Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

1st September 2020 Current Affairs in Tamil & English

1st September 2020 Current Affairs in Tamil & English

1st September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

1st September Tamil Current Affairs 2020

1st September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.எந்த மாநிலத்தில், `11000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. கேரளம்

ஈ. பஞ்சாப்

  • மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளி வழியாக தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். 1361 கிமீ நீளத்துக்கு `11427 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகளைக்கொண்ட இந்தத் திட்டங்கள், மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலைக்கட்டுமானத்தில் பயன்படுத்துதற்காக மத்திய பிரதேசத்திற்கான மத்திய சாலை நிதியிலிருந்து, மேலும் `700 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.

2. ‘காலநிலை மாற்றமும் இமயமலைப்பிராந்தியத்தில் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில், இணையவழி பன்னாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ள நிறுவனம் எது?

அ. ஆரியபட்டா கூர்நோக்கு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், நைனிடால்

ஆ. IISc, பெங்களூர்

இ. IIT கெளகாத்தி

ஈ. பிர்லா பயன்பாட்டு அறிவியல் நிறுவனம், உத்தரகண்ட்

  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படும் நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கூர்நோக்கல் அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் -ARIES, உத்தரகண்ட் மாநிலம் பாவ்ரி கார்வால் பகுதியில் ஸ்ரீநகரில் செயல்படும் மத்திய பல்கலைக் கழகமான ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கூட்டாக, “உயர் இமயமலைப்பகுதியில் காற்றுத்தூசுத்தரம் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நீராதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏற்படும் தாக்கம்” என்ற தலைப்பில், செப்.14-16 வரையிலான மூன்று நாட்களுக்கு இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தத்திட்டமிட்டுள்ளன.

3. ‘தேன் இயக்கம்’ திட்டத்தின்கீழ், தேனீ பெட்டிகளை விநியோகிக்கின்ற அமைப்பு எது?

அ. KVIC

ஆ. NSIC

இ. SIDBI

ஈ. NABARD

  • காதி கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன்மூலம் ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது.
  • இத்தேனீ பெட்டிகள், உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, பஞ்சோகராவில் உள்ள KVIC’இன் பயிற்சி மையத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு KVIC’ஆல் ‘தேன் இயக்கம்’ தொடங்கப்பட்டது.

4.உடைக்கப்படவுள்ள, இந்திய கடற்படையின் மிகநீண்ட காலம் பணியாற்றிய போர்க்கப்பலின் பெயர் என்ன?

அ. INS விராட்

ஆ. INS விக்ராந்த்

இ. INS விஷால்

ஈ. INS விக்ரம்

  • மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் மிக நீண்ட காலம் சேவையாற்றிய போர்க்கப்பலான INS விராட், குஜராத்தின் அலாங் முற்றத்தில் உடைக்கப்பட உள்ளது. இந்தக்கப்பல், 2.78 கோடி கிலோ எடைகொண்ட விமானந்தாங்கிக் கப்பலாகும். இது முதலில், பிரிட்டிஷ் கடற்படையில், 1984ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் பணியாற்றியது. 1987ஆம் ஆண்டில், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு, ஹாரியர் போர் விமானங்களை இயக்க இது பயன்பட்டு வந்தது.

5. NBFC-MFI’களுக்கு, கட்டமைக்கப்பட்ட நிதி & பகுதி உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிதி நிறுவனம் எது?

அ. பாரத வங்கி (SBI)

ஆ. NABARD

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. புதிய வளர்ச்சி வங்கி

  • தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியானது (NABARD) NBFC-MFI’களுக்கு ‘கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உறுதியளிப்புத் திட்டம்’ என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, COVID-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகங்களில், தடையின்றி கடன் கிடைப்பை ஊக்குவிக்கும் நோக்கங்கொண்டது. இந்தத்தயாரிப்பு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் நிறுவனங்களுக்கு (MFI) நீட்டிக்கப்பட்ட கூட்டுக்கடன்களுக்கு பகுதியளவான கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.

6. ‘COAS அலகு பாராட்டு’ ஆனது எந்தப் பாதுகாப்புப் படையின் 51ஆவது சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ. மத்திய சேமக்காவல்படை

ஆ. இந்திய கடலோர காவல்படை

இ. தேசிய பாதுகாப்புப் படை

ஈ. அஸ்ஸாம் ரைபிள்ஸ்

  • இராணுவத் தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, தேசிய பாதுகாப்புப் படையின் 51ஆவது சிறப்பு நடவடிக்கைக்குழுவுக்கு, ‘COAS (Chief of Army Staff) Unit Appreciation’ விருதை வழங்கினார்.
  • தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியதைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. இந்தக்குழுவின் பல்வேறு நடவடிக்கைகளில், குறிப்பிடத்தக்கது “Operation Black Tornado” ஆகும். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது, 8 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று, ஏராளமான வெளிநாட்டவர் உள்பட 600’க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை இந்தக்குழு விடுவித்தது.

7.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கோல்ப் வீராங்கனை சோபியா போபோவ் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஆஸ்திரியா

இ. ஜெர்மனி

ஈ. தாய்லாந்து

  • ஜெர்மன் கோல்ப் வீராங்கனையான சோபியா போபோவ், இராயல் டுரூனில் நடந்த AIG பிரிட்டிஷ் பெண்கள் ஓப்பனை வென்றதன்மூலம் ஒரு முதன்மைப் போட்டியில் வெற்றியடைந்த முதல் ஜெர்மன் பெண் என்ற பெருமையைப்பெற்றார். 27 வயதான இவர், உலக தரவரிசையில் 304ஆவது இடத்தில் உள்ளார். அவர் தனது எதிராளியான தாய்லாந்தின் ஜாஸ்மின் சுவன்னபுராவை வீழ்த்தியதன்மூலம் இவ்வெற்றியை அடைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் பன்னாட்டு ஐரோப்பிய பெண்கள் அமெச்சூர் சாம்பியன்ஷிப்பை போபோவ் வென்றிருந்தார்.

8.அண்மையில், ஆந்திர பிரதேசத்தில் பாயந்தோடும் எந்த ஆற்றில், ‘பெளி’ மீன் கண்டறியப்பட்டது?

அ. கிருஷ்ணா

ஆ. கோதாவரி

இ. சிலேரு

ஈ. காவிரி

  • ‘தோர்’ என்னும் அறிவியல் பெயர்கொண்ட ‘பெளி’ என்றும் அழைக்கப்படுகிற ஓர் அரியவகை மீனினம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் சிலேரு ஆற்றில் அண்மையில் கண்டறியப்பட்டது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இந்த மீன், IUCN’இன் (இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்) அருகிவரும் உயிரினங்கள் பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொதுவாக, இமயமலைப் பகுதிகளான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளில் காணப்படுகிறது.

9.எந்த ஆற்றின் குறுக்கே, அண்மையில் திறந்துவைக்கப்பட்ட ஆற்றைக்கடக்க பயன்படும் இந்தியாவின் மிகநீளமான கயிற்றுப்பாதை கட்டப்பட்டுள்ளது?

அ. கங்கை

ஆ. யமுனா

இ. பிரம்மபுத்ரா

ஈ. காவிரி

  • ஆற்றைக்கடக்க பயன்படும் இந்தியாவின் மிகநீளமான கயிற்றுப்பாதை, பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 1.8 கிமீ நீளமுள்ள இந்தக் கயிற்றுப் பாதை, மத்திய கெளகாத்தி முதல் வடக்கு கெளகாத்தி வரை நீண்டுள்ளது. இது பயண நேரத்தை 8 நிமிடங்களாக குறைக்கும். `56 கோடி திட்டச்செலவுகொண்ட இந்தக் கயிற்றுப்பாதையின் பணிகள் தொடங்கி, சுமார் 11 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது நிறைவடைந்துள்ளன.

10.வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்காக, AFC இந்தியா லிட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அமைப்பு எது?

அ. APEDA

ஆ. NABARD

இ. FCI

ஈ. NAFED

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது AFC இந்தியா லிட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னர், வேளாண் நிதிக்கழகம் என அழைக்கப்பட்ட AFC இந்தியா லிட் ஆனது வணிக வங்கிகள், NABARD & EXIM வங்கி ஆகியவற்றிற்கு முழுமையாக உரிமையுடையதாகும். தில்லியின் தேசிய கூட்டுறவு ஒன்றியத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் APEDA கையெழுத்திட்டுள்ளது.

1. Union Road Minister inaugurated 45 highway projects worth above Rs 11000 crores in which state?

[A] Tamil Nadu

[B] Madhya Pradesh

[C] Kerala

[D] Punjab

  • Union Road Transport and Highways Nitin Gadkari has inaugurated and laid foundation stones of as many as 45 Highway Projects in Madhya Pradesh. The project outlay is Rs 11427 crore and it includes projects include road length of 1361 kilometres. The Minister also announced Rs 700 crore from Central Road Fund (CRF) for Madhya Pradesh to be utilised in the road sector.

2. Which institute is to organise an online International conference on climate change and its impact on Himalayan region?

[A] Aryabhatta Research Institute of Observational Sciences, Nainital

[B] IISc, Bangalore

[C] IIT, Guwahati

[D] Birla Institute of Applied Sciences, Uttarakhand

  • Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES), Nainital is to organise an online international conference on ‘Aerosol Air Quality, Climate Change and Impact on Water Resources and Livelihoods in the Greater Himalayas’. ARIES, an autonomous research institute under the Department of Science and Technology (DST) is organising the conference along with Hemvati Nandan Bahuguna Garhwal University between 14th–16th September 2020.

3. Which organisation distributes bee boxes under the ‘Honey Mission’ scheme?

[A] KVIC

[B] NSIC

[C] SIDBI

[D] NABARD

  • Khadi and Village Industries Commission (KVIC) has recently distributed over 700 bee boxes, to provide Self–Employment for Migrant Workers. The boxes have been distributed to the workers of Uttar Pradesh at the KVIC’s training center in Panjokera. The Honey Mission was launched by KVIC before 3 years, to create employment for farmers, tribal people, women and unemployed youth.

4. What is the name of the longest serving warship of Indian Navy, that is to be dismantled?

[A] INS Viraat

[B] INS Vikrant

[C] INS Vishal

[D] INS Vikram

  • Indian Navy’s longest serving warship, the Indian Naval Ship (INS) Viraat, that was earlier decommissioned and laid at the Naval dockyard in Mumbai, is to be dismantled at Alang yard, Gujarat. INS Viraat is a 27,800–tonne Centaur class aircraft carrier. It had originally served in the British Navy for 25 years till 1984. It was commissioned into the Indian Navy in the year 1987 and was operating Harrier fighter jets.

5. Which financial institution has introduced “Structured Finance and Partial Guarantee Programme” to NBFC–MFIs?

[A] State Bank of India

[B] NABARD

[C] RBI

[D] New Development Bank

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) has introduced a product Structured Finance and Partial Guarantee Programme to NBFC–MFIs. This is intended to promote unhindered flow of credit in rural areas, which has been affected by COVID 19 pandemic. The product provides partial credit guarantee on pooled loans extended to small and mid–sized micro finance institutions (MFIs).

6. The COAS Unit Appreciation was conferred to the 51st Special Action Group of which Defence force?

[A] Central Reserve Police Force

[B] Indian Coast Guard

[C] National Security Guard

[D] Assam Rifles

  • The COAS (Chief of Army Staff) Unit Appreciation was conferred to NSG’s (National Security Guard) 51 Special Action Group (SAG).
  • The appreciation was conferred to the unit for the group’s exemplary achievements in combating terrorism. The most important operation undertaken by the unit is “Operation Black Tornado” which was launched against the terror strikes in Mumbai in November 2008.

7. Golf player Sophia Popov, who was in news recently, belongs to which country?

[A] Australia

[B] Austria

[C] Germany

[D] Thailand

  • German golf player ‘Sophia Popov’ became the first German women to win a major tournament victory by clinching AIG British Women’s Open at Royal Troon. The 27–year–old player holds a world ranking of 304. She finished two strokes clear of her opponent Jasmine Suwannapura of Thailand. Popov had won the International European Ladies Amateur Championship in 2010.

8. Mahseer fish, which has been spotted recently in Andhra Pradesh, was found in which river?

[A] Krishna

[B] Godavari

[C] Sileru

[D] Cauvery

  • Rare fish called Mahseer, whose scientific name is Tor, has been spotted in the upper part of river Sileru in Andhra Pradesh. It has been spotted by a team of researchers of the Department of Zoology, Andhra University. This fish is listed under the endangered category by IUCN (International Union for Conservation of Nature). It is usually found in the Himalayan region in the rivers running through Himachal Pradesh, Uttarakhand, Nepal and Bhutan.

9. India’s longest river crossing ropeway, which was inaugurated recently, has been constructed across which river?

[A] Ganga

[B] Yamuna

[C] Brahmaputra

[D] Krishna

  • The country’s longest river crossing ropeway has been built and opened across river Brahmaputra. It is a 1.8 km long ropeway built across the river extending from central to northern Guwahati. It will reduce the time of travel to 8 minutes. The cost of the project is Rs.56 crore and has been completed after 11 years of starting the work.

10. Which organization has recently signed a MoU with AFC India Ltd, to work together in agriculture and allied sectors?

[A] APEDA

[B] NABARD

[C] FCI

[D] NAFED

  • Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA), has signed a MoU with AFC India Limited, to mutually work together in the field of agriculture and allied sectors. AFC India Ltd, formerly known as Agricultural Finance Corporation Ltd., is wholly owned by Commercial Banks, NABARD and EXIM Bank. APEDA has also signed a MoU with National Cooperative Union of India (NCUI), Delhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!