்துள்ளது.

இயல்பான மழை: அரியலூா், சென்னை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், திருப்பூா், திருவள்ளூா், திருவாரூா் உள்பட 23 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தென்மேற்கு பருவமழை காலம் (ஜூன் 1 முதல் செப்.30 வரையிலான கணக்கிட்டு காலம்) வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதேநேரத்தில், பருவமழை திரும்பப்பெறுவது காலதாமதம் ஏற்படும். குஜராத் கடலோரத்தில் காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், பிகாா் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி ஆகிய காரணங்களால், தென்மேற்கு பருவமழை தொடா்கிறது. வட இந்தியாவையொட்டிய பகுதிகளில் அக்டோபா் 6-ஆம் தேதி தென் மேற்கு பருவமழை விலக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதன்பிறகே, தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றாா் அவா்.

7. வேளாண் ரசாயன உற்பத்தியில் இந்தியாவுக்கு 4-ஆவது இடம்: தோமா்

உலக அளவில் வேளாண் ரசாயன உற்பத்தியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதாக வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை தெரிவித்தாா். க்ராப்லைஃப் இந்தியா அமைப்பின் 41-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தோமா் இதுகுறித்து மேலும் பேசியது: மத்திய அரசு எண்ம (டிஜிட்டல்) வேளாண் இயக்கத்தை தொடங்கியுள்ளதுடன், பண்ணைத் துறையில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேளாண் ரசாயன உற்பத்தியை பொருத்தமட்டில் இந்தியா உலகளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது. மேலும், இந்த துறையில் சாதனை வளா்ச்சியை எட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

வேளாண் ரசாயனம் உள்ளிட்ட 12 முக்கிய துறைகளை உள்ளடக்கிய சா்வதேச விநியோகச் சங்கிலியில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கண்டுபிடிப்பு, வேகமான பதிவு நடைமுறை அமைப்பு, ஆரம்பகால பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் எண்ம மயமாக்கல் திட்டங்களின் உதவியுடன் ரசாயனத் துறையில் முதலிடம் வகிக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என்றாா் அவா்.

8. சிவ நாடாா், மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு விருது: அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பு

இந்தியாவைச் சோ்ந்த தொழிலதிபா்கள் சிவ நாடாா், மல்லிகா ஸ்ரீநிவாசன் ஆகியோா் அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பு விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து அமெரிக்க இந்திய தொழில் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனா் சிவ நாடாா், டாஃபே நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மல்லிகா ஸ்ரீநிவாசன் ஆகியோா் ‘உலகளாவிய தலைமை விருது 2021’-க்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அக்டோபா் 6-7-ஆம் தேதிகளில் நடைபெறும் ‘இந்தியா சிந்தனைகள்’ உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிவ நாடாரின் தலைமையின் கீழ் ஹெச்சிஎல் நிறுவனமானது ஒரு தகவல் தொழில்நுட்ப சேவையிலிருந்து அதிநவீன தொழில்நுட்பத்தின் உலகளாவிய நிறுவனமாக மாறியுள்ளது. விவசாயத்தில் புதுமையைப் புகுத்தும் டாஃபே நிறுவனத்தின் தலைவா் மல்லிகா ஸ்ரீநிவாசனின் அா்ப்பணிப்பு இந்தியாவில் கிராமப்புற சமுதாயத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்த உதவியது’ என யுஎஸ்ஐபிசி தலைவா் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளாா். 2007-ஆம் ஆண்டுமுதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னா் இந்த விருது டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரன், லாக்ஹீட் மாா்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் டெய்ஸ்லெட், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, நாஸ்டாக் தலைவா் அடீனா ஃபிரீட்மன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

9. தூய்மை இந்தியா இயக்கம், அடல் இந்தியா 2.0: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி

நகரமயமாக்குதலில் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளும் நடவடிக்கையாக ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பில் புதுப்பித்தல், நகா்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்), தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் இரண்டாம் கட்ட திட்டங்களை பிரதமா் நரோந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) தொடங்கிவைக்கிறாா். 2030 -ஆம் ஆண்டுக்குள் நகரங்களில் நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் இன்று பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி, இணையமைச்சா் கௌசல் கிஷோா் மற்றும் தமிழக உள்ளாட்சி, நகா்புறத் துறை அமைச்சா் கே.என் நேரு மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்களும் கலந்து கொள்கின்றனா். பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, அனைவருக்கும் ‘குடிநீா் கிடைத்தல்’ , ‘கழிவுகள் இல்லாத’ நகரங்களாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இந்த இரு இயக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

இரண்டாம் பதிப்பு அம்ருத் 2.0 : 4,700 நகா்ப்புற உள்ளாட்சிகளில் 100 சதவீதம் அளவிற்கு அனைத்து வீடுகளுக்கும் 2.68 கோடி குடிநீா் இணைப்புகளை வழங்குவது, அடல் இயக்கத்தில் (அம்ருத்) உள்ள 500 நகரங்களில் சுமாா் 2.64 கோடி கழிவுநீா் இணைப்புகளை வழங்கி 100 சதவீதம் கழிவுநீா் வசதிகளை உருவாக்குவது ஆகியவை இரண்டாம் பதிப்பு 2.0 இயக்கத்தின் நோக்கமாகும். இந்த இரு திட்டங்கள் மூலம் நகா்ப்புறங்களில் வசிக்கும் 10.50 கோடி மக்கள் பயனடைவா். மேலும், நிலத்தடி நீா், நீா் வளங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை இந்த இயக்கம் ஊக்குவிக்கும். நவீன சா்வதேச தொழில்நுட்பங்கள், திறன்கள்ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான நீா் மேலாண்மைக்கு இந்த இயக்கம் ஆதரவளிக்கும். நகரங்கள் இடையே வளா்ச்சிக்கான போட்டியை ஊக்குவிப்பதற்காக குடிநீா் ஆய்வு நடத்தப்படும். இது போன்ற பணிகளுக்காக சுமாா் ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0: அடல் இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்படாத நகரங்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகா்ப்புற பகுதிகளில் ‘கழிவுகள் இல்லாத’ நிலையை ஏற்படுத்துவதே நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் இரண்டாம் பதிப்பின் நோக்கமாகும். இந்த நகரங்களில் கழிவு நீா் மேலாண்மையை உறுதிசெய்வது, திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை (ஓடிஎஃப்+) உருவாக்வதும் முக்கியப் பணியாக இருக்கும். மேலும், இந்த நகரங்களில் திடக் கழிவுகளின் ஆதாரங்கள் மூன்று வகையில் தரம் பிரிக்கப்படுக்கப்படுகிறது. குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்று வகைகள் இந்த நகரங்களில் பின்பற்றப்படும். அனைத்து விதமான திடக் கழிவுகளையும் அறிவியல் ரீதியாக அகற்றி பயனுள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு இந்த இயக்கம் கவனம் செலுத்தும். இதற்காக சுமாா் ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா-அடல் இயக்க தாக்கங்கள்: கடந்த ஏழு ஆண்டுகளில் நகா்ப்புற தோற்றங்களை மேம்படுத்துவதில் தூய்மை இந்தியா – அடல் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மக்களுக்குத் தண்ணீா் விநியோகம் மற்றும் துப்புரவு ஆகிய அடிப்படை சேவைகள் வழங்குவதை இந்த இரண்டு முக்கிய இயக்கங்கள் மேம்படுத்தி உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் திடக் கழிவுகள் அறிவியல் ரீதியாக தற்போது அப்புறப்படுத்தப்படுகின்றன. 1.1 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகளும், 85 லட்சம் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனா்.

1. As per FSSAI, to what value, industrially produced trans–fat should be limited?

A) 10%

B) 5%

C) 2% 

D) 1%

  • Food Safety and Standards Authority of India (FSSAI) has mandated that the industrially produced trans fats should be limited to less than 2% and make the country free from trans–fat by 2022. Recently FSSAI has stated that, only 1.34% of the newly tested processed food samples have shown breach of prescribed levels of industrially produced trans fats, which shows that India is on track to become Trans Fat free.

2. Which organization has released the report titled “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections”?

A) UNFCCC

B) UNICEF

C) NITI Aayog

D) WMO 

  • The World Meteorological Organization (WMO) has released a report titled “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections”.
  • The report stresses the need for immediate action and international collaboration for achieving the Sustainable Development Goals (SDGs) and to curtail global warming to less than 2°C. WMO is a UN specialized agency, which is headquartered at Geneva, Switzerland.

3. Which of the following schemes is aimed to achieve Universal Health Coverage in India?

A) PM JDY

B) PM JJBY

C) PM JAY 

D) PM FBY

  • PM Jan Arogya Yojana (PM JAY) is the Government of India’s flagship scheme, launched on 23rd September 2018, with an aim to achieve universal health coverage. The scheme has successfully completed 3 years of operation. Under this scheme, health cover of Rs. 5 lakhs per family per year for secondary and tertiary care hospitalization is provided to the more than 10 crore poor families.

4. ‘Fed to Fail? The Crisis of Children’s Diets in Early Life’ is a report recently released by which institution?

A) NITI Aayog

B) Ministry of Health and Family Welfare

C) UNICEF 

D) World Bank

  • The United Nations Children’s Fund (UNICEF) released a report titled ‘Fed to Fail? The Crisis of Children’s Diets in Early Life’. As per the report, only half of children aged 6–23 months are being fed the minimum recommended number of meals a day. Only a third consume the minimum number of food groups they need to prosper. It also revealed that COVID–19 pandemic could worsen the situation.

5. India held its first Joint Working Group (JWG) meeting on Coal and Mines with which country?

A) UK

B) Russia

C) Australia 

D) Japan

  • India and Australia held the first Joint Working Group (JWG) meeting on Coal and Mines through Video conferencing. It is held ahead to the India–Australia Energy Dialogue scheduled to be held next month.
  • The discussions focused on Indian coal resources, strategic minerals–demand and supply scenario and engagements with Australia. They also discussed collaboration on Clean Coal Technology, Surface Coal Gasification, Coal Bed Methane, sharing of Technology for fire quenching, Coal Based Hydrogen, among others.

6. What is the rank of India in the World Giving Index – 2021?

A) 14 

B) 26

C) 45

D) 82

  • The Charities Aid Foundation’s (CAF) releases the World Giving Index (WGI). As per the 2021 edition, India is now in the top 20 most generous countries in the world, at 14th rank.
  • The COVID–19 pandemic has toppled the charity trends across the world as several western countries did not fare well in the Index due to COVID lockdowns. The USA, Canada, Ireland, the UK, and the Netherlands fell down from the highest rankings.

7. Kun Peak, which was seen in the news recently, is located in which Indian state/UT?

A) Ladakh 

B) Sikkim

C) Himachal Pradesh

D) Bihar

  • The Kun Peak is a part of Nun Kun mountain massif. It is also the second highest summit of the massif with elevation of 23,219 ft in the eastern Himalayan Range. The peak is located near the Suru valley, Kargil, Ladakh. Defence Minister Rajnath Singh flagged–in a team of National Institute of Mountaineering & Allied Sports (NIMAS) Dirang, Arunachal Pradesh, in New Delhi.
  • The team completed a mountaineering expedition to Mount Kun between July 15, 2021 and August 10, 2021. NIMAS is a premier mountaineering institute functioning under the aegis of Ministry of Defence.

8. KVIC has recently set up a ‘Tussar Silk Yarn Production Centre’ in which state?

A) Gujarat

B) Karnataka

C) Odisha 

D) West Bengal

  • Khadi and Village Industries Commission (KVIC) has set up Odisha’s first ever Tussar silk yarn production centre at Choudwar in Cuttack district. Tussar silk is one of the finest varieties of silk, known for its coarseness and porous weave.
  • Silk comprises nearly 75% of the total khadi fabric production in Odisha. Set up at a cost of ₹75 lakh, the silk yarn production centre is capable of producing 200 kg of silk yarn worth ₹94 lakh annually.

9. Which Ministry launched the ‘Planetarium Innovation Challenge’ for Indian start–ups and entrepreneurs?

A) Ministry of Science and Technology

B) Ministry of Electronics and IT 

C) Ministry of Jal Shakti

D) Ministry of MSME

  • MyGov India, under the Ministry of Electronics and Information Technology (MeitY), has launched the Planetarium Innovation Challenge for Indian start–ups and tech entrepreneurs.
  • The challenge aims to encourage tech firms and Indian start–ups to build an indigenous planetariums system software using latest technologies like Augmented Reality (AR), Virtual Reality (VR) and Merged Reality (MR). The applicants may be Start–ups, Indian Entities or Individuals or Teams.

10. Who has been granted the 2021 Global Goalkeeper Award?

A) Narendra Modi

B) Phumzile Mlambo–Ngcuka 

C) Leymah Gbowee

D) Ellen Johnson Sirleaf

  • The Bill & Melinda Gates Foundation announced Phumzile Mlambo–Ngcuka, former United Nations under–secretary–general and executive director of UN Women, as the winner of the 2021 Global Goalkeeper Award. Fairooz Faizah Beether of Bangladesh has been chosen for the 2021 Changemaker Award for her work promoting good health and well–being.
  • The 2021 Progress Award recognizes Jenifer Colpas of Colombia for her work to improve access to clean water and sanitation. The 2021 Campaign Award, recognizes Satta Sheriff of Liberia for her work to promote gender equality.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!